Jump to content

Search the Community

Showing results for tags 'dr.t.கோபிசங்கர்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's தொகுத்த ஆவணம்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 7 results

  1. “ ஆயிரம் பொய் சொல்லி ” “சித்தப்பா சொல்லப் போப் போறாராம் நீயும் போப்போறியே “ எண்டு சின்ன மாமி கேக்க , நானும் ஏதோ அம்மா சொன்னாத்தான் போவன் எண்ட மாதிரி அம்மாவைப் பாக்க , “ வா வந்து இந்த சட்டையை மாத்தீட்டுப் போ” எண்டா அம்மா. ஒற்றை விளப் போகோணுமாம் எண்டு ஆள் கணக்குக்கு என்னை ஏத்தி விட்டது எண்டது பிறகு விளங்கிச்சு. “ உவனை உண்ட மடியில வைச்சிரு அண்ணை “ எண்டு பெரிய மாமி சொல்ல சித்தப்பாவும் காரின்டை முன் சீட்டில இருந்த படி என்னை மடீல தூக்கி வைச்சிருந்தார். “தம்பி காரை கொக்குவிலுக்கு விடும் முதலாவதா பெரியப்பருக்கு சொல்லிப்போட்டுத்தான் மற்றாக்களுக்கு சொல்ல வேணும்” எண்டு சித்தப்பா சொல்ல காரும் பெரிய அப்பப்பா வின்டை வீட்டை போச்சுது. Morris Oxford காருக்கால என்னை விட ஆறு பேர் இறங்கிச்சினம் . அந்தக்காருக்க எப்பிடி எல்லாரும் வந்தது எண்டு தெரியாது. “வா வா வா “ எண்டு அப்பப்பா கேட்டடீல வந்து கூப்பிட்டார் . நாலு கதிரையிலும் பெரியாக்கள் இருக்க மற்றவை குந்தில இருந்திச்சினம் . சித்தப்பா தொடங்கினார் “இது பொம்பளையின்டை தமக்கையும் புருசனும் , இது இன்னார் எண்டு” ஆக்களை அறிமுகப்படுத்த. கலியாண வீடெண்டால் காட் அடிச்சாலும் அப்ப போய்ச் சொல்லுறது தான் முறை. அதுகும் மாப்பிள்ளை பொம்பிளை ரெண்டு பகுதியும் போக வேணும் . சொந்தத்தில மூத்த ஆளுக்கு முதல் சொல்லித்தான் பிறகு மற்ற ஆக்களுக்கு சொல்லுறது. அதே முறை சபை தொடங்க செம்பு குடுக்கிறது , முதல்ல ஆசீர்வாத்த்திற்கு ஏத்திறது கட்டினாப் பிறகு பொம்பிளை மாப்பிளை முதல் விருந்துக்கு போறது வரை தொடரும். அப்பாச்சியை பாத்து அப்பப்பா கோப்பி போடுமன் எண்டு சொல்ல, “இல்லை பரவாயில்லை நாங்கள் இன்னும் கன இடம் போகோணும் “ எண்டு ஆரோ சொல்ல முதல், “ கலியாணத்துக்கு சொல்ல வந்தா ஏதும் குடிச்சிட்டுப் போகோணும் இல்லாட்டி சொல்லிறாக்கள் சபையில வந்து சாப்பிடமாட்டினம்” எண்டபடி அப்பாச்சி கோப்பியோட வந்தா. எல்லா அலுவலும் சரியே எண்டு அப்பாச்சியும் முக்கியமான எல்லாத்தையும் ஞாபகப் படுத்தினா . “சரி நாங்கள் வாறம் “ இருவத்தி மூண்டு பொன்னுருக்கு காலமை ஒம்பதுக்கு, இருவைத்தஞ்சு காலமை பாலறுகு வைச்சு தோய வாக்கிறது, முகூர்த்தம் பத்தரையில இருந்து பன்னிரெண்டரை வரை , நல்லூரான் மணி பன்னிரெண்டடிக்க தாலி கட்ட வேணும், ரெண்டு நாள் முதலே வாங்கோ நீங்க தான் தாலி கட்டேக்க தேங்காய் உடைக்க வேணும்“ எண்டு சொல்லீட்டு வெளிக்கிட்டம். கலியாணத்துக்கு சொல்ல வந்தா ஏதாவது குடிக்கோணும் எண்டு சொல்லிச்சொல்லி வெய்யில் நேரம் தேசிக்காய் தண்ணி தாறன் , இந்தாங்கோ பால் தேத்தண்ணி குடியுங்கோ எண்ட கேட்டவை வீட்டை எல்லாம் வாங்கிக்குடிச்சிட்டு வீட்டை திருப்பி வர பசியே இல்லை. முக்கியமா சண்டைக்காரர் வீட்டில வாய் நனைக்காட்டி அவை சபையில கை நனைக்க மாட்டினம். கலியாணத்துக்கு சொல்லேக்கேம் முறை இருக்கு. வீட்டுக்குள் போய் ரெண்டு பேரையும் கூப்பிட்டு சொல்லிறது , வயது போன ஆக்கள் இருந்தால் தனிய அவைக்கும் சொல்ல வேணும். தகப்பன் இல்லாத வீடுகளில மூத்த பெடியனை கூப்பிட்டு அப்பா இல்லாத்தால முறைக்கு உனக்கு சொல்லிறம் எண்டு சொல்லிறது. RSVP எல்லாம் போட்டு அவமானப்படுத்திறேல்லை உரிமையோட வா எண்டு தான் சொல்லிறது. பெரிய அப்பாச்சி வீட்டை போய் சொல்லீட்டு வெளிக்கிட ,அவ சித்தப்பாவை கூட்டிக்கொண்டு போய் சொன்னா “ வந்தனீ ஒரு எட்டுப் போய் சிவா அத்தானுக்கும் சொல்லன் , என்ன தான் இருந்தாலும் உனக்கு அக்கா அத்தான் முறை தானே” எண்டு தொடங்கினா. காணிப்பிரச்சினை ஒண்டில தொடங்கின சண்டை , இன்னும் முகம் பாத்துக் கதைக்கிறதில்லை. சித்தப்பாவும் “ ஒருக்கா அக்காவை கேக்க வேணும் எண்டு இழுக்க” , அவளவைக்கு நான் சொல்லிறன் எண்ட படி எல்லாரையும் வரச்சொல்லீட்டு முன்னால நடக்கத் தொடங்கினா. ஏதோ எதிர் பாத்துக்கொண்டிருந்த மாதிரி எங்களக்கண்டிட்டு அக்காவும் அத்தானும் சந்தோசமாக உள்ள கூட்டிக்கொண்டு போய் கதைச்சிட்டு வெளிக்கிட, “ வாசல்ல கட்டிற வாழைக்குலை , பந்திக்கு வாழையிலை ,வாழைப்பழம் எல்லாம் என்ட கணக்கு ,அவளுக்கு நான் செய்யாம யார் செய்யிற எண்டு “ உரிமையா அத்தான் சொல்ல தன்டை கடமையை முடிச்ச அப்பாச்சி அடுப்பில வைச்ச உலை ஞாபகம் வர திருப்பி வீட்டை வெளிக்கிட்டா. ஓவ்வொரு கலியாணத்தோடேம் பல சண்டைகள் தீந்து சமாதானம் திரும்ப வரும் அதோட ஒரு புதுச்சண்டையும் தொடங்கும். நாங்கள் திரும்பி வர இன்னொரு Cambridge கார் வெளிக்கிட்டிச்சு சாமாங்கள் எடுத்துக் கொண்டர, Cambridge காருக்கு உள்ளையும் மேல பூட்டின கரியரிலேம் எவ்வளவும் சாமாங்களும் அடுக்கலாம். கலியாணம் , சடங்கு எண்டு ஏதாவது வந்தால் நிறைய சாமாங்கள் தேவைப்படும். கரணடீல இருந்து கம்பளம் வரை , கிடாரத்தில இருந்து படங்கு வரை ஒண்டும் வாடைக்கு எடுக்கிறேல்லை. சமையல் கிடாரங்கள் ,பெரிய தாச்சிகள் கரண்டிகள் எல்லாம் ஊருக்க ஆற்றேம் இருக்கும் இல்லாட்டி கோயில்களில இருக்கும் . மற்றச்சாமாங்கள் எல்லாம் ஆக்களைக் கேட்டு தேடி வீடு வீடாய்ப் போய் எடுக்கிறது. கொண்டு வாற சாமாங்களை பெரிசு , சின்னன் , வட்டம் , சதுரம் எண்டு tray ஐ களையும் , எவசில்வர் பேணி சின்னன், பெரிசு எண்டும் எந்தெந்த அன்ரி வீட்டு சாமாங்கள் எண்டும் எழுதி அது மாறுப்படாம இருக்க ஒரு அடையாளம் பெயின்ற்றில போட்டு வைக்கிறது. பந்திப்பாய் , ஓலைப்பாய், கரண்டி கம்பளம் , பாட்டு கசற், ரேடியோ, மேளக்கச்சேரி கசற் எண்டு எந்தெந்த வீட்டை என்ன எடுத்த எண்ட விபரம் எல்லாம் கொப்பீல பதிஞ்சு வைக்கிறது. கலியாண வீடு வந்தோண்ணை ஒரு கொப்பி எடுத்து உ, சிவமயம் எல்லாம் எழுதி வைக்கிறது. நாள்கூறை எடுக்கிற , நாள் பலகாரம் சுடுறது, முகூர்த்தம், கால் மாறிற நேரங்கள் , தோயவாக்கிறது ,பொன்னுருக்கு ,எழுத்து நேரங்கள் ராகு காலம் எல்லாம் எழுதி வைக்கிறது. கலாயாணத்துக்கு ஆரார் எவ்வளவு காசு என்னென்ன தந்தது, வாழைக்குலையில இருந்து பலகாரம் எண்டு எல்லாம் கணக்கில வரும். ஆராருக்கு சொல்லிறது , எந்தெந்தக் குடும்பத்தில எத்தினை பேர் எண்ட கணக்கு எல்லாம் எழுதி வைக்கிறதும் இந்தக் கொப்பீல தான் . அது மட்டுமில்லை கலியாணம் முடிஞ்சாப்பிறகு நடக்கிற சண்டைக்கும் அது தான் சாட்சி, ”அவர் இது செய்தார், உன்டை கொண்ணர் என்னத்தைக் கொண்டந்தார் “ எண்டு மாறி மாறி சண்டைக்குள்ளேம் கிழியாதது இந்தக் கொப்பி தான். எல்லாம் முடிய டிறங்குப் பெட்டிக்குள்ள திருப்பி கவனாமா எடுத்து வைக்கிறது அடுத்த முறையும் தேவை எண்டு. ஒரு கொப்பியால இவ்வளவு சண்டை எண்டால் மிச்சச் சண்டைகள்……… ஆயிரம் தரம் போய்ச் சொல்லிச் செய்யிறது கலியாணம். Dr.T.கோபிசங்கர் - யாழ்ப்பாணம்
