• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

இந்திய பாராளுமன்ற குழுவின் விஜயம் இலங்கை அரசுக்கு சாதகமாக அமையும்- அமைச்சர் சமரசிங்க!

Recommended Posts

makintha%20samarasingka.jpg

இந்திய சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் தற்போதைய காலகட்டத்தில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அந்நாட்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் மக்களின் ஒரு பிரிவினர் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளில் பரப்பி வரும் பிரசாரத்தை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விஜயத்தின் மூலம் முறியடிக்க முடியும் என்றும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கமே இருப்பார்கள் என்றும் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா எதிராக வாக்களித்தமைக்காக அதனுடனான உறவு எந்தவகையிலும் பாதிக்காதெனவும், அதனை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் விஜயத்தின் பின் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.eeladhesa...chten&Itemid=50

Share this post


Link to post
Share on other sites

இலஞ்சம் வாங்க வரினம் எண்டு ராஜதந்திர வார்த்தையில் சொல்லுறான். 

Share this post


Link to post
Share on other sites

கையூட்டே ..கொடுக்கப்போகிறான்....காய்ந்த மாடு......விளுகிறமாதிரி......எவ்வளவோ ...செய்து வைத்திருப்பாங்கள்...இவங்களும் அதுக்கு ரெடியா போவாங்கள்.....வன்னி ,கிளினொச்சி என்று..கண்டி...நுவரெலியாவை காட்டி அனுப்புவாங்கள்....போறதுகளும் அதுக்கு தானே ..போகினம்....

