Jump to content

யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?


Recommended Posts

ம்.ம்.ம்.ம் .... நல்ல முயற்சி.எனக்கு யாழ் ஐ.பி சி வானொலி மூலம் இரண்டாயிரமாம் ஆண்டளவில்தான் அறிமுகமானது. மற்றைய இணைய இணைப்புக்களைப் பார்ப்பதற்கு யாழையே பயன் படுத்துவேன். .கடந்த ஒரு வருடமாகத்தான் எனது கருத்துக்களை முன்வைத்து வருகிறேன். நானும் யாழ் கள உறுப்பினருள் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

யாருக்கு தெரியும்.

மறந்து போச்சு.

கன காலமாகிட்டுது தானே.

வயசும் போட்டுது.

யாழ் இணையம் முன்னர் எப்படி இருந்திருக்கும் என்று அறிய ஆவலாய் இருப்பவர்கள் கீழே உள்ள லிங்குககளை கிளுக்கிப் பார்க்கவும்.

1999 இல் யாழ்.

2000 இல் யாழ்.

2001 இல் யாழ்.

2002 இல் யாழ்.

2003 இல் யாழ்.

2004 இல் யாழ்.

அந்த நாளையில பாருங்கோ . . . ( அடேய் அடேய் அடங்குடா . . )

இப்படி யாராச்சும் கேள்வி கேட்டாத்தானே . . .

சைக்கிள் கப்பில நானும் படம் காட்டலாம் எண்டு பார்த்தா விடுறாங்கள் இல்லை.

சரி விசயத்துக்கு வருவம்.

யாழ் இணையம் எப்படி அறிமுகமானது?

அம்மாவான எனக்கு சரியா ஞாபகம் இல்லை.

இணையம் வந்த புதிசில . . .

தமிழுக்கும் நாட்டுக்கும் உருப்படியா யோசிச்சு இணையத்தைப் பாவிச்சது . . .

நோர்வேல இருக்கிற ரெண்டு மூண்டு சீவன்கள்.

அதில ஒண்டு உந்த யாழ் இணையம்.

ஆரம்ப காலத்தில நானும் வந்து உந்த களத்தில படுத்துக் கிடந்து . . . உருண்டு பிரண்டு . . . எழும்பிப் போறனான்.

எப்படியும் வருசத்தில 2 - 3 தரமாவது ரெஜிஸ்டர் பண்ணுவன்.

அடிக்கடி கடவுச்சொல்லை மறந்து போடுவன்.

பிறகென்ன இன்னொரு பேரில வாறதுதான்.

எழுதிறத எண்டா . . வாழ்க்கை வெறுக்கும்.

பிறகு என்ன மண்ணுக்கு யாழ் களத்துக்கு வாறனி எண்டு நீங்கள் எல்லாம் கேப்பீங்கள்.

மற்ற சனம் என்ன எழுதி இருக்குது.

வேலை இல்லாததுகள் எத்தனை உது வழிய திரியுதுகள் எண்டு பார்க்கத்தான்.

யாழ் இணையம் எப்படி அறிமுகமானது எண்டு கேட்டா அவனவன் தன்ட சுயசரிதம் எழுதி கொண்டு இருக்கிறான்.

8 வருசம் ஆகிட்டுதா?

நம்பவே முடியல.

எத்தனையோ . . இடர்கள், தடைகள், தொந்தரவுக்குள்ளால . .

(எல்லாம் ஒண்டுதான் போல . . .)

8 வருசமாச கொண்டோடின மோகன் அண்ணாவும் . .

அவருக்கு துணையா இருக்கும் அனைத்து சீவன்களும் . .

உங்கட காலை காட்டுங்கோ . . .

நன்றி ஐயா நன்றி . . .

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இப்படியான ஒரு இணையத்தை தந்ததற்கும் . . .

அதைத் தொடர்ந்து தரம் தாளாமல் பேணிக் கொண்டு இருப்பதற்கும்.

"வரலாறு என்னை விடுதலை செய்யும்."

அதையேன் இஞ்ச சொல்லுறன்.

அடச் சீ . . .

