Jump to content

நம்ப முடியாதவை! (உங்களுள் ஒரு உள்ளுணர்வு!)

Recommended Posts

january 13 2012

உள்ளுண‌ர்வு...

இது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா? யோசித்து பாருங்கள்....

வீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்)

பஸ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஸ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.)

இன்னும் பல...

(என்னை இந்த உள்ளுணர்வு சில‌ வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று "போகாதே!" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதலையாகி விட்டார்கள்).

மற்றது என்னுடைய தொலைபேசியை காப்பாத்தியது.

இதெல்லாம் சின்ன விசயங்கள். நம்பவே முடியாத பல விசயங்கள் நடந்துள்ளன...

இரண்டாம் உலகயுத்தத்தின் உச்சக்கட்ட காலம் அது...

ஜேர்மன் விமானங்கள் லண்டன் நகர்மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தன.

வின்சன்ட் சர்ச்சில் என்பவர் தான் இங்கிலாந்தின் பிரதமர். எவ்வளவு யுத்த நெருக்கடியில் இருந்தாலும் உள்ளுணர்வை மதிக்கும் ஒரு நபர்.

ஒர் நாள் தனது வீட்டிற்கு 3 மந்திரிகளை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்து ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே விமானத்தாக்குதல் ஆரம்பமாகியது. திடீரென கதிரையை விட்டு எழுந்த சர்ச்சில் நேரடியாக சமையல் அறைக்குச்சென்று சிப்பந்திகளிடம் " சாப்பாட்டை டைனிங் ரேபிளில் வைத்து விட்டு.. உடனே பாம் செல்டர் பகுதிக்கு சென்றுவிடுங்கள்..." என கட்டளை இட்டுவிட்டு திரும்பி வந்தார்.

3 நிமிடங்கள் கழிந்தன...

சமையல் அறை மீது குண்டு விழுந்து சமையலறை சுக்குநூறாகியது. சமையலறை ஊழியர்கள் சர்ச்சிலின் கட்டளையால் காப்பாற்றப்பட்டனர்.

திடீரென சென்று எச்சரிக்கை கட்டளை இடும்படி சர்ச்சிலை தூண்டியது எது?... யோசித்து பாருங்கள்...

http://www.paristami...TYzOTUxNDc2.htm

Source : valaakam.blogspot.com

Link to comment
Share on other sites

சாப்பாடு போனால் சமைத்துக் கொள்ளலாம்.. ஊழியர்கள் போனால்??! :unsure: என்கிற கவலையால் இருக்குமோ??!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுணர்வு பல நேரங்களில் என்னைப் காப்பாற்றியுள்ளது.

பூனை குறுக்கலாலை போனால்.... வேறை றோட்டாலை 4,5 கிலோ மீற்றர் தூரம் என்றும் பார்க்காமல், சுத்திப் போய் ஆபத்துக்களை தவிர்த்துள்ளேன்.halloween18.gif

Link to comment
Share on other sites

சாப்பாடு போனால் சமைத்துக் கொள்ளலாம்.. ஊழியர்கள் போனால்??! :unsure:என்கிற கவலையால் இருக்குமோ??!! :lol:

:lol::D

அவருக்கு அப்படி தான் கவலை இருக்குமாக இருந்தாலும் சமையலறையில் குண்டு விழப்போகிறது என்பது எப்படி தெரியும்? அது தான் உள்ளுணர்வு... :icon_idea:

குண்டை வீசுபவன் சொல்லிப்போட்டு வீசினானா? அல்லது எங்கே விழுந்து வெடிக்கப்போகிறது என்று குண்டு தான் சொல்லிபோட்டு வந்ததா? :lol::D

உள்ளுணர்வு பல நேரங்களில் என்னைப் காப்பாற்றியுள்ளது.

பூனை குறுக்கலாலை போனால்.... வேறை றோட்டாலை 4,5 கிலோ மீற்றர் தூரம் என்றும் பார்க்காமல், சுத்திப் போய் ஆபத்துக்களை தவிர்த்துள்ளேன்.halloween18.gif

நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உள்ளுணர்வு என்பது எப்படி ஏற்படுகிறது என்று தெரியாது...எனக்கு சில சந்தர்ப்பங்கள் உள்ளுணர்வு எச்சரித்தபடி நிகழ்ந்திருக்கிறது... இப்போது நினைத்துப்பார்த்தாலும் மிகவும் அதிசயமாக இருக்கிறது இரு வேறுபட்ட அனுபவங்களை இங்கு எடுத்து வருகின்றேன் ஒன்று கண்ணால் பார்த்தபடி இருந்தபோது ஏற்பட்ட உள்ளுணர்வின் எச்சரிப்பு மற்றது கண்ணால் பார்க்காமல் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாதபோது ஏற்பட்ட உள்ளுணர்வு

1 )

