Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கனிம சுரங்கங்களில் குறிப்பிட்ட கனிமங்களின் இருப்பினை எவ்வாறு உறுதி செய்கிறார்கள்? எந்தளவு இருக்கும் என்பதனை எதன் மூலம் அளவீடு செய்கிறார்கள்? இது உங்கள் வேலையுடன் தொடர்பு பட்ட கேள்வி இல்லை தெரிஞ்சு இருந்தால் சொல்லுங்க :D

கனிம சுரங்கங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவை ?இதை கேட்பது தங்கம் ஆட்டையை போட இல்லை எழுதலாம் எண்டால் எழுதுங்க :lol:

கேள்வி கேட்பது எல்லாருக்கும் எளிது விடை எழுதுறதுக்கு நான் படுற பாடு இருக்கே எண்டு மனசு சொல்றது இங்க வரையும் கேட்குது :lol:

முதலில் நடப்பது ஆராய்தல் (Exploration). இதில் பல கட்டங்கள் உண்டு..

 • கனிமம் இருப்பதாக நீங்கல் நினைக்கும் பகுதிகளுக்குச் சென்று பாறைகளை ஆராய்தல். அல்லது ஹெலி மூலம் பறந்தபடியே தரவுகளைத் திரட்டுதல்.
 • இவற்றின்மூலம் கனிமம் இருப்பதாகக் கண்டுகொண்டால், ஆரம்பகட்ட துளையிடுதல் வேலைகளை மேற்கொள்ளுவார்கள். (Diamond Drilling Program)
 • துளையிடுதல்மூலம் திரட்டப்படும் மாதிரிகளை ஒரு நிலவியல் வல்லுனர் (Geologist) ஆராய்ந்து அறிக்கை கொடுப்பார். சாதகமான அளவு கனிமங்கள் இருந்தால் மேலும் துளைகள் இடுவார்கள்.
 • ஓரளவு கனிம அளவை எட்டியதும் அந்த நிலப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடுவார்கள் :D (Staking Claim). கனடாவில் கனிமவளச் சட்டம் தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிமக்களின் இடுகாட்டில் துளைகள் போட்டு இப்ப ஒரு பிரச்சினை நடந்துகொண்டிருக்கு. ஆதாரங்கள் இருந்தால் உங்களிடம் சொல்லிவிட்டு உங்கள் காணியிலேயே ஓட்டை போடுவார்கள். :D
 • சிறிய நிறுவனங்கள் வைத்திருக்கும் உரிமைகளை சற்றுப் பெரிய நிறுவனங்கள் வாங்கி மேலும் துளைகள் போட்டு ஆராய்ந்து எவ்வளவு உலோகங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என அறிக்கை தருவார்கள். பங்குச் சந்தைகளில் அவகளது பங்குகள் ஜிவ்வென்று எகிறும்.. :D CEO மார் நல்ல போனஸ் பார்ப்பார்கள்..
 • இவ்வாறு திரட்டப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு சாத்தியப்பாட்டுக்கான ஆராய்வுகளை மேற்கொள்வார்கள் (Feasibility studies). அதாவது அன்றைய சந்தை நிலவரப்படி எவ்வளவு பெறுமதியான வளங்கள் உள்ளன; அவற்றை எடுத்து விற்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பது போன்ற கணக்குவழக்குகள்.
 • சாதகமாக வந்தால் அந்த ஆதாரங்களை வங்கிகள், முதலீட்டாளர்களுக்கு வழங்கி காசைச் சேர்த்து கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பார்கள்.

கனிமவளத்துறையில் பாதுகாப்பு என்று பார்த்தால் எண்பதுகளுடன் ஒப்பிடும்போது இப்ப நல்ல முன்னேற்றம். எண்பதுகளில் வருடத்திற்கு இத்தனைபேர் செத்தார்கள் என்று எண்ணுவார்களாம். :unsure: இப்போது பரவாயில்லை. எங்கள் நிறுவனத்தின் கடந்த பத்தாண்டுகளில் 3 பேர் இறந்திருக்கிறார்கள்.

