Jump to content

காலத்தால் கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப் போகிறது.....?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப் போகிறது.....?

2வாரங்கள் முன்னொரு ஞாயிற்றுக்கிழமை விடிய அவனது தொலைபேசிதான் அவளை நித்திரையால் எழுப்பியது. அக்கா நான் *** கதைக்கிறன். ஏனக்கு ஒரு உதவி வேணும் அதான் எடுத்தனான்.....ஸ்கைப் வருவியளோ கதைக்க......? அத்தோடு தொடர்பறுந்தது.

ஆசிய நாடுகளுக்குள்ளே ஐக்கியநாடுகள் சபையில் அகதி அந்தஸ்த்திற்கு பதிந்துவிட்டு சிறைகளில் இருக்கிற பலர் இப்படித்தான் வந்திருக்கிறார்கள். ஒன்றில் சிறையிருக்கும் நாடுகளில் தமக்கான உதவிகோரல் அல்லது இலங்கை போகிறோம் உதவியென்றே பல அழைப்புகள் வந்திருக்கிறது. அப்படியான ஒன்றாயே இவனது அழைப்பையும் நினைத்தாள். ஸ்கைப் போனாலும் ஓயாத தொடர்புகள் வந்து நிறைந்து விடுவதால் அவனை மறந்து போயிருந்தாள்.

நேற்று ஸ்கைப்பில் வந்தவன் ஒரு தகவலை எழுதியிருந்தான்.

அக்கா எனக்கு இலங்கைக்கு போக அனுமதி கிடைச்சிருக்கு....ஆனா எயாப்போட்டாலை தப்பி வெளியில போட்டா நீங்கள் தான் உதவ வேணுமக்கா.....அதாலை தப்பீட்டா இந்தியா இல்லாட்டி மலேசியாப்பக்கம் போகலாமெண்டு யோசிக்கிறன்....! ஏன ஸ்கைப்பில் எழுத ஆரம்பித்தவனின் எழுத்தை நீள விடாமல் அவள் தனது பதிலை எழுதினாள்.

இந்தியா மலேசியாவுக்கெல்லாம் உதவிற அளவுக்கு எங்கடையாக்கள் முன்வராயினம்.....!

அக்கா என்னுடன் தொலைபேசியில் பேசுங்கள். உங்களுடன் நிறையக் கதைக்க வேணும். எனது குடும்பம் 3மாவீரர்களையும் நாட்டுக்கு கொடுத்தது. நானும் எனது 3தம்பிமாரும் நாட்டுக்காக 18வருடங்கள் உழைத்தோம். நாங்கள் போராட வெளிக்கிட்டதிலிருந்து துரங்களைத் தான் சுமந்தோம் அதுவே இன்றும் தொடர்கிறது. உதவாவிட்டாலும் பறவாயில்லை ஒருதரம் பேசுங்கள். என்றதோடு ஸ்கைப் தொடர்பும் அறுந்தது.

இன்று அவன் கொடுத்த இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினாள். அவன்தான் மறுமுனையில் பதில் கொடுத்தான். முகமறியாத இருவருக்குள்ளுமான சுகவிசாரிப்புகளின் பின்னர் அவன் தனது கதைககளைச் சொல்லத் தொடங்கினாள்.

000 000 000

அவன் பிறந்தது வடமராட்சி. கடற்தொழிலால் வசதிகளோடும் நல்ல வாழ்வோடும் இருந்த குடும்பத்தின் பிள்ளைகளை நாடு தனதாக்கிக் கொள்ள உயர்தரம் படித்துக்கொண்டிருந்த அவனும் தனது கடமைகளுக்காக புறப்பட்டான். தம்பிகள் களத்தில் நிற்க அவன் கடல்கடந்து சர்வதேச வலையமைப்பில் பணிக்குச் சென்றான். முகவரி பெறாத வெளித்தெரியாத முகத்தைத் தனக்கானதாய் ஆக்கியவன் 12வருடங்கள் தாய் நிலம் காணாமல் சர்வதேசமெங்கும் அளந்து திரிந்தான். அலைவின் பெரும்பகுதி முழுவதும் கடலோடு தான் அவன் வாழ்வு போய்த்தொலைந்தது.

