யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Search the Community

Showing results for tags 'eelam'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 3 results

  1. கனடாத் தமிழ்த் திரைப்படத்துறையில் தற்சமயம் பல திறமை மிக்க இளைஞர்கள் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வரும் படங்கள், இசை அல்பங்கள், குறுந்திரைப்படங்கள் இதைச் சுட்டிக்காட்டுகின்றன. இயக்கம், கமரா, எடிட்டிங், இசையமைப்பு என்று பல துறைகளிலும் இவர்களின் ஆக்கங்கள் triple "Wow" நிலைக்கு வந்துவிட்டன. இளைஞர்கள் மத்தியில் இவர்களின் ஆக்கங்கள் சீக்கிரகதியில் சென்றடைந்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில் சில இளைஞர்களின் பெயர்கள் அடிக்கடி ஆக்கங்களில் காண்கிறோம். அவர்களில் ஒருவர் Pras Lingam . இவருடைய கமரா எடிட்டிங் உடன் வெளிவந்த படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அல்பங்கள் சிலவற்றிலும் இவரின் திறமை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஆர்வம் - செய்வதைச் சிறப்புடன் செய்யவேண்டும் என்ற விருப்பு - துணிச்சல் - அர்ப்பணிப்பு இவைகள் இவரை உயர்த்திவைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இவரை நேரில் கண்டது கிடையாது. திறமையைப் பார்த்து இவரின் ரசிகன் ஆகிவிட்டேன். இவருடைய இயக்கத்தில் இரண்டு வித்தியாசமான படங்கள் வரவிருப்பதாக அறிகிறேன். "கண்டம்" "Broken Dreams" அவருடைய பட trailer இவ்வாரம் வெள்ளிக்கிழமை யோர்க் சினிமாவில் இடம் பெறவிருக்கிறது என்றும் அறிகிறேன். அவருக்கு நம் மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம். Tnx : Kris S Pragas from facebook இவ்... எமது... இளைய... சமுதாயத்துக்கு... அறிந்து... தேடி... உண்மை அறிந்து... பயம்இல்லாமல்... ஆதரவு தாருங்கள். யாழ்இணயநண்பர்களே உங்கள் கருத்துக்களையும் அன்புடனும்.. பண்புடனும் எதிர்பார்க்கிறார்கள்... அவ் இளைஞர்கள் நன்றி.
  2. 2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசத்தின் கரங்களுக்காகவும் இந்தியாவின் பாதுகாப்புக்காகவும் நாங்கள் வானொலிகளை திருப்பி கொண்டு, அடுக்கப்பட்டு கிடந்த துணிகளால் ஆன மண் மூடைகளுக்கு நடுவே கிடந்த அந்த பொழுது. அவற்றையும் தொலைத்து விட்டு வெறும் நிலமே பாதுகாப்பாக படுத்திருந்த அந்த பொழுதுகள் சர்வதேசமே எங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த நாட்களில் ஒன்று. நாங்கள் வழமையான சில பணிகளில் கிடக்கிறோம். வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. செல்லும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறி வைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்த ஒரு காலை பொழுது அது. இதில ஒன்றை வெட்டுங்க அவடத்தில ஒன்றை வெட்டுங்க ” I ” வடிவ பதுங்குகுழிகளை அமைக்கும் தீவிர முயற்சியில் நாம் எமக்கான தந்தையின் கட்டளைகள் இவை அதையும் தாண்டி அம்மாவின் குரல் ஒலிக்கிறது. “எல்லோரும் சாப்பிடுவம் வாங்கோ”… கிடந்த அரிசியில் கிடைத்த உப்பை