இறப்புக்களையும், காயங்களையும் குறைக்கும்படியாக வடிவமைக்க வேண்டியது பொறியியலாளர்களின் வேலை. :unsure: ஆனால் அதற்குள் வரைந்துகொண்டிருப்பவர்கள் தலையிட்டு குளப்படி செய்வார்கள்.. :lol:

Link to post
Share on other sites
 • Replies 346
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

இசை,

இந்த கனிமவளத்துறை சுற்று சூழலை பெரிதாக பாதிக்கும் என்பதால் உங்களைப்போன்ற அனுபவம் கொண்டவர்கள் :

- எவ்வாறு சூழல் மாசடைவதை தடுக்கலாம்

- யார் யார் விதிகளை மீறுகின்றார்கள் என அரசுக்கு கூறலாம்

- எவ்வாறு மீறாமல் விதிகளை மதிக்கலாம் என நிறுவனங்களுக்கு கூறலாம்

ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இவ்வாறான வேலைகளை செய்யலாம்.

அகூதா..

இந்தத் துறையில் அதிக பணம் புழங்குகிறது. நிறுவனங்கள் கை ஓங்கியிருக்கிறது. நியூ பிறன்ஸ்விக் தொழிலாளர் அமைச்சகம் சொல்வதையே அங்கே உள்ள நிறுவனங்கள் கேட்பதில்லை. :rolleyes:

சட்டம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் அதை வளைத்து வைத்திருக்கிறார்கள். இவைகளை எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏதாவது ஒரு இறப்பு, காயம் நிகழ்ந்தால் மட்டுமே மாற்றுவார்கள். இங்கே பொறியியல்துறை என்பது reactive.. not proactive. :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இசை நீங்க ஏன் BHP, RIO இல் வேலை செய்ய முயற்ச்சி செய்யக் கூடாது, நல்ல வருமானம்.

இங்கு >$200bn க்கு சுரங்க வேலைகள் வந்து கொண்டிருக்கிறது. யாராவது சிங்கபூரில் வேலை செய்துவிட்டு இங்கு வந்தால் இலகுவில் வேலை எடுக்கலாம்

பலர் UK, Canada, US, Irland, .. இல் இருந்து இங்கு வருகிறார்கள் (வேலை தேட www.seek.com.au).

போன வருடம் என நினைக்கிறேன்.. உந்தப்பக்கம் வருவதற்கு படிவங்கள் எல்லாம் எடுத்து வைத்து விசா மனுச் செய்வதற்கு ரெடி.. :unsure:

பிறகு அங்கே வந்து பொறியியலாளர் உரிமம் எடுத்து, அங்குள்ள சட்டதிட்டங்கள், Code எல்லாம் கற்று... விடிஞ்சிடும். :D அலுப்பில் விட்டிட்டன்.. :unsure:

அதுமட்டுமில்லாமல் கனேடிய உறவுகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள், உண்ணாவிரதம் இவற்றையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

-----

அதுமட்டுமில்லாமல் கனேடிய உறவுகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள், உண்ணாவிரதம் இவற்றையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.. :lol:

:D :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உடையார்,

அதுமட்டுமில்லாமல், உங்கை வந்து வீக் டாய் (weekday), மண்டாய் (Monday) :D எண்டு சொல்லிப் பழகுறதுக்குள்ளை சீ எண்டு போயிடும்.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மைனிங்கைவிட (Mining) Oil&Gas இல் நல்ல வருமானம்

இங்கு Oil & Gas இல் இருமடங்கு ஊதியம் கொடுக்கிறார்கள். அங்கு உட்புகுவதுதான் கஷ்டமான விடயம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன் உங்களுக்கு தேவையான சந்தேகங்களை,

