Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

யாருக்கு பிரயோசனமாக இருக்கோ இல்லையோ எனக்கு மிக பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றிகள்

டீக்கடைக்கு போணி பண்ண யார் வராட்டிலும் :lol: உங்களை மாதிரி ஓரிரு பேர் வாறதாலைதான் டீக்கடையே போகுது.. :D

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply

.

கனடாவில வேலை கிடைக்காம என் உறவினர்கள் இங்கு வந்தார்கள். சிவில் தான். Traffic, Asset Management போன்றவற்றில் வேலை எடுத்து நன்றாக இருக்கிறார்கள். கனடா போய் வேலைப் பிரச்சனையால் விவாரத்து எடுத்தவர்களும் இருக்கிறார்கள். :(

Link to comment
Share on other sites

.

கனடாவில வேலை கிடைக்காம என் உறவினர்கள் இங்கு வந்தார்கள். சிவில் தான். Traffic, Asset Management போன்றவற்றில் வேலை எடுத்து நன்றாக இருக்கிறார்கள். கனடா போய் வேலைப் பிரச்சனையால் விவாரத்து எடுத்தவர்களும் இருக்கிறார்கள். :(

கனடாவில் மக்கள்தொகை குறைவு. ஆனால் சட்டதிட்டங்கள் அதிகம். பொறியியல் துறைக்குள், குறிப்பாக சிவில், கட்டடம் சம்பந்தப்பட்டவைகளில் நுழைவது கடினம்.

இதற்கு வலுவான காரணம் உண்டு. மேற்சொன்ன துறைகள் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. சரியான தகுதி இல்லாதவர்கள் இவற்றைச் செய்வது ஏற்கனவே உள்ள சமநிலையைப் பாதிக்கும். தவறான வடிவமைப்பு நடைபெறும் பட்சத்தில் பொறியியல் அமைப்பால் வடிவமைத்த பொறியியலாளருக்கு தண்டனைகள் வழங்கப்படும். சிறைத்தண்டனைக்கும் வாய்ப்பு உள்ளது. :blink:

அதனால் பொறியியலாளர்களுக்கு அதிகாரமும் அதிகம். ஆனால் சரியாகச் செய்துமுடிக்கவேண்டிய கடப்பாடும் உள்ளது. :unsure:

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன், அனைவருக்கும் பயன் தரும் உங்களது இந்த ஆக்கத்தை விரும்பிப் படிப்போரில் நானும் ஒருவன். மிக்க நன்றி. Silent reader ஆக இருந்து வாசிப்பதை விட கதை சொல்லும் ஒருவருக்கு முன்னாலிருந்து கேட்டுக் கொண்டிருப்போர் "ம்... ம்..." என்று சொல்வதால் சொல்பவருக்கு வரும் உற்சாகத்தைப் போல் நாங்கள் இடும் பின்னூட்டம் மென்மேலும் உங்களை எழுத வைக்கும்.

ஒருவனுடைய முன்னேற்றத்துக்கு எவை எவை எல்லாம் காரணங்களாக இருக்க முடியும்?

அதிஷ்டம்?

வாய்ப்புக்கள்?

நண்பர்கள் உதவி?

ஆருயிர் துணைவி?

விடா முயற்சி?

எல்லாக் காரணங்களிலும் விடா முயற்சி இருந்தே ஆகும். அதனால்தான் வள்ளுவன்

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி

தன் மெய் வருத்த கூலி தரும்" என்று எழுதி வைத்தான் போலும்.

முயற்சி செய்யும் போது தடைகள் வந்தால் அயற்சி வரும்.

ஆனால் தடைக் கற்க்களையே படிகற்க்களாக்கி படிப் படியாக முன்னேறி வந்துள்ளீர்கள்.

அந்த விடாமுயற்சிக்கு தலை வணங்குகிறோம்.

தொடருங்கள் உங்கள் எழுத்துப் பணியை.

