-
Tell a friend
-
Topics
-
1
By விவசாயி விக்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
எனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020 இளங்கோ-டிசே (1) அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் (நாவல்) பிரியா இதை 2008/2009 காலங்களில் எழுதத் தொடங்கியபோது, யார் இவர் இவ்வளவு சுவாரசியமாக எழுதுகின்றாரே என ஒவ்வொரு அத்தியாயங்களையும் 'காட்சி' வலைப்பதிவில் வாசித்திருக்கின்றேன். அங்கே இந்த நாவல் இடைநடுவில் நின்றுபோனாலும், யார் இந்த யமுனா என்று (அப்போது யமுனா ராகவன் என்று புனைபெயரில் எழுதியிருந்தார்; அது அவரின் அம்மாவினதும் அப்பாவினதும் பெயர்களை இணைத்து வந்த புனைபெயர்) தேடியிருக்கின்றேன். அப்படி அவர் யாரெனத்தேடி அக்காலத்தில் அவர் இங்கிலாந்தில் இருக்கின்றார் என்பதையும் நானாகவே தேடிக் கண்டுபிடித்தேன். அது ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளரைத் தேடுகின்ற சுவாரசியம் என்க. பிரியாவுக்கு இப்படி ஒரு வாசகர் அவரின் எழுத்துக்களில் இந்தளவுக்கு ஈர்ப்போடு இருந்தார் என்பதே தெரிந்திருக்காது. இதேயேன் இங்கே விரித்துச் சொல்கின்றேன் என்றால் பிரியாவின் எழுத்து அன்றைய காலத்தில் என்னை அந்தளவு வியப்பிற்குள் ஆழ்த்தியது என்பதைச் சொல்வதற்காகும். இந்த நாவல் இதுவரை தமிழ்ச்சூழலில் பேசப்படாத சேய்ஷல்ஸைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. புதிய சூழல், புதிய கலாசாரம் என்ற திகைப்பை அதன் பதற்றங்கள் குறையாது பிரியா எழுதிச் சொல்கின்றார் என்றால் இன்னொருபக்கம் அங்கே ஆங்கிலேயர்களில் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள்(தமிழர்கள்) இன்னமும் சாதியிறுக்கத்தை விடாது வாழும் திகைப்பையும் சொல்கின்றார். தன்னை ஒரு தலித்தாக முன்வைக்கும் இந்த நாவலின் கதைசொல்லியான அஞ்சனா, தான் தமிழகத்தில் சந்தித்த சாதியக்கொடுமைகளையும் அசைபோடுகின்றார். இவ்வாறாக நாவல் அற்புதமாக பல்வேறுகிளைகளில் சடைத்துச் செழிக்கிறது. தமிழில் இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் ஒரேமாதிரியாகப் பெருமளவு புனைவுகள் எழுதப்பட்டிருக்கும் நிலைமையில் பிரியாவின் இந்தப் புனைவு விதிவிலக்கானது. இன்று பொருளாதார நிமித்தம் புலம்பெயர்ந்த பெருமளவான தமிழகத் தமிழர்கள் நாசூக்காக சாதி/பின்னபிற ஒடுக்குமுறைகளை மறைத்து அகமனத்தேடல்களை மட்டும் முன்வைத்து எழுதுகின்ற எழுத்துக்களை வாசித்துச் சலிக்கும் வேளையில் பிரியாவின் இந்த நாவல் கவனத்தில் கொள்ளவேண்டியது மட்டுமல்ல தமிழக புலம்பெயர்ந்ந்த தமிழர்க்கு முன்னோடியாக இருக்கவும் கூடியது. புலம்பெயர்ந்ததால் சந்திக்கும் புதிய கலாசாரம் பெரும் அதிர்வை மட்டுமின்றி அஞ்சனா என்ற கதைசொல்லிக்கு தன்னை இன்னும் ஆழமாக அறிய அவரின் அகமனதுப் பயணத்தையும் புதிதாகத் தொடக்கிவைக்கின்றது. மேலும் பிரியா, அஞ்சனாவின் பாத்திரத்தினூடாக புதிய பண்பாட்டுச் சூழலை எவ்வித மேனிலையாக்கமோ கீழிறக்கமோ செய்யாது, அதையதை அதன் இயல்புகளோடு முன்வைப்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியது. பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளோடு' நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்த இன்னொரு நாவலாக ம.நவீனின் பேய்ச்சியையும் சேர்த்துக்கொள்வேன். அலுப்பே வராது மூன்று தலைமுறைக் கதைகளை நன்றாக நவீன் இதில் எழுதிச் செல்கின்றார். இந்நாவலில் வலிந்து திணிக்கப்பட்டது போல என் வாசிப்பில் தோன்றும் பெரியாரிய/திராவிட எதிர்ப்பையும், மூன்றாம் தலைமுறையின் கதையையும் சொல்லவேண்டுமென்ற எத்தனிப்பில் சேர்த்த இறுதிப்பகுதியையும் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மூன்றாம் தலைமுறைக் கதையைச் சொல்லும்போது, அதற்கென ஒரு தனி மொழிநடையை நவீன் தேர்ந்தெடுக்கையில், அதுவரை வந்த ஒரு செழுமையான தெள்ளிய மொழிநடை சற்றுத் தடைப்பட்டிருக்கின்றது. அந்தக் கடைசிப்பகுதியைச் சொல்லாமல் விட்டிருந்தால் கூட இந்நாவல் கவனத்திற்குரிய நாவலாகவே இருந்திருக்கும் (2) பனைமரச் சாலை - காட்சன் சாமுவேல் (அபுனைவு) இதையும் தமிழில் வித்தியாசமான சூழலில் எழுதப்பட்டதற்காக முக்கியமெனக் கொள்வேன். இது பனைமரங்களைப் பல்வேறு பகுதிகளில் தேடி மும்பாயிலிருந்து கன்னியாகுமரி வரை ஃபாதர் காட்சன் சாமுவேல் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வதைப் பற்றிய அனுபவங்களின் தொகுப்பாகும். ஒருவகைய்ல் அவர் பனைமரங்களின் வரலாற்றை மட்டுமின்றி இன்று கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்ற பனையின் பயன்களை மீண்டும் மீள் உருவாக்கம் செய்ய விரும்பவும் செய்கின்றார். முக்கியமாய் இந்த