Jump to content

திராவிட மாயை(!?)


Recommended Posts

திராவிட மாயை(!?)

டான் அசோக் ஞாயிறு, 22 ஏப்ரல் 2012 10:20

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.png / 9

குறைந்தஅதி சிறந்த

ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் கொடுக்கின்றன, கொடுக்கிறார்கள்.

periyar_329.jpgதமிழில் இருந்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன் பிரிந்த தெலுங்காகட்டும், சில நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த கன்னடமாகட்டும், வெகு சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளமாகட்டும் அனைத்தும் தமிழ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரியர்களைப் பொறுத்தவரை சிந்து சமவெளி நிலப்பரப்பில் இருந்த கறுப்பர்கள் யாவரும் திராவிடர்களே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவர்களின் வருகையின் போது தமிழ் இப்போது உள்ள வடிவத்தில் இல்லையென்றாலும் அது பல மொழிகளாக பிரிந்திருக்கவில்லையென்றும், ஒரே மொழியாகத்தான் இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்திய இந்த 'திராவிட' எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில் இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் திராவிட என்பதற்கு சமஸ்கிருதத்தில் வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அதனால் திராவிட என்பது தமிழர்களைக் குறிக்க பிரத்யேகமாக ஆரியர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தையே ஆகும். நாம் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்பையும் 'திராவிடர் நிலம்' என்றே வழங்கினார்கள். (ஆதாரம்: ரிக்வேத கால ஆரியர்கள் நூல். எழுதியவர்: ராகுல சாங்கிருத்தியாயன்)

திராவிட (தமிழ்) இனத்திற்கு எதிரானவர்கள், முக்கியமாக சமஸ்கிருதத்தை தங்கள் கடவுளர் மொழியாகக் கொண்டுள்ள இந்து மதவாதிகள் கூறும் இன்னொரு குற்றச்சாட்டு, கால்டுவெல் அடிப்படையில் ஒரு பாதிரியார் என்றும் அதனால் மதத்தை பரப்ப அவர் செய்த சதியே ஆரிய-திராவிட மொழிக்குடும்ப பிரிப்பு என்பதும் ஆகும்! சரி அப்படியே ஆகட்டும்! நாம் கால்டுவெல்லை கணக்கில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். ஆங்கிலேய அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ICS (Indian Civil Service) அதிகாரியாக, இராமநாதபுரம், சென்னை உட்பட்ட இடங்களின் ஆட்சியாளராக பல ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றியவர் எல்லிஸ். திராவிட மொழிகளை இனங்கண்டதில், திராவிட மொழிகளின் தனித்துவத்தை கண்டறிந்ததில் இவரது பணி போற்றத்தக்கது. (இவர் பிற்காலத்தில் தன் பெயரை தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற வண்ணம் எல்லிஸன் என மாற்றிக்கொண்டார்.)

1804ல் வில்லியம் காரே என்ற அறிஞர் தமது சமஸ்கிருத இலக்கண நூலில் இந்தியாவில் பேசப்பட்ட அனைத்து மொழிகளுக்குமே வேர்-மொழி சமஸ்கிருதம் என்ற கருத்தை முன்வைத்த போது அதற்கு எல்லிஸ் தலைமையில் இயங்கிய சென்னைக் கல்விச் சங்கக் குழு ஆதாரங்களுடன் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தது. பின் அக்கல்லூரியின் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த அலெக்ஸாண்டர் காம்பெலின் 'தெலுங்கு மொழி இலக்கணம்' என்னும் நூலுக்கான முன்னுரையில் திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றுள் தமிழுக்கான முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் எல்லிஸ். அதாவது கால்டுவெல்லுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே! கால்டுவெல் தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆராய்ச்சி நூல் மூலம் திராவிட மொழிக் குடும்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தாலுமே கூட, அவருக்கு பல ஆண்டுகள் முன்பே எல்லிஸ் அந்த பணிகளை துவங்கிவிட்டார். முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து தென்னிந்திய மொழிகள் முற்றிலும் வேறுபட்டவை என்று பறைசாற்றியவர் எல்லிஸ். தாமஸ் ட்ரவுட்மேன் என்ற மொழியியல் ஆராய்ச்சியாளர் தன் 'திராவிடச் சான்று' புத்தகத்தில் ஆதாரங்களுடன் இவற்றை எடுத்துவைத்திருக்கிறார். அதனால் எல்லிஸ் ஆரம்பித்த, செய்த பணிகளை முழுமைப்படுத்திய கால்டுவெல்லை பற்றிய மதம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை நாம் கருத்தில் கொள்ளவே தேவையில்லை.

அடுத்து, ஏன் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என அழைத்துக்கொள்வதில்லை என்று கேட்கப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லில் (superior or root language) வேர்மொழி தமிழ் தான் என்று அனைத்து ஆராய்ச்சிகளும், அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கும் போது 'திராவிடம்' என்ற சொல்லாடலை அவர்கள் பயன்படுத்தினால் தமிழர்க்கு கீழ் அவர்கள் என்ற தோற்றம் ஏற்படும் தானே! அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர் என்பதைப் போல! அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும் வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு. இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா? திராவிடம் எனச் சொல்வது அனைத்து திராவிட மொழிகளுக்கும் நம் மொழியான 'தமிழ்' தாயாக இருந்தது என்பதாகத் தான் அர்த்தப்படுமேயொழிய, நம் மொழிக்கு உயர்வுதானேயொழிய எந்த வகையிலும் சிறுமை இல்லை. திராவிடன், திராவிடம் என்ற சொற்பதங்களை நாம் புறக்கணித்தோமானால் நாளை இந்தப் பெருமையும், உண்மையும், நம் தொன்மையும் மறைக்கப்படலாம், மறந்து போகலாம், காணாமல் போகலாம்!

திராவிடம் என்பதற்கான இலக்கணம் இப்போது திரிந்து சீர்க் கெட்டுக் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்போது திராவிடம் என்பதை வெறும் அரசியல் கட்சிகளாக பலர் அடையாளம் காண்கின்றனர். திராவிடக் கட்சிகளைப் பிடிக்காதவர்கள் திராவிடக் கொள்கைகளை, திராவிட கருத்தாக்கத்தை பிடிக்காததது போல் நடந்துகொள்வது அறியாமையே! உதாரணத்திற்கு இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத் தலைவர்களை திட்டுவார்களா? தமிழ்த் தேசியக் கொள்கையை திட்டுவார்களா என்பதே என் ஐயம்!

மேலும் மதராஸ் மாகாணமாக இருந்தபோது திராவிட நாடு என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய திராவிட நிலப்பரப்பையும் குறிப்பதாய் இருந்தது. உறவுச் சிக்கல் ஏற்பட்டு உணர்வு ரீதியாக பிற மொழியினருடன் இயைந்து வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டு நிகழ்ந்த மாநிலப் பிரிவுக்குப் பின், பெரியார் காலத்திலேயே தமிழ்நாடு தமிழர்க்கே, திராவிடநாடு தமிழர்க்கே என்ற முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. விடுதலை நாளிதழிலேயும் அப்படியான முழக்கங்களே வெளிவந்தன. இன்றும் பெரியார் திடலில் அந்த முழக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இதையெல்லாம் திராவிட இயக்கங்கள் முன்வைத்த திராவிடநாடு என்பது தமிழ்நாடே என நிரூபிக்க மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம் ஒன்று உண்டு. இந்தியா முழுவதையும் சில பெரிய மாநிலங்களாகப் பிரித்தால் மாநிலங்கள் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற கருத்து மேற்குவங்காள முதல்வர் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டது. அதாவது தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றை ஒன்றாக தட்சிணப்பிரதேசம் என்ற மிகப்பெரிய மாநிலமாக அறிவிக்கலாம் என்றும் அதை தட்சிணப்பிரதேசம் என்றும் குறிப்பிடலாம் என்றும்! இதுகுறித்த தீர்மானம் 1956ல் அமிர்தசரஸீல் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேருவின் அமைச்சரவை இது குறித்து முதல்வர்களிடம் கருத்து கேட்டபோது காமராசர் முதலில் ஒப்புக்கொண்டார். பின் பெரியார் அவசரமாக காமராசருக்கு ஒரு தந்தி அடித்து இதற்கு ஒப்புக்கொண்டால் தமிழ்நாட்டில் தமிழர்களின் முக்கியத்துவம் குறைந்து, பிறமொழியினரின் ஆதிக்கம் வந்து எல்லா துறையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என அறிவுரை வழங்கினார். இதையேற்ற காமராசர் தன் ஒப்புதலில் பின்வாங்கினார். (அண்ணாவும் இந்த தட்சிணப்பிரதேச திட்டத்தை ஏற்கவில்லை) அதன்பின் பல முதல்வர்களுக்கு விருப்பமில்லாததால் நேருவால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதாவது இன்றைக்கு தமிழ்த் தேசியவாதிகள் தூற்றும் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், தான் விரும்பிய திராவிட நாட்டில், தான் முன்வைத்த திராவிட நாட்டில் உணர்வில் வேறுபட்ட மலையாளிகளையோ, கன்னடரையோ, தெலுங்கரையோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த திராவிட நாடானது தனித்தமிழ்நாடே என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

திராவிட இயக்கங்கள், கட்சிகள் வலுப்பெற்று இருக்கும் இந்த 50 ஆண்டுகளில் தமிழகம் ஏராளமாக வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதுயும், பிற வடமாநிலங்களை விட தொழிலிலும், உட்கட்டமைப்பிலும் பலபடிகள் முன்னே இருக்கிறது என்பதும் நிதர்சனம். இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

அதே நேரத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு பெரிய அளவில் இன்று இருக்கிறது. (அம்மொழிகள் தமிழ் பெரு அளவிலும், சமஸ்கிருதம் பின்னாளில் சிறு அளவில் கலந்து உருவான மொழிகள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) தமிழில் கூட சுமார் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பத்திரங்களாகட்டும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களாகட்டும் பெருமளவில் சமஸ்கிருதம் கலந்திருந்தது. படிப்படியாக அதை நீக்கி தமிழின் தனித்தன்மையை மீட்டெடுத்ததும் திராவிட இயக்கங்களே! (சிறு தகவல்: எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக்! இன்றும் அந்தப் பத்திரிக்கையில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லாத அளவிற்கு வடமொழி வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.)

