Search the Community
Showing results for tags 'வான்புலி'.
-
வான்புலிகளின் வான்கலன்கள்
நன்னிச் சோழன் posted a blog entry in ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான வானூர்திகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.-
- 1
-
-
- வான்புலிகளின் வானூர்திகள்
- வான்புலி வான்கலன்
-
(and 2 more)
Tagged with:
-
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 22.10.2007 அன்று “எல்லாளன் நடவடிக்கை”யின் போது சிறிலங்காவில் உள்ள அனுராதபுர வான்படைத்தளத் தளத்தில் ஊடுருவி கரும்புலிகளும் – வான்புலிகளும் தகர்த்தழித்த வரலாற்றுச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய 21 கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பாதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தேசத்தின் புயல்கள்… தேசப்புயல்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும், தமிழீழ தேசமும்… தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்கள்… கரும்புலி லெப். கேணல் இளங்கோ அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது. எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும். உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது. சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது. கரும்புலி லெப். கேணல் வீமன் பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார். மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன. வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான். வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர். அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான். கரும்புலி லெப். கேணல் மதிவதனன் என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது. அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது. பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். கரும்புலி மேஜர் இளம்புலி இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது. இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். இவர்களோடு…, கரும்புலி மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன், கரும்புலி மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன், கரும்புலி மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன், கரும்புலி மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி, கரும்புலி கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கரும்புலி கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன், கரும்புலி கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார், கரும்புலி கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன், கரும்புலி கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார், கரும்புலி கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார், கரும்புலி கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ், கரும்புலி கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ், கரும்புலி கப்டன் பஞ்சீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி, கரும்புலி கப்டன் அறிவுமலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா, கரும்புலி கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன், கரும்புலி லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். நீளும் நினைவுகளாகி…. தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/memorial-day-of-black-tigers-soldiers-who-died-in-the-operation-ellalan/