நூலை, பனைமரங்களால் நிரம்பியிருக்கும் இலங்கைச் சேர்ந்த நம்மைப் போன்றவர்கள் வாசிக்கவேண்டும் எனப் பரிந்துரைப்பேன். (3) நீண்ட காத்திருப்பு - அஜித் போயகொட (ஆங்கிலத்தில் சுனிலா கலப்பதி, தமிழில் - தேவா) இலங்கை கடற்படையைச் சேர்ந்த அஜித் போயகொட, அவரின் கப்பல் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்படுகின்றபோது சிறைக்கைதியாகின்றார். புலிகளோடாடு இருந்த 9 வருட அனுபவங்களை எந்தக் காய்த்தல் உவத்தலுமின்றி இயன்றவரை உள்ளபடி போயகொட எழுதியிருக்கின்றார். இதனூடு அவர் நாமறியாத புலிகளின் இன்னொருபக்கத்தைச் சொல்வதுடன், உள்ளே நடந்த பல சுவாரசியமான சம்பவங்களைச் சொல்கின்றார். கைதிகள் பரிமாற்றம் நிகழ்கின்றது என்பதை நாம் பத்திரிகைச் செய்திகளில் பார்க்கின்றோம். ஆனால் அது எவ்வாறு நடக்கின்றது என்பதை சிறைக்கைதியாக இருந்த ஒருவர் அவரது நிலையில் நின்று சொல்வது வித்தியாசமானது புலிகள் - இலங்கை அரசு கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்பட்ட பொயகோடவின் கதையை சுனிலா கலப்பதி கேட்டு ஆங்கிலத்தில் முதலில் எழுத, இதை பின்னர் தேவா அருமையாகத் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார். (4) நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன் (கலை/ஓவியம்) தமிழில் சிறந்த ஓவியர்கள் இருந்தாலும் ஓவியங்களைப் பற்றிய புரிந்துணர்வு குறைவு. இதனால் புதிதாய் ஓவியங்களை வரைய வருகின்றவர்களும் ஓவியம் என்பது வரைவது மட்டுமே என்ற புரிதலோடு இருக்கின்றார்கள். மேற்கத்தையத்தில் எப்படி ஓவியக்கலையிலிருந்து புதிய இஸங்கள் தோன்றியது என்பது மட்டுமின்றி சக ஓவியர்கள்/எழுத்தாளர்களுக்கிடையில் ஊடாடங்கள் எப்படி முக்கியமானது என்பதை அறிந்துகொள்வது குறைவு. ஸெஸானுக்கு எமிலி ஸோலாவுடன், டாலுக்கு புனுவலுடன், வான்கோவுக்கு காகினோடு எவ்வாறான நட்பு இருந்தது, எதையெல்லாம் விவாதித்தார்கள், எவற்றையெல்லாம் உருவாக்கினார்கள் என்பது ஓவியங்களைத் தமது துறையாகக் கொள்பவர்கள் அறிவது மிக முக்கியமானது. அதற்கான ஆரம்ப புள்ளிகளை சி.மோகன் மேற்கில் உதிர்த்த ஓவியர்களின் சில முக்கிய ஓவியங்களை முன்வைத்து எல்லோருக்கும் விளங்கும் மொழியில் இந்நூலில் அதன் நுட்பங்களை விவரிக்கின்றார். அதனூடு அந்தந்தக் காலங்களில் தோன்றிய புதிய ஓவிய வகைமைகளையும்/ துறைகளையும் அறிமுகப்படுத்துகின்றார். ஓவியங்கள் வரைபவர்களுக்கு மட்டுமின்றி ஓவியங்களை இரசிப்பதில் ஆர்வமுள்ளவர்களும் வாசித்துப் பார்க்கவேண்டும். (5) மோகத்திரை - உமா வரதராஜன் (திரைப்படங்கள்) உமா தனித்து திரைப்படங்களைப் பற்றி அல்லாது, சில ஆளுமைகளைப் பற்றி, அவர்களைச் சந்தித்த நினைவுகள், அவரது இளமைக்காலத்திலிருந்து இப்போதுவரை தியேட்டரில் படங்கள் பார்க்கின்ற அனுபவங்களில் நிகழ்ந்த மாற்றமென பல்வேறுபட்ட தகவல்களின் தொகுப்பாக இது இருப்பதே முக்கியமானது. தமிழகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை, தமிழ் இலக்கியவாதிகள் - முக்கியமாய் சிற்றிதழ்காரர்கள்- திரைப்படங்களையே கணக்கிலெடுக்காது இருந்திருக்கின்றார்கள். ஆனால் நம் இலங்கைச் சூழலில் அப்படி சினிமாவை விலத்தி ஒவ்வாமையுடன் இருந்த இலக்கியவாதிகள் அரிதென்றே சொல்லவேண்டும். .அ.யேசுராசா, உமா வரதராஜன், ரஞ்சகுமார், அ.இரவி போன்றவர்கள் அதற்கான எனக்குத்தெரிந்த சில உதாரணங்களாய்ச் சொல்லலாம். (6) அமரகாவியம் - எஸ்.பார்த்தசாரதி (தமிழில் சரஸ்வதி சுவாமிநாதன்) விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் எனக்கு என் பதின்மங்களில் நான் வாசித்த பாலகுமாரனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அன்று பாலகுமாரன் எழுதிய 'விசிறி சாமியார்', 'குரு', 'ஆசைக்கடல்' போன்றவற்றினூடாக விசிறி சாமியார் எனக்கு நெருக்கமானவர். முதன்முதலாக திருவண்ணாமலைக்குப் போனபோது நான் பார்க்க விரும்பியது யோகி ராம்சுரத்குமாரின் சமாதியைத்தான். ஆனால் அப்போது அது நிகழாது போயிற்று. பின்னர் அண்மையில் ஐந்து நாட்கள் திருவண்ணாமலையில் நின்றபோது யோகி ராம்சுரத்குமாரின் ஆச்சிரமத்துக்குப் போனபோதும் எந்தக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை. அது ரமணருக்கு நிகழ்ந்ததுபோல, ராம்சுரத்குமாருக்கும் நிறுவனமயப்பட்டதில் நிகழ்ந்த சோகம் என நினைக்கின்றேன். இந்த நூல் எனக்கு மிக முக்கியமாக இருந்தது. ஏனெனில் இது யோகி ராம்சுரத்குமார் நிறுவனப்படாத அவரின் தொடக்க காலங்களில் அருகில் இருந்து பார்த்து பார்த்தசாரதி எழுதிய அனுபவங்களின் தொகுப்பாகும். எவ்வளவு எளிமையாகவும், தன்னைத் தேடி வருபவர்களை நாடுகின்ற ஒரு 'நாடோடியாக' புன்னை மரத்தடியில் பகல்வேளையிலும், இரவில் மூடப்பட்ட திருவண்ணாமலைக் கடைகளில் முன்வாசலிலும் உறங்கியெழுந்த ஒரு யோகியைக் காண்கின்றோம். அவர் திருவண்ணாமலைக்கு வரமுன்னர் கிட்டத்தட்ட 18 வருடங்கள் அலைந்து தன் ஞானத்தைத் தேடியது பற்றியும் இதில் துண்டுதுண்டாக கூறப்படுகின்றது. அதேவேளை இதில் பல்வேறுபட்ட முக்கிய நபர்களின் சந்திப்பபுக்கள் அல்ல, சாதாரண மக்களோடு ராம்சுரத்குமார் நடந்தகொண்டு விதங்கள் பற்றி எழுதியிருப்பதுதான் சிலாகித்துப் பேசவேண்டியது. தமிழ் அறிஞர் தொ.