Search the Community
Showing results for tags 'eelam tamils'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "இதுவரை ஈழத் தமிழர்கள் எவரும் சிரித்தது கிடையாது! நாம் அழுதிடும் பொழுது பெருகிய கண்ணீர் அளவுகள் கிடையாது! இனிமேல் அழுதிட விழியில்லை - படும் இழிவுகள் சொல்லிட மொழியில்லை! தனியே பிரிந்திட விடவில்லை - அட தமிழருக் கானதைத் தரவில்லை!" --> "விடுதலை எவரும் தருவதுமில்லை" பாடலிலிருந்து... "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 304 replies
-
- 1
-
-
- தமிழீழம்
- தமிழ் ஈழம்
-
(and 26 more)
Tagged with:
- தமிழீழம்
- தமிழ் ஈழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் கரந்தடிப் போர்முறைக் கால (1990 மார்ச் வரை) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) என அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். -------------------------------- "காகங்களே! காகங்களே! காட்டுக்குப் போவீங்களா? காட்டுப் போயெங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீர்களா? - இதை காதில் உரைப்பீர்களா?" -------------------------------- "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 185 replies
-
- ltte
- guerrilla
-
(and 69 more)
Tagged with:
- ltte
- guerrilla
- guerrillas
- ltte guerrilla
- ltte guerrillas
- eelam guerrillas
- tamil guerrillas
- tamil tiger rebels
- tamil rebels
- eelam rebels
- ltt
- tamil eelam images
- liberation tigers of tamil eelam
- tamil ltte
- eelam tamils
- tamil eelam liberation struggle
- ltte pirabhakaran
- guerrilla warefare eelam
- guerrilla warefare
- eelam war
- tamil eelam liberation
- eelam guerrilla
- eelam images
- ltte images
- tamil
- tamils
- tamil eelam tamils
- eelam history
- tamil eelam history
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் கெரிலா
- கெரிலாக்காள்
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- ஈழ கெரில்லாக்கள்
- ஈழ கெரில்லா
- tamil guerilla
- tamil eelam
- tamil liberation army
- sri lankan guerillas
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
- புலிகள்
- தமிழ் போராளிகள்
- போராளிகள்
- போராளி
- புலிவீரர்கள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழ்ப் புலிகள்
- தமிழ் புலிகள்
- புலி
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரில்லாப்படை
- கெரில்லாப் படை
- கெரில்லாக்கள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடி போராளிகள்
- tamil tigers images
- tamil images
- tamils army
- tamil eelam army
- tamil warriors
- sri lankan army
- tamil military
- tamil eelam military
- eelam military
- tamils military