தமிழ்த் தேசிய முழக்கம் திராவிடக் கொள்கைக்குள் அடங்குமேயொழிய அது தனியொரு கொள்கை ஆகாது! இன்று புதிதாய் முளைத்துள்ள சில தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக திராவிடக்கொள்கையை தமிழர்களுக்கு எதிரி போல் திரிக்கிறார்கள். தமிழை, தமிழுக்கு எதிரியாய் திரித்தல் எவ்வளவு ஆபத்தோ, அறிவீனமோ அதைப் போல, சாதிய அடக்குமுறைக்கு எதிராக திராவிட இயக்கங்களால் நிறுவப்பட்ட 'திராவிடக் கொள்கை' அம்பேத்கர் சொன்னதைப் போல, என்.எஸ்.கிருஷ்ணன் பாடியதைப் போல "கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும்.. பள்ளு பறையரோடு கள்ளர் மறவரென உள்ள பேதங்களை ஒழித்துக்கட்டும்" என்ற கொள்கை கொண்டதால் தற்கால சாதிய உணர்வோடு செயல்படும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவர்ப்பாக இருக்கிறது என்பதே உண்மை!

சமீபத்தில் முளைத்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சி - தனது கொள்கையாக - தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத யாரையும் தான் முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று பல மேடைகளில் அறிவித்திருக்கிறது. இதன்படி தமிழர்களின் அழிவிற்காக அயராமல் பாடுபடும் சுப்பிரமணியஸ்வாமியும், தமிழ் எழுத்து சீர் பெறுவதைக் கூட விரும்பாத சோவும் தமிழர்கள் ஆவார்கள். தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆனால் காலம் காலமாக தமிழகத்தில் ரத்தம் சிந்தி உழைக்கும் தெலுங்கு பேசும் அருந்ததியர் போன்ற ஆதி திராவிடர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள்! அவர்களை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இவர்கள் 'திராவிடர்கள்' என்று எதிர்ப்பது யாரைத் தெரிகிறதா? இதுபோன்ற கொள்கையுடைய போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள். பெரியாரைத் திட்டுகிறார்கள். அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள். வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின் சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து "நீ யார்?" என்கிறார்கள்!

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சாதி-மத பேதமற்ற தமிழ்நாடு தமிழருக்கே என்பதே திராவிடக் கொள்கை. திராவிடம் என்பது என்ன எனப் புரிந்தால்தான் தமிழ்த் தேசியத்தின் உண்மையான முகம் புரியும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடக் கொள்கையேயொழிய புதியதொரு கொள்கை அல்ல! எதிரியை விட்டுவிட்டு சுயநலத்தின் பொருட்டு வளர்த்துவிட்டவர்களின் மார்பில் பாய்கிறவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சாதி மத பேதமற்ற தமிழ்ச்சமுதாயம் படைப்போம்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19485%3A2012-04-22-04-56-53&catid=1%3Aarticles&Itemid=264

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டாங்கைய்யா.. தொடங்கிட்டா..! சிங்களமும்.. திராவிடம் தானாம்.. என்று ஒரு கட்டுரை வரைஞ்சு.. அப்ப அவங்களும் தமிழர்களும் ஒண்டுக்குள்ள ஒண்டு.. என்று சும்மா எழுத்தில்.. நிரூபிச்சாலும்... ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

இது நியூட்டன் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அவரின் தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுபோல.. பெரியார்.. விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அவரின் தவறுகளை முன்னிறுத்தும் ஒரு போலியவாதம். தமிழ் தேசியத்தின் இருப்பும் எழுச்சியும் திராவிடக் கொள்கைக்கு சாவு மணியடிக்க முற்படுவதால்.. கோபத்தில்... கோர்த்தெழுந்திருக்கும் ஒரு ஆக்கம்..!

தீவிர திராவிடக் கொள்கையாளர்களே இன்று.. திராவிடம் சார்ந்து அல்லாது.. இருப்பில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்து தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் வேளையில்.. மீண்டும் திராவிடத் திணிப்பு.. ஏன்..???! இதனால் தமிழர்கள் கண்ட காணப் போகும் பயன்..???! உள்ள ஒற்றுமையையும் குலைச்செறிவது தான்..!

இல்லாத (திராவிடம்) ஒன்றை வா வா என்றாங்க இருக்கிற ஒன்றை (தமிழ் தேசியம்) போ போ என்றாங்க..! :icon_idea::)

Link to comment
Share on other sites

னெடுக்காலபோவான் வரலாறு அறியாது எழுத வேண்டாம். இது பற்றி மேலும் படித்து விட்டு அல்லது கீழ் இணைப்பில் இருக்கும் குளத்தூர் மணி அவர்களின் நீண்ட உரையியை ஆறுதலாக இருந்து கேட்டு விட்டு , கருதுக்களை எழுதினால் பதில் எழுதலாம்.

Link to comment
Share on other sites

திராவிடக் கொள்கையை தெலுங்கர் கன்னடர், மலையாளிகள் ஏற்றுக்கொள்கிறார்களா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்த நீண்ட ஒரு விரிவான விவாதத்தை இங்கே யாழில் நடத்தி இருக்கிறோம். நான் நினைக்கிறேன்.. நீங்கள் அதை மறந்துவிட்டீர்கள் அல்லது மறந்துவிட்டார்கள் என்ற அடிப்படையில் இதனை மீள இங்கு முன்வைக்கிறீர்கள் என்று.

குறித்த விவாதம்.. தமிழீழ விடுதலைப்போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த போது நிகழ்ந்த ஒன்று. தமிழ் தேசிய நிலைப்பாடு என்பதே நியாயமானது.. திராவிடம் என்பது அடிப்படையற்ற ஒரு மாயை.. அர்த்தமற்ற வரவிலக்கணம் என்பதும்.. வரலாற்று ரீதியில் அங்கு எடுத்துக் காட்டப்பட்டிருந்தது.

தீவிர.. திராவிட செயற்பாட்டாளராக இருந்த.. சீமான் போன்றவர்கள் கூட இன்று அந்த நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்து.. தமிழ் தேசிய.. நாம் தமிழர் என்ற நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள். அவர்களின் அந்த நிலைப்பாட்டுக்கு தமிழக மக்களும் பேராதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக இளைய சமூகம்.. பேராதரவு அளிக்கிறது.

அன்றைய யாழ் அரங்கில் சீமான் கூட விமர்ச்சிக்கப்பட்டார். இன்று அந்த நிலை இல்லை. காரணம்.. சீமான் போன்றவர்கள் காலத்தின் தேவையை விரைவாக உணர்கிறார்கள். மாற்றங்களை உள்வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் யாழில் உள்ளவர்களுக்கு அந்தத் தேவையில்லை. வெறும் பொழுதுபோக்கு வாதங்களூடு.. திராவிடம்.. சார்ந்து பெரியாரை முன்னுறித்த முயல்கிறார்கள்.

பெரியார் திராவிடம் சார்ந்து அவர் காலத்திலேயே மக்களால் நிராகரிப்பட்ட ஒருவர்..! அவர் ஒருமுறை தானும் மக்கள் பிரதிநிதியாக சட்டசபைக்கோ.. எங்குமோ போனதில்லை. அவரும்.. வடிவேலும் ஒன்று தான்..! வெறும் காமடி.. மேடைப் பேச்சாளர்கள்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடக் கொள்கையை தெலுங்கர் கன்னடர், மலையாளிகள் ஏற்றுக்கொள்கிறார்களா? :unsure:

இல்லாத ஒன்றை எவன் தான் ஏற்றுக் கொள்ளப் போகிறான். மலையாளி.. மலையாளியாக இருக்கிறான்.. தெலுங்கன் தெலுங்கனாக இருக்கிறான்.. கன்னடன் கன்னடனாக இருக்கிறான்.. தமிழன் மட்டும் அர்த்தமே இல்லாத திராவிடனாக இருக்கனுமாம். ஏன் அவன் தமிழனாக இருப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை..????! ஒரு பிரச்சனையும் இல்லை.. தமிழர்கள் கன்னடனான பெரியாரை மறந்திடுவார்கள் என்பதுதான் பிரச்சனை..! பெரியாரை அவரின் திராவிடக் கொள்கைக்காக கன்னடனே மதிப்பதில்லை. ஆனால் தமிழர்கள் மதிக்க வேண்டுமாம்...??! ஏனோ....??! பெரியார் தன்னை ஒரு கன்னடனாக இனங்காட்டிக் கொண்டு தமிழகத்தில் வேரூன்ற பாவித்த சொல்லே.. திராவிடம்..! அதன் விளைவு இன்று.. தமிழர்கள் திராவிடத்தால் வீழ்ந்தது தான்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே இணையத்தளத்தில் வந்த இந்தக் கட்டுரையையும் படியுங்கள்.. இவர்களில் இந்த ஆக்கங்களின் நோக்கம் புரியும்............

இதனை இங்கு எடுத்து வருபவர்களின் நோக்கம்.. தமிழர் வாழ்வுரிமை மீதான அக்கறையல்ல.. கண்மூடித்தனமான பெரியார் விசுவாசம் மட்டுமே..!

தடுமாறும் சீமான்.. தடம் மாறும் நாம் தமிழர்!

பெரியாரின் பேரன்; பிரபாகரனின் தம்பி; பகுத்தறிவுக் கருத்தாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர் என்ற வகையில் அடையாளப்பட்டிருப்பவர்.

ஈழ மண்ணின் விடுதலைக்காக ஒலிக்கும் குரலாகவும்,

ஈழ மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விரலாகவும் காட்சியளிப்பவர்.

எளிய குடும்பத்திலிருந்து எழுந்து வந்திருக்கும் ஒரு திரைக் கலைஞர்.

எளியவர்கள் பலர் திரைத்துறையில் எழுச்சி பெறுவதற்கு காரணமானவர்.

தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக சிறைகளைக் கண்டவர்.

தன் இனத்தின் மீட்சிக்காக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்.

பிற மொழி கலப்பில்லாத தூய தமிழ் உச்சரிப்பும்,

பிறர் மொழியைக் களங்கப்படுத்தாத உயர்பண்பும் உடையவர்.

தான் உச்சரிக்கும் மொழியாலும், தன் உடல் மொழியாலும்

தமிழுலகை வசீகரிக்கும் மேடை நாயகர்.

இத்தனைப் பெருமைகளையும், சிறப்புகளையும் உடைய சீமான், இப்போது 'இந்தியாவின் மரண வியாபாரி' நரேந்திர மோடியைப் புகழும் ஒரு நாலாந்திர அரசியல்வாதியாகச் சிறுமைப்பட்டு நிற்கிறார்.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு, கலைஞரின் தலைமையிலான திமுக அரசையும் ஒரு பிடிபிடித்தார். 'கலைஞரை விமர்சிக்கிறேன் பேர்வழி' என்று கிளம்பியவர் அத்தோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.

நரேந்திர மோடி... ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவன்; பிணக்குவியல்களின் மீதேறி பதவியேற்றுக் கொண்டவன்.

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களைக் கொடூரமாகக் குதறிய சிங்களப் படைகளுக்கு தலைமையேற்ற ராசபக்சேவைப் போலவே, குஜராத்தில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களை சிதைத்துச் சீரழித்த இந்துத்துவப் படைகளுக்குத் தலைமை ஏற்றவன்.