நிலம்விட்டுப் பல்லாயிரமாய் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் தேசமெங்கும் தாயகக்கடமைக்காய் தலைமறைவாய் பணிக்காய் திரிந்தான். வசதியான வாழ்வும் வருமானமும் பெற்றுவிடக்கூடிய லட்சங்கள் கையில் தவழ்ந்த போதும் தனக்காய் எதையுமே அனுபவிக்கவோ ஆசைப்படவோ இல்லை எல்லாம் மண்ணுக்காய் எல்லாவற்றையும் அர்ப்பணித்தான்.

ஜெயசிக்குறு வெற்றிக்காய் பணியாற்றிய அவனதும் அவன்போன்ற பலரதும் உழைப்பில் யெஜசிக்குறு வெற்றிவாகை சூடிக்கொள்ள அவனது 2தம்பிகளும் கண்டிவீதியின் காற்றோடு தங்கள் மூச்சை நிறுத்திய சேதியும் , அவன் அதிகம் நேசித்த அவனது கடைசித்தம்பி ஆனையிறவில் வேவுப்பணியில் வீரச்சாவடைந்த செய்தியைக்கூட வருடம் போன பின்னாலேயே அறிந்து தனக்குள் அழுதான். ஆயினும் தனது பணியில் வீச்சாய் உயர்ந்தான். விழவிழ எழுவோம் என்ற வார்த்தைகளை அவன் தினமும் உச்சரித்தபடியே தாயக விடுதலைக்காய் உழைத்தான்.

சமாதான காலம் சர்வதேச வலைப்பின்னலில் புதிய நிர்வாகப்புகுதல் அவனையும் பிரித்தது. கடலோடும் அன்னிய தேசங்களோடும் அலைந்தவன் சமாதான காலத்தில் தாயகம் போனான். மண்ணுக்குள்ளிருந்து மறைமுகப்பணிகள் அவனுக்காய் காத்திருந்தது. நிர்வாக மாற்றத்தில் ஏற்பட்ட மனச்சோர்வுகள் நம்பிக்கைத் துரோகங்களை மறந்துவிட்டு சலிக்காமல் மீண்டும் பணிகளில் இறங்கினான்.

2003திருமணம பந்தத்தில் இணைந்தவன் தொடர்ந்தும் தன் பணிகளோடே தன்னை இணைத்தான். 2004அவனது உலகத்தைப் புதுப்பித்துப் பிறந்தாள் அவனது செல்லமகள். உரிமையுடன் அப்பாவென்றழைக்கவும் அவனை மகிழ்ச்சிhல் கட்டிப்போடவும் வீட்டில் அவனது குழந்தை அவனுக்காகக் காத்திருந்தது. கிடைக்கிற ஓய்வுகளை குழந்தையோடு கழித்தான்.

நிலமைகள் மாற்றமடைந்து காலம் எல்லாரையும் களம் வாவென்ற போது தானே முன்னின்று தங்கையின் பிள்ளைகளையும் வாவென்றழைத்துக் களம் போனவன். 'அண்ணை கேக்கிறார்' வீட்டுக்கொரு பிள்ளையைத் தாங்கோவன் என சொந்தங்களையும் அழைத்து நிலம் மீட்கும் பணிக்காய் நின்று பணிசெய்தான்.

அவன் வீட்டிலிருந்து அம்மா அப்பா எல்லோரும் தமக்காயான பணிகளை ஒன்றாயே சேர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். அங்குலம் அங்குலமாய் அவர்கள் நேசித்த பூமியை அதிகாரம் ஆயுதபலத்தால் வென்று கொண்டிருக்க கடைசிக்காலக்களமுனையில் மாற்றங்களும் ஆளாளுக்கானதாய் ஆனது.

அவன் நேசித்த 'அண்ணை''க்குத் தெரியாமலே பல அக்கிரமங்கள் நிகழத்தொடங்கியது. மக்களின் மனங்களை வென்ற மக்களின் தலைவனுக்கும் மக்களுக்குமான தொடர்புகளும் அறுந்து போனது. கட்டாய ஆட்பிடியும் அநியாங்களும் அவனதும் அவன் போன்ற ஆயிரமாயிரம் பேரின் உழைப்பையெல்லாம் அரசியல்பிரிவு அநியாயமாக்கிக் கொண்டிருந்தது.