பொ.மீனாட்சி சுந்தரம், பெரியசாமி தூரன், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்கள் அவருக்கு ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்திருக்கின்றார். கிட்டத்தட்ட 500 பக்கங்களுள்ள இந்தப் புத்தகம், மதம், நிறுவனப்பட்ட அமைப்புக்களிலிருந்து வெளியேறி ஆன்மீகத்தேடலுள்ளவர்க்கு மிகுந்த ஆர்வங்கொடுக்கக் கூடியது. (7) மீசை வரைந்த புகைப்படம் - என். ஸ்ரீராம் (சிறுகதை) ஸ்ரீராமின் கிட்டத்தட்ட அனைத்துச் சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கின்றேன். ஜே.பி.சாணக்யா, காலபைரவன், என். ஸ்ரீராம், எஸ்.செந்தில்குமார் போன்றோர் தமிழ்ச்சூழலில் ஒரு புதிய அலையாக ஒரு காலத்தில் வந்தவர்கள். ஸ்ரீராமின் கதைகளில் அநேகம் கிராமத்தில் நிகழ்பவை. ஆனால் பெரும்பாலான கதைகளில் ஒருவித அமானுஷ்யதன்மை கலந்திருக்கும். ஸ்ரீராமின் சில கதைகள் நமது தமிழ்சூழலின் பின்னணியில் வைத்து மாந்தீரிய யதார்த்தில் எழுதப்பட்ட கதைகளென்று சொல்வதற்கு சிறந்த உதாரணங்களாகும். இந்தத் தொகுப்பிலும் 'தேர்ப்பலி', 'நதிப்பிரவாகம்', 'மண் உருவாரங்கள்' என்பவை அத்தகைய அமானுஷ்யதன்மையில் எழுதப்பட்டவையாகும். (8) பஷிருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் - இளங்கோ கிருஷ்ணன் (கவிதை) கவிதைகள் நிறைய எழுதிக்கொண்டிருந்த காலத்தில், சில நண்பர்கள் தங்களால் கவிதைகளை வாசிக்கமுடியவில்லை என்பார்கள். எப்படி கவிதைகளை வாசிக்காமல் இருக்கமுடியுமென்று நான் வியப்பதுண்டு. ஆனால் இப்போது ஒருவகையில் கவிதைகளை வாசிப்பதற்கும், உணர்வதற்கும் கூட ஒருவகையான கவிதை 'மனோநிலை' வேண்டுமென விளங்கிகொள்கின்றேன். ஏனெனில் அன்று நிறையக் கவிதைகள் எழுதிய நானே, இன்று மிகச்சில கவிதைத் தொகுப்புக்களையே வாங்குகின்றேன். அவற்றில் சிலதைத்தவிர, மற்ற தொகுப்புக்கள் என்னைப் பெரிதும் ஈர்ப்பதுமில்லை. இளங்கோ கிருஷ்ணனின் இந்தத் தொகுப்பிலிருக்கும் பல கவிதைகள் எனக்கு நெருக்கமானவை. அதிலிருந்து ஒரு கவிதை.. துப்பாக்கி ......... எதிர்க்காற்றில் விரையும் பேருந்தில் பொங்கும் கண்ணீரைத் துடைக்காமல் உதடு கடித்து விசும்புகிறான் ஒருவன் முன் இருக்கை சிறுவன் விரல் துப்பாக்கியால் ஒவ்வொருவராய் சுட்டுக் கொண்டேயிருக்கின்றான் இதில் என்ன சொல்லப்படுகின்றது என்று நம்மால் உணரமுடிந்தால் இது ஒரு நல்ல கவிதை. அந்த அனுபவம் நமக்குள் நிகழாதுவிடின் சொற்களின் குவியல். அவ்வளவே. .......................................... (Dec 2020) http://djthamilan.blogspot.com/2021/01/2020.html -
By கிருபன் · பதியப்பட்டது
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: தனிச் சின்னத்தில் போட்டியிடுமா வி.சி.க.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, திருமாவளவன் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரவிலும் பரபரப்பாக இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பு, திருமணம் போன்ற விழாக்களுக்கு அழைக்க காத்திருக்கும் தொண்டர்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேதி கேட்கும் நிர்வாகிகள் என ஒவ்வொருவராக சந்தித்து அனுப்புகிறார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த இந்தப் பிரத்யேகப் பேட்டியில், வரவிருக்கும் இந்தத் தேர்தலின் மையப் பிரச்சனை என்ன, இந்து வாக்கு வங்கி இருக்கிறதா, தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது, பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் வி.சி.கவின் நிலைப்பாடு என்ன என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார் திருமாவளவன். அவரது பேட்டியின் முதல் பகுதி இது: கே. வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கியமான பிரச்சனையாக, மையப் பிரச்சனையாக எது இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள்? ப. எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை, தமிழ்நாடும் இந்தியாவும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடிய ஒன்று அல்ல. இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் ஆபத்திலிருந்து இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டும். சனாதன சக்திகள் மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சக்திகளிடமிருந்து இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டும். அ,தி.