Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Search the Community

Showing results for tags 'ltte uniform'.

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s Test
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
 • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

 • மோகன்'s Blog
 • தூயவன்'s Blog
 • Mathan's Blog
 • seelan's Blog
 • கறுப்பி's Blog
 • lucky007's Blog
 • சந்தோஷ் பக்கங்கள்
 • தூயாவின் வலைப்பூ
 • vijivenki's Blog
 • sindi's Blog
 • சந்தியா's Blog
 • இரசிகை-இரசித்தவை
 • arunan reyjivnal's Blog
 • இலக்கியன்`s
 • PSIVARAJAKSM's Blog
 • blogs_blog_18
 • Tamil Cine's Blog
 • sujani's Blog
 • Iraivan's Blog
 • Thinava's Blog
 • குட்டியின் கோட்டை
 • வல்வை மைந்தன்
 • vishal's Blog
 • kural's Blog
 • KULAKADDAN's Blog
 • குறும்பன் வாழும் குகை
 • Thamilnitha's Blog
 • அடர் அவை :):):)
 • டுபுக்கு's Blog
 • வானவில்'s Blog
 • NASAMAPOVAN's Blog
 • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
 • vikadakavi's Blog
 • ravinthiran's Blog
 • Tamizhvaanam's Blog
 • hirusy
 • neervai baruki's Blog
 • இனியவள்'s Blog
 • senthu's Blog
 • tamil_gajen's Blog
 • சின்னப்பரின் பக்கம்
 • ADANKA THAMILAN's Blog
 • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
 • harikalan's Blog
 • antony's Blog
 • mugiloli's Blog
 • Kavallur Kanmani's Blog
 • jeganco's Blog
 • Waren's Blog
 • "வா" சகி 's Blog
 • nishanthan's Blog
 • semmari's Blog
 • Akkaraayan's Blog
 • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
 • தீபன்'s Blog
 • தமிழ் இளையோர் அமைப்பு
 • மாயன்'s Blog
 • Thumpalayan's Blog
 • Vani Mohan's Blog
 • mullaiyangan's Blog
 • NAMBY's Blog
 • பரதேசி's Blog
 • thamilkirukkan's Blog
 • Vakthaa.tv
 • colombotamil's Blog
 • மசாலா மசாலா
 • muththuran
 • கிருபா's Blog
 • நந்தவனம்
 • தமிழர் பூங்கா
 • TAMIL NEWS
 • dass
 • puthijavan's Blog
 • AtoZ Blog
 • mullaiiyangan's Blog
 • mullaiman's Blog
 • மல்லிகை வாசம்
 • karu's Blog
 • saromama's Blog
 • tamil92's Blog
 • athirvu
 • melbkamal's Blog
 • nedukkalapoovan's Blog
 • Loshan's Blog
 • ஜீவநதி
 • எல்லாளன்'s Blog
 • kanbro's Blog
 • nillamathy's Blog
 • யாழ்நிலவன்'s Blog
 • Vimalendra's Blog
 • Narathar70's Blog
 • நிரூஜாவின் வலைப்பதிவு
 • cyber's Blog
 • varnesh's Blog
 • yazh's Blog
 • MAHINDA RAJAPAKSA's Blog
 • விசரன்'s Blog
 • tamil paithiyam's Blog
 • TamilForce-1's Blog
 • பருத்தியன்
 • aklmg2008's Blog
 • newmank
 • ilankavi's Blog
 • இனியவன் கனடா's Blog
 • muthamil78
 • ரகசியா சுகி's Blog
 • tamileela tamilan's Blog
 • சுஜி's Blog
 • மசாலா மசாலா
 • Anthony's Blog
 • Gunda's Blog
 • izhaiyon's Blog
 • TamilEelamboy's Blog
 • sathia's Blog
 • லோமன்
 • kobi's Blog
 • kaalaan's Blog
 • sathiri's Blog
 • Voice Blog
 • தமிழ் செய்தி மையம் மும்பை
 • ஜீவா's Blog
 • தீபம்'s Blog
 • Iraivan's Blog
 • பிறேம்'s Blog
 • mullaikathir.blogspot.com
 • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
 • sam.s' Blog
 • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
 • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
 • sam.s' Blog
 • தயா's Blog
 • தயா's Blog
 • ஏராழன்'s Blog
 • Small Point's Blog
 • Rudran's Blog
 • ulagathamilargale.blogpsot.com
 • ramathevan's Blog
 • Alternative's Blog
 • Alternative's Blog
 • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
 • ஜீவா's Blog
 • மொழி's Blog
 • cawthaman's Blog
 • ilankavi's Blog
 • ilankavi's Blog
 • கனடா போக்குவரத்து
 • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
 • nirubhaa's Blog
 • nirubhaa's Blog
 • தமிழரசு's Blog
 • akathy's Blog
 • அறிவிலி's Blog
 • மல்லிகை வாசம்'s Blog
 • வல்வை சகாறா's Blog
 • விவசாயி இணையம்
 • அருள் மொழி இசைவழுதி's Blog
 • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
 • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
 • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணம்
 • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்

Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

 1. "தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! This document is solely made for an educational purpose only. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் கடற்படையால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. ஈழத்தமிழரின் கடற்படையான கடற்புலிகள் அலுவலர் சீருடை(Officer uniform) மற்றும் கடற்கலவர் சீருடை(Sailor uniform) ஆகிய இரண்டையும் அணிந்திருந்தனர் என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல விரும்புகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் தொப்பிகள் பற்றிய தகவல்களை எல்லாம் மிக விரிவாக முதல் மடலத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன். அதைக் காண இங்கே சொடுக்கவும்: விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:- விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது... நீல வரி பச்சை வரி கறுப்பு வரி அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர். வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள். இடது கையின் தோள்மூட்டிற்கு கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும்.