உரிமையுடன்..... இசைக்கலைஞனிடமோ. உடையாரிடமோ... கேளுங்கள். யாழின் நட்பு உறவே... அது தான் ராசா. :)

Link to post
Share on other sites

அதுமட்டுமில்லாமல் கனேடிய உறவுகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள், உண்ணாவிரதம் இவற்றையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.. :lol:

இந்த அர்ஜுன்,நிழலி ஆட்களை உண்ணாவிரதத்தை கைவிடும் படி கேட்க ஏலாதோ?? :lol: :lol: :lol:

உடையார்,

அதுமட்டுமில்லாமல், உங்கை வந்து வீக் டாய் (weekday), மண்டாய் (Monday) :D எண்டு சொல்லிப் பழகுறதுக்குள்ளை சீ எண்டு போயிடும்.. :lol:

:lol: :lol: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா... சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததாக அறிந்தேன்.

சில பெண்கள், ரீ குலிக்கவும் ஆசைப் பட்டார்களாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வளாகத்தின்ர வேலி ஓரமாய் போய் நின்று கற்களை வெளியே எறிய முடியாதா? :icon_mrgreen:

:lol: :lol: :lol:

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கு நன்றிகள்..! :D

:lol:

வெளியேயும் நிறையக் கல் இருக்கு.. :D சாம்பிளுக்கு ஒண்டை அடுத்த முறைக்கு எடுத்துக்கொண்டு வாறன்.. :unsure:

வளாகத்திற்குள் போனால், கிட்னியில் உள்ள கற்களைக் கூட வெளிய எறிய விடுவாங்களோ என்பது சந்தேகம்... :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாகம் 31: நேர்முகத் தேர்வாளர்

ரொராண்டோவில் வேலை செய்யும்போதுதான் முதன்முதலில் இரண்டு வேலைக்குறிப்புகள் என்னிடம் தரப்பட்டது. அவற்றைப் பரிசீலித்துவிட்டு ஒருவரை பரிந்துரைக்குமாறு ரிம் என்னிடம் கேட்டிருந்தார். வரைதல் கலைஞர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருந்தது.

ஒருவர் அமெரிக்காவில் கணக்காளராக இருந்துவிட்டு, இங்கே வந்து AutoCAD படித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். மற்றையவர் இங்கே வடிவமைப்பில் (Diploma in Architecture) படிப்பை அப்போதுதான் முடித்திருந்த ஒரு பஞ்சாபிப் பெண்.. unsure.gif யாரைப் பரிந்துரைப்பது என்பதில் பெரும் போராட்டமாக இருந்தது.. :lol:

கடைசியில் தாய்க்குலத்திற்கு மதிப்பு வழங்கப்பட்டது. :icon_mrgreen: கணக்காளரைக் காட்டிலும் எங்கள்துறை சற்றுத் தெரிந்தவர் என்றால் நல்லதுதானே.. :D

தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு மூன்று வருடங்களுக்கு முன் கிட்டியது. அப்போது நான் ஒரு முதுநிலை பொறியியலாளர் மட்டுமே.. unsure.gif

நாங்கள் எப்படி சுழியோடினோம் என்பது தெரிந்திருந்ததால் நேர்முகத்தேர்வு சுவாரசியமாக இருந்தது. :D முதலில் ஒரு ஆபிரிக்க நாட்டில் இருந்து வந்த கறுப்பர். நேர்முகத்தேர்வுக் குழுவில் மூன்றுபேர் இருந்தோம்.

அவர் ஏதோ முப்பரிமாணத்தில் வடிவமைத்ததாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.. ஓரிரு குறுக்குக் கேள்விகள் கேட்டபோது பதில் சரியாக வரவில்லை. அவரை தேர்வு செய்யவில்லை.