மு.கவைப் பொறுத்தவரை, பா.ஜ.கவிடம் சிக்கி அவர்களது விருப்பப்படி செயல்படும் ஒரு பொம்மலாட்ட அரசாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் அதிகரித்துள்ளன. ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் தலித் ஊராட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை நுகர முடியவில்லை. இந்த மாநில அரசையும் மோடி தலைமையிலான சனாதன அரசையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதுதான் எங்களது முதன்மையான செயல்திட்டமாக இருக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஆட்சியை நிறுவதற்கான முயற்சியை இந்தக் கூட்டணி மேற்கொள்ளும். கே. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்களும் இடம்பெற்றிருந்த தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றிபெற்றது. அதே கூட்டணி அப்படியே மீண்டும் தொடருமென நினைக்கிறீர்களா? ப. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தக் கூட்டணிக்குள் உரசலோ, கருத்து மாறுபாடோ இல்லை. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அண்மையில்கூட எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். மக்கள் பிரச்சனைகளுக்காக ஒருங்கிணைந்து செயல்படும் நல்லிணக்கம் இந்தக் கூட்டணிக் கட்சிகளிடம் நிலவுகிறது. பா.ஜ.க. இங்கே காலூன்ற அ.தி.மு.கவைப் பயன்படுத்தி வேலைகளை செய்துகொண்டிருக்கிறது. எனவே அவர்களிடம் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்றுவதும் இந்தக் கூட்டணியின் முக்கியமான செயல்திட்டமாக இருப்பதால், கூட்டணிக் கட்சிகள் கொள்கை அடிப்படையில் இணைந்து செயல்படும் என்று நினைக்கிறேன். கே. 2019ல் இருந்த வாக்காளர் மனநிலைக்கும் இப்போதுள்ள வாக்காளர் மனநிலைக்கும் எந்த அளவுக்கு வித்தியாசம் இருக்குமென நினைக்கிறீர்கள்? இந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க. தமிழகத்தில் கடுமையாகப் பணியாற்றியிருக்கிறது... பட மூலாதாரம், PIB IN TAMILNADU TWITTER PAGE படக்குறிப்பு, (கோப்புப்படம்) ப. ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர்களின் மனநிலை மாறும். ஒவ்வொரு முறையும் புதிய வாக்காளர்கள் வருகிறார்கள். அவர்கள் மாற்றம் வேண்டுமென நினைப்பார்கள். ஆகவே ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றம் இருக்கத்தான் செய்யும். பாரதிய ஜனதா இங்கே மக்கள் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யவில்லை. அம்மாதிரி பிரச்சனைகளுக்காக எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காக, பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக, பெண்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்ததில்லை. எல்லா இடங்களிலும் செய்வதைப் போல இங்கேயும் மக்களைப் பிளவுபடுத்துவதற்கான அரசியலைத்தான் செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் இங்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென நம்பினால் ஏமாந்து போவார்கள். தமிழ்நாடு பிற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, பக்குவப்பட்ட மண். ஆகவே. பா.ஜ.கவின் மத அரசியல் இங்கே எடுபடாது. கே. பா.ஜ.கவின் தீவிர செயல்பாடுகளால் இந்து வாக்கு வங்கி என்ற ஒன்று உருவாகியிருப்பதாக நம்பப்படுகிறது. நீங்கள் அதை ஏற்கிறீர்களா? ப. அது ஒரு மூடநம்பிக்கை. தமிழ்நாட்டில் அப்படி மதம் சார்ந்த வாக்கு வங்கியை உருவாக்க நினைக்கிறார்கள். நீண்ட காலமாக அதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் மதத்தின் பெயரால் பிளவுபட்டதில்லை. தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார்கள், அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார்கள். தனியே நின்றார்கள். ஏதேதோ செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால், இந்த முறை மட்டும் தாங்கள் சாதித்துவிடுவோம் என அவர்கள் நம்புவதற்கு ஒரு காரணம்தான் இருக்கிறது. கலைஞர் இல்லை; ஜெயலலிதாவும் இல்லை. இந்த இரண்டு தலைவர்கள் இல்லாததால் மக்களைக் கவர்ந்துவிட முடியும்; வாக்குகளை தம் பக்கம் இழுத்துவிட முடியுமென நினைக்கிறார்கள். நிச்சயம் அப்படி நடக்காது. எம்.ஜி.ஆர். இறந்த பிறகும், ஜெயலலிதா இறந்த பிறகும் அ.தி.மு.க. இருக்காது எனக் கருதினார்கள். ஆனால், அ.தி.மு.