Search the Community

Showing results for tags 'வரட்சி'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 3 results

  1. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சிப்காட் நிறுவனம் மூலம் ₹634 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார். பேரவையில் நேற்று பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படித்த அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்க்க `யாதும் ஊரே’’ என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்சு, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கென தனித்தனியாக சிறப்பு அமைவுகள் அமைக்கப்படும். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு ஒன்று துவங்கப்படும். தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் அல்லது அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன் தொழில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒரு வலைதளம் உருவாக்கப்படும். `தொழில் தோழன்’’ என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். . தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் ரூ.634 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை சிப்காட் நிறுவனம் அமைக்கும்.காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம்-வடகால் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற்கூட கட்டிடங்கள், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். கோயம்புத்தூரில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம் ரூ.200 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு பூங்காவில் நிறுவப்பட உள்ள உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறுவப்படும். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509753
  2. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகள், பொதுமக்கள் குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரிதும் நம்பியுள்ள வடகிழக்கு பருவமழை, கடந்த சில ஆண்டுகளாக சிறிதளவு கூட பெய்யவில்லை. முன்மழை, பின்மழை, மத்திய மழை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த வடகிழக்கு பருவமழை கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் பெய்யாமல் போய் விட்டது. கடும் புயல் காலங்களிலும் இந்த பகுதியில் மட்டும் சொட்டு தண்ணீர் கூட மழையாகப் பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என்று கூறும் அளவிற்கு ஒரு நாள் பெய்த மழையும் கடல்பகுதியில் பெய்து வீணாகி போனது. இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மழையில்லாமல் போனதால் நீர் ஆதாரங்கள் வறண்டுபோய் கிணறுகளின் நீர் மட்டம் மணல் மற்றும் பாறைகள் தெரியும் அளவிற்கு அடிமட்டத்திற்கு சென்றுவிட்டது. கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் கல், மண் தெரிகிறது. வறட்சி காலங்களில் வழக்கமாக கிணறுகளில் எட்டி எடுக்கும் நிலையில் தண்ணீர் இருப்பது மாறி கிணறுக்குள் இறங்கினாலும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. நீர்மட்டம் குறைந்ததால் பொதுமக்கள் குடிநீர்க்கு அலைந்து திரிந்து பரிதவித்து வருகின்றனர். ஆனால், சிலர் கிணறுகளை நம்பி இனி பயனில்லை என்று உணர்ந்து ஆழ்துளை குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வழக்கமாக இப்பகுதிகளில் 20 முதல் 25 அடி ஆழத்திலும், சில இடங்களில் 50 அடி ஆழத்திலும் ஆழ்துளை குழாய் அமைத்தால் தண்ணீர் வந்துவிடும் நிலையில் தற்போது மாவட்டத்தில் 100 அடி ஆழத்திற்கு ஆழ்துளை குழாய் அமைத்தாலும் தண்ணீர் வரவில்லை என்பதுதான் வேதனை. மூன்று ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத கிராமம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லிருக்கை கிராமம், இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களின் முக்கிய தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என்கின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இக்கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் குழாய், இரண்டு கி.மீ தூரத்தில் உடைந்து சேதம் அடைந்ததால் இன்று வரை காவிரி தண்ணீரை கண்ணால் கூட பார்க்க முடியவில்லை என்கின்றனர் கிராம மக்கள். நல்லிருக்கையில் கண்மாயில் நான்கு கிணறுகள் அமைக்கபட்டும் தண்ணீர் இல்லாததால் பயன்படவில்லை, டேங்க் இருக்கிறது, குழாய் இருக்கிறது ஆனால் தண்ணீர் மட்டும் இல்லை என்பதே இந்த ஊரின் நிலை. தூர் வாரப்படாமலும், முறையான பராமரிப்பின்றியும் காய்ந்து வறண்ட பூமியாக காட்சி தருகிறது கண்மாய். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாரியம்மாள் எங்கள் நல்லிருக்கை கிராமத்திற்கு 'காவிரி தண்ணீர் வந்து மூன்று ஆண்டு ஆகிறது, ஒன்றுக்கு நான்கு கிணறுகள் உள்ளன. ஆனால் கிணற்றில் மண்ணும் பாறையும் மட்டுமே' உள்ளன. கிணற்றில் தண்ணீர் கிடையாது. தண்ணீர் எடுக்க காலையில் வந்தால் 'சாப்பிடகூட முடியாமல் பசியும், பட்டினியுமாக காத்து இருந்தால்தான் ஆளுக்கு ஒரு குடம் இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும' என்றார். நல்லிருக்கை கண்மாயில் உப்பு நீரை நன்னீராக மாற்றுகின்ற ஒரு ஆர்.