• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

அபராஜிதன்

என் மகன் நல்லவன்

Recommended Posts

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்

உன்னை,

தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்

தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட

என் கண்ணங்கள்

இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை

பிச்சை கேட்டு

பல நாட்கள் உன்னிடம்

மண்டியிட்டிருக்கிறேன் ,

என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்

என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய

என் கன்னத்து தழும்பை

இன்னமும் முத்தமிடுகிறாள்

உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை

மறைத்து,மடித்து கட்டி

வேட்டி வாங்கும்

பணத்தில் வாங்கியதுதான்

உன் வெள்ளி பாலாடை...!

என் அன்பு மகனே..!

முதல் முறை

நீ பள்ளி செல்லும்போது

உன்னை மருத்துவனாகதான்

பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது

கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை

பார்த்தபோதுதான்,

உயிருடன் மோட்சமான

முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது

என் அன்பு மகனே...!

ஓர் இரவு,

வீட்டில் படுத்துவிட்டு

விழித்து பார்த்தால்,

நானும் உன் தாயும்

கிடந்தது

"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்

உதைக்க காத்திருந்த

மார்பில்,

நீ உதைத்ததெப்படி..?

என் செல்ல மகனே..!

என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்

கொடுத்த பால்

விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய

உன் எச்சில்

அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்

கொலைகாரன் அல்ல...

உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை

என் உடல் தாங்கும்...

என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்

உன் தாய்

தாங்கமாட்டாள்...!

பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!

வாரம் ஒருமுறை

என் பேரப்பிள்ளைகளை

கூட்டி வா..,

இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று

அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",

என்று கூறி எங்களை

உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து

உன் பிள்ளைகள்

வளர்ந்தால்தான்,

நீ எங்கள் நிலைக்கு

வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்

என் செல்ல மகனே..!!!

அனாதையாக எங்களை

விட்டுவிடாமல்,

முதியோர் இல்லத்தில்...

சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!

- இளையபாரதி

via face book

Share this post


Link to post
Share on other sites

கூம்.........என்னத்தை சொல்வது.. :(:(

Share this post


Link to post
Share on other sites

நான் அதற்கு முதற் கட்டத்திலுள்ளவன்.

எனவே நம்பிக்கையே வாழ்க்கை.

கடமையைச்செய்வோம். பதில் காலம் தான் சொல்லணும்.

ஆனால் இந்தக்கவிதையை நான் படிக்க விரும்பவில்லை.

Share this post


Link to post
Share on other sites

இப்படிப் பட்ட... பிள்ளைகளை வளர்ப்பதை விட...

10 தென்ன மரத்துக்கு, தண்ணீர் விட்டிருக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

இப்படிப் பட்ட... பிள்ளைகளை வளர்ப்பதை விட...

10 தென்ன மரத்துக்கு, தண்ணீர் விட்டிருக்கலாம்.

அதை எப்படி கண்டு கொள்வது சிறி?

எல்லோரும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் ஆசையுடனுமே ஊட்டி வளர்க்கின்றனர்.

அதில் ஒன்று இரண்டு இப்படி வருவதற்காக அந்த சந்ததியையே வெறுத்து ஒதுக்கமுடியுமா?

Share this post


Link to post
Share on other sites

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றோரின் கடமை. அதேபோல் தமது பெற்றோரை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை.

பல பெற்றோர்கள் பிளைகள் தமது கடமையைச் சரியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படியாக ஏமாற்றப்படுகின்றனர்.

எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பெற்றோர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

அதை எப்படி கண்டு கொள்வது சிறி?

எல்லோரும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் ஆசையுடனுமே ஊட்டி வளர்க்கின்றனர்.

அதில் ஒன்று இரண்டு இப்படி வருவதற்காக அந்த சந்ததியையே வெறுத்து ஒதுக்கமுடியுமா?

பெற்றோரில் தான் குறை சொல்ல, அந்தக் கருத்து எழதப் பட்டது விசுகு.

எனது, முதல் மகன் பிறந்த போது...

அப்பா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்...

நீ... இவ்வளவு நாளும், எனக்காகவும்.. உனக்காகவும் வாழ்ந்தாய்.

இனி... நீ.. உனது, இன்பத்தை... துறந்து பேரனுக்காக வாழ்.

