யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Search the Community

Showing results for tags 'ராக யாத்திரை'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

 1. ராக யாத்திரை: திசை வேறானாலும்... “இசை ஒரு எல்லையற்ற கடல். அதன் கரையினில் வியப்போடு வேடிக்கை பார்க்கும் குழந்தை நான்.” ஐன்ஸ்டைன் அறிவியலைப் பற்றிச் சொன்னதுபோல் ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ பட ஒலித்தட்டில் மோகன்லால் மலையாள நாசி ஒலியோடு ‘சங்கீதம் ஒரு அனந்த சாகரமாணு’ என இசையைப் பற்றிச் சொல்லும் வாசகங்கள் இவை. சிறு வயதிலேயே அந்தக் கடல் என்னை மிகவும் வசீகரித்திருந்தது. அதன் அலைகளில், கரைகளில் விளையாடி நனைந்து மகிழ்ந்திருந்தாலும் அக்கடலின் ஆழமும் வீச்சும் அப்போது தெரியாமல் இருந்தது. மனித இனமும் மொழியும் தோன்றுவதற்கு முன்பே இசை தோன்றிவிட்டது. பறவைகள் இரைதேடல், இணைதேடல், சூழ்நிலையில், காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிப் பிற பறவைகளுக்குக் குறிப்பு உணர்த்தல் என ஒலியைச் சங்கேதமாகப் பயன்படுத்தத் தொடங்கின. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகப் பயன்படத் தொடங்கிய ஒலியானது ஒரு கட்டத்தில் அதன் ஆரம்ப நோக்கங்களைக் கடந்து ‘கலைக்காகவே கலை’ என்று சொல்லப்படுவதுபோல் இசைக்காகவே இசை என மாறிப்போனது. எதற்காகவும் இல்லாமல் கூவுவதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே குயில் கூவுவதைப் போல் இசை என்பது ஓய்வுக்கும் ரசனைக்கும் உரிய கலைப்பொருளானது. கலைமகள் கைப்பொருளானது. இசையை ஒலி என்னும் மொழியின் கவிதை எனலாம். இசையில் தோன்றிய நுட்பங்கள் நாகரிகம் வளர வளர விவசாயம், கட்டுமானம் போன்ற பணிகளில் ஏற்பட்டதைப் போன்றே இசையிலும் தொழில்நுட்பங்கள் கூடத் தொடங்கின. ஒவ்வொரு புவியியல் பகுதிக்கும் ஒவ்வொரு வகையான இசை நுட்பங்கள் தோன்றின. தமிழகத்தில் இசை முத்தமிழில் ஒன்றாகப் போற்றப்பட்டு பண்களும் இசை இலக்கணங்களும் உருவாயின. பாணர்கள் என்பார் பண்ணிசைப்பதில் வல்லவராக விளங்கியதையும் யாழ் இசைக்கருவிகளில் அவர்கள் கொண்டிருந்த புலமையையும் சங்கப் பாடல்களும் சிலப்பதிகாரமும் தேவாரம் போன்ற நூல்களும் நமக்கு உணர்த்துகின்றன. ‘கருணாமிர்த சாகரம்’ என்ற மாபெரும் நூலில் ஆப்ரஹாம் பண்டிதர் தமிழிசை தனியிசையே என நிறுவியிருப்பார். சங்கப் பாடல்களெல்லாமே இசையோடு பாடவே எழுதப்பட்டவை என்பார் தொ.பரமசிவன். பின்னர் தெலுங்கு மன்னர்களின் காலத்தில் வேங்கடமகி என்பவரால் பண்கள், ராகங்கள் எல்லாம் கணித முறைப்படி தொகுக்கப்பட்டு, இலக்கணங்கள் வகுக்கப்பட்டு, 72 மேளகர்த்தா ராகங்கள் என உருவாக்கப்பட்டுக் கீர்த்தனைகள், பாடல்கள் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட செவ்வியல் இசை கர்னாடக சங்கீதம் என அழைக்கப்படுகிறது. நாடகமும் திரையிசையும் பக்தி இயக்கத்தின் நீட்சியாகவே கர்னாடக சங்கீத மும்மூர்த்திகள், தமிழிசை மூவர் போன்ற