-
Tell a friend
-
Topics
-
0
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
விசுகர், சொல்கிறேன் என்று கோவிக்காதீர்கள்: தமிழ் மக்களிடமிருந்து புலிகள் அமைப்பு உருவானது என்பதற்கும் , புலிகள் தமிழ் மக்களால் வழி நடத்தப் பட்டார்கள் என்பதற்கும் இடையேயான வேறுபாடு தெரியாமலா பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? இதே பாணியில், தமிழ் மக்களிடமிருந்து உருவான ஈ.பி.டி.பி, புளொட் இவையும் "தமிழ் மக்களால் வழி நடத்தப் படுபவை" என்று சொன்னால் இங்கே வரவேற்பீர்களா?
-
ம் ... பெரும்பாலான தமிழ் மக்கள் அறிவாளிகளாக இருந்திருந்தால், தமக்கு அறிவாற்றலும் செயற்றிறனும் உள்ள தலைவர்களை தேர்ந்தெடுத்து இன்று சிங்கம்பூர் போல முன்னேறி இருப்பார்கள். ஈழத்தமிழர் இதுவரை தேர்ந்து கொண்ட தலைவர்களோ ஏமாற்றுக்காரரும் ஏமாளிகளும் தான். தமிழீழம் எடுத்து தருகிறோம் என்று ஏமாற்றியவர்களும், கருணா, பிள்ளையான், வை.கோ. போன்றவர்களிடம் ஏமாந்தவர்களுமே எங்கள் தலைவர்கள். லீ. குவான். யூ. போன்ற ஆற்றலும் அறிவும் நேர்மையும் உள்ள தலைவர்களை எங்கள் மக்கள் ஆதரிக்கவும் இல்லை, உருவாக்கவும் இல்லை. சிங்களவரிலும் பார்க்க குரூரமான இனத்துவேசிகளான மலேசியரிடம் இருந்து லீ. குவான். யூ. சிங்கப்பூரை 1972ல் இரத்தம் சிந்தாமல் சுயாட்சிக்கு கொண்டுவந்தார். எங்கள் மக்கள் தேர்ந்து கொண்ட தலைவர்களோ, 1977ல் தமிழீழம் கேட்டு 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் அழிந்து போனார்கள்.
-
உங்கள் அளவுக்கு மக்களை முட்டாள்கள் என்பவரை நான் இது வரை கண்டதில்லை
-
உங்களிடம் ஒரு கேள்வி தமிழ் மக்களின் அரசியல் ஆணையை புலிகள் ஏற்றுக் கொண்டு அதற்காக போராடினார்களா? தமது ஆணையை தமிழ் மக்கள் மீது திணித்தார்களா??
-
சரியாக சொன்னீர்கள் விசுகு. அநேகமாக அப்படித்தான் இருக்கும்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.