Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பாகம் 17: மீள ஒழுங்கமைத்தல்

உறவினர் வீட்டில் இருந்து ஒரு பேஸ்மென்ட் வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, தளபாடங்கள் வாங்குவது என காசு மேலும் கரைந்தது. அச்சமயத்தில், நான் ஒரு மரத் தளபாடங்கள் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதுகுறித்து முன்பு ஒரு பதிவு போட்டதாக ஞாபகம். :rolleyes:

கனடாவுக்கு வந்து ஒரு நன்கு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நிறுவனதில் இருந்து தொலைபேசி அழைப்பு. பேசியவர் என்னைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார். இன்னொரு நாளில் பேசுவதாகக் கூறி வைத்துவிட்டார். ம்ற்றொரு நாளில் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் ஃபியூஸ் போய் (Trip) அழைப்பு நின்றுவிட்டது. அதன்பிறகு அவரைப் பிடிக்க முடியவில்லை. :unsure:

எனது வேலைதேடும் அணுகுமுறையில் ஏதோ பிழையிருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், பொறியியளாளர் அமைப்பில் இருந்து ஒரு கடிதம் வந்தது. எனது கல்வித்தகுதி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு விட்டது. எனது சிங்கப்பூர் வேலை அனுபவத்தையும் Reference மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டார்கள். இப்போது எனக்கு இரண்டு தெரிவுகள் தரப்பட்டிருந்தது. ஒன்று 3 தொழில்நுட்பப் பரீட்சைகள் எழுதுவது. அல்லது நேர்முகத் தேர்வுக்குச் செல்வது.

இவையள் என்ன சொல்லுறது.. நாங்கள் என்ன தேர்வு எழுதுவது என்று நேர்முகத்தேவை தெரிவு செய்து கடிதம் அனுப்பினேன். :wub:

மரவேலைக்குத் தொடர்ச்சியாகச் சென்றுகொண்டிருந்ததால் எனது துறையில் வேலைதேடும் ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கி விட்டிருந்தது. :unsure: ஒருநாள் எனது மனநிலை குறித்து மனைவியிடம் கூறினேன். நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம்; நான் மட்டும் போகிறேன். நீங்கள் வேலைக்கு மட்டும் முயற்சி செய்யுங்கோஎன்று சொன்னா. :D

நானும் சரியென்று வீட்டிலிருந்து வேலை தேட ஆரம்பித்தேன். மனைவி என்னை வைத்து கஞ்சி ஊத்தினா. :lol: (பகிடியாகச் சொன்னாலும், என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்று நான் பூச்சியம். :unsure: ) இப்பவும் பூச்சியம்தான் எண்டு யாரோ சொல்லுறது காதில் விழுகிறது. :lol:

அப்போது இணையத்தில் ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அவர்களிடம் AutoCAD, ஒன்ராரியோவின் கட்டட ஒழுங்கமைப்பு (Ontario Building Code) ஆகியவற்றை மூன்று மாதங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதை முடித்தவுடன் அவர்களுக்குத் தெரிந்த பொறியியல் நிறுவனங்களில் Co-op அடிப்படையிலான வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். :rolleyes:

அட.. இது பரவாயில்லையே என்று தோன்றியது. மனையாளிடம் பேசிவிட்டு, விண்ணப்பம் போட்டு வைத்தேன். மொத்தமாக $2800 கல்வித்தொகை. :unsure:

(தொடரும்.)

Link to post
Share on other sites
 • Replies 346
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

மனையாளிடம் பேசிவிட்டு, (தொடரும்.)

மனைவியே மந்திரி :icon_idea:

பல முறை நிரூபிக்கப்பட்டாலும் இன்னும் இதை பின் பற்ற முடியவில்லை.

வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை தொடர்கிறது. :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போது இணையத்தில் ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அவர்களிடம் AutoCAD, ஒன்ராரியோவின் கட்டட ஒழுங்கமைப்பு (Ontario Building Code) ஆகியவற்றை மூன்று மாதங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதை முடித்தவுடன் அவர்களுக்குத் தெரிந்த பொறியியல் நிறுவனங்களில் Co-op அடிப்படையிலான வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். :rolleyes:

இவ்வாறான அணுகுமுறைகள் பொதுவாக நல்ல பயனைத்தரும்.