Link to comment
Share on other sites

பாகம் 21: புதிய கல்வி

சிங்கப்பூரில் இருந்தபோது நிலம் சம்பந்தமான வடிவமைப்புத் தொழில்நுட்பங்களை இலகுவில் வெளியே விடமாட்டார்கள். மேலாளர் மட்டத்திலேயே வைத்துக் கொள்வார்கள். :D இதை நாம் எப்போது தெரிந்துகொள்வது என்று யோசிப்பதுண்டு. ஆனால் கனடாவில் இப்போது அதே துறையில் வேலை. :D

முதல்நாள் வேலைக்குப் போனதும் அறிமுகப்படலம் நடந்தது. என்னை நேர்முகத் தேர்வு செய்தவர் பெயர் ரிம். ரிம்மிட்டையா வேலை செய்யப் போகிறீர்கள் என்று எல்லோரும் உச்சுக் கொட்டினார்கள்.. unsure.gif

வேலை என்னவென்று பார்த்தால், நெருக்கமான வர்த்தகப் பகுதிகளில் (Downtown Toronto மாதிரி) புதிய கட்டடங்கள் கட்டும்போது கார்நிறுத்தும் பகுதியை நிலத்துக்குக் கீழே அமைக்கிறார்கள். இதனால் வாகனங்கள் ஏதும் வெளியே தெரியாது. நகரமும் அழகாக இருக்கும்.

நிலத்துக்குக் கீழே பொதுவாக மூன்று தளங்கள் அமைப்பார்கள். அவற்றை அமைப்பதற்காக மண்ணைத் தோண்டும்போது அருகில் இருக்கும் கட்டடமோ, வீதியோ பொறிந்து விழுந்துவிடும் அபாயம் உள்ளது. அது நிகழாவண்ணம் வடிவமைப்பு செய்வதே எங்கள் தொழில். unsure.gif

இந்த வடிவமைப்பில் எமது நிறுவனம் அப்போதுதான் கால்பதிக்கிறது. நான்தான் முதல் ஊழியர். unsure.gif எந்த அடிப்படை பொறிமுறைகளும் அங்கு இருக்கவில்லை. :blink:

இந்த வடிவமைப்பை எனது மேலாளர் செய்திருக்கவில்லை. ஆனால் அது முடிவில் எப்படிக் காட்சி அளிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. :D என்னை நம்பி அவர் கடையைத் திறந்துவிட்டார். :lol:

ஏற்கனவே வேறு நிறுவனங்கள் எவ்வாறு வடிவமைத்திருந்தார்கள் என்பதற்கான வரைபடங்களைக் கொடுத்தார். அவற்றைப் பார்த்த பொழுது ஏற்கனவே வேறு பெயரில் சிங்கப்பூரில் அறிந்த தொழில் நுட்பம் என்பது தெரியவந்தது. :D

சிங்கப்பூரில் Contiguous Bored Pile wall என்பார்கள்.

ரொராண்டோவில் Caisson Wall

வேறு சில இடங்களில் Secant Pile Wall :D

ஒரு வேலைத்திட்டத்தைக் கொடுத்தார்கள். மூன்று கிழமைகளில் கணினி உதவியின்றி கையால் எழுதியே ஒரு வடிவமைப்பு வேலையை முடித்துக் கொடுத்தேன். ரிம்முக்கு பயங்கர சந்தோசம். :D

பிறகு படிப்படியாக AutoCad Standards, Design Standards என்று ஒவ்வொன்றாக உருவாக்கினேன். ஒன்பது மாதங்கள் அந்த நிறுவனத்தில் கழிந்ததும் எனக்கு பொறியியலாளர் உரிமம் வந்துவிட்டது. :D

எங்களது நிறுவனமும் வளர்ச்சி கண்டது. ரொராண்டோவில் அந்தத் துறையில் இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகிவிட்டது. வேறு சிலரும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். ரொராண்டோவில் கட்டப்பட்டுள்ள RBC Centre, Ritz-Carlton, Shangri La Hotel முதலான கிட்டத்தட்ட ஒரு 20 கட்டடங்களுக்கு வேலை செய்தேன். :wub:

DSC00245.jpg

(தொடரும்.)