கண்ணால் பார்த்தபடி இருக்கும்போது ஏற்பட்ட உள்ளுணர்வின் எச்சரிக்கை அப்போது எனக்கு 7 வயதிருக்கும் என்னுடைய அண்ணன் ஒருவர் பப்பாசிப்பழம் மரத்தில் பறித்துக் கொண்டிருந்தார் அம்மா கீழே நின்று அவரை அவதானித்தபடி பழங்களை ஏந்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த அண்ணனைப்பார்த்து மரம் முறிந்து விழப்போகிறாய் என்றுவிட்டு நான் அப்பால் நகரும்போது உண்மையிலேயே மரம் முறிந்து விழுந்து எனது சகோதரன் அறிவிழந்து போய்விட்டார். அந்த நிகழ்வு எனக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்ததுடன் அம்மாவிடம் ஏராளமான திட்டுகளையும் வாங்க வைத்தது. அன்றிலிருந்து எவருக்கும் ஆபத்து நிகழப் போகிறது என்று உணர்ந்தாலும் அதனை வாய்விட்டுச் சொல்வதில்லை. காரணம் கரி நாக்கு நீ சொல்லியதால்தான் அது நடந்தது என்று என்தலையில் காரணகாரியங்கள் பல இருக்க.. வீண்பழியை கட்டிவிடுவார்கள் என்ற பயமும்.. ஒரு வேளை கரிநாக்கிற்கு அத்தகைய சக்தி இருக்கலாம் என்ற அச்சமும் ஆகும்.

2)

இது இந்திய இராணுவ காலத்தில் கண்ணால் பார்க்காமல் இருக்கும்போது உள்ளுணர்வால் உணர்ந்தது.

என்னுடைய இனனொரு சகோதரன் ஒரு அந்திசாயும் பொழுதில் அவருடைய நண்பனுடன் வெளியே போயிருந்தார். நான் என் வீட்டு வராண்டாவில் இருக்கின்றேன். ஒரு அமானுசமான அமைதிப் பொழுதாக இருக்கிறது. திடீரென்று என்னுடைய சகோதரன் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்படுவதாக மனதில் தோன்றுகிறது. அதே நேரம் எங்கிருந்தோ பல்லியும் சொல்கிறது... அம்மாவிடம் எனது உள்ளுணர்வின் எச்சரிப்பை சொல்வதற்குப் பயம். ஏற்கனவே எனது நாவினால் வாங்கிய திட்டுகள் ஞாபகத்தில் இருந்ததால் அப்படியே மௌனமாகி விட்டேன் கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து நிமிடம் கழித்து எமது அயலவர் ஒருவர் ஓடிவந்து எனது அண்ணனையும் , நண்பனையும் இந்திய இராணும் கைது செய்ததாக சொன்னார். கைது செய்யப்பட்ட எனது சகோதரன் நீண்ட காலம் kks முகாமில் அடைக்கப்பட்டார்.

ஏன் எனக்கு அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது என்று இன்றுவரை என்னால் அறிய முடியவில்லை.....

ஒருக்கால் முன்யென்மத்தில் நான் என்னவாக இருந்திருப்பேன் என்று அறியவேண்டும் :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

கண்ணால் பார்த்தபடி இருக்கும்போது ஏற்பட்ட உள்ளுணர்வின் எச்சரிக்கை அப்போது எனக்கு 7 வயதிருக்கும் என்னுடைய அண்ணன் ஒருவர் பப்பாசிப்பழம் மரத்தில் பறித்துக் கொண்டிருந்தார் அம்மா கீழே நின்று அவரை அவதானித்தபடி பழங்களை ஏந்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த அண்ணனைப்பார்த்து மரம் முறிந்து விழப்போகிறாய் என்றுவிட்டு நான் அப்பால் நகரும்போது உண்மையிலேயே மரம் முறிந்து விழுந்து எனது சகோதரன் அறிவிழந்து போய்விட்டார். அந்த நிகழ்வு எனக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்ததுடன் அம்மாவிடம் ஏராளமான திட்டுகளையும் வாங்க வைத்தது. அன்றிலிருந்து எவருக்கும் ஆபத்து நிகழப் போகிறது என்று உணர்ந்தாலும் அதனை வாய்விட்டுச் சொல்வதில்லை. காரணம் கரி நாக்கு நீ சொல்லியதால்தான் அது நடந்தது என்று என்தலையில் காரணகாரியங்கள் பல இருக்க.. வீண்பழியை கட்டிவிடுவார்கள் என்ற பயமும்.. ஒரு வேளை கரிநாக்கிற்கு அத்தகைய சக்தி இருக்கலாம் என்ற அச்சமும் ஆகும்.

நன்றி அக்கா உங்கள் பகிர்வுக்கு....

நாக்கில் கருப்பு இருப்போர் கூறினால் இப்படி அசம்பாவிதம் நடப்பது உண்மையே... நான் பலரை அவதானித்திருக்கிறேன்....

அது திட்டுவதாக,பொறாமைப்படுவதாக கூட இருக்கலாம்...

