Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

02-04 வீரச்சாவை தழுவிக்கொண்ட 25 வது ஆண்டு மீட்க்கும் நினைவுகள் ....... !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

25 வது ஆண்டு மீட்க்கும் நினைவுகள் ....... !!

543.jpg

வீரப்பிறப்பு: 14.11.1967

வீரச்சாவு: 02.04.1987

இயற்பெயர்: ஞானசேகரம் லக்ஸ்மீகரன்

இயக்கப் பெயர்: வீரவேங்கை பாலச்சந்தர்

1967 கார்த்திகைமாதம் 14 ம் திகதி தாய்மண்ணில் உதித்திட்ட உங்களுக்கு தாய்தந்தை சூடியபெயர் லக்ஸ்மீகரன் நீங்கள் வளர்ந்ததோ ஒருபுறம் சோலையாலும் மறுபுறம் கடலாலும் சூழ்ந்த பிரதேசமான வெற்றிலைகேணியில், பால்போன்று வெள்ளை நிறம் கொண்ட எங்கள் சொந்தமண்ணில் நீங்கள் என் கை விரல் பிடித்து எனக்கு எழுதி பழக்கியத்தை என்னால் இன்று மறக்க முடியவில்லை ஆனால் இன்று தனிமையில் பேப்பரில் பேனா பிடிந்து எழுத விட்டுவிட்டீர்களே!

உங்களைப்பற்றி மிக சிறு வயதில் இருந்தே எல்லா துறைகளிலும் திறமையாக செயல் ஆற்றி வந்தீர்கள் ஆரம்பகல்வியை வெற்றிலைக்கேணி பரமேஸ்வராவிலும் பின்னர் தனது மேல்படிப்புக்காக தந்தையின் பிறந்த இடமான வல்வெட்டித்துறைக்கு சென்று சிதம்பராகல்லுரியில் கல்வியை தொடர்ந்தார் அந்தகாலப்பகுதியில் சிங்கள வெறியர்களின் அடாவடித்தனமும் அட்டூழியமும் 1983 இல் நிகழ்ந்த கலவரம் தலைவிரித்து ஆடியது அந்தவேளையில் இவர் மனதை வெகுவாக பாதித்தது சில சம்பவங்கள்.

அப்பொழுது இவரின் எண்ணங்களில் நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு நாடு வேண்டும் என்ற கோட்பாட்டுடனும் இருந்த இவருக்கு அங்கு சில போராளிகளுடன் தொடர்பை ஏற்படத்தி கொண்டார் அதன் நிமித்தமாக மீண்டும் வெற்றிலைக்கேனிக்கு சென்றிருந்தார் இவருக்கு வன்னிக்கும் வடமராட்சிக்கும் இடையேயான பாதைகள் நன்கு தெரிந்தமையினாலும் போராளிகளுக்கு தங்கி செல்வதற்கு வீடு தேவைப்பட்டதினால் இவர் தனது வீட்டையே அவர்களுக்கு கொடுத்து தேவையான உதவிகளை இவரும் இவரின் குடும்பத்தாரும் செய்து வந்தனர்.

அதன்பின் இங்கிருந்துதான் இந்தியாவுக்கு பயிற்சிக்காக அதிவேக படகுமூலம் இளைஞர்களை அனுப்புவதுண்டு அதற்க்கான வேலைகளையும் போராளிகளுடன் இணைந்து இவரும் இவர்குடும்பத்தினரும் அந்த ஊரவர்களும் இணைந்தே செய்துவந்தனர்.

இப்படித்தொடர்ந்து இளைஞர்களை அனுப்பிக்கொண்டு இருக்கும் போது இவர் மனதுக்குள் நான் ஏன் இந்தியா சென்று பயிற்ச்சி எடுத்து ஒரு முழுநேர போராளியாக வரக்கூடாது என்ற எண்ணம் தோன்றவே அவர் தன் தாய் தந்தையிடம் சென்று தானும் பயிற்ச்சிக்கு செல்லப்போவதாக தெரிவித்தார் அவ்வேளையில் அவரின் பெற்றோர் ஏற்க்கனவே உன் உடன்பிறந்த அண்ணனும் மாமனும் முழுநேர போராளிகளாக இருக்கின்றார்கள் இருத்தாலும் பரவாயில்லை சென்றுவா என வழியனுப்பினார்கள்.

இந்தியா சென்ற இவர் ஆறாவது பயிற்சிபாசறையில் பாலச்சந்தர் என்னும் பெயர் சூட்டப்பட்டது,

பயிற்சி முடித்த இவர் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்டதினால் இவர் பெண்களின் முதல் பயிற்சிப்பாசறையில் இந்திரன் மாஸ்ரருடன் உதவி பயிற்ருனராக இருந்து வரும் வேளையில்

தலைவர் அவர்கள் அங்கு வந்திருந்தார் அந்த வேளையில் அங்கு நடந்த துப்பாக்கி சூட்டு பயிற்சின் போது இவரின் குறிதவறாமல் குறிபார்த்து சுடும் துப்பாக்கி சூட்டில் மிகவும் திறமை மிக்கவராக இருந்தமையாலும் தலைவர் அவர்கள் தனது மெய்பாதுகாவராக நியமித்துருந்தார்.

சிலகாலங்களின் பின்பு தாயகம் திரும்பிய இவர் மன்னாரிலும் யாழ்மாவட்டத்தில் சிலதாக்குதல்களில் பங்கு பற்றி இருந்தார் குறிப்பாக (ரெலிக்கொமினிக்கேசன்) அடங்கும்.

சித்திரை மாதம் முதலாம் நாள் நள்ளிரவின் பின்னர் வல்வெட்டித்துறை மயிலியதனை பகுதியில் அமைந்த மினி முகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் வலது காலிலும் இடுப்புபகுதியிலும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்.

பின்னர் இவரையும் இவருடன் காயங்களுக்குள்ளான போராளிகளையும் இறந்தவர்களையும் களத்தில் இருந்து அப்புறபடுத்தி மறுநாள் காலையில் இவருடன் ஏனைய காயங்களுக்கு உள்ளான போராளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் வல்வைவெளியில் வைத்து சிறிலங்கா வான் படையின் உலங்குவானூர்தி நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவை தழுவிக்கொண்டார். இவருடன் வீரச்சாவை தழுவிக்கொண்ட கப்படன் முரளி, லெப் பாபு, 2 ம் லெப் சேவியர், விந்தன், சங்கர், விடுதலை, ஆகியோருக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கம்.

Edited by தமிழரசு
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காய் தம்முயிரை ஈந்த அத்தனை மாவீரர்ச் செல்வங்களுக்கும் வீரவணக்கங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலச்சந்திரன் மற்றும் ஏனைய வீர வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.