எதை எதை எங்க சொல்லுறது எண்டும் தெரியாது . . .

ஏதாச்சும் பஞ்ச் டயலாக் சொல்லுவம் எண்டா . . .

நமக்கு இருக்கிற ஒண்டே காணும்.

Link to comment
Share on other sites

சனியன் வயசு போனா ஒழுங்கா இணைப்புமா குடுக்கத்தெரியா? யாழ் முன்பு எப்பிடி இருந்ததென்று பார்க்க ஆர்வம் தான்...புறு புறுக்காம லிங் குடுத்தா நல்லது.

யாழ் இணையம் எப்படி அறிமுகமானது எண்டு கேட்டா அவனவன் தன்ட சுயசரிதம் எழுதி கொண்டு இருக்கிறான்.

கண்ணாடியைப் போட்டு வாசிக்க வேணும்....யாழ் உங்களுக்கு எப்பிடி அறிமுகம் என்பதுதான் கேள்வி !

Link to comment
Share on other sites

லிங்க் குடுக்க மறந்து போனன்.

http://www.proud2btamil.com/yarl/

நன்றி

எல்லாம் சரி 2000 ஆண்டு யாழ் இணையதிலை உதயனுக்கு லிங் குடுத்திருக்கு போல ??

Link to comment
Share on other sites

மோகன் அண்ணோய் . . .

1999ம் ஆண்டு சைட்டில உலகின் முதலாவது தமிழ் தேடல் பொறி எண்டு ஒண்டு கிடக்கு . . அது தேனீ தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

நல்லதொரு தலைப்பு.

ஆழ்ந்த நினைவகளை மீட்டிப்பார்க்கும் ஒரு தேடல்.

அதிலெழுகின்ற ஆனந்தத்தை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் ஓர் இன்பம்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது "யாழ் களத்தில்" என்று ஆரம்பித்து ஏதோவெல்லாம் கூறி மகிழ்ந்தார். அன்றே அவரிடம் முழுமையான முகவரியைப் பெற்று தினமும் வந்து வாசித்தேன்.

தினமும் பார்க்காதுவிட்டால் என்னவோ போலிருக்கும். அப்போது நானும் களத்தில் வந்து கருத்தெழுதவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. அப்படி வாசித்துக் கொண்டிருக்கும்போதுதான் பலர் தமிழ்ச்சொற்களை எப்போதும் தவறாகவே எழுதிவந்தார்கள். இதனைப் பார்த்ததும் ஓர் இனிய பாயாசத்துள் சிறு சிறு கற்கள் கடிபடுவதைப்போல் இருந்தது. அவற்றைக் களையவேண்டும் என்கின்ற எண்ணத்தோடுதான் கடந்த வருடத்திலிருந்து களத்துள் நுழைந்து கருத்துக்களை எழுதிவருகிறேன்.

அவ்வப்போது சிலருக்கு அவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறேன். அதேவேளைகளில் நான்கூட தவறுகள் விட்டுவிடுகிறேன். அவற்றைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு எனக்குள் நன்றி சொல்வேன். அப்போது சிரிப்புத்தான் வரும்.

எனக்குப் பிடித்தவைகள்: கள உறவுகளின் அறிவுபுூர்வமான கட்டுரைகள், கதைகள், கவிதைகள், முக்கியமாக பலவிதமான நகைச்சுவைகள் என்பன. ஆனால் சண்டை பிடிப்பதும், மற்றவர்கள் சண்டைபிடிப்பதைப் பார்ப்பதும் பிடிக்காது. (அண்மைக்கால அனுபவம் உட்பட).

இங்கே கருத்துக்கள் எழுதிவர்களின் அனுபவங்களைப் படிப்பதே ஒருவித ஆனந்தத்தைக் கொடுக்கின்றது.

பல வேலைப் பழுக்களின் மத்தியிலும் இந்தத்தலைப்பைப் பார்த்ததும் இன்று மீண்டும் களத்துள் நுழையவேண்டும் என்ற அவாவும் ஏற்பட்டது.

எல்லோருக்கும் என் நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ராமா அக்கா!!!

