Search the Community
Showing results for tags 'வயவையூர் அறத்தலைவன்'.
-
AN ANOTHER SAMARITAN OF OUR SOIL! “பிழை ஒன்றும் செய்யாத அப்பாவி மக்கள்” கொன்று குவிக்கப்பட்ட கொடிய நாட்களில் உயிர்காக்கும் உன்னதமான பணியாம் மருத்துவப்பணி வார்த்தைகளால் வடிக்கமுடியாத துயர்களையும், சவால்களையும் சுமந்திருந்தது. சர்வதேச ஒழுங்கையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிக மோசமான மருத்துத்தடை, பொருளாதாரத்தடைகள் மூலம் தமிழர்களை பணிய வைக்க சிங்கள அரசு மூர்க்கத்துடன் செயற்பட்டது. விண்ணும் மண்ணும் அதிரும் வெடிச்சத்தங்களும், இரசாயனக் குண்டுகளின் மூக்கை அரிக்கும் மணமும் , பசியால் துடித்தழும் பாலகர்களின் அழுகுரல்களும் எங்களின் தேசிய ஆன்மாவை உலுக்கிச் சோர்வடையச் செய்து கொண்டிருந்த பொழுதுகளிலெல்லாம்… அஞ்சாத நெஞ்சுரத்துடன் துஞ்சாத துயில் கொள்ளாத தேவர்களாய் செயலாற்றிய மனிதர்களைப் பற்றி அடியேன் சொல்லியே ஆகவேண்டும். அந்த உன்னத மானுடப் பிறவிகளில் மிகவும் முக்கியமானவன் வைத்திய கலாநிதி காந்தன் குணரத்தினம். பஞ்சமும், பட்டினியும் எம்மை பாதித்த வேளைகளில் பல மாதங்களாக தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி செயற்பட்ட காலங்கள் எழுத்தில் வடிக்க முடியாத வேதனை மிக்கவை. அந்த நேரங்களில் ஓர் விளக்கேந்திய பெருமகனாக துன்பத்தில் துவண்ட மக்களுக்கு உற்ற துணையானவன் எங்கள் மருத்துவர் காந்தன். Dr காந்தன் தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திரசிகிச்சைமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) கற்கை நெறியினை நிறைவு செய்தவர். இங்கே தமிழீழ மருத்துவக் கல்லூரி பற்றி சொல்ல வெண்டும். முதல் மாவீரன் சத்தியநாதன் சங்கர் காயம் பட்டு அதிக குருதிப் பெருக்கால் வீரச்சாவு அடைந்த காலத்தில் இருந்தே தேசப்பற்று மிக்க ஓர் வைத்தியர் குழாமை உருவாக்கும் தேசியத் தலைவர் அவர்களின்ஓர் கனவுதான் தமிழீழ மருத்துவக் கல்லூரி ஆகும். யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் அழகய்யா துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி யாழ்ப்பாணத்தின் நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. பல நூறு இன்னுயிர் காத்த ஓர் உன்னத வைத்தியர் காந்தன் மன்னார் சிலாவத்துறை அரசினர் வைத்தியசாலையில் பணி புரிந்தவர். வசதி வாய்ப்புகள் குறைந்த பிர்தேசமென பல வைத்தியர்கள் செல்ல விரும்பாத நேரத்தில் காந்தன் ஆற்றிய சேவையை சிலாவத்துறை பிரதேச மக்கள் பெருமனதுடன் நினைவு கூருவர். மாங்கனித்தீவின் கிழக்கு மாகாணத்தில் அல்லது தென் தமிழீழத்தின் கதிரவெளி, வாகரை வைத்தியசாலைகள் தொடக்கம் வடக்கின் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் வரை வைத்தியசாலைகள் குறிவைத்துத் தாக்கப்பட்ட போது அங்கெல்லாம் நின்று சேவையாற்றியவர் லெப் கேணல் காந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. சுருங்கக் கூறின் தமிழர்தாய் நிலத்தில் எங்கெல்லாம் கூக்குரல் கேட்டதோ அங்கெல்லாம் துன்பம் போக்கிய பெருமகனார் காந்தன். தமிழீழ மருத்துவர் மருத்துவர் காந்தன் 2009ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 5 ஆம் தேதி முல்லைத்தீவு சாலை எனும் இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிக்கும் போது குண்டுபட்டு படுகாயமடைந்து வீரச்சாவு அடைந்தார். தாம் நேசித்த மக்களுக்காக தம் இன்னுயிர்களையே ஈந்தவர்கள் வழிபாட்டுக்குரியவர்கர்ளே!🙏 நன்றி – வயவையூர் அறத்தலைவன் – https://vayavan.com/?p=8655
-
சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை. வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)! அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள். இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், தங்கள் பொற்தடம் பதித்து அளப்பரிய சேவை செய்தவர்கள் தாம் நேசித்த மக்களுக்காக ஈகத்துக்கு தயாராக இருந்தவர்கள். இந்த திலீபன் மருத்துவமனையின் உதவி மருத்துவர்கள் (AMPs-Assistant Medical Practitioners) அனைவரும் தமை அப்பணிக்கத் தயாரான போராளிகள் என்பது அதன் தனிச்சிற்ப்பு ஆகும் !🗝 வனத்தாய்மடியில் தாலாட்டப்படும் ஐயங்குளம் கிராமத்தில் உள்ள தியாக தீபம் திலீபன் மருத்துவமனையை படத்தில் காண்கிறீர்கள்! நோர்வேயின் ‘பேச்சு வார்த்தை நாடக அரங்கேற்றம்’ நடைபெற்ற காலத்தில் அமெரிக்காவில் வாழும் தமிழ் வைத்திய நிபுணர் ஒருவரால் இந்த அழகிய மருத்துவமனைக் கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. போர்ச்சுமை நடுவிலும் தமிழர் நிழல் அரசு நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் ஏராளம்! எமது மக்களுக்கான அரும்பெரும் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து வந்த இந்த திலீபன் வைத்தியசாலைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தவர் Dr பத்மலோஜினி கரிகாலன் அவர்கள். 1956 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் இடைக்காட்டில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் Dr பத்மலோஜினி அவதரித்தார். உயர்தரக் கல்வியை அந்நாட்களில் புகழ்பூத்து விளங்கிய யா/புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் கற்றார். பெற்றாரும் உறவுகளும் பெருமை கொள்ளத்தக்க வகையிலே க/பொ/த உயர்தரச் சோதனையில் சாதனை படைத்தது பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பீடத்துக்கு தெரிவானார். 1985ஆம் ஆண்டு MBBS பட்டம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு பரிபூரண வைத்தியராக வெளியேறினார். வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக இருந்தவர். அக்காலகட்டத்தில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச வன்முறையைக் கண்டு கொதித்து அரச உத்தியோகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு விடுதலைப் போரில் குதித்தவர். மிக நீண்ட காலம் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஓர் வைத்தியராக இருந்த இந்த வைத்தியரும் கணவரான திரு. கரிகாலன் அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர். பின்னிணைப்பு – தற்கொலைகளைத் தடுத்தல் (Prevention of suicidal attempts), சட்டவிரோத கருக்கலைப்புகளைத் தடுத்தல்(Illegal abortion/miscarriage) குடும்பநல ஆலோசனைகள்(Family Planning plans)என பல் வேறுபட்ட இன்னோரன்ன விடையங்களில் கவனம் செலுத்தி கிராமப்புற மக்களின் நலவாழ்வுக்கு தமிழர் நிழலரசு வித்திட்டது. இவற்றுடன் மேலதிகமாக, “குழந்தை உளவியலும் கல்வியும்” என “சிறார் உளவியலும் கல்வியும்” என நிறைய விடையங்களில் திலீபன் ஞாபகார்த்த வைத்தியசாலைகள் சமூகம் கவனமெடுத்தது. உங்களின் அனுபவங்களையும் தகவல்களையும் இங்கே பதிவு செய்யுங்கள் எனதருமை நண்பர்களே! நன்றி – வயவையூர் அறத்தலைவன் – https://vayavan.com/?p=8597
-
