Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

37.jpg

இந்தப் புதிருக்கு என்ன விடை??

7+2+5=143547

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

37.jpg

இந்தப் புதிருக்கு என்ன விடை??

a + b + c =  a x b    a x c      axb + axc - b

7 + 2 + 5  =  7x2      7x5      14+35-2 = 47 

                  14 35 47

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் வலுவிண்ணர்கள் இருக்கின்றார்கள்😀

வாத்தியார் அண்ணாவுக்கும், தமிழ் சிறி அண்ணாவுக்கும் பாராட்டுக்கள்👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

a + b + c =  a x b    a x c      axb + axc - b

7 + 2 + 5  =  7x2      7x5      14+35-2 = 47 

                  14 35 47

உண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊

நானும் இப்படித்தான் நினைத்தேன்! ஆனால் தமிழ் சிறி அண்ணா யாழ் இந்துக் கல்லூரிக்குப் போனவர் என்று முன்னர் ஒரு திரியில் பார்த்த நினைவு. அதனால் அவராகக் கண்டுபிடித்திருப்பார் என்று நினைக்கின்றேன்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

நானும் இப்படித்தான் நினைத்தேன்! ஆனால் தமிழ் சிறி அண்ணா யாழ் இந்துக் கல்லூரிக்குப் போனவர் என்று முன்னர் ஒரு திரியில் பார்த்த நினைவு. அதனால் அவராகக் கண்டுபிடித்திருப்பார் என்று நினைக்கின்றேன்😀

நீங்கள் ஒரு நிமிஷம் என்னை நினைத்துப் பார்த்தீர்களா........நானும் அங்குதான் படித்தனான்.......!   🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

நீங்கள் ஒரு நிமிஷம் என்னை நினைத்துப் பார்த்தீர்களா........நானும் அங்குதான் படித்தனான்.......!   🙂 

அதுதான் எல்லாவற்றிலும் அசத்துகின்றீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 தமிழ் சிறி அண்ணா யாழ் இந்துக் கல்லூரிக்குப் போனவர் என்று முன்னர் ஒரு திரியில் பார்த்த நினைவு.

44 minutes ago, suvy said:

நீங்கள் ஒரு நிமிஷம் என்னை நினைத்துப் பார்த்தீர்களா........நானும் அங்குதான் படித்தனான்.......!   🙂 

😀

இவர்கள் இருவரையும் நான் அங்கு ஒரு நாளும் சந்தித்ததில்லை.
மைதானத்தின் மதிலில் இருந்து ப (பி ) டித்தார்களோ தெரியவில்லை.😁😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடி இல்லாத கேள்வி.

பால்காரர் ஒருவர் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும், 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும், 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் மட்டும் வைத்துள்ளார். 8 லீற்ரர் கொள்கலனில் முழுமையாக 8 லீற்ரர் பால் இருக்கின்றது.  வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு 4 லீற்ரர் பால் தரும்படி கேட்கின்றார்.  பால்காரர் இவ் மூன்று கொள்கலன்களை மட்டும் வைத்துக்கொண்டு சிந்தாமல் சிதறாமல் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை கொண்டு போகின்றார்.

 எப்படி பால்காரர் 4 லீற்றர் அளந்து கொடுத்திருப்பார் என்பதை  விளக்கிக் கூறுக.
 
எட்டு லி கலனிலிருந்து ஐந்து லி கலனுக்கு ஐந்து லி செல்லும்
ஐந்து லி  கலனிலிருந்து மூன்று லி கலனிற்கு மூன்று லி செல்லும்
ஐந்து லி கலனில் மிகுதியாக இரண்டு லி இருக்கும் போது வாடிக்கையாளருக்கு அந்த இரண்டு லி ஐ வழங்குவார்.
மூன்று லி கலனிலிருக்கும்   பால் மீண்டும் எட்டு லி கலனிற்கு மாறும்
அங்கிருந்து மீண்டும் ஐந்து லி கலனிற்கு ஐந்து லி வந்து அதிலிருந்து மூன்று லி கலனிற்கு மூன்று லி சென்றால் ஐந்து லி கலனில் மீண்டும்  இரண்டு லி இருக்கும் அதையும் வாடிக்கையாளரிற்கு வழங்கினால்
மிகுதியாக எட்டு லி கலனில் ஒரு லி பாலும் மூன்று லி கலனில் மூன்று லி பாலுமாகச் சேர்ந்து நாலு லி மிகுதியாக அவரிடம் இருக்கும்.
அதை அவர் எப்படியும் கொண்டு செலல்லாம்.😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

விளக்கம் சரியாக உள்ளது வாத்தியாரே. வாடிக்கையாளர் கொள்கலன் இல்லாமல் வந்திருந்தால் எப்படி பால்காரர் தனது கொள்கலனில் ஒன்றில் நாலு லீற்றர் பாலைக் கொடுக்கலாம் என்றும் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

வாடிக்கையாளர் கொள்கலன் இல்லாமல் வந்திருந்தால் எப்படி பால்காரர் தனது கொள்கலனில் ஒன்றில் நாலு லீற்றர் பாலைக் கொடுக்கலாம் என்றும் சொல்லுங்கள்.

