• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

புலவர்

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..

Recommended Posts

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..

''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. 'செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ... என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் 'ரெக்கவரி சாஃப்ட்வேர்

(recovery software) .

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

''செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல 'ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான 'ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்... ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் 'வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்... உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.

தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்.

உஷாருப்பா.. உஷாரு..

thanks-facebook

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • இதையும் நம்ம பிள்ளைகள்  சொல்லாது...
    • கோசான் பல பதிவுகளில் உங்கள் தரவுகளைப் பார்க்கும் போது நீங்களும் ஒரு சின்ன கூகிழே. பாராட்டுக்கள். goshan_che     1,398     Posted 35 minutes ago
    • சிந்திக்கும் போது இவற்றையும் சேர்த்தே சிந்தியுங்கள். 1. ஆரிய, திராவிட என்பது மனிதர் உருவாக்கிய பகுப்பே அன்றி அதில் விஞ்ஞான, மரபணு வேறுபாடுகள் ஏதுமில்லை.அதே போல தோல் நிறத்தை எடுத்தால், தோலுக்கு கீழே உள்ள மெலனின் நிறமணிகளின் பரம்பலை வைத்தே இவை தீர்மானிக்கபடுகிறன. 2. ஏன் ஆபிரிக்கர்களை யாரும் ஆரிய, திராவிட எனப் பிரிப்பதில்லை? மனித இனம் ஆபிரிக்க கண்டத்தை விட்டு வெளியேறிய பின்புதான் இந்த பகுப்பு நடந்தது என்பதாலா? 3. ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய மனிதர்கள் ஒரே திசையில் பயணிக்கவில்லை என்கிறது அந்த எடுகோள். தவிரவும் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் இவ்வாறு வெளியேறிய பாதை யின் சில வழிகளில் நியந்ததாலிஸ் மனிதர் கூட்டமாக வாழ்ந்ததாயும் நம்பபடுகிறது. சேப்பியன்ஸ்சை விட உடல் வலுவும், பெரிய மூளை உடையவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள். ஆனால் எப்படியோ இவர்கள் வழக்கொழிந்து போக, சேப்பியன்ஸ் தக்கணப் பிழைத்தார்கள். இதுவரை அவர்களுக்கும் சேப்பியன்சுக்கும் இனக்கலப்பு நடைபெறவில்லை என்றே நம்பப்பட்டாலும் பிந்திய ஆராய்சிகள் இனக்கலப்பு நடந்தது என்றும் இன்றைய மனிதரில் நியந்தால் ஜீன்கள் இருக்கிறன என்றும் சொல்கிறன. 4. இனி ஊகளுக்குள் போவோம் - ஆபிரிகாவில் இருந்து வெளியேறிய, ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபட்ட வழிகளில் வெளியோரியோரையே நாம் திராவிடர் ஆரியர் என்கிறோம். 5. ஒரு காலத்தில் இந்திய தீபகற்பம் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் இனம் அறவே அற்ற ஒரு நிலப்பரப்பு. பின்னர் இதை நோக்கி 5000 வருடங்களுக்கு முன், இடம் பெயர்ந்த கூட்டம் திராவிடர்கள்,  இவர்கள் அநேகமாக ஈரான் வழியே வந்திருக்கவே வேண்டும். இந்து சமவெளியில் 3000 வருடங்களுக்கு முன் நாகரீகத்தை ஆகியவர்கள் இவர்களே. இவர்களை ஒத்தவர்களால் ஆக்கப்பட்டதே வட ஆபிரிகாவின், மத்திய கிழக்கின் ஏனைய நாகரீகங்கள். இவர்களை இப்போ நாங்கள் திராவிடர் என அடையாளம் காண்கிறோம். (ஆனால் இவர்களில் சிந்து சமவெளியினரை மட்டுமே உலகம் திராவிடர் என