(தெளிவிற்கு கீழே உள்ள பிரசாந்தன் அண்ணாவின் படத்தை காண்க) இது பெரும்பாலானோரின் வரிப்புலியில் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை. குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும். நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானாது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர். 'கடற்புலி வீரர் 2002 இற்கு முந்தைய சீருடையில் | படிமப்புரவு: fb & tharaakam' முதலில் கடற்புலிகளில் இருந்து தொடங்குவோம். 'இடமிருந்து வலமாக : கடற்படை அலுவலர்; கடற்கரும்புலிகள்; கடற்கலவர் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' பயிற்சி சீருடை: ஆண்களும் பெண்களும் 'Navy நீல' நிறத்திலான ஒரு உடையினை [அரைக்கைச்சட்டை & காற்சட்டை(ஆண்களின் காற்சட்டை பெண்களை விட கட்டையானது)] அணிந்து பயிற்சி எடுத்தனர். 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1990–1992/3 வரையிலான கடற்கலவர் சீருடை: இதுதான் கடற்புலிகளின் முதலாவது சீருடை. இது ஒரு ஊத்தை நிறம் அல்லது ஒரு விதமான வெள்ளை நிறம் ஆகும். 'இதில் உள்ள வீரர்கள் அணிந்துள்ளதே முதலாவது சீருடை ஆகும்.' 1992/1993 - 1995 வரையிலான கடற்கலவர் சீருடை: ஆண்களும் பெண்களும் கீழக்கண்ட நிறத்திலும் பாங்கத்திலுமான(pattern) சீருடை அணிந்திருந்தனர். இவர்களும் தொப்பியும் சீருடையின் அதே உருமறைப்பைக் கொண்டதாக இருந்தது. 'கடற்புலி போராளி ஒருவர் இச்சீருடையில் உள்ளதை நோக்குக' 1995 - 2002 வரையிலான நீல வரிப்புலி பற்றி:- (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) வரியில் இருந்த நிறங்களாவன: RGB - (182,185,216) - வெளுறிய பின்புல நிறம் RGB - (67,89,136) - Yale blue ஆகத் தெரிவது RGB - (77,78,124) - Navy blue ஆகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 1995 - 2002 வரையிலான கடற்கலவர் சீருடை:- இவர்கள் நீல நிற வரிப்புலி அணிந்திருந்தனர். கழுத்தைச் சுற்றி தோள் மேல் இருக்கும் படையாக கடற்படையின் கடற்கலவர் அணியும் ஒரு நீல நிற வட்ட வடிவ துணியினை அணிந்திருந்தனர். இது சாம கடற்படை(Midnight navy) நீல நிறத்தில் உள்ளது. அது தலையினை உள்ளுடுத்துவதன் மூலம் தோள் மேல் அணியப்படும். இதை அணிந்த பின் நோக்கும் போது பின்பக்கமும் முன்பக்கமுமாக அரைநிலவு வடிவில் இருக்கும். அதில் முன்பக்கம் கொஞ்சமாகவும் பின்பக்கம் அதிகமாகவும்(முதுகு வரை நீள்கிறது) அந்த அரைநிலவு வடிவம் இருக்கும்.இதன் ஓரங்களில் இரு வெள்ளை நிறக் கோடுகள் உள்ளன. அவை குறிக்கும் பொருளினை அறியமுடியவில்லை. இவர்கள் இடுப்பில் அணிந்திருந்த இடைவாரானது அதே நீல வரிப்புலி உருமறைப்போடு இருந்தது. ' படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1992/1993- 2002 வரையிலான கடற்படை அலுவலர் சீருடை(Navy Officer Uniform) :- இவர்கள் அந்த தோளைச் சுற்றி நிற்கும் துணியினை அணியார். நீல நிற வரிப்புலியினை மட்டுமே அணிவர். 'கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர்கள் | இவர்கள் அந்த துணி அணியவில்லை | படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 'கடற்புலிகளின் சேர்ப்பன்(Admiral) சூசை | | படிமப்புரவு: Tharakam' 2002 இல் கடற்படை அலுவர் சீருடை இச்சீருடையில் இள நீல நிறம் அதிகமாக இருந்ததால்(வானினை குறிப்பதால்), இதில் இருந்த கடுநீல நிறம் போன்ற நீல நிறமானது நீக்கப்பட்டு மேலும் சில மாற்றல்களோடு பின்னாளில் எழுந்த வான்புலிகளின் சீருடையாக்கப்பட்டது. 'கடற்புலிகளிர் சேர்ப்பன்(Admiral) சூசை | படிமப்புரவு: Aruchuna.com' 2003 இல் கடற்படை அலுவர் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் மெல்லிய கோடுகளாகும். அதே நேரம் பின்புல நிறமான இளநீலம் போன்ற நிறமே வெகு அதிகமாக இருந்தது. இது மிகக் குறுகிய காலம் பயன்படுத்தபட்டு அதன் பிறகு மாற்றப்பட்டு விட்டது '25–11–2003 அன்று பாரச்சவம்(heavy weapons) கொண்டு அணிநடையில் ஈடுபடும் கடற்புலிகளின் கடல் அலுவலர்கள் | படிமப்புரவு: Aruchuna.com' 2004 - 2009(18–05–2009) வரையிலான கடற்படை அலுவர் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 'கடற்புலிகளின் சேர்ப்பன்(Admiral) சூசையும் கடற்புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளையாளர் லெப்.கேணல் பகலவன் அவர்களும் | படிமப்புரவு: Aruchuna' 2001–2009(18–05–2009) வரையிலான கடற்கலவர் சீருடை:- இவர்கள் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்டையும் அணிந்திருந்தனர். மேற்சட்டையின் அடிப்பக்க விளிம்பு RGB (48;97;155) என்னும் கடுநீல நிற ஓரத்தைக் கொண்டிருந்தது. இடுப்பில் எல்லோரும் வெள்ளை நிற இடைவாரினை அணிந்க்டிருந்தனர். ஆண்கள் மேற்சட்டையினை உள்விடாமல் வெளியில் விட்டிருந்தனர், பெண்களைப் போல. கடற்கலவரின் மேற்சட்டைக்கு கழுத்துப்பட்டை(collar) உள்ளது கடற்கலவரின் அதிகாரிகள் வீரர்களிடம் இருந்து வேறுபட்டு சுண்டு(bill) கொண்ட கடற்கலவர் சதுரக்கவி(sailor square rig) அணிந்திருந்தனர். கடற்கலவர்கள் தோள் மேல் சுற்றி நிற்குமாறு Scarf போன்ற RGB (48;97;155) என்னும் நிறத்திலான பளபளக்கக்கூடிய ஒரு துணியினை