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கு நன்றிகள் Small Point. உற்சாகம் நிலையைத் தக்கவைப்பது சவாலாக உள்ளது.. :D நானும் பலவற்றை வாசித்துவிட்டு கருத்தெழுதாமல் செல்வதுண்டு. :D இப்ப விளங்குது..! :lol:

Link to comment
Share on other sites

இந்த மாதத்துக்கான சிறந்த ஆக்கம் இது தான் கண்டிப்பாக யார் வந்தாலென்ன வராவிட்டால் என்ன.. :D

நான் இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என எண்ணுகிறேன். இல்லாபத்தில்

இருபத்தி ஐந்து வீதம் - இசை

இருபத்தி ஐந்து வீதம் - யாழ் களம்

இருபத்தி ஐந்து வீதம் - நேசக்கரம்

இருபத்தி ஐந்து வீதம் - எனக்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை உங்கள் தொடரை நீங்கள் எழுதி முடிய அதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடங்கள் பற்றி நான் எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

நான் இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என எண்ணுகிறேன். இல்லாபத்தில்

இருபத்தி ஐந்து வீதம் - இசை

இருபத்தி ஐந்து வீதம் - யாழ் களம்

இருபத்தி ஐந்து வீதம் - நேசக்கரம்

இருபத்தி ஐந்து வீதம் - எனக்கு :D

:lol: :lol: :lol:

இசை உங்கள் தொடரை நீங்கள் எழுதி முடிய அதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடங்கள் பற்றி நான் எழுத வேண்டும்.

கட்டாயம் செய்யுங்கள் ரதி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது நிறுவனமும் வளர்ச்சி கண்டது. ரொராண்டோவில் அந்தத் துறையில் இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகிவிட்டது. வேறு சிலரும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். ரொராண்டோவில் கட்டப்பட்டுள்ள RBC Centre, Ritz-Carlton, Shangri La Hotel முதலான கிட்டத்தட்ட ஒரு 20 கட்டடங்களுக்கு வேலை செய்தேன். :wub:

இந்த RBC Centre கட்டிடத்தை பக்கத்தில் நின்று அண்ணாந்து பார்த்துவிட்டு வந்தேன்.

முன்பே சொல்லியிருந்தால் என் தம்பி கட்டியது என சலூட் அடித்திருப்பனே...

வாழ்க தமிழன்

வளர்க

தொடர்க இசை

DSC00245.jpg

(தொடரும்.)

Link to comment
Share on other sites

பாகம் 22: ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு..

சிங்கப்பூரில் முதல் இரண்டரை வருடங்கள் எனக்கு சம்பள உயர்வே கிடைக்கவில்லை.. பலவிதமான காரணங்கள்.. முதலில் என் திறன் இன்மை.. பின்னர் பொருளாதார மந்தநிலை இப்படி. இதை எனது நிறுவனம் நன்கு பயன்படுத்தி என்னுடைய சம்பள உயர்வைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. unsure.gif

இது ஒரு பூனை / எலி விளையாட்டு.. எமது நிலை சற்று இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். :D அப்போது அடக்கி வாசிக்க வேண்டும். எமது நிலை உயரும்போது, எமது சம்பளம் ஏனையவர்களை ஒப்பிடும்போது குறைவாக இருந்தால் வாயைத்திறந்து கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அம்போவென்று விட்டுவிடுவார்கள். unsure.gif

சிங்கப்பூரில் கற்றுக்கொண்ட பாடங்களை மனதில் வைத்திருந்தேன். கனடாவில் என் நிலை நிறுவனத்தில் உயர்ந்து இருந்ததால் ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு என்னமாதிரி என்று கேட்பேன். :D அவர்களும் கொடுப்பார்கள். ஏனென்றால் எனது சம்பளம் எங்கே இருக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்தேன். ஆரம்பத்தில் 42K இல் ஆரம்பித்தார்கள். மூன்று வருடத்தில் அதை 70K ஆக்கிவிட்டிருந்தேன்.