ஏற்கிறது) 6. இதில் ஓர் பிரிவு அல்லது இன்னொரு அலையாக ஆபிரிக்காவில் இருந்து கிளம்பிய பிரிவு ஆபிரிகாவில் இருந்து வடக்கு நோக்கி, பின் வடகிழக்கு (மத்திய ஆசியா, மங்கோலியா, சைபீரியா) நோக்கியும், மேற்கு நோக்கியும் (ஐரோப்பா) இடம்பெயர்ந்தது. இந்த குழு திராவிடர் என நாம் இனம் காணும் குழுவை போல நகர நாகரிகங்களை கட்டி எழுப்பாமல், குகைவாழ் கூட்டமாக, குதிரைகளை பயன்படுத்தும் லாவகம் உள்ளவர்களாக, போர்குணம், மிலேச்சம் மிக்கவர்களாக, மாறினர். அவர்களுக்கும் மொழி, எழுத்து வடிவங்கள் இருந்தன. இறை நம்பிக்கைகள் இருந்தன. இவர்களையே இப்போ நாம் ஆரியர் என்கிறோம்.  இவர்களில் மத்திய ஆசியா, மொங்கோலிய பகுதிகளுக்கு போனவர்களே, பின்னாளில் தெற்கு நோக்கி நகர்ந்து, இந்திய தீபகற்பகத்துள் புகுந்து திராவிடரை இந்து சமவெளி பகுதியில் இருந்து கீழ் நோக்கி தள்ளினர்.  7. இந்த இரு குழுக்களிடையே இந்திய தீபகற்பத்தில் மட்டுமே நேரடி தொடர்பு/மோதல் ஏற்பட்டது. இதில் நீண்ட நோக்கில் ஆரியம் வெல்லவும் செய்தது. போரில் வெல்ல முடியாத போது, மத நம்பிக்கைகளை கையில் எடுத்தது ஆரியம். இதில் பிராமணியத்யின் ஊடுருவல் அளப்பரிய பங்காற்றியது.  
    • 7 மணி நேரங்களுக்கு முன்னர்   படத்தின் காப்புரிமை Getty Images   பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், பாலத்தீன நிலத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை நடைபெற்ற முக்கிய தருணங்களைத் தொகுத்துள்ளோம். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித் திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம். சரி... இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் என்ன பிரச்சனை? அரபு நாடுகளால் எழுப்பப்பட்ட கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் உருவான நாடு இஸ்ரேல். பாலத்தீன நிலத்தில் உருவான நாடு அது. படத்தின் காப்புரிமை Getty Images எப்போது என்ன நடந்தது? 1917 முந்தைய காலகட்டம்: புவியியல் ரீதியாக பாலத்தீனம், யூதர்களின் புனித நகரம், இஸ்ரேலியர்களின் நகரம் என அழைக்கப்பட்ட அந்தப் பகுதி துருக்கிய ஓட்டோமான் பேரரசால் ஆளப்பட்டது. நவம்பர் 1917: முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பால்ஃபோர் பிரகடனம் வெளியிடப்பட்டது. 1917 நவம்பர் இரண்டாம் தேதியன்று வெளியிட்ட இந்த பிரகடனத்தின்படி, பாலஸ்தீனத்தில் "யூத மக்களுக்கான நாட்டை" நிறுவுவதற்கான தனது ஆதரவைப் பிரிட்டன் அறிவித்தது. பால்ஃபோர் பிரகடனத்தை அமெரிக்கா ஆதரித்தாலும், அன்றைய அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அரபு நாட்டு மக்கள் மற்றும் யூதர்களைக் கலந்தாலோசிக்காமல் அமெரிக்கா இது தொடர்பாக எந்தவிதத்திலும் தலையிடாது என்று கூறிவிட்டார். டிசம்பர் 1917: பிரிட்டன் படைகள் பாலத்தீனத்தை ஆக்கிரமித்தன. இதன்பின் யூதர்களுக்கும், அரேபியர்களுக்குமான சண்டைகள் அதிகமாகின. ஜூலை 1922: பால்ஃபோர் பிரகடனத்தை அமல் செய்யும் அதிகாரத்தை பிரிட்டனுக்கு வழங்கியது பன்னாட்டு மன்றம் (லீக் ஆஃப் நேஷன்ஸ்). நவம்பர் 1947: பாலத்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க ஐ.