• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Puyal

எனது கற்பனை

Recommended Posts

எனது கற்பனை

மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம்

தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம்

முத்தென முத்தெனப் பிறந்தது

அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை

செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே

சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம்

கொடியினில் கொடியினில் புூக்கவில்லை

கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம்

துணையெனத் துணையென நாம் கண்ட

பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே

பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம்

அரிதென அரிதெனப் பலர் சொன்னார்

அதுவும் இன்று உருவாச்சு

அரியணை அரியணை ஏறியது

ஐ. நா சபையில் அமர்ந்திடவே

துணையெனத் துணையென நாம் கண்ட

துணைகள் மீண்டும் திரும்பாது

துணையெனத் துணையெனத் தானிருப்பாள்

என்றும் என்றும் எம் தமிழ் அன்னை.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் பரணி "எனது கற்பனை" அல்ல நியம் நன்றாக இருக்கிறது. மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை யாழில் படைக்க வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

துணையெனத் துணையென நாம் கண்ட

துணைகள் மீண்டும் திரும்பாது

துணையெனத் துணையெனத் தானிருப்பாள்

என்றும் என்றும் எம் தமிழ் அன்னை.

உங்கள் கற்பனையில் வந்த அனைத்து வரிகளும் நன்றாக இருக்கு பரணி ... வாழ்த்துக்கள் ... தொடர்ந்து எழுதுங்கள்..! :P

Share this post


Link to post
Share on other sites

கவிதனும் அனிதாவும் எனக்குத் தந்த ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நேரம் கிடைக்கும் போது கவிதை எழுத முயற்ச்சிக்கின்றேன்.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு கவிதை புயல்

தொடர்ந்து எழுதுங்கள்! 8)

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் ஆமா உங்கட பெயரை தமிழில எப்படி சொல்லுறது. நீங்கள் கற்பனை என்று சொன்னது கற்பனை அல்ல நிஜம். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள். தொடர்ந்து தாங்க

Share this post


Link to post
Share on other sites

கவி அழகாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் புயல்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் பரணி "எனது கற்பனை" அல்ல நியம் நன்றாக இருக்கிறது. மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை யாழில் படைக்க வாழ்த்துக்கள்

பரணியா? :roll: :roll: :roll: என்ன குழப்புறீங்க?

புயல் உங்க கற்பனை நல்லா இருக்கு. நன்றி

Share this post


Link to post
Share on other sites

நண்பா கவிதை சுப்பர் இன்னும் தொடர வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites

அழகான கவிதை வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

எப்போ வருவாய்.

நான் நானாக இல்லை என உணர்ந்த நான்

ஏனென நினைத்த போது தான்

உன்னைக் கண்ட நினைவும் வந்தது

உன்னைக் கண்ட பின்னே உன்னிடம்

என்னை விட்டு வந்தது என் நினைவில் வந்தது

உன் தாள் தரை தன்னில் பட்டால்

தளும்பு வந்திடும் என்றெண்ணி

தரையில் மலர்கள் விரித்து வைத்தேன்

மலர் மேல் உன் பாதம் பட்டுக் கன்றியதால்

நானே உனக்குத் தரையானேன்

தென்றலை வென்ற உன்னை

தென்றல் தொடவும் விரும்பாத நான்

தென்றலுக்கும் புூக்களால் வேலியிட்டு வைத்தேன்

புூக்களின் நறு மணத்தில் நீ திணறியதால்

காற்றுக்கும் காவல் போட்டு வைத்தேன்

காற்றையும் கடந்து மதியவள் உன்னைத் தொட்டதால்

என் மதி கொண்டு நீ உள்ள நாள் முழுவதும்

அம்மதியையும் அமாவாசையாக்கி வைத்தேன்

முத்தமிழின் மூன்றாம் தமிழே

என் வீடு தேடி நீ எப்போ வருவாய்.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

Share this post


Link to post
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு புயல் உங்கட முன்றாம் தமிழ் உங்கட வீடுதேடி வர வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites

2 கவிதையும் நல்லா இருக்கு புயல்....இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன. முதியவர்   திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது.   இந்தநிலையில் அங்குள்ள பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88) தம்பதியருக்கும் கொரோனா வைரஸ் பாதித்தது. கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய மகன், மருமகள், பேரன் மூலம்தான் தாமஸ் ஆபிரகாம், மரியம்மா தம்பதியருக்கு கொரோனா வைரஸ் பரவியது. (மகன், மருமகள், பேரன் ஆகிய மூவரும் குணம் அடைந்து விட்டனர்.) வயதான நிலையிலும் கொரோனா வைரஸ் பாதித்தாலும் துவண்டுபோகாத இந்த தம்பதியர் கோட்டயம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர். மோசமான நிலையை எல்லாம் கடந்து வந்தனர். தற்போது பூரண குணம் அடைந்துள்ள இந்த தம்பதியர் எந்த நேரத்திலும் ‘டிஸ்சார்ஜ்’ செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கோட்டயத்தில் இருந்து வருகிற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிசய தம்பதியரை அனைவரும் வியப்புடன் பார்க்கும் நிலை வந்துள்ளது. கொரோனா வைரசில் இருந்து அதிசயமாக, இந்த முதிய வயதிலும் மீண்டு வந்துள்ள தம்பதியரை வரவேற்க குடும்பத்தினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த தம்பதியர் கொரோனா வைரசில் இருந்து மீண்டு இருப்பது குறித்து அவர்களது பேரன் ரிஜோ மோன்சி கூறுகையில், “எங்கள் தாத்தாவும், பாட்டியும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்ததால்தான் கொரோனா வைரசில் இருந்து மீண்டு வர முடிந்திருக்கிறது” என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- தாத்தாவிடம் மது, பீடி, சிகரெட், புகையிலை என எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது. எந்த விதமான உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லாமலேகூட அவருக்கு ‘சிக்ஸ் பேக்’ உடல் அமைப்பு இருந்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து அவர்கள் உயிர் பிழைத்தது அதிசயம்தான். அவர்களை காப்பாற்றுவதற்கு டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் தங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கேரள மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தாத்தாவுக்கு பழங்கஞ்சியும், தேங்காய் சட்னியும்தான் பிடித்த உணவு. ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தபோது கூட அந்த உணவைத்தான் தாத்தா கேட்டார். மரவள்ளிக்கிழங்கும், பலாப்பழமும்கூட பிடிக்கும். பாட்டிக்கு மீன்தான் பிடித்தமான உணவு. நாங்கள் இத்தாலியில் இருந்து எப்போது வருவோம் என்று தாத்தாவும், பாட்டியும் காத்திருந்தார்கள். இப்போது அவர்கள் எப்போது வீட்டுக்கு வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தாமஸ் ஆபிரகாம், மரியம்மா தம்பதியருக்கு 3 குழந்தைகள், 7 பேரக்குழந்தைகள், 14 கொள்ளு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள், எனவே பெரிய குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/04/02105247/1383783/Kerala-Elderly-couple-recovery-for-Coronavirus.vpf
    • தமிழ் சிறி அதிகம் அலையாதீர்கள். என் முகவரிக்கு பார்சலில் அனுப்பி விடுங்கள் ரொயிலற் ரிசு கேக் செய்யும் செய்தி இதில் இருக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நம்மவர் ஒருவர் இருப்பது தெரியும் https://youtu.be/fnUM2DvaKeY