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் கணையெக்கிகளின்(Mortar) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். புலிகளின் இக்கணையெக்கிகளை இயக்கிய படையணிகள் 'குட்டிசிறி மோட்டார் படையணி' & 'ஜோன்சன் மோட்டார் படையணி' என்பனவாகும். இவை முற்றுமுழுதாக கணையெக்கிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணிகளாகும். இப்படையணிகளில் ஆண், பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர். இப்படையணிகள் தவிர்த்து விடுதலைப் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 'பசீலன் 2000' என்ற உந்துகணை கணையெக்கியினை இயக்குவதற்கு மேஜர் 'பசீலன் மோட்டார் பிரிவு' என்ற தனிப்பிரிவே இருந்தது. இப்பிரிவின் செயல்பாட்டுக் காலம் பற்றிய தகவல்கள் 1992 இற்கு பின் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் சூட்டப்பெற்ற முதலாவது சேணேவிப்பிரிவாகும் என்பது ஓர் வரலாற்றுத் தகவல். இப்பெயர் சூட்டல் தோராயமாக 1989 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாமென என்று எண்ணுகிறேன். ஏனெனில் அந்த ஆண்டில்தான் இக்கணையெக்கி புதுப்புனையப்பட்டது ஆகும். இந்த பசீலன் 2000 என்ற கணையெக்கிக்கு முன்னர் 'பாபா மோட்டார்' என்ற அதிகளவில் நெருப்பை கக்கும் எறிகணை ஏவும் கணையெக்கி விடுதலைப்புலிகளிடம் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இதை இயக்குவதற்கு ஏதேனும் தனிப் பிரிவிருந்ததா என்று நான் தேடி வாசித்த எந்தவொரு புத்தகங்களிலும் இல்லை. (வாசகர் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.) "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன" குட்டிசிறி மோட்டார் படையணியின் இலச்சினை | Logo of Kuttisri Mortar Brigade இதில் உள்ள பின்புல நிறம் பிழை. பின்புலத்தில் கீழ்க்கண்ட கொடியில் உள்ளவாறு மேலே மஞ்சளும் கீழே சிவப்பும் வர வேண்டும். ஜோன்சன் மோட்டார் படையணியின் இலச்சினை | Logo of Johnson Mortar Regiment தென் தமிழீழத்தின் ஏழு இலச்சினைகளும் வைத்திருக்கிறேன். ஆனால், அதில் ஜோன்சன் மோட்டார் படையணியினது எதுயென்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்ததும் இங்கே வெளியிடுகிறேன். இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 42 replies
-
- மோட்டார் படையணி
- குட்டிசிறி மோட்டார்
-
(and 35 more)
Tagged with:
- மோட்டார் படையணி
- குட்டிசிறி மோட்டார்
- புலிகளின் ஆட்லறிகள்
- சேணேவிகள்
- புலிகளின் மோட்டார்
- ஆட்டி
- தமிழீழ மோட்டார்
- ஜோன்சன் மோட்டார்
- ஆட்டிலறி
- பசீலன் மோட்டார்
- மோட்டர் படையணி
- சேணேவி
- ஆட்லறி
- மோட்டார்
- ஆட்லெறி
- கணையெக்கி
- பசீலன் 2000
- பசீலன் மோட்டார் பிரிவு
- புலிகள்
- ltte pasilan mortar
- மோட்டர்
- புலிகள் ஆட்லறி
- ltte baba mortar
- ஆட்லறிகள்
- குட்டிசிறி மோட்டார் படையணி
- தமிழீழ மோட்டர்
- ஆட்டிலறிகள்
- ltte mortar
- eelam mortar
- tamil eelam mortar
- tamil mortar
- eelam tamils
- eelam mortar brigade
- johnson artillery brigade
- kutti siri mortar brigade
- tamil tigers mortar
- paseelan 2000
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
- ltte navy
- eelam navy
- (and 10 more)