நா பரிந்துரைத்தது. யூத தலைமை இதனை ஏற்றது. அரபு தலைமை இதனை நிராகரித்தது. இதன்பின் இரண்டு தரப்புக்கும் இடையேயான வன்முறை அதிகமானது. மே 1948: பாலத்தீனத்தின் மீதான பிரிட்டனின் உரிமை ரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் எனும் தனிநாடு உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 1950: 1950 செப்டம்பர் 17அன்று, இஸ்ரேல் இறையாண்மையுள்ள நாடு என்பதை இந்தியா அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. அதன்பிறகு, 1992இல் இஸ்ரேலுடன் ராஜீய உறவுகளை இந்தியா தொடங்கியது. ஜூன் 1967: மத்திய கிழக்கு யுத்தம் தொடங்கியது. கிழக்கி ஜெரூசலேம், மேற்கு கரை ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்தது இஸ்ரேல். டிசம்பர் 1987 - செப்டம்பர் 1993: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக முதல் பாலத்தீனிய எழுச்சி தொடங்கியது. செப்டம்பர் 1993: ஓஸ்லோ ஒப்பந்தத்தில் பாலத்தீன யாசர் அராபத் - இஸ்ரேலியப் பிரதமர் இட்சக் ராபின் கையொப்பமிட்டதை அடுத்து அமைதி உண்டானது. யார் இந்த யாசர் அராபத்? படத்தின் காப்புரிமை Getty Images யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். 1929-ஆம் ஆண்டு பிறந்தார். எகிப்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தபோதே, அரபாத், அரசியல் மற்றும் சமூக ஆர்வலராகிவிட்டார். 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலத்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து நடந்த அரபு-இஸ்ரேல் போரின் போது, அரபாத்தின் தந்தை கொல்லப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷார் எகிப்தியப் பாலைவனங்களில் கைவிட்ட ஆயுதங்களைத் தேடி எடுத்து, ராணுவப் பயிற்சி மேற்கொண்ட அராபத், பிறகு, எகிப்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று, சூயஸ் கால்வாய்ப் போர் மற்றும் அதற்குப் பிறகு நடந்த அரபு-இஸ்ரேல் போர் ஆகியவற்றில் களத்தில் செயல்பட்டார். இக்கால கட்டத்தில்தான், அதாவது 1958-ஆம் ஆண்டு, அல்-பத்தா என்ற அரசியல் அமைப்பையும் நிறுவினார். 1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள் தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்டான் நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அராபத்தின் அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அராபத் பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக ஆனார். 1970-ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டிலிருந்து அராபத்தும் பாலத்தீன விடுதலை இயக்கமும் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில், பாலத்தீனப் போராளிகள் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைககளில் ஈடுபட்ட போதும், அரபாத் அவற்றை விவாதிக்க விரும்பவில்லை, மாறாக 1974-ஆம் ஆண்டு, பரபரப்பான சூழ்நிலையில், ஐநா மன்றப் பொதுச்சபையில் நுழைந்து அவர் உரையாற்றினார். தம் ஒரு கையில் ஆலிவ் கிளையும், இன்னொருகையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளது. எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும் என்று அராபத் அன்று ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. 1982-ஆம் ஆண்டு, அப்போது இஸ்ரேலிய ராணுவ அமைச்சராக இருந்த ஷரோன், லெபனானில் இருந்த பாலத்தீன நிலைகள், அகதி முகாம்கள்மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து, அராபத், லெபனான் நாட்டிலிருந்து வெளியேறி துனீசியா நாட்டுக்குச் சென்று தஞ்சம் பெற்று வாழ நேர்ந்தது. படத்தின் காப்புரிமை Getty Images ஆனால், 1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலத்தீனப் பகுதிகளில் "இன்டிபாடா" என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து, பாலத்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப்போரின் போது, அரபாத், இராக் அதிபர் சதாம் ஹூசைனை ஆதரித்ததால், சதாம் ஹூசைனின் தோல்விக்குப் பிறகு