  • உதாரணமாக... வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒருவரை நினைத்து அவருக்கு இன்று எதுவும் ஒழுங்காக நடக்க கூடாது என்று உண்மையிலேயே மனதில் திட்டினால் அல்லது அவரிடம் நேராக நீங்கள் நினைத்தது நடக்காது என்று கூறினால் அவர் போன காரியம் வெற்றியளிக்காது....
  • வெளியே போக இருப்பவரை போக வேண்டாம் என்று கூறிய பின் போனால் அவர் நினைத்த காரியம் நடக்காது..
  • அதே போல் நல்ல வசதியுள்ளவரை பார்த்து பொறாமைப்பட்டால் அவர் பின் பல கஸ்ரங்களை அனுபவிப்பார்.
  • அல்லது உடல் நிலைமை நன்றாக இருக்கும் ஒருவரை பார்த்து பொறாமைப்பட்டால் அவருக்கு கை, கால் முறிந்தோ அல்லது உடல் சம்பந்தமாக ஏதாவது நடக்கும்...

இது நான்கும் நான் பல தடவை பலரில் நேரில் பார்த்திருக்கிறேன்...

( நான் கூடுதலாக நாக்கில் கருப்பு இருப்பவர்களுடன் வீண் விவாதம் வைத்துக்கொள்வதில்லை.... ஏனென்றால் அவர்கள் நல்ல விடயங்கள் சொல்லி நடக்குமோ இல்லையோ சாபம் மாதிரி ஏதாவது சொன்னால் நடந்து விடும்... :D )

அதனால் தான் உங்கள் வீட்டில் அப்படி கூறியிருக்கிறார்கள்...

ஆனால் நீங்கள் பொறாமைப்பட்டோ சாபம் போட்டோ உங்கள் அண்ணாவுக்கு அப்படி நடக்கவில்லை...

உங்கள் உள்ளுணர்வு அப்படி அறிவித்திருக்கிறது. எனினும் கரி நாக்குள்ளவர்கள் பற்றி நான் மேலே கூறியபடி தான் அநேக பேர் அறிந்து வைத்திருப்பதால் உங்கள் உள்ளுணர்வை புரிந்து கொள்ளும் தன்மை மற்றவர்களுக்கு வராது... :(

Link to comment
Share on other sites

அண்ணைமார் பாவம்.. :D

Link to comment
Share on other sites

அண்ணைமார் பாவம்.. :D

ஆண்களிலும் தான் கரி நாக்கு உள்ளவர்கள் உள்ளார்கள்... :D நான் பார்த்த பலரில் அவர்களும் உள்ளடங்குவார்கள்..... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுணர்வை நான் நம்புகிறேன்...நான் சில நேரங்களில் முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளுணர்வை வைத்து முடிவு எடுத்திருக்கிறேன் அது பல நேரங்களில் சரியாக இருந்தது...யாழில் கூட சில பேரோட கதைக்காதை என உள்ளுணர்வு தடுக்கும் :lol: ...எனக்கு நாக்கில் கரியில்லை :D ஆனால் நான் எதாவது சொன்னால் எதிராய் தான் போகுதாம்[நண்பர் சொன்னது]ஆனால் சத்தியமாய் மனதில மற்றவர் மேல் எரிச்சலோ,பொறாமையோ வைத்துக் கொண்டு சொன்னதில்லை :(

Link to comment
Share on other sites

உள்ளுணர்வை நான் நம்புகிறேன்...நான் சில நேரங்களில் முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளுணர்வை வைத்து முடிவு எடுத்திருக்கிறேன் அது பல நேரங்களில் சரியாக இருந்தது...யாழில் கூட சில பேரோட கதைக்காதை என உள்ளுணர்வு தடுக்கும் :lol: ...எனக்கு நாக்கில் கரியில்லை :Dஆனால் நான் எதாவது சொன்னால் எதிராய் தான் போகுதாம்[நண்பர் சொன்னது]ஆனால் சத்தியமாய் மனதில மற்றவர் மேல் எரிச்சலோ,பொறாமையோ வைத்துக் கொண்டு சொன்னதில்லை :(

நாம் கதைக்கும் விதம் சிலவேளை பிழையாக அமைவதும் இதற்கு காரணம்... (இவை எமக்கு பிழை போல் தெரிவதில்லை... நாம் சரியென நினைத்து சொன்னாலும் சொல்லும் விதம் வேறு அர்த்தத்தை சுட்டி நிற்கும்...)

அதே நேரம் விளங்கிக்கொள்பவர்களின் புரிந்துணர்வு தன்மையிலும் தங்கியிருக்கிறது... அதாவது நாம் சரியாக சொன்னாலும் விளங்கிக்கொள்பவர் அதனை வேறு அர்த்தத்தில் விளங்கிக்கொள்ளல்... :)

Link to comment
Share on other sites

நான் முன்னரும் சொல்லி இருக்கின்றேன் என நினைக்கின்றேன்... இன்று வரைக்கும் நான் உயிரோட இருப்பதற்கான காரணமே என் உள்ளுணர்வு தான். இன்று வரைக்கும் என் உள்ளுணர்வின் வழியில் தான் அநேகமானவற்றை செய்வது. மூட நம்பிக்கைகள் எவற்றையும் பின் பற்றாமல் விட்டதுக்கும் என் உள்ளுணர்வுதான் காரணம் என்று நம்புகின்றேன்.