அடுத்ததாக இந்தியன் தாத்தா.. :D இவர் இருபது சொச்ச வருடங்கள் இந்தியாவில் வேலை செய்தவர் என்ற உடனேயே எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. unsure.gif நாங்களும் இந்தியாவில் வேலை செய்தனாங்கள் அல்லோ.. :D

நேர்முகத்தேர்வை பரவாயில்லாமல் செய்தார். தேர்வு முடிந்த பிறகு தனியாக எனது மேற்பார்வையாளர் என்னுடைய கருத்தைக் கூறுமாறு கேட்டார். எனக்கென்றால் பெரிய நம்பிக்கை இல்லை. அதை அவரிடம் சொன்னேன். ஆனால் அவருக்குப் பிடித்திருந்தது.. unsure.gif

இந்தியன் தாத்தா சேர்க்கப்பட்டுவிட்டார்.. :D

(தொடரும்.)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வளாகத்திற்குள் போனால், கிட்னியில் உள்ள கற்களைக் கூட வெளிய எறிய விடுவாங்களோ என்பது சந்தேகம்... :D

இப்பதான் கட்டிக்கொண்டிருக்கிறம் எண்டபடியால், வளாகத்துக்கு உள்ளேயிருந்தே எடுத்துக்கொண்டு வந்த ஆக்களும் இருக்கினம். :D ஆனால் நான் எடுக்க விருபவில்லை.. மானம் போனால் போனதுதான்.. :unsure:

ஆனால் நான் தமிழனல்லவா.. :D அங்கே வேலை செய்யும் ரிச்சட்டிடம் ஒவ்வொரு முறையும் கேட்பேன்.. எங்கள் அலுவலகத்துக்கு வரும்போது கொண்டுவரும்படி.. அவரும் டிமிக்கி விடுகிறார்.. :D

இப்போது அங்கே தரைப்பகுதியில் இருந்து தங்கம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு 6 கிலோ எடுக்கிறார்களாம். :rolleyes: இனிமேல் கல்லில கையே வைக்க முடியாது.. :lol:

இங்கே ரிமின்ஸ் எனும் இடத்தில் தங்கச் சுரங்கங்கள் உண்டு.. அங்கே வேலை செய்துவிட்டு தொழிலாளர் குளிக்க வேண்டும்.. குளித்த தண்ணீரை வடிகட்டி அதிலும் தங்கத்தை எடுக்கிறார்கள்.. :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வளாகத்திற்குள் போனால், கிட்னியில் உள்ள கற்களைக் கூட வெளிய எறிய விடுவாங்களோ என்பது சந்தேகம்... :D

அப்ப நம்ம டங்குவார் சட்னிதான். :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாகம் 32: எதிர்பார்ப்புகள்

பதவி உயர்வு பெற்றதில் இருந்து அநேகமாக ஒரு பத்து பேரை நேர்முகத்தேர்வு செய்திருப்பேன். ஆனால் தேர்வு செய்யக்கூடியதாக இருந்தது ஒரு சீனரை மட்டுமே.. திறமையிருப்பவர்களுக்கு நான் இருக்கும் ஊர்ப்பக்கம் வர பெரிதாக விருப்பமில்லை.. வர விரும்புபவர்களுக்கு பெரிதாகத் திறமையில்லை.. :unsure:

நேர்முகத்தேர்வு செய்யும் முன்னரே வேலைக் குறிப்பைப் பார்த்து என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்வேன். இந்தியன் தாத்தாவைச் சேர்த்து பின்னாளில் அவர் வேலையை விட்டுச் செல்லும்வரையில் பெரும்பாடாகி விட்டது.. :unsure: அதனால் ஆள் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை.. பிழையான ஆட்களை எடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்..

சில முக்கியமான தகுதிகள் பொதுவில் எதிர்பார்க்கப்படும்.