அந்தமுறை சம்பள உயர்வைக் கொடுத்துவிட்டு ரிம் பரிதாபமாகச் சொன்னார்.. unsure.gif

"உங்களுக்காக மிக முயன்று இந்த உயர்வை வாங்கிக் கொடுத்திருக்கிறேன் (10K). அடுத்த வருடமும் தயவுசெய்து இதேபோன்று எதிர்பார்க்காதீர்கள்..! " :D

அப்போது என் மனதில் வேறு திட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தது. ரிம்மின் திட்டம் என்னவென்றால், என்னை அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்க வைத்து, படிப்படியாக அவருடைய பங்குகளையும் என்னிடம் விற்று, தான் அந்த நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறலாம் என்பது. unsure.gif

இவர்கள் என்னைப் பங்குதாரன் ஆக்கப் போகிறார்கள் என்றால் எந்த அளவுக்குப் பேரம் பேசுவது?! unsure.gif விடை தெரியாத காரணத்தினால் என்னுடைய வேலைக்குறிப்பை இணையத்தில் தவழ விட்டேன்.. :D வேலைக்கு யார் கூப்பிட்டாலும் எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என்பதை அறிந்து அந்த அளவுக்கு இந்த நிறுவனத்தில் பேரம் பேசலாம் என்பது என் திட்டம். unsure.gif

அப்போதுதான் இன்று நான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. unsure.gif

"உங்களுடைய வேலைக்குறிப்பைப் பார்த்தோம்.. உங்களை நேர்முகத்தேர்வு செய்ய ஆவலாக உள்ளோம்..!"

"நீங்கள் எந்த நிறுவனத்தில் இருந்து அழைக்கிறீர்கள்..?" :huh:

நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, கனிமவளத்துறை சம்பந்தப்பட்டது என்றார்.. எனக்குப் பெரிதாக ஆர்வம் வரவில்லை..

"உங்கள் நிறுவனம் எங்கே இருக்கிறது?" unsure.gif

இடத்தைச் சொன்னார்..

"ஓ.. அப்படியானால் நான் இடம் மாற்றம் செய்யவேண்டும்.."

"ம்ம்.. ஆனால் அதற்கான முழுச் செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.."

அட.. இது பரவாயில்லையே என்று யோசித்தேன்.. ஆனால் சம்பளத்தில் பெரிய வேறுபாடு இல்லாவிட்டால் என்ன நன்மை? இங்கே பங்குதாரர் ஆனாலாவது வருடத்திற்கு கிட்டத்தட்ட ஒரு 8000 டொலர்கள் போனஸ் வரும் என்கிறார்கள்.. unsure.gif

"சரி.. எனக்கு எவ்வளவு சம்பளம் நினைத்து வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.. மேற்கொண்டு பேசலாம்.. இல்லாவிட்டால் எங்கள் எல்லோரது நேரமும் விரயம் தானே?? " unsure.gif

"ம்ம்.. விசாரித்துச் சொல்கிறேன்.."

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அழைப்பு வருகிறது.. சம்பளத்தைச் சொன்னார்..

அட.. நம்மளுக்கு இவ்வளவு குடுப்பாங்களா?? சந்தேகமாக இருந்தது. வீட்டு மந்திரியிடம் பேசினேன்.. :wub: பக் அப் சொல்லாத குறை.. :lol:

நேர்முகத் தேர்வுக்குச் செல்வது என முடிவு செய்தேன்..unsure.gif

(தொடரும்.)

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றிகள் விசுகு அண்ணா.. :D தம்பி கட்டியது என்பதெல்லாம் பெரிய வார்த்தை.. :blink: தம்பியும் அணில் மாதிரி வேலை செய்திருக்கிறார் என்பதே சரியாக இருக்கும்.. :unsure:

Link to comment
Share on other sites

நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, கனிமவளத்துறை சம்பந்தப்பட்டது என்றார்.. எனக்குப் பெரிதாக ஆர்வம் வரவில்லை..

"உங்கள் நிறுவனம் எங்கே இருக்கிறது?" unsure.gif

இடத்தைச் சொன்னார்..

