பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைத்து சந்தேகநபரை மிக மோசமாகக் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நபரொருவருடன் முரண்பட்டார் எனும் சந்தேகத்தில் சந்தேகநபர் ஒருவரை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத் தடுப்புக் கா