இன்று இந்தியாவைத் தாண்டி எந்த மண்ணிலும் கால்வைக்க முடியாத அளவுக்கு, உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரன். அவன் வந்தாலே கேவலம் என உலகம் அவனை காறி உமிழ்கிறபோது, பெரியாரின் மண்ணிலிருந்து ஒருவர் அவனை முன்மாதிரியாகக் காட்டுவது எத்தனைப் பெரிய துரோகம்?

குஜராத்தில் தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் கிடைக்கிறதாம். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இலவசங்களை அறிவித்து மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லையாம். மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறாராம். இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார் சீமான்.

இத்தோடு நிறுத்தவில்லை அவர். 'அதிமுக ஆட்சியமைத்தால் அது எப்படியிருக்கும்? என்று ஒரு ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, 'திமுக ஆட்சியைவிட மோசமாகக் கூட இருக்கலாம்; அல்லது நரேந்திர மோடி மாதிரி ஒரு நல்ல நிர்வாகத்தைத் தரவும் ஜெயலலிதா முயற்சிக்கலாம்' என்று பதிலளித்துள்ளார் சீமான்.

ஐயா பெரியாரின் பேரனே..எது நல்ல நிர்வாகம்?

ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் தமிழ் மக்கள் அடைபட்டு வதைபடுவதைப் போல, குஜராத் மண்ணின் சொந்த மக்களான முஸ்லிம்களை இன்றைக்கும் அகதி முகாம்களுக்குள் அல்லல்பட வைத்திருக்கிறானே நரேந்திர மோடி, அவன் நிர்வாகமா நல்ல நிர்வாகம்?

தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் மட்டும்தான் ஒரு நல்லாட்சிக்கான அடையாளமா? அப்படியெனில் சொந்த மக்களை அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்த இந்துத்துவ மதவெறியர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த மோடியின் நிர்வாக ஆற்றலை என்னவென்று சொல்வது?

அதிகார மட்டம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை தேடிப்பிடித்து பதவியிலமர்த்தும் மோடியின் நிர்வாக ஒழுங்கை என்ன சொல்லி அழைப்பது?

'தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் உள்ள குஜராத்' என மோடியை வானளாவப் புகழும் சீமானுக்கு, அந்த குஜராத்தின் உண்மை முகம் தெரியுமா? மோடி முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் அசல் பங்காளிகள் அவருக்குப் புரியுமா? ’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க இந்துக்களுக்கு மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதை சீமான் அறிவாரா?

குஜராத்தில் நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 800 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், ஒ.பி.சி பிரிவினரைவிட இது 50 சதவீதம் அதிகம் என்றும், கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 200 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குஜராத்தில் 60 சதவீத முஸ்லிம்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மாணவர்களிடையே, குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையின மாணவர்களுக்காகவும் மத்திய அரசு கல்வி உதவித்தொகை அறிவித்தபோது, குஜராத் அரசு அதனை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது என்றும், இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் சிறுபான்மை சமூக மாணவர்கள் கல்வி உதவித்தொகையை இழந்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

வளர்ச்சியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட குஜராத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் என்றும், அங்குள்ள முஸ்லிம்கள் பீடி சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், பட்டம் தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல், கை ரிக்‌ஷா இழுத்தல் போன்ற குறைந்த வருமானங்களைத் தரக் கூடிய சுய தொழில்களைச் செய்யும் விளிம்பு நிலை மக்களாக இருப்பதையும் அந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.

குஜராத் முஸ்லிம்களுக்கு உயர் கல்வியிலோ தொழில் துறையிலோ இடஒதுக்கீடு இல்லை. குஜராத்தில் வங்கிக் கணக்கில் முஸ்லிம்களின் பங்கு 12 சதவீதமாகும். வங்கிக் கணக்கில் 88 சதவீத பங்கும் இந்துக்களுடையதாகும். மொத்தமாக விநியோகம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் இந்துக்களுக்கே கிடைத்துள்ளது. இதுவும் அந்த ஆய்வு கூறும் உண்மையாகும்.

குஜராத்தில் மிக அதிகமான வழிப்பறிக் கொள்ளைக்கும், வீடுகளில் திருட்டுக்கும் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே என்றும், பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் படிக்க அனுமதி கிடைப்பது கடினம் என்றும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் போக்குவரத்து நன்றாக இல்லை என்றும், பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் இல்லை என்றும் அடுக்கடுக்கான தகவல்களைக் கூறி அதிர்ச்சியூட்டுகிறது அவுட்லுக்கின் அறிக்கை.

இப்போது சொல்லுங்கள் சீமான் அவர்களே! இப்படி சொந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மோடியின் ஆட்சி நல்லாட்சியா?

மோடியின் கரங்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையை அகற்றவும், மோடியின் குறியீடாகப் பரவியிருக்கும் மதவெறியன் முத்திரையை அழிக்கவும், தொடர் முயற்சிகளை செய்து வருகின்றனர் இந்துத்துவ சக்திகள். மோடி இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் முன்மாதிரி முதல்வர் என்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்தி வருகின்றனர். அதற்காகவே இந்துத்துவச் சார்புள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் துணையுடன், குஜராத்தில் அதிகமதிகம் தொழில் முதலீடுகளைக் குவியச் செய்து, மோடியின் நிர்வாகத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். மோடியின் நிர்வாக அசைவுகள் ஒவ்வொன்றையும் 'செய்தி'யாக்குகின்றனர்.

நாடு முழுவதும் மோடியின் புகழைப் பரப்பும் கருத்தியலாளர்களைக் கொண்டு பொதுக்கருத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் அந்த வேலைக்கான மொத்தக் குத்தகையையும் 'துக்ளக் சோ' எடுத்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம் மோடியின் புகழ் பாடித் திரிகிறார். கலைஞரைத் திட்டுவதற்கும், ஜெயலலிதாவை தட்டி எழுப்புவதற்கும் மோடியை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்.

'ஜெயலலிதா வந்தால் நரேந்திர மோடியைப் போல நல்லாட்சி தருவார்' என்று, இத்தனை நாளும் சோ சொல்லி வந்ததைத்தான் இப்போது சீமானும் சொல்லி வருகிறார். அந்த வகையில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இனி மோடியின் குஜராத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகக் காட்டுவதற்கு இல.கணேசனும், எச்.ராஜாவும், பொன்.ராதாகிருஷ்ணனும், சோவும், இராம.கோபாலனும் சீமானின் கருத்தை உதாரணமாகக் காட்டுவார்கள். 'மோடி நல்லவர் என்று நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை; இதோ பெரியாரின் பேரனே சொல்கிறார் பாருங்கள்' என்று மக்களை உசுப்புவார்கள்.

'இலங்கையில் சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி, அதன் மூலம் உலகக் கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து, உலக அரங்கில் இலங்கை மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்த ராசபக்சே முயல்கிறார். ஆகவே இந்திய திரைக் கலைஞர்களே இலங்கைக்கு செல்லாதீர்கள். ராசபக்சே மீதான போர்க் குற்றத்தை போக்கத் துணை போகாதீர்கள்' என்றெல்லாம் கொந்தளித்து, கமலுக்கு கடிதம் எழுதி, அமிதாப் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சீமான் தான் இன்று மோடியைப் புகழ்ந்து தள்ளுகிறார்.

திரைப்பட விழா மூலம் தன் மீதான ரத்தக் கறையை மறைக்க முயன்ற ராசபக்சேவைப் போலத்தான், மோடியும் தடையில்லா மின்சாரம் மூலமும், மதுவிலக்குச் சட்டத்தின் மூலமும் தன் மீதான ரத்தக்கறையை மறைக்க முயல்கிறார். அதற்கு சீமான் துணை போகலாமா?

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் சில தமிழ் முஸ்லிம்கள் செயல்பட்டார்கள் என்று சொல்லி வேதனையடையும் சீமான், தனது மோடி ஆதரவுப் பேச்சால், ஈழத்தை ஆதரிக்கும் தமிழக முஸ்லிம்கள் வேதனையடைவார்களே என்று ஏன் சிந்திக்க வில்லை?

ஈழத்து முஸ்லிம்களை அடித்துத் துரத்திய விடுதலைப் புலிகளின் துரோகத்தைக் கூட மறந்து விட்டு, தமிழகத்தில் உள்ள தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள் சிங்கள அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டதும், போர் நிறுத்தம் கோரிய போராட்டங்களில் பங்கேற்றதும் அண்மைக்கால சான்றுகள்.[பார்க்க http://www.keetru.co...iews&Itemid=296] தமிழ் மண்ணுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் முஸ்லிம்கள் விசுவாசமானவர்கள் என்பதற்கு சீமானின் அருகிலிருக்கும் 'தமிழ் முழக்கம் சாகுல் அமீது'வே நிகழ்கால சான்று. அத்தகைய விசுவாசமுள்ள முஸ்லிம்களின் மனநிலை, சீமான் மோடியைப் புகழும்போது எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

'மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்' என்கிறார் சீமான். ஏன் ராசபக்சே கூட அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்தான். சிங்களர்களின் மேன்மைக்காகவே அவன் பல திட்டங்களை செயல்படுத்துகிறான். மோடியைப் போலவே பன்னாட்டு முதலீடுகளை இலங்கையை நோக்கித் திருப்புகிறான். அதற்காக ராசபக்சேயை 'நல்லாட்சி தருபவர்' என்று பாராட்ட முடியுமா? அப்படி பாராட்டினால் சீமான் சும்மா இருப்பாரா?

ராசபக்சேயை தமது நண்பர் என்று சொல்லி புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் அலி மீது பாய்ந்து வருகிறார் சீமான். ஹசன் அலி ராசபக்சேயைப் புகந்ததில் வியப்பேதுமில்லை. ஏனெனில், அவர் ராசபக்சேவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருப்பவர். ராசபக்சேவுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைமையின் கீழ் இயங்குபவர்.

அதிகாரத்தில் இருக்கும் அவர் தன் அதிகாரத்தை தக்க வைப்பதற்காகத்தான் ராசபக்சேவை புகழ்ந்து வருகிறார் என்பதை பாமரனால் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால், அதிகாரத்தின் வாசனையைக் கூட நுகராத சீமான் மோடியை புகழ்ந்து பேசியதன் பின்னணியைத் தான் எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதிகாரத்தில் இல்லாதபோதே சீமான் இப்படி தடுமாறுகிறார் என்றால், ஹசன் அலியைப் போல அதிகாரத்தைச் சுவைக்கும் நிலைக்கு சீமான் வருகிறபோது எப்படி மாறுவாரோ தெரியவில்லை.