கட்டாயப்பிடி வேண்டாம் கடைசிவரையும் நாங்கள் போராடுவோம் என பலருடன் முரண்பட்டுத் தோற்றுப்போனார்கள் மக்களை நேசித்தவர்கள். அத்தகையோருடன் அவனும் அமைதியானான். எங்கெங்கோ சிலரிடம் அதிகாரம் பகிரப்பட்டு உண்மையானவர்களையே போட்டுத்தள்ளும் நிலமையில் களம்மாறியது. அங்கே மனசால் அழுதபடி தாங்கள் நேசித்த தலைவனுக்கும் மக்களுக்குமாய் பல்லாயிரம் போராளிகள் தங்கள் பணிகளைச் செய்(த்)தார்கள்.

முடிவுகள் தலைகீழாய் நம்பமுடியாதனவாய்.....மாறிய போது மிஞ்சிய உயிரையும் மண்ணுக்குள் பலர் புதைத்து வெடித்துச் சிதைக்க இவனால் மட்டும் அப்படியே அழிந்து போக முடியாது போனது. அவனது செல்லமகளும் அவனது காதல் மனைவியும் கைகளில் விலங்கில்லாமல் அவனைச் சிறையிட்டனர். மண்ணுக்காய் கடலோடே காலத்தை அழித்தவன் கடமைக்காய் உலகமெங்கும் திரிந்தவன் தனது மகளுக்காக கடைசியாய் மிஞ்சிய குப்பியையும் கழற்றியெறிந்துவிட்டுக் கடல்கடந்தான்.

வெளிநாடு போகலாமென்று நம்பி ஆசியநாடொன்றில் சிறையில் அடைபட்டு வருடம் 2 முடிந்துவிட்டது. கடைசிநேர முடிவோடு காணாமற்போன தம்பி உயிருடன் இருப்பதற்கான அடையாளங்களும் இல்லை. 3வது தம்பி மட்டும் தடுப்பிலிருந்து விடுபட்டு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிஞ்சியிருக்கிறான். அப்பா பழையபடி கடற்தொழிலுக்குப் போய்வருகிறார். களத்தில் 16வருடங்கள் வாழ்ந்த 3வது தம்பி உடலால் பாதிப்புற்று உழைக்க முடியாத நிலமையில் அப்பாவை நம்பியிருக்கிறான்.

ஊரிற்குத் தொடர்பு கொண்டு உதவி கேட்டான். தம்பி ஆரிட்டையும் கடமைப்படாதை வெளிக்கிட்டு வா பாப்பம்....இவ்வளவு காலமும் ஒருதரிட்டையும் நாங்க கையேந்தேல்ல....இனியேனப்பு கைNயுந்துவான்....உயிருகளைக் குடுத்தம் உடமைகளைக் குடுத்தம்.....என்ரை பிள்ளையளையும் நாட்டுக்காக நான்தான ராசா ஓமெண்டு குடுத்தனான்....பிடிச்சா சிறையில போடுவினம்....போடட்டும்....ஆனா மானத்தைவிட்டு கடமைப்பட வேண்டாம் ராசா....என அம்மா முடிவாகச் சொல்லிவிட்டா. ஆரிடமாவது கையேந்தினால் உனது மகன் உயிர் பிழைக்க வாய்ப்புண்டென்று சொல்ல வேணும் போலிருந்த விருப்பை அம்மாவுக்குச் சொல்லாமல் மௌனமானான்.

அவனை நம்பிய அவனது மனைவியும் மகளும் அவனுக்காக தாயகத்தில் கடலோரக் கிராமமொன்றில் காத்திருக்கிறார்கள். அடைபட்ட சிறைவாழ்வின் கொடுமையும் ஒன்றுமேயில்லாத வெறுமையும் துரத்த இறுதி முடிவாய் இலங்கை போக எழுதிக்கொடுத்துவிட்டு அனுமதியும் பெற்றுவிட்டிருக்கிறான்.

இலங்கை போறது ஆபத்தெல்லோ அண்ணா...? கேட்டவளுக்குச் சொன்னான். வேறை வழியில்லை....இங்கினை எங்கேயும் ஒரு மாற்றத்தைச் செய்து தப்பிறதெண்டாலும் நாட்டுக்காசு குறைஞ்சது 3லட்சம் வேணும்....என்னிட்டை அப்பிடியெல்லாம் வசதியில்லை.....நடக்கிறதைக் காண்பமெண்ட முடிவோடை எழுதிக்குடுத்திட்டன்....

தன் வழிச்செலவுக்குக் கூடக்கையில் காசில்லாதவனுக்கு 3லட்சத்தை யார் கொடுப்பார்...? அவன் உயிரை எவர் காப்பார்....?