8  இலிருந்து 5  க்கு 5  
5  இலிருந்து 3  க்கு 3  
திரும்பவும் 3  இலிருந்து 8  க்கு   3  
5  இலிருந்து 2  ஐ 3 க்கு  மாத்துவம்
8  இல் இப்போது 6
அதிலிருந்து திரும்பவும் 5  க்கு  5  அனுப்புவம்
3  இல் இன்னும் 1 லீ  க்கு இடம் இருப்பதால் 5  இலிருந்து 1  ஐ அனுப்பினால்
இப்போது 5  இல் 4  ம்
8  இல் 1  ம்
3  இல் 3  மாக இருக்குதா
3  ஐயும் 8  ஐயும் கொடுத்தால் 2  கலன் போயிடும்
3  ஐயும் 8  ஐயும் சேர்த்து 8  லீ கலனில்  கொடுத்தால் பெரிய கலன் போயிடும்

ஆத்துக்காரி வேறை ....
ஆகவே 5  லீ கலனுடன் 4  லீ ஐக் கொடுத்துவிடுவேன்.😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் தெளிவாக உள்ளது வாத்தியாரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையை.. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

No photo description available.

##################################################################################################

No photo description available.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

8 hours ago, தமிழ் சிறி said:

சரியான விடையை.. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

No photo description available.

##################################################################################################

No photo description available.

1.    25

2.   102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜுஜுபி கேள்வியாக இருக்கின்றது!!

இந்தக் கேள்வி எப்படி?

மா பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பத்து இயந்திரங்கள் அச்சொட்டாக ஒரு கிலோகிராம் பொதிகளை தயாரிக்கவல்லன. இவை இலகுவாக அடையாளம் காணப்படுவதற்காக 1 - 10  வரை இலக்கமிடப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று பழுதானதால்  ஒவ்வொரு பொதியிலும் 10 கிராம் கூடுதலாக மாவை பொதிசெய்தது. தொழிற்சாலையில் வேலை செய்யும் எந்திரி ஒருவர் பத்து இயந்திரங்களும் தயாரித்த பொதிகள் சிலவற்றை ஒன்றாக்கி ஒருமுறை மட்டும் நிறுத்து பழுதான இயந்திரத்தின் இலக்கத்தை கண்டுபிடித்தார். அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று விளக்கிக்கூறுக!

Link to comment
Share on other sites

42 minutes ago, கிருபன் said:

1 இல் இருந்து 10 வரைக்கும் இலக்கமிடப்பட்ட இயந்திரங்களில் இருந்து அவ் இலக்கங்களுக்கு உரிய எண்ணிக்கையில் பொதிகளை எடுத்து தராசில் இட வேண்டும். உதாரணமாக 1 என்று இலக்கமிடப்பட்ட தராசில் ஒரு பொதியும், 2 என்று இலக்கமிடப்பட்ட தராசில் இரு பொதிகளும்,3 என்று இலக்கமிடப்பட்ட தராசில் மூன்று பொதிகளும்...  என்றவாறு எடுத்து வைக்க வேண்டும். 

எல்லாம் சரியாக ஒரு கிலோவாக இருந்தால் மொத்தமாக 55 கிலோவாக தராசு காட்ட வேண்டும். ஆனால் இங்கு அப்படி இருக்காது அதை விட அதிகமாக இருக்கும். அப்படி எத்தனை கிராம் அதிகமாக இருக்குதோ அந்த அளவை பத்தால் பிரித்து வரும் விடைக்குரிய இலக்கம் இடப்பட்ட மெஷின் தான் அதிகமாக 10 கிராம் பொதி செய்ததாக இருக்கும்.
உதாரணமாக 55 கிலோவும் 30 கிராமும் காட்டினால், அந்த 30 கிராமை 10 ஆல் பிரித்தால் 3 வரும். எனவே 3 என்று இலக்கமிடப்பட்ட மெஷினில் தான் பிழை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழினி said:

1.    25

2.   102

இரண்டு விடைகளும் சரியானவை. பாராட்டுக்கள் தமிழினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

1 இல் இருந்து 10 வரைக்கும் இலக்கமிடப்பட்ட இயந்திரங்களில் இருந்து அவ் இலக்கங்களுக்கு உரிய எண்ணிக்கையில் பொதிகளை எடுத்து தராசில் இட வேண்டும். உதாரணமாக 1 என்று இலக்கமிடப்பட்ட தராசில் ஒரு பொதியும், 2 என்று இலக்கமிடப்பட்ட தராசில் இரு பொதிகளும்,3 என்று இலக்கமிடப்பட்ட தராசில் மூன்று பொதிகளும்...  என்றவாறு எடுத்து வைக்க வேண்டும். 