உதாரணத்திற்கு பொறியியல் துறைக்கு பெயர்போன வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உள்ள கோஆப் திட்டங்கள் படிக்கும்பொழுதே

கடனை அடைக்கவும் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் வழிசமைக்கின்றன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பகிர்வு மேலும் தொடர்க. :D

Link to post
Share on other sites

அருமை இசை அண்ணா. இண்டைக்குத்தான் கண்ணில தட்டுப் பட்டுது, உடனேயே வாசிச்சு முடிச்சிட்டன். குறிப்பா உங்கள் நகைச்சுவையான எழுத்து நடை அருமை. கண்டிப்பா பலருக்கு பிரயோசனமாக இருக்கும். எனக்கு கன professional interview போய் பழக்கமில்லை. முதலாவது போன நேர்முகத் தேர்விலேயே வேலை கிடைத்துவிட்டது. எனது அனுபவங்களையும் இன்னொரு திரியில் பதியும் யோசினையை தந்து விட்டீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அம்மாடியோவ் இவ்வளவு பக்கமா கொஞ்சம் நிறுத்தி வையுங்கள் இசை அண்ணா நான் படிச்சு முடிக்கும்வரை... நல்ல தொடர் இசை அண்ணா தொடருங்கள்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான.. லொள்ளுடன், தொடர் நன்றாக உள்ளது இசை. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆர்வத்துடன் கல்விக்குச் செலவழிக்கும் பணம், எதிர்கால நல்வாழ்விற்கான முதலீடு. முன்பு இரண்டு நாட்களில் ஒரு மென்பொருள் கற்பதற்காக எண்ணூறு பவுண்ட்கள் கட்டினேன். அந்த மென்பொருள் அறிவு நல்லதொரு தொழிலைப் பெற்றுத்தந்தது.

நேர்முகத் தேர்வு செய்பவர்களுக்கும், தாங்கள் சரியான நபரைத் தெரிவு செய்ய வேண்டுமே என்ற பயமிருக்கும். இதை முன்னைய வேலையில், நேர்முகத் தேர்விற்கான தொழிநுட்ப வசதிகளை நேர்முகத் தேர்வாளர்களுக்கு செய்து கொடுக்கும் பொழுது கண்டிருக்கிறேன்.

ஒருமுறை வேலைக்கு பிழையான ஒருவரை நேர்முகத் தேர்வாளர் தெரிவு செய்த பொழுது 'முக்காடு போட்டுட்டா இவனை interview செய்தனீர் ' என சக ஊழியர் அவரை ஏசினார். :lol:

நிரந்தர வேலைக்கும் (Permanent ), தற்காலிக வேலைகளுக்கும் (Contract) நடக்கும் நேர்முகத் தேர்வுகள் வேறு வேறாக இருக்கும். தற்காலிக வேலை செய்வதால் அடிக்கடி நேர்முகத் தேர்வுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் (Hire and Fire) வேலைக்கு எடுப்பதால், அந்த வேலையை செய்வதற்கான தகுதி உங்களுக்கு உள்ளதா என்ற அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்படும். Where Do You See Yourself Two Years from Now? போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஒரு ஒருமுறை பெண் நேர்முகத் தேர்வாளர் இந்தக் கேள்வியைக் கேட்ட பொழுது, நான் சொல்ல வந்த பதிலை <_< நினைத்துச் சிரித்து விட்டேன்.

நீண்ட காலத்திற்குப் பின் மனைவியைப் போற்றி புகழ்ந்து வந்ததொரு தொடர்.

:D

திருத்தியமைக்கான காரணம்: தடித்த எழுத்திலுள்ள வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கமளித்த விசுகு அண்ணா, அகூதா, நிலாமதி அக்கா, தும்பளையான், சுஜி, தமிழ்சிறி, தப்பிலி.. உங்களுக்கு எனது நன்றிகள்..! :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாகம் 18: குறைபாடுகள் களைதல்

சிங்கப்பூரில் AutoCAD "தெரியும்" :D என்று சொன்னாலும் அங்கே அதை உபயோகிக்கவேண்டிய தேவை வரவில்லை.. அதற்கென வல்லுனர்கள் இருந்தார்கள். அதனால் பிரச்சினைகள் இல்லாது போய்விட்டது. ஆனால் எனக்கு அதைக் கற்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது.