தாய்நாட்டுக்காக தங்களை இழந்து ஆயிரமாயிரமாய் ஆசியநாடுகளிலும் ஆபிரிக்கநாடுகளிலும் சிறைகளிலும் வாழு(டு)கிற போராளிகளுக்காக அனைத்துலகத் தமிழினம் என்னத்தை கைமாறாய் செய்யப்போகிறது...? அவள் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

அக்காவென்று அவளுக்கு அறிமுகமானவன் இப்போ அவளுக்கு அண்ணணாகியுள்ளான். அவனை வெளிச்சொல்லி அவனுக்காய் உதவி கேட்க முடியாத துயரம். அவர்கள் நெடுகலுமே உச்சரிக்கும் 'அண்ணை' வளர்த்து வெளிநாடனுப்பி வைத்த பண முதலைகள் மீதும் கோபம் வருகிறது.

இத்தகைய தியாகங்களின் மீது குளிர்காய்கிற சொத்துகளுக்கும் வருமானங்களுக்கும் சொந்தமான சுயநலங்கள் மனம் வைத்தால் எத்தனை உயிர்கள் காக்கப்படலாம்....? நினைத்தாள்.

02.05.2012 அவளது அண்ணனிடமிருந்து ஒரு தகவல் வந்திருந்தது.

தங்கையே நான் தொடர்பில்லாமல் போய்விட்டால் எனது 8வயது மகளுக்கான கல்வியையாவது கொடுத்து உதவுங்கள். கட்டுநாயக்கா தாண்டி தப்பித்தால் என்னிடம் 250ரூபா காசிருந்தால் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.

தனது கடைசி விருப்பைத் தட்டச்சி மெயிலிட்டிருந்தான். அவனுக்காய் எதையும் செய்ய முடியாது போகிற இயலாமையையும் தாங்கமுடியாத வலியையும் வெளிப்படுத்தியது கண்கள். கணணித்திரை மங்கலாக கண்ணீரால் நிறைந்தது கண்கள். யாருமற்ற கணணியறையில் கண்ணீர் விட்டழுதாள் அந்த அண்ணனுக்காய்.

பெயர் பொறிக்கப்படாத வரலாற்றுக்குள் அவனது பெயரைக் காலம் எழுதி வைத்தது. ஆயினும் காலத்தால்

கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப்போகிறது.....?

எங்காவது ஒரு அதிஸ்டம் கிடைத்தால் அவனுக்கான 3லட்சம் கிடைத்தால் எப்படியிருக்கும்....? ஏண்ணிக் கொள்கிறாள்.....

03.05.2012

http://mullaimann.bl.../blog-post.html

Link to post
Share on other sites

உள்ளத்தை நெருடுகின்றது உங்கள் இணைப்புகள் . வேறும் பேச்சுக்களில் எனக்கு நம்பிக்கையில்லை சாந்தி . ஒருவருக்கு ஒரு யூறோ போட்டாலே வருமே . அதிகம் எழுதமுடியவில்லை . உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வேறும் பேச்சுக்களில் எனக்கு நம்பிக்கையில்லை சாந்தி . ஒருவருக்கு ஒரு யூறோ போட்டாலே வருமே . அதிகம் எழுதமுடியவில்லை . உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் .

கருத்திற்கு நன்றிகள் கோமகன். மனமுண்டானால் இடமுண்டு. கருணையாளர்கள் மனம் வைத்தால் இந்த அண்ணனை காப்பாற்ற முடியும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:mellow:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுகிறேன்.

முயற்சியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை ஈஸ். ஆயினும் தொடர் முயற்சி.

ஒரு சிறு குறிப்பு :-

இன்னொரு திரியில் இக்களத்தின் கருத்தாளர் ஒருவர் இந்தக்கதைக்குரிய அண்ணன் நாட்டுக்குத் திரும்பிப்போக உதவி கேட்பதாக புரிந்து எழுதியிருக்கிறார். இந்த அண்ணனை இன்னொரு பாதுகாப்பான நாட்டில் தொழில் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கவே 3லட்சம் தேவைப்படுகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் நெடுகலுமே உச்சரிக்கும் 'அண்ணை' வளர்த்து வெளிநாடனுப்பி வைத்த பண முதலைகள் மீதும் கோபம் வருகிறது

100 வீதம் உண்மை! இவர்கள் நினைத்திருந்தால் அத்தனை போராளிகளிற்க்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுத்திருக்கலாம்.