அந்த சொல், எனக்கு... மருந்தாக அமைந்தது. :)

Share this post


Link to post
Share on other sites

பெற்றோரை உன் தலையில் வைத்து சுமக்க வேண்டாம்

அவர்கள் தங்குவதற்கு உன் வீட்டில் ஒரு குறு அறை கொடு

அவர்கள் பாதம் தழுவி சேவைகள் செய்ய வேண்டாம்

உன் பாதத்தால் அவர்களை எட்டி உதைக்காமல் இரு

பூஜை அறையில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டாம்

அவர்கள் கல்லறை செல்லும் வரையேனும் அடுத்தவர்--

கால்களில் விழ விடாமல் பார்த்துக்கொள் அது போதும்

கிழிந்த துணிகளில் ஒன்றுகூடவா உன் வீட்டில் இல்லை

உன்னை பெற்ற கடனுக்காய் அவர்கள் மானம் காக்க

அவர்களுக்காய் தனியே ஒரு பானை சோறு வேண்டாம்

உன் வீட்டில் தினமும் கொதிக்கும் உலையில் ஒரு குவளை

அரிசி அதிகம் சேர்.. அதுகூடவா இடக்கூடாது?

படித்ததில் பிடித்தது

Share this post


Link to post
Share on other sites

இந்தப் பெற்றோர் கூட மகனைக் குறை சொல்லேல்ல மருமகளைத் தான் குறை சொல்கிறார்கள்...மகனை ஒழுங்காய் வளர்த்தால் அவர் ஏன் மனைவி சொல் கேட்டு பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்புகிறார்...ஆண்பிள்ளைகளை தாய் கண்ட‌ கட்டுப்பாட்டுக்குள் வைத்து வளர்க்கிறது.எப்பவும் யாரையும் சார்ந்து வளர்ந்த ஆண் திருமணம் முடித்ததும் மனைவியின்ட‌ சொல் கேட்கிறது...ஆண்கள் சுயமாய் முடிவெடுத்தால் ஏன் இந்த பிர‌ச்சனை?

Share this post


Link to post
Share on other sites

கட்டுப் பாடாக... மகனை, வளர்த்தாலும்....

தலையணை மந்திரம், எல்லாவற்றையும், புறந்தள்ளி விடும்.

Share this post


Link to post
Share on other sites

ம்.............

Share this post


Link to post
Share on other sites

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றோரின் கடமை. அதேபோல் தமது பெற்றோரை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை.

பல பெற்றோர்கள் பிளைகள் தமது கடமையைச் சரியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படியாக ஏமாற்றப்படுகின்றனர்.

எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பெற்றோர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ! என்பது போல அவரவர் கடமையை செய்யவேண்டும்.

இணையவன் அண்ணா சொன்னது போல எதிர்காலத்துக்கு தேவையானவற்றை சேமித்து வைத்தால் யாரிலும் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அதை விட ஒரு வேளை அப்ப பிள்ளைகள் உறவுகள் வந்தாலும் வருவார்கள்.

Share this post


Link to post
Share on other sites
tears.jpg

Share this post


Link to post
Share on other sites

கட்டுப் பாடாக... மகனை, வளர்த்தாலும்....

தலையணை மந்திரம், எல்லாவற்றையும், புறந்தள்ளி விடும்.

சிறி அண்ணா,

பிள்ளைகளைக்கவனிக்காத,பிள்ளைகள் சொல்வதை கேட்காமல் பணம்பிடுங்கும் இயந்திரமாய் பார்க்கும் பெற்றோர்களை என்ன செய்ய சிறி அண்ணை? :unsure:

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி அபராஜிதன். உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் வலிகள் மனதினை ரணமாக்குகின்றன. பெற்றவர்களை உதறித்தள்ளி எறிந்துவிட்டு அவன் சந்தோசமாய் வாழலாம் என நினைப்பது, கேவலமான வாழ்க்கையை மட்டுந்தான்... அவனுக்கு விட்டுச்செல்லும்.

எம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை மறப்போமாயின்... எம் வாழ்க்கையே அர்த்தமில்லாத அந்தத்தில்தான் முடியும்! :(

ந்தக் கவிதையை எழுதிய உறவின் பெயரையும் (தெரிந்திருந்தால்) கீழே இணையுங்கள் அபராஜிதன். நன்றி! :)

Share this post


Link to post
Share on other sites

சிறி அண்ணா,

பிள்ளைகளைக்கவனிக்காத,பிள்ளைகள் சொல்வதை கேட்காமல் பணம்பிடுங்கும் இயந்திரமாய் பார்க்கும் பெற்றோர்களை என்ன செய்ய சிறி அண்ணை? :unsure:

இதுவும் உண்மை தான்..