அணிந்திருந்தனர். அதன் ஓரத்தில் வெள்ளை நிறத்திலான மூன்று கோடுகள் இருந்தன. இந்த துணியானது முன்பக்கம் முக்கோண வடிவிலும் பின்பக்கம் சதுர வடிவிலுமாக உடல் மேல் நின்றது, அணிந்த பின். இதன் முன்பக்க முக்கோணம் சமச்சீராக வெட்டப்பட்டு அதில் திறத்தல் இருக்கிறது. மேலும கழுத்தைச் சுற்றிவர இருந்த திறத்தல்(opening) வட்ட வடிவுடையதாக இருந்தது. ''படைத்தகையில்(parade) ஈடுபடும் கடற்கலவர் | படிமப்புரவு: Aruchuna.com'' 'படை மரியாதையை ஏற்கும் தலைவர் 2002 | படிமப்புரவு: Aruchuna.com' ஆனால் கடற்புலிகள் கடற்சமரின் போது கடற்கலவர் சீருடையினையோ இல்லை கடற்படை அலுவலர் சீருடையினையோ அணியார். மாறாக குடிமை(civil) உடையினை அணிந்து கடற்சமராடுவர். வழங்கல் பிரிவு(!?): கடற்புலிகள் இச்சீருடையினை அணிந்து வழங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவர். இதில் இந்த கடுநீல நிறம் போன்ற சீருடை அணிந்துள்ள பெண்களை நோக்குக. இவர்கள் வழங்கல் அணியினர். இவர்களின் காற்சட்டையும் மேற்சட்டையும் தொடுக்கப்பட்டுள்ளது. மேற்சட்டை Hoodie ஆக உள்ளது. 'இந்துமதி என்னும் கலப்பெயர் படகை கடலினுள் தள்ளும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com' 'தெந்தமிழீழத்திற்கான வழங்கல் ஒன்றின் போது ஆண்கலவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | படிமப்புரவு: Tamilnet.com' மேலே பெண்கள் அணிந்துள்ளது ஈரமாகி விட்டதால் வேறொரு நிறத்தில் உள்ளது. ஆண்கள் அணிந்துள்ளதே ஈரமாகத இச்சீருடையின் நிறமாகும். இச்சீருடை அணிந்தோர் தேவை ஏற்படும் போது நல்ல சண்டையாளர்களாகவும் மாறினர்! 'கடற்புலி போராளி' 'மிராஜ் வகையின் மதன் வகுப்பு சண்டைப்படகு. இப்படகில் உள்ள கடற்கலவரை நோக்குக. அவர்கள் நான் மேற்குறிப்பிட்ட வழங்கல் சீருடையினை அணிந்துள்ளதை நோக்குக' படகு கட்டுமானம்: மங்கை & டேவிட் இப்பிரிவைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இச்சீருஅடை பழுப்பு நிறத்தில் இருந்தது; தலையில் அதே நிறத்திலான சுற்றுக்காவல் கவியும் அணிந்திருந்தனர். இவர்களின் சீருடையின் மேலாடையும் கீழாடையும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் பெண்புலிகளின் தலைமயிர்ப் பாணி கொஞ்சம் வேறுபாடானது, ஏனைய படையணி/படை/பிரிவு-களிலிருந்து. ஏனெனில், இவர்கள் பிறரைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரினை பின்னால் எடுத்து கொண்டை போட்டிருந்தனர். ----------------------------------------- ----------------------------------------- கூடுதல் செய்திகள்: வான்புலிகளின் சீருடை & வானுர்திகள் - ஆவணம்: ----------------------------------------- ----------------------------------------- உசாத்துணை: செ.சொ.பே.மு. கிடைத்த படங்களை வைத்தே எழுதினேன் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
 2. "தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே …/\… இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களின் தரைப்படையான தரைப்புலிகள் மரபுவழி படைத்துறையாக மாற்றம் பெறத் தொடங்கிய 1990 ஆம் அண்டில் இருந்து அவர்கள் தோற்கடிக்கப்பட்டு ஆய்தங்கள் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு வரை அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் பற்றியே. இச்சீருடைகள் பற்றிய பதிவில் 'பச்சை வரிப்புலி'யின் 4 விதமான விருத்துகள் பற்றியும் தரைப்புலி படையணிகளின் பல்வேறு விதமான சீருடைகள் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறேன். வாருங்கள் தாவுவோம், பதிவிற்குள்! மடலம் ஒன்று: விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:- விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது... நீல வரி பச்சை வரி கறுப்பு வரி அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர். வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள். இடது கையின் தோள்மூட்டிற்கு கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும்.(தெளிவிற்கு கீழே உள்ள பிரசாந்தன் அண்ணாவின் படத்தை காண்க) இது பெரும்பாலானோரின் வரிப்புலியில் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை. குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும். நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர். → குறிப்பு: நான்காம் ஈழப்போர் வரை சமர்க்களங்களில் இச்சீருடையினை பலர் அணிவர்; சிலர் அணியார். அணியாதோர் குடிமை(Civil) உடைகளை அணிவர். ஆனால் நான்காம் ஈழப்போரில் 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இச்சீருடை அணிவதை புலிகளில் பெருமளவானோர் தவிர்த்தே வந்தனர் . 1989 இறுதி - 1995 வரையிலான பச்சை வரிப்புலி இனி புலிகளின் பச்சை வரிப்புலியினைப் பற்றிக் பார்ப்போம். இச்சீருடையினை அணிந்து திருமதி அனிதாப் பிரதாப் அவர்களிற்கு 1990 ஆண்டின் மார்ச் மாத செவ்வி வழங்கினார், தவிபு தலைவர். மேலும் 1989 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிகழ்படம் ஒன்றில் மணலாறு காட்டில் புலிகளில் பயிற்சி பாசறையில் இச்சீருடை அணிந்த ஆண்பெண் போராளிகள் பயிற்சி எடுக்ப்பதைக் கண்டுள்ளேன். எனவே இது 1990 ஆண்டிற்கு முன்னரே பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. இது தான் வரியுடைகளிலே வெளிவந்த முதலாவது சீருடையாகும். இதற்குத் தொப்பியாக கறுப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர், புலிவீரர். இதில் இருந்த நிறங்களாவன: பச்சை கபிலம் வெள்ளை இந்த சீருடையில் வெள்ளை ம் கொண்ட வரிகள் தடிப்பாக இருந்ததால் அந்நிறமே எடுப்பாக இருந்தது. 