சிங்களவனை விட கொடிய மிருகங்கள் இந்த பண முதழைகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்து கந்தசாமி நீங்கள் அனுப்பிய 50€ உதவி நேற்று கிடைத்தது. மிக்க நன்றிகள். சிறுதுளி பெருவெள்ளம் உங்கள் உதவி அந்த அண்ணனை விரைவில் சென்றடையும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகளின் வாழ்க்கை

எப்போதும் கடினமாயிருக்கிறது

அவர்களது குடும்பங்களும்

எப்போதும்

கத்தி முனையில் வாழ்கிறார்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

போராளிகளின் வாழ்க்கை

எப்போதும் கடினமாயிருக்கிறது

அவர்களது குடும்பங்களும்

எப்போதும்

கத்தி முனையில் வாழ்கிறார்கள்

போராளியாய் ஆனதற்காகவே காலம் முழுவதும் சிலுவை சுமக்கும் நிலைக்குத் தள்ளிய தமிழர் நாம்தானே லியோ ?

கப்டன் மலரவனின் ஒரு பெயர் லியோ. போரிலியல் வரலாற்றில் போரிலக்கியமொன்றைப் படைத்து வீரச்சாவடைந்த மலரவனின் பெயரை நினைவுபடுத்துகிறது உங்கள் பேர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் கைவிடப்படவனின் வாழ்வுக்காக உதவியவர்கள் :-

ஈஸ் (பெயரை குறிப்பி வேண்டாமென்றீர்கள்.ஆயினும் உங்கள் பெயரை சொல்வதற்காக மன்னிக்கவும்) - 29,29€

அமெரிக்காவிலிருந்து பிரபா -193,25€

கருத்துக்கந்தசாமி - 50,00€

மொத்தம் - 272,54€

உதவியவர்களுக்க மிக்க நன்றிகள்.

*சிறுதுளி பெருவெள்ளம்*

Link to post
Share on other sites

காலத்தால் கைவிடப்படவனின் வாழ்வுக்காக உதவியவர்கள் :-

ஈஸ் (பெயரை குறிப்பி வேண்டாமென்றீர்கள்.ஆயினும் உங்கள் பெயரை சொல்வதற்காக மன்னிக்கவும்) - 29,29€

அமெரிக்காவிலிருந்து பிரபா -193,25€

கருத்துக்கந்தசாமி - 50,00€

மொத்தம் - 272,54€

உதவியவர்களுக்க மிக்க நன்றிகள்.

*சிறுதுளி பெருவெள்ளம்*

வெத்துவேட்டுக்களுக்கும் , பப்படாக்களுக்கும் மத்தியில் செயலால் தங்களை நிலைநாட்டிய கள உறவுகளான ஈஸ் , கருத்துக்கந்தசாமி நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெத்துவேட்டுக்களுக்கும் , பப்படாக்களுக்கும் மத்தியில் செயலால் தங்களை நிலைநாட்டிய கள உறவுகளான ஈஸ் , கருத்துக்கந்தசாமி நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே .

:o :o :o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெத்துவேட்டுக்களுக்கும் , பப்படாக்களுக்கும் மத்தியில் செயலால் தங்களை நிலைநாட்டிய கள உறவுகளான ஈஸ் , கருத்துக்கந்தசாமி நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே .

:rolleyes::o

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் கைவிடப்பட்டவனின் மனைவி சுயதொழில் ஒன்றினை மேற்கொள்ள இன்னொரு 300€ உதவி தேவைப்படுகிறது. முடியுமாயின் யாராவது இவ்வுதவியைக் கொடுத்து உதவ முடியுமா ? வீடு வாசல் எதுவுமில்லை. வெறும் நிலம் மட்டுமே இவர்களிடம் இப்போது இருக்கிறது. தங்களுக்கான ஒரு சுயதொழிலை ஆரம்பித்தால் தம்மால் எழ முடியுமென நம்புகிற இந்த அண்ணனின் மனைவிக்கு யாராவது நேசக்கரம் கொடுங்கள்.

கெட்டித்தனம் மிக்க பிள்ளைக்கு கல்வியைக் கொடுக்கவும் முடியாத நிலமையில் இருக்கிறார்கள்.

தனியொருவர் உதவ முடியாது. 10பேர் சேர்ந்து உதவினால் அது பேருதவியாகும்.

