Jump to content

சொல்லு சொல்லு!


Recommended Posts

மழை வரும்போதுதான்

குடையை தேடுவான்!

மூச்சு முட்டும்போதுதான்

யன்னல் இருப்பதை நினைப்பான்!

நாளை எப்பிடி- சிரிக்க

வழியென்று எண்ணி

இன்றைய பொழுதை

அழுதே- தொலைப்பான்!

உழைக்கும் காலத்தில்

சேமிக்க நினையான்!

உதிரம் செத்து போனதொரு

காலத்தில்- காசை எண்ணி

தேம்பி தேம்பி அழுவான்!

படிக்கும் காலத்தில்

சீ என்ன வாழ்க்கை

என்று சினப்பான்!

காலம் முடிந்தால்

ஐயோ இனி என்னாகுமோ

என் வாழ்க்கை என்று அழுவான்!

அடை மழை பெய்யும் நாளில் -

நீரை சேர்த்து வைக்க நினைக்கான்!

அனல் வீசும் கோடை வந்தால்

குடத்தை தூக்கி கொண்டு

ஊர் ஊராய் திரிவான்!

போர் செய்யும் வீரருக்கு

ஐந்து சதம் கொடுக்கான்!

ஊரெலாம் - குண்டுவீச்சில்

ஒருமூலை சென்றொதுங்கினால்

தமிழர்புனர்வாழ்வு கழகம்

தனக்கு ஒன்றும் செய்யலையென்று

தரைமண்ணை அள்ளி

தூற்றி சபிப்பான்!

இவன் சரியில்லை !

அவன் சரியில்லை !

என்றே பேசி காலம் கழிப்பான்!

நீ -சரியில்லை என்று யாரும் சொன்னால்

நீட்டி முழக்கி -வியாக்கியானம் சொல்வான்!

தவறுகளிருந்து தப்பித்து கொள்வான்!

யாரிவனோ?

உனக்கு தெரியுமா?

என்னை நானே கேட்கிறேன்

எனக்கு தெரியுமா?

உனக்கு தெரிந்ததை சொல்லு சொல்லு!

கேட்கிறேன் - அதில்

நீயும் இருப்பாய் - நானும் இருப்பேன்! 8)

Link to comment
Share on other sites

வர்ணன் அண்ணா காதல் கவிதை மட்டும் தான் எழுதுவீங்கள் எண்டு நினைத்தன் இனிய ஏமாற்றம்

நல்ல கவிதை சுயநலம் பிடித்தவர்களை மற்றவர்களில தேடாமல் நம்மிலயே இக்குணங்களும் இருக்கு எண்டு சொல்ல உங்களுக்கு தைரியம் கூடத்தான் போல இருக்கு

Link to comment
Share on other sites

வித்தியாசமாக சொல்லி இருக்கின்றீர்கள். உங்கள் எண்ண ஓட்டம் இனிதே இலக்க்னை அடைய வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

யதார்த்தம் பேசும் உங்கள் கவிதை அருமை.. வாழ்த்துக்கள்:

Link to comment
Share on other sites

வர்ணன் கவிதை அருமை. எல்லோருமே ஓரு சமயத்தில் சுயநலம் உள்ளவர்களாய் தான் இருக்கின்றோம். உண்மையான வரிகள். வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் அண்ணா இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு....எனக்கும் காதல் கவிதை நல்லா பிடிக்கும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஃஉஒடெ="Kஅல்கி"]வர்ணன் அண்ணா இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு....எனக்கும் காதல் கவிதை நல்லா பிடிக்கும்......[/ஃஉஒடெ]

மன்னிக்கவும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது.குறிப்பாக நாளை எப்படி சிரிக்க வழியென்று என்னி இன்றைய பொழுதை அழுதே தொலைப்பான்.என்ற வரிகள் யதார்தமானது.பாராட்டுகள்.வர்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் கவிதை மிக நன்றாக இருக்கின்றது யதார்த்தமாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வர்ணன் கவிதை நல்லா எழுதுறீங்க ,இந்த கவிதையும் நன்று, இப்ப யாழ்ல உங்க கவிதைகளை கூட பாக்க கூடியதா இருக்கு ... தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துக்கள் ... ! :P

Link to comment
Share on other sites

நன்றி ரசிகை-ரமா- கல்கி- (சகோதரம் - காதல் கவிதை எழுத ஆசைதான் - பட் - வையுறாங்களே - உனக்கு வேற வேலையே இல்லையா என்கிறமாதிரி :P )

நன்றி- தாரணி-சஜீவன் -கவிதன் - அனிதா! 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.