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் வில்கள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். வில்லம்பு - வில்லையும் அம்பையும் சேர்த்து வழங்கும் போது வில்லம்பு என்படும் வில்வித்தை பயிற்றுவிக்குமிடம்: கொட்டில் வில்- அம்பு எய்யும் அனைத்தையும் குறிக்கும் பொதுச் சொல் குணி(Skt) - நல்ல தரமான வில் வில்லை விளைவிப்பவர்- வில்செய்வோன் வில்வட்டம் - archery வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் - குலைவில் வில்லின் நாணோசை - இடங்காரம் வில்லின் குதை (notch at the end of a bow to secure the loop of a bow strong.) - குலை வில்லில் நாண் பூட்டல் - குதைத்தல் → நாண் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - பூரி , தொடை, ஆவம், பூட்டு, நரம்பு, நாரி, வடம், குணம், கப்பம். இந்நாண்கள் மருள், எருக்கு, கஞ்சா செடி, சணல், சணப்பை, புளிச்சை, மூங்கில் ஆகியவற்றினால் ஆனவை என்று கௌடில்யம்(அர்த்தசாஸ்திரம்) குறிக்கிறது. (கிட்டிப்பு(credit): போரியல்: அன்றும் இன்றும் - 4.1.5) வில்லின் வகைகள் :- சிலை, தனு, வேணு, கார்முகம், சாபம், சிந்துவாரம், முனி, சார்ங்கம்(skt), சராசனம் (skt), பினாகம்(skt), கோதண்டம் , தவர், கொடுமரம், துரோணம்(skt) → பிங்கல நிகண்டு சானகம், காண்டீவம்/காண்டீபம், குடுமி, தடி, தண்டாரம், கேகயம், வாங்குவில், வல்வில், → இவையெல்லாம் இலக்கியங்களில் இருந்து பொறுக்கப்பட்டவை! இனி, இவை ஒவ்வொன்றினது விளக்கங்களைக் காண்போம்:- 1) சிலை = சில்+ ஐ சில் - உருளை சில்லென்றால் தமிழில் சக்கரம் என்று பொருள். எனவே இவை சக்கர வடிவில் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். மேலும் சிலை என்னும் பெயரிற்கு வானவில்(அரை நிலவு வடிவம், இவ்வில்லும் அதே வடிவுடையதே), முழங்கு என்னும் பொருள்களும் உள்ளதால் அம்புவிடும் போது இச்சிலையானது முழங்கும் என்பதையும் ஊகிக்கலாம். இது பலதடிகளாலோ இல்லை மூங்கிலாலோ இல்லை தண்டாலோ ஆனது ஆகும் 'சங்ககாலச் சேரர்/ கி.மு.2-ஆம் நூற்றாண்டு/ கிடைத்த இடம்: கரூர் / காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை' * தண்டாரம் சொல் விளக்கம் எண் 19 இல் காண்க. 2) சாபம் = சா+ அம் இங்கு சா என்றால் வட்டக்கோட்டின் ஒரு பகுதியின் இரு முனைகளையும் சேர்க்கும் கோடு ; அம் என்றால் அழகு எனப் பொருள்படும். இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் → "ஆவம் → சாவம் = வில்; சாவம் → சாபம்" என்கிறது என்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (பாகம்: ச - சா) இங்கு ஆவம் = மூங்கில். எனவே, இவ்வில்லானது மூங்கிலால் செய்யப்பட்ட அழகிய வளைந்த வில் என கொள்ளலாம். அத்துடன் சமற்கிருதத்தில் சாபா என்றாலும் மூங்கில் என்றே பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. என் அனுமானம்: மேலும் சாபம் என்னும் சொல்லிற்கு வானவில் என்னும் பொருளும் இருப்பதால் இது அரைவட்ட வடிவ வில் என்பது மேலும் உறுதியாகிறது. மொத்தத்தில் சாபம் என்றால் வட்டத்தை துண்டாக வெட்டிய வடிவிலான அழகிய வில் என அறிய முடிகிறது. இதன் இலக்கிய பயன்பாடுகள் பற்றி அறிய போரியல்: அன்றும் இன்றும் என்னும் நூலின் புத்தகத்தின் பக்கம் 151 ஐக் காணவும். இதன் மறுபெயர் சாகம் ஆகும். சாபம் → சாவம் → சாகம் என்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி. இது சிலையிடம் இருந்து வடிவத்தில் ஓரளவிற்கு வேறுபட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அதாவது விரி கோண மட்டளவில் வேறுபட்டிருக்கலாம். எப்படியென்றால் அது நன்கு சுருங்கியதாகவும், இது விரிந்ததாகவும்(இரு படிமத்தையும் நோக்குக) இருக்கும். ஏனெனில் அது உருளை வடிவானது என்றும் இது பொத்தாம் பொதுவாக வட்டத்தின் துண்டு எனவும் வருவதால் , இவ்வாறு நான் துணிகிறேன். "நடுகல் வீரன் | மைய-அருங்காட்சியகம் சென்னை | கிடைத்த இடம்: விருத்தாசலம் | காலம் அறியில்லை | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை '" 3)தனு (தனுசு(Dhanus) வேறு; இது வேறு) "தண்டு தனுவாள் பணிலநேமி" (கலிங். 