  2. “ பூதம் கிளம்பிச்சு “ “ சின்னவா அண்ணா இண்டைக்கு முட்டாள் வேலைக்கு போட்டான் நீ வாறியா” , எண்டு நான் கேக்க முதல் அவன் ஓடிப்போய் வெறும் காச்சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு வந்தான் . “ இவன் சின்னவன் என்னத்துக்கு பக்கத்து வீட்டு ராசையா அண்ணையை கேளுங்கோவன் “ எண்டு மனிசி சொல்ல, அவன் மூஞ்சை சுருங்கிச்சுது. அவரையும் கேக்கிறன் இவனும் வந்து பழகட்டும் எண்டு கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டன் . பிளாஸ்டிக் bagக்குக்குள்ள சாவிகள் மூண்டு , குறுக்கால வாற கொப்புக்களையும் சிவரில முளைக்கிற ஆலமரத்தையும் வெட்டக் கத்தி, சிங்கர் ஒயில் சூப்பிக்குள்ள பெற்றோல் , பழைய plugகுகள் , மிசினுக்க விட மண்ணெண்ணை போத்தில் , இரண்டு பக்கமும் முடிச்சுப் போட்ட நைலோன் கயிறு ,பழைய துணி எல்லாம் எடுத்து வைச்சிட்டு , கறுத்த நீட்டுக்குழாயை சுத்தி வட்டமாக்கி குறுக்கால கைத்தைக் கட்டி தூக்கி தோளில பலன்ஸா வைச்சிட்டு சைக்கிளை உருட்டத் தொடங்க கட கட சத்தத்தோட கரியில கொளுவின மிசினும் உருளத் தொடங்கினது. பள்ளிக்கூட நீலக்காச்சட்டைக்கு மனிசி நெஞ்சு சட்டை பின்னை இறுக்கிக்குத்தி , கவனம் எண்டு சொல்லி அனுப்பி விட்ட சின்னவனோ பின்னாலை மிசினை தள்ளிக் கொண்டு வந்தான் . போன கிழமையே “ தம்பி திங்கக்கிழமை முப்பத்தொண்டு , ஞாயிற்றுக்கிழமை காலமை கீரிமலைக்கு போட்டு பதினொரு மணிக்கு வந்திடுவினம் ,நேரத்துக்கு வந்து இறைச்சு விட்டாத்தான் மிச்ச வேலை செய்யலாம்“ ,எண்டு சொன்னதை ஞாபகமாக்கி , தார் சூடும் சேர்ந்து துரத்த கொஞ்சம் எட்டி நடக்கத் தொடங்கினன். ஊரில செத்தவீடு நடந்தா சந்தோசப்படுற ஆக்களில நாங்களும் இருந்தம் . வீட்டுக்குப் பின் பக்கமா போய் மூலைச் சுவரோட சைக்கிளை சாத்தீட்டு சட்டையை கழட்டி சுருட்டி கவனமா வைச்சிட்டு எட்டிப் பாக்க வீட்டு அம்மா வந்தா. “ரெண்டு போத்தில் எண்ணை வேணும்” எண்டு பேரம் தொடங்க அவ என்ன இப்ப தானே பொங்கலுக்கு இறைச்சனான் எண்டு குறைக்க வெளிக்கிட , இல்லை அம்மா போன மாசம் பெஞ்ச மழையால நீர் முட்ட நிக்குது எண்டு சொல்லி ஒரு மாதிரி காசுக்கு மேல அரைப்போத்தில் மண்ணெண்ணையும் கிடைக்கிற சந்தோசத்தில குழாயை அவிட்டு புட்வால்வ் ஐ மெல்ல கிணத்துக்க இறக்கினன். சின்னவன் அவிட்ட குறுக்கு கயிறு ஒண்டு குழாயில கட்டி இருக்க மற்றதை தென்னையை சுத்திக் கட்டினான் . இவன் கெட்டிக்காரன் மூத்தவன் மாதிரி இல்லாமல் டக்கெண்டு விசயத்தை பிடிக்கிறான் எண்டு ராசையாண்ணை சொல்ல கொஞ்சம் பெருமையா இருந்திச்சு. எப்பிடியும் பொங்கலுக்கு முதல் ஒருக்கா ( மாரி மழை முடிய நிறைய தண்ணி இருக்கும்) , வருசப்பிறப்புக்கு முதல் , ( இப்ப சேறு வாரி எடுக்காட்டி வெய்யில் கூடக் கூட தண்ணி வத்திறதோட ஒரு மணமும் வரும்.) மற்றது நல்லூர் திருவிழாவுக்கு எண்டு வருசத்திக்கு மூண்டு தரம் அக்கம் பகத்தில கிணறு இறைப்பினம் . அதோட அந்திரட்டி , துடக்கு கழிவு , வீடு குடிபுகுதல் எண்டு அப்பப்ப ஏதாவது வரும். சில வேளை பூனை விழுந்தது , கோழி விழுந்தது, சாமாங்கள் விழுந்திச்செண்டு வருவினம் . போன வரியம் ஒருக்கா ,ஒருபக்கம் இழுத்திருந்த மனிசன் ஒண்டு விழுந்திட்டெண்டு கூப்பிட்டவை . நல்ல வேளை ஊர்பெடியள் எல்லாம் நிண்ட படியா கதிரையை இறக்கி ஆளை வச்சுக்கட்டி தூக்கி எடுத்தது. முந்தி கிணத்துக்க விழுந்த சாமாங்கள் எடுக்க கைமருந்து மாதிரி வீட்டையே சாமாங்கள் இருந்தது. மிதக்கிறதுகளை வாளியாலயே எடுக்கலாம் . வாளி விழுந்தா தான் மான் கொம்பு , இல்லாட்டி பாதாளக்கறண்டி தேவை. ஊர்ப்பக்கம் மம்பட்டியயை கட்டியும் வாளி எடுக்கிறவை. மத்தியான நேரங்களில விழுந்த வாளி தெரியாது , குடையை பிடிச்சுக்கொண்டு தான் விழுந்த இடம் தேடுறது. எல்லாம் பிழைச்சா ஆள் தான் இறங்கிறது. பெற்றோல் குப்பியை அமத்தி ஓட்டைக்குள்ள அடிச்சிட்டு , சோக்கை இழுத்துப் பிடிச்சுக்கொண்டு , இரண்டு பக்கமும் முடிச்சுப் போட்ட நைலோன் கயித்தை கட்டி இழுக்க அதிசியமா ரெண்டு அடியோட start ஆகிட்டு. திறந்து இருந்த சோக்கை கொஞ்சம் மூடி மிசினை இறுக்கி தண்ணி வாற குழாயை பொத்திப்பிடிக்க தண்ணி கையைத்தள்ளிக் கொண்டு பாயத் தொடங்கிச்சு. “ஓடிற மிசின் காத்திழுக்காமல் பாக்கோணும் இல்லாட்டி திருப்பயும் தண்ணி விட்டு நிரப்பி start பண்ண வேணும் “எண்டு சின்னவனுக்கு சொன்னபடி ராசையா அண்ணையிட்டை மண்ணெண்ணையை போத்திலை குடுத்தன் பாத்து விடச்சொல்லி . “தம்பி இந்த தண்ணியை கொஞ்சம் வாழைக்கு வெட்டிவிடும் “ எண்டு வந்தா வீட்டம்மா. குடுத்த extra மண்ணெண்ணை காசை பிடிக்க மனிசியும் வேலை வாங்குது எண்டு தெரிஞ்சபடிநானும் சின்னவனை நிமிந்து பாக்க அவனும் பாத்தியை வாழைக்கு திருப்பி விட்டான் . சிலவேளை இறைக்கிற தண்ணீல தான் கழுவாத வீட்டைக்கழுவி குளிக்காத ஆக்கள் குளிப்பினம். கிணத்தையே மீன் தொட்டியாக்கி மீன் விட்டு வளக்கிற சின்னனுகள் சட்டியோட நிக்கும் மீன்குஞ்சு பிடிக்க. கொஞ்சம் மிசினைக் கூட்டி விட்டிட்டு தண்ணி வத்த கிணத்துக்க இறங்க ஆயித்தப்படுத்தினன். தென்னையில கட்டின கயித்தை இழுத்துப் பாத்திட்டு கிணத்தை எட்டிப் பாத்தன் . என்ன தான் பழகின கிணறு எண்டாலும் இறங்க முதல் ஒருக்கா ஆழம் பாக்க வேணும் . கிணறுகள் கட்டேக்க கல்லுவைச்சு கட்டிறது ஏற இறங்க வசதியாய். எண்டாலும் பழைய கிணறு எண்டால் கல்லுக்கு பதில் பள்ளம் தான் இருக்கும். பள்ளத்துக்கு கால் வைச்சு பூரான் கடிச்சு பட்ட பாடுகள் நிறைய இருக்கு. உள்ளுக்க இறங்கி் பள்ளம் பாத்து foot valve ஐ மாத்தி வைச்சிட்டு நிமிந்து பாக்க விளக்கு மாறும் சட்டி ஒண்டும் வந்து விழுந்திச்சு. விளக்குமாத்தால சிவரைத் தேச்சு தண்ணியை எத்திப் பாசியை கழுவி விட தண்ணி கலங்கலாய் வரும். கடைசீல மக்கி சின்னக்கல்லு எல்லாம் சேந்து வர குழாய்க்குள்ள காத்திழுக்கத் தொடங்க இஞ்சினை நிப்பாட்டி விட்டுட்டு கஞ்சல், விழிந்திருந்த மாபிள்கள் எல்லாம் அள்ளிப்போட்டு வாளியோட மேல அனுப்ப ,சாம்பிராணியும் தணலும் கீழ வந்திச்சுது . தம்பி வடிவாக்காட்டும் எண்டு சொல்லிக்கொண்டு செய்த வேலை திருப்தியா எண்டு அம்மா எட்டிப் பாத்து சந்தோசப்பட திருப்பி மேல ஏறினன். கிணறு இறைக்கிறது இந்தப்பாடெண்டால் அதை வெட்டிக் கட்டிறது எந்தப்பாடு எண்ட யோச்சபடி மேல ஏறினன். கிணறு வெட்டிக்கட்டிறதும் ஒரு பெரிய வேலை . கிணத்தை வெட்டேக்க அதுக்கு மட்டும் எண்டு நிலையம்பாக்கிற சாத்திரி மார் சிலர் இருந்தவை , வளவுக்க இருக்கிற தென்னை மரத்தில தென்னோலை ஒண்டை புடுங்கி ஒலையை கிழிச்சு ஈக்கிலை எடுத்து இரண்டு முழங்கையையும் இடுப்போட அணைச்சுக் கொண்டு ரெண்டு கையாலேம் பிடிச்ச, ஈக்கிலை வண்டி வைச்ச மாதிரி வளைச்சு வளவின்டை வட கிழக்கு , (ஈசான ) மூலைப்பக்கம் நடப்பினம் . ஊத்து வர , ஓலை தன்டபாட்டில சுத்த தொடங்கும் . ஊத்துக்கு கிட்ட வரேக்க ஓலை கட கட வெண்டு சுத்தும் , உள்ளுக்க இருந்து வெளிப்பக்கம் சுத்தினா நல்ல தண்ணி இல்லாட்டி சில நேரம் உவர் தான். முதல்ல கிணத்தை ஆழமா வெட்டி ஊத்தைக்கண்டோன்ன ஒரு பொங்கல் போட்டு தான் மிச்ச கட்டிற வேலை செய்யிறது . கிண்டத் தொடங்க முதல்ல கல்லும் மண்ணும் கலந்து வரும் . நிலத்துக்கு ஏத்த மாதிரி பதினைஞ்சு அடி ஆழம் கிட்ட முட்ட வர கல்லுப்பாறை வரத்தொடங்கீடும். தனிப்பாறை கண்டு இன்றும் வெட்டிக்கொண்டு போக ஒரு மூண்டடிக்குள்ள தண்ணி வரும். கிணறு வெட்டிறாக்களின்டை வேலை தண்ணி கண்டோன்ன முடிஞ்சிடும். அச்செழு காரர் தான் அப்ப கூட கிணறு வெட்டிற வேலை செய்யிறவை. பிறகு கிணத்தைக் கட்டிறது மேசன் மார் . அடிக்கல்லுப் பாறை மூண்டடிக்கு இருக்கும் அதுக்கு மேல பாறை விளிம்பில இருந்து உள்ளுக்க மண்ணை வாரி கிணத்தை அகட்டிப் போட்டு பாறைக்கு மேல தான் கல்லு வைச்சு கட்டிறது. கிணத்துக்க கட்டிற பொளிகல்லு நுணாவில் வேம்பிராய் பக்கம் தான் இருக்கும் . பாறைக்கு மேல பாரமான பொளிகல்லை வைச்சுக்கட்டிறது கஸ்டம். வெளீல மரம் வைச்சு ஊஞ்சல் மாதிரிக்கட்டி கிணத்துக்க இறக்கி அதில இருந்து தான் கிணத்துக்கு சுத்திச்சுத்தி சிவர் கட்டிறது. வெள்ளம் வாற இடங்களில மட்டும் நிலத்துக்கு மேல கிணத்தடிக்கட்டை உயத்திக் கட்டுவினம் இல்லாட்டி ரெண்டடி தான் . அதோட கிணத்தடியில உடுப்பு தோய்க்கிற ஒரு கல்லும் ஒரு தொட்டியும் கட்டித்தான் கிணத்தடி வேலை முடிக்கிறது. கிணத்துக்கு தூண் போட்டு , குறுக்கால மரம் வைச்சு கட்டின கப்பீல வாளியைக் கட்டிறதிலும் முறை இருக்கு . வாளி கட்டேக்க வளையத்தின்டை நடுவில ரெண்டு முடிச்சுத்தான் போடுறது , இல்லாட்டி தண்ணி அள்ளேக்க வாளி பிரளாது. வாளி பிரண்டாத்தான் தண்ணி கோலும். கப்பீல ஓடிற கயித்தின்டை கைய அப்பிடியே விட தண்ணீல போய் மோதி கொஞ்சம் தண்ணி மட்டும் உள்ள போக, திருப்பி கொஞ்சம் இழுத்திட்டு ரெண்டு தரம் தண்ணீல குத்தீட்டு கையை விட ,வாளி தண்ணிக்கு மேல ஒயில் மாதிரி இருந்த படையையும் ( அப்பவும் சுன்னாகம் Company இருந்ததோ? ) மிதக்கிற பூவரசு இலையையும் தாண்டி உள்ள போகும் . உள்ள போன வாளியை ரெண்டு இழுவையில வெளீல இழுத்திட்டு, ஒரு கையால வாளியை கவிட்டுப்பிடிக்க புழுதி பிரண்ட மற்றகையால கோலிப்பிடிச்சபடி குடிக்கிற தண்ணி , நுவரேலியா lion pub beer இலும் பாக்க ஜில் எண்டு இருக்கும். ( புழுதிக்கையும் கிணத்துத்தண்ணியும் secret of my energy) . Dr.T.கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  3. “ போதி மரம்” காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா ,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை மினுக்கின படி “ கொஞ்சம் தண்ணி அள்ளித்தாவான்” எண்டு அம்மம்மா கேட்டா . மனிசிக்கு விடியல் கிணத்தடீல தான். அள்ளிக்குடுத்திட்டு் நானும் ,கடனை வைக்காமல் முடிக்க வேண்டும் இல்லாட்டி துன்பம் தான் எண்ட படியாத்தான் காலைக கடன் எண்டு சொல்லிறவங்களோ ? எண்டு யோச்சபடி வாளியோட நடந்தன் ,கடனை அடைக்க. ஒவ்வொருத்தனுக்கும் கிணத்தடியும் கக்கூசும் கூட போதி மரங்கள் தான் ஏனெண்டால் இங்க தான் கன பேருக்கு தத்துவம் பிறக்கிறது. ஓட்டைக்கிணத்து வாளீல தண்ணி அள்ளி ஒழுகிற கக்கூஸ் வாளீக்குள்ள விட்டிட்டு போய் குந்தி இருந்து போட்டு ,எட்டிப்பாக்க தண்ணி இல்லை எண்டேக்க தான் எனக்கு விளங்கிச்சு காதறுந்த ஊசியும் ஓட்டை கக்கூஸ் வாளியும் கடைசிவரை உதவாது எண்டு. வாளீன்டை ஓட்டையை அடைக்க பிலாக்காய்பால்ல இருந்து தார் வரை try பண்ணி கடைசீல புது வாளி வாங்கிக் கொண்டு வர கக்குசுக்கா? எண்ட கேள்வி வந்திச்சுது. ஓட்டைக் கிணத்து வாளி இடம் மாறி கழுவிறதுக்குப் போக புதிசு கப்பீல தொங்கிச்சுது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எண்ட கிணத்தடி ஞானம் அப்ப பிறந்திச்சு. “என்ன கிணத்துக்கட்டில பிள்ளைய வளத்தின மாதிரி பறக்கிறாய் “ எண்டு அம்மா நான் அந்தரப்பட்டா பேசவா . அப்ப ஒருக்கா படுத்தால் என்ன எண்டு யோசிச்சன். படுத்தும் பாத்தன் ஆனாலும் பயமாய் இருந்திச்சு. பரிணாம வளர்ச்சியில் கிணறும் விடுபடேல்லை . வட்டக்கிணறு அதன் விட்டத்தில இருவது வீதம் இழந்து முக்கால் வட்டம் ஆனது. கல்லு மட்டும் அடுக்கின கிணத்துச்சுவர் , சீமெந்து பூசிக்கல்லு வைச்சு ஒரடி அகலமான கிணத்துக்கட்டானது அதோட நிலமட்டத்திலிருந்து உயரவும் தொடங்கியது . கைவாளி மறைஞ்சு துலா, கப்பி ஆனது. சீவின பூவரசந்தடீல கட்டின வாளி கையை நோகப்பண்ண கயிறு, chain எண்டு வந்தது. கிணத்தடி எண்டது வெறும் தண்ணி இருக்கிற இடம் மட்டுமில்லை அதையும் தாண்டி விசேசமானது . தண்ணி இருக்கிற கிணத்துக்கு, தண்ணி அள்ள கப்பி இல்லாட்டி துலா கட்டி, கைப்பற்றப்பட்ட இருவது வீதத்தில அள்ளிற பக்கம் குளிக்கிறதுக்கு தோய்க்கிறதுக்கு சீமெந்து நிலம் வைச்சு, மழைகாலம் நிலம் வழுக்காம இருக்க சிப்பியை கவிட்டு ஒட்டி வைச்சு, அதோட சேந்த உடுப்புத்தோய்க்கிற கல்லும் பக்கத்தில ஒரு தொட்டியும் கட்டி, குளிக்கிற தண்ணி ஒடிற வாய்க்காலோட வாழை வைச்சு, கிணத்துக்கு கிட்ட ஒரு இளநி மரம் நட்டு , கிணத்துக்க இலையக்கொட்டிறத்துக்கு வேலியோட ஒரு வாதநாராயணி இல்லாட்டி பூவரசு இருக்க, அதில உடுப்பு போடுற கொடி கட்டி, இருந்தாத் தான் கிணத்தடி இல்லாட்டி அது வெறும் கிணறு. தேவைக்கு வாழையிலை வெட்டப் போறதும் கிணத்தடி தான். இருட்டுப் பயத்தில மூத்தா போறதும் கிணத்தடி தான் . வீட்டை சண்டை பிடிச்சிட்டு அம்மாவை வெருட்ட இயக்கத்துக்குப் போயிடுவன் எண்டு சொல்லிற காலத்திக்கு முதல் கிணத்தடீல போய் தான் இருக்கிறது. கிணத்தடி பூதத்தை நம்பி இடம் பெயர்வுகளில பயத்தில நகை தாலி புதைச்சு வைச்சதும் கிணத்தடி தான். ஒவ்வொரு ஒழுங்கையிலும் எந்தக் கோடைக்கும் வத்தாத ஒரு வீட்டுக் கிணறு இருக்கும் .அதே போல் நல்ல தண்ணிக் கிணறும் ஒண்டும் இருக்கும். இந்தக்கிணறுகளும் ஒரு பொதுச் சொத்துதான் . பலர் குடிக்கவும் சிலர் குளிக்கவும் போறவை . இப்பிடி தண்ணி அள்ள ஆற்றேம் வீட்டை போகேக்க கிணத்தடீல சண்டையிருக்காது ஆனால் அரட்டை அரங்கம் இருக்கும் . வேலைக்குப் போட்டு வந்த அப்பாட்டை இல்லாட்டி செத்த வீட்டுக்கு போய் வந்த அம்மாட்டை கிணத்தடீல இருந்து அவை தோஞ்சு கொண்டிருக்கேக்க விடுப்புக் கேக்கிறதும் நடக்கிறது . கிணத்தையும் ஒரு சாமி அறை மாதிரித்தான் சுத்தம் பத்தமா பாவிக்கிறது. செத்தவீட்டுக்கு போய் வந்தா , தலைமயிர் வெட்டீட்டு வந்தா இல்லாட்டி பொம்பிளைகளை அந்த மூண்டு நாளும் அள்ள விட மாட்டினம். விளக்கீட்டில ஒரு பந்தம் வைக்கிறதில இருந்து ஐயர் தாற தீத்தம் கொண்டே ஊத்திற வரை அதுக்கு ஒரு மரியாதை இருந்தது. தண்ணி அள்ள கிராமப் பக்கம் தான் கைப்பட்டை இல்லாட்டி துலா இருந்தது . நாலு மரம் நட்டு குறுக்கு மரம் போட்டு சரி பண்ணி துலா கட்டிறது . நட்ட பூவரசங்குத்தி முளைச்சு சிலவேளை மரமாயும் வளந்திடும். வைரமான பனை மரத்தை சீவி ரெண்டாப்பிளந்து நடுவில இருக்கிற சோத்தியை கோதி எடுத்து , ரெண்டையும் சேத்து கட்டை இறுக்கி ,அடிபருத்தும் நுனி சிறுத்தும் இருக்க செய்யிற துலாவில சரியான இடம் பாத்து , வீட்டில வைக்கிற ஓட்டைக்கல்லு மாதிரி செவ்வக ஓட்டை வைச்சு குறுக்கு மரம் போட்டு துலாவை ஏத்தி விட அது காலத்துக்கும் இருக்கும். தென்னை எண்டால் அப்பிடியே சீவி வைக்ககலாம் , பத்து வருசத்திக்கு அசையாம இருக்கும். துலாவின்டை அடியில கட்டிற கல்லு டங்கு டங்கு எண்ட அடிக்க சத்தம் வரும் எண்டதால ரயரையும் சேத்துக்கட்டிறதும் வழக்கம் . ஆனால் town பக்கம் கப்பி தான் கூட. கப்பிக்கு electricity board ல ஆரும் தெரிஞ்சவை இருந்தா high voltage வயர் இழுக்கிற மாபிள் கப்பி கள்ளமா எடுத்துப் பூட்டிறது இல்லாட்டி இரும்புக் கப்பிதான். கப்பிக்கயித்துக்கு மொத்தமான இளைக்கயிறு தான் நல்லம். நைலோன் கட்டினால் வாளி முடிச்சு நிக்காது அடிக்கடி வாளி கழண்டு கிணத்துக்க விழுந்திடும் ,ஆனாலும் அள்ளேக்க வாளிய உள்ள விட ஈசியா வழுக்கிக்ககொண்டு போகும் . தண்ணி அள்ளிறதுக்கு வாளியை தூக்கி கிணத்துக்க போடேக்க கப்பியின்டை தவாளிப்பிக்கால சிலவேளை கயிறு வெளீல பாஞ்சிடும் . கயித்தை எத்தி எத்தி அதை திருப்பி உள்ள போடுறதுகஸ்டம் . அதுகும் அள்ளிற சுகத்துக்கு முடிச்சுப் போட்ட நைலோன் கயிறெண்டால் சரி அவ்வளவு தான் . உயரம் காணாத வயசில அதை திருப்பிப்போட கிணத்துக் கட்டில ஏறித் துள்ள அப்பிடியே கயித்தோட கிணத்துக்க விழுந்து அம்மாவுக்கு தெரியாம ஏறி வந்ததும் நடந்தது. பள்ளிக்குடத்தில வயல் கிணதுக்க குதிச்சு தான் நீந்தப் பழகினது எண்டு ஆரும் சொன்னதை கேட்டு உசுப்பாகி நானும் நீந்தப் போறன் எண்டு நல்லவேளை ஒரு நாளும் குதிக்கேல்லை. ஆனாலும் கள்ளமா கிணத்துக்க இறங்கினது நடந்தது. மழை காலத்தில நிரம்பிறதை எட்டிப் பாக்கிறது சந்தோசம் , தண்ணியும் நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். கையால அள்ளிக் குளிக்கலாம் எண்டு பாத்துக்கொண்டிருக்க தண்ணி வத்தத்தொடங்கீடும். வீட்டுக்ககிணறு தான் இப்பிடி இறைக்கிறது ஆனால் தோட்டத்திக்கு் தண்ணி ஊர்வழிய சூத்திரத்தில மாடுகள் கட்டி , பட்டையில தான் இறைக்கிறது. வைரமாளிகை நாகலிங்கம் போடிற பனைமட்டை தொப்பியக் கவிட்டு விட்ட மாதிரித்தான் பட்டை இருக்கும். பனையோலையில கட்டிற பட்டை ஒழுகாம காலத்துக்கும் இருக்கும். பட்டையின்டை மூலைக்கு சாக்கு இல்லாட்டி பழைய ரயர் கட்டினால் அடி பட்டாலும் பிய்யாது. தோட்டத்திக்கு தண்ணி இறைக்க துலா மிதிக்கிறதும் இருந்தது , என்ன ரெண்டு பேர் தேவை . ஆனால் சூத்திர மாடு பழக்கி விட்டா ஆள் இல்லாமலே சுத்தும் தண்ணியும் இறைபடும் . தகரம் வைச்சு செய்யிற இரும்புப்பட்டையும் இருந்தது. அடீல ரெண்டு தட்டு வாளி போய் மடார் எண்டு தண்ணீல முட்ட திறக்கும். உள்ள தண்ணீர் நிரம்பினாப்பிறகு மேல வர தண்ணிப்பாரத்திக்கு தட்டு மூடும். சரியா ஒண்டு தண்ணியை கவிட்டுக் கொட்ட மற்றது கோலும். ஏன் இதுக்கு சூத்திரம் எண்டு பேர் வந்தது எண்டு அறிய வெளிக்கிட்டு; மாட்டை கட்டிற