'இடது பக்கத்தில் இருந்து முதலாவதாக நிற்பவர் சாள்ஸ் அன்ரனி போராளி கதிரவன் ஆவார் | ஆண்டு: 1994 என்கிறது Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips' (இதே சீருடையினைத்தான் பெண்களும் அணிந்திருந்தனர்) (இதே காலகட்டதில் உபிகை(RPG) அணியும் இந்தச் சீருடைதான் அணிந்திருந்தது) '1991 ஆம் ஆண்டு ஆ.க.வெ. நடவடிக்கையின் பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கிய முன்னேற்ற சமரின்போது கைப்பற்றப்பட்ட மண்ணரணில் உள்ள காவலரணிற்கு கீழே அமர்ந்திருக்கும் கட்டளையாளர்கள் (சேர்ப்பன்(Admiral) சூசை & 'சமர்க்கள நாயகன்' பிரிகேடியர் பால்ராஜ்) இருவரும் அணிந்திருக்கும் சீருடையினை நோக்குக. | படிமப்புரவு: eelamview' ஆனால் இதே காலத்தில் பெண்களின் 'மகளிர் படையணி'யின் ஒரு பிரிவு(unit) கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தது. '1993 ஆம் ஆண்டு வெளியான படம் | இந்தக் கால கட்டத்தில் ஆண்புலிவீரர் ஆரும் இது போன்ற சீருடை அணிந்ததில்லை |படிமப்புரவு: Tamilmaaran' மேற்கண்ட சீருடைக்கான தொப்பியும் அதே நிறத்தில்தான் அணியப்பட்டிருந்தது. கீழ்க்கண்ட படத்தில் அதைக் காண்க:- 'படிமப்புரவு: viduthalaippulikal' ''1993 ஆம் ஆண்டு வெளியான படம் | நாளிதழில் இருந்து எடுத்த படம் எனப்தால் படத்தின் நிறம் கொஞ்சம் மாறி விட்டது. மேலுள்ள படிமத்திலுள்ள நிறமே சரியான நிறமாகும் | 'படிமப்புரவு: viduthalaippulikal' இதே கால கட்டத்தில் தொடங்கி 2002 ஆம் ஆண்டுவரை புலிகளின் படையணியினர் ஒரு விதமான சீருடை போன்ற உடை ஒன்றினை சமர்க்களங்களில் அணிந்து வந்தனர். அதன் படம்: நிறம்:- ஒரு வித பச்சை நிறம் ஒரு வித சாம்பல் நிறம் போன்ற நிறம் இவ்வுடையானது நான் மடலம் மூன்றில் குறிப்பிட்ட அந்த மஞ்சள் நிற மேற்சட்டை போன்றதே. ஆனால் இது அதனினிறு கொஞ்சம் மேம்பட்டது ஆகும். ஏனெனில் 1987 இல் வெறும் மேற்சட்டை மட்டுமே. ஆனால் இக்காலத்தில் மேற்சட்டையோடு அதற்குத் தகுந்த நீளக் காற்சட்டையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மேற்சட்டையில் இரு விதமான நிறங்களில் 4 விதமான தோரணிகள்(patterns) இருந்தன.. 'இவைதான் அந்த நாங்கு விதமான பாங்கங்கள் ஆகும் (முதல் படத்திற்கு நிறமூட்டப்பட்டுள்ளது. அதன் உண்மையான நிறம் அதற்கு அருகில் உள்ள படங்களில் உள்ள சீருடை நிறமே) | 'படிமப்புரவு: google' மேலுள்ள நான்கு பாங்கங்களில் மூன்று பாங்கங்கள் கீழே உள்ளதை நோக்குக:- ஆனால் நீளக்காற்சட்டை ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே இருந்தது. அது ஒரு விதமான கடும் பச்சை ஆகும்(தெளிவான நிறத்திற்கு மேலே முதற் படிமத்தைக்(Image) காண்க) 'நான் மேற்கூறிய பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கொண்ட மேற்சட்டை இப்படிமத்தில் தெரிவதை நோக்குக | படிமப்புரவு: 'google 'நான் மேற்கூறிய பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கொண்ட மேற்சட்டை இப்படத்தில் தெரிவதை நோக்குக | படிமப்புரவு: viduthalaippulikaL' 'இப்படிமத்தில் உள்ள எல்லோரும் நான் மேற்கூறிய உடை அணிந்துள்ளதை நோகுக | படிமப்புரவு: viduthalaippulikaL' 'இவர்கள் இருவரும் நான் மேற்கூறிய உடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: viduthalaippulikaL'' தவிபு தலைவரின் மெய்க்காவலரும் அச்சிருடையினை அணிந்திருப்பதை நோக்குக்கும் போது, இச்சீருடையானது கிட்டத்தட்ட ஒரு பொதுச் சீருடை போன்று எல்லோராலும் அணியப்பட்டிருப்பது தெரியவருகிறது. இதே போன்ற உடையினை கடற்புலிகளும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இக்கால கட்டத்தில் தென்தமிழீழத்தில் தரிபெற்றிருந்த புலிவீரர் வரிப்புலியோடு சிங்களத் தரைப்படையின் உருமறைப்புக் கொண்ட சீருடையினையும் தம் சீருடையாக அணிந்திருந்தனர். 1994 இன் இறுதி/1995 - 1996 வரையிலான பச்சை வரிப்புலி இவ்வரிப்புலிக்கும் முன்னைய வரிப்புலிக்குமான வேறுபாடு யாதெனில் முன்னைய வரிப்புலியில் இருந்த வெள்ளை நிறமானது இவ்வரிப்புலியில் ஒரு விதமான கடும் பழுப்பு (பழுப்பு is not brown.. இந்திய தமிழில் என்னவோ எனக்குத் தெரியாது. கீழே உள்ள நிறம் ஈழத் தமிழில் பழுப்பு எனப்படும்.) நிறமாக காட்சியளித்தது. இச்சீருடைக்கு இவர்கள் அணிந்திருந்த சுற்றுக்காவல் தொப்பி கொஞ்சம் வேறுபாடானது. அது பற்றி நான் மேற் குறிப்பிட்டுள்ள தொப்பி பற்றிய பதிவில் கண்டுகொள்க. 'படிமப்புரவு: google' இவ்வாண்டில் ஆண்களும் பெண்களும் இந்நிறத்திலான சீருடையினையே அணிந்திருந்தனர். 'ஜெயந்தன் படையணியினர் - Troopers of Jeyanthan Brigade' உபிகை அணியினரும் இச்சீருடையே: இக்கால கட்டத்தில் தென்தமிழீழத்தில் தரிபெற்றிருந்த புலிவீரர் வரிப்புலியோடு சிங்களத் தரைப்படையின் உருமறைப்புக் கொண்ட சீருடையினையும் தம் சீருடையாக அணிந்திருந்தனர்:- 'படிமப்புரவு: viduthalaippulikal' 'படிமப்புரவு: viduthalaippulikal' 'படிமப்புரவு: viduthalaippulikal' 1996 ஆம் ஆண்டு அணியப்பட்ட சீருடை இது முந்தைய சீருடையில் இருந்து நிறத்தால் மட்டும் வேறுபட்டது ஆகும். அதாவது முந்தைய சீருடையின் நீலம் மற்றும் பச்சை ஆகியவை நன்கு தேசுவாக்கப்பட்டிருக்கின்றன, இச்சீருடையில். இது ஓராண்டிற்கும் குறைவாகவே அணியப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 1996 இற்குப் பின் இந்நிறத்திலான வரிப்புலிச் சீருடைப் படிமங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. 