நன்றி அண்ணா உங்கள் கருத்து பகிர்வுக்கு.... உள்ளுணர்வை பின் பற்றினால் நிச்சயம் சில பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம்.. :) :)

Link to comment
Share on other sites

நன்றி அக்கா உங்கள் பகிர்வுக்கு....

நாக்கில் கருப்பு இருப்போர் கூறினால் இப்படி அசம்பாவிதம் நடப்பது உண்மையே... நான் பலரை

உங்கள் உள்ளுணர்வு அப்படி அறிவித்திருக்கிறது. எனினும் கரி நாக்குள்ளவர்கள் பற்றி நான் மேலே கூறியபடி தான் அநேக பேர் அறிந்து வைத்திருப்பதால் உங்கள் உள்ளுணர்வை புரிந்து கொள்ளும் தன்மை மற்றவர்களுக்கு வராது... :(

எவர் திட்டியும் எவருக்கும் எதுவும் ஆகாது கா.. கரிநாக்கு என்பது மருத்துவ ரீதியாக அணுகப்பட வேண்டியது; மூட நம்பிக்கையினூடாக இல்லை. எமக்கு எப்பவும் கருப்பு நிறத்தை மட்டமாகவும், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தை மேன்மையாகவும் அணுகும் அடிமை மனப்பான்மையில் இருந்து தான் இப்படியாய சிந்தனைகள் உருவாகின. கருத்த மச்சம் என்பதையே அபசகுனமாக கருதும் போக்கும் இப்படியான ஒன்றுதான்.

http://en.wikipedia.org/wiki/Black_hairy_tongue

Link to comment
Share on other sites

எவர் திட்டியும் எவருக்கும் எதுவும் ஆகாது கா.. கரிநாக்கு என்பது மருத்துவ ரீதியாக அணுகப்பட வேண்டியது; மூட நம்பிக்கையினூடாக இல்லை. எமக்கு எப்பவும் கருப்பு நிறத்தை மட்டமாகவும், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தை மேன்மையாகவும் அணுகும் அடிமை மனப்பான்மையில் இருந்து தான் இப்படியாய சிந்தனைகள் உருவாகின. கருத்த மச்சம் என்பதையே அபசகுனமாக கருதும் போக்கும் இப்படியான ஒன்றுதான்.

http://en.wikipedia....ck_hairy_tongue

அண்ணா, எனக்கும் மூட நம்பிக்கைகள் இல்லை.. உங்களை மாதிரி தான் முன்னர் நான் கூறி வந்துள்ளேன்... ஆனால் இந்த விடயம் மட்டும் நேரில் பல தடவை கண்டிருக்கிறேன்... அதனால் தான் அப்படி கூறினேன்... :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கரிநா என்பதில் பெரிதாக பலிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் உள்ளுணர்வு என்பது மிகுந்த ஆச்சரியத்திற்கு உரியதாக இருக்கிறது..எப்படி அத்தகைய உள்ளுணர்வு ஏற்படுகிறது எப்படி அத்தகைய எண்ணங்கள் எம்மை ஆளுகின்றன...வியப்பிற்கு உரியதாகவே இருக்கின்றன....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளை நிமிடத்திற்கு எத்தனையோ செய்திகளை புலன்களின் உதவியுடன் ஏற்றுமதி

இறக்குமதி செய்கின்றது.

ஒரு செயலை நாம் செய்யும்போதோ அல்லது அதை உணரும்போதோ

எமது மூளை பல கோணங்களிலும் அதனைப் பற்றிச் சிந்திக்கின்றது.

அப்படிச் சிந்திப்பதில் ஒரு சில செய்திகளை மட்டுமே நாம் பேசுவதன் மூலம்

வெளியே மற்றவர்களுக்கு அறியச் செய்கின்றோம்.

பப்பா மரம் எளிதில் முறிவடையும் என்பது சகலரும் அறிந்த விடயம்.

நிறை தாங்காமல் அது முறியும் என்பதை உணர்பவர்களும் அதிகம்.

நாங்கள் நினைப்பதும் உணர்வதும் எல்லாம் நடந்து விடுகின்றனவா? இல்லையே.

சிலவிடயங்கள் மட்டும் எதேச்சையாக நடந்து விடுகின்றன.

நாங்களும் அந்த நிகழ்வையே பெரிதுபடுத்துவதால் எதோ ஒரு மாயைக்குள் நிற்பதுபோல் இருக்கும்.

இரவு நேரங்களில் காவற்துறையின் கெடுபிடிகள் எப்போதுமே அதிகம்.