- 3 replies
-
- வான்புலி
- கரும்புலிகள்
-
(and 5 more)
Tagged with:
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello), வணக்கம் மக்களே! உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், வில்லைகள்(badges) மற்றும் பறனை உடுப்புகள்(flight suits) என்பனவற்றைப் பற்றித்தான். வான்புலிகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாட்டின் வான்படையாக திகழ்ந்தனர் என்பதற்கு மற்றுமொரு ஆதாரமாக இவ்வாய்வுக் கட்டுரை தமிழ்ப்பரப்பில் விளங்குமென நினைக்கிறேன். 'புலிகளின் வான்படையின் இலச்சினை | படிமப்புரவு: EelamView ' வான்புலிகளின் சீருடை: முதலாவதாக வான்புலிகளின் சீருடை பற்றிக் காண்போம். இவர்கள் இளநீல வண்ணத்திலான வரிப்புலிச் சீருடையை அணிந்திருந்தனர். அது அதிவெளிறிய இளநீலம், வான்நீலம் மற்றும் சாம்பல் நீலம் என நீலக் குடும்பத்தினைச் சேர்ந்த மூன்று நிறங்களைக் கொண்ட வரிப்புலிச் சீருடையாக இருந்தது. இச்சீருடை எப்போது முதற்தடவையாக அணியப்பட்டது என்பது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. தோராயமாக 2001/2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்துவாக இருக்கலாம் என்பது என் துணிபு. முன்குறிப்பிட்ட காலத்தில் இருந்து 2009 இறுதிப்போர் வரை அணிந்திருந்தனர். இறுதிப்போரில் எப்போது கடைசியாக அணிந்தனர் என்பது அறியில்லை. ஆனால் அவர்கள் வான்கரும்புலிகளாக செல்வதற்கு முன்னர் இதனை அணிந்திருந்தால், 2009 பெப்ரவரி எனக் கொள்ளலாம். (அதன் பிறகு வானூர்திக்கான தேவை எழவில்லை.) ஆனால் இவ்விரண்டு தேதிகளும் என்னுடைய துணிபு மட்டுமே. துல்லியமானவை அறியில்லை. வானோடிகளின் வில்லைகள்: அடுத்து இவர்கள் அணிந்த வில்லைகள் பற்றிப் பார்ப்போம். இவர்கள் இரண்டு விதமான வில்லையினை தமது மார்பினில் குத்தியிருந்தனர். வானோடிகள் வலது பக்க மார்பில் வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லையினையும் இடது பக்கத்தில் பறப்பர் வில்லையினையும் (aviator badge) குத்தியிருப்பர். 'வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லை(badge) - வலது மார்பு' 'பறப்பர் வில்லை(Aviation badge) - இடது மார்பு' (கீழே உள்ள 4 படத்திலும் வெவ்வேறு தமிழீழ வானோடிகள் , துணை வானோடிகள் மற்றும் வான்கலவர்(airmen) உள்ளனர்... இப்படங்களில் உள்ள வானோடிகளில் ஒருவரைத் தவிர்த்து ஏனைய 3 வானோடிகளும் வீரச்சாவடைந்து விட்டனர்) 'வானோடிகளின் மார்பில் அந்தக் கறுப்பு நிறத்தில் தெரிபவை வில்லைகளைக் குத்துவதற்கான பிணையொட்டிகள்(velcro) ஆகும்.' வானோடிகளுக்கான விருதுகள்: ஈழப்போரில் விடுதலைப்புலிகளால் தமிழீழ வானோடிகளுக்கென தனித்துவமான ஒரு விருது வழங்கப்பட்டது. அதன் பெயர் "நீலப்புலி" என்பதாகும். இது ஐந்து தடவை தொடர்ந்து வானேறி வெற்றிகர வான்தாக்குதல் மேற்கொண்ட வானோடிகளிற்கு வழங்கப்படும் விருதாகும். 