-
Tell a friend
-
Topics
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி! சு.சூர்யா கோமதிசெந்தில் குமார்.கோக.சுபகுணம் சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. அதன் வெளிப்பாடுதான் ஒருவரைத் திட்டும்போது பெண்ணுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, ஆண்களை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு, `பொம்பள மாதிரி சேலையைக் கட்டிக்கோ' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது. பெண்களும், பெண்கள் பயன்படுத்தும் பொருள்களும் குறைந்த மதிப்பு கொண்டவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சீண்டல்களுக்கு காரணம். புடவை என்ன அவ்வளவு மதிப்பு குறைந்த ஆடையா? பெண்கள் பயன்படுத்துவதால் ஓர் ஆடையை எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும் என்பதே முதல் கேள்வியாக என் மனதில் விழுந்தது. அதற்கான பதிலைத்தான் இந்தப் போட்டோஷூட் மூலம் தந்திருக்கிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி! - Men too wore saree in the past says stylist Archana Aarthi - Vikatan -
By பிழம்பு · பதியப்பட்டது
இம்ரான் குரேஷி பிபிசிக்காக கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் வருகை, தென்னிந்தியாவில் அதிகமாகவே இருந்தது. சமீபத்தில் கேரளாவில் மீனவர்களோடு படகில் கடலுக்குச் சென்றவர் அரபிக் கடலில் குதித்து அனாயாசமாக நீச்சலடித்தார். தமிழகத்தில் மாணவி ஒருவர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு `புஷ் அப்ஸ்` எடுத்தார். மற்றொரு இளைஞரிடம் அகிடோ எனும் தற்காப்புக் கலையைக் காட்டினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி மீனவர்களோடும், மாணவர்களோடும் உரையாடியதை, தென்னக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள், வடக்கத்திய ஊடகங்களைப் போல அல்லாமல் நியாயமாகவே செய்திகளை வெளியிட்டன. கடந்த வாரம் கூட தென் இந்தியாவில் சமூக ஊடங்களில் ராகுல் காந்தி குறித்து அதிகமாக பேசினார்கள். 50 வயதான ராகுல் காந்தி, தென்னகத்தில் குறிப்பாக சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகம் மற்றும் கேரளாவில் முழு கவனத்தை ஈர்ப்பது போலத் தெரிகிறது. தென்னக மக்களோடு இருப்பது அவருக்கு ஆறுதல் அளிப்பது போலத் தெரிகிறது. தென் இந்தியாவில் இருக்கும் ஊடகத்தை கவனிப்பவர்கள், பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் நிலவிய சூழல் குறித்து உண்மையிலேயே ஆச்சர்யப்படவில்லை. ராகுல் தீவிர அரசியலில் இருந்து தப்பிப்பதற்கும், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்குமான இடமாக தென்னகம் இருக்கிறது என சிலர் நம்புகிறார்கள். பட மூலாதாரம்,INC "ஊடகங்கள் அவருக்கு ஒரு நீண்ட வாய்ப்பைக் கொடுக்க விரும்புகிறது. சில நேரங்களில் ராகுலே அதைக் கோருகிறார். அதற்காக அவர் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார், இருப்பினும் அவருக்கு சரியான அளவில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. பிராந்திய அளவிலான ஊடகங்களால் ராகுல் விமர்சிக்கப்படுகிறார், ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லை மீறுவதில்லை," என இந்தியாவின் முதல் பிராந்திய தொலைக்காட்சி சேனலின் நிறுவனரான சசி குமார் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார். மற்ற காரணங்களும் இருக்கின்றன பிராந்திய ஊடகங்கள் இப்படி நடந்து கொள்வதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. "உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் தென் இந்தியாவில் அரசியல் குறைந்த அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் இந்துத்வா என்கிற விஷயம் மிகவும் பரவலாக இருக்கிறது. தென்னகத்தில் மிகக் கடுமையான சொற்போர் இல்லை," என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார் தி இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம். "அதற்கு காரணம் தென் இந்தியாவில் காங்கிரஸ் வலுவாக இருப்பதால் அல்ல, கர்நாடகம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வலுவாக இல்லாதது தான் காரணம்," என்கிறார் சசி குமார். "தன்னால் கடலில் குதித்து நீந்த முடியும், தன்னால் புஷ் அப்ஸ் எடுக்க முடியும் என்பது எல்லாம் அவரை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியை விட நல்ல உடல் வலிமை கொண்ட ஒருவராக வந்து கொண்டிருக்கிறார் ராகுல். இது ஓர் அருமையான முரண். அரசியலில் தன்னை அதிக உடல் வலிமை கொண்டவராக காட்டிக் கொள்ளும் உத்தி ராஜிவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்படவில்லை, மாறாக நரேந்திர மோடி அதை அறிமுகப்படுத்தினார். 