 • அடிப்படை தொழில்நுட்பப் புலமை (எங்கேயெல்லாம் முன்பு வேலை செய்திருக்கிறார்கள்; எவ்வளவு காலம் என்பதை வைத்து இதை ஒரு அளவுக்குக் கணித்துவிடலாம்.)
 • மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்யும் தன்மை. (இதை நேர்முகத்தேர்வில் கொக்கி போட்டுத்தான் அறியவேண்டும். :lol: )
 • தொடர்பாடல் திறமைகள்.. (இதையும் நேர்முகத்தேர்விலோ அல்லது அதற்கு முந்திய தொலைபேசி மூலமான உரையாடலிலோ தெரிந்துகொள்ளலாம்.)
 • ஊர் மாறி வருவார்களா என்கிற கேள்வி..

வேலைக்குறிப்புகள் மேற்குலக நாடுகளில் எவ்வளவு முக்கியமானவை என்பது இதிலிருந்து விளங்கக்கூடியதாக இருக்கும். அதை வாசிக்கும்போதே அது உங்கள் சரித்திரத்தை சுருக்கமாகச் சொல்வதுபோன்று வடிவமைக்க வேண்டும். :unsure:

நான் நேர்முகத்தேர்வு செய்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படைத் தொழில்நுட்ப அறிவு குறைந்து காணப்பட்டது. பலரும் ஈரான், எகிப்து வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை தேடுபவர்கள். சீனர்களுக்கோ மொழிப்பிரச்சினை..

இந்த இடத்தில் ஈழத்தமிழரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.. :rolleyes:

(தொடரும்.)

Link to post
Share on other sites

பாகம் 32: எதிர்பார்ப்புகள்

இந்த இடத்தில் ஈழத்தமிழரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.. :rolleyes:

(தொடரும்.)

இனித்தான் திரி சூடு பிடிக்கப்போகின்றது :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாகம் 33: தமிழரால் பெருமை

என்னதான் சொன்னாலும், தொழில்துறையில் எனக்குப் பெருமை மட்டுமே தேடித்தந்திருக்கிறார்கள் என் ஈழ தேசத்தவர்கள். :D நம்மை நாமே கிண்டல் செய்வது வழமை இதே யாழ்களத்தில்.. ஆனால் எனக்கு சில ஆச்சரியமான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கின்றன. :rolleyes:

மூன்று வருடங்களுக்கு முன் நியூபிறன்ஸ்விக் மாகாணத்தில் ஒரு கிழமை தங்கியிருக்கவேண்டி வந்தது. அப்போது வேலை நிமிர்த்தமாக பிரித்தானியாவில் இருந்து வந்திருந்த ஒரு பொறியியலாளரைச் சந்தித்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எனது பூர்வீகம் பற்றிக் கேட்டார். நான் சொல்லி முடித்தபிறகு கேட்டார் அதெப்படி உங்கள் இனத்தில் மட்டும் பலரும் பொறியியலாளர்கள் அல்லது மருத்துவர்களாக இருக்கிறார்கள் என. :D

இதுதான் சந்தர்ப்பம் என எங்கள் நாட்டில் எங்கள் சமூகம் பற்றியும், இயற்கை வளம் குறைந்த நிலையில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், அதை எப்படி ஆட்சியாளர்கள் தட்டிப்பறித்தார்கள் என்பதையும், அகதிகளாக ஓடவேண்டிய நிலையையும் சுருக்கமாகக் குறிப்பிட்டேன். unsure.gif பியர் குடித்துக் கொண்டு கேட்டதால் அவரும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.. :lol:

அதேபோல போனமாதம் எங்கள் தாய் நிறுவனத்தின் (Parent Company) புதிய CEO பிரித்தானியாவில் இருந்து வந்திருந்தார். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டது. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.

என் அறைக்கு வந்ததுமே கைகுலுக்கிவிட்டுக் கேட்டார்..

"நீங்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவரா?"

(யார் இவருக்குச் சொல்லியிருப்பார்கள் என்கிற சிந்தனை எனக்குள் ஓடியது unsure.gif ).