க. இங்கே இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதேபோல, அண்ணாவுக்குப் பிறகு, கலைஞருக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என கணக்குப்போடுகிறார்கள். அப்படி அல்ல. இரண்டு கட்சிகளுக்குமே கீழ் மட்ட அளவில் மக்கள் அமைப்பாக திரண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென வாக்குவங்கி இருக்கிறது. இரண்டு தலைவர்களும் இல்லை என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை, மதம் சார்ந்த வாக்கு வங்கியை உருவாக்கிவிட முடியுமென நம்புகிறார்கள். அது தப்புக்கணக்காகத்தான் முடியும். கே. சமீபகாலமாக இந்துக்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் கட்சிகள் மிகுந்த கவனமாக இருப்பதால்தான் இந்தக் கேள்வி... ப. யாருக்குமே அந்த நோக்கம் கிடையாது. கட்சி நடத்துகிறவர்களுக்கு, பொதுவான நலனை முன்னிறுத்துபவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் உணர்வுகளைக் காயப்படுத்துவது என்பது எப்படி ஒரு செயல்திட்டமாக இருக்க முடியும்? தி.மு.கவுக்கோ, விடுதலைச் சிறுத்தைகளுக்கோ, இடதுசாரிகளுக்கோ எப்படி இது செயல் திட்டமாக இருக்க முடியும்? பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு, தி.மு.கவும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரான கட்சிகள் என்பதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, (கோப்புப்படம்) நாங்கள் தத்துவார்த்த அடிப்படையில் சில விமர்சனங்களை வைக்கிறோம். சங்க பரிவார அமைப்புகளையும் பாரதிய ஜனதா கட்சியையும் அம்பலப்படுத்துகிற வகையிலே அதனை முன்வைக்கிறோம். அவர்களைப் பார்த்துப் பேசுவதையெல்லாம் மொத்தமாக இந்துக்களைப் பார்த்துப் பேசுவதைப் போல திசை திருப்பப் பார்க்கிறார்கள். தி.மு.கவில் 80-90 சதவீதம் இந்துக்கள்தான். அ.தி.மு.கவிலும் அப்படித்தான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் அப்படித்தான். யதார்த்தத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த சமூகத்தில், ஒவ்வொரு கட்சியிலும் இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருக்க முடியும். என்னுடைய கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களே இந்துக்களாக இருக்கும்போது, இந்துக்களைப் புண்படுத்துவதை எப்படி திட்டமிட்டு செயல்படுத்த முடியும்? பா.ஜ.கவை நாம் அம்பலப்படுத்துகிறோம். அவர்களை காயப்படுத்துகிறோம் என்று சொல்வதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த இந்துக்களையும் காயப்படுத்துவதாக அதை திசைதிருப்பிவிட்டு அரசியல் ஆதாயம் பெறப்பார்க்கிறார்கள். கே. சனாதன தர்மத்தை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். தேர்தல் நெருக்கத்தில் எங்கள் கட்சியில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என நீங்களும் சொல்கிறீர்கள், பெரிய கட்சியான தி.மு.கவும் சொல்கிறது... ப. சனாதன எதிர்ப்பு என்பது எப்படி இந்துக்களை எதிர்ப்பதாகும்? சனாதனம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டம். ஆர்.எஸ்.எஸ்சும் பா.ஜ.கவும் மதத்தை மட்டும்தான் கையில் எடுக்கிறார்கள். பிறப்பின் அடிப்படையிலான உயர்வு - தாழ்வை நியாயப்படுத்தக்கூடிய சமூகக் கட்டமைப்பாக சனாதனம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம். மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும். பெண்களுக்கு கல்வி, அதிகாரம் போன்ற உரிமைகள் தேவை; இதற்குத் தடையாக இருக்கக்கூடியது சனாதனம் என்கிறோம். இது எப்படி இந்துக்களுக்கு எதிராக இருக்க முடியும்? உண்மையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது பா.ஜ.கதான். நீட் தேர்வால் யார் பாதிக்கப்படுவது, வேளாண்மை சட்டங்களால் யார் பாதிக்கப்படுவது... பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் யார் பாதிக்கப்பட்டது... இவற்றில் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டது இந்துக்கள்தான். அப்பாவி சமூகமாக இருக்கக்கூடிய இந்துக்களிடம் மதவெறியைத் தூண்டிவிடுகிறது; வன்முறையை ஏற்படுத்துகிறது. இதில் பாதிப்பை எதிர்கொள்வது இந்துக்கள்தான். ஆகவே, இந்துக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான். கே. இந்து, மதம் குறித்த கேள்விகளுக்கு இந்தத் தேர்தலில் உங்களைப் போன்ற கட்சிகள் பதில் சொல்ல வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏற்கிறீர்களா... ப. தி.மு.க. இந்துக்களுக்கு எதிரி, தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் இந்துக்களுக்கு எதிரி என்ற பிரசாரத்தை பா.ஜ.