Jump to content

ஊருக்குப் போக விருப்பமில்லை - கவி 05 - "இந்தியத்தால் சிந்திய இரத்தம்"


Recommended Posts

220px-Parathan-2.JPGகப்டன். மொறிஸ் [செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989 ]

சின்னஞ்சிறு பாலகனாய்... முற்றும் அறியாத பிஞ்சாய் நான்,

நஞ்சு தரித்த எம் வீரரை... நட்புடனே பார்த்து நின்றேன்!

கிழமைகளில் சில நாளில் இனிமையாய் அவர்களுடன்,

எங்கள் வீட்டில் உணவுண்டு நன்றி சொல்லிச் செல்லும் வீரர்...

மறுமுறை வரும்போது ஒருவரேனும் குறைவார்... தேடுவேன்!!

"மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்!

அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்!

வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு,

அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன!

ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!!

தலைவன் வழியில் நின்றவன்... தமிழருக்கு காவலன்!

இந்தப் பாலகன் கவிதைக்கும் அவன்தான் நாயகன்!

அவன் கருங்குழல் ஆயுதந்தனை வாங்கி...

முதன்முறையாய் சுமந்து பார்த்தான் !

ஆறு வயதிலும் அவனுக்கு ஆசை வந்தது!!

ஈழத்தில் தமிழ் இரத்தம் குடித்த இந்திய வல்லூறுகள்-இவன்

காலத்தில் இரைதேட வெளியே வரப்பயந்து,

பச்சைக் கோட்டைக்குள் பதுங்கியே கிடந்தனர்!

நேரெதிர் இயலாமல்... வீரனை விழுத்த,

சூழ்ச்சிகள் தேடினர் சூழ்ச்சிக்கார சூரர்கள்!!

பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு,

தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!

துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்,

பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!

அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!!

துப்பாக்கிக் குண்டுகள் தடுமாறின... அவனைத் தொட முடியாமல்!

வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற வீணர்களின் வெறியாட்டத்தில்,

ஒரு நிகரற்ற வீரன்... தன்னிரு தோழரோடு... தாய்மண்ணில் சாய்ந்தான்!

அவர்கள் வீழ்ந்தும் அடங்காத கொலைவெறியில்.......................

அதை நினைத்தால் கலங்குது... கண்கள் இன்னும்! பதைக்குது நெஞ்சம்!!

நான் பார்த்துப் பழகிய ஒரு மாவீரனின் வீரமரணம்...

இன்னும் அழியாத நினைவாய் எனக்குள்... !

அறியாத வயசிலும் என் மனதில்... விதையாய் விழுந்தான்!

அவன் வரமாட்டான் என்று தெரிந்தும்...

அவனையே தேடிக்கொண்டிருந்தது... அந்த பிஞ்சு மனசு!!

அவன் கண்ட கனவு... அவனின் தாகம்,இலட்சியம் ஒரு நாளும் தோற்காது...!

விடிகின்ற ஈழத்தில் ....மீண்டும் பிறந்து தாய்மண்ணில் தவழ்வார்கள் வீரக்குழந்தைகள்!!

சிந்திய இரத்தத்தின் வரலாறுகள் தொடரும்...

இதன் முன்னைய பதிவுகளைப் பார்க்க:

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - கவிமுகம்

http://www.yarl.com/...56

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஒபரேஷன் லிபரேஷன் ஆரம்பம்" (கவி-01)

http://www.yarl.com/...88

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - வடமராட்சி மண்ணில் வந்திறங்கிய விஜயர்கள்! (கவி - 02)

http://www.yarl.com/...21

ஊருக்குப் போக விருப்பமில்லை - உலகையே அதிரவைத்த கறுப்பு வீரன்! (கவி-03)

http://www.yarl.com/...61

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஈழக் காற்றில்...இந்திய நாற்றம்" (கவி-04)

http://www.yarl.com/...showtopic=95896

திருத்தத்திற்கான காரணம்:

முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள் செயற்படாதமையினால் அவை மாத்திரம் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அவை செயற்படக்கூடியவாறு இருக்கும் என நம்புகின்றேன்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தாயகத் துயரங்களையும், ஏக்கங்களையும் தாங்கி வரும், உங்கள் கவிதை வலிக்கின்றது!

நன்றிகள், கவிதை!

Link to comment
Share on other sites

" பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு,

தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!

துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்,

பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!

அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!! "

இலங்கையின் சுதந்திரம் தொட்டு இன்றுவரை துரோகத்தனம்தான் ஆட்சி செய்தது என்பது கசப்பான உண்மை . வாழ்த்துக்கள் கவிதை இந்தவரிகளுக்காக...............