அதேபோல கணினி அறிவு கம்மியாக :D இருந்த கவலையும் அப்போது இருந்தது. அதனால் $400 கட்டி விசுவல் பேசிக் (Visual Basic) சிங்கப்பூரில் கற்றுக்கொண்டேன். :D பிறகு புத்தகங்களையும் வாங்கி அதைப் படித்து, சிம் லிம் சதுக்கத்தில் $5 க்கு விசுவல் பேசிக் இறுவட்டு வாங்கி நிறுவி வைத்துக்கொண்டேன். வேலையால் வீட்டிற்கு வந்தபிறகு மென்பொருள் எழுத ஆரம்பித்துவிடுவேன். :wub: பிறகு எனது மென்பொருளை எங்கள் நிறுவனத்தில் உள்ள வரைதல் வல்லுனர்களை உபயோகிக்கக் கொடுத்தேன்.

எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று யாராவது சொன்னால் பிரெஞ்சும் தெரியும் என்று காட்ட வேண்டும் என்பதுதான் என் பொலிசி. :D

ஆனால் நான் சிங்கப்பூரில் AutoCAD வகுப்புகளுக்குச் செல்லவில்லை. அவர்கள் வரையும்போது பின்னால் நின்று கட்டளைகள் வழங்கிக்கொண்டிருப்பேன். :D அதனால் அவர்கள் எப்படி வரைகிறார்கள் என்பதில் ஒரு அறிவு இருந்தது. ஆனால் தேர்ச்சி இருக்கவில்லை.

கனடாவில் சிவில் பொறியியலாளர் என்றால் AutoCAD தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலே பம்மாத்து விட முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால் எனது வேலைக்குறிப்புகளில் AutoCAD தெரியுமென்று போடவில்லை. சின்னப்பையன்கள் ஏமாத்தி விளையாடலாம். ஒரு நிலைக்கு வந்துவிட்டால் ஏமாற்று, பம்மாத்துகளைக் குறைத்துவிட வேண்டும். நான் கனடாவில் மூன்று மாதங்கள் படிக்கச் சென்றதற்கு இது ஒரு முக்கிய காரணம். unsure.gif

இவ்வாறு நான் படிக்கத் தயாராகும் வேளையில் பொறியியல் அமைப்பில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு வரும்படி கேட்டார்கள். ரொராண்டோவில் இருந்த அவர்களது அலுவலகத்திற்கு அந்த நாளில் சென்றேன். எனக்கு சிங்கப்பூர் நிறுவனம் பரிசாக வழங்கிய அந்தக் கழுத்துப்பட்டியை அணிந்து சென்றேன். அதில் எனக்கொரு பெருமை. :D தன்னம்பிக்கையும் நிறைய வரும்.

நேர்முகத் தேர்வுக்கு பழைய வேலை அனுபவத்திற்கான வரைபடங்கள் இருந்தால் எடுத்துவரச் சொல்லியிருந்தார்கள்.

நேர்முகத்தேர்வில் எனது துறையில் வல்லுனர்கள் இரண்டுபேர். ஒரு காரியதரிசி. இன்னுமொரு ஊழியர் எனது ஆங்கில உரையாடல் திறமையைக் குறிப்பெடுக்க. unsure.gif

எனது வேலை அனுபவங்களை விளக்குமாறு கேட்டார்கள்.

