-
Tell a friend
-
Topics
-
Posts
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 07, கார்த்திகை 2007 இலங்கை அரசாங்கமே கருணாவுக்கு ராஜதந்திரிகளின் கடவுச்சீட்டை வழங்கியது - சண்டே லீடர் சர்வதேச ராஜதந்திர நியமங்களை மீறி, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்த துணைராணுவக் குழுவின் தலைவரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இங்கிலாந்திற்குத் தப்பிப் போவதற்கு போலியான கடவுச்சீட்டினை ராஜதந்திரிகளின் அந்தஸ்த்துடன் வழங்க பிரித்தானிய உயர்ஸ்த்தானிகரலாயத்தை இலங்கை பணித்தது என்று சண்டே லீடர் செய்திவெளியிட்டிருக்கிறது. - "இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பணிப்புரையின்பேரில் இந்த ராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டினை சட்டப்படியான இங்கிலாந்து அனுமதி விசாவுடன் கோகில குணவர்த்தன எனும் போலியான பெயரில் வழங்க பிரித்தானிய உயர்ஸ்த்தானிகராலயம் முன்வந்ததாகத் தெரிகிறது". மேலும் இதுபற்றி அப்பத்திரிக்கை கூறுகையில், இங்கிலாந்தில் நடைபெறவிருந்த காலநிலை மாற்ற மாநாடு ஒன்றிற்காக இலங்கை சார்பாக பங்குபற்றும் குழுவினரின் பெயர்ப்பட்டியலை இங்கிலாந்து உயர்ஸ்த்தானிகராலயத்திற்கு அனுப்பிவைத்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இவர்கள் அனைவருக்கும் ராஜதந்திரிகளின் அந்தஸ்த்துடனான கடவுச்சீட்டுக்களை சட்டரீதியான நுழைவு விசாவோடு தயாரிக்குமாறு கேட்டிருந்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட பெயர்ப் பட்டியலிலேயே கருணாவின் போலியான பெயரான "கோகில குணவர்த்தன" எனும் பெயரும் உள்ளடங்கியிருந்தது என்று தெரியவந்திருக்கிறது. குணவர்த்தன என்கிற பெயரோடு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டினை பாவிக்கப்போகும் நபர் சூழல் விவகார அமைச்சரான சம்பிக்க ரணவக்கவின் அமைச்சின் கீழ் பணிபுரிபவர் எனும் அடிப்படியிலேயே அனுப்பப்பட்டிருந்தது. கோகில குணவர்த்தன எனும் போலியான பெயருடன் ராஜதந்திர கடவுச்சீட்டில் பயணம் செய்த கருணா செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் வந்திறங்கியதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதேவேளை கடந்தவாரம் லண்டனில் பொலீஸாரும், குடியேற்ற அமைச்சகத்தின் அதிகாரிகளும் நடத்திய திடீர் சோதனையில் போலியான கடவுச்சீட்டுடன் லண்டன் வந்திருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. கருணாவின் மனைவியும் பிள்ளைகளும் ஏற்கனவே லண்டனிற்கு வந்துவிட்டிருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
-
By பிழம்பு · பதியப்பட்டது
கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி நாட்டு மருத்துவர் ஒருவர் வழங்கிய 'பாணி' ஒன்றை அருந்திய இலங்கை ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (திங்கட்கிழமை) அவர் உறுதிப்படுத்தியுள்ளார். பியல் நிஷாந்த உட்பட இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கொரோனா தொற்றுக்கு ஆகியுள்ளனர். அமைச்சர் வாசுதேச நாணயகார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் ஏற்கனவே கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஞாயிற்றுக்கிழமையன்று (17ஆம் திகதி) அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றிருந்த நிகழ்வொன்றிலும், கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்திருந்த நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டார். நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டார என்பவர் கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி தயாரித்த பாணியை, சில வாரங்களுக்கு முன்னர் ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அருந்தியிருந்த நிலையிலேயே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது மருந்தை அருந்தினால் வாழ்நாளில் கொரோனா பாதிப்பு ஏற்படாது என, அதனைத் தயாரித்த தம்மிக்க பண்டார கூறியிருந்தார். நாட்டு மருத்துவர் தயாரித்த கொரோனா மருந்து: பருகிய அமைச்சருக்கு தொற்று - BBC News தமிழ் -
