Jump to content

Recommended Posts

Posted

60060 / 14 = 4290

4290 / 6 = 715

715 / 11 = 65

65 / 13 = 5

மொத்தம் ஐந்து பிள்ளைகள், முறைப்படி 5, 6, 11, 13, 14

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகூதா, நுணா, உடையார் மூவரினதும் விடைகள் சரி. வயதுகள் வேறுபடினும் 5 பிள்ளைகள் என்பது சரிதான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

post-2989-0-90413500-1318366994_thumb.jp

மேலை படத்தில் காட்டியவாறு ஒரு போட்டிக்கு A,B,C,D என்ற 4 நபர்கள் கறுப்பு, வெள்ளை என்று நான்கு வடிவமைப்பில் ஒத்த தொப்பிகளை ஆளுக்கு ஒன்றென்ற முறையில் 5ம் நபரால் அணிவித்துக் கொள்ளப்படுகின்றனர். தொப்பிகள் அணிவிக்கப்படும் போது அவர்கள் அவற்றைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால்.. ஆரம்பத்தில் இரண்டு கறுப்பும் இரண்டு வெள்ளைத் தொப்பிகளும் அவர்கள் நால்வரிடமும் அணிவிக்கப்படப் போன்றன என்பது மட்டும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

போட்டியின் விதிமுறைக்கமைய... D மறுபுறம் உள்ளவர்களை பார்க்க முடியாத சுவரை அடுத்தும்.. மற்றைய மூவரும் சுவருக்கு மறுபுறமும்.. படத்தில் காட்டியவாறு உள்ளனர்.

இதில்.. C மட்டும் தன் முன்னுள்ள இருவரையும் பார்க்க முடியும். B தன் முன்னுள்ள.. A ஐ மட்டுமே பார்க்க முடியும் C ஐ பார்க்க முடியாது. A சுவரை மட்டுமே பார்க்க முடியும். எவரும் மறுபுறம் திரும்பிப் பார்க்க முடியாது. சுவரை நோக்கிய திசையில் மட்டுமே பார்க்க முடியும். தமக்குள் பேசிக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதியில்லை.

இந்த நிலையில்.. தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறம் அறிந்தவர்.. போட்டியின் பரிசை வெல்லத்தக்க வகையில் தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை உரத்துச் சொல்லக் கேட்கப்பட்டார். சரியான விடை தெரிந்தால் மட்டுமே விடை சொல்ல வேண்டும். தவறான விடை சொல்வோர்.. சும்மா கத்துவோர்.. தூக்குத் தண்டனைக்கு இலக்காக நேரிடும்..!

இந்தப் போட்டியில் ஒருவர்.. தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை கண்டறிந்து கத்தினார். இந்த நால்வரில் அவர் எவர்..???! எப்படி அவர் அதனைக் கண்டறிந்தார்..??!

இதுதான் உங்கள் முன்னுள்ள கேள்விகள்..??!

விடையோட வாங்க நான் இப்ப போயிட்டு அப்புறம் வாறன்..!

Edited by nedukkalapoovan
Posted (edited)

இந்தப் போட்டியில் ஒருவர்.. தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை கண்டறிந்து கத்தினார். இந்த நால்வரில் அவர் எவர்..? - B

எப்படி அவர் அதனைக் கண்டறிந்தார்..? - C ஒருவரால் மட்டுமே தனக்கு முன்னுள்ள இருவரையும் பார்க்க முடியும். தனக்கு முன் உள்ள இருவரும் ஒரே நிற தொப்பியை அணிந்திருப்பின், அவர் மற்றைய நிறத்தை சொல்லி இருப்பார்.

ஆனால் சொல்லவில்லை.

இதைப்பார்த்த நம்ம ஆளு B, தனக்கு முன்னால் உள்ள A அவர்களை நிறத்திற்கு எதிரான நிறத்தை சொன்னாராம்.

Edited by akootha
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகூதா, சரியான விடை, பார்ப்பம் நெடுக்குவின் பதிலை ,

ஒரு கோட்டை மட்டும் பாவித்து 9 யை எப்படி 6 என்ற எண் ஆக்குவீர்கள்

Posted (edited)

அகூதா, சரியான விடை, பார்ப்பம் நெடுக்குவின் பதிலை ,

தலை தப்பும் போலுள்ளது உடையாரின் புண்ணியத்தில் :D :D

இந்த நிலையில்.. தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறம் அறிந்தவர்.. போட்டியின் பரிசை வெல்லத்தக்க வகையில் தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை உரத்துச் சொல்லக் கேட்கப்பட்டார். சரியான விடை தெரிந்தால் மட்டுமே விடை சொல்ல வேண்டும். தவறான விடை சொல்வோர்.. சும்மா கத்துவோர்.. தூக்குத் தண்டனைக்கு இலக்காக நேரிடும்..!

Edited by akootha
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் போட்டியில் ஒருவர்.. தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை கண்டறிந்து கத்தினார். இந்த நால்வரில் அவர் எவர்..? - B

எப்படி அவர் அதனைக் கண்டறிந்தார்..? - C ஒருவரால் மட்டுமே தனக்கு முன்னுள்ள இருவரையும் பார்க்க முடியும். தனக்கு முன் உள்ள இருவரும் ஒரே நிற தொப்பியை அணிந்திருப்பின், அவர் மற்றைய நிறத்தை சொல்லி இருப்பார்.