அரபாத், இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது. சமரச உடன்பாடு 1993-ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின் அனுசரணையின் பேரில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வைத்து இஸ்ரேலியப் பிரதமர் இட்சக் ராபினுடன் அரபாத் கைகுலுக்கினார். சமரச உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசை, பாலத்தீனம் விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால், இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகள், ஜெரூசலேம் நகரின் எதிர்கால நிலை, பாலத்தீன அகதிகள் நாடு திரும்புவது ஆகிய பிரச்னைகள் கிடப்பில் போடப்பட்டன. சமரச உடன்பாட்டை அடுத்து, அரபாத், ராபின், இஸ்ரேலிய அமைச்சர் ஷிமோன் பெரஸ், ஆகியோருக்குக் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், சமரச உடன்பாடு, முறையாகச் செயல்படவில்லை. இஸ்ரேல் முற்றுகை மேற்குக் கரை ரமல்லா திரும்பி பாலத்தீன நிர்வாக அமைப்புக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்த அராபத், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலத்தீனர்களின் போராட்டம் தொடர்ந்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளாக, அராபத்தின் ரமல்லா வளாகத்தை இஸ்ரேல் முற்றுகை இட்டிருந்தது. பாலத்தீனப் பிரச்னைக்குத் தீர்வற்ற நிலைதான் இன்னும் நிலவுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அராபத்தின் உடல்நிலை சீர்குலைந்ததை அடுத்து, அவர் விமானத்தில் பாரீஸ் நகர் வந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நாடுவிட்டு நாடுசென்ற வாழ்வு பாலத்தீனர்களின் பிரதான தலைவராக இருந்து வந்த யாசர் அரபாத் மீது, இஸ்ரேலியத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவிர, வேறு பல குற்றச்சாட்டுகளும் இருந்துவந்தன. முக்கியமாக, பாலத்தீன நிர்வாக அமைப்பின் மீது சர்வாதிகாரம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அராபத்தின் வாழ்க்கை, பல காலம், நாடுவிட்டு நாடுசென்று வாழ்வதாகவே அமைந்தது. ஜோர்டான், லெபனான் போன்ற நாடுகளில் வாழ்ந்தபோது, பல முறை இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் தீரமிக்க செயல்களில் ஈடுபட்டவர் அராபத் என்கிறார்கள் அவருடன் இருந்த பாலத்தீனத் தலைவர்கள். 1992-ஆம் ஆண்டு லிபியா நாட்டில் அரபாத் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது, அப்போது பதினைந்து மணி நேர காத்திருப்புக்குப் பின் அராபத் மீட்கப்பட்டார். தம் வாழ்க்கையின் இறுதி மூன்று ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய முற்றுகையில் கழிக்க நேரிட்டதும் முக்கியம். யாசர் அராபத், ஒரு தீவிரப் போராளியாக இருந்த போது, தம்முடைய நடமாட்டங்களை ரகசியமாகவே வைத்திருந்தார். 1990-ஆம் ஆண்டு இவருக்குத் திருமணமான செய்தி கூட, ஓராண்டு ரகசியமாகத்தான் இருந்தது. சுஹா என்ற பாலத்தீனப் பெண்ணை அராபத் மணந்திருந்தார். இவர்களுக்கு, ஸஹ்வா என்ற மகளும் உண்டு. செப்டம்பர் 2000 -2005: இரண்டாவது பாலத்தீன எழுச்சி உருவாகியது. நவம்பர் 2004: யாசர் அராபத் பிரான்சில் ராணுவ மருத்துவமனை ஒன்றில் காலமானார். ஏப்ரல் 2014: இஸ்ரேல் - பாலத்தீன அமைதி பேச்சுவார்த்தை கசப்புடன் முறிந்தது. டிசம்பர் 2017: ஜெரூசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் டிரம்ப். இதனை அடுத்து அமெரிக்காவுடனான உறவை முறித்தது பாலத்தீனம். https://www.bbc.com/tamil/global-51291939