"ஆம்.. உங்களுக்கு எப்படித் தெரியும்?" unsure.gif

"உங்கள் பெயரைவைத்தே கண்டுபிடித்துவிட்டேன்.." :wub:

எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. 'பிரித்தானியாவில் தமிழர் கலக்குகிறார்கள்தான்.. ஒத்துக்கிறேன்' :D என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.. :lol:

நான் சிங்கப்பூரில் இருந்து விடைபெறும்போது எனது மேலாளர் என்னிடம் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. 'உங்கள் நாட்டில் இருந்து வந்த வேறு யாராவது வேலை தேடுகிறார்களா?' என்று கேட்டிருந்தார். :wub: ஏதோ நம்மால் முடிந்த சேவை.. :D

(தொடரும்.)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு.

எல்லாம் தமிழர்களின் கடும் உழைப்பிற்கு கிடைத்த சன்மானம். கூலியோ, மேலேயோ முன்னுக்கு வரவேண்டும் என்ற வெறி உள்ளது.

எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. 'பிரித்தானியாவில் தமிழர் கலக்குகிறார்கள்தான்.. ஒத்துக்கிறேன்' :D என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.. :lol:

இப்பவாவது ஒத்துக் கொண்டதிற்கு நன்றி. :lol:

Link to post
Share on other sites

பாகம் 33: தமிழரால் பெருமை

நான் சிங்கப்பூரில் இருந்து விடைபெறும்போது எனது மேலாளர் என்னிடம் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. 'உங்கள் நாட்டில் இருந்து வந்த வேறு யாராவது வேலை தேடுகிறார்களா?' என்று கேட்டிருந்தார். :wub: ஏதோ நம்மால் முடிந்த சேவை.. :D

(தொடரும்.)

உயர்ந்த மனிதனாகி விட்டீர்கள் :rolleyes: 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு.

எல்லாம் தமிழர்களின் கடும் உழைப்பிற்கு கிடைத்த சன்மானம். கூலியோ, மேலேயோ முன்னுக்கு வரவேண்டும் என்ற வெறி உள்ளது.

இப்பவாவது ஒத்துக் கொண்டதிற்கு நன்றி. :lol:

இதுக்காக தலைக்கனம் பிடித்து ஆட வேண்டாம்.. :lol: உங்கள் சேவை தொடரட்டும்.. :D

உயர்ந்த மனிதனாகி விட்டீர்கள் :rolleyes:

தமிழனாகிவிட்டேன்.. :rolleyes: கருத்துக்கு நன்றிகள் வாத்தியார்.. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுக்காக தலைக்கனம் பிடித்து ஆட வேண்டாம்.. :lol: உங்கள் சேவை தொடரட்டும்.. :D

சும்மா பகிடிக்கித்தான் சொன்னேன். நொந்து கிடக்கிறோம். பிரித்தானியா என்றாலே எல்லோரும் போட்டுக் கும்முகிறார்கள். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாகம் 34: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் :lol:

எனது தொழிலில் நான் இதுவரை கற்றுக்கொண்டதை இறுதிப் பகுதியாக இப்போது எழுதுகிறேன்.

மாணவர்கள்:

சின்னவயதில் விளையாடினால், வயது போகும்போது கஷ்டம். சின்ன வயதில் கஷ்டப்பட்டால் பின்னாளில் கவலைகள் குறைவு. படிப்பில் உங்கள் பெறுபேறுகள் உயர்ந்த அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். unsure.gif

நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அதிக புள்ளிகள் எடுப்பது நல்லதல்ல என்று சில மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். :rolleyes: ஏனென்றால் அதிக புள்ளிகள் எடுப்பவர்களை நேர்முகத்தேர்வில் வேலைக்கு எடுக்க மாட்டார்களாம். ஏனென்றால் மேற்படிப்பு என்று ஓடிவிடுவார்களாம்.. :lol: இதையெல்லாம் நான் கேட்டிருந்தால் இப்போது எப்படி இருந்திருப்பேனோ தெரியாது. ஆனால் சிங்கப்பூரில் எனது முதல் வேலை கிடைக்கக் காரணம் நான் முதல் தரத்தில் சித்தியடைந்திருந்ததே..