நாங்கள் ஒரு சிறிய தவறுடன் வாகனத்தை எடுத்துச் செல்லும் போது காவற்துறை வீதியில் எங்களை மறித்தால் என்ன செய்வது என்ற யோசனையுடனேதான் வாகனத்தைச் செலுத்துவோம்.

அப்போது வழமையான காவற்துறையின் கண்காணிப்பில் நாங்கள் அகப்படுவதும் இயல்பானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நானும் உங்களைப் போல் பப்பா மரம் பலமில்லாத மரம் என்று அதனால் நான் விழப்போகிறாய் என்று சொல்லியது காட்சிகளை சாட்சியாக வைத்துச் சொல்லியிருக்கலாம் ஆனால் கைது என்பது எப்படி எனது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லாமல் இருக்கும்போது உணர்வது சாத்தியமானது?

Link to comment
Share on other sites

எனக்கும் கரிநா என்பதில் பெரிதாக பலிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் உள்ளுணர்வு என்பது மிகுந்த ஆச்சரியத்திற்கு உரியதாக இருக்கிறது..எப்படி அத்தகைய உள்ளுணர்வு ஏற்படுகிறது எப்படி அத்தகைய எண்ணங்கள் எம்மை ஆளுகின்றன...வியப்பிற்கு உரியதாகவே இருக்கின்றன....

மனித மனம் அசாத்திய திறமை வாய்ந்த ஒன்றுதானே. மனம் பற்றிய ஆராச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளால் மனித மனம் பற்றி 25 வீதம் கூட இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லி வருகின்றனர். மிருகங்கள் பறவைகளுக்கு கூட இந்த உள்ளுணர்வு இருப்பதாக கூறுகின்றனர். சாவு நடக்க போகுது என்றால் அந்த வீட்டில் புறாக்கள் இருந்தால் அவற்றில் பல பறந்து போய் விடும் (இதைத் தான் ஊரில் புறா வளர்த்தால் தரித்திரம் என்று மாற்றிச் சொல்லுவார்கள்).

டுபாயில் இருக்கும் போது ஒரு நாள் அம்மாவுக்கு கொஞ்சம் அதிகமாக காசு அனுப்ப வேண்டிய தேவை இருந்தது. காசு அனுப்பி விட்டு இரவு வந்து படுத்து விட்டேன். நடு இரவில் திடீரென அனுப்பிய பண ரசீத்தில் ஒரு பிழை இருப்பதாக உணர்வு வந்தது. உடனே எடுத்துப் பார்த்தால்... அதில் தவறு இருந்தது. காலையில் எழும்பி Money transfer agency உடன் தொடர்பு கொண்டு அனுப்பின பணத்தை நிறுத்தச் சொல்லி பிழையை திருத்தி மீண்டும் அனுப்பினேன். சாமத்தில் விழிப்பு வந்ததும் மனம் அந்த தவறை உடனே சுட்டிக் காட்டியதும் எப்படி என்று தெரியவில்லை,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலமுறை இப்படி எச்சரிக்கைகள் எனது வாழ்வில் வந்துள்ளன.

உதாரணமாக

எனது மகனுக்கு 3வயது இருக்கும். வேலையால் வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். வங்கியால் மாதாதம் வரும் எனது கணக்கு பற்றிய விபரக்கடிதம் வந்திருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த என்னிடம் அவன் இதை பாருங்கள் என நீட்டினான். வையடா பின்னர் பார்க்கலாம் என்றுவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த என்னிடம் 3 தடவைக்கு மேல் அக்கடிதத்தை நீட்டினான். பொறி ஓன்று தட்டியது. எடுத்து உடைத்துப்பாத்தால் நான் எழுதாத 5000 பிராங்குக்கான செக் ஒன்று எனது கணக்கில் வந்திருந்தது. உடனடியாக வங்கியுடன் தொடர்பு கொண்டபோது இன்னும் அது பாசாகவில்லை. தடுக்கமுடியும் என்றனர். உடனடியாகவே தடுத்துவிட்டேன். இப்பவும் மகன் சொல்லுவான் அப்பா எனக்கு 5000 தரவேணும் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நானும் உங்களைப் போல் பப்பா மரம் பலமில்லாத மரம் என்று அதனால் நான் விழப்போகிறாய் என்று சொல்லியது காட்சிகளை சாட்சியாக வைத்துச் சொல்லியிருக்கலாம் ஆனால் கைது என்பது எப்படி எனது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லாமல் இருக்கும்போது உணர்வது சாத்தியமானது?

ஒருவிடயம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும்போதுஅவற்றைப்பற்றி நினைப்பதும் உணர்வதும் நிகழ்தகவு முறைப்படி அதிகமே.

Link to comment
Share on other sites

நல்ல எச்சரிக்கை உணர்வுண்டு.

அதையும்விட அனுபவத்தில் கிடைக்கும் நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டு செயல்படுவேன்.