Link to comment
Share on other sites

எனக்கு யாழ் களம் எப்படி அறிமுகம் ஆனது எண்டா சுனாமி நடைபெற்ற சமயம் எமது வானொலி நிதி சேகரிப்பு நிகழ்வை தொடர்ந்து நாடாத்திக் கொண்டு இருந்த நேரம் இரவுப் பணியை எனக்குக் கொடுத்து இருந்தார்கள். சில நாட்கள் தனியாகவும் ஒரு சில நாட்கள் சக அறிவிப்பாளர்களுடனும் செய்து கொண்டு இருந்த போது தமிழ்நாதத்தில கவிதைகளுக்காகவும் செய்திகளுக்காகவும் பார்த்து கொண்டு இருந்தபோது அறிமுகமானது தான் யாழ்.

அந்த இரவுப் பொழுதில் உற்ற நண்பனாக இருந்தது. யாழ் களத்தில் வந்த சுனாமி பற்றிய கவிதைகளையும் செய்திகளையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. உண்மையைச் சொன்னால் யாழ் கள உறவுகளின் சுனாமி பற்றிய ஆழமான கவிதைகளைக் கேட்டு அந்த நள்ளிரவிலும் எமக்கு நிதி தந்தோர் பலர்....

அதற்கு பின்பு 2005 ஆம் ஆண்டளவில் நான் என்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுண்டல்

இன்று தான் அதிக சொல்களைப் பாவித்து மடல் எழுதியிருக்கின்றீர்கள். :wink: இருந்தாலும் ஒரு வானொலி அறிவிப்பாளருக்கு தமிழ் இப்படித்தான் வருமா??? :wink: :P

Link to comment
Share on other sites

ஆஆ இப்ப ஒ கே வா?

அட விடமாட்டாங்கப்பா....

ஜயோ இப்படி தமிழ் பேசினா தான் அறிவிப்பாளளாராவே வரலாம் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆ இப்ப ஒ கே வா?

அட விடமாட்டாங்கப்பா....

ஜயோ இப்படி தமிழ் பேசினா தான் அறிவிப்பாளளாராவே வரலாம் தெரியுமா?

ஒ........ அது தான் டண்ணும் இணையவானொலி தொடங்கீட்டாரா? :wink: :P

Link to comment
Share on other sites

நல்லாக் கேளுங்கோ தூயவன் அண்ணா :lol: லேசுப்பட்ட வானொலியா....இன்பத்தமிழ் வானொலி.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுண்டல்

இன்று தான் அதிக சொல்களைப் பாவித்து மடல் எழுதியிருக்கின்றீர்கள். :wink: இருந்தாலும் ஒரு வானொலி அறிவிப்பாளருக்கு தமிழ் இப்படித்தான் வருமா??? :wink: :P

நல்லாக் கேளுங்கோ தூயவன் அண்ணா :lol: லேசுப்பட்ட வானொலியா....இன்பத்தமிழ் வானொலி. :wink:

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் கேட்டீங்களா ஆசிரியருக்கு சண்டை பிடிச்சா பிடிக்காதாம் ( அச்சோ நான் இங்க வாறதே சண்டைபிடிக்கத்தான் :oops: :oops: ) அதால இனிமல் எல்லாரும்சண்டை பிடிக்காமல் இருங்க சரியா :evil:

ஆஹா சுண்டல் முதல் முதல் உங்கட சொந்தக்கருத்தை இப்பிடி கோர்வையா எழுதி இருக்கீங்க போல (தூயவனுக்கு நீங்க எழுதினதை பார்த்து பொறாமை அதான்அப்படி கண்டுக்காதீங்க) :wink: :P

Link to comment
Share on other sites

நல்லாக் கேளுங்கோ தூயவன் அண்ணா :lol: லேசுப்பட்ட வானொலியா....இன்பத்தமிழ் வானொலி. :wink:

இதோடா........ :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆருயிர் நண்பன் கந்தப்புவை கோவில கண்டு என்ன புதினம் என்று கேட்டன் அதற்கு அப்புவோ உனக்கு புதினம் சொல்லி வாய் நோகிறது போய் யாழ்கழத்தை பார் என்று உங்கள் இணையதள முகவரியை தந்தார்.அவ்வாறு தான் ஆரம்பமானது

Link to comment
Share on other sites

அது ஒரு பெரிய கதை. என் நண்பர் சொன்னவர்.

