Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விறிட்ஜின் நிறம் என்ன? ... வெள்ளை தானே ?...

அப்போ ... பசு என்ன குடிக்கும் ?.

இந்தக் கேள்வியை ஐரோபிய மொழியில் மாற்றி பின்பு ஐரோபியரிடம் (பெரியவர்கள், குழைந்தகள்) கேளுங்கள்

அவர்கள் உடனடியாகக் தரும் முதல் பதிலைதான் கணக்கேடுக்க வேண்டும். அப்படிக் கிடைத்த பெரும்பான்மையான பதில் தான் சாதாரணமான பதில் !!

மேலும் விளக்கம் பின்பு தரப்படக்கூடும்?!

!!!! கவனம் கேள்வி மாற்றப்பட்டுள்ளது !!!உங்கள் கருத்திலும் அதை மாற்றத் தவறாதீர்கள், நன்றி

ex:

your fridge is white, isn't it? ...

OK ... so the cow drink ...?

ton frigo est blanc n'est pas? ...

d'accord ... alors qu'est qu'elle boit la vache ... ?

...

இந்தக் கேள்வியை பெரியவர்கள் , சிறியவர்கள் சிலரிடம் முயற்சி பண்ணிப்பார்த்தேன் ,

பால் என்று பதில் வந்தது. :(

Link to comment
Share on other sites

உங்கள் விறிட்ஜின் நிறம் என்ன? ... வெள்ளை தானே ?...அப்போ ... பசு என்ன குடிக்கும் ?.

இந்தக் கேள்வியை பெரியவர்கள் , சிறியவர்கள் சிலரிடம் முயற்சி பண்ணிப்பார்த்தேன் ,

பால் என்று பதில் வந்தது. :rolleyes:

பால் சமூக ஓட்டத்துடன் செல்பவர்களின் பதில் (200 பேர்)

கஞ்சி, களனி அல்லது தண்னி சமூக ஓட்டத்திற்கு எதிராகச் செல்பவர்கள் ( அல்லது ஒரே இடத்தில் நிற்பவர்கள்) பதில் (9பேர் :unsure: உங்களுடன் 10 பேர்)

வ்றிட்ஜி (குளிர்சாதன பெட்டி), வெள்ளை நிறம், பசு (மாடு) என்ற சொற்களால்

எங்கள் சிந்தனை தற்போதைய சமூக வழக்கங்களுக் இனங்க வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் ...? !

உங்கள் பங்களிப்பிற்கு நன்றி

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது வாகப் பாவித்து

பொல்லாச் சிறகு அடித்து ஆடினால் போலவெ கல்லாதான் கற்ற ... "

என்று யார் பாடினார் ?

Link to comment
Share on other sites

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது வாகப் பாவித்து

பொல்லாச் சிறகு அடித்து ஆடினால் போலவெ கல்லாதான் கற்ற ... "

என்று யார் பாடினார் ?

ஒளவையார்.

Link to comment
Share on other sites

ஒளவையார்.

ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், ஆத்தி சூடி, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

நூல்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி

'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்

இன்னா அளவில் இனியவும் - இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா. 5

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம். 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது

மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நன் மரம். 13

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி

தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி. 14

- www.chennailibrary.com

ஔவயார் என்றுதான் பலர் கூறுகிறார்கள்,

ஆனால் அந்த வான் கோழி எனப்படும் பறவை ஐரோப்பியர்களால் (போர்துக்கேயரால்) தான் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. - மூதாதயர் எப்படி ஓலையில் எழுதினார்கள்...

im0902-08_turky.jpg

imag from www.mazhalaigal.com

சீமைக்கோழி (சீமை = ஐரோப்பா) என்றும் ஆங்கிலத்தில் டர்க்கி என்றும் வான்கோழியை அழைக்கின்றனர். பொதுவாக வான் கோழி 23 கிலோ எடைக் கொண்டது. ஆண் பறவையின் வால் பகுதி விசிறி போல அழகாக விரிந்து சுருங்கும், தன்மையுடையது. கழுத்து பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் பை போன்ற உறுப்பு இவற்றின் மனநிலைக்கு ஏற்றவாறு சிகப்பு, நீலம், வெள்ளை என நிறம் மாறும். இதன் குரல் கேட்க அருவருப்பாக இருக்கும். பெண் வான் கோழி சாம்பல் கலந்த வெளிர்ப் பச்சை நிறத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இட்டு அடைகாக்கும். ஒரே நேரத்தில் குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன. from www.hi2web.com-forum

கினி பறவை அல்லது கினி கோழி பேசன்ட்ஸ் வரிசையை சேர்ந்த குடும்பத்தில் உள்ள வான் கோழி மற்றும் மற்ற பறைவகள் வகையை சேர்ந்தது. பெரும்பாலும் இப்பறவைகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது - a.hscripts.com

நெல்லிக்கனியை உண்டு நீண்ட காலம் வழலாம் என்று நம்ப முடியாது...