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி அபராஜிதன். உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் வலிகள் மனதினை ரணமாக்குகின்றன. பெற்றவர்களை உதறித்தள்ளி எறிந்துவிட்டு அவன் சந்தோசமாய் வாழலாம் என நினைப்பது, கேவலமான வாழ்க்கையை மட்டுந்தான்... அவனுக்கு விட்டுச்செல்லும்.

எம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை மறப்போமாயின்... எம் வாழ்க்கையே அர்த்தமில்லாத அந்தத்தில்தான் முடியும்! :(

இன்தக் கவிதையை எழுதிய உறவின் பெயரையும் (தெரிந்திருந்தால்) கீழே இணையுங்கள் அபராஜிதன். நன்றி! :)

மன்னிக்கணும் கவிதை மறந்திட்டன் இணைக்க- இளையபாரதி

Share this post


Link to post
Share on other sites

கட்டுப் பாடாக... மகனை, வளர்த்தாலும்....

தலையணை மந்திரம், எல்லாவற்றையும், புறந்தள்ளி விடும்.

சிறி அண்ணா,

பிள்ளைகளைக்கவனிக்காத,பிள்ளைகள் சொல்வதை கேட்காமல் பணம்பிடுங்கும் இயந்திரமாய் பார்க்கும் பெற்றோர்களை என்ன செய்ய சிறி அண்ணை? :unsure:

இது தான்... என்னால், செய்ய முடியும்.

முன்பு, நான் உங்களுடன் வாழ்ந்த போது, பார்க்காத... சாப்பிடாத வாழ்வு இனி.. வாழப் போகின்றீர்கள்? என்று கேளுங்கள் ஜீவா.

எனது வாழ்வுக்கு, அத்திவாரம் போடவும் பணம் தேவை... என்று, சொல்லுங்கள் ஜீவா.

அவர்கள், புரிந்து கொள்வார்கள்.

Share this post


Link to post
Share on other sites

பாவம் இந்தத் தந்தை. :(

தனிப்பட்ட முறையில்

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.

எனது பெற்றோருக்கு கடமையைச் செய்திருக்கிறேன்.எனது வித்துக்களுக்கான கடமையை ஆசையுடன் செய்கிறேன். யாரிடமும் இருந்து ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை. சொந்தக் காலிலே நிற்கப் பார்க்கிறேன்.

ஏதும் கிடைத்தால் அது போனஸ்.

Share this post


Link to post
Share on other sites

இது தான்... என்னால், செய்ய முடியும்.

முன்பு, நான் உங்களுடன் வாழ்ந்த போது, பார்க்காத... சாப்பிடாத வாழ்வு இனி.. வாழப் போகின்றீர்கள்? என்று கேளுங்கள் ஜீவா.

எனது வாழ்வுக்கு, அத்திவாரம் போடவும் பணம் தேவை... என்று, சொல்லுங்கள் ஜீவா.

அவர்கள், புரிந்து கொள்வார்கள்.

நன்றி அண்ணா,

இருந்தும் பணம் பிரச்சனை இல்லை ஆனால் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் தனிப்பட,சகோதரங்கள் பற்றி எடுக்கும் போது பிள்ளைகளின் சொல்லை கேட்காது,தவறு என்று பிள்ளைகள் சொல்லியும் கேட்காத பெற்றோரும் இருக்கிறார்கள் தானே?

எல்லாரிலும் எல்லாவிதமாயும் இருக்கிறார்களே அண்ணா?

Share this post


Link to post
Share on other sites

வழமையாக நான் இணைப்புக்களுக்கு பச்சை குத்துவதில்லை. ஆனால் இளையபாரதியின் இந்த வரிகளுக்காகவும், கனமான கவிவரிகளை காவி வந்த உங்களுக்காகவும் ஒரு பச்சை! :)

கவிவரிகளை படைத்தவரின் பெயரை இணைத்தமைக்கு மிக்க நன்றி அபராஜிதன்! :)

Share this post


Link to post
Share on other sites

நன்றி அண்ணா,

இருந்தும் பணம் பிரச்சனை இல்லை ஆனால் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் தனிப்பட,சகோதரங்கள் பற்றி எடுக்கும் போது பிள்ளைகளின் சொல்லை கேட்காது,தவறு என்று பிள்ளைகள் சொல்லியும் கேட்காத பெற்றோரும் இருக்கிறார்கள் தானே?