"ஓ.. அப்படியானால் நான் இடம் மாற்றம் செய்யவேண்டும்.."

"ம்ம்.. ஆனால் அதற்கான முழுச் செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.."

இன்றும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் கனடாவில் அல்பேர்டா, சச்கச்வான் மாநிலங்களில் உண்டு. அவை இரண்டுமே வளர்ந்துவரும் மாநிலங்கள். இயலுமானவர்கள் இப்படியான சந்தர்ப்பங்களை பயன்படுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

இன்றும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் கனடாவில் அல்பேர்டா, சச்கச்வான் மாநிலங்களில் உண்டு. அவை இரண்டுமே வளர்ந்துவரும் மாநிலங்கள். இயலுமானவர்கள் இப்படியான சந்தர்ப்பங்களை பயன்படுத்தவேண்டும்.

இந்த அழைப்பு வரும் வரையில் எனக்கு கனடாவில் அதுவும் ஒன்ராரியோவில் இப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கென்றே தெரியாது.. :D இப்படி என்னும் எத்தனை பேரோ??!! :unsure:

Link to comment
Share on other sites

சிங்கப்பூர் மலேசியாவில் சீனர்களிடம் வேலை பார்த்தால் பிழிந்து எடுத்து விடுவார்கள் சம்பளம் பெரிதாக கொடுக்க மாட்டார்கள்

இவருக்கு அடுத்ததாக மென்பொருள் துறையில் உள்ளவர்கள் யாரும் தங்களின் அனுபவம்களை எழுதினால் பயனுடையதாக இருக்கும்

Link to comment
Share on other sites

மிகவும் பயனுள்ள ஒரு நுணுக்கமான ஒரு பதிவு,

போன மாதம் C.B.C வானொலியில் ஒரு இராக்கியரின் பேட்டி போனது .பெயர் ஞாபகம் இல்லை .80 களில் நோர்வே சென்று ஒரு மிகச்சிறிய ஒயில் எடுக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சென்று இன்று மிகப்பெரிய ஒரு பதவியில் மில்லியனராக இருக்கின்றார்.

அவர் போல வளர வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

இசை அண்ணா உங்கள் முயற்சியை-வளர்ச்சியை பார்த்து எழுத வார்தைகள் வருகுதில்லை ......நீங்கள் இன்னும் மென்மேலும் உங்கள் தொழிலில் சிறப்படைந்து விரைவில் CEO ஆக வர வாழ்த்துக்கள்...!

நீங்கள் இந்த தொடரை எழுதும் விதம் மிகவும் அருமை. இப்பவே விரைவில் முடித்துவிடுவீர்களோ என்ற ஆதங்கம் வந்துவிட்டது. இந்த தொடர் முடிந்தாலும் இன்னும் பல பயனுள்ள பதிவுகளை எழுதுங்கள்....உங்களுக்கு எழுத்தாற்றல் நன்றாகவே வருகின்றது. வாழ்த்துக்கள் இசை அண்ணா.

Link to comment
Share on other sites

இசை,

ஏன் நீங்கள் ஒரு மின்தளத்தை அமைத்து இவ்வாறான தகவல்களை (எவ்வாறு நேர்முகப்பரீட்சைக்கு முகம் கொடுப்பது, எவ்வாறான வேலைகள் 'ஒளிந்து' உள்ளன..) போன்றவற்றை?

வேறு துறைசார்ந்தவர்களையும் இணைக்கும் பொழுது (சட்டம், மருத்துவம், கணக்கியல், ....) நிச்சயம் அது எமது சமூகத்திற்கு பயன் தரும்.