இளநிலை ஊழியர்கள்:

கேட்டுத் தெரிந்துகொள்வதை என்றுமே அவமானமாக நினைக்காதீர்கள்.. வேடங்கள் போடவேண்டாம். தெரியாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல.. :D நீங்கள் மனம் திறந்து எனக்கு விளங்கவில்லை என்று சொல்லும்போது முதுநிலை ஊழியர்கள் சொல்லித்தருவார்கள்..

குறுகிய காலத்தில் எவ்வளவு கற்கமுடியுமோ அவ்வளவையும் கற்றுக் கொள்ளுங்கள்.. 'ஏன்' என்ற கேள்வியை எப்பவுமே உங்களுக்குள் கேட்டபடி இருக்க வேண்டும்.. :rolleyes:

அதுபோல, சக ஊழியர்களிடமும், நிர்வாகத்திடமும் என்றும் நட்புடன் இருங்கள். பிரச்சினை வரும் பட்சத்தில், வேறு வேலை பார்த்துச் சென்றுவிடுதல் நல்லது.

முதுநிலை ஊழியர்கள்:

இந்த நிலைக்கு வந்தவுடன் நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லித்தரும் பக்குவத்தில் இருக்க வேண்டும். நீங்கள் சின்ன விடயங்களை மற்றவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது உங்கள் புலமை கூடும். ஆனால் உங்களைப் பற்றிய அபிப்பிராயம் சக ஊழியர் மத்தியில் குறையும்.. :rolleyes:

உங்கள் நிறுவனத்தின் வெற்றியே உங்கள் வெற்றி. உங்களின் தகைமை நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதில் தங்கியிருக்கவில்லை.. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதிலேயே உள்ளது.

மேற்பார்வையாளர்கள்:

உங்களின் கீழ் வேலை செய்பவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுங்கள். ஆனால் அவர்கள் செய்யும் வேலைக்கு பொறுப்புக் கூறல் அவர்களிடமே உள்ளது என்பதை அடிக்கடி அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.

ஒவ்வொரு ஊழியரின் கைவண்ணமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உங்கள் கைவண்ணத்தை அவர்கள் வேலையில் திணிக்காதீர்கள். unsure.gif அது உங்கள் முகத்தை அடுத்தவரின் குழந்தையில் காண நினைக்கும் மனநிலைக்கு ஒப்பானதாகும்.. :lol: அதுமட்டுமல்லாமல், உற்சாகம் இழந்தநிலையில் அவர்கள் வேறுவேலை தேட ஆரம்பித்துவிடுவார்கள்.. unsure.gif

அன்பான தமிழ் உறவுகளே.. :D இந்த ஒரு மாதமாக என்னுடைய அறுவையை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்ட உங்கள் மன உறுதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். :lol: பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்..! :D

நன்றி. வணக்கம்.

(முற்றும்.)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாகம் 34: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் :lol:

எனது தொழிலில் நான் இதுவரை கற்றுக்கொண்டதை இறுதிப் பகுதியாக இப்போது எழுதுகிறேன்.

மாணவர்கள்:

சின்னவயதில் விளையாடினால், வயது போகும்போது கஷ்டம். சின்ன வயதில் கஷ்டப்பட்டால் பின்னாளில் கவலைகள் குறைவு. படிப்பில் உங்கள் பெறுபேறுகள் உயர்ந்த அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். unsure.gif

இது தான் இன்று நான் எனது பிள்ளைகளுக்கு சொல்லும் அறிவுரை

மேற்பார்வையாளர்கள்:

உங்களின் கீழ் வேலை செய்பவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுங்கள். ஆனால் அவர்கள் செய்யும் வேலைக்கு பொறுப்புக் கூறல் அவர்களிடமே உள்ளது என்பதை அடிக்கடி அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.