பி.கு. யாழ் களம் வரும் வரைக்கும் எனக்கு களம் என்றால் என்ன என்றே தெரியாது.

Link to comment
Share on other sites

இந்த நேரத்தில் யாழ்கள பொறுப்பாளரின் கருத்தை அறிய ஆவலா இருக்கு, மோகன் நீங்க சொல்லுங்க, ஏன் உங்களுக்கு இப்படி ஒரு களம் ஆரம்பிக்கனும் எண்டு ஆசை வந்தது? இதனால் எப்படிப்பட்ட கஸ்ரங்களை எதிர்கொண்டனிங்க, வருங்காலத்தில யாழ்களத்தை எப்படி கையாளப்போறீங்க, ஏதாவது திட்டம் இருக்கா? எண்டு சொல்லுங்க... :?

அட வருசம் முழுவதும் நாங்க கதைக்கிறம், இப்ப நீங்க கதைங்க,, ஆ, அப்படியே யாழகளத்தை தனி நபரா ஆரம்பிச்சு நடத்திவாற உங்களுக்கு யாரேனும் (முக்கியஸ்த்தார்கள்) வாழ்த்து சொல்லி இருக்காங்களா? அல்லது ஊக்கம் தந்திருக்காங்களா எண்டு சொல்லுங்க மோகன்,, :? :roll:

ஆ அப்படியே வலைஞன்(இளை), இராவணன்(வசி), யாழி, யாழ்பிரியா, யாழரசி, யாழ்ப்பாடி, உங்க கருத்துகளை காணல்லை? எப்படி 2 பெயரில மாறிமாறி எழுத கஸ்ரமில்லையோ? அதைப்பற்றி சொல்லுங்களேன்,,, :wink: :P :P

அப்படியே இந்த கூட்டத்தைப்பற்றி என்ன நினைக்கிறீங்க எண்டுறதை மறந்திட்டாமல் சொல்லிடுங்க,, :wink:

களத்தில றோயல் பமிலியின்ர செயற்பாடுகள், அரச குடும்பத்திண்ட செயற்பாடுகள், புடுங்கல் பார்ட்டிகளின் (தம்பியுடையான், லக்கி, ராஜா, தமிழ்மஹான், நாரதர், குறுக்ஸ்) செயற்பாடுகள் எவ்வாறு அமையனும் எண்டு எதிர்பார்க்கிறீங்க, லொள்ளுபார்ட்டிகளின்( ஆனந்தசங்கரி, ஜெயதேவன்) செயற்பாடுகள், பிராணிகள் செயற்பாடுகள், பெண்குழந்தை கருத்தாளர்கள் செயற்பாடுகள் என்பன பற்றி,,, (ஆ ஊ எண்டா உடன எழுத்து வன்முறையை கைவிடசொல்லி கேட்பியள், அதெல்லாம் சரி வராது வேறு ஆசை இருந்தால்சொல்லுங்க, மறு பரிசிலனை செய்யிறம்) :wink: :P

Link to comment
Share on other sites

அப்படி போடுங்கோ டக்கிளஸ்....:wink: :lol::lol:

எனது நீண்ட நாள் ஆசை அது.... :lol: :lol: ஆனால்... :? நிறைவேறு(ம்)மா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தமிழ் நாதத்திலிருந்து தான் யாழுக்கு வந்தேன்.3 வருடங்களாக பார்வையாளராக இருந்தேன்.இங்கு நடக்கும் விவாதங்களும் அறிவார்ந்த கருத்துக்களும் என்னை கவர்ந்தது.அத்துடன் இங்கு இருக்கும் பல உறுப்pனர்கள் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.நானும் எதாவது எழுதலாம் என்று உறுப்பினராக இநைந்தேன்.ஆனால் நேரம் தான் இடம் கொடுக்குது இல்லை.