'நீலப்புலி விருது' இது வான்புலிகளில், வான்கரும்புலி வானோடி கேணல் ரூபன்(மாவீரர்) வான்கரும்புலி வானோடி லெப் கேணல் சிரித்திரன்(மாவீரர்) வானோடி (நிலை இல்லை) தெய்வீகன்/தேவியன் (மாவீரர்) ஆகியோரிற்கு வழங்கப்பட்டன. மேலும் துணைவானோடிகளாக செயற்பட்டோரிற்கு 'மறவர்' என்ற விருதும் வழங்கப்பட்டது. இதனைப் பெற்றோரின் பெயர்க் குறிப்புகள் அறியில்லை. இவற்றைப் பெற்றோரின் படிமங்களைக் காண இங்கே சொடுக்கவும்: வான்புலி வானோடிகளின் பறனை உடுப்புகள் (Pilots Flight Suits) : உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடும் தன்னுடைய வான்படைக்கென பறனை உடுப்புகள் வழங்குவது வழக்கம். இவை கூடுதலாக பாசிபச்சையும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் இருப்பது வழக்கம். நமது பண்டாக்கள் அணிவதும் இந்நிறத்திலான உடுப்பினையே. இதே போன்றே எமது வான்படை வானோடிகளும் பறனை உடுப்பினை அணிந்திருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ம்ம். சிலபேர் அறிந்திருப்பீர்கள்; பலபேர் அறிந்திருக்கமாட்டீர்கள். எனவே நாம் அடுத்ததாக எம்மவர் அணிந்திருந்த இந்த பறனை உடுப்பினைப் பற்றிக் காண்போம். வான்புலிகளின் முதற்பறப்பு மூன்றாம் ஈழப்போர் காலத்தில்தான். அவர்கள் பறந்த ஆண்டு - என்னிடம் இருக்கிற தகவல்களின் அடிப்படையில் - தோராயமாக 1998 ஆம் ஆண்டு என வைக்கிறேன். இதன் அடிப்படையில் அவர்கள் இச்சீருடையினை முதன் முதலில் அணிந்தது 1998 ஆம் ஆண்டாக இருக்கலாம் எனக் கணிக்கிறேன்(மாதம், நாள், நேரம், தாரகை எல்லாம் நான் அறியேன் மக்காள்). இந்த 1998 ஆம் ஆண்டில் அவர்கள் இரு நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். --> 1998இல் கொச்சு இலகு கீழிதை(Micro Light Glider) ஓட்டிய வானோடிகள் அணிந்திருந்தது: இந்த ஆண்டில் கீழிதையினை ஓட்டிய வானோடிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக நின்ற இன்னொரு அண்ணா என மொத்தம் மூன்று பேர் ஒரு வெளிறிய இளநீல நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். இவர்கள் பராக்குடையோ அல்லது தேவையான பாதுகாப்பு அணியங்களோ(accessories) அணிந்திருக்கவில்லை. ஆனால் வானோடிகள் இருவரும் தலைக் கவசமாக ஒரு வெள்ளை நிறத்திலான வானோடி தலைச்சீரா அணிந்திருந்தனர். இவை யாவும் கீழ்வரும் படிமங்கள் மூலம் அறியப்பட்டவையே. 'இடது பக்கத்தில் நிற்கும் வான்கலவரும் இப்பறனை உடுப்பினை அணிந்துள்ளதை கவனிக்குக. ஆக மொத்தம் மூன்று பேர் இப்பறனை உடுப்பினை அணிந்துள்ளனர், 1998இல்.' --> 18 செப்ரெம்பர், 1998இல் ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை(Gyroplane) பறப்பின் போது: இந்த ஆண்டில் தற்சுழல்பறனை ஓட்டிய வானோடிகள் இருவரில் ஒருவர் மட்டும் (அச்சுதன் அவர்கள்) அக்காலத்தில் சிங்கள வானோடிகளின் பறனை உடுப்பு நிறமான பாசிப்பச்சை நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தார். இவர் பராக்குடையோ(parachute) அல்லது தேவையான பாதுகாப்பு அணியங்களோ அணிந்திருக்கவில்லை. ஆனால் வானோடிகள் இருவரும் அதே பாசிப்பச்சை நிறத்திலான முந்தையதைக் காட்டிலும் தொழில்நுட்பம் கொஞ்சம் முன்னேறியதாக உள்ள ஒரு தலைச்சீராவினை அணிந்திருந்தனர். இவை யாவும் கீழ்வரும் படிமங்கள் மூலம் அறியப்பட்டவையே. 'இடமிருந்து வலமாக: கேணல் சங்கர் , மற்றும் அச்சுதன் அவர்கள்' 'இடமிருந்து வலமாக: லெப் கேணல் குசந்தன், பெயர் அறியா வான்கலவர் மற்றும் அச்சுதன் அவர்கள்' --> 2005< சிலின் சி 143(Zlin Z 143) மற்றும் செசுனா வித(Cessna type) வானூர்தி ஆகியவற்றை ஓட்டிய வானோடிகள் அணிந்தவை: இடமிருந்து வலமாக: சிரித்திரன், தெய்வீகன்/தேவியன் மற்றும் ரூபன் ஆகியோர் தாக்குதல் வானூர்தியாக மாற்றப்படாத சிலின் 143 இற்கு முன்னால் நிற்கின்றனர். இவ்வானூர்திகள் 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் ஓட்டப்பட்டவை ஆகும்(என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் 10 படிமங்களின் காலம் 03/04/2005 ஆகும்). இக்காலத்தில் இதனை ஓட்டிய தமிழீழ வானோடிகள் இரண்டு நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். ஒன்று