Sign in to follow this  
நிலாமதி

துல்லியமாக கணிப்பீடு செய்பவர்கள் ஆண்களா பெண்களா (படித்து சுவைத்தது சிரிக்க மட்டும் )

Recommended Posts

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து ,

இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்

கிடைக்கவில்லை.

-

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,

‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,

ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)

போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க

சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.

-

என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை

கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

-

எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே

கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி

விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்

மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய்

தின்னுட்டு , பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்

போறீங்க!

-

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே

வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆபிஸ்

விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு

வர்றீங்க!

-

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி

ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு, எருமை மாடு

மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

-

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!

இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க

குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே

ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்

சொல்லி முடித்தாள் மனைவி.

-

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு

வச்சாளாம் மனைவி..!

-

=====================================================

நன்றி: கே.பாக்யராஜ் (பாக்யா வார இதழ்)

Edited by நிலாமதி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தனக்கு ஆறறிவு எனக்கூறும் மனிதன் ஐந்தறிவை விட கீழே தனது வாழ்நாளில் கணிசமான, முக்கியம் வாய்ந்த நேரத்தை கழிக்கின்றான்.

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நிலாமதியக்கா.

Share this post


Link to post
Share on other sites

அந்த மனைவியாகிய பெண் மிருகங்களை கவனிச்ச அளவிற்கு கணவனை கவனிச்சிருந்தா.. ஏன் இந்த நிலமை வரப் போகுது. :lol:

அதுசரி பெண்களுக்கு ஏன் ICT skill குறைவு..! இந்தப் பதிவில எத்தினை.. codes.. அவற்றின் பாவனையே இல்லாம.. சும்மா...??!

அதுமட்டுமல்ல.. இன்று.. யாழ் வேம்படி மகளிர் கல்லூரி.. யாழ் இந்து மகளிர் கல்லூரி இணையத்தளங்களுக்குப் போனன்.. பரீட்சை முடிவுகள் பார்ப்பமென்று.. ஏன் தான் அதை வைச்சிருக்காங்களோ புரியவே இல்ல.....???! பெரிசா ஆளுக்கொரு ICT ஆய்வுகூடம் வைச்சிருக்காங்க..! :icon_idea:

http://www.vembadi.sch.lk/ (இவைக்கு ஆங்கிலம் மட்டும் தான் வரும்.) :lol:

http://www.jhlc.lk/ (இவை இன்னும் நித்திரையால எழும்பல்ல..!) :D

ஆனால் இந்துக் கல்லூரி.. ஆங்கிலம்.. தமிழ் என்று பின்னுறாங்க. அதோட செய்திகள் எல்லாம் உடன உடன வருகுது..! அவங்களும் படிக்கிற பசங்க தானே..!

http://www.jhc.lk/online/

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

பதிர்வுக்கு நன்றி நிலாக்கா.

Share this post


Link to post
Share on other sites

பதிர்வுக்கு நன்றி நிலாக்கா.

Share this post


Link to post
Share on other sites

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்....

முதல் ஆரியக் குழந்தையை இப்படித்தான் நமது திராவிட குழந்தைகள் வியந்து பார்த்திருப்பார்கள்.

558534_260192610736340_100002368083689_605086_2039182655_n.jpg

Share this post


Link to post
Share on other sites

பலர் இப்படிதான், நன்றி பகிர்வுக்கு அக்கா

Share this post


Link to post
Share on other sites

நான் வெளிநாடு வந்து ஒரு நாட்டில் என்றுமே என்றுமே கறுப்பரையோஇ எங்களைப்போல் பிறவுன் நிறத்தையோ காணாத தேசம். வீதியில் நடந்து சென்றபோது என்னையும் என் நண்பரையும் அங்குள்ள மக்கள் ஒரு ஆச்சரியத்துடன் தான் பார்த்தார்கள். சிலர் வெருண்டு ஓடினார்கள். நாங்கள் போகும் வழி பற்றி வினவ அணுகியபோது இரண்டடி எட்டி நடந்தார் ஒருவர். நாங்களும் இரண்டடி எட்டி வைத்தபோது அவர் ஓட்டம் பிடித்தார். நாங்கள் போய் மறையும் வரை ஒழித்து நின்று பார்த்தவர்களும் உளர்,

எனவே யாழ் அன்பு இதை பரிகசித்து எழுதக்கூடாது. வித்தியாசமாக ஒரு பொருளைக்கண்டால் எல்லோரும் வியப்பது சாதாரணம். ஆனால் அவர்கள் ஓடவில்லை. கூடிநின்று வேடிக்கை பார்க்கின்றார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது. இதுவும் 1983களில் தான்

Edited by Raj Logan

Share this post


Link to post
Share on other sites

அருமையான பதிவு!! காலம் மாறவில்லை மனிதன் தான் மாறிவிட்டான்..

நன்றி நிலாமதி அக்கா...

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this