1997 - 2002 வரையிலான பச்சை வரிப்புலி இக்கால கட்டத்தில் இவர்கள் அணிந்த சீருடையானது முன்னைய இரு சீருடை விருத்துகளைக் காட்டிலும் கொஞ்சம் வேறுபாடானது. இதில் பழுப்பு நிறம் இல்லை. அதற்குப் பகரமாக நன்கு மங்கிய வெள்ளை போன்ற நிறம் இருந்தது. இந்த நிறமே இதில் இருந்த மூன்று நிறங்களில் மிகவும் ஒடுங்கிய நிறமாகும். ஏனைய இரண்டும் இதை விட கொஞ்சம் தடிப்பானவை. மொத்தமாக இச்சீருடை பற்றிச் சொல்ல வேண்டுமானால் இச்சீருடையானது தோற்றத்தில் பார்வைக்கு மங்கியதாக காட்சியளிக்கிறது! ' ஓ.அ.-2 இல் (1997) திட்டத்தை விளக்கும் பிரிகேடியர் தீபன்(இ) & கட்டளை வழங்கும் பிரிகேடியர் ஜெயம்(வ) | நான் கூறிய பச்சை வரியினை இருவரும் அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Pulikalinkural' இக்கால கட்டத்தில் பெண்களும் இதே சீருடையினைத்தான் அணிந்திருந்தனர். இந்த காலகட்டத்தில் இச்சீருடை தவிர்த்து வேறு நிறத்திலான/ பாங்கத்திலான சீருடை அணிந்தோர்:- இம்ரான் - பாண்டியன் படையணியின்… → விக்டர் கவச எதிர்ப்புப் படையணி(1997–2002):- இவர்கள் விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையான நான் மேற் குறிப்பிட்டுள்ள கிடைமட்ட பச்சை வரி கொண்ட சீருடையில் இருந்து வேறுபட்டு நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். இவர்கள் தலையில் சூரியக் காப்பு தொப்பி அணிந்திருந்தனர். (தொப்பி பற்றிய மேலதிக விளக்கத்தை முதல் மடலத்தில் கண்டு கொள்க). இந்நிலைக்குத்தான வரியினை முதன் முதலில் அணிந்தது இப்படையணியினரே. 'ஆடவர் | படிமப்புரவு: viduthalaippulikaL'' (இதே சீருடையினைத்தான் பெண்களும் அணிந்திருந்தனர்) → மயூரன் குறிசூட்டுப் பிரிவு(?-2009) இவர்களும் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். 'புலிகளின் குறிசூட்டுநரும்(Sniper) பொட்டுநரும்(Spotter) | படிமப்புரவு: nitharsanam'' → சிறப்பு உந்துருளி படையணி(?-2002) இக்காலத்தில் இவர்கள் கிடைமட்ட வரியினை அணிந்திருந்தனர். 'படிமப்புரவு:outlookindia' - - - - 2. இக்காலத்திய துணைப்படையின் சீருடை பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை! - - - - வண்ணாளன் உந்துருளி படையணி (?- 05-2004) இவர்கள் பச்சை நிற மட்டு. சீருடையினையே தங்களின் சீருடையாக அணிந்திருந்தனர். 2002 - 18.05.2009 வரையிலான பச்சை வரிப்புலி இது தான் புலிகளின் சீருடைகளின் செந்தரப்படுத்தப்பட்ட காலம் ஆகும். இக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பச்சை வரிப்புலி சீருடையில் மேற்கண்ட இரு வரிப்புலி விருத்துக்களிலும்(version) பயன்படுத்தப்பட்ட ஒரு விதமான நீல நிறம் விடுக்கப்பட்டு அதற்குப் பகரமாக கபில நிறமும், முன்னைய விருத்துக்களில் இருந்த வெள்ளை/மங்கிய வெள்ளை/ஒருவித கபிலம் போன்ற நிறம் விடுக்கப்பட்டு அதற்குப் பகரமாக மஞ்சளும் பச்சையும் கலந்த ஒரு விதமான நிறமும், முன்னைய விருத்துக்களில் இருந்த பச்சை விடுக்கப்பட்டு அதற்கும் பகரமாக இன்னொரு வித பச்சை நிறமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பச்சை வரிக்கோடுகளின் இரு மருங்குகளிலும் சிலும்பியது போன்றதான ஒரு தோரணி இருந்தது. மொத்தத்தில் ஒரு வீரனை நன்கு மிடுக்காக எழுப்பிக் காட்டக்கூடியவாறு இச்சீருடை விருத்து அமைந்திருந்தது. (கீழ்க்கண்ட படத்தில் சீருடையினைக் கண்டு கொள்க) 'ஜெனீவா ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியற்றுறை தலைமையகத்தில் வகை-81 துமுக்கியை(Rifle) ஏந்தி காவலிற்கு நிற்கும் தரைப்புலி வீரர் இருவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Gettyimages'' கீழ்க்கண்ட படிமத்தினை வைத்து வரிப்புலி சீருடையினை அறிந்துகொள்க. → படிமத்தினை நன்கு அண்மையாக்கிப் பார்த்தால் சிலும்பிய தோரணி, வரிப்புலி சீருடை என்ன வகையிலான துணியில் செய்யப்பட்டது, அதன் நிறங்கள் என்னென்ன, தொப்பி எப்படிப்பட்டது, அதன் அளவுகள் என்னென்ன என்பது போன்ற தகவல்களை அறியலாம். 'பூநகரிப் படையணியின் பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணியின் பீகே சூட்டாளார்களில் ஒரு போராளி பயிற்சி நிறைவு நாளான சூலை 13, 2007 அன்று தன்னுடைய பயிற்சிப் பாசறையில் நிற்கின்றார். | படிமப்புரவு: Alamystockphotos இச்சீருடை அணிந்திருந்த 'படையணி'கள்: → சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி → மாலதி படையணி → சோதியா படையணி → ஜெயந்தன் படையணி 'படிமப்புரவு: TamilNet' → பூநகரி படையணி:- 'படிமப்புரவு: அலாமி' → திலகா படையணி → பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி → இது 2008 ஆம் ஆண்டு வன்னியில் பயிற்சி வெளியேறின படையணி. இதனது புய வில்லையினை நோக்கவும். இதன் பெயர் அறிந்தோர் கூறவும். யாழ். செல்லும் படையணி 4.1 படையணி குறிப்பு 2004இற்குப் பின்னர் கீழ்க்கண்ட கடுஞ்சிவப்பு நிறத்திலாலான வரைகவியினை அணிநடை மற்றும் சில முக்கிய விழாக்களின்போது அணிந்திருந்தனர். அதில் வில்லையும் குத்தப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் இதே தோரணியிலான சீருடையினை வேறு தோற்றத்தில் அணிந்தோர்:- 1) கிட்டு பீரங்கிப் படையணி:- இவர்கள் கிடைமட்ட வரி அணிந்திருந்தனர். ஆனால் அதன் மேல் சிங்கள உருமறைப்புக் கொண்ட சன்னத் தகை கஞ்சுகம்(Bullet proof vest) அணிந்திருந்தனர். கஞ்சுகத்தின் முதுகுப் புறத்தில் ஒரு ஏ.கே - 47 அ ஏ.கே - 56 துமுக்கியினை கொளுவியிருந்தனர். காதில் காதடைப்பான்(earmuff) போட்டிருந்தனர். இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இருவரும் தெறொச்சியை(Howitzer) இயக்கினர். 