Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

இப்படி இருந்தும் எதற்காக உங்களை அவர்கள் வேலையில் சேர்த்தார்கள் என எண்ணுகிறீர்கள்? குறிப்பாக அந்த வெற்றிக்கான காரணங்கள் என்ன?

நீங்கள் உங்களை எப்படிக் காண்பிக்கிறீர்கள் என்பதில் பாதி தங்கியிருக்கிறது என நினைக்கிறேன்.. :unsure:

எல்லாம் தெரிந்த ஒருத்தனை வேலைக்கு எடுக்க வேண்டுமானால் தெரிந்தவர் எல்லோரும் ஓய்வு பெற்றவுடன் அந்த வேலையைச் செய்ய ஆளிராது. ஆக, வேலை தெரியாத ஆட்களையும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்தாக வேண்டும்.. :rolleyes:

அவர்கள் எதிர்பார்ப்பது, என்னால் செய்யமுடியும் என்கிற உங்கள் உறுதியான வார்த்தைகளை.. அதற்காக ஓவர் பில்டப் குடுக்கக் கூடாது.. அதை நிருபிப்பதற்கு இதற்குமுன் எவ்வாறான சவால்கள் எழுந்தன.. அதை எப்படி சமாளித்தோம் என்று கூறி அவர்களின் கருத்தைக் கவரலாம்..

அந்த நேரத்தில் அப்படிக் கூறுவதற்கு என்னிடம் எதுவும் பெரிதாக இல்லை.. ஆனால் நான் செய்த புரொஜெக்டில் வடிவமைப்பு வேலை முழுவதையும் நானே செய்தேன்.. ஒரு வகுப்புத்தோழர் அறவே பங்கெடுக்கவில்லை (ஏதோ மண்டைப் பிழைமாதிரி வந்து ஊருக்குப் போய்விட்டார்..) மற்றையவர் பேராசிரியருடன் கலந்துரையாடுவது, பேப்பர் வேலைகள் செய்தார்.. அதைச் சொல்லி சமாளித்தேன்..

அதுமட்டுமில்லாமல், எனது சுயவேலை அனுபவத்தையும் சொல்லியிருந்தேன். பிறகு கேள்விப்பட்டேன் எனது முதல்தர கல்வித் தகைமை உதவியதாக.. அதுபோல அந்த நிறுவனத்தில் ஏற்கனவே ஒரு தமிழகத்தவர் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் எனது கல்லூரியின் தகைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.. இப்படிப் பல காரணங்கள்..! :rolleyes:

Link to post
Share on other sites
 • Replies 346
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலை கிடைப்பதில், நேர்முகப்பரீட்சையில், என்னென்ன தவறுகளை நீங்கள் செய்யவில்லை?

இங்கே சொல்லப்படும் 'கண்ணும் கண்ணும் கலப்பது' (eye contact) அங்கு முக்கியமாக இருந்ததா?

இங்கு பொதுவாக உறுதிப்படுத்தல் (reference check) செய்வார்கள், செய்தார்களா? ஏன் செய்யவில்லை?

Link to post
Share on other sites

வேலை கிடைப்பதில், நேர்முகப்பரீட்சையில், என்னென்ன தவறுகளை நீங்கள் செய்யவில்லை?

இங்கே சொல்லப்படும் 'கண்ணும் கண்ணும் கலப்பது' (eye contact) அங்கு முக்கியமாக இருந்ததா?

இங்கு பொதுவாக உறுதிப்படுத்தல் (reference check) செய்வார்கள், செய்தார்களா? ஏன் செய்யவில்லை?

கண்ணும் கண்ணும் பார்ப்பது என்பதை நான் இன்றுதான் அறிகிறேன்.. :unsure:

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நீங்களே நம்பவேண்டும்.. அது உங்கள் உடல்மொழியில் (Body Language) வெளிப்படும்.. :rolleyes:

முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன்.. எனக்கு Microsoft office, AutoCad தெரியும் என்று Resume இல்போட்டிருந்ததாக.. ஆனால் அவற்றில் எனக்கு ஆற்றல் இருந்திருக்கவில்லை.. :D

ஆனால் என்னை நானே சமாதானம் (சப்பைக்கட்டு :D ) செய்து அதை ஒரு பொய் இல்லை என்பதுமாதிரி நம்பிக் கொண்டேன்.. எப்படி?