ஓ பிளாண்ட் உள்ளது அந்த குழாயில் ஒரு நாள் தண்ணீர் வந்தால் ஒரு மாததிற்கு தண்ணீர் வருவதில்லை, அந்த தண்ணீரையும் உணவு சமைப்பதற்கோ,குடிப்பதற்கோ முடியாது. தண்ணீர் கஷ்டம் மிக பெரிய கஷ்டமாக உள்ளது. குடிநீரின்றி ஆடு,மாடுகள் ஆங்காங்கே இறந்து விடுவதாக வெள்ளையம்மாள் பிபிசி தமிழிடம் சோகத்துடன் கூறினார். சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் அவலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள சிக்கல், சாயல்குடி, தரைக்குடி, ஆர்.சி.புரம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது, அக்குழாயிலிருந்து கசியும் நீரை அள்ளி பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குழாயின் உடைப்பை சரிசெய்யாமல் விட்டுவிட்டதால், குழாயின் அருகே ஓர் அடி ஆழத்திற்கு குழி தோண்டி ஒழுகிக்கசியும் சுகாதரமற்ற நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேறும் சகதியுமாக குடங்களில் எடுத்துச்சென்று குடிக்கவும் சமையல் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். நிலவும் கடும் வறட்சியால், வேறு வழியின்றி சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராக்காயி எங்கள் ஊரில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. இதனால், மனிதர்களும், ஆடு மாடுகளும் சந்திக்கும் கஷ்டம் அதிகம். குடிப்பதற்கு தனியார் தண்ணீர் வண்டிகளில் ஒரு குடம் ஏழு ரூபாய்க்கு வாங்கி வருகிறோம் ஆனால் எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்து தண்ணீர் வாங்க முடியாததால் குழாய்களில் ஏற்படும் உடைப்பில் வரும் தண்ணீரை எடுத்து குடித்து வருகிறோம், இந்த தண்ணீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் வருகின்றன என வேதனையுடன் தெரிவித்தார் அவர். மேலும் பிபிசி தமிழிடம் பேசிய தெய்வானை, கடந்த ஐந்து வருடங்களாக எங்கள் கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த தண்ணீர் பஞ்சத்தால் 'எங்கள் கிராமத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத பெண்களை, மாப்பிள்ளை வீட்டார் திருமண செய்ய பெண் கேட்டு வருவதில்லை'. குடி தண்ணீருக்காக 'ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் நிலை தான்' இங்குள்ளளது” என்று தெரிவித்தார். இது குறித்து திருப்புல்லாணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மங்களேஸ்வரியிடம் கேட்டபோது, “நல்லிருக்கை கிராமத்திற்கு செல்லும் காவிரி குழாய் பல இடங்களில் உடைந்து சேதமடைந்த நிலையில் அவற்றை; சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அக்கிராம மக்களின் குடி நீர் தேவைக்காக ரூபாய் நான்கு லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறு அமைக்கும் பணி துவங்க உள்ளது” என தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பிபிசி தமிழிடம் கூறுகையில், “மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. மேலும் காவேரி கூட்டு குடிநீர் குழாயை உடைத்து தண்ணீர் திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. அதேபோல் மாவட்டத்தில் குழாய் உடைப்பு அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் உடனடியாக பொது மக்கள் 1800 425 7040 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க முழுமுயற்சி எடுக்கப்படும்” என்றார். https://www.bbc.com/tamil/india-48957753
  3. ரூ. 700-க்கு வழங்கப்படும் மெட்ரோ தண்ணீரை தனியார் டேங்கர் லாரிகளிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் அளவுக்கு கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை மக்கள் தனியர் டேங்க் லாரி தண்ணீரை ரூ. 4 ஆயிரம் வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஏப்ரலில் ரூ. 2 ஆயிரமாக இருந்த டேங்கர் லாரி தண்ணீர் விலை தற்போது ரூ. 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் சில இடங்களில் வற்றி விட்ட நிலையில் சில பகுதிகளில் மக்கள் தனியார் டேங்கர் லாரி தண்ணீரை நம்பியுள்ளனர். சென்னையின் தென் பகுயில் இருக்கும் ராம் நகரை சேர்ந்தவர் ஷாஜி மேத்யூஸ் என்பவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை பணியாளராக உள்ளார். அவரது வீட்டில் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள டேங்க அமைக்கப்பட்டுள்ளது. தனியார் டேங்கர் லாரியிடம் தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தி வருகிறார். அவரது வீட்டில் 2 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தனியார் டேங்க் லாரி தண்ணீரை அவர்கள் 3 வாரத்திற்கு பயன்படத்துகின்றனர். தண்ணீர் உபயோகம் குறித்து அவர் கூறுகையில், 'ஏப்ரலில் ஒரு லோட் தண்ணீர் ரூ. 2 ஆயிரத்துக்கு வாங்கினோம். இன்றைக்கு ரூ. 4500 - ஆக உயர்ந்துள்ளது. நான் ஓய்வு பெற்ற ஊழியர். எனது ஓய்வூதியத்தின் அதிகப்படியான தொகை தண்ணீருக்கே செலவாகிவிடும் போல் உள்ளது' என்றார். ராஜா என்பவர் கூறுகையில் ஒரு மாதத்திற்கு மட்டும் தனியார் டேங்கர் லாரி தண்ணீருக்கு ரூ. 2,500-யை செலவு செய்கிறேன். எனது அபார்ட்மென்ட்டில் உள்ள அனைவரையும் சேர்த்தால் ரூ. 75 ஆயிரம் வரை தண்ணீருக்கு செலவாகிறது என்றார். தனியார் டேங்க் லாரி தரப்பில் அதன் உரிமையாளர் சங்க மாநில தலைவர் நிஜலிங்கம் கூறுகையில், 'முன்பெல்லாம் ஒரு 30 கிலோ மீட்டர் வரைக்கும் சென்று நாங்கள் தண்ணீர் எடுத்து வருவோம். தற்போது 100 கிலோ மீட்டர் வரைக்கும் செல்ல வேண்டி உள்ளது. டோல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.' என்றார். https://www.ndtv.com/tamil/tamilnadu-chennai-water-crisis-from-rs-2-000-to-rs-4-500-the-price-chennai-residents-pay-for-water-2067417?pfrom=home-topscroll