ஃ ஔவயார் அத்தப்பாட்டை பாடவில்லை என்றே நான் நம்புகிறேன் ...

(ஔவயார் கண்ட வான் கோழி சீமைகோழியல்ல என்று நிரூபிக்கப் படும்வரை)

... ? அது அப்படியிருக்க ... உங்கள் பதிலுக்கு நன்றி.

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

அற்புதமான விளக்கம். வாசித்து பயன்பெறுங்கள் ஜெகுமார். :wub:

http://www.tamilauthors.com/01/74.html

அவ்வை யார்?

அவ்வையார் என்ற பெயரை அறியாத தமிழ் அறிந்த தமிழர்கள் அகிலத்தில் எங்குமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவ்வைப்பாட்டியைப்பற்றிய கதைகள் தமிழ் மக்களுக்குப் பிள்ளைப் பராயத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆரம்ப வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் அவ்வையாரின் பாடல்கள் இடம்பெறுகின்றன.

...

ஆனால் அவ்வையார் என்ற பெயரில் பல்வேறு பெண்புலவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. அவ்வையார் என்ற பெயரில் தமிழ்வளர்த்த புலவர்கள் மூவர் என்று ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரப்படுத்துகின்றன. அவ்வையார் என்ற பெயரில் சங்ககாலத்தில் ஒரு பெண்புலவர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அவருக்குப் பின் யாராவது ஒரு பெண் கவிதைகள் பாடி, புலவராகத் திகழ்ந்தபோது அவரை அவ்வையார் என்றபெயரால் மக்கள் அழைத்திருக்கக்கூடும்....

-

உங்கள் இனைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அவ்வை யார்?

அவ்வையார் என்ற பெயரை அறியாத தமிழ் அறிந்த தமிழர்கள் அகிலத்தில் எங்குமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவ்வைப்பாட்டியைப்பற்றிய கதைகள் தமிழ் மக்களுக்குப் பிள்ளைப் பராயத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆரம்ப வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் அவ்வையாரின் பாடல்கள் இடம்பெறுகின்றன.

...

ஆனால் அவ்வையார் என்ற பெயரில் பல்வேறு பெண்புலவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. அவ்வையார் என்ற பெயரில் தமிழ்வளர்த்த புலவர்கள் மூவர் என்று ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரப்படுத்துகின்றன. அவ்வையார் என்ற பெயரில் சங்ககாலத்தில் ஒரு பெண்புலவர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அவருக்குப் பின் யாராவது ஒரு பெண் கவிதைகள் பாடி, புலவராகத் திகழ்ந்தபோது அவரை அவ்வையார் என்றபெயரால் மக்கள் அழைத்திருக்கக்கூடும்....

----

Then

ஔவயார் அத்தப்பாட்டை பாடவில்லை என்றே நான் நம்புகிறேன்

Now

அவ்வை யார்? :wub::D

ஔவயார்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

அவ்வை யார்?

auvai.jpgAuvayar.jpg250px-Statue_of_Avvaiyar.jpg

எனக்கு தெரிந்த ஔவையார் என்றால் கே.பி. சுந்தராம்பாள் தான். :lol:

Suntharambal.jpg

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

கன்று தாயை விட்டு சென்றபின்னும்

கன்று தாயை விட்டு சென்றபின்னும்

அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது

ஏதும் அறியாஅதவன் என்றே நினைக்கின்றது

அரண்மனை வாசல் திறக்கின்றது

அரண்மனை வாசல் திறக்கின்றாது

அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

உண்மையை சொல்வதற்கு படிப்பதற்கு

எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு

கண்கண்ட காட்சிகளுக்கு விளக்கெதற்கு – நெஞ்சில்

கள்ளமில்லாதவற்கு பயமெதற்கு

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்

உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்

தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை – இந்த

தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை

எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

...

...

அதுதான் தமிழ்: உபயோகிக்க முடியாத தரவுகள், தமிழ் சினிமாக்களைப் போல ...

அப்போ சரியான பதில் ?

யாரோ ஒருவர் பாடடினார் என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் உண்மையிலும் உண்மை .