இட்டு காச்சப்பட்ட கஞ்சி ஒரு குவளை எமக்கு அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. அதை உண்பதற்காக நாங்கள் ஆவல் கொண்டிருந்தாலும், உயிர் பிரியும் அபாயம் எம்மை துரத்தி கொண்டு இருந்ததால் நாங்கள் அவ்விடத்துக்கு மெதுவாகவே நகர்கிறோம். தலை தூக்கி நடந்தால் பதுங்கி சுடும் குறியாளர்களின் தாக்குதல் நிட்சயமாக எம்முயிரை பறிக்கும் அல்லது எதிரியால் தொடர்ந்து சுடப்பட்டு கொண்டிருந்த பீ.கே என்று சொல்லப்படுகின்ற கனரக இயந்திர துப்பாக்கி ரவைகள் எம்மை சாகடிக்கும். இத்தனைக்கும் மத்தியிலும் தொடர்கிறது எங்கள் உயிர் காக்கும் அந்த பதுங்கு குழி வெட்டும் பணி. கிடைத்த கஞ்சிக்காக நாங்கள் கூடி இருந்த அந்த நேரம் எனது சிறிய தந்தையின் மகளின் குரல் கேட்கிறது. ” அந்த குரல் அண்ணா தூதுவளை சம்பல் தாறதா…?” எப்பிடி அதை தயார் செய்தாள் என்பது யாரும் அறியாதது. ஆனால் அங்கே பற்றைக்குள் படர்ந்திருந்த தூதுவளையில் உப்பிட்டு தரமான சம்பல் ஒன்றை செய்திருந்தாள் சிறிய தந்தையின் மகள் அதை தொட்டு கொண்டு கஞ்சியை குடித்த போது உண்மையில் அந்த நேர மரண அச்சம் கூட காணாமல் போயிருந்தது. எப்பிடி அது அவளால் முடிந்தது? சாவுக்கான மணித்துளி எண்ணப்பட்டு கொண்டிருந்த போதும் கஞ்சிக்கு சுவையாக அதை தயார் செய்ய அவளுக்கு எப்படி எண்ணம் வந்தது யாரும் அறியா நியம். பல வேளைகள் உண்ணாதிருந்த எமக்கு அது உண்மையில் அமிர்தமே… அன்றைய பொழுதி சாய்ந்து இருள் சூழ்ந்த அந்த மணிப்பொழுது கேட்டுக் கொண்டிருந்த அல்லது பாய்ந்து வந்து கொண்டிருந்த உயிர் குடிக்கும் இரும்புத்துண்டுகளின் வரவில் சிறு ஓய்வு… பத்து பதினைந்து நிமிடங்கள் அது நீடித்திருக்கும். அதுவே எங்கள் மேல் விழப்போகும் சாவுக்கான குறியீடு என்று புரியவில்லை எமக்கு. சிறிது நேரம் விழி அயர்ந்து போனோம் எங்கள் இருப்பிடத்துக்கு மேல் “வண்டு ” என்று எம்மால் குறியிடப்படும் வேவு விமானம் (beech craft ) இரைகிறது என் மனது நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை உணராமல் இல்லை தூங்கிய அனைவரையும் எழுந்து பாதுகாப்பு தேட சொல்லி உத்தரவிடுகிறேன் அனைவரும் தம்மால் முடிந்த பாதுகாப்பு நிலையான குப்பற படுத்து கொள்கிறனர். எந்த மறைப்புக்களும் அற்ற அந்த பற்றைகளை பாதுகாப்பரண்களாக கொண்டு நாங்கள் அனைவரும் படுத்து கிடக்கிறோம். எங்கெங்கெல்லாமோ வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகள் ரவைகளின் சத்தங்களை தாங்க முடியாது இரு காதுகளும் திணறுகின்றன. நாங்கள் இரு கைகளையும் நெஞ்சுக்கும் நிலத்துக்கும் இடையே வைத்து கொண்டு விரல்களால் இரு காதுகளையும் பொத்திய படி படுத்து கிடக்கிறோம். இவை மட்டுமே அன்றைய நாட்களின் எமது பாதுகாப்பு அரண்கள். சிங்களத்தின் முல்லைத்தீவு பிரதான ஆட்லறித்தளத்தில் இருந்து எறிகணைகள் ஏவப்பட்டு கொண்டிருந்த போது அந்த ஆட்லறி எறிகணை எம் இடத்தை நோக்கி வருகிறது. நான் படுத்திருந்த அந்த சிறு குழி போன்ற இடத்தில் இருந்து ஐந்து மீற்றர் தூரத்தில் நின்ற மரம் ஒன்றில் பட்டு சிதறிப்போகிறது. மரத்தின் முன் பக்கமாக