'பெண்கள் பிரிவினர்' 'முன் தெறோச்சியை ஆண்களும் பின் தெறோச்சியை பெண்களும் இயக்குவதை நோக்குக | இருவரும் சன்னத் தகை கஞ்சுகம் அணிந்து காதடைப்பான் அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: viduthalaippulikaL' 'கீட்டு பீரங்கிப் படையணியினர் படைத்தகையின் போது' இவர்களும் படைத்தகையின்போது குட்டிசிறி படையணி அணியும் அதே நிறத்திலான துணியைத்தான் அணிவர். மேற்கண்ட படத்தினையும் கீழ்க்கண்ட படத்தினையும் ஒப்புநோக்குக. 2)ஜோன்சன் மோட்டார் படையணி இவர்கள் மட்டக்களப்பின் ஏனைய படையணிகள் போன்றே 'வெறும் பச்சை' நிறச் சீருடையினையே தம் சீருடையாக அணிந்திருந்தனர். 3) குட்டிசிறி மோட்டார் படையணி (விடுதலைப் புலிகளின் மோட்டார் பிரிவு கிட்டு பீரங்கிப் படையணி தொடங்கப்பட்ட காலத்தில்(1997) அதனுட்பட்ட ஒரு பிரிவாகவே தொழிற்பட்டது. அதன் பின்னர் ஒரு 2000 ஆம் ஆண்டு காலபகுதியில்தான் அது தனியாக ஒரு படையணியாக தொழிற்பட்டது என்பதை கவனத்தில்கொள்க.) கணையெக்கி பெண் போராளிகள் தொடக்க காலத்தில் கீழ்கண்டது போன்ற வெளிறிய பச்சை நிறத்திலான சீருடையினை அணிந்து தலையில் கறுப்பு நிறத் தொப்பியினை அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் கட்டளையாளர்கள் பச்சை வரிப்புலியினையே அணிந்திருந்தனர். கணையெக்கிப் ஆண் போராளிகள் தொடக்க காலத்தில் வெளிறிய பச்சை நிறத்திலான சீருடை அணிந்தது குறைவு. பச்சை வரிப்புலியினையே பெரும்பாலும் அணிந்திருந்தனர். 'ஜெசிக்குறுயி எதிர் சமரின் போது கணையெக்கியை(Mortar) இயக்கும் ஆண் போராளிகள்' 'கணையெக்கியை(Mortar) இயக்கும் பெண் போராளிகள்' ஜெயசிக்குறுயிற்குப் பின்னரான காலத்தில்(ஒரு 2000 ஆம் ஆண்டுக்கு கிட்டவாக) பெண்போராளிகளும் ஆண்போராளிகளும் பச்சை வரிப்புலியினை அணியத் தொடங்கி விட்டனர். இயக்கும்போது அதன் மேல் சிங்கள உருமறைப்புக் கொண்ட சன்னத் தகை கஞ்சுகம்(Bullet proof vest) அணிந்திருந்தனர். காதில் காதடைப்பான்(earmuff) போட்டிருந்தனர். இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இருவரும் கணையெக்கியை(Mortar) இயக்கினர். → முன்னிலை நோக்குநர் அணி(FOT):- அனைத்து சேணேவிப் படையணிகளின்(Artillery Brigades) முன்னிலை நோக்குநரும் பச்சை வரிப்புலியே! இந்த காலகட்டத்தில் இச்சீருடை தவிர்த்து வேறு நிறத்திலான/ தோரணியிலான சீருடை அணிந்தோர்:- 1) இம்ரான் - பாண்டியன் படையணியின்… → விக்டர் கவச எதிர்ப்புப் படையணி(2002–2009) & சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி(2003–2009) :- இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். தலையில் சூரியக்காப்பு தொப்பி அணிந்திருந்தனர். 'படைத்தகையில்(parade) ஈடுபட்டிருக்கும் விக்டர் கவச எதிர்ப்புப் படையணி | படிமப்புரவு: Tamilnet.com'' → சூரன் கவச அணி இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். தலையில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருந்தனர். 2002 இற்கு முன்னர் இவர்கள் கிடைமட்ட வரியே அணிந்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 'படிமப்புரவு: Tamilnet.com' இதன் ஓட்டுநர் ஒரு சாதாரண தகரி ஓடுநர் என்னவெல்லாம் அணிவாரோ அதையே அணிந்திருந்தார். கீழ்க்கண்ட படத்தில் புலிகளின் வகை-55 முதன்மை சண்டைத் தகரியின்(Main battle tank) சூட்டாளர்(Gunner) அணிந்துள்ள தலைக் கவசத்தை காண்க:- → பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு - → சிறப்பு உந்துருளி படையணி (2002/2003–2009) இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் செவிமறை நெகிழ்வான மகுடக்கவி (earflap floppy hat) அணிந்திருந்தனர். இது இவர்களின் சீருடையாகும். → → அதிவேக உந்துருளி சிறப்பு அணி (2004 - 2009 ) இவர்கள் உந்துருளிப் படையணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள் ஆவர். இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்திருந்தனர். 'உண்ணோட்டமிடும்(inspection) தவிபு தலைவர் 'படிமப்புரவு: TamilNet' 'படைத்தகையில்(parade) ஈடுபடும் அதிவேக உந்துருளி அணியினர் 'படிமப்புரவு: TamilNet' ஆனால் வீதிகளில் சுற்றுக்காவலிற்கோ இல்லை களவேலைகளுக்குச் செல்லும் போது உந்துருளி படைஞர் தலையில் தலைச்சீரா அணிந்து உடலில் கறுப்பு Jacket அணிந்து செல்வார். 'ஆழிப்பேரலையின்போது| 'படிமப்புரவு: fb' 2. ராதா வான்காப்புப் படையணி இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்திருந்தனர். அதன் வரியும் நிலைக்குத்தே. 'வான் எதிர்ப்பு ஏவுகணை அணியினன் | மேஜர் சுவர்ணன்' 'ZPU-2 வானூர்தி எதிர்ப்பு சுடுகலத்தால் குண்டுதாரியை(Bomber) சுட இலக்கு வைக்கும் வான்காப்பு வீரன்(Air defence soldier) | படிமப்புரவு: viduthalaippulikal' 3. கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! 1)இந்தப் பிரிவின் பெயர் எனக்குத் தெரியவில்லை இந்தப் புலிமகளின் வில்லையில் தனித்துவமான எந்தவொரு இலச்சினையும் இல்லாமல் விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. - - - - 4. தென் தமிழீழத்தில் இருந்த படையணிகள்:- தென் தமிழீழத்தில் இருந்த ஒருசில படையணிகளின் சீருடை பற்றிய எத்தகவலும் என்னிடம் இல்லை. → வினோதன் படையணி Sap Green நிற சீருடையும் நீல நிற வரைகவியும் அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன. 'வஞ்சகன் ஒருவன் இச்சீருடை அணிந்திருப்பதை காண்க. அவனது பக்கினையும் நோக்குக' - - - - → விசாலகன் & வினோதன் படையணி:- இச்சீருடையினைத்தான் 2005 இற்குப் பின்னாரான காலத்தில் இவ்விரு படையணியினரும் அணிந்திருந்தனர். 