Microsoft word, Excel.. இரண்டையும் நண்பர்களின் வீட்டில் ஓரளவு பரீட்சயப் படுத்தி வைத்திருந்தேன்.. ஆக அது தெரியும்.. :D எவ்வளவு தெரியும் என்பதுதான் கேள்விக்குறி.. :lol:

கல்லூரியில் AutoCad இல் இரண்டுதடவை தடவியிருக்கிறேன்.. :D ஆக அதுவும் எனக்கு "தெரியும்" :D. ஆனால் எந்த அளவில் என்பதுதான் கேள்வி.. :lol:

ஆக, இந்த இரு விடயங்களையும் நான் முதலில் நம்புவேன்.. எவ்வளவு என்று கேட்டால் பெரிதாக இல்லை என்று உண்மையைச் சொல்வேன்.. அதனால் உடல்மொழி பாதிக்கப் படாது.. :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.

என்ன துறை என்பதையும் பொறுத்தது அகூதா. சிலவற்றிற்கு inter personnel skills முக்கியம். சிலவற்றிற்கு tech skills முக்கியம்.

finance, sales , management என்பவற்றில் நிறைய people skill எதிர்பார்ப்பார்கள்.

Link to post
Share on other sites

மற்றையது சிங்கப்பூரில் Reference Check என்பது இல்லை.. உங்கள் கல்விச்சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் இன்னபிற சான்றுகளையும் பரிசோதித்துவிட்டுத்தான் வேலை தருவார்கள்..! :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் இசை

Link to post
Share on other sites

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

உங்களின் அனுபவங்களையும் எடுத்து விடுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

ஆமா தெரியாது.

அதை நாம் தெரிந்து கொள்வதில் தங்களுக்கு என் ன வியப்பு? :( :( :(

Link to post
Share on other sites

சுமார் எட்டு வருசத்திற்கு முன்னர் பிரபல இரவு விடுதியான HAVANA CLUB வேலை செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது எனது மகளும் பிறந்திருந்த நேரம் தொடந்தும் இரவு விடுதியில் வேலை செய்து கொண்டிருக்க முடியாது என்று தீர்மானித்திருந்தேன் காரணம் இரவு 6 மணிக்கு வேலை தொடங்கினால் மறுநாள் காலை 5 மணிக்குத்தான் வேலை முடியும் அது மட்டுமல்ல அதி உயர் நாகரீகம் என்கிற அத்தனை விடயங்களும் நடந்தேறும் இடம் அரைகுறை ஆடைகளும் ஆடை அவிழ்ப்பு நடனங்களும் நடக்கும் இடம். எனவே அவை தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கும் என்பதால் வேலையை மாற்ற திட்டமிட்டு பத்திரிகை விழம்பரமும் கொடுத்து விட்டு அதோடு நான் வேலை செய்யும் விடுதிக்கு பெரிய முதலாளிகள் பணக்காரர்கள் எல்லாரும் வந்து போவதால் தெரிந்தவர்களிடமும் வேலை தேடுவதாக சொல்லி வைத்திருந்தேன்

அப்படித்தான் விடுதிக்கு வந்து போகும் ஒரு உணவு விடுதியின் முதலாளி பெண் ஒருவர் 55 வயதுகள் இருக்கும் தன்னுடைய உணவு விடுதிக்கு நடத்துனர் ஒருவர் தேவை தன்னை வந்து பார்க்க சொல்லியிருந்தார். அவர் ஏற்கனவே பழக்கமானவர் என்பதால் சாதாரணமாக என்னுடைய பயோடேட்டாவை மட்டும் தயார்பண்ணி எடுத்துக்கொண்டு போயிருந்தேன்.

அவர் என்னை நேர்முக தேர்விற்கு வரச்சொன்ன இடம் அவரது உணவு விடுதிக்கல்ல அவரது வீட்டிற்கு. என்னை வரவேற்றவர் கேள்விகளை தொடங்கினார்..

நீதான் உணவு விடுதியை பொறுப்பாக நடத்தவேண்டும் அதாவது ஒரு பணியாள் இல்லாவிட்டாலும் அந்த இடத்தை உடனடியாக நீதான் நிரப்ப வேண்டும்.