கயித்தின்டைநீளம் , அது சுத்திற வட்டத்தின்டை ஆரை , மாடு சுத்திற speed துலாவின்டை நீளம் , அதில் தொங்கிற கயித்திண்டை நீளம் , பட்டையின்டை அகலம் , தட்டின்டை ஓட்டை அளவு மாட்டு வாலின்டை நீளம், எண்டு எல்லா Data வும் computer ல feed பண்ண அது Google application form ஒண்டைத்தருது NASA க்கு வரச்சொல்லி அந்த சூத்திரம் (equation )என்ன எண்டு என்னைக்கேட்டு . இறைக்க இறைக்க வத்தாத அறிவு மாதிரி NASA காரனுக்கே விளங்காத அறிவைத் தந்த அந்த கிணத்தடி போதிமரம் இப்ப புத்தர் எல்லாம் Bathroom வழிய குளிக்கிற படியால் வெறுமையானது . ஆனாலும் அழிந்த அந்த அவதாரம் மீண்டும் திருப்பி வரும் எண்ட நம்பிக்கையில் காத்திருக்கத் தொடங்கியது . Dr.T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  4. மா(ன்)மியம் யாழ்ப்பாணத்திற்கும் மாம்பபழத்திற்கும் அப்படி ஒரு உறவு. மாம்பழத்துக்கு ரெண்டு season. ஒண்டு சித்திரையில் பூத்து கச்சான்காத்தில் கருத்தரித்து ஆடியில் பழம் வரும். இது நல்ல இனிப்பான பழங்கள். மற்றது மாரிப் பழம் புரட்டாதீல பூத்து மார்கழீல பழம் வரும் . இது பாக்க பாசி பிடிச்ச சுவர் மாரி இருக்கும், பச்சைத் தோலில கறுப்பு நிறப் படைஒண்டு ,அப்ப பாவிச்ச பிசின் போத்தலில வெளீல வழிஞ்சு காஞ்சு போன பிசின் ஒட்டின மாதிரி இருக்கும் . பெரிய இனிப்பாயும் இருக்காது. வைகாசியில மரமெல்லாம் பூவா இருக்கும் .கொட்டிண்ட பூ போக, காய் வந்ததும் ஆடிக்காத்தில் தப்பின காய் மட்டும் பழுக்கும். இந்த season பழம் தான் யாழ்பாண ஸ்பெஷல். ஆடிக்காத்தைப்பற்றி எல்லாருக்கும் தெரியும், நம்மடை பெட்டைகள் ஒரு கையால சட்டையைப்பொத்தி மற்றதால சைக்கிளையும் பனையோலை தொப்பியையும் பிடிச்சுக்கொண்டு முக்கித்தக்கி உழக்கிக்கொண்டு போகேக்க ,எப்ப காத்தடிக்கும் எண்டு வாய் பாத்த காலம் அது. “கச்சான் அடித்த பின்பு காட்டில் மரம் நின்றது போல் உச்சியில நாலு மயிர் ஓரமெல்லாம் தான் வழுக்கை.” இப்படி ஒரு நாட்டார் பாடல் படிச்சதா ஞாபகம். மாங்காயில கனக்க வகை இருந்தது. பாண்டி, புளி மாங்காய், பச்சைத்தண்ணி மாங்காய்,சேலம், கிளிச்சொண்டு, அலரி மாங்காய், ஒட்டுமாங்காய், செம்பாட்டு, விளாட்டு, அம்பலவி, காட்டு மாங்காய், வெள்ளைக்கொழும்பான் எண்டு இருந்தாலும் Signature variety கறுத்தக்கொழும்பான் தான். ஒவ்வொரு மாங்காய்க்கும் ஒரு speciality இருக்கு.கறிக்கும் சொதிக்கும் எண்டா பாண்டி மாங்காயும் , புளி மாங்காயும் தான். தனிய மாங்காயை போட்டு மட்டும் சொதி வைக்கலாம் . திரளி மீன் தலைக்கு மாங்காய் துண்டு போட்டு வைக்கிறது , நல்லூர் வெளி வீதிமுருகன் உலாவும் பத்மநாதன்டை நாதஸ்வரமும் மாதிரி . தனித்தனியவும் இரசிக்கலாம் சேர்த்து ருசிக்கலாம். கிளிப்பச்சை நிறத்தில நல்ல குண்டா இருக்கும் பாண்டி மாங்காய் , காய்க்குத்தான் சரி. புளிப்பு கூடினது , உப்பு தூளோட சேத்து சாப்பிடேக்க அந்த மாதிரி இருக்கும். காய் மாங்காய்க்கு பாண்டி, சேலம், கிளிச்சொண்டு ,பச்சைத்தண்ணி மாங்காய் எல்லாம் நல்ல brands. மாங்காயை புடுங்கேக்க, காம்பு கொஞ்சம் காய்ஞ்சு கறுத்து இருக்க வேணும் அப்ப தான் காய்க்கு பதம் சரி. பாண்டி எண்டால் தோல் பச்சை குறைஞ்சு வெள்ளை பிடிக்க வேணும், சேலம் மாங்காய் காம்படியில் மஞ்சள் குறைஞ்சு சிவப்பாக வேணும். விளாட்டு ஒரு maroon shade ஐ தரேக்க பதம் காய்க்கு சரியா இருக்கும். மாங்காய் புடுங்கேக்க பால் முகத்தில படாமல் புடுங்க வேணும் , பால் பட்டால் அவியும். மரம் ஏறி மாங்காய் புடுங்கிறது ஒரு thrill எண்டால் , கல்லால இல்லை தடியால எறிஞ்சு மாங்காயோட சில பல ஓடுகளையும் கண்ணாடிகளையும் உடைச்சிட்டு புடுங்கின மாங்காயை மடிச்சுக் கட்டின சாரத்துக்குள்ள தூக்கிக் போட்டுக் கொண்டு தப்பி ஓடுறது இன்னொரு thrill ஆன கலை .கள்ளம் காதலில் மட்டும் அல்ல கள்ள மாங்காயிலும் தான், அது ஒரு தனி சுகம். புடுங்கின மாங்காயின் காம்பு பக்கத்தை பூசாத சீமெந்துச்சுவரில இல்லாட்டி தீட்டின மரத்தில கூர் பாக்கிற மாதிரி புடுங்கின மரத்திலேயே , பால் போக தேச்சிட்டு ,பொத்திப்பிடிச்சபடி குத்த வேணும் , அப்பதான் மாங்காய் சிதறி வெடிக்கும் ஆனால் நிலத்தில விழாது. வெடிச்ச கீலத்தில ஒண்டை அப்பிடியே இழுத்துப்பிச்சு உப்புத்தூளோட சேர்ததுச் சாப்பிட ஒரு சுவையரங்கமே நாக்கில் அரங்கேறும். கட்டி உப்பில தனி மிளகாய்ததூள் கலக்கவேணும் எங்கடை கறித்தூள் சரிவராது. மாங்காயால உப்பை குத்தினால் அதோட மிளகாய் தூளும் சேர்நது வரும் . வாய்க்குள்ள வைச்சா கடைவாயில புளிப்பும், நடுநாக்கில உப்பும், நாசிக்ககுள்ளால மூளைக்கு உறைப்பும் ஏறும் அது தான் அந்த சுவையரங்கம். மாங்காயை கழுவி கத்தியால வெட்டி உப்பையும் தூளையும் அரைச்சப் போட்டாலும் இந்த taste வராது. love பண்ணிற மாதிரித்தான் மாங்காய் புடுங்கி சாப்பிடிறதும். பூத்தது காய்க்க தொடங்க கண்வைச்சு , கனியத்தொடங்க தான் , மாங்காய்க்கும் அது நல்ல பதம். பச்சைத்தண்ணி மாங்காய் ,பேர் மாதிரித்தான் சாப்பிட்டா வெத்திலை மாதிரி சாறு மட்டும் வரும். இப்ப அது பெரிசா ஒரு இடமும் இல்லை. கிளிச்சொண்டன் , பேருக்கு ஏத்த மாதிரி, நுனி வளைஞ்சு பச்சையா இருக்கும். இதுவும் காய்க்கு தான் taste. அப்ப Cricket match பாக்கேக்க கச்சான் , மாங்காய் , கரம்சுண்டல் , ஐஸ் பழம், ஜூஸ் பக்கற் எல்லாம் side dishes மாதிரி. ஊரில கிரிக்கட் Match நடக்கேக்க co sponsors ஆன ஐஸ் பழ சைக்கிள், மாங்காய் வண்டில் , கச்சான் ஆச்சி எல்லலாரும் கட்டாயம் வருவினம் . அந்த மாங்காய் வண்டில் காரர் , நீங்கள் காட்டிற மாங்காயை அப்படியே கழுவாம சத்தகக்கத்தியால நுனியை வெட்டி பிறகு நீட்டு நீட்டா வெட்டி , அதுக்குள்ள கொஞ்சம் உப்பு தூள் போட்டு தருவார் . அதை ஒவ்வொரு துண்டா பிச்சு சாப்பிட தொடங்க , அது வரை serious ஆக match பார்த்த எல்லாரும் கை வைக்க , கடைசியில் மிஞ்சிற கொட்டை சூப்பிறதும் சந்தோசம். மாங்காயிலும் ஒரு அடி நுனி தத்துவம் இருக்கு. அது தான் ஒரு நாளும் நாங்கள் குறுக்கால வெட்டிறதில்லை. கரும்பு மாதிரி நுனியில இருந்து கடிச்சுக்கொண்டு போக கொஞ்சம் கொஞ்சமா புளிப்பு குறைஞ்சு இனிமை கூடும். காய் பழமாக கொஞ்சம் காலம் பொறுக்க வேணும் . மாம்பழம், அணில் கொந்தி ஒண்டு இரண்டு பழம் விழும் . உடனே முத்தீட்டு எண்டு எல்லாத்தையும் புடுங்கக் கூடாது. ஆனால் கொந்தின பழம் சாப்பிட்டு பாக்க இந்த முறை பழம் எப்பிடி இருக்கும் எண்டதுக்கு sample ஆ இருக்கும். அநேமா அணில் கொந்த தொடங்க இரண்டு மூண்டு கிழமையால கொஞ்சம் கொஞ்சமா புடுங்கத் தொடங்கலாம் . நல்லா சாம்பல் பத்தி நுனி கரும் பச்சை குறையேக்க பருவம் சரி . முத்தலை சரியா பார்த்து , பட்டை கட்டி சாக்குப் பிடிச்சு புடுங்கிறதில இருந்து , வைக்கல் போட்டு பழுக்க வைச்சு சாப்பிடுறது வரை ஒரு பக்குவம் வேணும். மொட்டைக்கறுப்பன் அரிசிமா புட்டுக்கு , நல்ல செத்தல் தேங்காய்பூ கலந்து , பொரிச்ச சம்பலோட வெட்டின மாம்பழத்தையும் சேர்த்து சாப்பிடுறது ஒரு தனி சுகம் . யாழ்ப்பாணம் என்றால் கறுத்தக்கொழும்பான் எண்டு சொன்னாலும் , அது கொஞ்சம் தும்புத்தன்மை கூட . ஆனால் புழு இருக்காது, பழுத்தால் எல்லாம் ஒரே சீரா இனிக்கும். சாப்பிடேக்க இருக்கிற taste ம் மணமும் சாப்பிட்டாப் பிறகு கையை கழுவினா இருக்காது. சாப்பிட்டிட்டு தண்ணி குடிக்கேக்க ஒரு கயர்ப்பு தன்மை தொண்டைக்குள் தெரியும். விளாட்டு எண்டால் காய், முத்தல் ,பழம் எண்டு எல்லாப்பதத்திலும் சாப்பிடலாம் .