56 இன்ச் மார்புடையவர் என்கிற கோட்பாட்டை எதிர்க்கும் ஒரு வழி இது" எனக் கூறுகிறார் சசி குமார். "தன் தந்தை தமிழகத்தில் கொல்லப்பட்டார் என்கிற போதும், ராகுல் தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறது. அதை அவர்கள் கடந்து வந்துவிட்டார்கள் என்பதும், அந்த நிகழ்வு ஒரு நிரந்தர வடுவை ஏற்படுத்தவில்லை என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது. தன் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தன் தந்தை ராஜிவ் காந்தியை விடவும் ராகுல் காந்தி தமிழகத்தில் சகஜமாக இருக்கிறார்" என என்.ராம் கூறுகிறார். அரசியல் ரீதியாகவும் ராகுல் காந்தி தென்னகத்துக்கு வர வேண்டியது அடிக்கடி அவசியமாகிறது "காரணம் கேரளாவின் வயநாடு தான் ராகுலை அமேதி தொகுதியின் தோல்வியில் இருந்து காப்பாற்றியது. தென்னகத்தில் நேரு - காந்தி குடும்பத்துக்கு எப்போதும் இருந்த ஆதரவை அவர் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். தற்போது காங்கிரஸ் கட்சி தன் செல்வாக்கை இழப்பது போலத் தோன்றுகிறது, ஆனால் நேருவின் கட்சி இதைக் கடந்து வந்துவிடும் என்பது போலத் தான் தெரிகிறது" என்கிறார் விமர்சகரான பிஆர்பி. பாஸ்கர். பட மூலாதாரம்,INC அலட்டிக் கொள்ளாத ’கூல் கை’ பிம்பம் "ராகுல் காந்தி தமிழகத்தில் சிறப்பாகவே நடத்தப்படுகிறார். சொல்லப் போனால் அவரை தமிழகத்தின் குழந்தை போல நடத்துகிறார்கள். ஒரு வில்லன் போல பார்க்கப்படும் அமித் ஷாவைப் போல ராகுல் காந்தி பார்க்கப்படவில்லை. ஒரு `கூல் கை` போலத் தான் பார்க்கப்பட்டார். இது தான் மக்களுக்கு ராகுல் காந்தி மீதிருக்கும் பிம்பம்" என்கிறார் நக்கீரன் பத்திரிகையைச் சேர்ந்த தாமோதரன் பிரகாஷ். தெலுங்கு மொழி பேசும் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் இதே கருத்து தான் நிலவுகிறது. "வடக்கத்திய ஊடகங்களைப் போல ராகுல் காந்தி இலக்கு வைத்து தாக்கப்படவில்லை. பிராந்திய அளவில் எந்த தலைவர்களும் இல்லை மற்றும் அப்பிராந்தியத்தில் ஆளும் பிராந்தியக் கட்சிக்கு, காங்கிரஸ் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை ஆங்கில ஊடகங்கள் அறிந்திருந்தார்கள்," என ஹைதராபாத்தில் இருக்கும் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறைப் பேராசிரியராக இருக்கும் பத்மஜா ஷா கூறுகிறார். "தெலுங்கு ஊடகங்களில் எல்லா விஷயங்களும் பிரசூரிக்கப்படவில்லை அல்லது ஒளிபரப்பப்படவில்லை, ஆனால் இதுவரை வெளியான எல்லாமே ராகுலுக்கு நேர்மறையாகவே இருந்தன. குறிப்பாக இளைஞர்களுடனான உரையாடல்கள் நல்ல விதத்திலேயே பார்க்கப்பட்டது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜின்கா நாகராஜு. "கன்னட பத்திரிகைகள் தேசிய ஊடகங்களிலிருந்து அதிகம் மாறுபடவில்லை. கன்னட ஊடகங்கள் ராகுலை வேடிக்கைக்கு உள்ளாக்கியது அல்லது விமர்சித்தது. அதிலும் குறிப்பாக 2014-க்குப் பிறகு," என்கிறார் உதயவானி என்கிற கன்னட நாளிதழின் முன்னாள் ஆசிரியர் பூர்ணிமா. பட மூலாதாரம்,INC கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியே நின்றது, அக்கட்சிக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. ஊடக வெளிச்சம் தொடர்ந்து ராகுல் காந்தி மீதே குவிந்திருந்தது. "இருப்பினும் சபரிமலை குறித்து அவர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மோசமாகப் பேசுவதை அவர் தடுத்து நிறுத்தவில்லை. இங்கு தான் அவருடைய அரசியல் மிகவும் மேலோட்டமானதாகிவிட்டது," என்கிறார் என்.ராம். "சில பிரச்னைகளைக் குறித்து அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள், ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்புகிறது. இப்படிப்பட்ட பாகுபாட்டை ராகுல் காந்தியிடம் ஊடகங்கள் காட்டுகின்றன," என பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் பிபிசி இந்தி சேவையிடம் கூறினார். ’எல்லாம் விளம்பரம் தான்’ "அவர் சச்சின் டெண்டுல்கர் போல இருக்கிறார். சச்சின் கூட்டத்தில் இருந்து தப்பித்து மைதானத்துக்கு நடுவில் விளையாட விரும்பினார், அதை அவர் ரசித்தார். அதே போல, தீவிர அரசியலில் இருந்து ராகுல் காந்திக்கு தப்பிக்கும் ஓரிடம் தான் தென் இந்தியா. ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்குபவர்களுக்கு நீண்ட கால திட்டம் இருக்கிறது. புஷ் அப்ஸ் எடுப்பது எல்லாம் வெறும் விளம்பரத்துக்குத் தான்" என பிபிசி இந்தி சேவையிடம் கூறுகிறார் இந்திய ஜர்னலிஸம் ரிவ்யூவின் ஆசிரியர் மற்றும் அவுட்லுக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ண பிரசாத். ``தேர்தலுக்கான அமெரிக்க வழிகள் பல இருக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன் பாஜக விளையாடிய ஆட்டத்தை தற்போது காங்கிரஸ் விளையாடுகிறது. ஊடகங்கள் ராகுலை `பப்பு` என கட்டமைத்திருக்கிறது. உண்மையில் அவர் தன் பலத்தை வெளிகாட்டியுள்ளார், தனது வேலையைச் செய்து வருகிறார். இவை அனைத்தும் கொஞ்ச காலத்துக்கு தான். இது போன்ற விஷயங்கள் வாக்குகளாக மாறுவதைப் பார்ப்பது தான் மிகவும் கடினம், என்றார் கிருஷ்ண பிரசாத். ``அவர் காலப்போக்கில் முதிர்ச்சியடைந்திருக்கிறார். அவர் தனது சொந்த பாணியைக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். மில்லினியல் தலைமுறை அதை வெறுப்பாகப் பார்க்காது எனலாம்," என்கிறார் சசி குமார். தென்னிந்தியாவில் அதிக கவனம் செலுத்தும் ராகுல் காந்தி: புதிய திட்டமா? கடினமான அரசியலில் இருந்து தப்பும் வழியா? - BBC News தமிழ் -
இரணைதீவு கெடுபிடிகளை சுமுகமாக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். இன்று(05.02.2021) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இரணைதீவிற்கு பொது மக்கள் சென்று வருவதற்கு கடற்படையினரினால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுத்தப்படுவதாக சுடடிக்காட்டப்பட்டது. இதுதொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவில் பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது எனவும், அதன்பின்னர் தேவையற்ற கெடுபிடிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கொறோனா காரணமாக இஸ்லாமிய சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லையென ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ள நிலையில், இன்றைய ஒருங்கிணைப்புக் குழுவிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இரணைதீவு கெடுபிடிகளை சுமுகமாக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை | Virakesari.lk
-
கிண்ணியாவிலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலம் அடையாளம் கொரோனாவினால் மரணமடைவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா மகரூப் கிராமம் (மாகாமாறு) என்ற பிரதேசத்தில் அமைந்திருக்கும் மையவாடியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இடத்தைப் பார்வையிடுவதற்காக இன்று (05) திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். பிரேமாநந் உள்ளிட்ட அடங்கிய குழுவினர் விஜயம் செய்திருந்தார்கள். இதில் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம். நிஹார், உறுப்பினர் நஸீர் உட்பட பலர் பங்கேற்றனர். கிண்ணியாவிலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலம் அடையாளம் | Virakesari.lk
-
தொடருங்கள் நிழலி அவர்களே.! கற்பனைக்கு வாழ்த்துக்கள்..!! பாவம் ராசுக்குட்டி ஆர் பெத்த பிள்ளையோ..?? நாங்கள் களத்தில் கருத்தெழுதி உங்களிடம் மாட்டுப்படுவதுபோல் அவரும் கூகுள் ஆண்டவரைத் தரிசிக்கப்போய் மாட்டிக் கொண்டாரே.!! ஆனாலும் பிறவிக் குணம் யாரைவிட்டது..! மனைவி சொன்ன புளி, சின்ன வெங்காயம், உள்ளி வாங்குவதற்கும் கூகுள் ஆண்டவரைத் தரிசித்த பின்புதான் கொள்முதல் செய்தாராம். சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தை வாங்கும்போது தெளிவான, திரட்சியான, ஒரே அளவிலான சீரான நிறத்துடன் ஈரப்பதமில்லாதவற்றை வாங்க வேண்டும். மிருதுவான, ஈரப் பதமுள்ள, மேற்தோலில் கரும்புள்ளிகள் உடையவற்றையும், முளைவிட்டதையும் தவிர்க்க வேண்டும். புளி புளி இதயத்திற்கு நல்லது. ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். சிறிது எடை குறைக்க விரும்புவோருக்கு புளிச் சாறு ஏற்றது. லேசான டையூரிடிக் பண்புகளையும் கொண்டுள்ளது, உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும். உடலை உள்ளே இருந்து சுத்தம் செய்ய உதவும். உள்ளி நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.