Link to comment
Share on other sites

ம். நான் யாழ் இணையத்தை அறிந்துகொண்டது 1999 ஆம் ஆண்டில்தான். யாழ் இணையத்துக்கு வந்த பாதை சுவையானது. இணைய இணைப்பு பெற்றுக்கொண்டது 1997 அல்லது 98 ஆக இருக்கவேண்டும். அப்போதெல்லாம் தமிழ் இணையத்தளங்கள் மிக மிக குறைவாக இருந்தன. இணையப் பக்கங்களை உருவாக்குவது என்பது அப்போது மிகச் சிரமமான வேலையாகவும், செலவான வேலையாகவும் இருந்தது. அதிலும் தமிழில் இணையத்தளம் உருவாக்குவது என்பது சிக்கலான விடயமாகவே பார்க்கப்பட்டது. தமிழில் எழுதிக் கருத்து பரிமாறக் கூடிய இடங்கள் இல்லாமல் அல்லது ஒரு சிலவே இருந்தன. நான் இணைய இணைப்பு பெற்றுக்கொண்ட காலம் - அதாவது எனது அப்போதைய வயது சிந்தனை வளர்ச்சியையும், மாற்றங்களையும், தேடல்களையும் கொண்டதாக இருந்தது. சில கருத்துத் தளங்களில் தேடல் தொடங்கியிருந்த காலமாகவும், தீவிரமாக இருந்த காலமாகவும் அந்தக் காலகட்டம் இருந்தது. குறிப்பாக தமிழ், ஈழம், கடவுள் போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம். அப்படியான சந்தர்ப்பத்தில் இணையத்தில் "தமிழர்களோடு தமிழில்" உரையாடக்கூடிய தளங்களை நான் தேடினேன். அரட்டை அறைகள் பல இருந்த போதும், எதுவும் எனது தேடலுக்கு சரியானதாகப் படவில்லை.

அந்த சந்தர்ப்பத்தில் "Chennai Online" இணையத்தளம் "ஒரு தேடற்பொறி" மூலமாக அறிமுகமானது. அங்கு "தமிழில் எழுதி" உரையாடக்கூடிய வசதி செய்திருந்தார்கள். தமிழில் இலகுவாக எழுதி உரையாடக்கூடியதாக இருந்த "அரட்டை அறையாக" அது இருந்தது. என்னை அது கவர்ந்திருந்தது. கூடுதலாக இந்தியத் தமிழர்கள் தான் அங்கு வந்தார்கள். ஒரு சில புலம்பெயர்ந்த எம்மவரும் அங்கு வந்தார்கள். அங்கு கடவுள், மதம், தமிழ், தமிழீழம் போன்ற விடயங்களில் எனது கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியதாகவும், விவாதிக்கக்கூடியதாகவும் இருந்தது. பலநேரங்களில் தீவிரமாக முரண்பட்டிருக்கிறோம். (தமிழில் எழுதுகிற வசதி இருந்த போதும் பலர் ஆங்கிலத்திலேயே எழுதினார்கள்.). இப்படியான சந்தர்ப்பத்தில் இந்திய நண்பி ஒருவர் அங்கு அறிமுகமானார்.

அவர் யாகூ மெசெஞ்சரையும், யாகூ அரட்டை அறையையும் அறிமுகப்படுத்தி வைத்தார். யாகூ அரட்டை அறையில் நிறைய அனுபவங்கள் உண்டு. அவற்றை விரிவான பதிவாகவே இடவேண்டும். யாகூ அரட்டை அறையில் தமிழில் ஒலிவடிவில் உரையாடும் வசதி பயன்படக்கூடிய விடயமாக இருந்தது. ஆர்வமுள்ள நண்பர்கள் சேர்ந்து விவாதங்களை செய்தோம். கவிதைகள், பாடல்கள் என பகிர்ந்துகொண்டோம். அப்படி அங்கு அறிமுகமான நண்பர்களில் ஒருவர் கனடாவில் வசிக்கிற இளைஞர்.