By பிழம்பு · பதியப்பட்டது
கிளிநொச்சி, சிவபுரம் கிராமத்து வீதிகள் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் மிகமோசமாகப் பழுதடைந்து காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் சிவபுரம் கிராமத்தில், அங்குள்ள மக்கள் தினமும் போக்குவரத்துச் செய்யும் வீதிகள் கவனிப்பாரற்ற நிலையில் நீண்டகாலமாகத் திருத்தியமைக்கப்படாது குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாகவும் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றன. இவ்வீதியால் வெள்ளைச் சீருடையுடன் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் முதற்கொண்டு பெருமளவான மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியபடியே பயணிக்கின்றார்கள். சிவபுரம் கிராமத்தில் 380 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற போதிலும் அரசினது கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் போது இக்கிராமம் உள்வாங்கப்படாது தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கிராம வாசிகளால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது. சிவபுரம் கிராமத்து வீதிகளைத் திருத்தியமைப்பதற்காக என பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பிரதேச சபையினர் இக்கிராம வீதிகளைக் கடந்த காலங்களில் பல தடவைகள் பார்வையிட்டும் வீதிகளை அளவீடு செய்தும் சென்றுள்ளனர். ஆனால் இன்னமும் இக்கிராமத்து வீதிகள் திருத்தியமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாகவும் கிராமத்து வீதிகளைத் திருத்தியமைப்பதற்கான திட்டத்திற்கு என்ன நடந்தது? அது எங்கு சென்றது? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் அனர்த் முகாமைத்துப் பிரிவினது கடந்த காலக் கலந்துரையாடல்களில் பரந்தன் சிவபுரம் கிராமம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றமை தொடர்பிலும் அக்கிராமத்திற்கு சீரான வடிகாலமைப்புக்களை ஏற்படுத்தி கிராமத்து வீதிகளைத் திருத்தியமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துமும் முன்வைக்கப்பட்டுக் கலந்துரையாடித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிவபுரம் கிராமத்தில் குறைவான நிலப் பிரதேசத்திற்குள் பெருமளவான மக்கள் செறிந்து வாழ்கின்றமையைக் கருத்திற்கொண்டு இக்கிராமதின் வீதி அபிவிருத்தி, வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட சகல அபிவிருத்திகளையும் முன்னெடுத்து ஓர் மாதிரிக்கிராமமாக அமைப்பதற்கான முன்மொழிவுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட போதிலும் இன்றுவரை வீதி அபிவிருத்தி கூட இன்றி அரசினது அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட கிராமமாகவே சிவபுரம் கிராமம் காணப்படுகின்றது. சிவபுரம் வீதிகளால் தினமும் பெருமளவான மக்கள் பெருஞ்சிரமங்களின் மத்தியிலேயே பயணிக்கின்றனர். அவர்களில் பாடசாலைக்குச் செல்லும் கிராமத்து மாணவச் சிறார்கள் வெள்ளைச் சீருடையுடன் பல சிரமங்களை எதிர்நோக்கிய வண்ணமே சேறும் சகதியும் உள்ள வீதிகளால் பயணிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. பொறுப்பு வாய்ந்த துறைசார் உரியவர்கள் கவனம் செலுத்தி பரந்தன் சிவபுரம் கிராமத்து வீதிகளையும் உரியமுறைப்படி திருத்தியமைத்து மக்கள் சிரமமின்றிப் பயணிக்க ஏற்ற நடவடிக்கை எடுத்து உதவுமாறு கிராம மக்கள் கோரி நிற்கின்றனர். கிளிநொச்சி சிவபுரம் கிராமத்து மக்களின் அவலம் | Virakesari.lk -
By goshan_che · Posted
திண்ணையில பாக்கேல்லையோ… மறுமை வரை போகுமாம்🤣
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.