Jump to content

குட்டி ஹரியின் லண்டன் அண்டி அங்கிள் நகச்சுவை.


Recommended Posts

குட்டி ஹரியின் நகச்சுவை நிழ்வு போன வருடம் கருத்துக்களத்தில் பார்த்தாக நினைவு . மாதம் சரியாக ஞாபகம் இல்லை .

Link to comment
Share on other sites

நாரதர் இணைத்த காணொளியை சிரிக்கமுடியும் எனும் நப்பாசையுடன் தொடர்ந்து பார்த்தேன். தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. பையன் கஷ்டப்பட்டு ஏதோ செய்கின்றானே என்பதற்காக சிரிக்கவேண்டும்போல் வந்தது. சிரிக்கவைப்பது உண்மையில் கடினமான கலை. படலைக்கு படலை, நையாண்டி மேளம் போன்றவற்றில் நடிக்கும் கலைஞர் சிலருக்கு இயல்பாகவரும் ஆற்றல்கள் அவை. அவர்களினாலும் எல்லோரையும் 100% சிரிக்கவைக்கமுடியும் என்றும் இல்லை. இதற்கு பலவிதமான தேடல்கள், அனுபவம் கைகொடுக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தியொருக்கால் நெடுக்காலைபோனவனும் இததை இணைச்சிருந்தவர் எண்டு நினைக்கிறன் :rolleyes: குட்டிஹரியின்ரை பகிடியும் அக்சனும் படு ஓவர்...........வெருளிப்பகிடிகள்.இதே மாதிரித்தான் கே எஸ் பாலச்சந்திரனும் பகிடிவிட்டு நடிப்பார்......அவரின் பகிடிகள் இன்றும் கேட்டு சிந்திச்சு சிரிக்கக்கூடியதாய் இருக்கு

Link to comment
Share on other sites

இவர் அந்த தமிழ் ஆன்டி வெங்காய வாசத்தோடு போனார் என்கிறார். இவரும் வீட்டுக்குப் போய் சோத்தை தான் கட்டுவார் என்று நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அந்த தமிழ் ஆன்டி வெங்காய வாசத்தோடு போனார் என்கிறார். இவரும் வீட்டுக்குப் போய் சோத்தை தான் கட்டுவார் என்று நினைக்கிறேன்!

எம்மவர் பலரின் வீடுகளுக்குள் செல்ல முடியாத மணம் ஒன்று.. உள்ளது என்பது என்னவோ உண்மை தானே. அதுவும் யன்னலே திறக்காத பல ஜென்மங்களும் இருக்குதுகள்..!

பிரிட்டனில் ரடன் எனும்.. கதிரியக்க வாயுவின் அளவும் வளிமண்டலத்தில் கொஞ்சம் அதிகம். எனவே நல்ல காற்றோட்டம் வீடுகளில் அனுமதிக்கப்படுவது அவசியம். ஆனால்... எங்கட சனம்.. நாடு பற்றிய எந்தப் பொது அறிவும் இன்றி.. அந்த நாட்டின் பிரஜைகளாக...!!! :lol::icon_idea:

radon-penetration_1.jpg

rafg05.gif

Radon

Radon is a natural radioactive gas with no taste, smell or colour. Radon and the radioactive elements formed by its decay can be inhaled and enter the lungs. Inside the lungs, these elements continue to decay and emit radiation; internally alpha particles pose the greatest health risk. Ionising radiation causes cell damage which can lead to lung cancer.

Radon is now recognised to be the second largest cause of lung cancer in the UK after smoking. Lung cancer is also the biggest cause of cancer related death in the UK with only 5% of detected lung cancers being successfully treated.

Radon is measured in units of becquerels per cubic metre, Bq/m3 (i.e. concentration of radioactivity in air). Radon contributes by far the largest component of background radiation dose received by the UK population and significant exposures are possible in workplaces. Studies on occupational groups with known high exposure to radon show a significantly increased risk of lung cancer. It is also known that the risk of lung cancer from radon is approximately 25 times higher for cigarette smokers than for non-smokers. radon_lungs.jpg

http://www.hseni.gov...umn/radon-2.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலை ஆரை நம்பி யன்னலை திறக்கிறது??????அவ்வளவுத்துக்கு கள்ளர் கூட்டமாமெல்லே.........அதுசரி லண்டனிலை யன்னல் திறந்தென்ன திறக்காட்டிலென்ன.......யன்னலை நிலையோடை சேர்த்து அமசடக்காய் பிரிச்செடுத்து வீட்டுக்குள்ளை வாறாங்களாம். :D:icon_idea: வீட்டை விட்டு வெளியிலை போகேக்கையும்...ரேடியோ,ரிவியை போட்டுட்டுத்தான் வெளியிலை போயினமாம்...இரவிலையெண்டால் லைற்ரு :lol:

Link to comment
Share on other sites

ஐயோ குமாரசாமி அண்ணை, நீங்களே கள்ளருக்கு பாடம் எடுத்துடுவீங்கள் போல.