பழம் பிழைக்காது ,காசுக்கு நம்பி வாங்கலாம் . அம்பலவி செம்மஞ்சள் நிறம் அது ஒரு தனித்துவமான கலர், கன பேர் சீலை வாங்கேக்க தேடித் திரியிற கலர். பழம் முழுக்க ஓரே நிறமா இருக்கும் . நல்ல இனிப்பு ஆனால் நெத்தலி மாரி ஒல்லியா நீட்டா இருக்கும் சதை குறைவு ஆனாலும் நார் இல்லை கையில் சாறு வடிஞ்சாலும் ஒழுகி ஓடாது . சூப்பி முடிச்ச மாங்கொட்டையில் ஒரு தும்பு கூட இருக்காது . ஒரு மாம்பழம் வெட்டி பங்கு பிரிச்சு சாப்பிடேக்க கறுத்தக் கொழும்பான் எண்டா கரைத்துண்டும் அம்பலவி எண்டால் நடுக் கொட்டை பகுதியும் எடுக்க வேண்டும். இந்த பங்கு பிரிக்கும் பிரச்சினையால தான் நாரதர் மாம்பழத்தை முழுசா சாப்பிட சொன்னவர் . செம்பாட்டு மாம்பழம். தனி ரகம், பழம் எண்டா பின்னேரச் சூரியன் பட்ட நல்லூர் தங்க ரதம் மாதிரி , மஞ்சளில Orange கொஞ்சம் கலந்த மாதிரி இருக்கும் . நிறம் , மணம், சுவை எல்லாம் அளவா சேர்நதது, நல்ல சதைப்பிடிப்பு. குட்டி குஸ்பு மாதிரி கட்டையா குண்டா இருக்கும் . நம்பி வெட்ட ஏலாது ஏனெண்டால் உள்ளுக்க புழுப்பிடிச்சிருக்கும். சாப்பிட்டிட்டு கை கழுவினாலும் மணம் அப்படியே இருக்கும். வெள்ளைக்கொழும்பான் பழுத்தாலும் வெளிறின மஞ்சளாத்தான் இருக்கும் உள்ள கொஞ்சம் தண்ணித்தனமை இருக்கும் சாப்பிடேக்க கை எல்லாம் ஒழுகும். புடுங்கின மாங்காயை வைக்கலைப் போட்டு அடுக்கி வைச்சு ,அடைக்கு வைச்ச முட்டை குஞ்சாகீட்டுதோ எண்டு கூடையை துறந்து பாக்கிற மாதிரி மூடின சாக்கை அடிக்கடி தூக்கி பாத்து , பழுத்ததை தேடி எடுத்துக் கொண்டு போய் வெட்டி அப்ப தான் இறக்கின புட்டோட சாப்பிட்டவன் மட்டும் தான் பிறவிப் பெருங்கடல் நீந்துவான் . மாம்பழத்துக்கு ஏன் அந்தப் பேர் வந்தது எண்டு தெரியாது ஆனால் “மா” எண்டால் பெரியது எண்டு சொன்னாலும் ,அது எங்களுக்கு எப்பவுமே வரலாறு ,ஏன் எண்டால் குடும்பச்சண்டைக்கு சிவனுக்கு ஒரு மாம்பழம் எங்களுக்கு ஒரு “மா”விலாறு. மாங்காயோ ,மாம்பழமோ சாப்பிடிறது ஒரு கலை ஆனால் கட்டாயம் தெரிய வேண்டிய கலை. Dr.T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  5. “மணியண்ணை ரைட்“ திரும்பி பளிச் எண்டு சாயத்தோட சப்பின வெத்திலையை பூவரசு மரத்தடீல துப்பிப்போட்டு ,காலாலை மண்ணை தள்ளி மூடீட்டு , மூடி வெட்டின ரின் பால் பேணியால தண்ணியை அள்ளி வாயை கொப்பிளிச்சிட்டு, அந்த பழைய யானை மார்க் சோடாப் போத்தலில இருக்கிற பிளேன் ரீயை சூடோட விழுங்கிப்போட்டு, மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல, பாதி உடைஞ்ச அரி கல்லுக்கு மேல ஆச்சி திருப்பி வந்து இருந்தா. முன்னால கவிட்டு வைச்ச பக்கீஸ் பெட்டிக்கு மேல விரிச்சு வைச்ச வீரகேசரி , சில வேளை அதுக்கும் மேல பழைய பொலித்தீன் இருக்கும். வரேக்க மறக்காம புடுங்கிக் கொண்டு வந்த பூவரசம் கொப்பால இலையானை கலைச்சு கொண்டு தண்ணியை தெளிச்சிட்டு கும்பலா இருந்த ஒட்டியை பக்க வாட்டில அடுக்கி , வாங்கின கணக்கு , அள்ளுற கையில குத்து மதிப்பான நிறை , அன்றைய சந்தை விலை எல்லாம் மனதில வைச்சு கும்பல் கும்பலா மீனை பிரிச்சு வைச்சு கொண்டு அடுத்த வாடிக்கையாளருக்காக ஆச்சி பாத்துக்கொண்டிருந்தா. “எணை ,பொயிலை காம்பு துண்டொண்டு தாவன்” எண்டு மீன் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த பெடி கேக்க , வலது பக்கத்து இடுப்பில இருந்த வெள்ளி லக்ஸ்பிறே bag ஐ தூக்கி குடுத்திட்டு இடது பக்கத்து சீலைத்தலப்பை கொஞ்சம் இறுக்கி செருகினா ஆச்சி . அவனும் “பொயிலைக் காம்போட இரண்டு சீவலும் கொஞ்ச சுண்ணாம்பும் எடுத்தனான்”எண்டு திருப்பிக் குடுத்தான். எல்லா வீட்டையும் மீன் வாங்க எண்டு தனி ஒரு bag இருக்கும் . ஒரு பழைய வயர் bag , கிழிஞ்ச ஓட்டைகளில பழைய துணியால ஒட்டுகள் போட்டு இருக்கும் . அதோட அதுக்குள்ள கசங்கிப் போன இரண்டு சொப்பிங் bag (ஏதோ கழிச்சுவிட்ட சாமானை வாங்கப் போற மாதிரி). மீன் வாங்கினாப்பிறகு “தம்பி bag வேணுமோ” எண்டு ஆச்சி கேக்க, சும்மா தாறாங்களாக்கும் எண்டு ஓம் எண்டால் bagல போட்டு தந்திட்டு , போகேக்க முன்னால bag காசு இரண்டு ரூபா குடுத்திட்டு போங்கோ எண்டுவா ஆச்சி. சந்தை வாசலில பழைய காலத்திலசீமெந்து bag பிறகு சொப்பிங் bagம் கறுத்த பெரிய கொஞ்சம் பாரம் தாங்க கூடிய Tulip எண்டு எழுதின bagம் விக்க இருக்கும். மீன் வாங்க சந்தைக்குள்ள போகேக்க பளுவேட்டையார்களை ஞாபகப்படுத்தும் உருவங்களை தாண்டி ஆச்சி மாரிட்ட போறது கொஞ்சம் பேசி கீசி வாங்கலாம் எண்டு. ஆனால் என்ன ஆச்சி கூடச்சொல்லிறியள் , மீனை பாத்தா நாறலா இருக்கு எண்டு ஏதாவது தேவேல்லாமல் சொல்லீட்டமோ அவ்வளவு தான் . நல்ல தமிழ் மணம் , மீன் சந்தையையும் தாண்டி மணக்கும். அந்த அவமானத்துக்கு பயந்து சொல்லிற காசுக்கு மீனை வாங்கீடுவம் . எண்டாலும் போகேக்க இந்தா பிடி எண்டு இரண்டு extra மீனை bagகுள்ள போட்டு விட்டிட்டு நெஞ்சுக்குள்ள இருந்து கொட்டைப் பெட்டிய எடுத்து தாற மிச்சக்காசை வாங்கி பொக்கற்றுக்க வைக்காம அப்படியே கையில பொத்திக்கொண்டு திரும்பி வீட்டை வாறனாங்கள். பத்து மணி தாண்ட பக்கத்தில திரும்பி இதையும் கொஞ்சம் பார் எண்டிட்டு போய் , வீட்டை இருந்து இரவு இரண்டு மணிக்கு கடலுக்குப் போன அந்தாளுக்கு செஞ்சு குடுத்ததில மிச்சம் இருந்த உழுத்தங்களியை கட்டிக் கொண்டந்து தண்ணியோட விக்க விக்க உருட்டி விழுங்கீட்டு வந்து மீண்டும் அரட்டையும் வியாபாரமும் ஒண்டா தொடர்ந்தா ஆச்சி. அப்ப ஆச்சிமார் மட்டுமே செய்யிற வியாபாரங்கள் சிலதுகள் இருந்தது. நல்லூரில இருந்து நாலு சந்தி வரை கடலைக் கடை எல்லாம் ஆச்சிமார் தான் . கடலைக்கடை ஆச்சிமார் எல்லாரும் காதிலும் பார்க்க பெரிசாக் கிழிஞ்ச ஓட்டை , அதில கிழிஞ்சு விழுறமாதிரி பித்தளை பாம்படத்தோடு , பவுண் மூக்குத்தி ,சுருங்கின நெத்தீல மூண்டு குறி , நல்ல வட்டமா பெரிய குங்குமம் எண்டு அம்சமாவகவே இருப்பினம் . சந்தியில கடை வைச்சிருக்கிறவை வீட்டை இருந்தே கச்சான் வறுத்துக் கொண்டு வருவினம். நெஞ்சளவு உயர வாங்கில பனையோலை தட்டிப்பெட்டீல குவிச்சு வைச்ச கச்சானும் சோளனும் வைச்சிருப்பினம் . பள்ளிக்கூடம் முடிஞ்சு வாற மத்தியானம் வெய்யிலுக்க நிண்ட படியே கச்சான் விப்பினம். ஆனால் நல்லூர் திருவிழா மூட்டம் set up மாறும் ,கொஞ்சம் அகலமான வாங்கில இரண்டு பெட்டீல கச்சான் , ஒண்டில சோளம் , ஒரு போத்ததில்ல பட்டாணி இருக்கும் . ஒரு பக்கம் மண்ணைப் போட்டு கச்சானை வறுத்துக் கொண்டே வியாபாரமும் செய்வினம் . ஆக்கள் வந்தால் விறகை வெளீல இழுத்திட்டு , சுடு கச்சான் இரண்டை சாப்பிடக் குடுத்திட்டு , வியாபாரம் முடிஞ்சோன்ன விறகைத் திருப்பி தள்ளீட்டு திருப்பியும் வறுக்கத் தொடங்கீடுவினம். வறுத்த கச்சானை சுளகில பிடைச்சட்டு சாக்கில போட்டு கட்டீட்டு , உள்ள போன சனத்தின்டை கணக்கை கொண்டு புது மூட்டையை அவிப்பினம். கச்சான் விக்கிறதோட இலவச செருப்பு பாதுகாப்பு சேவை செய்வினம் , எப்படியும் செருப்பு எடுக்க வரேக்க கச்சான் வாங்குவினம் ஒரு நம்பிக்கையில. ஆனால் செருப்பு திருப்பி எடுக்கேக்க கச்சான் வாங்காட்டியும் ஒண்டும் கேக்கவும் மாட்டினம். குடும்பமாப் போய் தனித்தனிய கும்பிட்டிட்டு திரும்பி வாறாக்களுக்கு , “அம்மா அப்பவே போட்டா, வரேக்க நாளைக்கு மரக்கறியும் வாங்கிக்கொண்டு கெதியா வரச்சொன்னவ “ எண்டு information நிலையமாகவும் இருந்தவை. சரி இவ்வளவு சொல்லுதே எண்டு இரண்டு ரூவாய்க்கு கச்சான் கேட்டா , லாபம் தானே எண்டு பாக்காம அம்மாவும் வாங்கிக்கொண்டு போனவ எண்ட பதில் வரும் . அந்தந்த ஊரில இருக்கிற , விளையிற சாமாங்களோட வீடு வீடா போய் ஆச்சி குறூப் ஒண்டும் இருந்தது. வெங்காயம் , புளி , நல்லெண்ணை, எள்ளு, எள்ளுப்பாகு, ராச வள்ளிக் கிழங்கு, கரணைக்கிழங்கு ஊர் முட்டை எண்டு கொண்டு திரிஞ்சு விக்கிறவை . காலமை பஸ் ஏறி முன்னுக்கு டிரைவர் சீட்டுக்கு எதிரா இருப்பினம் அங்க தான் கடகத்தை வைக்க இடம் இருக்கும், பின்னால சீட்டில் வைச்சால் கொண்டக்டர் புறுபுறுப்பார்.