எல்லாரிலும் எல்லாவிதமாயும் இருக்கிறார்களே அண்ணா?

ஏன் இல்லை? வீட்டுக்கு வீடு வாசல்படி!

பெற்றோர் பிள்ளைகளை பெத்து வளர்த்துவிட்டோம், பிள்ளைகள் எமக்குத் தமது கடமைகளைச் செய்கிறார்கள்/ செய்யவேண்டும் என நினைகிறார்கள் அதே நேரம், ஒரு பிரச்சனைக்கு இந்த எடுங்கோ அல்லது இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று நாம் எமது ஆலோசனைகளை முன்வைத்தால் அது தமது தனிப்பட்ட சுதந்திரந்தில் தலையிடுவதாக நினைகிறார்கள் அதனால் அவற்றை கலந்தாலோசிக்கக் கூட முயற்சிப்பதில்லை. அவர்களது பார்வையில் அவர்களுக்கு அது நியாயமாகப்படலாம்... பிள்ளைகளின் பார்வையில் அது அவர்களை தனிமைப்படுத்துவதாகவே நினைக்கத் தோன்றுகிறது...

Share this post


Link to post
Share on other sites

நன்றி அண்ணா,

இருந்தும் பணம் பிரச்சனை இல்லை ஆனால் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் தனிப்பட,சகோதரங்கள் பற்றி எடுக்கும் போது பிள்ளைகளின் சொல்லை கேட்காது,தவறு என்று பிள்ளைகள் சொல்லியும் கேட்காத பெற்றோரும் இருக்கிறார்கள் தானே?

எல்லாரிலும் எல்லாவிதமாயும் இருக்கிறார்களே அண்ணா?

சகோதரர்களின் அழுத்தம் ஒன்று இல்லாமல்....

பெற்றோர் தனிப்பட, ஒரு சார்பாக முடிவு எடுக்க மாட்டார்கள்.

அவர்களுக்கு, எங்கோ... ஒரு அழுத்தம், மறைமுகமாக பிரயோகிக்கப் பட்டுள்ளது.

அந்த, நிலையில்... பெற்றோர், மெல்லவும் முடியாமால்... விழுங்கவும் முடியாமல்.. தவிப்பார்கள்.

அது, அவர்களை விரைவில் மரணத்தில்.... தள்ளிவிடும்.

Share this post


Link to post
Share on other sites

அபராஜிதன், நான் ஒரு சிங்களக் கவிதையை ஆங்கிலத்தில் இணைக்கிறேன்! தவறெனில் மன்னிக்கவும்!

Badagini wela mama giya kala puthuge geta

Manala vii dekak dunnay mallakata

Gando nogando kiyala situni mata

Manalada puthe kiri dunne mama numbata?

ஒரு தாய் தனக்குப் பசியெடுத்த போது, உரிமையுடன் தனது மகன் வீட்டுக்குப் போகின்றாள்.

அப்போது மகன், இரண்டு சுண்டு நெல்லை அளந்து ஒரு உமலில் போட்டுத் தாயிடம் கொடுக்கின்றான்.

அது தாயின் தேவைக்குப் போதாமல் இருந்தது!

அப்போது அவள் ஆதங்கத்தில், தனது மகனிடம் கேட்கிறாள் ' மகனே, நீ சிறு குழந்தையாய் பசியில் அழுத போது, உனக்கு அளந்தா பால் புகட்டினேன்!'

இந்த விதத்தில் தான் இப்போது, பிள்ளைகள் பெற்றோரைப் பார்க்கின்றார்கள்! இணைப்புக்கு நன்றிகள்!