சீமானின் பேச்சு சர்ச்சையானவுடன், 'சீமான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை; மோடியின் நிர்வாகத்தில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சுட்டிக் காட்டினார்; சீமான் எப்போதுமே மதவெறி எதிர்ப்பாளர்தான்' என்றெல்லாம் வலிந்து விளக்கம் அளிக்கின்றனர் நாம் தமிழர் இயக்கத்தினர். அவர்களின் வாதப்படியே பார்த்தாலும் நல்ல விசயம் மோடியிடம் மட்டும் இல்லையே. இவர்கள் முழு மூச்சாக எதிர்க்கும் கலைஞரிடம் கூடத்தான் நல்ல பல விசயங்கள் இருக்கிறது. அதற்காக சீமான் கலைஞரைப் பராட்டுவாரா?

மோடியின் மதவெறியைக் கழித்துவிட்டு, அவரது நிர்வாகத்தில் உள்ள தடையில்லா மின்சாரத்தையும், மதுவிலக்குச் சட்டத்தையும் ஊன்றி கவனிக்கத் தெரிந்த சீமானுக்கு, கலைஞரின் குடும்ப ஆதிக்கத்தை கழித்து விட்டு, அவரது நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட அருந்ததியர் இட ஒதுக்கீட்டையும், முஸ்லிம் இட ஒதுக்கீட்டையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூக நீதி சட்டத்தையும் கவனிக்கத் தெரியவில்லையே ஏன்?

இத்தகைய நல்ல சட்டங்களை கொண்டு வந்ததால் மட்டுமே சீமானின் பார்வையில், எப்படி கலைஞர் ஒரு முன்மாதிரி முதல்வர் ஆகமாட்டாரோ, அதைப் போலவே சில நிர்வாக நடவடிக்கைகளால் மட்டுமே மோடியும் முன்மாதிரி முதல்வர் ஆகிவிடமாட்டார். இந்த உண்மைகளெல்லாம் நன்றாகத் தெரிந்தும் கூட சீமான் ஒரு முடிவோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்.

பால்தாக்கரேயில் தொடங்கிய சீமானின் பயணம், இப்போது மோடியில் தொடர்கிறது. அனேகமாக அது நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் போய் முடியும்போல் தெரிகிறது.

*******

சீமான் தெளிவற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரது பேச்சும், நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இனம்காட்டி வருகின்றன.

பெரியாரியவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட சீமான், வளர்ந்த உடன் செய்த முதல் வேலை, பெரியாரின் திராவிடத்தை மறுத்தார். பெரியாரின் மொழிக் கொள்கையை எதிர்த்தார். தன் இறுதி மூச்சுள்ளவரை இந்துத்துவத்திற்கு எதிராகக் களமாடிய பெரியாரின் வழியைத் தவிர்த்தார். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று முழங்கிய பெரியாரை மறந்தார்.

சீமான் இப்போது திராவிடத்தைப் பேசுவதில்லை; பெரியாரியத்தைப் பரப்புவதில்லை; இந்துத்துவத்தை தோலுரிப்பதில்லை; சாதி ஒழிப்பு பற்றி மூச்சு விடுவதில்லை. மாறாக, ஆரியத்தை வேரோடு வீழ்த்திய திராவிடத்தை எதிர்க்கிறார். மும்பையில் பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த பால்தாக்கரேயையும், குஜராத்தில் அதைவிட மேலான பயங்கரத்தை நிகழ்த்திய நரேந்திர மோடியையும் புகழ்ந்துரைக்கிறார். இந்துத்துவச் சிந்தனை கொண்ட சாதி வெறியரான முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரு சராசரி அரசியல்வாதியாக காட்சி தருகிறார். கேட்டால் தமிழ்த் தேசியம்; தமிழ்த் தேசியம் என்கிறார்.

சீமான் பேசுகிற தமிழ்த் தேசியம், மோடியின் இந்துத்துவ தேசியம் போல ஆபத்தானதாக இருக்கிறது.

தமிழராய் பிறந்து, தமிழராய் வாழும் மக்கள் பல்வேறு சமூகக் குழுக்களாக இருக்கிறார்கள். அந்தந்த சமூகக் குழுக்களுக்கென்று தனித் தனியான அடையாளங்களும், கலாச்சார நடவடிக்கைகளும், பண்பாட்டு அசைவுகளும், வட்டார வழக்குகளும் உள்ளன. அதையெல்லாம் மறுத்துவிட்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க சீமான் முயல்கிறார்.

அந்தந்த சமூகங்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசாமல், அவர்களின் உணர்வுகளுக்கும், அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்காமல், 'பாட்டன் சொத்து அடமானத்திலிருக்கிறது; மீட்ட பிறகு பேசுவோம்' என்று சீமான் சொல்லித் திரிவது சிறுபிள்ளைத்தனமானது. இது, 'நாடு அடைந்த பிறகு தலித் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசுவோம்' என்று சொல்லி அம்பேத்கரை ஏமாற்றிய காங்கிரஸ் உயர்சாதியினரின் துரோகத்தைப் போன்றது.

சீமான் தமிழ்த் தேசியத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாகப் பேசுகிறாரே தவிர, தமிழ்த் தேசியத்தின் உட்பிரிவுகளாய் இருக்கின்ற தலித்துகளின் பிரச்சனைகளையும், சிறுபான்மையினரான கிறிஸ்தவ- முஸ்லிம்களின் பிரச்சனைகளையும், இதர தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சனைகளையும் பற்றி அவர் வாயே திறப்பதில்லை. விளிம்பு நிலை மக்களாக இருக்கும் அந்தத் தமிழர்களின் வாழ்நிலை பற்றி அவருக்குப் போதிய புரிதல் இல்லை.

சீமான் எடுக்கும் அரசியல் முடிவுகளும் குழப்பமானதாகவே இருக்கிறது. பிரபாகரனை வீழ்த்த இலங்கை அரசுக்கு கருவிகள் கொடுத்த காங்கிரஸ் அரசையும், அந்த அரசுக்குத் துணை நின்ற கலைஞர் அரசையும் காய்ச்சி எடுத்தவர், 'பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும்' என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவையும் காய்ச்சி எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், காங்கிரசையும், கலைஞரையும் எதிர்த்த அவர் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஆதரிக்காமலாவது இருந்திருக்கலாம். அவரோ 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று சொல்லி ஈழ விடுதலைக்கு புது வழியைக் காட்டினார். 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஈழம் என்ற வார்த்தையைக் கூட ஜெயலலிதா உச்சரிப்பதில்லை என்பது தனிக் கதை.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட அதிமுக அணிக்கு ஆதரவு என்ற போக்கையே சீமான் கடைபிடித்தார். ஆனாலும் அவரைக் கண்டு கொள்ளவோ, மரியாதை நிமித்தமாக சந்திக்கவோ கூட ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. பின்னர் அதிமுக அணியில் வைகோவுக்கு ஏற்பட்ட கதி சீமானின் நிலைப்பாட்டை மேலும் சிக்கலாக்கியது. வம்பே வேண்டாம் எனக்கருதி, காங்கிரஸ் எதிர்ப்போடு தன் தேர்தல் கடமையை முடித்துக் கொண்டார். அதனால் தான் இம்முறை அவர், இலை மலர்ந்தால் அது மலரும், இது மலரும் என்று எந்த ஆரூடமும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் இரண்டு வகை தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள். கொளத்தூர் மணி, சுபவீ, தியாகு, இன்குலாப், அறிவுமதி, பெ.மணியரசன், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எந்தக் காலத்திலும் இந்துத்துவத்தோடு சமரசம் செய்து கொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள். ஆனால், வைகோ போன்ற தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவ எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனவர்கள்.

முஸ்லிம்கள் என்றால் அவர்களை மதக் கண்ணோட்டத்தோடு அணுகுவது, தலித்துகள் என்றால் அவர்களை சாதிக் கண்ணோட்டத்தோடு அணுகுவது என்ற வகையிலேயே வைகோ போன்றவர்களின் அணுகுமுறை உள்ளது. இந்துத்துவத்தால் ஒடுக்கப்படுகின்ற சமூகங்கள் என்ற வகையில் தலித்துகளையும், முஸ்லிம்களையும் இவர்கள் அணுகுவதில்லை. ஆனால், முதல் வகை தமிழ்த் தேசியவாதிகள் அந்தச் சமூகங்களின் உணர்வுகளை உள்வாங்கியவர்களாகக் களமாடி வருகின்றனர்.

பாஜக வுடன் கூட்டணி வைத்தது மட்டுமின்றி, குஜராத் கலவரம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது மோடிக்கு ஆதரவாக முழங்கினார் வைகோ. வாஜ்பாயையும், அத்வானியையும் வானளாவப் புகழும் இயல்புடையவராகவும் அவர் இருக்கிறார். இது பற்றி விமர்சனங்கள் எழுந்த போது, 'பெரியாரும் ராஜாஜியும் போலவே நானும் வாஜ்பேயும்' என்று விளக்கம் அளித்தார் வைகோ.

இப்போது பால்தாக்கரேயையும், மோடியையும் சீமான் புகழ்ந்தது குறித்து, நாம் தமிழர் இயக்கத்தினரிடம் கேட்டால் அவர்களும் வைகோவைப் போலவே பதிலளிக்கின்றனர்.

பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இடையிலான உறவைப் போன்றது தானா, 'வைகோவுக்கும் வாஜ்பேயிக்குமான உறவு; சீமானுக்கும் மோடிக்குமான உறவு' என்பதை பெரியாரிஸ்டுகள் அம்பலப்படுத்த வேண்டும்.

வைகோ போன்றவர்கள், ஊழலை எதிர்ப்பதிலும், குடும்ப அரசியலை வீழ்த்துவதிலும் காட்டுகிற முனைப்பில் எள் முனையளவு கூட, சாதிவெறியை ஒழிப்பதிலோ மதவெறியை எதிர்ப்பதிலோ காட்டுவதில்லை. வைகோ பயணித்த அதே வழித்தடத்தில்தான் இப்போது சீமானும் பயணித்து வருகிறார். இப்படியே அவர் போய்க் கொண்டிருந்தால், தமிழக அரசியலில் வைகோவுக்கு ஏற்பட்ட நிலைதான் சீமானுக்கும் ஏற்படும்.

இயக்கம் கட்டவும், புகழ் பெறவும் எது பயன்படுமோ அதையெல்லாம் பயன்படுத்துவது என்ற குறுகிய சிந்தனைக்கு சீமான் உள்ளாகியிருக்கிறார்.

சீமானைப் போலவே, மோடியைப் பாராட்டிய அன்னா ஹசாரேயை எதிர்த்து, மூத்த சமூக சேவகர் மேதா பட்கர் இப்படி கூறினார்: "அன்னா ஹசாரே குஜராத்தில் முஸ்லிம்களைப் படுகொலை செய்த நரேந்திர மோடியை ஊழலற்ற நிர்வாகம் தருகிறார் என பாராட்டுகிறார். மகாராஷ்டிர அரசியலில் சிவசேனா நல்ல கட்சி என இந்துத்துவா வாதத்தை முன்வைக்கிறார். ஊழல் என்பது களவு. அதை விடக் கொடுமையான, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட உடந்தையாக இருந்த மோடியைப் பாராட்டும் ஹசாரே, எப்படி சிறந்தவர்?"