226); தன் + உ => உடல் தனு என்றால் உடல், சிறுமை, நான்கு சாண் கொண்ட நீட்டலளவை என்கிறது செ.சொ.பே.மு.. எனவே தனு என்பது உடல்கூறுகள்(எலும்பு) ஆல் ஆனவை என்று கொள்ளலாம். இது போன்ற உடல் கூற்களால் ஆன வில்கள் 'இனுவிட்டு '(Inuit) இன மக்களாலும் தற்போதுவரை பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 'இனுவிட்டு இனத்தவரின் துருவ மான் அ கரடி எலும்பால் ஆன வில் | இது பல வடிவங்களில் உள்ளது | படிமப்புரவு:: Inuit Bows ' இது போன்ற ஒரு வில்லைத்தான் பண்டு மக்களும் பயன்படுத்தியிருப்பர். எப்பொழுதும் தனு ஆல் ஆன வில் கிடைக்காது என்பதால் இது மிகக் குறைந்த அளவே மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதிலும் குறிப்பாக இது வேடர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு. இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. 4)வேணு வேணு = உட்டுளையுள்ள குழல், மூங்கில் என்கிறது பிங்கலம் எனவே வேணு என்பது மூங்கில் தடியால் நேரடியாக ஆக்கப்பட்ட வில் எனக் கொள்ளலாம். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. 5)கார்முகம் கார்முகம் = வில், மூங்கில் என பொருள் உரைக்கிறது செ.சொ.பே.மு. அதுவே கௌடில்யியத்தில் கார்முகம் என்பது பனை மரத்தால் ஆன வில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (கிட்டிப்பு(credit): போரியல்: அன்றும் இன்றும் - 4.1.5.1) (கார் என்றால் தமிழில் கருமை ; பனை மரமும் ஒருவகை சாம்பல் கலந்த கறுப்புத் தானே? எனவே பனை மரத்தால் ஆன கருமை நிறங் கொண்ட வில்லாக இது இருந்திருக்கலாம் என்று நான் துணிகிறேன்) இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. 6)சிந்துவாரம் சிந்துவாரம் - கருநொச்சி, நொச்சி எனவே சிந்துவாரம் என்பது கருநொச்சி மரக் கிளையால் ஆனது எனலாம். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. (கிட்டிப்பு(credit): போரியல்: அன்றும் இன்றும் - 4.1.5.1) இது கொஞ்சம் முக்கியம்... கவனமாக வாசிக்கவும்:- …………. முனியே சார்ங்கம், சராசனம், பினாகம், கோதண்டம், தவர், கொடுமரம், துரோணம் ………. → பிங்கலம் மேற்கண்டதில் இருந்து நாம் அறிவது யாதெனில் 'சார்ங்கம், சராசனம், பினாகம், கோதண்டம், தவர், கொடுமரம், துரோணம்' ஆகிய ஏழும் முனியாகுமாம். நிற்க, முனியென்றால் என்ன? முனி யாதெனில் 7)முனி முனி - தெய்வம் , அகத்தி எனவே அகத்தி மரத்தால் ஆன வில் முனி ஆகும் எனக் கொள்ளலாம். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. மேலும், இங்கு தெய்வம் என்னும் பொருளும் உள்ளதால் முனியானது தெய்வங்களால் பயன்படுத்தப்படும் வில் என்று பொருள்படும். ஆக சார்ங்கம், சராசனம், பினாகம், கோதண்டம், தவர், கொடுமரம், துரோணம் ஆகியவை தெய்வங்களால் பயன்படுத்தப்படுபவை என்றும், இவையனைத்தும் ஒருசேர/பொதுச்சொல்லால் முனி என அழைக்கப்பட்டன என்பதும் அறிய முடிகிறது. ஆனால் இவற்றில் கோதண்டம் என்னும் வில்லின் வடிவம் சேரர்களின் காசிலும், கொடுமரம் என்னுஞ் சொல் இலக்கியங்களில் வீரர்களின் கைகளில் சுழன்றதாக உள்ளதால், இவையிரண்டும் மாந்தர்களாலும் பயன்படுத்தப் பட்டது என்ற முடிவிற்கு வருகிறேன். இனி, இவ்வொவ்வொரு வில்லைப் பற்றியும், அதன் வடிவம் பற்றியும் விரிவாகக் காண்போம். 