2005 முன்னர் இதே சீருடை அணிந்திருந்தாலும் தலையில் வரைகவி(beret) அணிந்திருந்தனர். 'படிமப்புரவு: viduthalaippulikal' - - - - →மதனா படையணி இச்சீருடையானது 2005 ஆம் ஆண்டு வரை அணியப்பட்டது. அதன் பிறகு தொப்பியில் மட்டும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது வரைகவி(beret) விடுத்து தொப்பிக்கு(கீழுள்ள இரண்டாவது படத்தைக் காண்க) மாறினர். ஆனால் உடை நிறத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன. → அன்பரசி படையணி இவர்கள் சாம்பல் நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'இப்படிமம் யாவும் ஒக்டோபர் 2002 ஆம் ஆண்டு மாலதி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளன்று எடுக்கப்பட்டதாகும்' 'சிதைந்த படத்தினை புனரமைத்தபோது இந்த நிறத்தில் வந்தது..' → மதனா படையணி / அன்பரசி படையணி (!?) கீழ்க்கண்ட படத்தில் நிற்கும் போராளிகள் மதனா அ அன்பரசி படையணியினரே. கருணா பிரிவினைக்குப் பின்னர் அன்பரசி படையணியின் சீருடை மாற்றப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன். ஆனால் சரியாக எப்படையணியைச் சேர்ந்தவர்கள் என்பது அறிய முடியவில்லை. 'படவிளக்கம்: 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த முகமாலைச் சமரின் போது களம் காண அணியமாய் பெண்புலிகள்' 'மேற்படத்தில் உள்ளவர்களும் இப்படத்தில் உள்ளவர்களும் வெவ்வேறு நிறத்திலான இடுப்பு பட்டி கட்டியிருக்கின்றனர்.. எனவே இரு வேறு விதமான படையணியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்' தென் தமிழீழ போராளிகள் வடதமிழீழ போரளிகளிடம் இருந்து கொஞ்சம் வேறுபாட்டுடனான அணிநடை செய்வர். அதாவது இவர்கள் வட தமிழீழ போரளிகளைப் போன்று கையை நேரே விசுக்கினாலும் அதனுடன் கூடுதலாக கையை சத்தாராகவும் விசுக்குவர். (கீழ்க் கண்ட படத்தில் இருப்பது போன்று) 'மட்டு-அம்பாறை பெண்கள் படையணியின் அதிகாரிகள் படைத்தகையில்(parade) ஈடுபடுகின்றனர்' - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! மேலே உள்ள கடும் பச்சை நிறத்தோடு சேர்த்து Sap Green போன்ற நிறத்திலான சீருடையினை ஒரு படையணி அணிந்திருந்தது. 'துரோகி கருணாவின் பெண்கள்| கருணா பிரிந்த அன்றோ அடுத்த நாளோ எடுத்த படம் | இப்படத்தில் கறுப்பு மற்றும் கடும் பச்சை நிறத்தோடு Sap Green நிறத்திலான சீருடை அணிந்த இருவர் முன்னால் நிற்பதை நோக்குக' 'துரோகி கருணா & அவனது மெய்க்காவலன் & அவனது பெண்கள் | கருணா பிரிந்த பின்னர் எடுத்த படம் | இப்படத்தில் உள்ள் பெண்கள் நான்கு விதமான சீருடை(வரிப்புலி, கறுப்பு, கடும் பச்சை, Sap Green) அணிந்துள்ளனர் | இப்படத்தில் இடது பக்கத்தில் இருந்து முன்வரிசையில் இரண்டாமராக நிற்கும் பெண்ணின் சீருடையை நோக்குக. விதப்பாக(specific) நோக்க நான் அம்புக்குறியிட்டுள்ள இடத்தில் பார்க்கவும்.' - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இப்படையணியில் ஆண்கள் மட்டுமே பணியாறினர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. இந்த படையணியைச் சேர்ந்தவர்கள் 2004 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கீழ்க்கண்ட நீல நிறத்திலான வரைகவியினை அணிந்திருந்தனர். 'இப்படம் ~2002/3 ஆண்டைச் சேர்ந்தது' 2004 இற்குப் பிறகு இப்படையணி பற்றி எந்தவொரு தகவலும் இல்லை! - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'கிழக்கில் இருந்த ஒரு உபிகை*(RPG) படையணி படைத்தகையில் ஈடுபடும் காட்சி | இப்படம் 2004 ஆம் ஆண்டிற்கு முந்தையது' *உபிகை - உந்துகணை பிலிறுந்திய கைக்குண்டு - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'படைத்தகையில் ஈடுபடும் ஆண் & பெண் போராளிகள்' மேற்கண்ட படையணியைச் சேர்ந்தவர்கள் 2004 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கீழ்க்கண்ட நிறத்திலான தொப்பியினை அணிந்திருந்தனர். ஆனால் உடை நிறத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. 'படைத்தகையில் ஈடுபடும் போராளிகள் | இப்படம் 2004 ஆம் ஆண்டிற்கு முந்தையது | இவர்கள் இக்காலத்தில் சிங்களத்தின் தரைப்படை உருமறைப்புக் கொண்ட செண்டாட்டத் தொப்பியினை(Baseball cap) அணிந்திருந்தனர்.' 'மேற்குறிப்பிட்டுள்ள சீருடையினை அணிந்துள்ள ஒரு புலிவீரன்ர். இப்படம் நான்காம் ஈழப்போரில் எடுக்கப்பட்டதாகும் | படிமப்புரவு: PULT' 'இப்படையணியைச் சேர்ந்தவர்களும் பச்சை நிறச்சீருடை அணிந்தோரும் ஒன்றாக நிற்கும் படிமம் | கருணா துரோகி ஆனதிற்குப் பின் எடுக்கப்பட்ட படிமம் | படிமப்புரவு: கூகிள்' - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இப்படையணியைச் சார்ந்தவர்களின் சீருடையானது சிறீலங்கா தரைப்படையின் சீருடையினை ஒத்த தோரணியிலானதாக இருந்தது. தலையில் பச்சைநிற சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்திருந்தனர். இவர்களின் அதிகாரிகள் கடுஞ்சிவப்பு நிறத்திலான வரைகவியினை அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன. 