கறுப்பு மற்றொன்று கடுநீலம் ஆகும். இவை இரண்டையும் நீங்கள் மேலுள்ள படிமத்தினை நன்கு அண்மையாக்கி ஒளியினை அதிகரிப்பதன் மூலம் காணலாம். மேலுள்ள படிமத்தில், லெப் கேணல் சிரித்திரன் மற்றும் தேவியன்(நிலை இல்லை) ஆகியோர் கறுப்பு நிற பறனை உடுப்பினை அணிந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் அணிந்துள்ள வான்படை கத்தனத்தின் கழுத்துப்பட்டையில் நீல நிற உடுப்பு ஒன்றின் கழுத்துப்பட்டை தெரிகிறது. அது யாதென எனக்குத் தெரியவில்லை. இவர்களில் மூன்றாமவரான கேணல் ரூபன் அவர்கள் நீல நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்துள்ளார். அதேநேரம் இவர்கள் மூவரும் தத்தமது பறனை உடுப்பின் மேல் கறுப்பு நிற வான்படை கத்தனம்(Air Force jacket) ஒன்றினையும் அணிந்துள்ளனர். மேலும் மேற்கண்ட படிமத்தில் வானோடி தேவியன் அவர்கள் கையில் பச்சை நிற கைமேசினை(gloves) அணிந்துள்ளதையும் கவனிக்குக. சிங்களம் கைப்பற்றிய பறனை உடுப்பும் கொளுத்திய வெடியும்: இவ்வுடுப்பினில் ஒன்றினை சிங்களப் படைகள் இறுதிப் போரில் கைப்பற்றி இருந்தன. கைப்பற்றிய உடுப்பு விடுதலைப் புலிகளினதுதான், ஆனால் அதில் குத்தப்பட்டிருந்த இரு வில்லைகளும் விடுதலைப் புலிகளினது இல்லை. ஏனெனில் புலிகளினால் வெளியிடப்பட்ட பறப்பர் வில்லை மற்றும் 'வானோடி' என எழுதப்பட்ட வாசகம் கொண்ட வில்லை ஆகிய இரண்டிலும் புலிச் சின்னம் இருப்பதோடு அவை தமிழிலும் உள்ளன. ஆனால் இந்த உடுப்பில் குத்தப்பட்டுள்ள வில்லைகளில் புலிச்சின்னமும் இல்லை, வானோடி என்ற வாசகம் தமிழிலும் இல்லை! பகரமாக 'Pilot' என்ற ஆங்கில வாசகமே உள்ளது. தமிழ் கொண்டு ஆண்ட நாட்டின் படையில் ஆங்கிலமா? வாய்ப்பேயில்லை! அத்துடன் அவற்றினது வடிவமும் தோற்றமும் புலிகளால் வெளியிடப்பட்ட வில்லையில் இருந்து முற்றாக வேறுபடுகிறது. மேலும், இந்த உடுப்பானது வில்லைகள் குத்தப்பட்ட நிலையில்தான் சிங்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. இதுதான் மிகப் பெரிய சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது. ஏனெனில் எந்தவொரு வானோடியும் தனது உடையில் வில்லையினை குத்திவைத்த நிலையில் புதைத்துவிட்டுச் செல்ல மாட்டான். ஆனால் இங்கு சிங்களமோ அப்படியே புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்து கிளப்பி எடுத்ததாக அறிவித்திருக்கிறது. நான் எண்ணுவது யாதெனில் உங்கள் மனதில் இப்போது தோன்றுவதே. ஓம், எடுத்த பின்னர் ஊடக்கத்திற்காக இப்படி ஏதேனும் குத்திவிட்டிருக்கலாம் என்பது என் துணிபு. ஆக, இந்த பறனை உடுப்பு வான்புலிகளினதுதான், ஆனால் அதில் குத்தப்பட்டிருக்கும் வில்லைகள் வான்புலிகளினது அல்ல! அவை புலிகளினது பொருள் ஒன்றினை கைப்பற்றி விட்டோம் என சிங்கள மக்களுக்கு தெரிவித்து சிங்கள மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிங்களம் செய்த உத்தியே ஒழிய இது புலிகளினது வில்லைகள் அன்று. 'கைப்பற்றப்பட்ட புலிகளின் கடுநீல நிற பறனை உடுப்பு' '13-மே-2009 அன்று சிங்களத்தால் கைப்பற்றப்பட்டு உலகிற்கு புலிகளின் பறனை உடுப்பு என அறிவிக்கப்பட்டது | படிமப்புரவு: யூடியூப் & ITN News| மூன்று திரைப்படிப்புகளை ஒன்றாக ஒட்டி இப்படிமத்தை உருவாக்கியுள்ளேன்' தமிழரின் பறனை உடுப்பில் குத்தப்பட்டிருக்கலாம் என நான் கணிக்கும் வில்லைகள்: மேலே சிங்களம் கொழுத்திய வெடியை வைத்துப் பார்க்கும்போது எம்முடைய வானோடிகளின் பறனை உடுப்பில் வலது மார்புப் பக்கத்தில் நான் மேலே கூறியுள்ளது போன்ற 'வானோடி' என்ற வாசகம் கொண்ட மஞ்சள் நிற வில்லை குத்தப்பட்டிருந்திருக்கலாம்; இடது