-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
அந்தம்மா தான்.... இவரை முதல்வராக்கியவர். அவருக்கே அல்வாவா.... 😂 -
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
-
By உடையார் · பதியப்பட்டது
மருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்துக இலங்கையில் மருந்து பொருளாக, கஞ்சாவைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று, பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர், ஆயுள்வேத திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, இராஜாங்க அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை, தேரர் நேடியாக முன்வைத்திருந்தார். வௌ்ளைக்காரர்கள் அனுமதி இன்றி, கஞ்சா பயிரிடவும் பயன்படுத்தவும் முடியாது என்றே, தடை விதித்திருந்ததாக நாலக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், 1984ஆம் ஆண்டு, எந்தவொரு முறையிலும் கஞ்சாவை பயன்படுத்தக் கூடாது என, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஏன் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். கஞ்சா என்பது மருந்து பொருள் என்றும் புத்த பெருமான் இதை மருந்து பொருளாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஏன் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். எதிர்காலத்தில் இந்த மருந்தை பயன்படுத்தி நோயாளர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மருந்துக்கு தேவையான கஞ்சாவை பயிரிட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மரநத-பரளக-கஞசவ-பரகடனபபடததக/175-263998 -
By மல்லிகை வாசம் · Posted
அவர்களது இந்தத் தாக்கம் அபோறிஜினல் இசையிலும் உள்ளதாக ஒரு யூரியூப் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டதைப் பார்த்த ஞாபகம். அது மக்காசர் முஸ்லிம்களது தாக்கமா அல்லது அரேபிய முஸ்லிம்கள் நேரடியாக அரேபியாவிலிருந்து அவுஸ்திரேலியாவின் வடபகுதியின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குடியேறியதன் (?) தாக்கமா என்று நான் ஆராயவில்லை. ஐரோப்பியர் தென்கிழக்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தமுன்னர் அரபுதேசத்தவர்கள் அங்கே பலம்பெற்றிருந்தனர். இது 15ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னராக இருக்கக்கூடும். அநேகமாக இந்தோனேசியாவின் ஒருபகுதி முஸ்லிம்களான மக்காசர் இவர்களது வழித்தோன்றலாக இருக்கவேண்டும். இந்த மக்காசர் எப்போது அவுஸ்திரேலியாவிற்கு முதலில் வந்தனர் என்பது பற்றிய தெளிவான தகவல் நான் அறிந்தவரை இல்லை. வெள்ளையர்கள் வரத் தொடங்கியபோது தான் இந்த ஆண்டுக் கணக்கெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்டன. அதற்கு முன்னர் வந்த மக்காசரின் வழித்தோன்றல்கள் நாகரீக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த அபோறிஜினல்கள் வாழ்க்கைமுறையைப் பின்பற்றியதால் அவர்கள் அந்த ஆண்டுக் கணக்கை நினைவில் வைத்திருந்து தம் வழித்தோன்றல்களுக்குச் சொல்லியிருப்பரோ என்பதும் சந்தேகமே. இது பற்றிய குறிப்புக்கள் இந்தோனேசியாவில் மக்காசர் வாழ்ந்த பகுதியில் இருந்தோரிடம் இருக்கலாம். அந்த முஸ்லிம்கள் ஆண்டுக்கணக்கை பதிவு செய்திருக்கக் கூடும். என் மனதில் எழுகின்ற இன்னொரு கேள்வி 'மக்காசருக்கும் முன்னர் அரேபியாவிலிருந்து முஸ்லிம்கள் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனரா' என்பதே. இப்படிப் பல வினாக்கள். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகள் கூட வரலாற்றுக்கு முற்பட்ட புராதன காலம் தான். எனவே இந்த ஆராய்ச்சி மிகச் சிக்கலானது. இவை பற்றிய மேலதிக தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் இங்கேயோ இன்னொரு திரியிலோ பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகிறேன். (ரொம்ப முக்கியம் தான்! ஹி ஹி...) -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
உண்மைதான்.. 32 வருட வரலாற்றை முறியடித்துவிட்டனர்..😡 புஜாரா அவுட் ஆகியபடியால்தான் இந்திய அணி விரைவில் போட்டியை முடித்தார்கள்.. சும்மாவா 211 பந்துகளுக்கு முகம் கொடுத்து 56 ஓட்டங்கள்.. நல்லதொரு பட்டப்பெயரையும் வைத்திருக்கிறார் The Wall..
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.