"Tell us about yourself!" :lol:

உள்ளதிலேயே சிக்கலான ஒரு வேலைத்திட்டத்தின் வரைபடங்களை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கவும், யாரும் ஏதும் கேள்வி கேட்பதாகக் காணோம். அவர்களுக்கு நான் ஒரு வாத்தியார் போலவும், அவர்கள் இதை எப்பிடி செய்தீர்கள், அதை எப்பிடி செய்தீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். :D

இவர்களுக்கு என் துறையில் அனுபவமில்லை என்பது பிறகுதான் விளங்கியது. ஏனென்றால் நான் செய்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் பிரபலம். கனடாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் அதை அப்போதிருந்த அறிவுடன் பாவித்து, துருப்பிடிக்கும் பிரச்சினையால் கைவிட்டுவிட்டார்கள். unsure.gif

இறுதியில், அத்திவாரம் வடிவமைப்பது பற்றி இரண்டு கேள்வி கேட்டுவிட்டு முடித்துவிட்டார்கள்.

ஒரு சில வாரங்களில் நான் சித்தியடைந்துவிட்டதாகவும், Engineering Law and Ethics ஆகிய இரண்டு தேர்வுகளை எழுத அனுமதி வந்தது. இதை பொறியியலாளராகப் போகும் அனைவரும் எழுத வேண்டும். இவற்றிலும் சித்தியடைந்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் ஒரு பொறியியலாளரின் மேற்பார்வையின்கீழ் வேலை செய்துவிட்டேன் என்றால் பொறியியலாளர் உரிமம் கிடைத்துவிடும்.

ஆனால் இன்னொரு பொறியியலாளரின் கீழ் வேலை செய்யவேண்டுமென்றால் முதலில் வேலையை எடுக்க வேண்டும். அதற்கு பொறியியலாளர் உரிமம் வேண்டும் என்கிறார்கள். Catch 22 நிலைமை. unsure.gif

சரி. முதலில் AutoCAD படிப்போம் என வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். மனைவி தொடர்ந்தும் கஞ்சி ஊத்தினா. :D

(தொடரும்.)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

ரதியின் எதிர்காலத்துக்கான முக்கிய கேள்வி இது?

பதில் உடன் தாருங்கள் இசை??? :lol::D :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இன்னொரு பொறியியலாளரின் கீழ் வேலை செய்யவேண்டுமென்றால் முதலில் வேலையை எடுக்க வேண்டும். அதற்கு பொறியியலாளர் உரிமம் வேண்டும் என்கிறார்கள். Catch 22 நிலைமை. unsure.gif

இந்த கட்ச் 22 என்பது வேலை தேடுவதில் உட்பட பல இடங்களில் வாழ்க்கைக்கு சவாலாக உள்ள விடயம்.

பொதுவாக மேலே இன்னொரு உறவு குறிப்பிட்டது போன்று ' அனுபவம் இருந்தால் தான் வேலை, வேலை இருந்தால் தான் அனுபவம் கிடைக்கும்' (கோழியா இல்லை முட்டையா... :D ).

பொதுவாக இவ்வாறான பிரச்சனையை தீர்க்க ஒன்றில் வேலை அனுபத்துடன் கூடிய கல்வி இல்லை சம்பளம் இல்லாத / சம்பளம் குறைந்த வேலைகள் கைகொடுக்கும். இதற்கும் எம்மவர்கள் எம்மவர்களுக்கு உதவ வேண்டும், தமது நிறுவனத்தில் வேலைகளை இளையோருக்கு கொடுக்கவேண்டும், தெரிந்த இடங்களில் சேர்த்து தூக்கிவிடவேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

ரதியின் எதிர்காலத்துக்கான முக்கிய கேள்வி இது?

பதில் உடன் தாருங்கள் இசை??? :lol::D :D

மனிசிமார் பொல்லாத ஆட்கள்.. :D புருசனை கொஞ்சம் முன்னுக்குத் தள்லிவிட்டால் தாங்கள் ஜாலியா இருக்கலாம் எண்டு அவைக்குத் தெரியும்.. :lol:

2005 இல இருந்து ஆள் வேலைக்குப் போறேல்ல.. :wub:

கருத்துக்கு நன்றிகள் அகூதா..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனிசிமார் பொல்லாத ஆட்கள்.. :Dபுருசனை கொஞ்சம் முன்னுக்குத் தள்லிவிட்டால் தாங்கள் ஜாலியா இருக்கலாம் எண்டு அவைக்குத் தெரியும்.. :lol:

2005 இல இருந்து ஆள் வேலைக்குப் போறேல்ல.. :wub:

கருத்துக்கு நன்றிகள் அகூதா..