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • சிறு ஜீவன்தான் நான் என்னை மிதித்து விடாதீர்கள், பரந்த இந்தப்பூமியில் வாழ எனக்கும் உரிமையுண்டு என்பதை மறவாதீர்கள்.......!   🤗
    • பொதுத் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் கட்டாயமானது! -சிவசக்தி ஆனந்தன்     [Tuesday 2020-01-21 08:00]             எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்      பொதுத் தேர்தல் ஒன்று வரவுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்? கடந்த நான்கரை வருடமாக தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். ஒரு மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு தேவை. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் முன்னெடுத்து செல்லப்படவேண்டும் என்பது ஒரு விடயம். அதே நேரம் நீண்டகாலமாக மக்கள் போராடி உயிர்தியாகம் செய்திருக்கின்றார்கள் அந்த உயிர் தியாகத்தின் முக்கிய நோக்கம் இந்த மண்ணில் தமிழ் மக்களினுடைய இருப்பு பாதுகாக்கப்படவேண்டும்,மொழி பாதுக்காக்கப்படவேண்டும்,கலாசாரம்,பண்பாடுகள்,நிலம் பாதுகாக்கப்படவேண்டும் அந்த தேவைகளுக்காகத்தான் இந்த நீண்டபோராட்டம் நடைபெற்றது. அந்தக் காரணங்களுக்காகத்தான் இந்த மண்ணில் பல லட்சம் மக்கள் உயிர் நீத்திருக்கின்றார்கள் பல்லாயிரம்கோடி பெறுமதியான சொத்துக்களை நாம் இழந்திருக்கின்றோம்.இதற்காக ஒரு தலைமுறையே போராடி இருக்கின்றது. அந்தவகையில் தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வு என்பது முக்கியம். எதிர்காலத்தில் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்க கூடிய வகையில் தங்களது எதிர்காலத்தை தாங்களே திட்டமிடக் கூடிய வகையில் தங்கள் அபிவிருத்தி முயற்சிகளை தாங்களே ஏற்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு அதிகாரங்கள் அவசியம். ஆகவே ஒரே நாட்டுக்குள் அவ்வாறானதொரு அதிகார பகிர்வு என்பது முக்கியமானதொரு விடயம் ஆகவே அபிவிருத்தி,அரசியல்தீர்வு ஆகிய இரண்டு விடயங்களையும் எவ்வாறு சமாந்தராமாக கொண்டு செல்வது என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்தேசியக் கூட்டமைப்பு அந்த விடயங்களில் நிறையவே தோல்விகளையே சந்தித்து இருக்கின்றது.அவர்கள் பல முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதும் எடுத்துக்கொண்ட சில முயற்சிகள் முற்று முழுதாக அவர்களின் நடவடிக்கைகாரணமாக தோல்வியில் முடிந்தது என்பதுதான் வெளிப்படையானது.அவர்கள் தமிழ் மக்களுக்கு சாதனைகளை புரிகின்றோம் என்ற அடிப்படையில் உண்மையாகவே அவர்கள் கடந்த மைத்திரி,ரணில் அரசாங்கத்தை பாதுகாப்பதுதான் அவர்களது முதன்மையான வேலைத்திட்டமாக இருந்தது.அந்த வேலைத்திட்டத்தை அவர்கள் பாராளுமன்றத்திலும்,உயர் நீதி மன்றத்திலும்,ஜெனீவாவிலும் இலங்கை அரசாங்கத்திற்காக போராடி இருக்கின்றார்கள். இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக கடந்த அரசாங்கத்துடன் இணைந்து இவர்களால் ஒரு விடயத்தை கூட சாதிக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.இந்த நிலையில் தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றம் என்பது அவசியம் தமிழ் மக்களினுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்னெடுத்து செல்லக்கூடியவர்கள் அதற்கான காத்திரமான வழிமுறைகளை கண்டறிந்து செயற்படக்கூடியவர்களை மக்கள் தெரிவு செய்யவேண்டும். ஆகவே அந்த மாற்றத்தை நோக்கி வருகின்ற பொது தேர்தலில் தமிழ் மக்கள் யோசித்து வாக்களிக்கவேண்டும் இப்போது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தங்களுக்கு மாத்திரம் தான் வாக்களிக்கவேண்டும் என்ற கோரிக்கையை பரவலாக முன்வைத்து வருகின்றார்கள் ஆனால் அவர்களுக்கு மாத்திரம் நாங்கள் வாக்களித்ததனால் அவர்கள் எவ்வளது தூரம் தமிழ் மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள் என்பது வெளிப்டையானதும் அது கடந்த நான்கரைவருடகால வரலாறு ஆகவும் இருக்கின்றது. ஆகவே மீண்டும் நாங்கள் அந்த தவறை செய்வோமாக இருந்தால் இதிலும் விட மோசமான தவறுகளைத்தான் அவர்கள் செய்வார்களே தவிர இதனை சரியான ஒரு வழித்தடத்தில் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதுதான் ஒரு யதார்த்தமான விடயம். இந்த விடயங்களை உணர்ந்து ஒரு மாற்றத்தை நோக்கி நாங்கள் நடைபோடவேண்டும் அந்தவகையில் நிச்சயமாக சரியானதொரு மாற்றத்திற்காக தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை என தெரிவித்தார். https://www.seithy.com/breifNews.php?newsID=239479&category=TamilNews&language=tamil