அன்னா ஹசாரேயை நோக்கிய மேதா பட்கரின் இந்தக் கேள்வி இந்த சீமானுக்கும் பொருந்தும்.

நன்றி: சமநிலைச் சமுதாயம்.

http://www.keetru.co...4416&Itemid=139

இந்தக் கட்டுரை எவ்வளவு விசங்களைக் கக்குகிறது.. அதற்குள் தமிழனின் சாவும்.. ராகபக்சவின் கொடூரங்களின் மீது.. பரிதாபமும்.. புகுந்து விளையாடுகிறது. இதனை ஒரு முஸ்லீம் மத அடிப்படைவாதத்தில் ஊறிய ஒருவரே எழுதி இருக்கிறார்.. என்று நினைக்கிறேன்..!

குஜராத்தில் நடந்த பிரச்சனைகளுக்கு மோடியை குற்றம்சாட்டும் அதேவேளை.. இந்தியா பூராவும் தீவிரவாதத்தை ஏவி முஸ்லீம்கள் செய்யும் கொலைகளுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்..????!

Link to comment
Share on other sites

திராவிடக் கொள்கையை தெலுங்கர் கன்னடர், மலையாளிகள் ஏற்றுக்கொள்கிறார்களா? :unsure:

திராவிடக் கொள்கை என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை மேல் உள்ள இணைப்பில் மணி அவர்கள் விளக்கி உள்ளார்.மேலும் பெரியார் ஏன் தமிழ் நாடு தமிழருக்கே என்னும் கோரிக்கையை முன் வைத்தார் என்பதனையும் ,குடி அரசு நாளிதளில் மொழிவாரி மானிலங்கள் ஏற்படுவதை ஆதரத்தார் என்பதையும், ஆங்கிலாயேர் காலத்தில் சென்னை மானிலதிற்க்குள் சமஸ்த்தானங்கள் தவிர இன்றைய தென் மானிலங்களின் இணைந்திருந்தன என்பதையும் பெரியாரின் எழுதுக்களை ஆதாரமாகக் கொண்டு விளக்கி உள்ளார்.

அண்ணா தென்மானிலங்களின் கூட்டாட்ச்சி என்று முன் மொழிந்த போதும் பெரியார் தமிழ்னாடு தமிழருக்கே என்னும் கோரிக்கையை முன் வைத்தார்.

இதில் பலருக்கு பெரியார் இயங்கிய அரசியல் காலகட்டம், தமிழ்னாட்டில் நிலவிய சமூக பண்பாட்டு அடக்குமுறை பற்றிய தெளிவோ அறிவோ இல்லை. தமிழ் நாட்டில் சிங்கள -தமிழ் முரண்பாடு இருக்கவில்லை. பவுத்த பேரினவாத அடக்குமுறை இருக்கவில்லை. தமிழ்னாட்டில் இருந்த அடக்குமுறை சமூகபண்பாட்டுத் தளத்தில் சமயத்தின் அடிப்படையில் சாதியின் அடிப்படையில் இருந்த ஒன்று.

அதனை எதிர்கொள்ள பெரியார் வகுத்த வியூகமே திராவிட இயக்கம்.அது சமூக பண்பாட்டுத் தளத்தில் , இந்திய உபகண்டத்தின் அடக்கப்பட்ட பூர்வ குடி்ளான திராவிடர் என்னும் அடையாளத்தை அடிப்படையாக வைத்தே இயங்க முடியும்.ஒரு மக்கள் கூட்டம் எதன் அடிப்படையில் ஒடுக்கப்படுகிறதோ அதன் அடி ஒற்றேயே அந்த மக்களின் விடுதலை நோக்கிய இயக்கங்கள் உருப் பெறும்.அந்த வகையிலையே திராவிட அரசியல் தமிழ்னாட்டில் உருப்பெற்று பலம் பொருந்தியதாக அமைந்தது.அதனை நிகழ்த்தியவர் பெரியார்.

இதனி விளங்கிக் கொள்ளாமல் அரவேக்காட்டுத் தனமான அரசியல் வரலாற்று அறிவின்றிப் பேசுவது தமது மடமைத் தனத்தை பறைசாற்றவே உதவும்.பெரியாரை எனக்கு பிடிக்காது அதனால் அவரை இகந்து எழுதுவேன் என எழுதுவது ஒருவரின் சுய அரிப்பாகவே பார்கப்படும். நிதானமான விமரிசனங்களை தெளிவாக குளதூர் மணி அவர்கள் ஆதாரபூர்வமாக மறுதலிது உள்ளார்.

மேலும் இது பற்றி யாருக்காவது கருதியல், வரலாற்று ரீதியான கேள்விகள் இருந்தால் முன் வைக்காலாம், தகுதியான கேள்விகளுக்கு பதில் முன் வைப்பேன்.சுய அரிப்புக் கருதுக்களுடன் மினக் கெட்டு எனது நேரத்தை வீணாக்க முடியாது.

Link to comment
Share on other sites

திராவிடம் வேண்டும் திராவிட நாடு வேண்டும் ஆனால் அதை முதலில் மலையாளிகள் பின்னர் கன்னடர்கள் பின்னர தெலுங்கர்கள் முழுமையாக ஏற்றுகொண்டு பின்னர் தமிழர்களிடம் வர வேண்டும். ஆரியமும் திராவிடமும் நடை முறையில் இல்லை. சும்மா தமிழர்கள் மட்டுமே திராவிடம் பேசி இருக்கிற கொஞ்ச தமிழையும் வரலாறையும் அழிக்காதையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிப்பு என்ற பதம்.. இங்கு பாவிக்கப்பட்டுள்ள அடிப்படையில் நோக்கும் போது.. நாரதரின் நீண்ட நாள் பிரச்சனை திராவிடம் அல்ல. பெரியார் திராவிடத்தை நிலைநிறுத்தினார்.. அதனைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதுதான். இது கூட ஒருவகை அரிப்புத்தான்..!

தமிழ் நாட்டில் இயங்கும் சீமானுக்கு திராவிடத்தை விட்டு.. தமிழ் தேசியத்தை நிலைநிறுத்த முடியும் என்றால்.. பெரியாரை முன்னிறுத்தாது.. நாம் தமிழர்கள் என்பதை முன்னிறுத்த முடியும் என்றால் ஏன் மற்றவர்களால் முடியாது..!

அந்த வகையில்... திராவிடத்தை பெரியார் தவிர்த்து நாம் விவாதிக்கலாம். அப்படியான நீண்ட விவாதங்கள் யாழில் நடந்துள்ளன. அந்த வகையில் நாரதரின் அரிப்பை விளங்கிக் கொள்வதும் நன்றே..! :):lol:

யாழில் முன்னர் நடந்த விவாதம் 1. இதில் இத்தலைப்புக்குரியவரின் நிலைப்பாட்டை பார்த்தால் இவரின் உள்ளார்ந்த நோக்கங்கள் தெளிவாக தெரிய வரும். அதன் அடிப்படையில் நின்று தான் இக்கட்டுரைகளையும் படிக்க வேண்டும். இக்கட்டுரைகள் எந்த வரலாற்றியல் சான்றுகளையும் மையப்படுத்தியோ உசாத்துணையாகக் கொண்டோ காட்டியோ வரையப்பட்டிருக்கவில்லை என்பதும் கண்கூடு..!

பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய பகுத்தறிவு.

http://www.yarl.com/...showtopic=28536

Link to comment
Share on other sites

திராவிடம் வேண்டும் திராவிட நாடு வேண்டும் ஆனால் அதை முதலில் மலையாளிகள் பின்னர் கன்னடர்கள் பின்னர தெலுங்கர்கள் முழுமையாக ஏற்றுகொண்டு பின்னர் தமிழர்களிடம் வர வேண்டும். ஆரியமும் திராவிடமும் நடை முறையில் இல்லை. சும்மா தமிழர்கள் மட்டுமே திராவிடம் பேசி இருக்கிற கொஞ்ச தமிழையும் வரலாறையும் அழிக்காதையுங்கோ

திராவிட நாடு வேண்டும் என்று யார் எங்கே எப்போது சொன்னார்கள் என்பதை முதலில் முன் வையுங்கள் மேலே பேசலாம்.

எது நடைமுறையில் இல்லை இருக்கிறது என்பதை அக் அக் களத்தில் நிற்கும் மக்களும் இயக்கங்களும் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

சீமான் பெரியாரை தூக்கி எறிந்து விட்டு எந்த அரசியல் இயக்கத்தையும் கட்ட முடியாது. காலத்துக்கு ஏற்ற சூழலுக்கு ஏற்ற கொள்கைகள் அவசியம் தான். ஆனால் ஒரு களத்தில் இருக்கும் சூழ்ன்லையில் உதித்த கோட்பாடுகளை கோசங்களை அடையாளங்களை இன்னொரு மண்ணில் புக்த்த முடியாது.அவ்வாறு நிகழ்ந்த்தால் அந்த்த இயக்கம் அழிவையே தேடும்.

பிழையான வழிகாட்டலில் சென்று சீமான் நாம் தமிழரி சீரழிக்க மாட்டார் என்று கருதுவோம்.ஏற்கனவே இருக்கும் பிழவுகள் காணது என்று இன்னும் பிழவுகளை உருவாக்கி நாமே எம்மை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சாதியமும் பேரினவாதமும் தமிழரின் எதிரிகள் என்பதை தமிழர்கள் இனம் காண வேண்டும்.

Link to comment
Share on other sites

பெரியார் சாதித்தது என்ன? - சீமானின் நெருப்புரை 1

Link to comment
Share on other sites

திராவிடம் ஆரியம், கத்தரிகாய் போன்ற விடயங்களிலும், அது தொடர்பில் வாதம், விதண்ட வாதம் என்பவற்றில் எனக்கு ஆர்வமும் இல்லை, கலந்து கொள்ள விருப்பமும் இல்லை.

சிங்களவர்கள் திராவிடர் அல்லது ஆரியர்/ சிங்களவருக்கும் தமிழருக்குமான தொடர்பு பற்றிய பிறப்புரிமை காரணிகளை கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளில்

சிங்களவர்கள் தமிழர்களுக்கும் பெங்களிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது.

சில ஆய்வுகள் மிக அதிக அளவில் தமிழர்களுடன் என்றும் வேறு சில ஆய்வுகள் பெங்களிகளுடன் என்றும் சொல்கிறன.