எல்லாவீட்டிலும் இதேநிலைதான்.

ஆனாலும் நான்தான் வீட்டில முடிபுகளை எடுக்கிறனான்.....??? :lol::D :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிங்கப்பூர் நிறுவனம் பரிசாக வழங்கிய அந்தக் கழுத்துப்பட்டியை அணிந்து சென்றேன். அதில் எனக்கொரு பெருமை. :D தன்னம்பிக்கையும் நிறைய வரும்.

giggling.gifஎனகு தூகு கயிறுதானபா இருகு அணிவதகு giggling.gif

கடவுள் நம்பிகை நிறைய வரும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றிகள் குண்டன். :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாகம் 19: இருகோடுகள் தத்துவம்

கனடாவுக்கு வந்து அப்போது ஆறுமாதங்களாகிவிட்டது. நான் படிக்கச் செல்வதும் வருவதுமாக இருந்தேன். அச்சமயத்தில் கொண்டுவந்த காசை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்தனையாக இருந்தது. அப்போது ஒரு வீடுவிற்பனை முகவருடன் பேசிக்கொண்டிருந்தபோது வீடு வாங்கலாமே என்றார். unsure.gif

எங்களுக்கும் பேஸ்மென்ரில் இருக்கப்பிடிக்கவில்லை. என் படிப்பு முடிந்து எங்காவது நேர்முகத் தேர்வுக்குப் போகும் ஒரு சந்தர்ப்பம் வந்தால் எப்படியும் வேலை வாங்கிவிடலாம் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இன்னும் ஒரு மாதம் தாக்குப்பிடித்தால் போதும். :unsure:

சரி என்று அந்த வருடம் கிறிஸ்மஸ் சமயத்தில் வீடுவாங்கி குடிபோனோம். வேலை இல்லாவிட்டால் என்ன.. அதைவிட இது பெரிய பிரச்சினை.. அவ்வளவுதான்..! :lol:

2004 ஜனவரியில் படிப்பை முடித்ததும் ஒரு நேர்முகத்தேர்வுக்கு ஒழுங்கு செய்து எனக்குத் தெரிவித்தார்கள். எனக்குத்தான் எந்த வேலையென்றாலும் சரிதானே.. ஒரு வருடம் எப்படியாவது தாக்குப்பிடித்துவிட்டால் போதும். :unsure:

நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன்.

ஒரு சிறிய நிறுவனம். மொத்தமே முன்றுபேர்தான். :lol: ஒரு பொறியியலாளர். அவருடைய கூட்டாளி. ஒரு வரைதல் வல்லுனர். இவர்கள் மூவருமே சேர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கனடாவுக்கு வந்திருந்தார்கள்.

பொறியியலாளருக்கு தொழில்நுட்ப ரீதியில் பெரிதாக ஒன்றும் தெரியாது. வீடு திருத்தம் செய்யும் வடிவமைப்புகள் செய்வார். ஒரு பொருட்களஞ்சியம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அவரது நண்பி ஒருத்தியைக் கொண்டு டிசைன் வேலைகளைச் செய்து வாங்கி தான் முத்திரை பதித்து தன்னுடைய வேலைமாதிரி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். :D

நேர்முகத்தேர்வில் அதிகம் கேள்விகள் இல்லை. என்ன செய்தீர்கள் என்று கேட்டார். உள்ளதைச் சொன்னேன். தொழில்நுட்பரீதியில் ஒன்றும் கேட்கவில்லை.

கோ ஆப் அடிப்படையில் வேலை கொடுத்தார். மாதம் போக்குவரத்துச் செலவுக்கு $500 தருவார். மூன்று மாதங்களில் இன்னொரு வேலை ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் அப்போது நிரந்தரம் ஆக்குவதாகவும் கூறினார். இந்தப்பக்கம் வீட்டு அடமானப் பணத்தையும் கட்ட வேண்டி இருந்தது. :unsure:

அவரிடம் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீடு திருத்த வேலைகள்தான் பெரும்பாலும். வார விடுமுறைகளில் பொறியியலாளர் அனுமதிப் பத்திரத்திற்கான இறுதித் தேர்வுக்காகப் படிக்க ஆரம்பித்தேன்.