சுமைகளையே தொடர்ந்து தந்து கொண்டிருப்பதாக யாரும் கோபிக்க வேண்டாம்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சட்டவிரோதமாக... இந்தியாவில் தங்கியிருந்த, 30இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது! கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனையடுத்து பெங்களுர் சென்ற நிலையில், அங்கிருந்து கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் 6 முதல் 7 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1221970
  • கொஞ்சம் சிரிக்க வைக்கும் போட்டொ
  • இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முயன்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைது தூத்துக்குடியில் இருந்து படகு  ஊடாக சட்டவிரோதமான முறையில்  இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி- தாள முத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஒருவர்,  சந்தேகிக்கும் விதமாக சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று நேற்று (வெள்ளிக்கிழமை ) மாலை கிடைத்துள்ளது. குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகபரை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது- 47) என்பது தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர் இந்தியா வாழ் வெளி நாட்டினருக்கான ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்துள்ளதுடன்  கோவாவில் இருந்து விமானம்  ஊடாக பெங்களுர் வந்துள்ளார். அதன்பின்னர் அங்கு வாடகைக்கு கார் ஒன்றினை எடுத்துக்கொண்டு, கடந்த 9 ஆம் திகதி தூத்துக்குடிக்கு வந்தடைந்த அவர் பிரபல ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார். இதன்போது தூத்துக்குடியில் இருந்து படகு ஊடாக உரிய அனுமதி ஆவணமின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு  கடற்கரையில் நின்ற போதே பிடிபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ ‘கேட்டமைன்’ போதை பொருளை பறிமுதல் செய்து  இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜோனாதன் தோர்ன் கடந்த 2019 ஆம்  ஓகஸ்ட் மாதம் வரை  சிறை தண்டனை அனுபவித்துள்ளார். அதன்பின்னர் பிணையில் வெளியில் வந்த அவர், இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கியூபிரிவு பொலிஸார் ஜோனாதன் தோர்ன் மீது, கடவுச்சீட்டு முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1222073
  • ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக... சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம் சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சீனத் திட்டத்திற்கு உயர்தர மாற்றாக அமெரிக்க ஆதரவுடன் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (பி 3 டபிள்யூ) திட்டம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சி என்ற திட்டம் பல நாடுகளில் ரயில்கள், வீதிகள் மற்றும் துறைமுகங்களுக்கு நிதியளிக்க உதவியுள்ள அதேவேளை சில நாடுகளை கடனுக்குள் தள்ளும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது. இருப்பினும், ஜி 7 திட்டத்திற்கு எவ்வாறு நிதி வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. உலகின் ஏழு பணக்கார ஜனநாயக நாடுகளான ஜி 7 எதிர்கால தொற்றுநோய்களைத் தடுக்கும் புதிய திட்டத்திற்கும் உறுதியளித்துள்ளது. https://athavannews.com/2021/1222181
  • செயற்கை.. பூச்சிக்கொல்லி மருந்துகளை, தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு ! செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து விளங்கும். விவசாய வளம் நிறைந்த ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவிஸர்லாந்தில் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுவதுமாக தடை செய்ய்யப்படவுள்ளது. இத் தடைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தண்ணீரில் பூச்சிக்கொல்லிகளின் அளவு மற்றும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகளுக்கு சேதம் ஏற்படுவதை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதுபோன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியங்கள் நிறுத்தப்படும் எனவும்  10 ஆண்டுகளுக்குள் அவற்றை முற்றிலும் தடை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த திட்டங்கள் மருந்துகள் சார்ந்த பலரது வணிகங்கள் பாதிக்கப்படும் என்றும் சுவிஸ் விவசாயிகள் எச்சரிக்கின்றனர். இதேவேளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் வாக்கெடுப்பில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், புதைபடிவ எரிபொருட்களுக்கான புதிய வரி மற்றும் அவசர கொரோனா நிதி போன்ற பிற திட்டம் மீதான வகிரக்கெடுப்பும் நடைபெறவுள்ளது. ஜனநாயக ஆட்சிமுறை என்பதால் ஆல்பைன் தேசத்தின் அனைத்து முக்கிய முடிவுகளும் வாக்கெடுப்பின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. மேலும் நாடு தழுவிய வாக்குகளை உறுதி செய்வதற்காக பிரச்சாரக்காரர்கள் 100,000 கையொப்பங்களை சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2021/1222192  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.