பொய்யிலும் பொய், மயில் ஆடக் கண்ட வான் கோழி தானும் சிறகை விரித்து ஆடியது, என்பதாம்.

உண்மை என்னவென்றால் , வான் கோழியை கண்ட மயில் , அது ஒரு புது நாட்டுப் பெண் மயில் என்று காதல் கொண்டு தந்திர நடனமடியது ! ஆனால் வான் கோழியோ தற்பாது காப்புத் தண்டவம் மாடத் தயாராகியது !
:)

அது அப்படி இருக்க...

ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு என்ன ?

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

உண்மையில் சினிமா கேள்விகள் கொண்டுவர கூடாது என்று தான் நினைத்து இருந்தேன். ஆனால் நம்மில் பலர் இசை பிரியர்கள் என்ற வகையில் இந்த கேள்வியை கேட்கலாம் என நினைக்கிறேன்.

இளையராஜாவின் குழுவில் உள்ள கீ போட்(key board) வாசிப்பவர் குடிபோதையில் இருந்ததால் அன்று 11 வயது பையன் கீ போட் (key board) வாசிக்க இசைஞானியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சிறுவனின் பெயர் என்ன? இசையமைக்கப்பட்ட தமிழ்படம் என்ன?

Link to comment
Share on other sites

[quote name='ஜெகுமார்' date='03 December 2009 - 11:11 AM' timestamp='1259856669'

ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு என்ன ?

1.2 லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 40 வாக்கை (கள்ள வாக்காக பெற்றவரும்)அமைச்சராக முடியும். உ+ம்: டக்ளஸ் தேவானந்தா.

2.ஒரு தொகுதியில் வென்ற வேட்பாளர் அதிகூடிய வாக்கை பெற்று வெற்றி கொள்கிறார் என்போம். ஆனால் மறுபக்கம் பார்த்தால் அவருக்கு எதிராக வாக்களித்தவர்களின் வீதம் அதிகம். எப்படி அதிகப்படியான வாக்கால் என்ற சனநாயக சொற்பதம் அநியாயம் ஆகி விடாதா? இது ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். மேலைதேய நாடுகளுக்கும் பொருந்த்தும்.

3.

சில மக்கள் தமது வாக்களிக்கவில்லை எனில் அதுவும் ஜனநாயக ரீதியில் அம்மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றே அர்த்தம். அதாவது தமது கோரிக்கைகளை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை என்பதேயாகும்.இவர்களின் வீதம் மிக அதிகமாக இருந்தால் கூட எந்த ஜனநாயக நாடுகளும் இவர்களை கண்டு கொள்வதில்லை? இது தான் ஜனநாயகத்தின் மிக பெரிய ஓட்டை.தமது ஓட்டையை நிவாரணம் செய்ய கொமியீனிச பூச்சாண்டி காட்டுவது அல்லது பயங்கரவாதம் என பூச்சாண்டி காட்டுவது தான் காலத்தின் நியதியா?

4.எப்படி பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆக ஏழைகள் தொடர்ந்தும் ஏழைகளாவே இருக்கிறார்கள். ?இது அமெரிக்காவுக்கும் பொருந்தும் இந்தியாவுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

11 வயது பையன் கீ போட் (key board) வாசிக்க இசைஞானியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சிறுவனின் பெயர் என்ன? இசையமைக்கப்பட்ட தமிழ்படம் என்ன?

ஏ. ஆர். ரஹ்மான், அன்னக்கிளி படத்திற்காக.

Link to comment
Share on other sites

...

2.ஒரு தொகுதியில் வென்ற வேட்பாளர் அதிகூடிய வாக்கை பெற்று வெற்றி கொள்கிறார் என்போம். ஆனால் மறுபக்கம் பார்த்தால் அவருக்கு எதிராக வாக்களித்தவர்களின் வீதம் அதிகம். எப்படி அதிகப்படியான வாக்கால் என்ற சனநாயக சொற்பதம் அநியாயம் ஆகி விடாதா? இது ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். மேலைதேய நாடுகளுக்கும் பொருந்த்தும்.

...

உங்கள் 2 ஆவது பதிலை விளங்கிக் கொள்வது சிறிது சிரமமாக இருந்தாலும், நீங்கள் சொல்லவந்தது சரியான பதிலை அணுகுவதாக உள்ளது ... ஃ nunavilan !! உங்களுக்கு எங்கள் அனைவரது பாராட்டுகள் ... :wub::(:):D :D ... ...

ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு !

எப்போதும்

பெரும்பான்மை (சில வேளைகளில் 50.1% மாத்திரமே !) சிறுபான்மையை (அனேகமாக 49% தத்திற்கும் மேல் !!)

(5, 10 வருடங்கள் !) நசுக்குவதாகும்

bien dit, beau dit, et tout dit !

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

ஏ. ஆர். ரஹ்மான், அன்னக்கிளி படத்திற்காக.

மல்லிகை வாசம் ஏ ஆர் ரகுமான் என்பது சரி. படம் மூடுபனி. நன்றி.

http://www.youtube.com/watch?v=vtU4i0KBqag

Link to comment
Share on other sites

1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றியுள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது?

 1. ஆர்ஜென்டீனா
 2. இங்கிலாந்து
 3. இத்தாலி
 4. உருகுவே
 5. பிரான்ஸ்
 6. பிரேஸில்
 7. ஜேர்மனி (1954 - 1990 காலங்களில் மேற்கு-ஜேர்மனி)
Edited by ராசராசன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றிள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது?

 1. ஆர்ஜென்டீனா
 2. இங்கிலாந்து
 3. இத்தாலி
 4. உருகுவே
 5. பிரான்ஸ்
 6. பிரேஸில்
 7. ஜேர்மனி (1954 - 1990 காலங்களில் மேற்கு-ஜேர்மனி)

இங்கிலாந்து

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

.

உருகுவே

Link to comment
Share on other sites

1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றியுள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது?

பிறேசில்

பிரேஸில் என்பது சரியான விடை. பாராட்டுக்கள் நுணா. :D

ரதி, தமிழ் சிறி உங்கள் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள். :)


இத்தாலி 4 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1934, 1938, 1982, 2006). இதில் 1934 இல் 2வது உலகக் கிண்ணப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது.

ஜேர்மனி 3 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1954, 1974, 1990). இதில் 1974 இல் 10வது உலகக் கிண்ணப் போட்டி ஜேர்மனியில் நடைபெற்றது.

ஆர்ஜென்டீனா 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1978, 1986). இதில் 1978 இல் 11வது உலகக் கிண்ணப் போட்டி ஆர்ஜென்டீனாவில் நடைபெற்றது.

உருகுவே 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1930, 1950). இதில் 1930 இல் 1வது உலகக் கிண்ணப் போட்டி உருகுவேயில் நடைபெற்றது.

பிரான்ஸ் 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1998). இதில் 1998 இல் 16வது உலகக் கிண்ணப் போட்டி பிரான்ஸில் நடைபெற்றது.

இங்கிலாந்து 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1966). இதில் 1966 இல் 8வது உலகக் கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.

பிரேஸில் 5 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1958, 1962, 1970, 1994, 2002). இதில் எந்த ஒரு கிண்ணமும் பிரேஸிலில் வைத்து வெல்லப்படவில்லை.

 • 1958 - சுவீடன் (6வது உலகக் கிண்ணப் போட்டி)
 • 1962 - சிலி (7வது உலகக் கிண்ணப் போட்டி)
 • 1970 - மெக்ஸிக்கோ (9வது உலகக் கிண்ணப் போட்டி
 • 1994 - அமெரிக்கா (15வது உலகக் கிண்ணப் போட்டி)
 • 2002 - தென்கொரியா/ஜப்பான் (17வது உலகக் கிண்ணப் போட்டி)

1942 மற்றும் 1946 ஆண்டுகளில் 2வது உலகப் போர் காரணமாக உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரத்துச்செய்யப்பட்டன.

 • Like 2
Link to comment
Share on other sites

எத்தனை பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட் (Centigrade) மற்றும் பரனைட் (Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்?

 • Like 1
Link to comment
Share on other sites

எத்தனை பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட் (Centigrade) மற்றும் பரனைட் (Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்?

பரனைட்திலிருந்து சென்டிகிரேட்க்கு மாற்றும் போது

(-40பாகைF - 32பாகை)x 5/9

-72 )x 5/9

=-40பாகைC

சென்டிகிரேட்டிலிருந்து பரனைட்க்குக் மாற்றும் போது

(-40பாகைC x 9/5)+32

-72 + 32

=-40பாகைF

ஃ-40பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட்(Centigrade) மற்றும் பரனைட்(Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்.

Edited by குட்டி
Link to comment
Share on other sites

(-40°) என்பது சரியான விடை. பாராட்டுக்கள் குட்டி. :(

(-40°C) = (-40°F)

வெறும் பாராட்டு மட்டுமா ராசராசன்? ஒரு பாலப்பப் பாசல் அனுப்பி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...

Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.