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் முடிவு   இந்தியா டிஜிட்டல்மயமாக்க நிதியத்தை அறிவித்த கூகுள் நிறுவனம் இதன் மூலம் இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக ரூ.75,000 கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற பேச்சுகளுக்குப் பிறகு இந்த முடிவை கூகுள் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை கூறியதாவது, “இந்த முதலீட்டை ஈக்விட்டி முதலீடுகள், கூட்டுறவுகள், உள்கட்டமைப்பு, சூழலிய அமைப்பு முதலீடுகள் என்ற வழியில் கூகுள் செய்யவுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த முதலீட்டு முடிவு. இந்தியாவின் டிஜிட்டல்மயமாக்கத்தின் 4 முக்கியப் பகுதிகளில் இந்த முதலீடு கவனம் செலுத்தும். ஒவ்வொரு இந்தியருக்கும் அவரவர் மொழியிலேயே தகவலை எளிதில் அணுக இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் தனித்துவ தேவைகளுக்கு தகுந்தவாறு புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கட்டமைத்தல், வர்த்தகங்கள் டிஜிட்டல்மயமாக உருமாற அதிகாரம் வழங்கும் முதலீடுகளாக இது அமையும். சுகாதாரம், கல்வி, வேளாண்மை ஆகிய சமூக நன்மைகளுக்கான செயற்கை அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குதல். தொழில்நுட்பம் நம் தனிப்பட்ட உலகத்துக்கும் வெளியே சாளரங்களை திறந்து விடுவதாகும். நான் இளம் பருவத்தில் இருக்கும் போது கற்றுக்கொள்ளவும் வளர்ச்சியடையவும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் புதிய வாய்ப்புகளைத் தருவித்தது. ஆனால் இது வேறு ஒரு இடத்திலிருந்து என்னை வந்தடைவதற்காக நான் காத்திருக்க நேரிட்டது. இன்றைய இந்தியாவில் தொழில்நுட்பம் வேறு இடத்திலிருந்து வரவழைக்கப்பட வேண்டிய நிலையில் இல்லை. ஒட்டுமொத்த புதிய தலைமுறை தொழில்நுட்பமும் இந்தியாவில்தான் முதலில் நிகழ்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பாக மூன்றில் ஒரு பங்கு வர்த்தகம் தான் ஆன்லைன் இருப்பைக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ 26 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தேடல் எந்திரத்திலும் வரைபடத்திலும் காணக்கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் 150 மில்லியன் பயனாளர்கள் சேர்ந்து வருகின்றனர். கரோனா பெருந்தொற்றினால் டிஜிட்டல் சாதனங்களுக்கு பெரிய தேவை ஏற்பட்டு வருகிறது. டிஜிட்டல்மயமாக்கம் மூலம் லாக்டவுன் காலக்கட்டங்களில் பலருக்கும் பொருட்களையும் சேவைகளையும் பெற பெரிய உதவி புரிந்து வருகிறது.” என்றார் சுந்தர் பிச்சை. முன்னதாக இன்று காலை சுந்தர் பிச்சையுடன் மேற்கொண்ட உரையாடல் பற்றி பிரதமர் மோடி தன் ட்விட்டரில் குறிப்பிட்ட போது, “இன்று காலை சுந்தர்பிச்சையுடன் பயனுள்ள உரையாடல் மேற்கொண்டேன். பரந்துபட்ட பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். குறிப்பாக இந்திய விவசாயிகளின், இளைஞர்களின், தொழில்முனைவோர்களின் வாழ்க்கையை மாற்றும் தொழில்நுட்ப ஆற்றல் குறித்து அதிகம் பேசினோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   https://www.hindutamil.in/news/india/564225-google-to-invest-10-billion-in-india-1.html
    • யாரப்பா சொன்னது! ஒற்றை வசனத்தோட பதிவு நிக்குது.
    • சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17 % பேர் தேர்ச்சி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 13,  2020 14:19 PM புதுடெல்லி, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வில், கொரோனா ஊரடங்கால் சில தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. அவர்களுக்கு மீண்டும் தேர்வு தேதியை அறிவித்து, தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் அதனை ரத்து செய்து, மாணவர்களுக்கு மதிப்பெண் எந்த வகையில் கணக்கிடப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கான பணிகளில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று சமூக வலைதளங்களில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகின. அதில் 10-ம் வகுப்புக்கு வருகிற 13-ந்தேதியும், 12-ம் வகுப்புக்கு வருகிற 11-ந்தேதியும் (நாளை) தேர்வு முடிவு வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது வெளியான சற்று நேரத்தில் சி.பி.எஸ்.இ. தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டு, இது போலியானது என்று அதில் குறிப்பிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbseresults.nic.in என்ற தளத்தில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி, வெளியான தேர்வு முடிவுகளில் 88.78 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய நகரங்கள் இந்தியாவிலேயே அதிகபட்ச தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. அங்கு 97 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலத்தில் 96.17 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடத்தில் திருவனந்தபுரமும், இரண்டாவது இடத்தில் பெங்களூருவும், மூன்றாவது இடத்தில் சென்னை மண்டலமும் உள்ளது. மாணவிகள் 92.15 சதவீதம் பேரும், மாணவர்கள் 86.19 சதவீதம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13141915/Central-Board-of-Secondary-Education-CBSE-class-12.vpf       வாழ்த்துகள்