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். இவர் என்னை நிரந்தரமாக்கும் பேச்சு வரவில்லை. ஒருநாள் என்னமாதிரி என்று கேட்டேன். நினைச்ச வேலை ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றும், தான் கனடாவுக்கு வந்த புதிதில் ஒருவரிடம் ஒரு வருடகாலம் ஓசியில் வேலை செய்து கொடுத்ததாகவும் கூறினார். அடப்பாவி.. நான் மோட்கேஜ் அல்லோ கட்டிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். :unsure:

நான் வேறு இடங்களுக்கு விண்ணப்பிக்கப் போகிறேன், அதற்கு Reference தரமுடியுமா என்று கேட்டேன். சரி என்றார்.

சிறிதுகாலம் அங்கே வேலை செய்ததால் எனக்கு சில உண்மைகள் விளங்கியிருந்தது. பொறியியலாளர் வேலை அல்லது அதற்குத் தகுதியானவர் என்று கேட்டிருந்தால் பொறியியலாளர் உரிமம் இல்லாதவர்கள் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது. unsure.gif வடிவமைப்பாளர் (Structural Designer) என்று விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் site engineer வேலை செய்துவிட்டு வந்தவர்கள் Site Technician வேலைக்கு ஆரம்பத்தில் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பதில் கஷ்டம் இருக்காது.

இதை அறிந்துகொண்டதால் எனது வேலைக்குறிப்பில் மாற்றம் செய்து நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டுபேர் அழைத்தார்கள். :rolleyes:

ஒரு சிறு தவறு.. திருத்திவிட ஆளில்லாத காரணத்தால் பெரும் அலைச்சலில் கொண்டுபோய் விட்டிருந்தது. :unsure:

(தொடரும்.)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பகுதியில் ஒரு மிகமுக்கியமான கருத்தை கூறியுள்ளீர்கள். அதாவது வெளிநாட்டு தகமைகளை எவ்வாறு குறிப்பிட்டு வேலைகளுக்கு முயற்சிக்கவேண்டும் வேண்டும் என.

பாகம் 19: இருகோடுகள் தத்துவம்

இல்லாதவர்கள் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது. unsure.gif வடிவமைப்பாளர் (Structural Designer) என்று விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் site engineer வேலை செய்துவிட்டு வந்தவர்கள் Site Technician வேலைக்கு ஆரம்பத்தில் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பதில் கஷ்டம் இருக்காது.

இதை அறிந்துகொண்டதால் எனது வேலைக்குறிப்பில் மாற்றம் செய்து நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டுபேர் அழைத்தார்கள். :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றிகள் அகூதா.. வேலை தேடுபவர்களிடம் பேசும்போதெல்லாம் இதை தவறாது கேட்டு விசாரிப்பேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாகம் 20: திசைமாறிய காற்று

பலவிதமான பிரச்சினைகளிலும் உழன்றுகொண்டிருந்த எனக்கு அது ஒரு திருப்புமுனையான காலம். ஒருநாள் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தால் யாரோ ஒரு நிறுவனத்தில் இருந்திலிருந்து அழைத்தார்கள். வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த என்னால் அவர்களின் நிறுவனத்தின் பெயரை சரியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு அழையுங்கள் என்று சொல்லவும் மனம் வரவில்லை. ஏற்கனவே ட்ரிப் போன விடயம் மாதிரி திரும்பவும் அழைப்பு வராமலும் போகலாம். unsure.gif

நிறுவனத்தின் பெயரை திரும்பத் திரும்பக் கேட்டாலும், என்னடா இது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மிகவும் விலைமலிவான :D செல் தொலைபேசி வாங்கியிருந்ததால் நம்பர் கூட விழாது. :D

அவர்கள் சொன்ன இலக்கத்தை மனதில் ஓரளவு இருத்திக்கொண்டு அவசரமாக வீடு சென்றேன். அவர்களின் நிறுவனத்தின் முதல் பாதிப் பெயர் மனதில் நின்றது. இணையத்தில் தேடி, ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.. :D