இப்படி திரியிற ஒரு ஆச்சீன்டை கடகத்துக்குள்ள தான் மணியண்ணை ரைட் கியரைப் போட்டவர். போற வீட்டில எங்கேயும் தேத்தண்ணி சில வேளை சாப்பாடும் கிடைக்கும் ஆன படியால் கண்டபடி காசை வீணாக்க மாட்டினம். இந்த வியாபாரம் பரம்பரை பரம்பரையாக தொடருறதும் இருக்கு. இந்த ஆச்சி மார் எல்லாம் எனக்கெண்டால் ஒரே மாதிரித்தான் இருந்ததாக ஞாபகம் . பச்சை, சிவப்பு, ஊதா எண்டு ஒரு மூண்டு கலரில தான் சீலை அதுவும், கைத்தறிச் சீலை தான் கட்டி இருப்பினம். நடக்க வசதியா சீலையை கொஞ்சம் குதிக்காலுக்கு மேல உயத்திக் கட்டியிருப்பினம் . கச்சை அணியாத கைநீட்டு வெள்ளை பிளவுஸ் ஆனாலும் கசக்கிக் கட்டின கந்தலோட தான் வருவினம். வெத்திலைப் பை , கொட்டைப் பெட்டி , சுருக்குப் பை எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில இருக்கும் . சீலை சுத்தின திருகணை , அகண்ட கடகம், கடகத்துக்குள்ள விக்கிற சாமாங்கள் , காறாத்ததல் , அரைறாத்தல் ஒரு றாத்தல் எண்டு மூண்டு படியோட ஒரு திராசு இது தான் கொண்டு திரியிற சாமாங்கள். தம்பி ஒரு கை பிடிச்சு விடு எண்ட கேக்கிற முகத்தில நிறைய அமைதி , கடைவாயில வெத்திலைச் சாறு , anaemia வில வெளிறின சொண்டு, வலது கை சுண்டு விரல் நுனீல சுண்ணாம்பு இது தான் அந்த உருவம் . திருகணை இல்லாட்டி சீலைத்தலைப்பை சுத்தி தலையில வைச்சிட்டு மேல கடகத்தை வைப்பினம. Head Balance எடுக்ககிறதுக்கு வைச்ச கடகத்தை மேல ஒரு எத்து எத்திப்போட்டு தோளை குலுக்கி இறங்கிற கடகத்தின்டை Centre of gravity ஐ சரியா பாத்து உச்சீல இறக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கிவினம். ஒரு கை கடகத்தை பிடிக்க மற்றது சும்மா வெத்திலை வாய்க்கு சுண்ணாம்பு தீத்திக் கொண்டு இருக்கும். சத்தியமாச் சொல்லுறன் இடை பெருத்த எந்த ஆச்சியையம் அப்ப காண ஏலாது. வித்துக் கொண்டு போய் தலையின்டை சுமை குறைய அகண்ட கடகத்தை அந்த ஒடுங்கின இடுப்புக்கு மாத்தி கொண்டு வீட்டை போவினம் . . அதோட seasonal ஆச்சி மாரும் இருக்கினம் , மாசீல பனங்கிழங்கு , வைகாசீல பாலைப்பழம் , ஆவணீல மாம்பழம் , புரட்டாதீல பனங்காய் பணியாரம் , ஐப்பசீல நாவல் பழம் , கார்த்திகையில விளாம்பழம் எண்டு part time வேலை செய்யிற ஆச்சிகள் இவை. வீட்டில ஏதாவது வேலைக்கும் முதலே சொல்லி வைச்சா இரண்டு ஆச்சி மார் வருவினம் . மாசம் மாசம் மாவிடிச்சு நெல்லுக்குத்த , விசேசங்களுக்கு பலகாரம் சுட , சமைக்க எண்டு பல குறூப்பா இருப்பினம் . வெத்திலை கூறு, இரண்டு நேரம் பிளேன்ரீ , மத்தியானம் மரக்கறி சாப்பாடு முடிஞ்சு போகேக்க காசோட சுட்ட பலகாரம் இல்லாட்டி மிஞ்சின சோறும் கறியும் கட்டிக்குடுக்க வேண்டாம் எண்டு சொல்லாமல் வாங்கிக் கொண்டு போவினம் . நாங்கள் ஆச்சி எண்டு கூப்பிட்டாலும் இவை அவ்வளவு oldies இல்லை . ஐம்பதை எட்டிற வயசு . பத்து பதினைஞ்சு வயசு வித்தியாசத்தில கட்டினவர் அநேமா குடிச்சே போய் சேந்திருப்பார் . கரைசேக்க இரண்டு குமர் , சொன்னா கேக்காத கழிசறை இரண்டு , கட்டினதைப் பெத்த உண்மையான கிழவி ஒண்டு , எண்டு எல்லாத்தையும் இவை தான் பா(மே)க்கிறவை.வீட்டு இறுக்கம் இவையில கொஞ்சம் வெளீலேயும் தெரியும். எல்லாப் பள்ளிக்கூட வாசலிலும் கடகம் ஒண்டோட ஒரு ஆச்சி மார் இருந்தவை. பரியோவானில பள்ளிக்கூட நேரம் எவருக்கும் போய் வர அனுமதி இல்லாத strict ஆன principal மார் காலத்திலும் , ஐஸ்கிறீம் சிவகுருக்கும் கச்சான் ஆச்சிக்கும் விசேட பாஸ் இருந்தது. தண்ணி டாங்குக்கு கீழை interval time ஆச்சி சேவிஸ் நடக்கும் . கச்சான் , சோளம் , மாங்காய் , பினாட்டு, பட்டுப்புளி எண்டு கட்டி கொண்டந்து வைச்சு விப்பா . ஆச்சிட்டை கூட்டமாப் போய் தள்ளி விழுத்தீட்டு களவெடுக்கிறதும் நடக்கிறது , அவவும் கோவம் வந்தா கடகத்தை மூடி வைச்சிட்டு சனம் குறைய திருப்பியும் விக்கத் தொடங்குவா , ஒரு நாளும் complain பண்ண மாட்டா. எல்லாரிட்டை favorite ஆகவும் அதேபோல் அப்பப்ப அம்மாட்டை பேச்சு வாங்கவும் பல வீட்டில ஒரு ஆச்சி இருந்தவ. இவைக்கு வேலையே வெளி ஆச்சிமார் வந்தா அவயை மேக்கிறது தான். வீட்டை இருந்த ஆச்சி மாருக்கும் வீட்டுக்கு வாற ஆச்சி மாருக்கும் நடக்கிற கதையை வைச்சு 4 வருச episodes சீரியலே எடுக்கலாம் . வேலை முடிச்ச ஆச்சி சில்லாலை பஸ்ஸில ஏற, மணியண்ணை ரைட் எண்ட பயணம் மீண்டும் தொடர்ந்தது. எல்லாருக்கும் வீட்டு ஆச்சியோ வெளி ஆச்சியோ , ஆச்சி ஒரு special தான் . ஆச்சி எண்டது உருவப் பெயர் அல்ல உருவகப் பெயர், உணர்வுகளின்.. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  6. “ தடை தாண்டிய பயணங்கள் “ ஆடி அமாவாசை விரதம் எண்டா அப்பா எப்படியும் வீட்ட வந்திடுவார் . எங்களுக்கு தெரிஞ்சு அப்போதிக்கரி அப்பா வெளி மாவட்டங்களில மட்டும் தான் வேலை செஞ்சவர் . கலியாணம் கட்டினாப்பிறகு தான் எனக்கும் ஏன் அப்பாக்கள் வெளி மாவட்டங்களில வேலை செய்ய விருப்பப்பட்டவை எண்டு விளங்கினது . ஆனால் அப்பா நான் நெச்ச மாதிரி இல்லை , கஸ்டபிரதேசத்தில வேலை செய்தா allowance வரும் எண்டதால தான் அப்பிடி வேலை செயதிருக்கிறார். லீவில வாற அப்பா யாழ்ப்பாணம் வந்து சேரேக்க அநேமா இருட்டத் தொடங்கீடும். கடிதத்தில முதலே date தெரியும் எண்ட படியா கிட்டத்ததட்ட நேரம் பார்த்து சிவலிங்கப்புளியடி bus stand ல நிண்டு ஒவ்வொரு பஸ்ஸா பாத்து பாத்து ( காத்திருக்கும் சுகம் காதலிகளுக்காக மட்டும் அல்ல) , அப்பா இறங்கின உடன ஓடிப்போய் ,அப்பாவின்டை bagகை வாங்கிறதுக்கும் கையை பிடிக்கிறதுக்கும் அடிபட்டு நாங்கள் அப்பாவோட வர ,அம்மா ஒழுங்கை முடக்கில சோட்டிக்கு மேல சீலையை கட்டிக்கொண்டு நிக்க எல்லாரும் அப்பாவோட மாப்பிளை ஊர்வலமே வைக்கிறனாங்கள். அப்ப நிறைய Government Servants எல்லாம் இப்பிடித்தான் வெளி மாவட்ங்களில தான் வேலை செய்தவை . ஊரில எப்பிடியாவது ஒரு அரசாங்க உத்தியோகத்தரை மகளுக்கு கட்டிக் குடுத்திடுவினம் . இவையில வெளி இடங்களில வேலை செய்யிறவையின்டை வாழ்க்ககையில் தாம்பத்தியம் என்பது கடிதத்தில் தான் நடக்கும். வெளி இடங்களில வேலை செய்யிறவை வருசத்தில மூண்டு நாலு தரம் தான் வந்து போவினம் . இந்த போக்கு வரத்தோட நாலு பிள்ளையும் பிறந்திடும் . பிள்ளைய படிப்பிக்க வளக்க எண்டு அவையின்டை priorityயும் மாறீடும் . பெத்தது எல்லாம் அக்கரை சேர , retire பண்ணினா பிறகு தான் இரண்டு பேரும் வாழ்க்கைச் சந்தோசத்தை வாழத்தொடங்குவினம் . அவங்கடை வாழ்க்கை மட்டும் அல்ல ஒவ்வொரு முறை வீட்டை போற பயணங்களும் பிரச்சினையானது தான். அப்பா புல்லுமலையில இருந்து வரேக்கேயும் இப்பிடித்தான். ஒரு நாளைக்கு ஒருக்கா மட்டும் மட்டக்களப்பில இருந்து வாற பஸ்ஸில மட்டக்களப்பு town க்கு வந்து . ஆற்றேம் வீட்டை இரவு தங்கி காலமை யாழப்பாணம் வெளிக்கிட்டிட்டு போய் பேப்பரை பார்த்தால் ஹபறணையில தமிழ் ஆக்களை இறக்கி வெட்டினது எண்டு தலையங்கம் இருக்கும். மூத்தவன்டை school concertக்கு வாறன் எண்டனான் போகாட்டி அவன் பாவம் பிள்ளை, போன முறையும் போகேல்லை எண்டு தனக்கு ஒண்டும் நடக்காது எண்டு நம்பிக்கையோட ஒவ்வொரு முறையும் அப்பாக்களின் பயணங்கள் இருக்கும். கிடைச்ச ஒரு கிழமை லீவில மட்டக்கிளப்புக்கு வந்து யாழ்ப்பாண பஸ் ஏற ஒரு நாள் போயிடும். பஸ் வேற ஓடுறதிலும் பார்க்க check point இல நிக்கிற நேரம் கூட. கடைசி நேரம் ticket book பண்ணினா seatம் கிடைக்காது , எண்டாலும் ஆராவது இடைக்கிடை மாறி விடுவினம் . நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் தான் வீட்ட வாறது . ஆனையிறவு தாண்ட ஊர் பேர் சொல்லி சந்திகளில பஸ்ஸை நிப்பாட்டுவினம் . Drivers ம் பாவம் எண்டு அவரவர் சொல்லிற இடத்தில இறக்குவாங்கள். இவ்வளவு தூரம் வந்த பஸ் ஆனையிறவு தாண்டினாப்பிறகு சரியான slow ஆ போற மாதிரி இருக்கும் . அம்மான்டை சாப்பாடு , பிள்ளைகளின்ட school prize giving , பிள்ளையார் கோவில் திருவிழா, கைதடி கலியாணம் எண்டு மனதில ஒவ்வொண்டையும் நெச்சுக் கொண்டு வர ஒருமாதிரி பஸ் town க்கு வந்திடும் . பெட்டி எல்லாம் இறக்கி , பஸ் மாறி பயணம் மீண்டும் வீட்டை நோக்கி தொடர்ந்து ஒரு மாதிரி வீட்டுக்க வர அம்மம்மா பொரிக்கிற நல்லெண்ணை முட்டைப்பொரியலும் புட்டும் மணக்க அப்பாவுக்கு இப்ப தான் பசிக்கத் தொடங்கும். வீட்டை வந்து சாமாங்களை பிரிச்சுக் குடுத்திட்டு அப்பா தோஞ்சு