இந்த வேறுபாட்டிற்கும் குறிப்பிட்ட ஆய்வுகள் பயன்படுத்திய நபர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம். ஏன் எனில் எல்லா ஆய்வாளர்களும் முன்னைய ஆய்வில் பயன்படுத்திய அதே ஆட்களை பயன்படுத்தி இருக்க சாத்தியம் இல்லை. அத்துடன் ஆய்வுக்கு பயன்படுத்திய பிறப்புரிமை சுட்டிகளின் வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

1 . Genetic affinities of Sri Lankan populations. http://www.ncbi.nlm..../pubmed/8543296

Abstract

Mythological and historical sketches of the Sri Lankan population indicate that it is heterogeneous and composed of diverse ethnic groups. Ancient chronicles of Sri Lanka relate the origin of the Sinhalese to the legend of Prince Vijaya, who arrived on the northwest coast of the island in 543 B.C. from northeast or northwest India. Further, because Sri Lanka occupies an important position on seaways, it has received a constant influx of people from various parts of the world (especially from the Middle East and Europe), including India. Taking into consideration mythological, historical, and linguistic records of Sri Lanka, I attempt to study the degree of gene diversity and genetic admixture among the population groups of Sri Lanka along with the populations of southern, northeastern, and northwestern India, the Middle East, and Europe. The genetic distance analysis was conducted using 43 alleles controlled by 15 codominant loci in 8 populations and 40 alleles controlled by 13 codominant loci in 11 populations. Both analyses give a similar picture, indicating that present-day Sinhalese and Tamils of Sri Lanka are closer to Indian Tamils and South Indian Muslims. They are farthest from Veddahs and quite distant from Gujaratis and Punjabis of northwest India and Bengalis of northeast India. Veddahs are distinct because they are confined to inhospitable dry zones and are hardly influenced by their neighbors. The study of genetic admixture revealed that the Sinhalese of Sri Lanka have a higher contribution from the Tamils of southern India (69.86% +/- 0.61) compared with the Bengalis of northeast India (25.41% +/- 0.51), whereas the Tamils of Sri Lanka have received a higher contribution from the Sinhalese of Sri Lanka (55.20% +/- 9.47) compared with the Tamils of India (16.63% +/- 8.73). Thus it is apparent that the contribution of Prince Vijaya and his companions, coming from northwest India, to the present-day Sinhalese must have been erased by the long-standing contribution (over 2000 years) of the population groups of India, especially those from Bengal and Tamil Nadu. Similarly, the Tamils of Sri Lanka are closer to the Sinhalese because they were always in close proximity to each other historically, linguistically, and culturally.

2. Blood genetic markers in Sri Lankan populations—reappraisal of the legend of Prince Vijaya

http://onlinelibrary...760210/abstract

Keywords:

  • Sri Lanka;
  • Sinhalese;
  • Tamils;
  • Muslims;
  • Serum proteins;
  • Hemoglobin;
  • Red cell enzymes;
  • Electrophoresis;
  • Isoelectric focusing;
  • Population genetics

Abstract

Serum protein (haptoglobin types; transferrin and group-specific component subtypes); haemoglobin and red cell enzymes (acid phosphatase, esterase D, glyoxalase I, 6-phosphogluconate dehydrogenase, adenylate kinase, and phosphoglucomutase (locus 1) (subtypes) were studied in the Sinhalese, Tamils, and Muslims of Sri Lanka. The allelic frequencies of all the polymorphic systems were similar in these populations without any significant differences. A close look at the present results and earlier investigations on 13 polymorphic loci controlled by 37 alleles did not reveal any genetic characteristics in the present-day Sinhalese population that are distinct from those in the Tamils of Sri Lanka. As such, genetic evidence linking the legendary origin of the Sinhalese population to East India (Prince Vijaya) is lacking.

3. http://en.wikipedia....es_on_Sinhalese

Link to comment
Share on other sites

ஆரிய திராவிட அரசியல் என்பது இனத்துவ அடிப்படியில் அமைந்தது அல்ல, அது பண்பாடு சமூகத் தளத்தில் நிகழ்வது, என்பதை மேலே பெரியாரின் எழுதுக்களை மேற்கோள்காட்டி மணி அவர்கள் விளக்கி உள்ளார்.

உலகில் தூய இனம் என்று ஒரு இனம் இல்லை.ஆபிரிக்கக் கண்டத்தில் தோன்றிய மனிதன் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உலகெங்கும் பரவினான்.

இதில் இந்திய உபகண்டத்தில் கடைசியாக உள் நுழைந்த குழு இந்து மதம் என்று இன்று அழைக்கப்படும் மதத்தின் மூல மதமாகிய வேத கால ஆகம மதத்தைப் பாவித்து தம்மை இந்திய உபகண்டம் எங்கும் உயர் குடிகளாக்கி , ஏலவே இருந்த மக்களை அவர்களின் கலாச்சார சமூக மத நம்பிக்கைகளைத் தகர்த்து தம்மை வளம் உள்ளவர்களாக மாற்றியது.இத்தகைய சமூக நிலையை மாற்ற பெரியார் முதலாய அரசியற் தலைவர்களால் கட்டப்பட்ட எதிர் அரசியல் நிலப்பாடே திராவிட அரசியலின் தோற்றுவாய்.

தமிழ்னாட்டுத் தமிழர் மீதான ஒடுக்குமுறை இனத்துவ அடிப்படையில் அன்றி சமூக கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் நிகழ்ந்தது, நிகழ்வது.

மேலும் சிங்களவரின் மரபணுக்கள் வேறாக இருப்பதால் அங்கே சிங்களவருக்கும் தமிழருக்கும் போர் மூளவில்லை.அங்கே சிங்களப் பேரின்வாதாம் தமிழரை அவர்களின் இனத்துவ அடையாளத்தின் அடிப்படையில் ஒடுக்கியதாலேயே , இனத்துவ முரண்பாடு முன் நிலைப்பட்டது.சிங்களப் பெருந்த் தேசியவாத அடக்குமுறையின் எதிர் வடிவமே தமிழத் தேசிய விடுதலைப் போர்.

ஈழ விடுதலைப் போரை நாம் தமிழ்னாட்டில் பதியம் போட முடியாது.அதே போல் தமிழ் நாட்டின் அரசியலை நாம் ஈழத்தில் பதிக்க முடியாது. நாம் மொழியால்,கலை கலாச்சாரத்தால் ஓரழிவிற்கு ஒன்றாக இருந்தாலும் ,இரு களங்களிலும் பிரதான ஒடுக்குமுறையின் வடிவங்கள் வேறு வேறானவை.அதனாலேயே இரு வேறு களங்களிலும் இரு வேறு அரசியல் இயக்கங்கள் உருவாகின.

ஒடுக்குமுறை தான் போராட்டங்களை உருவாக்குகிறதே ஒழிய, மரபணுக்கள் அல்ல. ஒருவரை இன்னொருவர் ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட கற்பித வரலாறுகளே மனி நீதியும், மகாவம்சமும். இவைக்கு எதிராக தோன்றிய எதிர் நிலை அரசியலே தமிழ்னாட்டில் திராவிடக் கோட்பாடாகவும், ஈழத்தில் தமிழத் தேசிய விடுதலைப் போராட்டமாகவும் உருவெடுத்தன.

Link to comment
Share on other sites

ஆரியத்துக்கு எதிரான திராவிடத்தை நான் ஏற்கிறேன். நான் திராவிடன் அல்ல தமிழன் என்று சொல்லி மேலே சீமான் தனது பேச்சை முடித்துள்ளார்.அது சரியான நிலைப்பாடே.இதனை சில இந்துத்வ வாதிகள் தமக்குச் சார்பானதாகவும், பெரியார் வசைபாடவும் பாவிக்கிறார்கள் போலும் உள்ளது.

இடையில் நின்று சிண்டு முடிதல் அல்லது பிழையான வியாக்கியானம் செய்ய விழையும் `இந்துத்`வாவாதிகள் பற்றி சீமான் கவனமாக இருக்க வேண்டும்.இல்லாவிடில் பிளவுகள் , வளரும் இயக்கத்தை சிதைத்து விடும்.கருதியல் ரீதியில் தெளிவான கோசங்கள் முன் வைக்கப்பட வேண்டும்.

538461_3012833486190_1423116401_32402804_944229914_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் தெளிவாகவே இருக்கிறார். தமிழ்நாட்டில் இருப்பது இருக்க வேண்டியது திராவிடம் என்ற மாயை அல்ல. தமிழன் என்ற உணர்வு..! தமிழ் தேசிய அடையாளம்..! அதுவே தமிழர்களை சாதி.. மதம்.. கட்சி.. கடந்து ஒற்றுமைப்படுத்தும்.. பிராந்தியத்தில் அவர்களின் இருப்புக்கு வழி சொல்லும்..! திராவிடம் பேசி.. தமிழர்கள் வீழ்ந்ததை விட.. தமிழர் வரலாறு அழிக்கப்பட்டதை விட.. வேறு எதுவும் நடக்கவில்லை..! :icon_idea:

tamil1.jpg

பா.ஜ.க சுஷ்மாவிற்கு வழிகாட்டியாக இருந்த.. இருக்கும்.. திராவிடத்தையும் மக்களுக்கு காட்ட வேண்டும்..!

அதிமுக இந்த விருந்துபசாரத்தை நிராகரித்தது. மதிமுக.. விடுதலைச் சிறுத்தைகளுக்கு.. நாம் தமிழர்களுக்கு.. தேமுதிக அழைப்பே இல்லை..! திமுக (வாய்க்கு வாய் பெரியார் பெரியார்.. பகுத்தறிவு பகுத்தறிவு என்று முழங்கும்...திமுக.. எந்தப் பகுத்தறிவும் இன்றி...) மீண்டும் ராஜபக்சவுடன் விருந்துண்டு மகிழ்ந்தது..! பெரியாரினால் விசுவாசிக்கப்பட்ட கட்சி காங்கிரஸ்.. தமிழர்களுக்கு எதிராக போர் மட்டும் செய்யவில்லை.. தமிழர்களைப் படுகொலை செய்த டக்கிளசிற்கு.. எம் ஜி ஆர் விருதும் வழங்கியது..! :):lol:

Link to comment
Share on other sites

சுயமரியாதை இயக்கம்

காங்கிரஸ் பேரியக்கத்தின் தலையாய கொள்கைகளில் தீண்டாமையும் ஒன்று. கள்ளுக்கடை மறியல், நீதிமன்றப் புறக்கணிப்பு போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றிகண்டவர் பெரியார். அதைப் போலவே தீண்டாமை இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அதனால்தான் அவர் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்துன்பத்திற்கும் ஆளானார். ஆனால், காந்தியடிகள் இதனைக் கண்டு கொள்ளவில்லை. செய்தித்தாள்களும் நடுநிலையோடு செய்திகளை வெளியிடவில்லை. இதனால் கோபம்கொண்ட பெரியார் ‘குடிஅரசு’ இதழைத் தொடங்கினார்.

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து வெறும் ‘தேசம்’ ‘தேசம்’ என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று.

மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்.