8)பினாகம்(Skt) - சிவனின் வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. 9)சார்ங்கம்(Skt) - திருமாலின் வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. 10)சராசனம்(Skt) - இராமனின் வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. 11)கோதண்டம் = கோ+தண்டம் - இராமனின் வில் அதாவது மேலோட்டமாகப் பார்த்தால் இது அரசருக்கு உரியவில் என்னும் வகையில் பொருள் உள்ளது. இவ்வகை வில்லினை இராமர் கொண்டதால் அவரிற்கு கோதண்ட இராமன் என்னும் பெயரும் ஏற்பட்டதாக பழங்கதைகளில் உள்ளது. இதை மற்றொரு கோணத்தில் இருந்து பார்த்தால் கோதண்டம் என்னும் முழுச் சொல்லிற்கும் 'புருவ நடுவம்' என்னும் பொருள் உண்டு. அதாவது இப்படி:- மேலும் இதே வடிவ வில்களானவை சேரர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் காசுகளில் இவ்வகை வில்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 'சங்ககாலச்-சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு| கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை' இந்த வில்லின் வடிவத்தினை வைத்து நோக்கும் போது இவ்வகை வில்கள் விளைவிப்பது மிகக் கடினமாக இருந்திருக்கும் என்று கருத இடமுண்டு. ஆகையால் மாந்தர்களில், இவ்வகை வில்களெல்லாம் அரசர்களாலும் அவர்தம் சேனைமுதலிகளால் மட்டுமே பயன்பட்டிருக்கலாம் என்று துணிகிறேன். 12)கொடுமரம் - கொடு+மரம் கொள் → (கொண்) → கொடு = வளைந்த ஒ.நோ: கொடுக்கறுவாள் (முனை வளைந்த அறுவாள்) கொடுங்கை (வளைந்த கை) மரம் - தண்டு எனவே இவ்வில்லானது முனைப் பகுதிகள் வளைந்த வில்லாக இருந்திருக்க வேண்டும். மேலும் இவ்வாறு முனை வளைந்த வில்களின் சிலைகள் தமிழகத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. முடிவாக வில்லின் இருமுனைகளும் வளைந்திருக்குமாயின் அது கொடுமரம் எனப்படும். இந்தக் கொடுமரமானது மிகவும் நீளமானது என்பது குறிப்பிடத் தக்கது. தன் உயரம் ஒரு சராசரி மாந்தனின் கமக்கட்டில் இருந்து கணுக்கால் வரையிலான உயரமாகும். இதன் மறுபெயர் குடுமி ஆகும். கொடு → குடு → குடுமி என்கிறது செ.சொ.பே.மு. இவ்வித வில்லனது கண்ணப்பரின் கையிலும் உண்டு. இவர்தவிர வேறு எந்த தெய்வத்தின் கையிலும் இது காணப்படவில்லை. இ 'கண்ணப்பர், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/ இரண்டாம் இராஜராஜன் | சிற்ப படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை' இது கொடுமர வகையைச் சேர்ந்த ஒரு நெடுவில்லாகும். கொடுமரமே நெடியது. அந்த வகையின் மிகவும் உயரமான வில் இதுவாகும். மேற்கண்ட கொடுமரத்தின் நடுப்பகுதியானது வளையாமல் நேராக உள்ளது. ஆனால் கீழுள்ள கொடுமரத்தின் நடுப்பகுதி வளைந்திருப்பதோடு இது மிகவும் உயரமாக உள்ளது. 'ஜவ்வாதுமலை சோழா் காலத்து அரியவகை நாய் நடுகல் | படிமப்புரவு: தினமணி' 13)தவர் - தவர் = துளை, வில் எனவே தவர் என்பது துளை உள்ள தண்டால் ஆன வில் எனக் கொள்ளலாம். (கிட்டிப்பு(credit): போரியல்: அன்றும் இன்றும் - 4.1.5.1) 14)துரோணம்(Skt) - குருகுல ஆசிரியரின்(?) கையில் உள்ள வில்/ துரோணாச்சாரியாரின் கையில் உள்ள வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. 