அமைக்கப்பட்டு இருந்த ஒரு பதுங்குகுழி இடம்காணாமல் போகிறது அதற்குள் இருந்த கிட்டத்தட்ட பத்துப்பேருக்கு மேலான உறவுகள் உடல் சிதறி கிடப்பது எனக்கு புரிகிறது ஆனாலும் என்னால் எழுந்து சென்று பார்க்க முடியாத நிலை மீண்டும் மீண்டும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்து கொண்டிருந்ததால் தலை நிமிர்த்த முடியவில்லை நான் படுத்தே இருந்தேன். என் அருகில் படுத்திருந்த அனைவரும் பட்ட காயத்தின் வேதனையில் முனக தொடங்குகிறார்கள். அங்கே ஒரு இரத்த வெள்ளம் உருவாகியது. அனைவரும் காயமடைந்திருந்தார்கள் என்னையும் ஒரு சகோதரனையும் தவிர. மீதி இருந்தவர்கள் அனைவரும் காயப்பட்டிருந்தார்கள். தம்பி எனக்கு கட்டு போடு ஐயோ அம்மா வலிக்குது ….. என்று மாறி மாறி எழுந்த குரல்களுக்கு இடையே நானும் எனது சகோதரனும் ஓடிக்கொண்டிருந்தோம் காயத்துக்கு கட்டு போட முடியவில்லை யாருமே யாரையும் பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு அந்த இடத்தை முழுவதும் புகை சூழ்ந்திருந்தது. அழுகுரல்கள் வானளவு எழுந்தது. ஆனால் அந்த குரல்கள் எந்த வல்லரசுக்கும் கேட்கவே இல்லை… தொடர்ந்து கொண்டிருந்தது அந்த இடத்தை துடைத்தழிப்பதற்கான தாக்குதல்கள் …. அப்போது தான் அண்ணா……. அந்த குரல் தேய்ந்து கொண்டிருந்தது..
  3. பிழை நடக்குது என உணா்ந்தவன் துவக்கை எடுத்தான் களை பிடுங்க – அவன் எதிரிகள் தலையை எடுத்தான் சிலை போல் சிலா் நின்றது கண்டு விழி சிவந்து நின்றான் மலை மேல் விழினும் தலையால் மோதி உடைப்பாய் என்றான்! நிலை உயா்ந்து நின்ற சிலா் மண்ணை விலை பேசுதல் கண்டு கையிலைச் சிவன் போல் உக்கிரம் கொண்டான்! மண்ணை மீற்க மறவா் படை அமைத்தான் கழுத்தில் நஞ்சு கட்டி யமனின் வேலை குறைத்தான்! களம் பல ஆடி பகையோடு மோதி நகை பல செய்து நின்றான்! திகைத்து நின்றான் பகைவன் திசை பல ஆள் அனுப்பி சூழ்ந்து நின்று சூழ்ச்சி செய்தான்! எதிர்த்து நின்றான் தம்பிகளோடு அண்ணன் இறுதியில் வென்றது துரோகம்! வீரம் சுமந்து நெஞ்சில் ஈழம் சுமந்து நின்ற மாவீரா்களை இறுதியில் மண்ணே சுமந்தது! தன்னோடு அணைத்து அழுதது பகையின் பூட்ஸ் காலின் அடியில் புண்பட்டுத் துடித்தது… நகை செய்து நின்றான் பகைவன்! பூவை இழந்து மானம் இழந்து அங்கம் இழந்து “அடுத்தது என்ன?” எனும் நினைவை இழந்து சொந்த மண்ணில் அகதியாய் நின்றான் தமிழன்! ஓரமாய் இருந்து ஓங்கி அழுதது தமிழ் ஆதாரமாய் இருந்து மண்ணில் அனாதையாகிப் போய் அழுதது தமிழ்! “அடுத்தது என்ன?” துடித்து விழுந்தன கேள்விகள் பல! நாடு மாறி நாடு கதைக்குது நல்லதாய் என்ன தான் நடக்குது இங்கே? கிழக்கு விடியும் எனக் கிடக்கிறான் தமிழன்! வழக்குப் பல போட்டும் வழிக்கு வரமாட்டினம் போல… அண்ணன் செய்தது போல ஏறி உழக்கணும் மீண்டும் கண்ணன் போல் தூது நடந்து பயனில்லை! புரட்சி வெடிக்கணும் பகைவனுக்கு மிரட்சி கொடுக்கணும்! தானாய் எதுவும் நடக்காது குஞ்சுகள் நாம் சோ்ந்து நின்றால் வானில் பருந்துகள் இனிப் பறக்காது! (ஒலி வடிவம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.)