அவர் எனது கவிதைகளையும், எண்ணவெளிப்பாடுகளையும் கண்டுவிட்டு "யாழ் இணையம் உமக்கு பயனுள்ளதாக இருக்கும். அங்கு கவிதைகளால் மோதல்கள் எல்லாம் செய்கிறார்கள். நல்லா இருக்குது" என்றார். சரி என்றுவிட்டு யாழ் இணையம் வந்தேன். மேலோட்டமாகப் பார்த்துவிட்டு போய்விட்டேன். பிறகு இன்னொரு தடவை வரும் போது யாழ் இணையம் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு சில நாட்கள் கழித்து வந்து வாசித்தேன். ஏதோ ஒரு தலைப்பில் கருத்து எழுதவேண்டி இருந்தது. சரியென்று "இளைஞன்" என்று பதிந்து, உள்நுழைந்து கருத்தை எழுதினேன். எழுதிய கருத்தின் கீழ் "புதியதோர் உலகம் செய்வோம் இளைஞன் சஞ்சீவ்காந்த்" என்று இணைத்திருந்தேன் (என நினைக்கிறேன்). அந்தப் பெயரைப் பார்த்துவிட்டு சந்திரவதனா அக்கா அடையாளம் கண்டுகொண்டார். பிறகு யாழில் "வெளியில் ஊடகங்கள் ஊடாக" அறிந்த உறவுகள் பலரை சந்திக்க முடிந்தது. நளாயினி அக்கா, சாந்தி அக்கா, சந்திரவதனா அக்கா, மூனா அண்ணா, இராஜன் முருகவேல் அண்ணா, நாச்சிமார் கோயிலடி இராஜன் அண்ணா, அம்பலத்தார் என்று பலரை சந்திக்க முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. பலரோடு கருத்து பரிமாற்றங்களை செய்துகொள்ள முடிந்தது. கவிதைகளை இணைத்து கருத்துப் பெறமுடிந்தது. எனது எண்ணங்களை வெளிப்படுத்த முடிந்தது. பிறகு ஒரு கட்டத்தில் யாழ் அரட்டை அறையும் தமிழில் எழுதி உரையாடக்கூடிய வசதியைக் கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் யாழ் கள உறுப்பினர்கள் - மோகன் அண்ணா உட்பட - சிலர் மாலை வேளையில் ஒவ்வொருநாளும் அரட்டை அறையில் சந்தித்தோம். நட்போடு பல விடயங்கள் பேசினோம்.

சமகாலத்தில் நான் ஒரு இணையப்பக்கம் செய்து வைத்திருந்தேன். அதை இன்னும் விரிவாக செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. யாழைக் கண்டதும் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். :lol:

யாழ் முற்றம் என்று இணைய சஞ்சிகை ஒன்றை மாதமொரு முறை என மோகன் அண்ணா செய்தார். களஉறவுகள் உட்பட வேறு பலரின் ஆக்கங்களும் அங்கு இடம்பெற்றது.

இன்னொருவரை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். அவர் சுரதா அண்ணா. ஆரம்பகாலங்களில் களத்தில் எம்மோடு கருத்தாடியவர். தமிழில் எழுதுவதற்கான செயலிகளை செய்தவர்.

யாழ் இணையத்தின் மூலம் பலவிடயங்களை கற்றிருக்கிறேன். அறிந்திருக்கிறேன். இணையத்தொழில்நுட்பம் பற்றிய பலவிடயங்களை ஆரம்பகாலங்களில் பரீட்சித்துப் பார்ப்பதற்கு மோகன் அண்ணா யாழ் இணையம் ஊடாக நிறையவே துணைபுரிந்திருக்கிறார். யாழ் இணையத்தில் இணைந்தபோது அவருடன் உண்டான நட்பு இன்னும் தொடர்கிறது...

இவற்றையெல்லாம் இவ்வளவு எழுதுவற்கு காரணம்: எதனால் யாழ் எனக்கு அறிமுகமானது, ஏன் நான் யாழுக்கு வந்தேன், ஏன் யாழில் இணைந்தேன், ஏன் இன்னும் யாழில் தொடர்கிறேன் என்பதற்கான காரணத்தைச் சொல்லவே. அந்தக் காரணம் இன்று யாழில் இணைந்திருக்கிற பலருக்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கும்.

ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் இப்போது வருகைதருவதில்லை. அவர்களுடைய வேலைப்பழு, நேரமின்மை என பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் ஒருமாதத்தில் ஒருமுறையாவது அவர்கள் இங்கு வந்து தங்கள் கருத்துக்களை இணைக்கலாமே.

சந்திரவதனா அக்கா, நளாயினி அக்கா, சாந்தி அக்கா, மூனா அண்ணா, பரணி அண்ணா, கண்ணன் அண்ணா, அம்பலத்தார் அண்ணா, கெளரி மகேஸ் அக்கா, மதிவதனன் ஐயா, கணினிப்பித்தன், சுரதா அண்ணா, இன்னும் இன்னும் பல உறுப்பினர்கள்...

யாழ் களத்தில் ஆரம்பகாலத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெரியவர்களே. அப்போது யாழில் இருந்த ஒரே ஒரு "சின்னப் பெடி" நான் தான் என்று நினைக்கிறேன்.

இப்போது யாழ்களத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளையவர்களே.

சரி வேறு என்ன. பகிர்ந்துகொள்வதற்கு இன்னும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. பிறகு பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம் இங்கு பலரும் தங்கள் யாழ் அறிமுககத்தை பற்றி கூறி கொண்டிருந்ததை தற்சமமயம் இங்கு வந்தபோது பார்த்தேன் நான் வசிக்கும் நகரத்தில் வேறு தமிழர்கள் இல்லை அதனால் எனக்கு யாருடனாவது தமிழில் உரையாட எங்கள் செய்திகள் அறிந்து கொள்ள ஆவல் அதைவிட எனக்கு முன்பு தமிழ் வானொலிகள் கேட்கின்ற வசதியும் இல்லாத காரணத்தால் ஒரு கணணியைவாங்கி அதில் தமிழ் தளங்களை தேடி படித்துவருவேன் தமிழில் தமிழருடன் உரையாடலாம் எண்று சில அரட்டை அறைகளுக்கு போனால் அங்கு நான் யார் ஆணா பெண்ணா? வயது என்ன என்கிற ஆள்பிடிப்பு வேலைகளே அதிகம் அதைவிட ஆபாசபேச்சுகள் வேறு வெறுத்து போய் ஒருமுறை தேடலில் உருப்படியா கருத்தாட ஒரு தளம் இல்லையா எண்று தேடியபோதுதான் யாழ்களம் கண்ணில் பட்டது அதல் நான் உறுப்பினராக ; பதிந்தாலும் ஆரம்பத்தில் தமிழில் எழுதும் சிரமத்தால் அதிகம் எழுதுவதில்லை பின்னர் காலப்போக்கில் தமிழில் எழுதும் முறையை பழகி கொண்ட நான் அங்கு எழுத தொடங்கியபோது பாடசாலை காலங்களிலும் பின்னரும் நான் நிறைய கதை கவிதை என்றும் பின்னரும் சில பத்திரிகைகளிற்கு எழுதியும் இருக்கிறேன் ஆனால் புலம்பெயர் மண்ணின் வேலைபழு மற்றும் காரணங்களால் பலவருடங்கள் எதுவுமே எங்குமே எழுதாமல் இருந்த எனக்கு மீண்டும் ஏதாவது எழுத வேண்டும் என்கிற எண்ணத்தை தந்தது யாழ் களம்தான் அதில் உறுப்பினர்களாக இருந்த சண்முகியக்கா சோழியன் அண்ணா தமிழினி குருவி அயீவன் போன்றவர்கள் தந்த உற்சாகத்தால் பல கதைகள் கவிதை கட்டுரை என்று எழுதினேன் பின்னர் பலர் வந்து தொடர்கதைகள் கவிதை என்று சிறப்பாக எழுத தொடங்க எனது நேரமின்மையாலும் நான் தொடர்ந்து எழுத முடியாமல் இடைக்கிடை வந்து படித்து விட்டு போவேன் ஆனாலும் இன்றும் யாழின் வாசகன்தான் விரைவில் சில கதைகளுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். யாழ் இன்னும் சிறப்பாக தனது சேவையை தொடர வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.