'தென் தமிழீழத்தில் நடந்த நிகழ்வொன்றில் பெண்போராளிகள் இருவர் அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 'சிங்கள படைத்துறைச் சீருடையினை தம் படையணிச் சீருடையாக அணிந்த பெண்ணொருவர் நடுவில் நிற்பதை நோக்குக. | அவரைச் சுற்றி இருநிறங்களிலான சீருடை அணிந்தோர் கணையெக்கியுடன்(mortar) நிற்பதை நோக்குக ' 'நான் அம்புகுறியிட்டுள்ளோர அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 'இதில் நான் அம்புக்குறியிட்டுள்ளவர்கள் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | 55 வது பயிற்சி முகாமில் இருந்து 400 ஆண்கள் போராளிகள் மற்றும் மட்டக்களப்பின் 30 வது பயிற்சி முகாமில் இருந்து 300 பெண் போராளிகள் வெளியேறியதைக் குறிக்கும் விழா வியாழக்கிழமை தவிபு கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பிலுள்ள தரவை மத்திய பயிற்சி பாசறையில் நடைபெற்றதைக் காட்டும் படம். | படிமப்புரவு: தமிழ்நெட்' ''இடது பக்கத்திலிருந்து முதலாவதாக அமர்ந்திருப்பவர் - சிங்கள தரைப்படையின் சீருடை போன்ற சீருடை அணிந்துள்ளவர் - மட்டக்களப்பைச் சேர்ந்த படையணிப் போராளி. இவர் அணிந்துள்ளதுதான் மேற்கூறிய சீருடை ஆகும்.'' - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இவர்கள் அணிந்திருந்த சீருடையானது நான் மேலே கூறியிருக்கும் சிறீலங்காத் தரைப்படையின் சீருடையினை ஒத்ததாக இல்லாமல் அதிலிர்நுது கொஞ்சம் வேறுபட்டதாக காணப்படுகிறது. இதை அணிந்தவர்கள் பற்றிய விரிப்புகள் ஏதும் இல்லை. இவ்வகையிலான சீருடையின் சிதைந்த இரு படிமங்கள்தான் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். அதை வைத்து இதனது தோரணியினை அறியவும். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன. 'கருணாவின் மெய்க்காவலர் அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக' - - - - → இளங்கோ படையணி இப்படையணியின் பெயரையும் கீழ்க்கண்ட சீருடை அணிந்தோரே இப்படையணியினர் என்ற தகவலையும் நிதர்சனத்தின் திருகோணமலை பற்றிய ஒரு நிகழ்படக்(video) கோப்பில் இருந்தே எடுத்தேன். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'பெண்கள்' 'ஆண்கள்' 'மேற்கண்ட இரு படத்திலும் இருப்பது போன்ற சீருடை அணிந்தோர் இப்படத்திலும் உள்ளதைக் காண்க' 'மாவீரர் துயிலுமில்லம் ஒன்றில் பச்சை வரிப்புலி, கடும்பச்சை நிறச் சீருடை, ஈ ஒரு வித கறுத்த சீருடை ஆகியவற்றை அணிந்து செல்லும் போராளிகள்' கீழ்க்கண்ட படிமத்தில் இச்சீருடை நன்கு தெளிவாகத் தெரிவதை நோக்குக:- 'படிமப்புரவு: நிதர்சனம்' - - - - → பெயர் அறியில்லா படையணி... இப்படையணியைச் சேர்ந்தவர்கள் நான் கீழே சுட்டியுள்ளது போன்ற நிறத்திலான(ஒரு விதமான கபில நிறம்) சீருடையினை அணிந்திருந்தனர். இவர்கள் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'இடது முதலாவதாக நிற்கும் சிற்றரையர்(மேஜர்) விதுரா அவர்களும் இந்நிறத்திலான சீருடையினையே அணிந்துள்ளதை நோக்குக' 'வஞ்சகன் கருணா பிரிந்த அன்று மட்டுவில் ஒரு தமிழ் வஞ்சகன் ஒருவன் இந்நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக.' 'மே 28, 2003 அன்று திருமலையில் இருந்த சூனியக் கோட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம் | நான் அம்புக்குறியால் சுட்டியுள்ளவர் அந்நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 'மே 28, 2003 அன்று திருமலையில் இருந்த சூனியக் கோட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம் | நான் அம்புக்குறியால் சுட்டியுள்ளவர் அந்நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 5. விடுதலைப்புலிகளின் ஆய்த ஆராச்சி மற்றும் விளைவிப்புத் தொழிற்சாலைகளில் பணி புரிவோர் அணியும் சீருடை. இதை ஆண்களும் பெண்களும் அணிவர். சாம்பலும் Pink கலந்த நிறம் போன்ற நிறத்திலான சீருடை இது! 6.பெயர் தெரியா படையணி இவ்வீரர் அணிந்துள்ள சீருடையினை நோக்குக. இது ஒரு விதமான நீலத்தில் உள்ளது. ஆனால் இப்படையணியின்/பிரிவின் பெயர் எனக்கு தெரியவில்லை. இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. இச்சீருடையினை அணிந்தோரின் படிமம் முதல் தடவையாக என்ற தொலைக்காட்சியில் 2006 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. 'வவுணதீவு முன்னரங்க நிலை | சூலை 8, 2006 ' 'இது 20-12-2008 அன்று வன்னிச் சமர்க்களத்தில் வகை - 85 12.7mm சுடுகலனை இயக்கும் இரு புலிவீரர்களும் இந்நீல நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 'அதே போன்ற நீலச் சீருடை அணிந்து ஒரு புலிவீரர் (கஞ்சுகம்(vest)அணியாமல் நிற்பவர்) நிற்பதை நோக்குக. | அவருக்கு அருகில் நிற்கும் இருவரும் (கஞ்சுகத்தோடு நிற்போர்) ஊரகத் தொண்டர் சிறப்புப் படையினர் ஆவர்' - - - - 7) வேவுப்புலிகள்: இவர்கள் ரெக்கி(வேவு) எடுப்பதற்காக செல்லும் போது மட்டும் சிங்கள தரைப்படையின் உருமறைப்பு ஆடை அணிந்து, காலில் நெடுஞ்சப்பாத்து(boots) அணிந்து, தலையில் விடுதலைப்புலிகளின் சடாய்மா முக்காடு(ghilie hood) அணிந்து செல்வர். இலக்கை நெருங்கியதும் குழைகள் கட்டிச் செல்வர். சில பேர் சடாய்மா உடுப்பும்(Ghilie suit) அணிவர். மற்றும்படி இவர்களின் சீருடையும் பச்சை வரிப்புலிதான். 'சிறீலங்கா தரைப்படையின் சீருடை அணிந்து ஊடுருவிச் செல்லும் வேவுப்புலிகள் | படிமப்புரவு: நிதர்சனம்' 'தலையில் விடுதலைப்புலிகளின் உருமறைப்பு கொண்ட சடாய்மா முக்காடு உள்ளதை நோக்குக | படிமப்புரவு: நிதர்சனம்' - - - - 9)படப்பிடிப்பாளர்: இச்சீருடையானது ஒற்றை நிறத்திலானது ஆகும். இது ஒரு விதமான மங்கிப்போன கபில நிறம் ஆகும். இச்சீருடையினை அணிந்து படவத்தோடு படப்பிடிப்பாளர்கள் நிற்கும் படிமங்கள் கீழ்க்கண்டதொன்றைத் தவிர்த்து வேறேதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை. 'இந்நிழற்படமானது பேரரையர்(Col) ராஜு அவர்களின் வீரவணக்க நிகழ்வின்போது எடுக்கப்பட்டது ஆகும். 2002' உசாத்துணை: செ.சொ.பே.மு. முற்றுமுழுதாக எனக்குக் கிடைத்த படங்களின் காலங்களை வைத்தே இவற்றைக் கணித்து எழுதியுள்ளேன். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.