உனக்கு பிட்சா போடத் தெரியுமா??

ஒரு தடைவை பார்த்தால் செய்துவிடுவேன்.

சாண்விச் செய்ய வருமா??

ஒரு தடைவை பார்தால் செய்து விடுவேன்

உணவு பரிமாறத் தெரியுமா??

ஒரு தடைவை செய்து பார்த்தால் அடுத்த டைவை செய்து விடுவேன்.

என்னை எத்தனை தடைவை பார்த்திருக்கிறாய்

பலதடைவைகள்

அப்பொழுது ஏன் இன்னமும் எதுவுவே செய்யவில்லை???

பி.கு ..எனக்கு அந்த வேலை கிடைத்து விட்டிருந்தது. <_< <_<

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை தொடருங்கள்

547112_262920013801426_100002502872915_563735_161252234_n.jpg

Link to post
Share on other sites

நன்றிகள் சாத்திரி அண்ணா உங்கள் அனுபவக் குறிப்பிற்கு.. :D தெரியாது என்று சொன்னாலும் வேலை கிடைக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதற்கு உங்கள் அனுபவம் ஒரு சான்று. உடல்மொழியும், Presentation உன் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள்.

Link to post
Share on other sites

பாகம் 12: வேலை கிடைத்தால் மட்டும் போதுமா?

திங்கட்கிழமை முதல்நாள் வேலை. எப்படியும் ஒரு கருணைக்காலம் (Grace Period) இருக்கும் என்று மனம் சொன்னது. ஆனால் அங்கு எவ்வாறு வேலை நடைபெறுகிறது என்பதில் எனக்கு ஒரு ஞானமும் இல்லை. :rolleyes:

தொடக்க நாளில் மரியாதை பரவாயில்லை. எல்லோருடனும் கதைப்பது; மதிய உணவு என்று நேரம் போனது. அங்கே இரண்டு மென்பொருட்களை உபயோகித்தார்கள். பஞ்சைத் தவிர வேறு மென்பொருட்களை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. :lol: அந்த மென்பொருள் உபயோகிப்பதற்கான இரு பெரிய புத்தகங்களைக் கொடுத்த அதைப் படித்துப் பரீட்சயப் படுத்தும்படி கேட்டிருந்தார்கள். unsure.gif

நானும் வாசிக்கிறேன்.. வாசிக்கிறேன்.. நித்திரைதான் வருது.. கணினியில் சென்று பயிற்சி செய்யலாம் என்றால் கணினியை இயக்குவதற்கே முதலில் எனக்குப் பயிற்சி தேவையாக இருந்தது. :D அங்கிருந்தவர்களிடம் கேட்டு ஒரு மாதிரி பரீட்சயப்படுத்திக் கொண்டிருந்தேன்.

அங்கே மென்பொருளுக்கான லைசென்ஸ் குறைவாக இருந்ததால், அந்தக் கணினிகள் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே நான்கு வடிவமைப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் மூன்று கணினிகள்தான். இதில் நான் எங்கேபோய் பயிற்சி செய்வது. சிதம்பரசக்கரத்தைப் பேய்பார்த்த கதைதான்.

ஒரு இரண்டு கிழமைகள் கடந்திருக்கும்.. :unsure: அங்கிருந்த தொழில்நுட்ப மேலாளருக்கு என்னில் குறைபாடுகள் தெரிய ஆரம்பித்துவிட்டது. என்னிடம் இரண்டு பெரிய வேலைத்திட்டத்தைக் கொடுத்துவிட்டார். அதாவது இதைச் செய்து காட்டுங்கள்.. இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்புவோம் என்பது போன்ற சமிக்கை. :unsure:

முதலாவது வேலைத்திட்டம் ஒரு நான்கு அடுக்குகள் கொண்ட தொழிற்சாலை. கனதியான பாரங்கள் சுமக்குமாறு அதன் தளம் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய ஒப்பந்தத்தொகை, பொருட்களின் அளவுகள் ஏற்கனவே நிர்ணயமாகிவிட்டது. அந்தத் தொகைக்குள் வடிவமைப்பை முடிக்க வேண்டும். :unsure:

இரண்டாவது வேலைத்திட்டம், ஏற்கனவே இருக்கும் நிலக்கீழ் சுரங்கப் பாதை (subway அல்லது tube அல்லது Mass Rail Transit) யின் மேலாக நீரைக் காவிச்செல்லும் கொங்கிரீட்டிலான அமைப்பு. அதன் பாரம் சுரங்கத்தின் மேல் இறங்காதவாறு வடிவமைக்க வேண்டும்.இதற்குமேலாக நிலமட்டத்தில் பெருந்தெருவும் இருக்கிறது. அதன் பாரத்தையும் இந்த நீர்க்காவி சமாளிக்க வேண்டும். இதுதான் என்னுடைய இரண்டாவது புரொஜெக்ட். :D கணினியையே தடவிக்கொண்டிருந்த எனக்கு அது தேவைதான்.. :lol:

நான் இரண்டாம் மாதத்தில் இந்த இரண்டு வேலைத்திட்டங்களையும் முடித்துவிடுவேன் என எதிர்பார்த்தார்கள். ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் என்னால் முடிக்க முடியவில்லை. ஏதாவது பிழை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். :unsure:

மூன்றுமாதங்கள் அவதானிப்புக் காலம் (Probationary period). என்னை வேலையில் இருந்து நீக்குவது குறித்து அந்த தமிழகத்து ஊழியருடன் என் மேலாளர் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. :unsure:

(தொடரும்.)

Link to post
Share on other sites

பாகம் 13: முயற்சி திருவினை ஆக்கும்.

தமிழகத்து நண்பர் எப்படியோ பேசி ஒருவாறு நிகழவிருந்த வரலாற்றுத் தவறைத் தடுத்துவிட்டார்..! :D நான்கு மாதங்கள் பார்ப்பதென முடிவெடுத்திருக்கிறார்கள். இது பின்னாளில் எனக்குத் தெரியவந்தது. இத்தருணத்தில் அந்த நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். :rolleyes:

இது சரிவராது என்று எனக்கு விளங்க ஆரம்பித்தது. ஐந்து மணிக்கு வேலை முடியும் என்றால் ஏழுமணிவரை நின்று வேலையைக் கற்க முயற்சி செய்தேன்..! :unsure: ஏட்டுக்கல்வி என்பது ஒரு அளவுவரைதான். உண்மையான வேலை என்பது வேறுபல நுணுக்கங்களைக் கொண்டது. இன்று நான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அன்று அவர்கள் என்னை நீச்சல்குளத்தின் ஆழமான பகுதியில் தள்ளிவிட்டதுதான் காரணம். :rolleyes:

அங்கிருந்த புத்தகங்களைப் படித்து மென்பொருளில் இருந்த குறைபாடுகளைக் கண்டுபிடித்து ஒரு நிலைமைக்கு வர ஒரு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. நாலாவது மாதத்தின்பின் என் செயற்பாடுகளில் தென்பட்ட முன்னேற்றங்களை அடுத்து என்னை நிரந்தரமாக்கி விட்டார்கள். :D

அந்தக் காலகட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குதிரைப் பந்தயத்தில் நொண்டிக்குதிரைபோல் நான் ஓடிக்கொண்டிருந்தேன். இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இலங்கைக்குத் திரும்பிவிடலாமா என்றும் யோசித்ததுண்டு. :rolleyes:

பிற்பாடு ஒரு முடிவுக்கு வந்தேன். இந்த நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு நான் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். என்னை வேண்டாம் என்றவர்கள் போகாதே என்று தடுக்க வேண்டும். இதுதான் லட்சியம். :rolleyes:

ஒரு வருடம் கழிகின்றது. ஓரளவு சூட்சுமங்களைப் புரிந்துகொண்டுவிட்டேன். வேலைக்குப் பாதிப்பில்லை. பகுதிநேரமாக முதுகலைப் பட்டம் பெறுவது அப்போது நடந்துகொண்டிருந்தது. நானும் எனது நிறுவனத்தில் கேட்டுப் பார்த்தேன். ஏற்கனவே ஒரு சீனப் பெண் அந்த அனுமதியைப் பெற்றுவிட்டதாகவும் இரண்டுபேரை அனுப்ப இயலாது என்றும் சொல்லிவிட்டார்கள். கறள் நம்பர் 2. :D

இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. நான் இப்போது தேர்ந்துவிட்டேன். அப்போது பொருளாதார மந்தநிலை நிலவியது. எங்கள் நிறுவனத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேலையில்லை. ஆனால் மில்லியன் டொலர்கள் பெறுமானமுள்ள ஒப்பந்தங்கள் எப்படியோ என்னால் பெற்றுவிடக்கூடியதாக இருந்தது. வடிவமைப்பில் நெளிவு சுளிவுகளை அறிந்து சிக்கனமான தொகையைவேலைத்திட்டங்களுக்கு சமர்ப்பிப்பேன். அதே தொகைக்குள் திட்டங்களையும் முடிப்பேன். மேலாளர்களுக்கு என்மீது நல்ல மதிப்பு வந்துவிட்டது. அடிக்கடி பல்லைக் காட்டுவார்கள். :D

அச்சமயத்தில் அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்த ஒரு சீனியர் வடிவமைப்பாளருக்கும் நிறுவனத்திற்கும் பிரச்சினை வந்துவிட்டது. அவரால் வேலைகள் எடுத்துத்தர முடியவில்லை. அவரை நிறுவனத்தை விட்டு அனுப்பிவிட்டார்கள். அவர் இடத்திற்கு என்னை சீனியராக தரம் உயர்த்தினார்கள்..! கட்டடங்கள், பாலங்கள் என்று பல விடயங்களைக் கற்றுத் தேர்ந்தேன்.

(தொடரும்.)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் எதோ எனக்கு சம்பந்தம இல்லாத பகுதி என்டு நினைத்து இதுக்குள்ள வராமல் இருந்துட்டன்.வந்து பாத்தால் இசையின எழுத்து நடையில் மயங்கி ஒரே மூச்சில் எல்லாத்தையும் வாசித்து முடித்து விட்டேன். அது சரி அந்த டாவுக்கு என்ன நடந்தது. ஒரு சின்ன ஆர்வம்தான். :lol:

Link to post
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயய்யோ இப்படியா நடந்திச்சு.....ரொம்பப் பாவமா இருக்கு :D :D :lol:

Link to post
Share on other sites
:D :D :D
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை கேட்கிறேன் என்று கோபப்படக்கூடாது...இப்படி அழுதழுது கட்டி பிறகு எப்படி இப்போது ஒரு பொண்ணுக்கு அப்பாவாக?..... வழியில்லை என்று அழுது ஓய்ஞ்சுபோய் உங்களை நீங்களே தேத்திக்கிட்டீங்களா? :D

Link to post
Share on other sites

இசை கேட்கிறேன் என்று கோபப்படக்கூடாது...இப்படி அழுதழுது கட்டி பிறகு எப்படி இப்போது ஒரு பொண்ணுக்கு அப்பாவாக?..... வழியில்லை என்று அழுது ஓய்ஞ்சுபோய் உங்களை நீங்களே தேத்திக்கிட்டீங்களா? :D

சீ.. அது சும்மா பகிடிக்கு.. :D உண்மையில் கந்தர்வ மணம் செய்தேன்..! :icon_mrgreen:

Link to post
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

இசை இரண்டு கையாலும் தலையை சொறியும் காட்சியை கற்பனை செய்து பார்த்த போது...

:lol: :lol: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகம் 13: முயற்சி திருவினை ஆக்கும்.

அங்கிருந்த புத்தகங்களைப் படித்து மென்பொருளில் இருந்த குறைபாடுகளைக் கண்டுபிடித்து ஒரு நிலைமைக்கு வர ஒரு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. நாலாவது மாதத்தின்பின் என் செயற்பாடுகளில் தென்பட்ட முன்னேற்றங்களை அடுத்து என்னை நிரந்தரமாக்கி விட்டார்கள். :D

வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் பல்கலைக்கழகங்களில் கற்கவேண்டியது : 'எவ்வாறு புத்தகங்களை இல்லை கணனியில் விடயங்களை வேலைக்கு ஏற்றவாறு அறியக்கூடிய இயலுமை'.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அப்போது பயன்படுத்திய மென்பொருள்களின் பெயர்களையும் இப்போது பயன் படுத்தும் மென்பொருள்களின் பெயர்களையும்

எழுதலாம் எண்டால் எழுதுங்க..

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.