பரிசு.
விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு.
அன்று
எனது பிறந்தநாள்
நிறைய
நண்பர்கள், நண்பிகள்
ஏராளம் !
வாழ்த்துக்கள்,பரிசுகள்
தங்க ஆபரணங்கள்
தங்கி விட்டன தந்தப் பேழையில்
வெள்ளிப் பாத்திரங்கள்
படுத்திருக்கின்றன பரண்மேல்
எதுவும் என்
இதயத்தில் தங்கவில்லை !
தங்கியது
பாவையவள் பரிசளித்தாள்
வாசமுள்ள ரோஜா மலர்
மலரின் மணம் நாசிகளில்
மங்கை முகம் மனக்கண்ணில்
இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது
விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும்
இன்று --- அவள்
சங்கு கழுத்தில் முகம் புதைக்க
மூச்சின் சுவாசம் சீராகியது
செவ்விதழில் முத்தமிட
செவ்வாயில் அமிலம் சுரந்தது
பிடியிடை தழுவிட
மூலாதாரம் முழுதும் துடிக்குதடி
கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய்
கண்களுக்குள் நிறைந்து நின்றாய்
கண்களுக்குள் உன்னைப் பார்த்து
யானை பார்த்த குருடனானேன்......!
யாழ் அகவை 23 க்காக
ஆக்கம் சுவி.......!