    • வங்காலையான் சுவிற்சர்லாந்தில் மூன்று அரசகரும மொழிகள் உண்டு. ஒரு பிரதேசத்தில் எந்த மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழ்கிறார்களோ அந்த மொழிக்கு முதலிடம் வழங்க‍ப்படுகிறது. ஒடும் ரயிலில்  கூட அந்த ரயில் எந்த மொழி பேசும் மக்களின் பிரதேச மூடாக பயணம் செய்கிறதோ அந்த மொழிக்கு முதலிடம் வழங்கப்படும். உதாரணமாக  சூரிச் தொடரூந்து நிலையத்தில் இருந்து  ஜெனீவா செல்லும் தொடரூந்தில் அது புறப்படும் போது ஜேர்மன் மொழியில் முதலில் அறிவுப்பு செய்யபடும். அந்த தொடரூந்து ஃபிறிபேர்க் (Freiburg) ஐ தாண்டுகிறதோ உடனே பிரெஞ்ச் மொழி முதலிடத்திற்கு வந்து விடும். ஆகவே இதில் பெரிய தவறு இருப்பதாக தெரிய வில்லை என்று நீங்கள் கூறியது நியாயம் என்று எனக்கு படவில்லை. 
    • கதிர்காமர் கொலை- ஜேர்மனியில் முன்னாள் புலி உறுப்பினருக்கு சிறை!   [Tuesday 2020-01-21 08:00]           இலங்கையின் முன்னாள்வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்பாக, புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது     முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்ய தகவல் வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜேர்மனில் புகலிடம் கோரிய ஜ.நவநீதன் எனும் இலங்கை அகதிக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. https://www.seithy.com/breifNews.php?newsID=239482&category=TamilNews&language=tamil
    • விக்கி தலைமையிலான மாற்று அணி படுபாதகமானது!     [Tuesday 2020-01-21 08:00]             மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.      கூட்டமைப்புக்குள் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமுகமாக பேசித்தீர்த்து வருகின்றோம். தேர்தல் தொடர்பாகவும் சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. எதிலும் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. இதில் முதலாவது விடயம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் எவ்விதமான குழப்பமும் இல்லை. கடந்த இரண்டு மூன்று கூட்டங்களில் எல்லாவற்றையும் சுமுகமாகப் பேசி இணங்கியிருக்கிறோம்.எவருமே கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக சொன்னதும் கிடையாது. கூட்டமைப்பு ஒழுங்காக எந்தவித குழப்பமும் இன்றி தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றது.இதற்கு முன்னர் மக்களிடம் இருந்து கிடைத்த ஆணையை விட சிறப்பான ஆணையை இம்முறை தேர்தலில் பெறுவோம். ஒற்றுமைக்கான அழைப்பொன்றை நாங்கள் விடுத்திருந்தோம்.ஆனால் அந்த ஒற்றுமைக்கான அழைப்பை அல்லது ஒற்றுமையை விரும்பாமல் ஏன் நிராகரிக்கின்றார்கள் என்றால் அதனை நிராகரிப்பவர்களே கூற வேண்டும்.நான் அவர்களிடம் விடுத்த அழைப்புக்கு பிரதான காரணம் தமிழ் தரப்புக்கள் ஒன்றாக பலமாக நிற்கவேண்டும்.தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அந்த ஒற்றுமை இருக்கவேண்டும் என்பதுதான். உண்மையில் ஒற்றுமை ஒன்று இருந்தால் தமிழ்தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்குள் பிரதானமாக இருக்கின்ற கட்சியோடு மற்றவர்கள் சேர்வதுதான். சாத்தியமானது. தமிழ்தேசிய கூட்டமைப்புதான் அந்த பிரதானமான கட்சி.அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களையும் அவர்கள் சொல்ல முடியாது. எனவே அதில் வந்து சேருமாறு நான் அழைப்பு விடுத்தேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் கூட்டமைப்புக்குள் ஏற்கனவே இருந்தவர்கள்.எனவே அந்த கட்சிக்கு அவர்கள் திரும்பி வருவதில் எந்நவிதமான பிரச்சினைகளும்் இல்லை. ஆனால் அவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பிரிந்து போனவர்கள்.அந்தக்காரணங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தற்போது ஒவ்வொரு நொண்டிச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாற்று அணி எங்களுக்குத் தேவையில்லை. அது வரக்கூடாது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் தலைமையில் வந்தால் அது படுபாதகமானது. ஆனாலும் அது அவரின் வேலையாக இருக்கலாம்.அவர் உருவாக்க விரும்பினால் உருவாக்கட்டும்.ஆனால் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான்.கூட்டமைப்புக்கு அது தாக்கத்தை செலுத்தாது.ஆனால் மக்கள் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார். https://www.seithy.com/breifNews.php?newsID=239481&category=TamilNews&language=tamil