Sign in to follow this  
akathy

உள்ளத்தில் உள்ள தெய்வீகத்தின் ஒளி

Recommended Posts

ஒவ்வொரு நாளும் கழிகின்றது. அது மீண்டும் மீண்டும் வரப்போவதில்லை. இன்னுமொரு நாள் கிடைக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள், ஆனால் அந்த நாளும் வந்து போய்விடும். நீங்களோ தினமும் பிறக்கின்றீர்கள். தினமும் இறக்கிறீர்கள். அது தினமும் மட்டும் நடைபெறவில்லை. ஒவ்வொரு மூச்சிலும் நடைபெறுகின்றது. மூச்சு வருகின்றது, போகின்றது. இந்த நுண்மையான மூச்சு வந்து போகும் வரை நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். உங்களால் சிரிக்கவும் முடியும். அழவும் முடியும். இந்த மூச்சு வந்து போவதால்தான் உங்களது உலகில் எல்லாமே நடைபெறுகின்றன. உங்களது முழு வாழ்வும், இதுதான் நடைபெறப் போகின்றது. மூச்சு வரப்போகின்றது, மூச்சு போகப் போகின்றது. நீங்கள் அதனை புரிந்து கொண்டீர்களா?

இது உங்களது மதத்தை பற்றியதோ, ஒரு வேறுபட்ட வழி பற்றியதோ அல்லது உங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு வழியோ அல்ல. இந்த உலகத்தின் பிரச்சனைகள் பற்றியதும் அல்ல. கபீர் எனும் ஞானி பல காலங்களுக்கு முன்னர் ஒரு விடயத்தை கூறினார்.

“சமுத்திரத்தின் உள்ளே நீர்த்துளிகள் உள்ளதை சகலரும் அறிவார்கள். ஆனால் நீர்த்துளியின் உள்ளே சமுத்திரம் அடங்கியுள்ளது. வெகு சிலரே இதனை அறிவார்கள்.” என அவர் கூறினார். பல கோடி துளிகள் சமுத்திரத்தில் உள்ளன. அது ஒரு புதினம் அல்ல. எனவே நீர்த்துளியின் உள்ளே உள்ள சமுத்திரத்தை பற்றி உங்களுக்கு கூறுவது மிகவும் நன்றாக இருக்கும்.

ஏனெனில் நீங்கள் தான் அந்த துளி. முடிவில்லாத, வரையறுக்க முடியாத, எண்ணங்களுக்கு அப்பாற்;பட்டதுதான் அந்த சமுத்திரம். அதனை மனிதன் புரிந்து கொள்ள முடியாது. அதனைப் பற்றி கற்பனை செய்யலாம். ஆனால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அந்த சமுத்திரத்தை கண்டு கொள்ள விரும்பினால் அதற்கு ஒரு வழி இருக்கிறது.

நீங்கள்தான் அந்தத் துளி. அத் துளியின் உள்ளே ஒரு சமுத்திரமே உள்ளது. தெய்வீகத்தின் ஒரு பொறி உங்களின் உள்ளே உள்ளது. இந்த அழகிய கதை உங்களைப் பற்றியது. உயிர் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றியது. தெய்வீகம் என் உள்ளே உள்ளது என்று இப்பொழுது எனக்கு தெரியும். அது அழகானது. ஆனந்தமானது. அதனாலே நீங்களும் அந்த உணர்வை உணர வேண்டும் என விரும்புகிறேன்.