மற்றும்படி அமானுஷ்யமாக ஏதும் நடந்ததாக ஞாபகமில்லை.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தினம் ஒரு இக்கட்டான நிலையில் இருந்து உயிர் தப்பி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..அது என் உள் உணர்வு உணர்தியதால் தான் அந்த ஒரு சூழ் நிலையில் இருந்து உயிர் தப்பினேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.காலையில் அம்மா கோயில் தேர் ஒன்று நடை பெறுவதால் அங்கு போய் விட்டா.நான் கணணியில் யாழிலும்,முகநூலிமாக இருந்தேன். தந்தையார் குளியறைக்குள் குளித்துக் கொண்டு இருந்தார்..திடீர் என்று யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது பேசாமல் இருந்தேன்.திரும்ப முயற்சித்தார்கள்..இதற்குள் எனக்கு ஒரு நினைவு வந்துட்டு என்னிடமும்,அப்பாவிடமும் தான் வீட்டுக் கதவு திறப்பு இருப்பது வளக்கம்..யாரா இருக்கும் என்ற கேள்வி எழுந்தது மெதுவாக கணணியை விட்டு எழுந்து கதவடிக்கு போனேன்.அங்கே கதவு திறக்க முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது..யார்...............???புரிந்து கொண்டேன் திருடர்களின் கை வரிசை..

உள் பக்கத்தால் 3 விதமாக பூட்டிக் கொள்ளலாம் வெளிப்புறமாக ஒன்று மட்டுமே..கதவைப் பார்த்தால் அப்பா வெளியில் போய் விட்டு வந்து ஒரு லொக் மட்டுமே போட்டு விட்டு குளியறைக்குள் போய் வி;ட்டார்..மிகு 2ம் லொக் பண்ணுப் படாமலே கிடந்தது..ஆண்டவா என்ன ஒரு சோதனை ஆரம்பம் என்று நினைத்து கொண்டு என்னால் முடிந்த மட்டுக்கு கதவை இறுக்கி தள்ளிக் கொண்டு மிகுதி 2 லொக்கையும் போட்டு விட்டு அதில் நின்றே அப்பா,அம்மா, தம்பி என்று கத்தினேன்..என் கூப்பிட்ட குரலுக்கு யாருமே வர இல்லைக் காரணம் ....அப்பா குளி;த்துக் கொண்டு இருந்தார்..அம்மா வீட்டில் இல்லை.தம்பி வேறு இடத்தில் வசிப்பவர்..என் அந்தரக் கொடுமை எல்லாரையும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தது....கடசியாக குளியறைக் கதவில் போய் கையால் அடித்த சத்ததத்தில் அப்பா என்ன என்று கேட்டார்..விசத்தை சொல்லி வெளியில் கூப்பிட்டு விட்டு நானும் தந்தையுமாக கதவைத் திறந்து யாராக இருக்கும் அறிய முற்பட்டால் உண்மையாகவே கறுப்பு இன திருடன் தான்..எங்களைக் கண்டதும் ஓடிப் போய் எலிவேட்டருக்குள் புகுந்து விட்டான்..அந்த நேரம் தொடங்கிய பதற்றம் இன்னும் முடிய இல்லை..இப்படிம் ஆபத்துக்கள் வருகிறது என்பதற்காக சொல்ல வந்தேன்..:( :(

Link to comment
Share on other sites

இன்றைய தினம் ஒரு இக்கட்டான நிலையில் இருந்து உயிர் தப்பி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..அது என் உள் உணர்வு உணர்தியதால் தான் அந்த ஒரு சூழ் நிலையில் இருந்து உயிர் தப்பினேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.காலையில் அம்மா கோயில் தேர் ஒன்று நடை பெறுவதால் அங்கு போய் விட்டா.நான் கணணியில் யாழிலும்,முகநூலிமாக இருந்தேன். தந்தையார் குளியறைக்குள் குளித்துக் கொண்டு இருந்தார்..திடீர் என்று யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது பேசாமல் இருந்தேன்.திரும்ப முயற்சித்தார்கள்..இதற்குள் எனக்கு ஒரு நினைவு வந்துட்டு என்னிடமும்,அப்பாவிடமும் தான் வீட்டுக் கதவு திறப்பு இருப்பது வளக்கம்..யாரா இருக்கும் என்ற கேள்வி எழுந்தது மெதுவாக கணணியை விட்டு எழுந்து கதவடிக்கு போனேன்.அங்கே கதவு திறக்க முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது..யார்...............???புரிந்து கொண்டேன் திருடர்களின் கை வரிசை..