Link to comment
Share on other sites

தாயகத் துயரங்களையும், ஏக்கங்களையும் தாங்கி வரும், உங்கள் கவிதை வலிக்கின்றது!

நன்றிகள், கவிதை!

வலிகளைத்தான் பெரும்பாலும் அனுபவித்தோம். ஆனாலும் அந்த மண்ணின் ஞாபகங்களில் மனவெளிகள் நிறைந்துபோகின்றன.

வலித்தாலும் எதையும் தாங்கும் வலிமையையும் கொடுத்திருக்கு அந்த மண் எமக்கு!

நன்றி புங்கையூரன்! :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எத்தனை வயசென்று தெரியுது :D மற்றப் படி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை[கவிதை எழுதத் தெரிந்தால் தானே கவிதை விமர்சிக்கலாம்.]பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

" பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு,

தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!

துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்,

பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!

அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!! "

இலங்கையின் சுதந்திரம் தொட்டு இன்றுவரை துரோகத்தனம்தான் ஆட்சி செய்தது என்பது கசப்பான உண்மை . வாழ்த்துக்கள் கவிதை இந்தவரிகளுக்காக...............

கோ... கூட இருந்து குழிபறிக்கிற துரோகத்தனம் எங்கள் இனத்துக்கே ஒரு தொடரும் சாபக்கேடு. இது காலங்காலமாக தொடரும் நிலைமை.

மாறுமா என்பது சந்தேகமே?

உண்மையான துரோகத்தனத்தினை ஏனென்றும் கேட்கமாட்டார்கள்... ஆனால் நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு துரோகப்பட்டம் கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.

இதுதான் இன்றைய நிலைமை. :(

நன்றி கோ :)

Link to comment
Share on other sites

உங்களுக்கு எத்தனை வயசென்று தெரியுது :D மற்றப் படி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை[கவிதை எழுதத் தெரிந்தால் தானே கவிதை விமர்சிக்கலாம்.]பாராட்டுக்கள்

ரதியக்கா! பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள்! :)

நான் இப்பொழுதுதான் கவிதையெழுத முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.

நான் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் நிறையவே இருக்கின்றது.

யாழில் உள்ள பலபேரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் இன்னும் இருக்கின்றது.

நான் உங்களுக்குத் தம்பிதானே அக்கா! என் வயசைத்தான் வெளிப்படையாக யாழில் என் சுயவிபரப் பகுதியில் குறிப்பிட்டிருக்கின்றேனே!

நன்றி ரதி அக்கா! :)

Link to comment
Share on other sites

அவன் கண்ட கனவு... அவனின் தாகம்,இலட்சியம் ஒரு நாளும் தோற்காது...!

விடிகின்ற ஈழத்தில் ....மீண்டும் பிறந்து தாய்மண்ணில் தவழ்வார்கள் வீரக்குழந்தைகள்!!

இந்த நம்பிக்கை தான் தமிழர்களை ஆறுதல் கொள்ள வைத்திருக்கிறது கவிதை. நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் வலிகளாய் மனதை தைக்கின்றது. உண்மைகள் கூடவே கலங்க வைக்கின்றன. நன்றிகள் கவிதை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவிதை உங்கள் முன்னைய இணைப்புக்களை கிளிக்கினால் page not found என்று வருகிறது கவனியுங்கள்

Link to comment
Share on other sites

அவன் கண்ட கனவு... அவனின் தாகம்,இலட்சியம் ஒரு நாளும் தோற்காது...!

விடிகின்ற ஈழத்தில் ....மீண்டும் பிறந்து தாய்மண்ணில் தவழ்வார்கள் வீரக்குழந்தைகள்!!

இந்த நம்பிக்கை தான் தமிழர்களை ஆறுதல் கொள்ள வைத்திருக்கிறது கவிதை. நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் வலிகளாய் மனதை தைக்கின்றது. உண்மைகள் கூடவே கலங்க வைக்கின்றன. நன்றிகள் கவிதை.

மீண்டு வந்ததில் மிக்க சந்தோசம்! நன்றி கல்கி!

எம் மாவீரர்களின் தியாகங்கள் என்றைக்கும் எதனாலும் தோற்றுப்போகாது! அதன்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பவன் நான்!

அவர்களின் தாயகக் கனவு நிறைவேறும்!

எம் மக்களின் அவலங்கள் எல்லாம் தூர ஓடிப்போகும்!

இது என்றாவது ஒரு நாளேனும் நடந்தே தீரும்!