அந்த சமுத்திரம் நம் உள்ளே உள்ளது. நாம் எதனை தேடினோமோ, எதனைத் தேடுகின்றோமோ, உண்மையிலே எது நமது வாழ்விலே தேவையோ அது நம் உள்ளே உள்ளது. நீங்களும் அதனை அனுபவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். யோசனையில் அல்ல. அனுபவிக்க வேண்டும். அனுபவத்திற்கும் யோசனைக்கும் என்ன வித்தியாசம்? தெருவிலே நடந்து செல்லும் போது பசி எடுக்கின்றது. உங்களுக்கு பசி ஏற்பட்டுள்ளது என தெரிகின்றது. அப்பொழுது ஒரு எண்ணம் ஏற்படுகிறது. சமோசா அல்லது உருளைக்கிழங்கு பொரியல் உண்ணவேண்டும் என எண்ணம் ஏற்படுகின்றது. இதுதான் எண்ணம். இந்த எண்ணுதல் மட்டும் போதுமானதா? இல்லை. மேலும் பசி ஏற்பட போகிறது. சில நிமிடங்களில் உங்களது வயிறு உணவை உண்ணு என்கிறது. வெறுமனே யோசிப்பது மட்டுமல்ல, உணவை உண்ண வேண்டும். மேலும் யோசிக்க யோசிக்க வாயில் நீர் ஊறும். வெறுமனே யோசிக்காதே சாப்பிடு என்று வயிறு கூறுகிறது. அதுபோல வெறுமனே படிக்காதீர்கள் உணருங்கள். இதனைத்தான் நான் கூற முயற்சிக்கிறேன்.

ஒரு வைத்தியரின் வலிமை அவரது அத்தாட்சி பத்திரத்தில் இல்லை. அவராலே உங்களை சுகமாக்க முடியுமா இல்லையா என்பதில்தான் தங்கி உள்ளது. எண்ணக்கருத்துக்களும், வரைவிலக்கணங்களும் இருப்பது பரவாயில்லை. ஆனால் நீங்கள் உயிருடன் இருக்கும் காரணத்தினால் நீங்கள் உயிருள்ள அனுபவத்தை உணரவேண்டும். மேலே பார்த்து “கடவுளே, கடவுளே” என்று கூறுவது போதுமானது அல்ல. உங்களின் உள்ளத்திலே உள்ளதை நீங்கள் உணரவேண்டும்.

நீங்கள் ஆனந்தத்தை விரும்புகிறீர்கள். சிறு வயதில் இருந்தே விரும்பி வந்திருக்கின்றீர்கள். சந்தோசமில்லாத பொழுது அழுதீர்கள். சந்தோசமான போது அமைதியாக இருந்தீர்கள் அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினீர்கள். இதனை யார் உங்களுக்கு கற்றுத்தந்தது? உங்களது தந்தையோ அல்லது தாயோ இதனை உங்களுக்கு கற்றுத்தரவில்லை. இது இயல்பானது. இதுதான் உங்களது மனித இயல்பு. இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்த உண்மையான ஆனந்தம் இந்த வாழ்விலே கிடைக்க முடியும். உங்களின் உள்ளே உள்ள உண்மை பொருளை நீங்கள் கண்டு கொள்ளும் பொழுது தான் அது கிடைக்க முடியும்.

எண்ணக் கருத்துக்களின் வலையிலே சிக்காதீர்கள். இரண்டு பேர் இருந்து கடவுளைப் பற்றி கதைப்பார்கள். கடவுள் முடிவில்லாதவர் என்பார்கள். முடிவிலி என்றால் என்ன என உங்களுக்கு தெரியுமா? முடிவிலி என்பது ஒரு வார்த்தை அவ்வளவு தான். ஆதி அந்தம் இல்லாதது என்ற வரைவிலக்கணம் உள்ளது. முடிவிலி என கூறுவது இலகு. ஆனால் அதனை புரிந்து கொள்வது கடினம். தெய்வீகம் என கூறுவது இலகு. ஆனால் அதனை புரிந்து கொள்வது கடினம். கடவுள் என கூறுவது இலகு. ஆனால் அதனை புரிந்து கொள்வது கடினம். ஆனால் அறிய விரும்பும் அந்த பொருள், அதிஸ்டவசமாக உங்களில் இருந்து தூரத்திலே இல்லை. எதனை அறிய உங்களது உள்ளத்திலே அந்த விருப்பம் உள்ளதோ, உள்ளத்திலே அந்த தாகம் உள்ளதோ, அது உங்களது உள்ளத்திலே தான் உள்ளது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this