https://vayavan.com/?p=12702 “போர்க்காலம் ஆயினும் அதுவே பொற்காலம்” என இன்று போற்றப்படும் காலத்தில் வன்னியிலிருந்து மேலதிக மருத்துவ சிகிச்சைக்காகவும் மற்றும் அத்தியவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் எம் மக்கள் வவுனியா செல்வது வழமை. அவ்வாறு பொது மக்கள் தங்களது அவசியமானதும் மற்றும் அத்தியவசியமானதுமான அலுவல்களை முடித்துக் கொண்டு மீளவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் திரும்புவார்கள். அக்காலகட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் கறுக்காய்குளம் ஊடாக அல்லது மடு ஊடாக என மாறி மாறி அந்த இடர்மிகு பயணங்கள் இடம்பெற்றது. ஒரு முறை புதிய பாதை திறந்து உங்களை அனுப்பப் போவதாக ஶ்ரீலங்காப் படையினர் பயணிகளை மூன்றுமுறிப்பு பகுதிக்கு அழைத்துவந்து அவர்களை முன்னே விட்டு விட்டு தாங்கள் சத்தமின்றி பின்னே நடந்து வந்தார்கள். அப்போதுதான் பயணிகளுக்கு தங்களை இராணுவம் புதிய பாதைதிறப்பு என்று கூறி இங்கே கூட்டிவந்த நோக்கம் புரிந்தது. ஆம், சண்டை இன்றித் தந்திரமாக இடங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையின் ஓர் உத்திதான் இது ஆகும். இந்த “ஜெயசிக்குறு” நடவடிக்கையும் இதன் தொடர் அல்லது கிளை நடவடிக்கையுமான “ரணகோச” நடவடிக்கையையும் தமிழர்படை ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை மூலம் முறியடித்துவிட்டே ஆனையிறவைத் துவசம் செய்து துடைத்தழிக்கத் ஓரிடத்தில் திரண்டிருந்தனர். வீரியம் மிக்க அந்த நாள் குடாரப்புத் தரையிறக்கத்துக்கு முன்னைய நாட்கள் ஆகும். வழங்கல் , மருத்துவ , மோட்டார் அணிகள் உட்பட அனைத்து அணிகளையும் பொதுவாகச் சந்தித்துவிட்டு அணித் தலைவர்களை தலைவர் சந்தித்து அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். ஈற்றில் கேள்வி கேட்கும் நேரத்தையும் தலைவர் ஒதுக்கியிருந்தார். தலைவர் முன்னே எழுந்து நின்று கேள்வி கேட்கத் தயக்கங்கள் இருந்தாலும் ஒவ்வொருவராய் அணித் தலைவர்கள் எழுந்து கேள்விகேட்டுத் தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டிருந்தனர். வன்னிக்கள முனையில் நீண்டகாலம் அணிகளை வழிப்படுத்திய மகளிர் அணியின் ஒரு தலைவிக்கு எமது மக்களை சிங்கள இராணுவம் கேடயமாகப் பாவித்த முன்னைய “ரணகோச” நடவடிக்கையின் கசப்பான அனுபவங்கள் நினைவில் திரும்பிக்கொண்டிருந்தது. “மக்கள் வாழும் பகுதியில் திடீரென ஊடுருவிச் சண்டை செய்யப்போகின்றோம். ஆம், போரியல் பட்டறிவுடனும் எதிரியின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்த மகளிர் அணியின் தலைவி ஒருத்திதான் எங்கள் தலைவரிடம் இந்தக் கேள்வியைத் தொடுத்தாள். உங்களது துமுக்கி (துப்பாக்கி)களை தலைக்கு மேலே நன்றாக உயர்த்திச் சுடுங்கள். அவை மக்களை பாதிக்காது. அதேநேரம் நீண்டகாலம் யுத்தத்தின் பட்டறிவுகளுடன் வாழ்ந்து வரும் எம்மக்கள் நிலத்தில் வீழ்ந்து படுத்துக்கொள்வார்கள். அதன் பிற்பாடு உங்களைச் சமநிலைப் படுத்த உங்களுக்கும் மக்களுக்கும் ஓர் அவகாசம் ஏற்படும். எந்தக்கட்டத்திலும் மக்களுக்கு ஓர் சிறு கீறல் கூட ஏற்படக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார். அதே நேரம் தலைவர் இன்னொரு கதையையும் சொன்னார். அதையும் தருகிறேன். “ஒரு முறை ஓர் போராளி மாட்டைச் சுட்டுவிட்டான் என்று என்னிடம் முறைப்பாடு செய்தார்கள். பொதுமக்களின் பிரச்சனைகளை விசாரித்துக் கொண்டிருந்த போது மாட்டை ஏன் தம்பி சுட்டீர்கள் என்று கேட்டேன். அந்தப் புதிய போராளியோ, “நான் மாட்டுக்குச் சுடவில்லை மாட்டின் மேல் நின்றிருந்த காகத்துக்குத் தான் சுட்டேன்,மாடு செத்துப் போச்சு”… எனச் சொன்னதாக கவலையுடனும் கோபக் கனலுடனும் சொன்னார். தலைவர் தான் தனது உயிரிலும் மேலாக நேசித்த மக்கள் மீதானதும் மக்களின் வாழ்வாதரங்கள் மீதான தனது குன்றாத வாஞ்சையினையும் எடுத்துக் காட்டி எமைச் சென்று வாருங்கள் வென்று வாருங்கள் என வழியனுப்பி வைத்தார். தொடரும்! நன்றி -வயவையூர் அறத்தலைவன்-