எல்லாம் சரியாக ஒரு கிலோவாக இருந்தால் மொத்தமாக 55 கிலோவாக தராசு காட்ட வேண்டும். ஆனால் இங்கு அப்படி இருக்காது அதை விட அதிகமாக இருக்கும். அப்படி எத்தனை கிராம் அதிகமாக இருக்குதோ அந்த அளவை பத்தால் பிரித்து வரும் விடைக்குரிய இலக்கம் இடப்பட்ட மெஷின் தான் அதிகமாக 10 கிராம் பொதி செய்ததாக இருக்கும்.
உதாரணமாக 55 கிலோவும் 30 கிராமும் காட்டினால், அந்த 30 கிராமை 10 ஆல் பிரித்தால் 3 வரும். எனவே 3 என்று இலக்கமிடப்பட்ட மெஷினில் தான் பிழை.

சரியான விளக்கம் நிழலி. 👍🏾

 அடுத்தமுறை மூளையைக் கசக்க புதிர் ஒன்றை தயாரிக்கவேண்டும்!

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கோவிலுக்கு கொஞ்ச பூக்கள் கொண்டு செல்கிறார் . அதை முதலாவது கேணியில் போடும்போது அது இரண்டு மடங்காகிறது. அதில் கொஞ்ச பூக்களை பிள்ளையாருக்கு போடுகிறார். மிகுதியை மற்றய கேணியில் போட அதுவும் இருமடங்காகிறது. பிள்ளையாருக்கு போட்ட அதேயளவு பூக்களை முருகனுக்கும் போடுகிறார். மிகுதியை அடுத்த கேணியில் போட அதுவும் இருமடங்காகிறது . அதை சிவனுக்கு போட்டுவிட்டு பூக்கள் எதுவும் இல்லாமல்  வீட்டுக்கு செல்கிறார். அவர் கொண்டுவந்த பூக்கள் எத்தனை? ஒவ்வொரு சுவாமிக்கும் போட்ட பூக்கள் எத்தனை?

Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

ஒருவர் கோவிலுக்கு கொஞ்ச பூக்கள் கொண்டு செல்கிறார் . அதை முதலாவது கேணியில் போடும்போது அது இரண்டு மடங்காகிறது. அதில் கொஞ்ச பூக்களை பிள்ளையாருக்கு போடுகிறார். மிகுதியை மற்றய கேணியில் போட அதுவும் இருமடங்காகிறது. பிள்ளையாருக்கு போட்ட அதேயளவு பூக்களை முருகனுக்கும் போடுகிறார். மிகுதியை அடுத்த கேணியில் போட அதுவும் இருமடங்காகிறது . அதை சிவனுக்கு போட்டுவிட்டு பூக்கள் எதுவும் இல்லாமல்  வீட்டுக்கு செல்கிறார். அவர் கொண்டுவந்த பூக்கள் எத்தனை? ஒவ்வொரு சுவாமிக்கும் போட்ட பூக்கள் எத்தனை?

முதலில் கொண்டு சென்றது 7
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

7*2=14

14-8 = 6

6*6 =12

12- 8 =4

4* 4 =8

8-0 =0

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வாத்தியார் said:

முதலில் கொண்டு சென்றது 7
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

7*2=14

14-8 = 6

6*2 =12

12- 8 =4

4* 2 =8

8-0 =0

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜனாதிபதி தனது நிதியமைச்சருடன் கதைத்துக் கொண்டு பூங்காவில் உலவும் பொழுது அங்கிருந்த மாமரத்தில் இருந்து நிறைய கிளிகள் பறந்தன. அதைப்பார்த்த ஜனாதிபதி அட ஒரு நூறு கிளிகள் இருக்கும்போல என்கிறார்.அப்போது அதில் ஒரு அழகான கிளி திரும்பி வந்து அவ்வளவு எல்லாம் கிடையாது மண்டுகாள் "நாங்களும் எங்களளவும் எங்களில் பாதியும் பாதியில் பாதியும் நீயும் சேர்ந்தால்தான் நூறு " என்று பகர்ந்து பறந்து போனது.அங்கு பறந்துபோன கிளிகள் எவ்வளவு என்று நீங்கள்தான் சொல்லவேண்டும், காரணம் நானும் மறந்து விட்டேன்.....!  😒 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

அழகான கிளி ஜோதிகா மாதிரி இருக்குமா!😍 ஜோதிகா  மீண்டும் நடிப்பில் பிரவேசித்த படத்தை பார்க்கச் சொல்லுது😊

பி.கு. மனக்கணக்கு என்பதால் கட்டாயம் கிளி ஜோதிகா மாதிரித்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அழகான கிளி ஜோதிகா மாதிரி இருக்குமா!😍 ஜோதிகா  மீண்டும் நடிப்பில் பிரவேசித்த படத்தை பார்க்கச் சொல்லுது😊

பி.கு. மனக்கணக்கு என்பதால் கட்டாயம் கிளி ஜோதிகா மாதிரித்தான்!

அங்கால அனுஷ்காவுக்கு ஆட்கள் அடிபட்டுக் கொண்டு இருக்கினம், நீங்கள் இன்னும் ஜோதிகாவோடு நிக்கிறிங்கள். கொஞ்சம் மாறுங்கோ ....!  😊

Image associée

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.