சாப்பிட்டுட்டு வர பாய் விரிச்சு அப்பாவின்டை இரண்டு பக்கமும் வயித்தலை காலை போட்டுக்கொண்டு நாங்கள் படுக்க அம்மா அங்காலை தள்ளிப் படுப்பா. வெளி ஊரில வேலை செய்த யாப்பணீஷ் எல்லாரும் அந்தந்த ஊரில ஒரு network வைச்சிருந்தவை ( சத்தியமா அந்த ஊருக்குள்ள இல்லை) . அந்தக்காலத்து சத்திரம் மாதிரி இவைக்கும் சில தங்குமடங்கள் இருந்தது . இரண்டு இல்லாட்டி மூண்டு பேர் Share பண்ணிற room ,common toilet , பின்னேரம் cards ,carrom விளையாடிட்டு அரட்டைஅடிக்க ஒரு hall, இது தான் அவர்களது அரண்மனை. அநேமா இருக்கிற இடத்தில கோயில்ல ஒரு திருவிழாவும் செய்வினம் . எப்படியும் கைக்காசை போட்டு ஊரில இருந்து நாலு கூட்டம் மேளத்தையும் கூப்பிடுவினம் . எல்லாருமே அப்ப தங்கடை தமிழின அடையாளங்களை காப்பத்தவும் நிலை நிறுத்தவும் நிறைய பாடுபட்டவை . Transfer ல மாறிப்போனாலும் வாழையடிவாழையாக அந்த அறைகளும் புதுசா வாற ஊரக்காரனுக்கு கை மாறிப்போகும் . ஆரும் ஊரில இருந்து வந்தால் தேடி வந்தவரின் rooms mate adjust பண்ணி இடம், பாய் தலணி எல்லாம் குடுத்து வந்தவருக்கு இடமும் சுத்திக்காட்டி அனுப்பிவினம். எல்லாரும் ஊரில மாமன் மச்சான் , ஊர் , சாதி எண்டு சண்டை இருந்தாலும் , ஊரை விட்டு வந்தால் அநேமா சண்டை கிண்டை வாறேல்லை. சிங்களவன்டை அடி வாங்கினதால வந்த ஒற்றுமையோ தெரியாது. அநுராதபுரம் , காலி, நீர்கொழும்பு பக்கம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களும் இருந்தவை. இவை எல்லாரும் இங்கிலீசும் , சிங்களமும் வெளுத்து வாங்குவினம் . அது மட்டுமில்லை வேலை எண்டு வந்தா எல்லாரும் வெள்ளைக்காரர் தான். கிழமைக்கு ஊருக்கு ஒரு கடிதம் கட்டாயம் வரும் . அதோட அநேமா Rotation ல அங்க இருக்கிறாக்கள் மாறி மாறி வருவினம் . அப்பிடி வரேக்க ஒட்டின envelope ல காசு, கடிதம் , அடுத்த மாசம் birthday வாற பிள்ளைக்கு ஒரு உடுப்பு அதோட அந்த ஊர் சாமானில ஏதாவதும் வரும். அப்பா அனுப்பிற காசுக்கு budget போட்டு செலவளிக்கிறது அம்மா தான் . காராளி கடைக்கு மாதம் மாதம் சாமான் வாங்கிற கொப்பிக்காசு் தான் முதல் குடுக்கிறது . கொப்பி , இந்த credit card க்கு நாங்கள் தான் முன்னோடி , ஊரில அநேமா எல்லாரும் local கடையில கொப்பிக்கு தான் சாமான் வாங்குவினம் , bank மாதிரி ஆனால் வட்டியும் இல்லை ,guarantor கைஎழுத்தும் இல்லை. திகதி குறிச்சு , Doctor’s prescription மாதிரி விளங்கியும் விளங்காமலும் விவரங்கள் எழுதி இருக்கும். ஆனாலும் சதம் கூட பிழைக்காது . கடைக்காரர் வாய்விட்டு கேக்க முதல் மாசக்கடைசீல காசு போயிடும் . Moratorium எண்டால் என்னெண்டு இப்ப கொரோனா வந்தாப்பிறகு தான் bank காரருக்கே தெரியும் ஆனா எங்கடை கடைக்காரர்களுக்கு அப்பவே தெரியும் அப்பாட்டை இருந்து காசு வரேல்லை கடைக்கு காசு குடுக்க நேரத்துக்கு குடுக்க ஏலாமல் போனால் , வீட்டை tiffin ல இருந்து சாப்படு வரை, soap ல இருந்து paste வரை limited supply தான். நாலைஞ்சு நாள் கடை பக்கம் போகாமல் விட , அந்தாள் கூப்பிட்டு, தம்பி அம்மாட்டை சொல்லுங்கோ சாமான் கொஞ்சம் தட்டுப்பாடு வரும் , தாண்டிக்குளம் பூட்டின படியால் வந்து மாசச் சாமானை வாங்கி வைக்கச்சொல்லி. அதொட தெரியும் ,அப்பான்டை காசும் வந்திருக்காது, காசை பற்றி யோசிக்க வேணாம் ,அதை அடுத்த மாசம் சேர்த்து எடுக்கலாம் எண்டும் சொல்லுங்கோ எண்டார் அந்தக்கடைக்காரர் . பால்காசு, சீட்டுக்ககாசு , tuition காசு எண்டு குடுக்க வேண்டியதை எல்லாம் குடுத்திட்டு வரப்போற கோயில் திருவிழாவிற்கும் இடம் பெயர்ந்தா தேவைக்கும் எண்டு எடுத்து வைக்கிற அம்மாவின் சமப்படுத்தல் ஒருநாளும் பிழைக்கிறதில்லை. எங்க தான் commerce படிச்சாவோ தெரியேல்லை. நான் வாற சனிக்கிழமை திரும்பிப் போவன் ஏதும் குடுத்து விடுற எண்டால் தாங்கோ எண்டு அப்பான்டை கடிதம் கொண்டு வந்த அங்கிள் (அநேமா இந்த uncle மாருக்கு எல்லாம் காரண பெயர்கள் தான் இருக்கும், வேலைக்கு ஏத்த மாரி bank மாமா, Dispenser மாமா , இடத்தின்டை பேரோட அக்கோபுர மாமா) சொல்ல milk toffee இல்லாட்டி ஏதாவது ஒரு பலகாரம் ரெடியாகும்( ஒரு பெரிய பைக்கற்றும் , சின்னது ஒண்டும்) . பெரிய பாரம் இல்லை எண்டு ஒரு இரண்டு மூண்டு கிலோவை வடிவா pack பண்ணி குடுக்க , இல்லை பரவாயில்லை எண்டு அவரும் கொண்டு போவார் . இப்படித்தான் அப்ப courier service நடந்தது . நிக்கிற இந்த ஐஞ்சு நாளில் கோயில் விசேசம் , சொந்தத்தில ஒரு நல்லது கெட்டது , யாரோ ஒரு வீட்டு பஞ்சாயத்து எல்லாம் முடிச்சு எங்களுக்கும் time ஒதுக்கி ஒரு படம் , super market shopping , கலியாணி special ice cream எண்டு ஒரு Day out ம் இருக்கும் . திரும்பிப்போற நாள் காலமை பஸ் ஸ்ராண்ட் கொண்டு போய் விடேக்க அப்பா இருபது ரூபா தந்து சொல்லுவார் அவசர தேவைக்கு பாவியுங்கோ எண்டு. அப்ப போக்குவரத்து கொஞ்சம் கஸ்டம். பஸ்களும் கனக்க இல்லை . அநேமா இ. போ.ச பஸ் மட்டும் தான் . அரசாங்க வேலைகாரர் warrant வைச்சிருந்ததால கூடுமானவரை இரயில் பயணங்கள் தான் . எங்கடை ஆக்கள் கனபேர் railway departmentல அப்ப வேலை செய்தவ , அவசரம் ஆபத்தெண்டால் ticket எடுக்க உதவியும் செய்வினம் . கொழும்பில இருந்து வாற எல்லாருக்கும் ஊருக்கு வாறதெண்டால் train தான் . யாழ் தேவி , mail train எல்லாம் famous ஆ வந்ததுக்கு காரணம் இந்த out station Government Servants தான் . ஊரில செத்த வீடு எல்லாம் அநேமா மத்தியானத்தில தான் எடுப்பினம் . அதுக்கு பேய் பிசாசு பஞ்சமி எண்டு கன காரணம் இருந்தாலும் யாழ் தேவி பார்த்து எடுக்கிறது தான் வழமை . தந்தி போனோன்ன வெளிமாவட்டங்களில வேலைசெய்தவை வெளிக்கிட்டு கட்டாயம் வருவினம். Train க்கு வைச்சுப் பாக்காத வேளைக்கு எடுத்தால் , செத்த வீட்ட ஒரு பிரளயமே வரும் . எம்டன் மகன் வடிவேலு மாதிரி பிரச்சனை பண்ணித்தான் விடுவினம். ஆடி அமாவாசைக்கு ஊருக்கு வாறவை நல்லூர் கொடியேத்தம் பாக்காம ஒரு நாளும் போக மாட்டினம் . அப்பா அங்கால பக்கம் போக நாங்களும் நல்லூரான் தரிசனத்துக்கு போக ரெடியாகீடுவம் … ( 1983 க்கும் 1990 க்கும இடைப்பட் காலத்தில் நடந்த அப்பாக்களின் தடை தாண்டிய பயணங்கள்) Dr.T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  7. பின்னேரம் புகைக்கூட்டடியில ஆணியில தொங்கிக்கொண்டிருந்த சுளகை எடுத்து அதில ஒட்டியிருந்த காய்ஞ்சு போன பழைய மாவை தட்டி சுரண்டிப்போட்டு , சாடையா நுனி கருகின நீத்துப் பெட்டியை கழுவி அம்மம்மா எடுத்து வைக்கேக்க அண்டைக்கு புட்டுத்தான் எண்டு தெரியும் . மூடி போட்ட பிளாஸ்டிக் பக்கட்டில இருந்து மூண்டு சுண்டு மா. பிளாஸ்டிக்கிற்கு முன்னைய காலம் சருவச்சட்டிலையும் அதுக்கு முந்தி மண் பானையிலும் தான் அரிசி மாவை போட்டு வைக்கிறது . ஒரு சுண்டு எண்டுறது பழைய ரின்பால் பேணி , சிலர் அளக்கிற பேணி எண்டும் சொல்லுறவை. சோறு எண்டால் அப்ப ஒரு சுண்டு மூண்டு பேருக்கு தான் காணும், புட்டுக்கு எண்டா இரண்டு பேருக்கு தான் சரி. ஆனால் இப்ப dieting எண்டு வந்தா பிறகு doctors advise பண்ணினம் carbohydrates cut பண்ணட்டாம். ஆனால் என்னத்தை சாப்பிட்டாலும் யாழ்ப்பணத்தானுக்கு இரவு புட்டும் குளம்பும் சாப்பிட்டாத்தான் நித்திரை வரும். அதிலயையும் மொட்டைக்கறுப்பன் அரிசிமாப்புட்டு புட்டுக்கே தனிச்சிறப்பு தரும். தட்டார் சந்தீல இருக்கிற வைத்திலிங்கம் மரக்காலை தான் ஏரியா எல்லாருக்கும் விறகு , மரம், பலகை supply . துலாபாரம் படத்தில வாற பெரிய தூக்குத்தராசு தான் விறகு நிறுக்கிறது . தூக்கு கணக்கு தான் விறகுக்கு . 