உள் பக்கத்தால் 3 விதமாக பூட்டிக் கொள்ளலாம் வெளிப்புறமாக ஒன்று மட்டுமே..கதவைப் பார்த்தால் அப்பா வெளியில் போய் விட்டு வந்து ஒரு லொக் மட்டுமே போட்டு விட்டு குளியறைக்குள் போய் வி;ட்டார்..மிகு 2ம் லொக் பண்ணுப் படாமலே கிடந்தது..ஆண்டவா என்ன ஒரு சோதனை ஆரம்பம் என்று நினைத்து கொண்டு என்னால் முடிந்த மட்டுக்கு கதவை இறுக்கி தள்ளிக் கொண்டு மிகுதி 2 லொக்கையும் போட்டு விட்டு அதில் நின்றே அப்பா,அம்மா, தம்பி என்று கத்தினேன்..என் கூப்பிட்ட குரலுக்கு யாருமே வர இல்லைக் காரணம் ....அப்பா குளி;த்துக் கொண்டு இருந்தார்..அம்மா வீட்டில் இல்லை.தம்பி வேறு இடத்தில் வசிப்பவர்..என் அந்தரக் கொடுமை எல்லாரையும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தது....கடசியாக குளியறைக் கதவில் போய் கையால் அடித்த சத்ததத்தில் அப்பா என்ன என்று கேட்டார்..விசத்தை சொல்லி வெளியில் கூப்பிட்டு விட்டு நானும் தந்தையுமாக கதவைத் திறந்து யாராக இருக்கும் அறிய முற்பட்டால் உண்மையாகவே கறுப்பு இன திருடன் தான்..எங்களைக் கண்டதும் ஓடிப் போய் எலிவேட்டருக்குள் புகுந்து விட்டான்..அந்த நேரம் தொடங்கிய பதற்றம் இன்னும் முடிய இல்லை..இப்படிம் ஆபத்துக்கள் வருகிறது என்பதற்காக சொல்ல வந்தேன்.. :( :(

அக்கா, நீங்கள் தப்பி விட்டதில் சந்தோசம். ஒருவர் என்பதால் பயந்து ஓடி விட்டார். பலர் வந்திருந்தால் உங்களை தள்ளி விட்டு உள்ளே வந்திருப்பார்கள். நல்ல வேளை...

எனினும் இனி அவதானமாக இருங்கள். கதவுகளை சரியாக பூட்டி வைத்திருங்கள். கதவு பூட்டியிருந்தால் கூட உடைத்துக்கொண்டு வருபவர்களும் உண்டு. வீட்டிலுள்ளவர்கள் வெளியில் செல்லும் நேரம், வீட்டிற்கு திரும்பி வரும் நேரம் என்பவற்றை சிலவேளை அவதானிப்பார்கள். எதற்கும் நீங்கள் அவதானமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

இன்றைய தினம் ஒரு இக்கட்டான நிலையில் இருந்து உயிர் தப்பி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..அது என் உள் உணர்வு உணர்தியதால் தான் அந்த ஒரு சூழ் நிலையில் இருந்து உயிர் தப்பினேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.காலையில் அம்மா கோயில் தேர் ஒன்று நடை பெறுவதால் அங்கு போய் விட்டா.நான் கணணியில் யாழிலும்,முகநூலிமாக இருந்தேன். தந்தையார் குளியறைக்குள் குளித்துக் கொண்டு இருந்தார்..திடீர் என்று யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது பேசாமல் இருந்தேன்.திரும்ப முயற்சித்தார்கள்..இதற்குள் எனக்கு ஒரு நினைவு வந்துட்டு என்னிடமும்,அப்பாவிடமும் தான் வீட்டுக் கதவு திறப்பு இருப்பது வளக்கம்..யாரா இருக்கும் என்ற கேள்வி எழுந்தது மெதுவாக கணணியை விட்டு எழுந்து கதவடிக்கு போனேன்.அங்கே கதவு திறக்க முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது..யார்...............???புரிந்து கொண்டேன் திருடர்களின் கை வரிசை..

உள் பக்கத்தால் 3 விதமாக பூட்டிக் கொள்ளலாம் வெளிப்புறமாக ஒன்று மட்டுமே..கதவைப் பார்த்தால் அப்பா வெளியில் போய் விட்டு வந்து ஒரு லொக் மட்டுமே போட்டு விட்டு குளியறைக்குள் போய் வி;ட்டார்..மிகு 2ம் லொக் பண்ணுப் படாமலே கிடந்தது..ஆண்டவா என்ன ஒரு சோதனை ஆரம்பம் என்று நினைத்து கொண்டு என்னால் முடிந்த மட்டுக்கு கதவை இறுக்கி தள்ளிக் கொண்டு மிகுதி 2 லொக்கையும் போட்டு விட்டு அதில் நின்றே அப்பா,அம்மா, தம்பி என்று கத்தினேன்..என் கூப்பிட்ட குரலுக்கு யாருமே வர இல்லைக் காரணம் ....அப்பா குளி;த்துக் கொண்டு இருந்தார்..அம்மா வீட்டில் இல்லை.தம்பி வேறு இடத்தில் வசிப்பவர்..என் அந்தரக் கொடுமை எல்லாரையும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தது....கடசியாக குளியறைக் கதவில் போய் கையால் அடித்த சத்ததத்தில் அப்பா என்ன என்று கேட்டார்..விசத்தை சொல்லி வெளியில் கூப்பிட்டு விட்டு நானும் தந்தையுமாக கதவைத் திறந்து யாராக இருக்கும் அறிய முற்பட்டால் உண்மையாகவே கறுப்பு இன திருடன் தான்..எங்களைக் கண்டதும் ஓடிப் போய் எலிவேட்டருக்குள் புகுந்து விட்டான்..அந்த நேரம் தொடங்கிய பதற்றம் இன்னும் முடிய இல்லை..இப்படிம் ஆபத்துக்கள் வருகிறது என்பதற்காக சொல்ல வந்தேன்.. :( :(

உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றி சகோதரி.