15)சானகம் - என்னவென்று அறியமுடியவில்லை. ஆனல் சிந்தாமணி நிகண்டில் இக்குறிப்பு உள்ளது. "சானகமே துரோணஞ் " சிந்தாமணி 364 (சிந்தாமணி நிகண்டு, செய்யுள் - 364) எனவே துரோணம் என்னுஞ் சொல்லிற்கு சானகம் மறுபெயர் என்பது புலப்படுகிறது. இச்சொல்லின் வேர்ச்சொல் என்னால் அறியமுடியவில்லை. இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. குறிப்பு: சன்னகம்(Blowgun) என்னுஞ் சொல்லை இதனோடு போட்டுக் குழப்பியடிக்க வேண்டாம். அது வேறுவாய்; இது வேறுவாய்😜 16)காண்டீபம்/ காண்டீவம்/ காண்டிபம்/ காண்டிவம்/ காண்டியம்- அருச்சுனனின் வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. 17)கேகயம் இதன் சொற்பிறப்பாவது, கவை - கேவு - கேகம் - கேகயம் என்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (பாகம்: கெ- ஙௌ) . கேகயம் என்றால் வளைவு என்றும் பொருளுள்ளது என்கிறது செ.சொ.பே.மு.. எனவே நாம் கேகயம் என்பதும் வளைந்த வில் என்றே கொள்ள முடிகிறது. இதுவும் சாபத்தின் வடிவினை ஒத்ததே. 18)தடி - தடி என்பது தடியால் ஆன வில்லாகும். அதாவது சாதாரண ஏதாவது ஒரு மரத்தில்/செடியில் இருந்து கிடைத்த தடியால் ஆன வில். இது வளைந்த வடிவினதாய் இருக்கும். 'கருவேலந் தடியில் இருந்து ஆன வில் | படிமப்புரவு: யூடியூப்' 19)தண்டாரம் தண்டு → தண்டம்+ஆயம் → ஆரம் → தண்டாரம் என்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி தண்டு - திரண்ட தடி ஆரம் - வட்ட வடிவம் தண்டால் ஆன வில் தண்டாரம் ஆகு. இது தடியினை விடக் கொஞ்சம் தடிமனானது ஆகும். அதாவது ஒரு மரத்தின் தண்டில் இருந்து நேரத்தியாகச் செய்யப்பட்ட வட்டவடிவ வில். அதாவது சிலை போன்றது; இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்போனல் சிலையின் ஒத்தசொல்லே தண்டாரம் ஆகும். 20)வாங்குவில் - இது வாங்கிய வில் எனப்பொருள்படும். வாங்குதல் என்றால் உள்நோக்கி வளைதல் என்று பொருள் (அவனுக்கு கை ஒருபக்கம் அப்பிடியே வாங்கிற்று - பேச்சு வழக்கு) . எனவே நடுவில் நன்கு வளைந்திருக்கும் வில் எனப் பொருள்படும். இவ்வகை வில்லை சேரர்கள் வாங்குவில் என்றே அழைத்தனர். "வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த" (சிறுபாணாற்றுப்படை, 48) . "வாங்குவில் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்" (முத்தொள்ளாயிரம்) . "மராமரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை, வல்வில் இராமனை வெல்ல வல்லவன் என்ப திசையலால் கண்டதில்லை " (திருத்தக்கதேவர், சீவக. 1643) எம்மிடம் மொத்தம் 6 வகையான வாங்கு வில்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. அவையாவன:- 'சங்ககாலச் சேரர் | கி.