உயர்வு, தாழ்வு என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுழணர்ச்சி ஒழிந்து அனைத்து உயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றவே ‘குடிஅரசு’ இதழ் தொடங்கப்பட்டுள்ளது என்று பெரியார் குறிப்பிட்டார்.

கதர் வாரியத்தில் அதன் தலைவராக ஈ.வெ.ரா. பெரியார் இருந்தார். அதே சமயம் செயலாளராக இருந்தவர் கே. சந்தானம் என்ற பிராமணர் ஆவார். அவர் பல பதவிகளை பிராமணர்களுக்கே அளித்தார். வருமானத்தில் பெரும் பகுதியை பிராமணர்களுக்காகவே அவர் செலவிட்டார். இதனைப் பெரியார் கண்டித்தார். காந்தியடிகளிடமும் எடுத்துக் கூறினார். ஆனாலும் பெரியாரின் பேச்சை காந்தியடிகள் செவிமடுக்கவில்லை. மனதுக்குள் பெரியார் மிகவும் வேதனைப்பட்டார்.

காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய மக்கள் இயக்கமாக விளர்ந்து வந்ததும் உண்மை. ஆனால், பெரியாரின் உள்ளத்தில் தீண்டாமை ஒழிப்புக் காரணமாக ‘விரிசல்’ தோன்றத் தொடங்கிற்று. பெரியாரின் உள்ளம் புண்படும்படியாக வேறொரு நிகழ்ச்சியும் தமிழகத்தில் நடந்துவிட்டது. அது என்னவென்று பார்ப்போம்.

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆறு பாயும் செழிப்பான மாவட்டம். அந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர்களில் சேரன்மாதேவியும் ஒன்றாகும். சேரன்மாதேவியில் வ.வே. சுப்பிரமணிய ஐயர் எனபவர் குருகுலம் ஒன்று நடத்தி வந்தார். இவரும் சிறந்த காங்கிரஸ் தொண்டர் ஆவார்.

மாணவர்கள் தங்கிப் பயிலும் இடமே குருகுலம் ஆகும். அந்தக் குருகுலம் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சியும் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியிருந்தது.

குருகுல வளர்ச்சிக்காக ஈ.வெ.ரா. பெரியார், டாக்டர். வரதராஜிலு நாயுடு, தமிழ்த்தென்றல் திரு.வி.க., கானாடு காத்தான் வயி.சு. சண்முகம் செட்டியார் ஆகியோர் முழுமூச்சோடு பாடுபட்டார்கள்.

குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு என தனியாக உணவு சமைக்கப்பட்டது. தனியாக அவர்கள் அமர்ந்து சாப்பிடவும் வசதி செய்து தரப்பட்டது.

பிராமணர் அல்லாத மற்றைய மாணவர்களுக்கு தனியாக உணவு சமைக்கப்பட்டது. உணுலும் தரம் தாழ்ந்திருந்தது. அவர்கள் வேறு இடத்தில் உட்கார்ந்து உணவு சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கொடுமையை நேரில் கண்டார் பெரியார். ‘வெந்தப் புண்ணில் வேல் கொண்டு குத்துவது போல்’ துடித்துப்போனார்.

அனைவரும் சமம் என்ற கொள்கைக்காகவே ஆரம்பிக்கப்பட்டது குருகுலம். ஆனால், இங்கு நடைபெரும் சம்பவமோ அதற்கு நேர்மாறானதாக உள்ளது. தேசிய ஒற்றுமைக்கு இது ஏற்றதன்று. சம்பந்தி உணவே அமைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கண்டிப்புடன் கூறினார்.

பெரியாரின் கேள்விக்கு வ.வே.சு. ஐயர் சரியான பதில் கூறவில்லை. அதேசமயம் குருகுல வளர்ச்சிக்காக ஐயாயிரம் ரூபாய் வேண்டும் என்று வ.வே.சு ஐயர் பெரியாரிடம் கேட்டார். பெரியார் மறுத்துவிட்டார். பெரியார் ஒரு செயலாளர். அவரைப் போலவே இன்னொரு செயலாளரும் இருந்தார். கூட்டுப்பொறுப்பில் செயல்பட்டார்கள். வ.வே.சு. ஐயர், பெரியார் மறுத்தவுடன் மற்றொரு செயலாளரை அணுகி ஐயாயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டார்.

பெரியாருக்கு செய்தி தெரிந்தது. குருகுலத்தை எதிர்த்துச் சண்டை போட்டார். அவருக்கு ஆதரவாக திரு.வி.க. போன்றவர்கள் குரல் கொடுத்தார்கள்.

டாக்டர் வரதராஜிலு நாயுடுவின் தலைமையில் குருகுலத்தின் போக்கைக் கண்டித்தனர். பிராமணர்களின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படும் குருகுலம் மூடப்பட வேண்டும்என்று கூறினார்கள்.

நாடெங்கிலும் குருகுலம்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். கிளர்ச்சி வலுத்தது.

“குருகுலத்தில் ஜாதிப் பிரிவினைக்கு இடந்தருதல் கூடாது. சம்பந்தி உணவுதான் அளிக்கப்பட வேண்டும்” என்று காந்தியடிகள் வ.வே.சு. ஐயருக்கு அறிவுரை கூறினார்.

“பிராமணப் பிள்ளைகளும் அல்லாத பிள்ளைகளும் ஒன்றாக உட்காந்து சாப்பிட நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அப்படிச் செய்தால் குருகுலம் கெட்டுவிடும்” என்று வ.வே.சு. ஐயர் மறுத்துவிட்டார்.

எனவே பெரியார் பிராமணர்களையும், காங்கிரஸ் கட்சியையும் தாக்கிப்பேச ஐயரின் அறமற்ற செயல் காரணமாயிற்று.

குருகுலத்திற்கு பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினரும் நிதி உதவி அளித்து வந்தார்கள். ஐயரின் பிடிவாதப்போக்கால் அவர்கள் நிதி உதவி வழங்குவதை நிறுத்திவிட்டார்கள்.

தேசியத்தின் பெயரால் இனப்பாகுபாட்டை வளர்த்து வந்த குருகுலம் மூடப்பட்டது.

பெரியாரின் செயலிலும் சொற்பொழிவிலும் பிராமணர் அல்லாதாரின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற வேகமும் உணர்வும் காணப்பட்டது.

காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் பெரியாருக்கும் இடையே விரிசல் வளர்ந்தது.

சென்னை சட்டசபையில் அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்க வேண்டும். இதனால் அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை. மத்ததின் பெயரைச் சொல்லி கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான் ஆபத்து என்று பெரியார் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

இறுதியில் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் (Hindu Religious Endowments Act) நிறைவேற்றப்பட்டது.

பெரியார் அவர்கள் வகுப்புரிமைக்கும், சமுதாய உரிமைக்கும் காங்கிரஸில் இருக்கும்போதே போராடிக்கொண்டு இருந்தார். பிராமணர் அல்லாதாருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

நீதிக்கட்சியும் வளர்ந்துகொண்டிருந்தது. பெரியார் காங்கிரஸில் இருந்து விலகி நீதிக்கட்சியில் சேர்ந்துவிடுவாரோ என்று காங்கிரஸ் தலைவர்கள் அச்சம் கொண்டனர். அதற்காகவே சென்னை மாகாண சங்கம், தேசிய சங்கம் என்று இரு சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதைத் தோற்றுவித்தவர்கள் பிராமணர்களே. இதற்குப் பெரியார் பொருளுதவி செய்து வந்தார்.

இரு சங்கங்களிலும் வகுப்புவாரி இடொதுக்கீடு பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் காரணமாகவே அச்சங்கங்கள் கலைக்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் 1925ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் மாகாண மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் குடிநீர் வழங்கப்பட்டது. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கப்பட்டது போலாயிற்று.

காங்கிரஸ் கட்சியால் பிராமணர் அல்லாதார் நன்மை அடைய முடியாது. காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்று உரத்துக் குரல் கொடுத்தார் பெரியார். கோபத்தோடு மாநாட்டு மேடையை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு ஆதரவாய் பலர் மாநாட்டை புறக்கணித்து வெளியேறினார்கள்.

1925இல் காங்கிரஸை விட்டு வெளியேறிய பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்.

“நமது மூடநம்பிக்கையும் முட்டாள்தனமும் நம்மை விட்டு விலக வேண்டும். சுயமரியாதை அடைந்த பிறகுதான் ஆட்சிபுரிவதற்கு உரியவர்களாவோம். நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்த பின்புதான் சுயமரியாதையை நின்ப்பதிற்கு யோக்யதை உண்டு” என்று பெரியார் சுயமரியாதை இயக்கப் பிரசாரம் நாடெங்கும் நிகழ்த்தினார். குடிஅரசு இதழில் சுயமரியாதை குறித்த கட்டுரைகள் எழுத்த் தொடங்கினார்.

‘ரிவோல்ட்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையும் நடத்தினார். கொஞ்ச காலம்தான் இந்தப் பத்திரிகை வெளிவந்தது. அப்புறம் நின்றுவிட்டது.

சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் தமிழக இளைஞர்களிடையே சுடர்விட்டு வளரத்த தொடங்கிற்று. பெரியாரின் பெருமை பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டது.

1927இல் பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பிரசாரம் தீவிரமடைந்தது. இதனை எதிர்ப்பதற்காக பிராமணர்கள் காந்தியடிகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். காந்தியடிகள் பெரியாரின் கருத்துகளை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

பெரியாரும், காந்தியடிகளும் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மைசூரில் சந்தித்துப் பேசினார்கள்.

காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும்

ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்.

பிராமணர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.

என்று இந்த மூன்று முக்கியக் கருத்துகளை முன் வைத்தார் பெரியார்.

மகாத்மா என்னென்னவோ சமாதானங்கள் செய்து பார்த்தார். பெரியார் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் பெரியார் நாத்திகர், தேசத்துரோகி என்றெல்லாம் தூற்றப்பட்டார்.

நாத்திகர் என்று கேலி பேசியபோது பெரியார் இவ்வாறு விளக்கம் அளித்தார்:

“நாங்கள் நாத்திக்க் குடும்பக்காரர்கள் அல்லர். எங்கள் குடும்பம் மிக மிக வைதீகக் குடும்பம். இந்த ஊர்க் கோயில்கள் மிகவும் சிதைந்து இருக்கிறது என்றும் பதினைந்து நாள்களில் இடித்துவிடவேண்டும் என்றும் தர்மகர்த்தாக்களுக்கும், கோயில் கமிட்டி உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் வந்தது. அதை எடுத்துக்கொண்டு அவர்கள் என் தந்தையாரிடம் வந்தார்கள். உடனே என் தந்தையார் பதறிப்போய் திருப்பணியைச் செய்து கும்பாபிஷேகம் செய்தவர். அதை இன்னும் அந்தக் கோயில் கல்வெட்டுக்களில் காணலாம்.