எப்போதும் நாம் வீட்டில் ,இருக்கும்போதோ ,வெளியில் செல்லும்போதோ கதவினை பாதுகாப்பாக பூட்டுவதே புத்திசாலித்தனம்............நான் இருக்கும் நகரத்திலும்,எமது தமிழ் உறவு ஒருவருக்கு இப்படி நடந்தது.....துப்பாக்கியால் திருடர்கள் அவரை சுட்டார்கள் .........தெய்வாதீனமாக உயிர் தப்பிவிட்டார்........நாம் எப்போதும் அவதானமாக இருப்போம். வெள்ளம் வருமுன்

அணைகட்டுங்கள் .............கள்வர் வருமுன் எச்சரிக்கையாய் இருங்கள்............ :rolleyes:

Link to comment
Share on other sites

இன்றைய தினம் ஒரு இக்கட்டான நிலையில் இருந்து உயிர் தப்பி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..அது என் உள் உணர்வு உணர்தியதால் தான் அந்த ஒரு சூழ் நிலையில் இருந்து உயிர் தப்பினேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.காலையில் அம்மா கோயில் தேர் ஒன்று நடை பெறுவதால் அங்கு போய் விட்டா.நான் கணணியில் யாழிலும்,முகநூலிமாக இருந்தேன். தந்தையார் குளியறைக்குள் குளித்துக் கொண்டு இருந்தார்..திடீர் என்று யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது பேசாமல் இருந்தேன்.திரும்ப முயற்சித்தார்கள்..இதற்குள் எனக்கு ஒரு நினைவு வந்துட்டு என்னிடமும்,அப்பாவிடமும் தான் வீட்டுக் கதவு திறப்பு இருப்பது வளக்கம்..யாரா இருக்கும் என்ற கேள்வி எழுந்தது மெதுவாக கணணியை விட்டு எழுந்து கதவடிக்கு போனேன்.அங்கே கதவு திறக்க முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது..யார்...............???புரிந்து கொண்டேன் திருடர்களின் கை வரிசை..

உள் பக்கத்தால் 3 விதமாக பூட்டிக் கொள்ளலாம் வெளிப்புறமாக ஒன்று மட்டுமே..கதவைப் பார்த்தால் அப்பா வெளியில் போய் விட்டு வந்து ஒரு லொக் மட்டுமே போட்டு விட்டு குளியறைக்குள் போய் வி;ட்டார்..மிகு 2ம் லொக் பண்ணுப் படாமலே கிடந்தது..ஆண்டவா என்ன ஒரு சோதனை ஆரம்பம் என்று நினைத்து கொண்டு என்னால் முடிந்த மட்டுக்கு கதவை இறுக்கி தள்ளிக் கொண்டு மிகுதி 2 லொக்கையும் போட்டு விட்டு அதில் நின்றே அப்பா,அம்மா, தம்பி என்று கத்தினேன்..என் கூப்பிட்ட குரலுக்கு யாருமே வர இல்லைக் காரணம் ....அப்பா குளி;த்துக் கொண்டு இருந்தார்..அம்மா வீட்டில் இல்லை.தம்பி வேறு இடத்தில் வசிப்பவர்..என் அந்தரக் கொடுமை எல்லாரையும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தது....கடசியாக குளியறைக் கதவில் போய் கையால் அடித்த சத்ததத்தில் அப்பா என்ன என்று கேட்டார்..விசத்தை சொல்லி வெளியில் கூப்பிட்டு விட்டு நானும் தந்தையுமாக கதவைத் திறந்து யாராக இருக்கும் அறிய முற்பட்டால் உண்மையாகவே கறுப்பு இன திருடன் தான்..எங்களைக் கண்டதும் ஓடிப் போய் எலிவேட்டருக்குள் புகுந்து விட்டான்..அந்த நேரம் தொடங்கிய பதற்றம் இன்னும் முடிய இல்லை..இப்படிம் ஆபத்துக்கள் வருகிறது என்பதற்காக சொல்ல வந்தேன்.. :( :(

இக்கட்டில் இருந்து தப்பிக் கொண்டமைக்கு சந்தோசம்

இதுக்கும் உள்ளுணர்வுக்கும் சம்பந்தமில்லை என நினைக்கின்றேன். உங்களைக் காப்பாற்றியது உங்கள் அறிவு. அதுக்குத் துணை புரிகின்ற செய்திகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.