மு.2-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை' 'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை' 'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை' 'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு:தமிழிணையம் - தகவலாற்றுப்படை ' 'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை' மேற்கண்ட வடிவ வாங்குவில்லானது உலகிலேயே சேரர்களிடம் மட்டுமே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது! 'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை' → கீழ்க்கண்ட தகவலானது போரியல்: அன்றும் இன்றும் என்னும் நூலின் 4.1.4 இல் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்: 21)வல்வில் 'கைபுனை வல்வில்' 'வரிபுனை வல்வில்' 'அம்சிலை வல்வில்' 'கோட்டு அமை வல்வில்' 'பொன் அணி வல்வில்' 'உருவ வல்வில்' 'வாள்போழ் வல்வில்' 'விசைப்புறு வல்வில்' என வல்வில் பல்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடப்படுகிறது. அம்மொழிகளின் விளக்கங்கள் முறையே, ' வேலைப்பாடு நிறைந்தது(கை புனை, வரி புனை), அழகு மிக்கது, வளைந்து அமைந்திருந்த வில், பொன்னினை அணிந்த வில், நல் உரு உடையது, வாளைக்கூட பிளக்கும் தன்மையுடையது, அம்புகளை உறுதியான மிகுந்த விசையோடு செலுத்தும் இயல்பினது' என விளங்க முடிகிறது. மேலும், இவ்வில்லில் இருந்து செல்லும் கணையானது, 'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப் புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உரல்தலைக் கேழற் பன்றி வீழ, அயலது ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்' → புறனானூறு - பெயர் கேட்க நாணினன்(152) 'வேழம் வீழ்த்தி, புலி பிளந்து, கலைமான் உருட்டி, ஆண் பன்றி வீழ்த்தி, புற்றின் கண் உள்ள உடும்பினைச் சென்று தைத்தது' என வல்வில் வேட்டத்தைப் வன்பரணர் குறித்துள்ளதால், ஒரே எய்வில் பன்னிலக்குகளை துளைக்கும் ஆற்றல் பெற்ற ஒருவனின் வில், வல்வில் எனப்பட்டது என்பது புலனாகிறது. இவற்றுடன் இதற்கொரு கூடுதல் ஆதாரம் சேர்க்கும் பொருட்டு மற்றொரு மேற்கோளையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வற்பார் திரடோளைந் நான்குந் துணித்த வல் விலிராமன் (திவ். பெரியதி. 5, 1, 4); (புறநா. 152, 6 அடிக்குறிப்பு). சாதாரண வில் கொண்டிருந்த இறை சத்து மிக்க இராமனும் பல பொருண்மைகளை ஊடுருவிச் செல்லும் வகையில் அம்புவிடும் வல்வில்லினை உடையவனாம் ! இவையே பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வில்களாகும்! கூடுதல் தகவல்கள்:- செலுத்துவதை மட்டும் பார்த்தால் எப்படி.. செலுத்தப்படுவதையும் பார்க்க வேண்டாமா? உசாத்துணை: செ.சொ.பே.மு. போரியல்: அன்றும் இன்றும் - 4.0. கறுப்பு நிற வில்களிற்கான படிமப்புரவு Dremstime.com தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
- 1 reply
-
- 2
-
-
-
- தமிழரின் ஆயுதங்கள்
- eelam wepaons
- (and 12 more)
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட தடுபடையான கேடகங்கள் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கேடகங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். 1)கடகம்/ கடகு/ கேடகம்/ கேடயம்/ சேடகம்/ வட்டணை - அனைத்து விளிம்புகளும் வளைந்து தொடுமாறு வளைவாக அமைக்கப்பட்ட சிறிய வட்ட வடிவ கேடகம் "கேடகம் வெயில்வீச' - (கம்பரா. கடிமண. 33) "மயிர்ப்புளக சேடகமு மேந்தி" (சூளா. அரசி. 159) "இட்ட வட்டணங்கன் மேலெறிந்த வேல்" (கலிங்.413), (யாழ்.அக.) "கடகு" - (சீவக.2218, உரை) "கடகம்" - (திவா.) 