க. திரும்பத் திரும்ப செய்கிறது. இதனை இந்து மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் வேறு எந்தப் பிரச்சனையையாவது பேசியிருக்கிறார்களா? மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையாவது அவர்கள் பேசியிருக்கிறார்களா? எதற்கெடுத்தாலும் இந்துக் கடவுள்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று பேசி, இந்த மக்களை மதவெறிக்குள் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஓட்டுக்காக இதைச் செய்கிறார்கள். பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின் கே. தி.மு.க. கூட்டணியில் இந்தத் தேர்தலில் எத்தனை இடங்களை எதிர்பார்க்கிறீர்கள்... ப. பேச்சு வார்த்தை நடப்பதற்கு முன்பாக இது குறித்து ஊடகங்களில் பேசுவது சரியாக இருக்காது. கே. கூட்டணிக் கட்சிகளைத் தங்கள் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. வலியுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. உங்களுக்கு அப்படி அழுத்தம் இருக்கிறதா? ப. இதுவும் தி.மு.கவைக் குறிவைத்து, திட்டமிட்டு செய்யப்படும் சதிவலை என நான் நினைக்கிறேன். பதிவுசெய்யப்பட்ட ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒன்று சுயேச்சை சின்னத்தில் நிற்கலாம். அல்லது கூட்டணிக் கட்சிகளின் சின்னத்தில் நிற்கலாம். இது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, எந்தச் சின்னம், எந்தச் சின்னம் என்ற கேள்வியை ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கேட்பதும், மற்ற விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு, இதைப் பெரிதுபடுத்தி விவாதிப்பதும் ஏதோ உள்நோக்கம் இருப்பதைத்தான் காட்டுகிறது. ஆனால், நான் இந்த விஷயத்தை வெளிப்படையாகப் பேசிவிடுகிறேன். நாங்கள் பதிவுசெய்யப்பட்ட கட்சி. ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சி. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் எல்லாம் பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் மட்டுமே. ம.தி.மு.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தது. இப்போது அந்த அங்கீகாரம் போய்விட்டது. அ.தி.மு.க. கூட்டணியிலிலும் இதுபோல கட்சிகள் உண்டு. ஆனால், யாரும் சென்று அங்குள்ள கட்சிகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லையே... அது ஏனென்று தெரியவில்லை. ஆகவே, உள்நோக்கம் இருக்கிறது. அல்லது டிஆர்பிக்காக செய்கிறார்களா என்று தெரியவில்லை. தி.மு.க. தான் மட்டும் ஜெயித்தால் போதுமென்று நினைத்தால், கூட்டணிக் கட்சிகளிடம் எந்தச் சின்னத்திலும் நின்றுகொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். 2006ல் அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருக்கும்போது மறைந்த எம். நடராஜன் என்னிடம் பேசினார். "கடைசி நேரத்தில் சுயேச்சை சின்னத்தை வாங்கி, 10 தொகுதிகளையும் இழந்துவிடாதீர்கள். மக்களிடம் அந்தச் சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் பிரச்சனை வரலாம்; நம்மோடு இணக்கமாக இருக்கும் சூழலில் இரட்டை இலையிலேயே நின்று ஜெயித்துவிட்டு, சுயேச்சையாக செயல்படுங்களேன். இதற்கு முன்மாதிரிகள் இருக்கிறதே" என்றார். "நாங்களும் ஒரு சக்தியாக வளர வேண்டுமென நினைக்கிறோம். அங்கீகாரம் பெற வேண்டுமென நினைக்கிறோம். அதனால், சொந்த சின்னத்திலேயே நிற்கிறோம்" என்று நான் சொன்னேன். அதன் படி மணி சின்னம் கிடைத்தது. 14 நாட்களில் அதை மக்களிடம் கொண்டு சேர்த்து 2 இடங்களில் ஜெயித்தோம். அப்போது அ.தி.மு.க. எங்களைக் கட்டாயப் படுத்தியதாக சொல்ல முடியாது. அது ஒரு ஆலோசனைதான். 2001ல் கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தபோது, தமிழ்நாட்டில் 8 இடங்கள், புதுச்சேரியில் இரண்டு இடங்கள் என மொத்தமாக 10 இடங்களை எங்களுக்குக் கொடுத்தார்கள். அப்போதும் தி.மு.க. தரப்பில் எங்களுக்கு ஆலோசனை கொடுத்தார்கள். "நீங்கள் குறைந்த நாட்களுக்குள் சின்னத்தை வரைய வேண்டியிருக்கும். பிட் நோட்டீஸ் அடிக்க வேண்டியிருக்கும். போஸ்டர் அடிக்க வேண்டியிருக்கும். கடைசி நேரத்தில் பெரிய வேலையாக இது மாறிவிடும். அதனால், நீங்கள் உதயசூரியனில் நின்றுவிடுங்களேன்" என்று சொன்னார்கள். அந்தத் தருணத்தில் அரசியல் எங்களுக்குப் புதிது. உதயசூரியன் சின்னத்தில் நின்றோம். நான் மட்டும் மங்களூர் தொகுதியில் வெற்றிபெற்றேன். ஆகவே அங்கீகரிக்கப்பட்ட சின்னம் மட்டும் வெற்றியைத் தந்துவிட முடியாது. இரட்டை இலையே பல இடங்களில் தோற்றுப் போயிருக்கிறது. எம்.ஜி.