பக்கத்தில் 'நீலப்புலி' என்ற பறப்பர் வில்லை குத்தப்பட்டிருந்திருக்கலாம்; இரு தோட்களிலும் தோள்மணை(Shoulder boards) மேலுள்ளது போல குத்தப்பட்டிருந்திருக்கலாம். அந்த தோள்மணையில் குறுக்குப்பாட்டிற்கு - இனமறியா பொருளால் ஆன - ஒன்றிணைக்கப்பட்ட மூன்று வெண்ணிற பட்டைகள் பிணைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன். மாறாக இவ்வில்லைகளை குத்தாமல் வெறுமனே அணிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இந்த வில்லைகள் குத்தப்பட்டிருக்கலாம் என்பது வெறும் கருதுகோள் மட்டுமே. ஆனால் வான்புலிகள் இப்பறனை உடையினை அணிந்திருக்கின்றனர் என்பது வரலாறு எமக்குச் சொல்லும் செய்தி, அந்தப் படிமம் மூலமாக! உசாத்துணை: https://eelam.tv/watch/வ-ன-ப-ல-கள-ன-இரண-ட-வத-பறப-ப-ltte-airforce-light-glider-skytigers_QoiFA5YoVHx3q8j.html https://eelam.tv/watch/sky-tigers-planes-flying-clear-video-வ-ன-ப-ல-கள-gyroplane-ltte-air-force-tamil-tigers_pKPYEXSJjezSrqV.html https://eelam.tv/watch/sky-tigers-aircraft-accessories-வ-ன-ப-ல-கள-பறன-உட-ப-ப-sky-tigers-flight-suit_ZZIOE7E9guMrWAD.html கிடைத்த படிமங்களை ஆராய்ந்து எழுதியுள்ளேன். படிமப்புரவு: dossier on LTTE Tamilnet.com eelamview.com ஏனையவை திரைப்பிடிப்புகள் ஆகும் (youtube.com, eelam.tv) ஆக்கம் & வெளியீடு நன்னிச்சோழன்
- 1 reply
-
- 1
-
-
- ltte air force
- ஈழ வான்படை
-
(and 17 more)
Tagged with:
- ltte air force
- ஈழ வான்படை
- வான்புலி சீருடை
- ltte sky tigers uniform
- வானோடி உடுப்பு
- வான்புலிகளின் சீருடைகள்
- வான்புலி
- ஈழ வான்படை உடுப்பு
- வான்புலிகளின் உடுப்பு
- ltte sky tigers flight suit
- உடுப்பு
- வான்புலி உடுப்பு
- பறனை உடுப்பு
- பறனை உடுப்புகள்
- வானோடி பறனை உடுப்பு
- தமிழீழ பறனை உடுப்புகள்
- சீருடை
- வான்புலிகளின் பறனை உடுப்புகள்
- eelam flight suit
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9. அவற்றின் அமைவிடங்கள் ஆவன, 1) பனிக்கன்குளம் வான்பொல்லம் 'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்' A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான மணலாலான 5-6 அடி உயர மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீரற்ற அகழி இருந்தது. இதற்கான நுழைவுவாயில் எங்கிருந்தது என்பதை என்னால் அறியமுடியவில்லை. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். 'மணலாலான 5- 6 அடி உயரமுள்ள மண்ணரணை அம்புக்குறி சுட்டுகிறது' 'எதிரெதிர் திசையில் அமைந்திருந்த குறுக்காப் போகும் கீல் கல்வீதிப்பாவு. இது மிகவும் சிறியதாக உள்ளதைக் காண்க' 'ஓடுபாதை மணலால் உருமறைக்கப்பட்டுள்ளதை கவனிக்குக' 2) நிவில் பகுதி வான்பொல்லம் 'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம் | நான் கணினி வரைகலையில் கொஞ்சம் மோசமான ஆள்!' B-69 பூநகரி பரந்தன் சாலையில் உள்ள நிவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: 200m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான வெள்ளை மணலாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீருள்ள அகழி இருந்தது. இதற்கான நுழைவுவாயில் எங்கிருந்தது என்பதை என்னால் அறியமுடியவில்லை. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நெடியவாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். 