இசைக் கலைஞர்கள் மூலமும், சங்கரதாஸ் சுவாமிகள் போன்றவர்கள் இயற்றிய, பெரும்பாலும் பாடல்களாலேயே ஆன நாடகங்களாலும் நமது செவ்வியல் இசை மரபு தொடர்ந்து வந்தது. கடந்த நூற்றாண்டில் திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டுப் பின்னர் பேசும் படமாக இசையுடன் ஒலிக்கத் தொடங்கிய போதும் ‘வள்ளி திருமணம்’, ‘அல்லி அர்ஜுனா’ போன்ற புகழ்பெற்ற நாடகங்களே திரைப்படமாயின. நாடகங்களில் இசையமைக்கப்பட்ட பாடல்களும், பிரபலமான கர்னாடக சங்கீத இசைக்கலைஞர்களின் பாடல்களும், அதே மெட்டுக்களில் அமைந்த பாடல்களுமே ஒலித்து வந்தன. ‘நாத தனுமனிசம் ‘ என்ற தியாகய்யரின் கீர்த்தனை, மெட்டில் ‘காதல் கனிரசமே’ என ஒலிக்கும். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்ற முதல் சூப்பர், சுப்ரீம் ஸ்டார்கள் உருவான காலகட்டம் அது. அவர்கள் அபாரமான இசைக் கலைஞர்களாக இருந்தனர். பின்னணி இசை ஒருவர், பாடல்களுக்கு மெட்டுப் போட ஒருவர் எனப் பெரும்பாலும் ஐம்பது அறுபது பாடல்கள் இடம்பெற்றன. இசையமைப்பாளர் என்ற ஒரு பணி முழுமையாக உருவாகாத காலகட்டத்தில் பாபநாசம் சிவனையே முதல் நட்சத்திர இசையமைப்பாளர் எனச் சொல்லலாம். கர்னாடக இசையில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஞானத்தால் ‘ஹரிதாஸ்’, ‘சிவகவி’ எனப் பல படங்களில் ‘கிருஷ்ணா முகுந்தா முராரே’, ‘அம்பா மனங்கனிந்து’ என கர்னாடக இசை ராகங்களில் அவர் அள்ளி அள்ளி அளித்தார். திரையிசை மரபின் தொடர்ச்சி தொடர்ந்து அந்த மரபில் ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன், கே.வி.மகாதேவன் என எண்ணற்ற மேதைகள் செவ்வியல் இசை ராகங்களைத் திரையில் பாடல்களாக ஒலிக்கச் செய்திருக்கின்றனர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் கர்னாடக இசை ராகங்களைப் பயன்படுத்துவது தொடர்ந்தாலும் மேற்கத்திய, வட இந்திய பாணியில் பாடல்களில் மெட்டிசைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். பின்னர் பண்ணைபுரத்தில் தோன்றிய இசைஞானியின் பயணம் நமது கர்னாடக செவ்வியல் இசை ராகங்களை நாட்டுப்புற இசையோடும் மேற்கத்திய செவ்வியல் இசையோடும் மெல்லிசையோடும் இணைத்து அவற்றுக்குப் புதிய புதிய பரிமாணங்களை அளித்தது. அந்த மரபு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரையில் இன்றும் தொடர்கிறது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் ‘ஏக் சுர்’ என எல்லா மொழிகளும் இணைந்த ஒரு பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகும். அதில் தமிழில் ‘திசை வேறானாலும் ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவதுபோல் இசை’ என்ற வரிகள் வரும். அதுபோல் நமது செவ்வியல் ராகங்கள் பல்வேறு நதிகளாய் உருவெடுத்து இசைக்கடலில் சங்கமிப்பதை அலசுவதே இந்த ராக யாத்திரை! வாருங்கள்! திரையிசை நதியில் ராக யாத்திரை சென்று கடலில் கால்நனைப்போம்!! (யாத்திரை தொடரும்...) http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23611767.ece