    • செய்திக்குழு பிபிசி மானிட்டரிங்     படத்தின் காப்புரிமை Getty Images கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4500 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா தவிர வேறு எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என்பது குறித்தும், இந்த வைரஸ் பாதிப்பின் காரணம் வௌவால் இறைச்சி உள்ள சூப்தான் என்று கூறும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவ்வாறான காணொளிகள் எங்கிருந்து பகிரப்பட்டது, ஏன் பரவுகிறது என்பது குறித்து பிபிசி மானிடரிங் குழு ஆராய்ந்தது.   வௌவால் சூப் காணொளிகள் கொரோனா வைரஸ் உருவானதன் காரணம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே மக்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். வுஹானில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகும் சீன மக்கள் வௌவால் இறைச்சி உட்கொள்கின்றனர் என்று கூறும் காணொளிகள் பலவும் அதிகமாக பகிரப்பட்டு வந்தன. அவ்வாறு ஒரு காணொளியில் சீனப் பெண் ஒருவர் சமைத்த வௌவால் இறைச்சியை கையில் வைத்துக்கொண்டு இது கோழிக்கறியைவிட சுவையாக உள்ளது என கூறும் காணொளி பரவியது. இதனால் சீனர்களின் உணவுப்பழக்கமே இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவக் காரணம் என விவாதங்கள் எழுந்தன. ஆனால் உண்மையில் இந்த காணொளி வுஹானிலோ சீனாவிலோ பதிவு செய்யப்படவில்லை. ஒரு பிரபல ஊடக தொகுப்பாளர், தனது பயண நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மேற்கு பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பலோவ் தீவில் இந்த காணொளியை பதிவு செய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி, வுஹானில் வைரஸ் தொற்று பரவ துவங்கிய பிறகு, மீண்டும் அனைத்து சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டது. படத்தின் காப்புரிமை Getty Images   இவ்வாறு விவாதங்கள் பரவியதும் அந்த காணொளியில் இடம் பெற்றிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், ''நான் பலோவ் தீவில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையையே பதிவு செய்ய முயற்சித்தேன்'', ''ஆனால் வௌவால் இறைச்சியால் வைரஸ் தொற்று பரவும் என நான் எதிர்பார்க்கவில்லை,'' என்று கூறி காணொளி ஒன்றை பதிவு செய்து மன்னிப்பும் கோரினார். வுஹானின் கடல் உணவு சந்தையில், சட்ட விரோதமாக விற்கப்படும் வனவிலங்குகளில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியதாக நம்பப்படுகிறது. ஆனால் சமீபத்தில் சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் வைரஸ் பரவ வௌவால் இறைச்சியும் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. உண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உருவாகியதன் காரணம் குறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'கொரோனா வைரஸ் பாதிப்பு திட்டமிடப்பட்டது' கடந்த வாரம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு உள்ளது என்பதை அந்நாட்டு அரசாங்கம் அதிகாரபூர்வமாக உறுதி செய்தது. இதன் பிறகு, கொரோனா வைரஸ் ஆய்வகத்திற்குள் மனிதரால் உருவாக்கப்பட்ட கொடிய தொற்று என்றும் அதற்கு 2015ம் ஆண்டே மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான காப்புரிமையும் உள்ளது என்றும், காப்புரிமை ஆவணங்களும் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.   