Link to comment
Share on other sites

கவிதை உங்கள் முன்னைய இணைப்புக்களை கிளிக்கினால் page not found என்று வருகிறது கவனியுங்கள்

என்னால் முடிந்தளவுக்கு என் இணைப்புக்களை மாற்றியமைத்துள்ளேன்.

இப்பொழுது அந்த இணைப்புக்களை சொடுக்கிப் பாருங்கள்! சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் அக்கா! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முடிவு தெரிந்து விட்டதால், 'இனி என்ன செய்ய..?' என சிந்தனையே மேலோங்குகிறது..! 'இது எனக்கு மட்டும் தோன்றுகிறதா..? இல்லை, எல்லோருக்குமா..?' என தெரியவில்லை.
  • முக்கிய 4 வங்கிகளும் தமது வீட்டு விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக் சிட்னி மோர்னிங் கேரல்டில் கட்டுரை வந்திருந்தது. அதில் குறிப்பாக வெஸ்ட்பக் வங்கி ஆய்வாளர் 10% இலிருந்து 20% வரை விலை வீழ்ச்சி அடையலாம் என எதிர்பார்க்கிறார். பணவீக்கம் ஆண்டிறுத்க்குள் 6% எட்டும் எனவும் அதனால் ஏற்படப்போகும் வட்டி விகித அதிகரிப்பினடடிப்படையிலேயே வீட்டு விலை தொடர்பான எதிர்வு கூறியிருந்தனர். அதே நேரம் மே மாதத்தில் கடனட்டையில் செய்யப்படும் செலவு குறைவடைந்துள்ளது (கடனட்டை வட்டி வீதம் பெரும்பாலும்  இந்த வட்டி விகித அதிகரிப்பால் மாற்றம் ஏற்படாதது என நினைக்கிறேன் ஏனெனில் ஏற்கனவே அதிகரித்த வட்டியில்தான் கடனட்டை உள்ளது ( என்னிடம் கடனட்டை இல்லை அதனால் விபரம் தெரியாது). சில்லறை வர்த்தக செலவீடு இந்த வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தது, அதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. RBA  புள்ளி விபரப்படி கட்டுமான விலைகள் அதிகரித்துள்ளது, பொருள்களை எடுத்து செல்லும் செலவு 2019 இலிருந்ததை விட 5 மடங்காக அதிகரித்துள்ளது அத்துடன் 35% காலவிரயம் பொருள்களை நகர்த்துவதில் ஏற்பட்டுள்ளது. வீடுகள் காலியாக உள்ள நிலை குறைவடைந்துள்ளதுடன் வீட்டிற்கான வழங்கல் குறைவடைந்துள்ளது. இவற்றினடிப்படையில் பார்க்கும்போது வீட்டின் விலைகள் 10% இலிருந்து 20% வரை வீழ்ச்சியடையுமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. 
  • ஆஹா… நீங்கள் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா யாழுக்கு வந்து புட்டின் துதிபாடும் செய்திகளை மட்டும் இணைக்காமல்…தொடர்ந்து வந்தால் உங்கள் ஆதர்ச நாயகன் புட்டின் பற்றி நான் எழுப்பும் இன்னும் பல மழுப்பல்களை காணலாம். எப்படி வசதி? புட்ஸ் தனது சொந்த பாதுகாப்பு அமைச்சரையே பத்தடிக்கு அப்பால் வைத்து டீல் பண்ணிய வீடியோ கீழே. இன்னும் மேசை கொஞ்சம் நீண்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சர் பெலரூசில் இருந்துதான் கதைச்சிருப்பார் 🤣. https://www.dailymail.co.uk/video/vladimirputin/video-2613785/Video-Putin-hosts-meetings-defence-minister-long-table.html சேர்ட்டை கழட்டி போட்டு போஸ் கொடுத்தால் மட்டும் போதாது. சொந்த பாதுகாப்பு அமைசரையாவது பக்கத்தில் வைத்து பார்க்கும் தில் வேணும்🤣.  ஓடி வந்த புலம்பெயர் தமிழனை விட புட்டின் பெரிய பயந்தாங்கொள்ளியாய் இருக்கிறார். அதனால்தானோ என்னமோ பல ஓ.வ. தமிழர்களுக்கு அவரை பிடிக்கிறது🤣. பிகு ஓ மன்னிகவும் இது ஆஅங்கில இணையதளம் - வீடியோ பொய்யாகவே இருக்கும். சரிதானே🤣.
  • இப்படியான  உங்களின் மழுப்பலை இன்று தான் காண முடிந்தது. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.