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கும், உற்சாகத்திற்கும் நன்றிகள் அபராஜிதன், அர்ஜுன் அண்ணா, தமிழினி அகூதா.. :rolleyes:

அகூதா,

இந்த இணையத்தளம் வைத்திருப்பதில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை.. :unsure: யாழ் இருக்கிறதால இதைப் பிரபலமாக்கிவிட்டால் காணும்தானே.. :D

Link to comment
Share on other sites

பாகம் 23: உலகம் மிகப்பெரியது

நேர்முகத்தேர்வு ஒரு வெள்ளிக்கிழமை என்று முடிவாகிவிட்டது. ஆனால் காரில் செல்வதானால் நான்கு மணித்தியாலங்கள் பயணிக்க வேண்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்தாலும், எதுக்கு விடுமுறை என்று மேலாளர் கேட்பார். unsure.gif ஏதாவது சுத்தலாம்.. ஆனால் அவருக்கு ஏதாவது சந்தேகம் வந்துவிடுமோ என்கிற எண்ணம் வந்தது.

அதுமட்டுமல்லாமல், நான்கு மணித்தியாலங்கள் வாகனம் ஓட்டி, தெரியாத இடத்திற்குப் போய் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது சிரமமானது. களைப்பினாலேயே சரியாக செயற்படாமல் விட்டுவிட வாய்ப்புள்ளது. unsure.gif

அதனால் ஒரு திட்டம் போட்டேன். பின்னேரம் 3:30க்கு நேர்முகத்தேர்வு. இரண்டு மணிக்கு ஒரு விமானம் இருந்தது. வெள்ளிக்கிழமை அரைநேரம் போட்டுவிட்டு, விமான நிலையம் போனேன். அங்கே காரில் இருந்து கோட் கழுத்துப் பட்டியை அணிந்துகொண்டு விமானத்தில் ஏறிக் குந்தினேன். :unsure:

3:30க்கு ஒரு அறையில் நேர்முகத்தேர்வு.

மூன்று பொறியியலாளர்கள். மூன்றுபேரும் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.. :D

வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு நேர்முகத்தேர்வு ஆரம்பமானது. "Tell us about yourself!" :D

கோர்வையாக இந்தியாவில் தொடங்கி, சிங்கப்பூர் வந்து, கனடா வரைக்கும் சொல்லி முடித்தேன். இவற்றைச் சொல்லும்போது, தொழில்நுட்ப ரீதியில் எவற்றையெல்லாம் செய்தோம் என்பதையும் இணைத்துச் சொல்லவேண்டும். இதற்கு அவர்கள் எப்படியானவர்களைத் தேடுகிறார்கள் என்பதை அறிந்து வைத்திருத்தல் வேண்டும். unsure.gif

அதுபோல எனக்கு கனிமவளத்துறையில் அனுபவம் இல்லை. அதை சமாளிக்க ஒரு திட்டம் வைத்திருந்தேன். நான் ஒவ்வொரு முறை வேலை மாறியபோதும் அதே துறையில் வேலைக்குப் போனதில்லை. இது என் வாழ்வில் தற்செயலாக நடந்தது. ஒவ்வொருமுறையும் தெரியாத வேலைக்குப் போன விடயத்தை அழுத்தமாகச் சொல்லிவைத்தேன். :D

இந்த நிறுவனத்தில் எனக்கு என்ன வேலை உள்ளது என்பதில் குழப்பமாக இருந்தது. அதுவரையில் கனிமவளம் எடுப்பது என்றால் அகண்டகுழி முறை (Open-pit) தான் நான் கண்டது. அதுவும் படங்களில். இங்கே எனக்கென்ன வேலை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இரும்பில் வடிவமைப்பு செய்துள்ளீர்களா? அலுமினத்தில் செய்துள்ளீர்களா என இரண்டு கேள்விகள் வந்தன. இவை இரண்டிலும் நான் விற்பன்னர் கிடையாது. ஏனென்றால் கனடாவில் நான் நில அகழ்வு சம்பந்தமாகத்தான் வேலை செய்துகொண்டிருந்தேன். இரும்பு வடிவமைப்பு கொஞ்சம் தெரியும். அலுமினம் வடிவமைப்பில் ஒரு வேலைத்திட்டம் செய்திருந்தேன். unsure.gif

நான் செய்தவற்றைச் சொன்னேன். வயதானவராக இருந்த பொறியியலாளர் இறுதியாக கேட்டார்.