'வெள்ளை மணலாலான மண்ணரண் ஓடுபாதை கீல் கல்வீதிப்பாவு 3)அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: வடக்கில் இருந்து கிழக்காக 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 25m 4) கேப்பாப்புலவு வான்பொல்லம் முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மொத்த நீளம்: 2.5km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m இவ்வான்பொல்லத்தில் வானூர்திகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு 2 பறவாடி(Hangar) அமைக்கப்பட்டிருந்தன. பறவாடி: பறவாடி உட்புறம்: பறவாடியின் உறுப்புகளை விளக்கும் விளக்கப்படம்: படிமப்புரவு: dossier on ltte weapons. pdf 5)அம்பகாமம் கிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்திற்கு கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது மொத்த நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m கட்டப்பட்டது: 2002-2003 ஆம் ஆண்டு. ஆனால் தொடர் சிங்கள வான்படையின் குண்டுவீச்சால் இது புதுபிக்கப்பட்டுக்கொண்டே வரப்பட்டது. இது சிங்களவரை ஏமாற்றுவதற்காக கட்டப்பட்டதாகும். "செய்மதிப் படம் | 2003-2004" 6) அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்தின் வடகிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: 300m 7)பிரபந்தனாறு வான்பொல்லம் மொத்த நீளம்: 2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m கீல் கல்வீதிப்பாவு மொத்தம் 16 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. நிலவரையில் (in maps) மேலே உள்ள வான்பொல்லங்கள் எண்வரிசையில் …. பிற்சேர்க்கை (08/12/2020): புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) மேலும் இரண்டு வான் பொல்லங்கள்(air strips) புலிகளின் வான்புலிகளிடம் இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.. இவை எதையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றும் வரை கண்டு குண்டு வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அவையாவன.. 8 )புத்துவெட்டுவான் கிழக்கு வான்பொல்லம் இது வான்பயிற்சிக் கூடமாக இருந்தது. கீல் கலவீதிப்பாவு நீளம்: 800 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50 m 9)மன்னகண்டல் மேற்கு வான்பொல்லம் இது புதுக்குடியிருப்பு முத்தையன்கட்டு வீதியில் மன்னகண்டல் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: 650 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 35 m இவற்றில் வான்புலிகளின் தளமாக இயங்கியது இரண்டுதான். மீதி அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சில வான் பயிற்சிகளை மேற்கொள்ளவும் எதிரிகளை ஏமாற்றவும் வடிவமைக்கப்பட்டவை. இதில் சிறப்பு என்னவென்றால் இறுதிவரை இலங்கை படைத்துறை உண்மையான வான்பொல்லத்தை அடையாளம் கண்டு தாக்குதல்தல் நடத்தவே இல்லை! அத்தனை சிறப்பாக உருமறைக்கப்பட்டிருந்தன. புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan), விடுதலைப் போராட்ட வீரர் "வானூர்திகள்... ஓட்டி வந்த வீரர்களை...ப் பார்த்துப் பார்த்து... விசிலடித்து... ஆடுகிறோம்... மாலைகளை...க் கழுத்தில் போட்டு" --குத்தாட்டம் போடுடா பாடலிலிருந்து. --------------------------------------------- உசாத்துணை: YouTube Sri Lanka troops seize rebel airstrip, refugees flee Troops capture LTTE's last airstrip in Mullaitivu Iranamadu Airport - Wikipedia https://idsa.in/TWIR/9_5_2008_SriLanka Strip ( படிமப்புரவு(Image courtesy) YouTube நிகழ்படம்(video) YouTube eelam.tv ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 2 replies
-
- 9
-