ஆனால் சொல்லவில்லை.

இதைப்பார்த்த நம்ம ஆளு B, தனக்கு முன்னால் உள்ள A அவர்களை நிறத்திற்கு எதிரான நிறத்தை சொன்னாராம்.

உங்கள் பதில்..................................................................... சரியானதே. :icon_idea:

வாழ்த்துக்கள்.

cheerleader-animation.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகூதா, சரியான விடை, பார்ப்பம் நெடுக்குவின் பதிலை ,

ஒரு கோட்டை மட்டும் பாவித்து 9 யை எப்படி 6 என்ற எண் ஆக்குவீர்கள்

9= IX => SIX (6)

ஒரே ஒரு எஸ் வடிவக் கோடு. இது சரியோ பிழையோ தெரியல்ல.. உடையாருக்கே வெளிச்சம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

9= IX => SIX (6)

ஒரே ஒரு எஸ் வடிவக் கோடு. இது சரியோ பிழையோ தெரியல்ல.. உடையாருக்கே வெளிச்சம். :lol:

நெடுக்கு மிகச் சரியான பதில், வாழ்த்துகள்,

ஆனந்தவிகடனில் வந்த மனசே ரிலாக்ஸ் என்ற தொடரில் வந்தது

கோடு என்றால் எடுத்தவுடன் நேர் கோட்டைதான் கன பேர் (நானும் அதில் அடக்கம்) சிந்திப்பார்கள் உங்களைப் போன்ற சிலரை தவிர

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நெடுக்கு மிகச் சரியான பதில், வாழ்த்துகள்,

ஆனந்தவிகடனில் வந்த மனசே ரிலாக்ஸ் என்ற தொடரில் வந்தது

கோடு என்றால் எடுத்தவுடன் நேர் கோட்டைதான் கன பேர் (நானும் அதில் அடக்கம்) சிந்திப்பார்கள் உங்களைப் போன்ற சிலரை தவிர

இது ஸ்கூல் காலத்தில செய்த ஞாபகம். அதுதான் இலகுவாக இருந்திச்சு.

பழக்கப்பட்ட பெட்டிக்குள்ள நின்று யோசிக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் உள்ள குணம் தான். நாங்க நீங்க என்று அதில வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. சிலவற்றிற்கு விடை காண.. பெட்டையை விட்டு வெளிய வந்தும் யோசிக்க வேண்டும்.... அந்தளவே..! :icon_idea::lol:

:o:blink::lol:

  • 6 months later...
Posted

ஒரு குளத்தில் உள்ள பூக்கள் ஒவ்வொரு நாளும் பூத்து அவை அடுத்த நாள் இரு மடங்காகின்றன.20 நாட்களில் குளம் பூக்களால் நிரம்பி விடுகின்றது.எத்தனை நாட்களில் பூக்கள் குளத்தில் அரைவாசியை நிரப்பியிருக்கும்?

Posted

19 ஆம் நாள்.. :D

Posted

சரியான விடை, இசை.வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது பலருக்கு தெரிந்திருகலாம்

11,16,18, 19, 61, 66, 68,69,81,86, 88,89, 91, 96, 98,99 இந்த எண்களை 4x4 நிரல் நிரைகளில் எந்த பக்கம் கூட்டினாலும் 264 வரக்கூடியவறு அடுக்கவும்

Edited by உடையார்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பலருக்கு தெரிந்திருகலாம்

11,16,18, 19, 61, 66, 68,69,81,86, 88,89, 91, 96, 98,99 இந்த எண்களை 4x4 நிரல் நிரைகளில் எந்த பக்கம் கூட்டினாலும் 264 வரக்கூடியவறு அடுக்கவும்

ஒருவரும் முயற்ச்சிக்கவில்லையா? இதற்கு இரண்டு விடைகள் உண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஐரோப்பா வின் சோம்பேறிகள் என

அழைக்கப்படுபவர்கள் யார் ?

Posted

ஐரோப்பா வின் சோம்பேறிகள் என

அழைக்கப்படுபவர்கள் யார் ?

ஸ்பானியர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடைகள்:

01)

96 11 89 68

88 69 91 16

61 86 18 99

19 98 66 81

02)

18 99 86 61

66 81 98 19

91 16 69 88

89 68 11 96

Posted

ஸ்பானியர்.

கிரேக்கர் படும் பாட்டைப் பார்த்தால் அவர்கள்தான் சோம்பேறிகள் போல் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரேக்கர் படும் பாட்டைப் பார்த்தால் அவர்கள்தான் சோம்பேறிகள் போல் தோன்றுகிறது.

நானும்... கிரேக்கர்கர்கள் என்றே நினைக்கின்றேன். :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகில்

1. ஏழில் ஒருவர்

2.எட்டிலொருவர்

3.ஒன்பதில் ஒருவர்

4.பத்தில் ஒருவர்

பட்டினியுடன் படுக்கைக்கு செல்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகில்

எட்டிலொருவர்

பட்டினியுடன் படுக்கைக்கு செல்கிறார்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.