இந்த வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று முதலில் குற்றம் சாட்டியவர் சதிக் கோட்பாட்டாளரும், யூடியூப் பிரபலமுமான ஜோர்டான் சத்தர். இங்கிலாந்தின் பிர்பீரைட் நிறுவனம் கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்யும் மருந்திற்கான காப்புரிமை 2015ம் ஆண்டே பெற்றுள்ளது என கூறும் பதிவு ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். இந்தப் பதிவை ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் பகிர்ந்தனர். இதே பதிவை மருந்துகளுக்கு எதிராக செயல்படும் பல அமைப்புகள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தன. இதில் பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கும் தொடர்பு உள்ளது எனவும் கூறப்பட்டது. தடுப்பு மருந்து திட்டங்களுக்கு கேட்ஸ் பவுண்டேஷன் எவ்வளவு நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நோயை திட்டமிட்டு பரப்புகிறீர்களா, மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த ஊடகங்களை பயன்படுத்துகிறீர்களா போன்ற பல கேள்விகளை ஜோர்டன் சத்தர் பதிவிட்டார். ஆனால், பிர்பிரைட் நிறுவனம் இந்த புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பதிவு செய்யவில்லை. மாறாக கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த மற்றொரு வைரஸுக்கான காப்புப்புரிமையைத்தான் பெற்றுள்ளது. மேலும் அது கோழிப்பண்னையில் உருவாகும் வைரஸ் என்றும் பிர்பிரைட் நிறுவனம் விளக்கம் தருகிறது. ஆனால் இந்த வைரஸ் கண்டுபிடிப்புக்கும் கேட்ஸ் அறக்கட்டளை நிதி ஒதுக்கவில்லை என பிர்பிரைட் நிறுவனம் கூறுகிறது. ''உயிரி ஆயுத'' சதித்திட்டமா ? ஆன்லைனில் வைரலாகிய மற்றொரு ஆதாரமற்ற கூற்று ''இது சீனா மீது தொடுக்கப்பட்ட உயிரி ஆயுத திட்டத்தின் ஓர் அங்கம்'' என்பதுதான். இது தொடர்பாக இணையத்தில் தேடினால் வாஷிங்டன் டைம்ஸ் பதிவு செய்த இரண்டு பகிர்வுகள் உயிரி ஆயுத கோட்பாடுகளுக்கு விளக்கம் அளிக்கிறது. இது உயிரி ஆயுத திட்டமாக இருக்கலாம் என்று முதல் முதலில் கூறியவர் இஸ்ரேலிய ரானுவ உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி. ஆனால் இதை அதிகாரபூர்வமாக அவர் நிரூபிக்கவில்லை. இருப்பினும் இந்தப் பதிவை பலர் பகிர்கின்றனர். கனடிய அறிவியல் அறிஞருக்கு தொடர்பா? கனடாவின் அறிவியல் அறிஞரான கியூ என்பவர் அவரது கணவர் மற்றும் சில மாணவர்களை சீன அரசாங்கம் வெளியேற்றியுள்ளது. சீனாவில் உள்ள கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றுக்கு கனடாவை சேர்ந்த கியூ இரண்டு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அவரன் கணவர் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி மேற்கொண்டவர் என்றும், கியூவும் அவர் கணவரும் உளவு பார்க்கும் குழுவால் சீனாவுக்கு அனுப்பப்பட்டு, தொற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிரை வுஹானுக்கு அனுப்பியுள்ளனர் என்றும் ஆதாரங்கள் இன்றி பதிவு செய்யப்பட்ட சில ட்வீட்டுகளை 12,000திற்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்துள்ளனர். வுஹான் செவிலியர் பேசும் காணொளி ஹுபெய் மாகாணத்தில் இருந்து பேசுவதாக ஒரு பெண் பேசும் காணொளி வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில் ஒரு பெண் பேசுகிறார். அவர் மருத்துவரா அல்லது செவிலியரா என்பதன் விவரங்கள் அந்த காணொளியில் இடம்பெறவில்லை. அவர் முகத்தையும் பாதுகாப்பு கவசம் அணிந்து மறைத்துள்ளார். சீனாவில் 90,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளனர் என்று அந்த காணொளியில் பேசும் பெண் விவரிக்கிறார். உண்மையில் இந்த காணொளி எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதன் விவரம் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/global-51296496#