எதோ காஸ் ஒண்டை அடிச்சு மனிசரை மயக்கிப்போட்டு அள்ளுறதும் நடக்குதாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நகைச்சுவையென எடுக்க முடியாது வேதைனைபடத்தான் முடியும். oyster card இயந்திரத்தில் தமிழில் மாத்தி அடிப்பது பெருமைக்குரிய விடயமாக பார்க்கபடல்வேனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குப்புறப்படுத்துக்கொண்டு துப்புவது நகைச்சுவை வகைக்குள் வருமெண்டால் இது நகைச்சுவைதான். :( :(

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் இராணி முதல் தம்மைப் பார்த்தே இவ்வாறு சுய விமரிசனமான கதைக்கும் நகச்சுவைக் கலாச்சாரம் உள்ளது.அதன் பாதிப்புத் தான். எமக்கு எம்மைப் பார்த்து பகிடி விடுவது எமக்குப் புதிதாக இருக்கலாம்.அதனால் பலருக்கு இது ஒவ்வாததாக இருக்கலாம்.

இளையோரின் இவ்வாறான தமிழ் மொழி மூல முயற்சிகள் வரவேற்கத் தக்கது. எம்மைப் பார்த்து நாம் சிரிப்பதே சுய விமர்சனத்தின் உச்சம். நல்ல விடயங்களை எங்கிருந்தாலும் நாம் உள் வாங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் இராணி முதல் தம்மைப் பார்த்தே இவ்வாறு சுய விமரிசனமான கதைக்கும் நகச்சுவைக் கலாச்சாரம் உள்ளது.அதன் பாதிப்புத் தான். எமக்கு எம்மைப் பார்த்து பகிடி விடுவது எமக்குப் புதிதாக இருக்கலாம்.அதனால் பலருக்கு இது ஒவ்வாததாக இருக்கலாம்.

இளையோரின் இவ்வாறான தமிழ் மொழி மூல முயற்சிகள் வரவேற்கத் தக்கது. எம்மைப் பார்த்து நாம் சிரிப்பதே சுய விமர்சனத்தின் உச்சம். நல்ல விடயங்களை எங்கிருந்தாலும் நாம் உள் வாங்க வேண்டும்.

பிரித்தானியர்களிடம் பிடித்த விடயம் இது. பெரிய பதவிகளில் உள்ளவர்களே தாங்க விட்ட பிழைகளைச் சொல்லி நக்கலடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

குட்டி ஹரி ஜேர்மனியில் பிறந்து லண்டனில் வசிக்கும் ஒரு யாழப்பாண தமிழர். (பரம்பரை)....

வெளிநாடுகளில் சில கூடாத சொற்களையும் நேரடியாக வெட்கமில்லாமல் கதைப்பதால் தமிழிலும் கதைக்கலாம் என்று நினைத்து இவர்களும் சில சொற்களை கதைப்பார்கள்... :wub: அங்கெ பிறந்து வளர்ந்ததால் அப்படி வளர்ந்து விட்டார்கள்... :rolleyes:

இவர்களின் சில ஜோக்ஸ் நானும் ரசித்ததுண்டு... :)

எனினும் சில ஜோக்ஸ் நல்லதாக இருந்தாலும் சில ஜோக்ஸ் ஏன் கேட்டோமென்று இருக்கும்... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இராணி முதல் தம்மைப் பார்த்தே இவ்வாறு சுய விமரிசனமான கதைக்கும் நகச்சுவைக் கலாச்சாரம் உள்ளது.அதன் பாதிப்புத் தான். எமக்கு எம்மைப் பார்த்து பகிடி விடுவது எமக்குப் புதிதாக இருக்கலாம்.அதனால் பலருக்கு இது ஒவ்வாததாக இருக்கலாம்.

இளையோரின் இவ்வாறான தமிழ் மொழி மூல முயற்சிகள் வரவேற்கத் தக்கது. எம்மைப் பார்த்து நாம் சிரிப்பதே சுய விமர்சனத்தின் உச்சம். நல்ல விடயங்களை எங்கிருந்தாலும் நாம் உள் வாங்க வேண்டும்.

பிரித்தானியாவில் இராணிமுதல்???????????

நகைச்சுவைக்கும்...நக்கலுக்கும் வித்தியாசம் என்ன?

என்னைநானே வைத்து பகிடி விடுவதற்க்கும்......இன்னுமொருவரை வைத்து நக்கல் நையாண்டி பண்ணி நெளிப்பதற்கும் வித்தியாசம்?????

இன்னுமொருவரின் நடத்தையை மட்டம் தட்டி நகைச்சுவையாக தமிழை வளர்த்தெடுப்போம் என்று சொல்ல வருகின்றீர்களா?.....சுயவிமர்சனங்கள் தேவை...அதற்க்காக மற்றவரை மட்டம்தட்டித்தான் சுய விமர்சனம் என்பது??????

இளையோரின் தமிழ்மொழிமூலமுயற்சிகள் யாழ்களத்தில் அதிகமாக இருக்கின்றது!இது உங்களுக்கும் தெரியும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.