-
-
- தமிழீழ வானூர்தி நிலையம்
- வான்புலிகள்
-
(and 20 more)
Tagged with:
- தமிழீழ வானூர்தி நிலையம்
- வான்புலிகள்
- வான்புலிகளின் வானுர்தி நிலையம்
- வான்புலிகளின் வான்பொல்லங்கள்
- வான்புலி
- air tigers ltte
- வான்பொல்லங்கள்
- eelam airports
- tamil tigers airstripe
- air tigers
- ltte air stripe
- tamil tigers airport
- ltte airport
- விடுதலைக்கு முன்னான தமிழீழ ஓடுபாதைகள்
- tamil eelam airports
- வானூர்தி நிலையம்
- ஓடுபாதை
- தமிழீழ ஓடுபாதை
- வான்புலி ஓடுபாதை
- வான்பொல்லம்
- ltte airstripe
- ltte airstrips
-
இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின்னர் கொழும்பை அடையும் வரையிலும் அவற்றின் பாதைகளை கண்டறிந்து தாக்குவதற்கு சிறீலங்கா வான்படையினால் முடியாது போனதும், பெரும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வான்புலிகளின் விமானங்கள் 300 அடி உயரத்திலும் குறைவான உயரத்தில் பறந்ததனால் வான்படை விமானங்களால் அவற்றை தாக்கமுடியவில்லை என படைத்தரப்பு கூறிவருகின்றது. வான்புலிகளின் இந்த உத்திகளால் வான்படையினாரின் ராடார் திரைகளிலும் விமானங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு வான்பரப்பை அடைந்த விமானங்களில் ஒன்று வான்படை தலைமையகத்தையும், மற்றயது கட்டுநாயக்கா வான்படை தளத்தினையும் தாக்க முனைந்துள்ளன. முன்னைய பறப்புக்களை போலல்லாது விமானங்கள் தமது இலக்கினை நோக்கி தாழ்வாக பறந்துள்ளன. இந்த பறப்புக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் எதிரியின் செறிவான பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடுகளில் அவை சிக்கி கொள்ளும் ஆபத்துக்கள் அதிகம்.சிறீலங்கா படையினர் கொழும்பின் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பெரும்பாலான உயரமாக கட்டங்களில் எல்லாம் விமான எதிர்ப்பு பீரங்கிகளை நிறுவியுள்ளனர். ஹில்டன் ஆடம்பர விடுதியில் கூட அவர்களின் பீரங்கி நிலைகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று முன்னர் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கேணல் றூபன் ஒட்டிச்சென்ற விமானம் வான்படை தலைமையகத்திற்கு எதிராக உள்ள உள்நாட்டு வரித்திணைக்களத்தின் 12 ஆவது மாடிக்கும் 13 ஆவது மாடிக்கும் இடையில் மோதி வெடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 210 கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்தின் தாக்கத்தினால் அந்த கட்டடத்தொகுதி பலத்த சேதமடைந்ததுடன், அருகில் இருந்த வான்படை தலைமையகம், ரான்ஸ் ஏசியா ஆடம்பர விடுதி என்பன உட்பட பல கட்டங்கள் சேதமைடந்துள்ளன. இருந்த போதும், வான்படை தலைமையகத்தை சூழவுள்ள அதியுயர் பாதுகப்பு வலையப்பகுதிக்குள் இருந்த நான்கு மாடி கட்டடம் ஒன்று முற்றாக தகர்ந்து போயுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் அரசின் இறுக்கமான ஊடகத்தடை காரணமாக இது தொடர்பான முழு தகவல்களையும் பெறமுடியவில்லை. இதனிடையே லெப். கேணல் சிரித்திரன் ஒட்டிச்சென்ற 905 இலக்கமுடைய சிலின்-143 விமானம் கட்டுநாயக்கா வான்படை தனத்தினை அண்மித்த போது சிறீலங்கா படைத்தரப்பு விமானத்தை நோக்கி ஏவுகணையை ஏவியிருந்தது. ஆனால் ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பும் பொருட்டு விமானத்தின் இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வான்படை தளத்தினை நோக்கி விழ எத்தனித்த போது அருகில் இருந்த தென்னைமரம் ஒன்றில் விமானம் மோதியதனால் அது நிலை தடுமாறிய சமயம் துப்பாக்கி சூடுகளுக்கும் இலக்காகி உள்ளது.http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SaCppnNpP4I/AAAAAAAAE4Y/xRfnNemaFeQ/s400/abt.jpg 12.7 மி.