"உங்களுக்கு எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது உள்ளதா?"

"இங்கே எனக்கு என்ன வேலைகள்?" :blink:

"இரும்பு வடிவமைப்பில் பல வேலைகள் உண்டு.."

"எனக்கு இந்த கனிம வளத்துறையில் ஒரு அனுபவமும் இல்லை."

"நீங்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவிடுவீர்கள். அதுபோல நீங்கள் இதுவரை சிறைக்குப் போகவில்லை.. :lol: அதனால் நீங்கள் திறன்மிக்க பொறியியலாளர்தான்.. உங்களில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது", என்று சொல்லிச் சிரித்தார். :D

வேலை கிடைத்துவிடும்போல் இருந்தது. சம்பந்தமில்லாமல் எங்கேயோ ஒரு ஊரில் நேர்முகத்தேர்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. இந்த உலகில் வாய்ப்புகள் அதிகம். பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு ஏறுமுகம்.. அதுவும் முயற்சி அற்றவர்களின் இழப்புக்களில்.. unsure.gif

(தொடரும்.)

Link to comment
Share on other sites

வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு நேர்முகத்தேர்வு ஆரம்பமானது. "Tell us about yourself!"

கனடா மாதிரி நாடுகளில் உங்களின் வயது, உங்கள் தேக நலன்கள், குடும்ப சிக்கல்கள் இருப்பின் அவை என்பன பற்றி குறிப்பிட தேவையில்லை. அதேவேளை அவர்கள் கேட்பினும் சொல்ல்வேண்டிய கட்டாயம் இல்லை. இவ்வாறான கேள்விகள் கேட்பது குற்றம் :D

எவ்வாறு ஒரு சிக்கலான இல்லை நேர பற்றாக்குறை விடயத்தை கையாண்டீர்கள் எனக்கூறலாம். சக தொழிலாளர்களுடன் எவ்வாறு நட்பை பேணி சேர்ந்து வேலை செய்தீர்கள் எனவும் கூறலாம்.

Link to comment
Share on other sites

"உங்களுக்கு எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது உள்ளதா?"

இந்தக்கேள்விக்கு பொதுவாக 'எனக்கு இவ்வளவு சம்பளம் ($$$$$) வேண்டும்' எனக்கோரக்கூடாது என்பார்கள்.

Link to comment
Share on other sites

கனடா மாதிரி நாடுகளில் உங்களின் வயது, உங்கள் தேக நலன்கள், குடும்ப சிக்கல்கள் இருப்பின் அவை என்பன பற்றி குறிப்பிட தேவையில்லை. அதேவேளை அவர்கள் கேட்பினும் சொல்ல்வேண்டிய கட்டாயம் இல்லை. இவ்வாறான கேள்விகள் கேட்பது குற்றம் :D

எவ்வாறு ஒரு சிக்கலான இல்லை நேர பற்றாக்குறை விடயத்தை கையாண்டீர்கள் எனக்கூறலாம். சக தொழிலாளர்களுடன் எவ்வாறு நட்பை பேணி சேர்ந்து வேலை செய்தீர்கள் எனவும் கூறலாம்.

நேர்முகத்தேர்வை முடித்துவிட்டு, அலுவலக அரசியல் பற்றி எழுதுகிறேன்.. :D

இந்தக்கேள்விக்கு பொதுவாக 'எனக்கு இவ்வளவு சம்பளம் ($$$$$) வேண்டும்' எனக்கோரக்கூடாது என்பார்கள்.

அது மிக முக்கியமானது.. பணம் எமக்குப் பெரிதல்ல என்பதாகக் காட்டிக்கொள்வது நல்லது.. அதேபோல முன்பு நன்மை வருமாறு எவ்வாறு நிறுவனங்களுக்கு வேலைசெய்தோமென கதை அளப்பதும் நல்லது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை நானும் இதை தொடர்ந்து வாசிப்பவர்களில் ஒருவன்.அடிக்கடி ம்ம் போடவில்லை என்டு நினைக்க கூடாது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.