ஒவ்வொரு ஊழியரின் கைவண்ணமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உங்கள் கைவண்ணத்தை அவர்கள் வேலையில் திணிக்காதீர்கள். unsure.gif அது உங்கள் முகத்தை அடுத்தவரின் குழந்தையில் காண நினைக்கும் மனநிலைக்கு ஒப்பானதாகும்.. :lol: அதுமட்டுமல்லாமல், உற்சாகம் இழந்தநிலையில் அவர்கள் வேறுவேலை தேட ஆரம்பித்துவிடுவார்கள்.. unsure.gif

என்னுடன் அல்லது என்னிடம் வேலை செய்தவர்கள் வேறு இடங்களிலோ அல்லது வேறு ஆட்களுடனோ வேலை செய்வது மிக கடினம். அந்தளவுக்கு சுதந்திரம இருக்கும். ஆனால் செய்ய வேண்டிய வேலைகளை அவர்களை ஏவாமல் நானே தொடங்கிவிடுவேன். அவர்கள் பின் தொடர்வர். பின்னர் மெல்ல மெல்ல என்னை விலத்தி தேவையானவற்றை அவர்களே செய்து முடிப்பர். இதுவும் ஒரு தந்திரமே.

அன்பான தமிழ் உறவுகளே.. :Dஇந்த ஒரு மாதமாக என்னுடைய அறுவையை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்ட உங்கள் மன உறுதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். :lol: பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்..! :D

அவசரமாக முடித்துவிட்டது போல் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். பயன்பெற.

நன்றி. வணக்கம்.

:icon_idea: :icon_idea: :icon_idea:

(முற்றும்.)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தலைப்பையும், வாசிக்க ஆர்வமாக எழுதிய இசைக்கலைஞனுக்கு பாராட்டுக்கள். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றீ அண்ணா பயனுள்ள பதிவு வாசித்து பயன் பெற்றேன்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கோள்வம் பொத்துக்கொண்டு வருகுது போல... 😂😂 முதலில் நேர்மையாக இருப்பதென்றால் எப்படி என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.. 😏
  • இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மை. பாகித்தானில் முசிலிம்கள் பெரும்பான்மை.... அவர்களின் சமயவாதத்தை சரி என்பீர்களா.. 🤥 தமிழர்களில் வெள்ளார்கள்தான் பெரும்பான்மை.. சாதியமைப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள ஆயத்தமா.. ☹️ இந்த நடுநிலையாளர்களால்தான் இந்த உலகுக்கே அவமானமும் பேரழிவும்.😡 யதார்த்தவாதிகளாம் தாங்கள்... 🤮
  • யாழ் – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு – முன்பதிவுகளையும் மேற்கொள்ள முடியும்    5 Views நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீண்ட தூர ரயில் சேவைகள், நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் நேற்று புறப்பட்டன. காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் உத்தரதேவி கடுகதி ரயிலும் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 மணிக்கு புறப்படும் யாழ்.தேவி ரயில் சேவையும் நேற்று ஆரம்பமாகின. அவ்வாறே கல்கிசையில் இருந்து காலை 5.55 மணிக்கும் கொழும்பிலிருந்து 6.35 மணிக்கும் புறப்படும் யாழ்.தேவி ரயிலும் முற்பகல் 11.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயிலும் நேற்று சேவையை ஆரம்பித்தன. ஏனைய ரயில் சேவைகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும். கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் இரவு தபால் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும். அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விவரங்களுக்கு 021- 222 2271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும். பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, ரயிலில் பயணத்தை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.   https://www.ilakku.org/?p=39705    
  • நீதியின் தோல்வி – சர்வதேச மன்னிப்புச்சபை  29 Views தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உட்பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள இன்னுமொரு கவலை தரும் மைல்கல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கு குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிப்பது குறித்தஆர்வம் எதனையும் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/?p=39697
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.