நான் சுமார் இருபத்தைந்து ஆண்டுக் காலம் அந்தக் கமிட்டி மெம்பராகவும், செயலாளராகவும், தலைவராகவும் இருந்திருக்கிறேன்.

ஈரோடு தாலுக்காவில் உள்ள கோயில்களில் சுமார் இருபத்தைந்து கோயில்களை புதுப்பித்து சீரமைத்துள்ளேன்.

கடைசியாக நான் ராஜினாமா செய்ததற்குக் காரணம் கோயிலுக்குள் ஆதிதிராவிடரை அனுமதி அளித்து தீர்மானம் செய்யப்பட்டது. அதன்படி ஆதிதிராவிடர்கள் உள்ளே நுழைந்தனர். ஆனால், சர்க்கார் கேஸ் போட்டு அவர்களை தண்டித்துள்ளது. என் தீர்மானத்திற்கு மதிப்பில்லாமல் போய்விட்டதே என்றுதான் நான் ராஜினாமா செய்தேன்.

எங்கள் குடும்பத்தின் திருப்பணியைப் பாராட்டி சர்க்காரே 1912ஆம் ஆண்டு சக்கரவர்த்தி பட்டாபிஷேகத்தின் போது ஒரு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். அதில் நாங்கள் செய்த “பொதுதர்மத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று எழுதியிருக்கிறார்கள்.

இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. பெரியார் நாத்திகர் ஆகவில்லை. நாத்திகர் ஆக்கப்பட்டார். கோயில்களையும் கடவுள்களையும் மறந்தால்தான் தமிழன் சுயமரியாதையோடு வாழ முடியும் என்ற தீர்மானத்திற்கும் வந்தார்.

எனவே செல்லும் இடமெல்லாம் சுயமரியாதை பிரசாரம் செய்தார். காங்கிரஸில் உள்ளவர்களும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டனர். கறுப்புச் சட்டை அணிந்து தொண்டர்கள் பெரியாரின் கருத்துக்கு செயல் வடிவம் கொடுத்தார்கள்.

‘குடிஅரசு’ இதழில் இராமாயண ஆராய்ச்சி, பெரிய புராண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி என்றெல்லாம் கட்டுரைகளை எழுதினார் பெரியார்.

சைவர்கள், வைணவர்கள் பெரியாரின் கருத்துகளை எதிர்த்தார்கள்.

ஆண்களைப் போலவே பெண்களும் சமஉரிமை பெற்று வாழவேண்டும் என்பது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் ஒன்றாகும்.

இதனையும் ஆத்திகர்கள் எதிர்த்தனர்.

சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் மேலும், மேலும், வளரத் தொடங்கிற்று. பெரியாரின் சொல்லாற்றல், தர்க்கமுறை, ஆதாரங்கள் எல்லாம் எதிரிகளை நடுங்கச் செய்தன.

சுயமரியாதை சிந்தனைகள் கடல் கடந்தன.

http://www.thanthaiperiyar.org/tamil/politics/suyamariyathai/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடமொழிகளை மூன்றாக வகுத்துள்ளார்கள்.

தென் திராவிடமொழிகள்

தமிழ்,மலையாளம்,கொடகு,கோத்தம்,துதம்,கன்னடம்,துளு,படகம்,

நடுத்திராவிடமொழிகள்

தெலுங்கு,குயி,குவி,கொண்டம், நைக்கி,பெங்கு,கொலமி,மண்டம்,பர்ஜி,கதபம்,கொந்தி

தென் திராவிடமொழிகள்

குருக்ஸ்,மால்டா,பிராகூய்

கொல்ட்வெலின் தகவலின்படி இலக்கியம் படைத்த இலக்கணம் கொண்ட

மொழிகள் தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,கொடகு ஆகி ஆறு மொழிகளுமே.

மற்றைய மொழிகள் அனைத்தும் பேச்சுவழக்கில் மட்டுமே இருந்தவை. இருப்பவை.

பிராகூய் எனும் மொழி பலூசிஸ்தானிலும்

மால்டா எனும் மொழி வங்காளத்திலும்

குருக்ஸ் எனும் மொழி பீகார், நாகபுரியிலும்

பர்ஜி மத்தியபிரதேசத்திலும்

பெங்கு,குவி ஒரிஸாவிலும்

கொந்தி,கொலமி எனும் மொழிகள் மகாராஸ்டிரத்திலும்

படகு,கோத்தம்  எனும் மொழிகள் நீலகிரியிலும்

பேசப்படுகின்றன.

மொழியாலும் கலாச்சாரத்தாலும் இணைந்த திராவிடர்கள் வாழ்ந்த காலம்

எப்போதோ முடிவிற்கு வந்துவிட்டது.

இப்போது நாம் தமிழர்கள்.

நமது தேசியம் தமிழ்த்தேசியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் என்ன கதைக்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை :unsure::lol::D

Link to comment
Share on other sites

அன்றிருந்த அடக்கு முறைகளுக்கு எதிராக, பெரியார் எடுத்துக் கொண்ட ஆயுதம். அது வெற்றி அளித்தது.

இந்தத் 'திராவிட' உணர்வை தமிழகச் சகோதரர்கள்தான் தலையில் வைத்து தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். நடைமுறையில் இந்தக் கொள்ளை வெற்றி அளித்ததாகத் தெரியவில்லை. தமிழக உறவுகளின் காய்ந்து போன தொண்டையை நனைப்பதற்குக் கூட காவேரி, முல்லைப்பெரியாறு நீரைத் தராததுதான் நிஜம்.

தமிழன் தலையிலேயே மிளகாய் அரைப்பதற்கு ஏற்ற ஒரு கொள்கை.

மலையாள / தெலுகு / கன்னட உறவுகளைக் கேட்டுப்பாருங்கள், 'திராவிடம்' என்ற சொல் இருப்பதே அவர்களுக்குத் தெரியாது.

Link to comment
Share on other sites

தமிழ்நாடு

பெரியார் சனி, 02 பெப்ரவரி 2008 15:38

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star_blank.pngrating_star_blank.pngrating_star_blank.pngrating_star_blank.pngrating_star_blank.png / 0

குறைந்தஅதி சிறந்த

பொதுவாக, ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலையில்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) சீக்கிரத்தில் பிரிந்தால் நல்லது என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது.

கன்னடியருக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, சுயமரியாதையோ இல்லை; மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பது பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை. மேலும், சென்னை மாகாணத்தில் 7ல் ஒரு பாகத்தினராக இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் - நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூட சொல்லவதற்கிடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் சீக்கிரம் பிரியட்டுமென்றே கருதி வந்தேன்; அந்தப்படியே பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும், மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டுக் கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும், இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனியாக ஆகிவிட்டால், நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும், அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்குப் பலமும் ஆதரவும் இருக்காது என்றும் கருதுகிறேன்.

ஆனால், நாட்டினுடையவும், மொழியினுடையவும், இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்கின்ற குறைபாடு எனக்கு இருக்கிறது. ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போனபின்பு கூட, மீதியுள்ள யாருடைய மறுப்புக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் 'தமிழ்நாடு' என்ற பெயர்கூட இருக்கக்கூடாது என்று, அந்தப் பெயரையே மறைத்து, ஒழித்துப் பிரிவினையில் 'சென்னை நாடு' என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிய வருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும்; எந்தத் தமிழனும் இதைச் சகிக்க முடியாது. இதைத் திருத்தத் தமிழ் நாட்டு அமைச்சர்களையும், சென்னை, டில்லி சட்டசபை - கீழ் மேல் சபை உறுப்பினர்களையும் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டிற்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாத நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்?

('தனி அரசு', அறிக்கை 25-10-1955)

பெரியோர்களே! தோழர்களே!

திராவிட நாடு எது? இதற்கு முன் - 1956-க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நான் 'திராவிட நாடு' என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகு வடநாட்டானும், இந்த நாட்டுப் பார்ப்பானும் சேர்ந்து கொண்டு இனிமேல் நமக்கு ஆபத்து என்று கருதி, நான்கு பிரிவுகளாக வெட்டி விட்டார்கள். இப்பொழுது நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்த கள்ளிக்கோட்டை, மங்களூர் மாவட்டங்களும் மலையாளம், கன்னட நாடுகளுடன் சேரப்போகின்றன. இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித் தமிழ்நாடாக ஆகவிட்டோம். ஆகவே இதை இப்பொழுது 'தமிழ்நாடு' என்று சொல்லலாம். முன்பு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தைச் செலுத்திப் பிரிந்து போய்விட்டார்கள்.

நாம் நிபந்தனையற்ற அடிமைகளாய் உள்ளோம். வெள்ளையர் ஆண்ட காலத்தில் பார்ப்பனரின் அக்கிரமங்களைச் சொல்ல வழி இருந்தது. அவர்களும் நாம் சொல்வதைக் கேட்டுச் சிலவற்றைக் கவனித்து வந்தார்கள். இப்பொழுது நம் நாடு வடநாட்டிற்கு நிபந்தனையில்லா அடிமை நாடாகிவிட்டது. நாங்கள் வெள்ளையரை அப்பொழுதே கேட்டோம்: 'நாங்கள், உங்களை யுத்த காலத்தில் ஆதரித்தோம். பார்ப்பனரும் வடநாட்டுக்காரரும் உங்களை எதிர்த்தார்கள்; எங்கள் இனம் வேறு; அவர்கள் கலை, பழக்க வழக்கங்கள் வேறு' என்று சொன்னோம். அதற்கு வெள்ளைக்காரர்கள், 'நீங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று நினைத்து இருந்தோம். இதெல்லாம் உங்கள் குடும்பச் சண்டை; நாங்கள் சீக்கிரத்தில் இந்த நாட்டை விட்டுப் போய்விடப் போகிறோம்' என்று கூறி, முஸ்லிம்களுக்கு சிறு இராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, நம்மைப் பார்ப்பனருக்கும், வடநாட்டவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டனர்.

இப்பொழுது நாம் வடநாட்டு ஆட்சியில் இருந்து பிரிந்து தனிநாடு ஆகவேண்டுமென்று கூச்சல் போடுகிறோம். தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக்கொண்டா போய்விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும்பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது. நமக்கு நாடு கிடைத்து வெள்ளையருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் இந்த வடநாட்டான் ஓடிவிடுவானே!

(திருவண்ணாமலையில், 19-8-1956-ல் சொற்பொழிவு, 'விடுதலை' 29-8-1956)

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=3062&Itemid=139

Link to comment
Share on other sites

தமிழன் தலையிலேயே மிளகாய் அரைப்பதற்கு ஏற்ற ஒரு கொள்கை.

மலையாள / தெலுகு / கன்னட உறவுகளைக் கேட்டுப்பாருங்கள், 'திராவிடம்' என்ற சொல் இருப்பதே அவர்களுக்குத் தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.