4 படி ஒரு பக்கம் வைப்பினம் ஒண்டு 54 றாத்தல் , 216 றாத்தல் ஒரு தூக்கு . விறகிலும் பாக்க பிறவெட்டு மலிவு ஆனால் வாங்கேக்க வெறும் பட்டை மட்டும் வாங்காமல் கொஞ்சம் விறகுத்துண்டும் இருந்தாத் தான் நல்லா எரியும். கொத்தின விறகில்லாமல் முழு விறகை வாங்கி வீட்டை கூலிக்கு கொத்திறது தான் லாபம், அதோட கொத்தேக்க வாற சிராகையையும் பாவிக்கலாம். சின்ன சிராகையை தணல் மூட்டி புகைச்சட்டிக்குள்ள வைச்சு வேப்பமிலையை வைச்சுத்தான் நுளம்பு விரட்டிறது . குவிச்சு வைச்ச உமிக்குள்ள இரண்டு சிராகையை தணல் மூட்டி வைச்சிட்டா அடுத்த நாள் பல்லு மினுக்க கரி ready . விறகு கொத்தேக்க ஏலாமல் விட்ட வைரமான விறகான மொக்கை ( மொக்கு விறகை - கொமர்ஸ்காரன்கள் எல்லாம் வரிஞ்சு கட்டப்போறாங்கள்) வைச்சு பிறவெட்டையும் அடுக்கி அடீல வைச்சு தென்னம் மட்டை , சிரட்டை , பொச்சு மட்டை எல்லாம் அடுக்கி பெரிய கிடாரம் முட்டத் தண்ணி விடவேணும் . தண்ணி கொதிக்க முதல் பத்தாயத்தில இருக்கிற நெல்லை கடகத்தில கொண்டு வந்து கிடாரத்தின்டை கழுத்து வரைக்கும் நெல்லைக் கொட்டீட்டு கலக்க, பதர் மிதக்கும் அதை அள்ளி எறிஞ்சிட்டு விறகை உள்ள தள்ள அடுப்பு தகதகக்கும். நெல்லு புழுங்கலாக மாற நல்ல ஒரு மணம் வரும் , இரண்டு நெல்லை எடுத்து கையால நசிச்சா அவியாத சோறு மாதிரி நசிஞ்சால் பதம் சரி. கிடாரத்தின்டை வளையத்துக்கால உலக்கையை கொழுவி அடுப்பில இருந்து இறக்கி கொண்டு போய் பரவச்சரி. கொழும்பில intern செய்யேக்க Co House officer Jayamal க்கு you know அரிசி is புழுங்கிங் எண்டு அவனுக்கு புழுங்கல் அரிசி எண்டால் என்ன எண்டு நான் விளங்ஙகப்படுத்த அவனும் பாவம் “ஹரி ஹரி“ எண்டு ஏதோ விளங்கின மாதிரி தலையாட்டினது, நான் நொந்து போன தருணம் . அவிச்ச புழுங்கலை மழை நனையாம காய விட்டு முள்ளு விறாண்டியால இழுத்து இழுத்து சீராப் பரவி பிறகு ,எடுத்து சாக்கில கட்டி வைச்சு குத்தி அரிசியாக்கிறது ஒரு பெரிய procedure . என்ன தான் mill இல அரிசியை குத்தினாலும் மண்வாசனை படத்தில வாற மாதிரி உரல்ல குத்தி வாற கைக்குத்தரிசி taste mill அரிசில வராது . வீட்டை இரண்டு கல் உரலும் ஒரு மர உரலும் இருந்தது . மர உரல் எங்கடை வீட்டை சீயாக்காய் அரப்பு இடிக்கவும் ,அக்கம் பக்கம் எல்லாம் செத்த வீட்டுக்கு சுண்ணம் இடிக்க போய் வாறது . அகண்ட வாய் கல்லுரல் நெல்லுக்குத்தவும் மாவிடிக்கவும் பாவிக்கிறது, ஒடுங்கின வாய் அரிசியை பதத்திக்கு தீட்டவும் மாவிடிக்கேக்க அரிச்சு வாற கப்பியை மாவாக்கவும் பாவிக்கிறது. இந்தக்கப்பியை கஞ்சியா காய்ச்சி உழுந்தோட தோசை மாவுக்கு சேத்தால் நல்ல soft ஆக தோசை வரும் . செந்தாவும் நாங்கள் எள்ளுப்பாகு இடிக்கிறதும் ஒடுங்கின உரல் எண்டு சொல்லுறது கேக்குது. ( இப்படி உரலுக்க தான் புது மாப்பிளை தலையை விட்ட கதை நடந்தது எண்டு ஆச்சி சொல்லிறவ) . புட்டு taste அதன் மாவிலும் குழைக்கிற பதத்திலும் தான் இருக்கு . நெல்லை குத்ததேக்க சரியா தீட்ட வேணும். Mill இல நெல்லை குத்தி அரிசியை தீட்டேக்க முதல்ல அரிசி வந்தாப்பிறகு அவங்கட்டை அண்ணை தவிடும் வேணும் எண்டு சொல்லேக்க ,வேண்டா வெறுப்பா ஒருக்கா பாத்திட்டு அந்த blade ஐ எடுக்க தவிடு ,அரிசி வந்த அதே ஓட்டையால வரும் . ஆனால் உமி எண்டால் பின்னால போய் பிறம்பா அள்ள வேணும் . மனோகரா சந்தி செல்லையா mill ல நெல்லுக் குத்தி , அரிசியை தீட்டேக்க பார்த்து கொஞ்சமா தீட்ட சொல்லாட்டி வீட்ட வந்தா அம்மா புறுபுறுப்பா. குத்தின அரிசி தனி உர பாக்கிலேம் , உமி தவிடு தனித்தனி பாக்கிலேம் கட்டி போட்டு , bag கொண்டு போகாட்டி ,அரிசிக்கு மேல harbajan Singh ன்டை கொண்டை மாதிரி தவிட்டை கட்டிக்கொண்டு வாறனாங்கள். கடைசீல அவங்கடை mill காசை கட்டப்போனா அவன் தானே பொக்கற்றுக்க கைய விடப் பாப்பான் காசுக்கு? . ஒரு மாரி அதிலையும் தப்பி , பின் கரியரில அரிசியும் முன்னால தவிட்டு பாக்கையும் உமி பாக்கையும் வைக்க ஆரையும் உதவிக்கு கேட்டு சைக்கிளை உழக்க தொடங்க கொஞ்சம் balance தடுமாறும் . எல்லாத்தையும் சமாளிச்சுப் போய் கொண்டு இருக்கேக்க திடீரெண்டு பண்டிக்கோட்டு பிள்ளையார் கோவலடியால ஏதாவது வாகனம் வந்து ,cycle brake ஐ பிடிச்சா சரி, ஒண்டு முன் bag விழும் இல்லாட்டி பின்னான் சரியும். ரோட்டுக் கரையில் cycle நிப்பாட்டி திருப்பி weight balance எல்லாம் செஞ்சு வீட்டை வந்தா அம்மா உடன கணக்கு கேப்பா . முதலே கள்ளக்கணக்கு சரியாப் பாத்து கவனமா களவா காசை எடுத்து வைச்சிட வேணும் , இல்லாட்டி எப்படி பிடிக்குமோ தெரியாது மனிசி, டக்கெண்டு கண்டு பிடிச்சிடும் . Shorts pocket எல்லாம் Indian army மாதிரி full checking நடக்கும் .எனக்கு அண்ணா தான் போட்டுக் குடுத்ததெண்டு இப்பவும் doubt . கொண்டந்த உமி மரத்தூளோடு சேந்து தூள் அடுப்புக்க போகும் ( மரத்தூள் அடுப்பும் சிக்கனச் சமையலும் தனியா எழுத வேண்டிய subject ), தவிட்டை பால் கொண்டு வாற பாலன் கொண்டு போவான் . ( பனை மாதிரி நெல்லும் எல்லாப் பாகமும் மனிதனுக்கு பயன் தான் ) . அரிசியை ஊறப்போட்டு வடிச்சு வீட்டை கல்லுரலில மா இடிக்கிறது Mill க்கு முற்பட்ட (IPKF க்கு உட்பட்ட) காலம். அரிசி மாவை வறுத்து பதம் சரியா கொஞ்சம் Reddish brown ஆக வரேக்க அடுப்பை நிப்பாட்ட வேணும் . ஆனா கோதம்ப மா வறுக்கேக்க மணம் நல்லா தூக்கும் . கைவிடாம வறுத்து ஒரு golden colour ம் மணமும் வரேக்க இறக்க சரியா்இருக்கும் அந்த மணம் அரிசி மாவில இல்லை. அரிசி மாவை வறுத்து அரிச்சு பானைக்க போட்டு வைச்சா கொஞ்ச நாளைக்கு பாவிக்கலாம் , இது கோதம்ப மா மாரி வண்டு வராது. வறுத்த மாவை அரிக்கேக்க வாற அரிசி மா கட்டைக்கு தேங்காப்பூ சீனி போட்டு சாப்பிட்டால் சும்மா…..அப்பிடி இருக்கும். அரிசி மாப்புட்டுக்கு குழைக்க பதம் எடுக்கத் தெரியாத மனிசி மார்டை புதுப்புது கண்டு பிடிப்புகள் தான் அவிச்ச கோதம்ப மாவும் ஆட்டாமாவும் mix பண்ணிறது ( தனி அரிசி மா 24 கரட் தங்கம் அதில செப்பு பித்தளை எல்லாம் சேர்க்க கூடாது) . Experience ஆக்கள் நேர சுளகிலயே புட்டைக் குழைப்பினம் இல்லாட்டை சட்டீல குழைச்சு பிறகு சுளகில போட்டு கொத்த வேணும் . மாவை போட்டு மேல சுடுதண்ணி விட்டு குழைச்சு, கட்டி உப்பு சிரட்டையில கரைச்சு வைச்சு தெளிச்சுத் தெளிச்சு புட்டுக் குழைக்கிறது ஒரு கலை . ரின்பால் பேணியால இல்லாட்டி விளிம்பில்லாத பித்தளை தேத்தண்ணி பேணி யால கொத்தி கையால பினைஞ்சு சரியான பதத்தை எடுக்க வேணும். அப்பிடி மாவை கொத்திச் சுளகில கொழிச்சா வாற புட்டு அப்படியே ஓரே size ஆ இருக்கும். புட்டு கொஞ்சம் சின்ன size ஆ வர vertical movement ஐ நிப்பாட்டி மெல்லக் கொழிக்க segregation சரியா வரும் . நுனியல இருக்கிற உதிர்நத மாவை திருப்பி அள்ளி அடியில இருக்கிற கட்டியோட சேத்து குழைக்க வேணும் . சிலர் கையாலயே சின்னன் சின்னனா உருட்டியும் புட்டு செய்வினம் . எப்படி தட்டில போட்டு கொத்திற taste சட்டீல வறுக்கிற கொத்து ரொட்டீல வராதோ அதே போல் சுளகில கொத்திற புட்டு taste எதிலேம் வராது . சுளகின்டை நடுவில இருக்கிற பதமான size புட்டை நீத்துப் பெட்டீலயோ புட்டுக் குழலிலயோ கையால மெல்லமா ,love பண்ணிற காலத்தில முதல் முதலா மனிசியை தொடுறமாதிரி பட்டும் படாமலும் அள்ளிப்போட்டு , அதோட புட்டுக்கு தேங்காய் பூவை Mix பண்ணுறதும் ஒரு கலை தான் . சுளகிலேயே தேங்காய் பூவை mix பண்ணலாம் , இல்லாட்டி நீத்துப்பெட்டீக்க போடேக்க கலந்து போடலாம் , இல்லாட்டி தனிய புட்டை அவிச்சிட்டு பிறகும் தேங்காய் பூவை கலக்கலாம் . ஒவ்வொண்டிலேம் ஒவ்வொரு taste வரும் . தேங்காய் கொஞ்சம் முட்டுக் காய் எண்டா முதலிலேயே கலக்கிறது தான் நல்லம் . என்னதான் Machine scrapers வந்தாலும் . நல்ல பாரமான செத்தல் தேங்காயை ( அடப்பாமான ) உடைச்சு திருவலையில ஆழமாத் திருவினா ஒவொரு பூவும் இரண்டு inch நீளத்திற்கு வரும் . இது தான் கறுத்த புட்டு மாப்பிளைக்கு ஏத்த வெள்ளை பொம்பிள்ள . இரண்டையும் கலந்தால் வாறதும் ஒரு கலவி இன்பம் தான் . எனக்கெண்டால் ஆய கலகளில் சிறந்த கலை புட்டவிக்கிற கலை எண்டும் அடுத்தது அதை சாப்பிடுற கலை எண்டும் தான் சொல்லுவன் அவிச்ச் புட்டை எப்படி சாப்பிடுறது எண்டு தனிய எழுதோணும்…. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.