திரும்ப ஒரு அழைப்பை மேற்கொண்டு, நேர்முகத்தேர்வுக்கான நாளைக் குறித்துக்கொண்டேன். இவ்வளவுக்கும் அந்த நிறுவனத்திற்கு நான் விண்ணப்பித்த ஞாபகமே இல்லை. unsure.gif

நேர்முகத்தேர்வு நாள். எனக்குப் பிடித்தமான அதே கழுத்துப்பட்டியை மீண்டும் அணிந்து சென்றேன்.. :D

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளையர் மட்டும் என்னை நேர்முகத்தேர்வு செய்யக் காத்திருந்தார். unsure.gif வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு நேர்முகத்தேர்வு ஆரம்பமானது. unsure.gif

"Tell me about yourself!" :lol:

இந்த இடத்தில்தான் உங்கள் மொழிப்புலமையும், சீராகத் தொடுத்துச் சொல்லும் திறமையும் வெளிப்படவேண்டும். அதிகம் கேள்விகள் அவர்கள் இடையில் கேட்க ஆரம்பித்தார்கள் என்றால் உங்கள் கதைசொல்லும் ஆற்றலில் குறை உள்ளது என்று அர்த்தம். :D

இதில் சிரிப்பென்னவென்றால் என்ன வேலைக்கு நான் போகப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. :D அவர்களது இணையத்தளத்தில் நில ஆராய்ச்சி மற்றும் சுற்றுப்புறச் சூழல் (Geotechnical & Environmental) சம்பந்தமானது என்று போட்டிருந்தார்கள். எனக்கோ இந்தத் துறைகளில் அனுபவம் இல்லை. unsure.gif

என் கதையைச் சொல்லி முடித்ததும் Shoring & Excavation, Caissons, soldier piles என்று வார்த்தைகளை அள்ளிவீசிக் கொண்டிருந்தார். எனக்கெண்டால் சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரி இருந்தது. நானும் ஓரளவு தெரிந்ததுபோல் தலையாட்டிக் கொண்டிருந்தேன். :wub:

நான் என்னைப் பற்றி சொன்னபோது அதிலிருந்து என்னுடைய சில விசேட தகைமைகளை அவர் அறிந்துகொண்டிருந்தார். எனது தற்போதைய வேலை குறித்துக் கேட்டார். நான் $500 க்கு வேலை செய்த கதையைச் சொன்னேன். :D உங்களை இந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைத் தன்னால் நம்பமுடியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார். :blink:

நேர்முகத்தேர்வு முடிந்தது. அநேகமாக வேலை கிடைக்கும்போல் இருந்தது. ஆனால் எனக்குப் பின்னால் இன்னொருவர் நேர்முகத்தேர்வுக்குக் காத்திருந்தார். unsure.gif

ஒருவாரம் கழிந்திருக்கும். எனக்கு வேலை வழங்குவதற்கான அவர்களது விருப்பக்கடிதத்தை அனுப்பியிருந்தார்கள். சம்பளம் அப்ப இருந்த நிலைமைக்குப் பரவாயில்லை. ஆனால் அதைவிட முக்கியம் கனடாவில் ஒருவருடம் வேலை அனுபவம் பெற வேண்டும். unsure.gif

(தொடரும்.)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் விலைமலிவான :D செல் தொலைபேசி வாங்கியிருந்ததால் நம்பர் கூட விழாது. :D

பூனையக்கண்டவன் புலியைக்கண்டேன் என சொல்லும் காலத்தில் யதார்த்தமாக வாழ்ந்துள்ளீர்கள், உயர்ந்துள்ளீர்கள் அதை மறுக்காமல் வெளியே சொல்லுகிறீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பூனையக்கண்டவன் புலியைக்கண்டேன் என சொல்லும் காலத்தில் யதார்த்தமாக வாழ்ந்துள்ளீர்கள், உயர்ந்துள்ளீர்கள் அதை மறுக்காமல் வெளியே சொல்லுகிறீர்கள்.

பெயரும் புகழும் வெறும் பகட்டால் அல்லாது செயற்திறனால் வந்ததாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.. :unsure:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வற்றலோ தொற்ரலோ வாய்ப்புகள் கூடிய, முதல் வரும் வேலையை அமுக்குவது நல்லது. அதைத்தான் நீங்கள் செய்துள்ளீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு பிரயோசனமாக இருக்கோ இல்லையோ எனக்கு மிக பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றிகள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அந்தம்மாவுக்கு.... பூட்டப் பிள்ளைகளும் இருக்காம், பாஞ்ச் அண்ணே. 🤪
  • சமீபத்தில் நடத்தப்பட்ட ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க வரும் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பதுதான் கருத்துக் கணிப்பின் இறுதி முடிவாக வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணி! தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில் 158 முதல் 166 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு வங்கி 1.7 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.   *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி)   அ.தி.மு.க கூட்டணி! அ.தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில், 60 முதல் 68 இடங்கள் வரை கைப்பற்றும் என்று ஏபிபி கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்ற வாக்கு சதவிகிதம் - 43.7.   *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி) அ.ம.மு.க! டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2 முதல் 6 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க உடைக்கும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.8 சதவிகித வாக்குகள் அ.ம.மு.க பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ம.நீ.ம! நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 0 முதல் 4 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. 6.7 சதவிகித வாக்குகளை ம.நீ.ம கவரும் என்ற தகவலும் கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ளது.   மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர்! தமிழகத்தில் மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது ஏபிபி. அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு 36.4 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளதாகவும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு 25.5 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.   `தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 166 இடங்கள் வரை வெல்லும் வாய்ப்புள்ளது' என்கிற ஏபிபி-யின் கருத்துக் கணிப்பு குறித்து அரசியல் நோக்கர்களின் பார்வை என்னவாக இருக்கிறது? ``166 இடங்களை தி.மு.க கைப்பற்றும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. தி.மு.க கூட்டணியில் முக்கிய இடம் பிடித்துள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை முன்னிறுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் தி.மு.க கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. ஒருவேளை தி.மு.க தலைமை, கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டால் 166 இடங்கள் என்பது சந்தேகமே.   தி.மு.க - அ.தி.மு.க மேலும், அ.ம.மு.க-வை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படி இணைக்கப்பட்டால், அ.தி.மு.க கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் தி.மு.க கூட்டணியின் எண்ணிக்கை குறையும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ள ம.நீ.ம, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் நிலவரம் குறித்து, ``மக்கள் நீதி மய்யம் நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும். புதிய வாக்காளர்கள் பலரும் ம.நீ.ம-வுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஆனால், 4 சீட்கள் வரை அக்கட்சி வெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒரு இடத்தை அக்கட்சி கைப்பற்றுவதே சிரமம்தான். அ.ம.மு.க-வுக்கு சசிகலா வருகை பலமாக அமையும். சசிகலா வருகைக்குப் பிறகு அ.தி.மு.க-விலிருந்து சிலர் அ.ம.மு.க பக்கம் தாவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் அ.ம.மு.க, நிச்சயம் ஒரு சில இடங்களில் வெற்றிபெறும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகளை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தி.மு.க-வினர் கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில், ``இது தி.மு.க-வின் ஐபேக் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு. இதில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் அனைத்தும் போலியானது என இன்னும் 3 மாதங்களில் தமிழக மக்கள் நிரூபிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்'' என்று தைரியமாகச் சவால் விடுகிறார்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க 68... ம.நீ.ம 4... தி.மு.க-வுக்கு எத்தனை..? ஏபிபி கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?! | ABP Opinion poll and political analyst views on 2021 Tn election (vikatan.com)
  • ****     மேன்மை பொருந்திய ஜனாதிபதி கோத்தபாய அவர்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது. நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காமல், மக்கள் வாழ உதவப்பாருங்கள்.🇨🇳
  • தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லபடுபவர்கள் தான். அட்டூழியம் செய்த காரணத்தால் இந்திய மீனவர்கள் என்று அழைக்கபடுகிறார்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.