மீ கனரக இயந்திர துப்பாக்கி சன்னங்கள் விமானியின் இடது கரம் மற்றும் இடது மார்பு பகுதிகளை தாக்கியுள்ளன. அந்த விமானம் பின்னர் வான்படை தளத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள வளவு ஒன்றில் வீழ்ந்துள்ளது. விமானத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை அருகில் இருந்த நீர்த்தொட்டியில் மோதி வெடித்ததாக படை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. விமானம் வீழந்த வேகத்தில் அதன் இயந்திரப்பகுதி முற்றாக சிதைந்த போதும் அதில் இருந்த வெடிமருந்துகள் வெடிக்கவில்லை. ஆனால் இந்த விமானம் வான்படை தளத்திற்குள் வீழ்ந்து வெடித்திருந்தால் பேரனர்த்தம் ஏற்பட்டிருந்கும் என வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். வான்புலிகளின் விமானங்கள் முன்னர் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குண்டுதுளைக்காத கவசதகடுகள் பொருத்தப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதுடன், அவை 50 - 75 கிலோ குண்டுகளையும் சுமந்து வந்திருந்தன. ஆனால் தற்போது அதிக எடை கொண்ட குண்டுகளை கொண்டுவருவதற்கு ஏதுவாக அவர்கள் விமானத்தின் கவசத்தகடுகளை அகற்றியிருப்பதாக தாம் கருதுவதாக படைத்துறை தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 20 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர்கள் கடந்த ஊதாகதிர்களை குழம்பும் சாதனங்கள்,ராடார் கதிர்களை குழப்பும் சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்தவில்லை எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்களில் இருந்து படைத்தரப்பு தப்பி பிழைத்து கொண்ட போதும், அரசிற்கு இது பலத்த பின்னடைவாகும். விடுதலைப்புலிகளின் கதை முடிந்து வருவதாக அரசு தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகையில் சிறீலங்காவின் தலைநகரத்தினை சில மணிநேரம் வான்புலிகள் செயலிழக்க செய்தது அரசின் பிரச்சாரத்திற்கு பலத்த அடி என்பது மட்டுமல்ல சிறீலங்காவின் பொருளாதாரதிற்கும் இது பலத்த பின்னடைவை ஏற்படுத்த வல்லது. ஏற்கனவே வீழச்சி கண்டுள்ள உல்லாசப்பயணத்துறையை இது மேலும் பாதிப்பதுடன், முதலீட்டாளர்களையும் சிறீலங்காவை விட்டு விலகி நிற்கவே செய்யும். விடுதலைப்புலிகளுக்கு இருப்பதற்கே இடமில்லை என்ற தொனியில் அரசின் பிரச்சாரம் அமைந்திருந்த வேளையில் வான்புலிகள் எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று விடுதலைப்புலிகளின் கதை முடியும் தறுவாயில் உள்ளதாக அரசு தெரிவித்து வருகின்ற போது மேற்கொள்ளப்பட்ட வான்புலிகளின் தாக்குதலின் பரிமாணம் பெரிதாகும் என தெரிவித்துள்ளது. வான்புலிகளின் விமானங்கள் ஒவ்வொன்றும் 210 கிலோ எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த வெடிமருந்தை காவிச் செல்லும் ஏவுகணைகளைவே தற்போது கருதப்படுகின்றன. அவை சிறீலங்காவின் தலைநகரத்தினை அடையும் வரை அரசினால் தடுக்க முடியாது போனது அரசிற்கும் பலத்த பின்னடைவு. தலைநகரத்தினை அடைந்த பின்னர் அவை எங்கு வீழந்தாலும் அரசிற்கு அது இழப்புத்தான். அவை படைத்துறை ரீதியாக இருக்கலாம், பொருளாதார ரீதியாக இருக்கலாம், அரசியல் ரீதியாக இருக்கலாம்.புதிதாக தோன்றியுள்ள இந்த அச்சுறுத்தல் தலைநகரத்திற்கு மட்டுமானது என அரசு நிம்மதி அடைந்துவிட முடியாது. கட்டுரைக்காலம்: February 28, 2009 - வேல்ஸிலிருந்து அருஸ் நன்றி: ஈழமுரசு
-
- வான்புலிகள்
- வான்புலி
-
(and 2 more)
Tagged with: