Search the Community
Showing results for tags 'Ramanathan Archchuna'.
-
Ramanathan Archchuna வைப் பற்றிய Sepal Amarasinghe வின் you tube பதிவினது தமிழாக்கம். பகுதி 1. சில இடங்களில் எனது கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன். Ramanathan Archchuna வால் கேட்கப்படும் பிரச்சனை என்ன என்பது தான் you tube பதிவின் தலையங்கம்… இதை சுருக்கமாக சொல்வதானால்…. 1)இப்போது (தமிழர்களுக்கு பழையது) பெரும்பான்மையினருக்கு சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக அடிபடும் செய்தி இது தான் என பதிவர் ஆரம்பிக்கிறார்… யாருக்காவது, என்னாவது , யாராவது ஏதாவது சமூக வலைத்தளத்தில் இருக்கணும்… அப்பதான் அது ஓடிக்கொண்டிருக்கும்.. இல்லாட்டி பொறுக்கேலாது… 2)தற்போது டொக்டர் அர்ச்சுனா பற்றிய கதை போய்க்கொண்டிருக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் அது பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 3)ஆனால் அர்ச்சுனா ஆராயப்பட, படிக்கப்பட வேண்டிய மனிதர் தான் என்கிறார் பதிவர். அங்கே ஓர் Case Study இருப்பதாக கூறுகிறார். 4)எல்லோரும் என்னிடம் கேட்டார்கள், யார் இவர்? என்ன இது என கேட்டார்கள். Dr. Archchuna Ramanathan. 5)கேட்டவர்களை நான் கேட்டேன் இவருடன் கதைக்க வேண்டுமா? இது பற்றி கதைக்க வேண்டுமா? இல்லையா எனக் கேட்டேன். அதற்கு கேட்டவர்கள் அவனுக்கு பைத்தியம் அவனோட என்ன கதை தேவையில்லை விடுங்கள் என்றார்கள். 6)ஆனால் அது பற்றி கதைக்காமல் விட்டால், அவருடன் கதைக்காமல் இருந்தால் அங்கே தான் பெரிய பிரச்சனை இருக்கிறது என கூறிச்செல்கிறார். 7) கதைப்பதில் பிரச்சனை இல்லை தானே என கூறிச்செல்கிறார். ஆனால் கதைக்காமல் விட்டால் தான் பிரச்சனை பெரிதாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறார். 8)அர்ச்சுனா இங்கே என்ன செய்கிறார்? அவர் பாரம்பரிய சம்பிரதாயத்தில், வேதத்தில் கைவைக்கிறார். அதை கேள்வி கேட்கிறார். அதை தாக்குகிறார். 9)உடனே நாங்கள் என்ன செய்கிறோம்? ஏய், ஏய் என்ன கேள்வி கேக்கிறாய்? பேசாம மூடிப்போட்டு போ பாப்பம் என்கிறோம். 10) ஆனால் அர்ச்சுனா கேட்பதாயில்லை. ஏன் மூடுவான்? உள்ள ஏதோ இருக்கெண்டுறீங்கள்? ஒண்டையும் காணலையே? ஒண்டும் இல்லாட்டி மூடிட்டு போ எண்டுறீங்கள்?என்கிறார் .. என்ன தான் இருக்கிறது என பாப்போமே என்கிறார்… 11) விடயத்தை மூடாட்டி,அதை பார்த்துக் கொண்டிருப்பவர்களாகிய சமுதாயத்தின் பெரிய கூட்டம் என்ன செய்கிறார்கள். இவன் விசரன், பைத்தியம், சிறையில் அடையுங்கள், விசாரியுங்கள், அடியுங்கள், இல்லாமல் செய்யுங்கள், புறக்கணியுங்கள், ஒரு பக்கத்தில தூக்கிப் போடுங்கள், கொல்லுங்கள் அல்லது அங்கொடைக்கு கொண்டு போங்கள் என குளற ஆர்ப்பரிக்க ஆரம்பிக்கிறார்கள். (இதைத்தான் தமிழர்களாகிய நாம் சாவகச்சேரியில் இருந்து இவருக்கு செய்து வருகிறோம். இதற்கு எதிராகத்தான் தொடர்ந்து நானும் எழுதிக் கொண்டு இருந்தேன், இப்போதும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்) 12) இதை அப்படியே இழுத்து மூடுவது கூடாது. இதனால் தான் எமது சமுதாயம் முன்னேறுவதற்கு மிகவும் தாமதமாகிறது என அடித்து கூறுகிறார். இப்படி யாராவது பிரச்சனைப்படுத்தினால் உடன நாங்கள் அவரை அப்படியே அப்புறப்படுத்த ஆரம்பிக்கிறோம். சமுதாயத்தில் உள்ள பலங்கள் அனைத்தையும் கொண்டு கேட்பவரை மூடி மறைப்பதால் பிழைகளை மூடிவிடுகிறோம். (அதைத்தானே சாவகச்சேரியில் இருந்து நாம் தொடர்ந்து செய்து வந்தோம்.) 13)இந்தப் பிரச்சனையை இப்படியே கைவிடுவது கூடாது என கூறிச்செல்கிறார். சமாளிப்பது கடினம் தான், (ஏன் என்றால் அந்த பழைய சிஸ்டம் தானே எமக்கு பழகியிருக்கிறது, சுலபமாகவும் இருக்கிறது) ஆனாலும் கைவிடக்கூடாது எனகிறார். இதனால் இது மற்றவர்களுக்கு தலையிடியாக மாற ஆரம்பிக்கும்,ஆனாலும் கைவிடக்கூடாது என்கிறார். (இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்து எழுதிவருகிறேன். இதற்காக மட்டுமே நான் தொடர்ந்து அர்ச்சுனாவின் பக்கம் எழுதி வந்தேன்) (பிரச்சனை ஒன்று வந்தால் பிரச்சனையை மூடுவதல்ல தீர்வு, பிரச்சனையை தீர்ப்பது. புண் வந்தால் புண்ணை மூடி மறைப்பது போல் இருக்கிறது. புண்ணை மாற்ற வேண்டாமா?) 14)சமுதாயத்தில் ஒருவரும் கூறாத, கேட்காத விடயத்தை சமூகத்தில் வேறு ஒருவர் கேட்க ஆரம்பித்ததும் மற்றவர்களுக்கு தலையிடி தொடங்கிவிடுகிறது. பேசாம அங்கால போவியா என கோசம் எழுப்புகிறார்கள். கலைக்க ஆரம்பிக்கிறார்கள். 15) இதனால் அவர் கூறுவது எல்லாம் சரியானது என நான் கூறவரவில்லை. அவரும் சதாரண மனிதர் தானே என்கிறார். 16) மற்ற பக்கம் இருந்து கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். சமுதாயத்துக்காக, பொதுவிடயத்துக்காக கேள்வி கேட்க ஆரம்பிக்கும் போது அவரது தனிப்பட்ட பலவீனங்களும் வெளியே வர ஆரம்பிக்கின்றன. கேட்பவரின் எல்லாப்பக்கமும் வெளித்தள்ளுகின்றன. 17) இது யாருக்கும் நடைபெறலாம், பொது விடயங்களை கதைத்துக் கொண்டிருக்கும் போது எமது தனிப்பட்ட பலவீனங்கள் கூட வெளிவரப்பார்க்கும். அப்போது அவர் கதைத்த பொது விடயங்கள் அங்கே அடிபட்டுப்போகின்றன. அதற்காக காத்திருந்தவர்கள், தங்களுக்கான இரையை தூக்கிக்கொண்டு சன்னதம் கொள்கிறார்கள். 18) அப்போது தனிப்பட்ட பலவீனங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. அவர் கூறும் நல்ல விடயங்கள் அடிப்பட்டுப் போகின்றன. (யாழ் தேர்தலில் அர்ச்சுனா அதற்கான விலையையும் கொடுத்திருந்தார்.) (இது தான் அர்ச்சுனாவுக்கு தேர்தல் காலங்களில் நடைபெற்றது. Sepal அர்ச்சுனா பற்றி நல்லதொரு case study தான் செய்திருக்கிறார்.) 19)ஒருவர் கட்டுப்பாடு,ஒழுக்கம், அடக்கம் (discipline)என்பவற்றை பாடசாலையிலேயோ, சமுதாயத்திலேயோ, குடும்பத்திலேயோ அல்லது வேறெங்காயினும் கற்றிருந்தால் ஒருவரும் கேளாத கேள்விகளை கேட்க மாட்டார்கள். அவர்கள் ஏதோ ஓர் அமைப்புக்குள் அடக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது அடிமையாகி இருக்கிறார்கள். அதனால் கேள்வி கேட்க மாட்டார்கள். 20)Discipline க்க வளர்ந்தவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்கள் கூட்டத்துடன் நின்று கொண்டிருப்பார்கள். கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருப்பார்கள். Discipline க்க இருப்பவர்கள் கேள்வி கேட்கும் மற்றவர்களாக இருக்க மாட்டார்கள். அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளிவந்து கேள்வி கேட்கிறார். ஆனாலும், அவருக்கு எதிரான கூட்டம் அவரை புறக்கணிக்க, அடிக்க, துரத்த, ஒதுக்க, கொல்ல, சிறையில் தள்ள சமூகத்தின் அத்தனை பலங்களையும் பாவிக்க ஆரம்பிக்கிறது… ஆனால் Aruchchuna எல்லாவற்றையும் எதிர்த்து போராடுகிறார்.. புதுவடிவம் கொள்கிறார்… பல எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ந்து போராடுகிறார்… பகுதி இரண்டு… தொடரும்…. DR. அர்ச்சுனா ராமநாதன் FB இல் இருந்து