ஆர். இருக்கும்போதே நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் தோற்று 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றார்கள். ஆகவே பிரபல சின்னம்தான் வெற்றிபெறும், புதிய சின்னம் வெற்றிபெறாது எனச் சொல்ல முடியாது. இப்போதைய டிஜிட்டல் உலகில் ஒரு சின்னத்தை உடனடியாக பிரபலப்படுத்திவிட முடியும். பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, (கோப்புப்படம்) 2009ல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொன்னார்கள். விழுப்புரம் உள்பட இரண்டு இடங்கள் கிடைத்தன. உச்ச நீதிமன்றம் சென்று நட்சத்திரம் சின்னத்தை வாங்கினோம். சின்னத்தை வாங்கிய பிறகு 10 - 12 நாட்கள் இடைவெளிதான் இருந்தது. இருந்தபோதும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். இந்த முறை கடைசி நேரத்தில்தான் பானைச் சின்னத்தை வாங்கினோம். தேர்தலுக்கு பத்து நாட்கள் இருக்கும்போதுதான் சின்னம் கிடைத்தது. ஆனால், ஐந்து லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றோம். ஆகவே சின்னம் என்பது பெரிய பிரச்சனை கிடையாது. தி.மு.கவும் அ.தி.மு.கவும் தோழமைக் கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குகிறார்களே தவிர, அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. ஆலோசனையைச் சொல்கிறார்கள். அதை ஏற்பதும் ஏற்காததும் நமது விருப்பம். எங்கள் சின்னத்தில் போட்டியிட்டால்தான் இத்தனை இடங்களைத் தருவோம் என்று சொல்வதில்லை. ஆகவேதான் இம்மாதிரி கேள்வி கேட்கப்படும்போது, "அவர்கள் கேட்பார்கள். நாங்கள் அதை பரிசீலனை செய்து, எங்கள் கண்ணியம் குறைவுபடாதபடி முடிவெடுப்போம்" என்று சொல்வோம். நாளை என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது அல்லவா? நாங்களும் ஒரு அரசியல் சக்தியாக இந்த மண்ணில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் முடிவு இருக்கும். நாங்கள் பெரும்பாலும் தனிச் சின்னத்தில் நிற்பதையே விரும்புவோம் என்பதை பல முறை சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் நாங்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம். (தொடரும்) https://www.bbc.com/tamil/india-55784652 -
By உடையார் · பதியப்பட்டது
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு-க.வி.விக்னேஸ்வரன் 18 Views எமக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்பு காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் நடைபெற்று வரும் காணி அபகரிப்பு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள க.வி.விக்னேஸ்வரன், “இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், எமது நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கங்கள் கையாண்டுவருகின்றன. நீர்ப்பாசன அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப்பரம்பலில் செயற்கையான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளின் ஊடாக தமிழ் கிராமங்கள் பலவற்றில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவை முற்றாக சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களாக இன்று மாற்றப்பட்டுவிட்டன. 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றபோது வட மாகாணத்தின் ஏறத்தாழ முழுமையான பகுதியும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகளும் எமது இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் அம்பாறை, திருகோணமலையில் நடந்தது போல பெருமளவில் எமது நிலங்களை அரசாங்கங்களினால் அபகரிக்க முடியவில்லை. ஆனால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் நீர்ப்பாசன திட்டங்கள் என்ற போர்வையில் நிலங்கள் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பறிக்கபப்டுகின்றன. மறுபுறம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் தன் வசம் வைத்துள்ளது. இதில், இராணுவ முகாம்கள் மட்டுமல்ல இராணுவ குடியிருப்புக்களும் உள்ளடங்கும். இவை தவிர, அரசாங்கம் எமது நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்திவருகின்றது. வன இலாகா, வன விலங்குகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவாலி அதிகாரசபை ஆகியவை ,வற்றுள் உள்ளடங்கும். எவ்வளவு வேகமாக நாம் எமது நிலங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை ஒரு உதாரணமாக சொல்கின்றேன். எமது மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரனின் புள்ளி விபரங்களின் படி முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 6, 21, 917. இதில், 4, 20, 300 ஏக்கர் அடர்ந்த காடு. ஆகவே, மக்கள் பயன்பாட்டுக்கு ,ருக்கும் நிலப்பரப்பு 201,617 ஏக்கர் ஆகும். இதில், ஆகக்குறைந்தது 80,000 ஏக்கர் நிலம் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் பயன்பாட்டுக்குரிய நிலபபரப்பில் ஏறத்தாழ 40மூ நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இந்த சிறிய உதாரணம் எம்மை சூழ்ந்துவரும் ஆபத்தை வெளிப்படுத்துகின்றது. ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த 10 வருட காலப்பகுதியில், நில அபகரிப்புக்கு எதிராக நாம் உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானது. உள்நாட்டு சட்ட ரீதியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களை நாம் முழுமையான அளவில் மேற்கொள்ளவில்லை. அதேபோல, சர்வதேச சட்டம், சர்வதேச மனித உரிமை கட்டமைப்புக்கள், ஒப்பந்தங்கள், கோட்பாடுகள், போன்வற்றையும் நாம் முழுமையான அளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ,வற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச ஊடகங்களின் ஊடாக எமக்கு எதிரான நிலஅபகரிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், தூதரகங்கள் போன்றவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட சிறப்பான டழடிடிலiபெ ஆதரவு நாடி செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும். ஆனால், இவற்றையெல்லாம், நாம் மேற்கொள்வதற்கு எமக்கு எதிரான நில அபகரிப்புக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம். சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பது எமக்கு எதிரான நில அபகரிப்பு பற்றி சர்வதேச அளவில் நம்பகத்தன்மையானமுறையில் ஒரு விழிப்புணர்வையும் கவனத்தையும் ஏற்படுத்துவதற்கு உதவும். மறுபுறத்தில், அரசியல் ரீதியாக சர்வதேச அளவில் நாம் டழடிடிலiபெ ஆதரவு நாடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமன்றி உள்ளூரில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது பெரிதும் உறுதுணையாக இருக்கும். ஆகவே, நில அபகரிப்புக்கு எதிரான எமது செயற்பாடுகளை நாம் வெறுமனே ஆர்ப்பாட்டங்ககள், நீதிமன்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நிறுத்திவிடாமல் மேற்குறிப்பிட்ட அறிவு, தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான நடவடிக்கைளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பு பற்றி சர்வதேச ரீதியான விழிப்புணர்வு இருக்கிறது. இதற்கு காரணம், அவை பற்றிய முறையான ஆவணப்படுத்தல், ஆய்வுகள், பரப்புரைகள், ஊடக வெளியீடுகள் நடைபெற்றிருப்பதுதான். எமக்கு எதிராக என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எமக்கே சரியான புரிதல்கள் இன்றி இருக்கும் ஒரு துரதிஷ்ட்டமான நிலைமையே காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் நில அபகரிப்பு பற்றி ஆராய்வு செய்த யூத பேராசிரியரான ழுசநn லுகைவயஉhநட என்பவர் அவற்றை நவாழெஉசயவiஉ டயனெ pசயஉவiஉநள என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால், ஜனநாயகம், சட்டம் ஆகியவற்றின் போர்வையில், ஒரு நாட்டில் தனி ஒரு இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் அதனை நவாழெஉசயவiஉ சநபiஅந என்று அவர் கூறுகிறார். இஸ்ரேலைபோல ஒரு நவாழெஉசயவiஉ நாடக இருப்பதற்கான அத்தனை பண்புகளும் இலங்கைக்கு இருப்பதாக அவர் கூறுகிறார். இதுபோன்ற விடயங்களை மேலும் ஆய்வு செய்து, அல்லது இந்த வாதத்தினை பலப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை சேமித்து ஆவணப்படுத்தி எவ்வாறு எமக்கு எதிராக நில ஆக்கிரமிப்புக்கு நீதியை பெறுவதற்கு நம்பகத்தன்மையான ஆதிக்கம் நிறைந்த கருத்து வினைப்பாட்டை நாம் மேற்கொள்ளலாம் என்று சிந்தித்து விஞ்ஞான ரீதியாக நாம் செயற்படவேண்டும்” என்று கூறியுள்ளார். https://www.ilakku.org/?p=40178 -
By உடையார் · பதியப்பட்டது
தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் கலந்துரையாடல் -விக்கினேஸ்வரன்,சிவாஜிலிங்கம் கருத்து 23 Views தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். Video Player 00:00 02:54 வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Video Player 00:00 03:01 நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/?p=40183 -
By விவசாயி விக் · Posted
1) Conducting provincial council polls – 0.3% 2) Boosting tourism – 1.1% 3) Repatriating migrant workers - 2.8% 4) Obtaining Covid 19 vaccine - 8.2% 5) Resolve dispute over burial and cremations – 87.6% A large majority (87.6%) had voted demanding a resolution to the dispute over burial and cremation எனக்கென்னவோ இது நம்பிற மாதிரி தெரியேல்லை!? 87% உடல் தகனம் செய்ய கேட்கினமாம்! எங்கேயோ வாக்கு ஊழல் நடந்திருக்கு
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.