2)கடிகை/ கடித்தகம் - மிகுந்த காவலான அரணைத் தரும் கேடகம் "கடித்தகப் பூம்படை கைவயி னடக்கிக் காவல்" (பெருங். உஞ்சை.53:140) "கடிகை" - (சிலப்.4:173,அரும்) 2)கிடுகு - நல்ல மறைப்பைத் தரும் கிடுகு "வார்மயிர்க் கிடுகொடு" (சீவக. 2218) 3)தண்டை - பிரப்பங்கேடகம் - Ratan shield பிரப்பந்தடியால் செய்யப்பட்ட கேடகம். "வள்ளித் தண்டையும்" (சீவக 2218) 'இது சீனர்களுடையது... அறிவதற்காக மட்டும் கொடுத்துள்ளேன்.' 4)மரத்தால் ஆன கேடகம் - மரவட்டணம்/ மரத்தட்டு/ பலகம் பலகம் - (பிங்) 5) தோலினாலியன்ற கேடகம் - தோல், தோற்பரம், தோற்பலகை "தோலின் பெருக்கமும்" (தொல்.பொருள். 67) "போர் மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம்"(சீவக. 2218) "தோற்பலகை" சூடாமணி 6) மாயிரும்பஃறோல் - மிகப் பெரிய தோற்கவசம் "மையணிந் தெழுதரு மாயிரும் பஃறோல்" (சிறு செங்குவளை, 52,5) 7) தட்டு/ மட்டம் / வட்டம்- மட்டமான ஒரே சீரான வட்ட வடிவ கேடயம் மட்டம் - (வின்.அக) தட்டு - (பிங்) "ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப" (திருமுரு.111); 8)பரிசை/ மாவட்டணம்/ தட்டியம் - பெரிய வட்டமான பாதி உடலை மறைக்கும் வகையில் அமைந்த கேடயம். "நீடிய பரிசையே மாவட்டண நெடியவட்டம்" - (பிங்) ''தட்டியம்'' - (திவா) 9) நெடியவட்டம்- நெடிய வட்டமான முழு உடலையும் மறைக்கும் வகையில் அமைந்த பெரிய கேடயம். ''நெடியவட்டம்'' - (பிங்) "நீடிய …. நெடியவட்டம்" (சூடாமணி) 10) நெஞ்சிலிருந்து அடிவயிறு வரையில்லான உய்ரம் உடைய கேடகம். இதன் விதப்பான பெயர் அறிய முடியவில்லை. ஆனால் இதே போன்ற ஒத்த வடிவிலான கேடகம் பாண்டைய சேர நாடான தற்போதைய கேரள மாநிலத்தில் உள்ளது.. 'பெரிய கிழங்கன் நடுகல் | சிலை உள்ள இடம்: ஈரோடு அருங்காட்சியகம் | படிமப்புரவு: தகவலாற்றுப்படை' 11) கழுத்திலிருந்து மரும உறுப்பு வரையிலான உயரம் உடைய கேடகம். இதன் விதப்பான பெயர் அறிய முடியவில்லை. இதன் விளிம்புகள் யாவும் உட்பகுதியுடன் ஒப்பிடுகையில் தடித்து காணப்படுகின்றன. 'நடுகல் வீரன் | கிடைத்த இடம்: ஈரோடு கோபிச் செட்டிப்பாளையம் | படிமப்புரவு: தகவலாற்றுப்படை ' 12) இது மிகவும் அகலமான அதே நேரம் மேற்கண்ட இரண்டைக் காட்டிலும் உயரமான கேடகம் ஆகும். இதன் இருபக்க விளிம்புகளும் தட்டையாக காணப்படுகின்றன. அதே நேரம் இதன் கைபிடியும் தடித்து உள்ளது. இதன் விதப்பான பெயர் அறிய முடியவில்லை. 'கி.பி.12 ஆம் நூற்றாண்டு | சோழர் காலம் ' 13) இது சிறியதே... இதே போன்ற பெரிய வடிவுடையது அசோகரின் காலத்தில் வட இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஈழத்தின் மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காசு | படிமப்புரவு: சிங்கள இணையத்தளம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது.. | காலம்: அறியில்லை' வெட்டி, கானப்படம் - காடுக் கொடிகளாலான கேடயம் ஏனப்படம் - பன்றித்தோல் போர்த்திய/ பன்றிப்படம் வரைந்த கேடயம் கிடுகின் படம் - தோல் அல்லது மூங்கினால் செய்யப்பட்ட சிறுவடிவுடைய கேடகம் இவை மூன்றும் மட்டும் போரியல் அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தில் இருந்து எடுத்தனான். உசாத்துணை: செ.சொ.பே.மு. தண்டை - J.P.Fabricius Tamil and English Dictionary ஏனையவற்றை எனக்கு கிடைத்த படங்களை வைத்தே எழுதியுள்ளேன். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
-
- 2
-
-
- tamils weapons
- eelam tamils shields
- (and 10 more)