Jump to content

ஆறுமுக நாவலர் வரலாறு

Recommended Posts

ஆறுமுக நாவலர் வரலாறு

arumukanavalar.pngநாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார்.

சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார். சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே அவர் நிலைநாட்டினார்.

கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே இதுவாக இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேராசை தம்மிடம் குடிகொண்டிருந்தமை யாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் நாவலர்.

நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்து முன்பிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப் போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன் இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயா சாரியார்களின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தவர் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள், ஆதரவில்லாத அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.

ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை, மறு புறம் அனைத்தை யும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார். நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், அபிவிருத்தியா வதற்கு கருவிகள் மற்றும் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்வித்தலு மாகும். இவற்றின் பொருட்டு சிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள் என்ற நாவலரின் ஏக்கம் தீர இனைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள், பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.

1894ம் ஆண்டிலே நல்லூர் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை, கந்தசாமி கோயிற் திருவிழா சமீபித்தபடியால் தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாவடுதுறையினின்று ஓதவார் சிலரை அழைப்பித்து திருவிழா காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றைய சைவர்களுக்கும் நெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஷ்வர பூஜை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள்.

நாவலரும் விபூதி உந்தூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பெளத்திர முந் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார். அத்திருக்கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற்கொப்பிடுவோம், சுப்பிரமணிய பெருமானின் அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூடத்தோடு தோற்றிய சிறப்புக் கொப்பிடலாம்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.

தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.

www.swisstamilsangam.blogspot.com

www.aarumuganaavalar.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி, யாழ் அன்பு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ஐயா.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 5 months later...

(1822 - 1879)

"பாவலர் போற்றும் ஞான தேசிகரை

பணிந்தவராணையின் வண்ணம்

பூவலர் கொன்றை புனைந்தவர் புகழைப்

புலமிகு மறிவர் கூட்டுண்ணக்

காவலர் வியப்ப உரைத்திடல் கேட்டுக்

கருணைகூர் தேசிகர் இவர்க்கு

நாவலரெனும் பேர் தகுமென அளித்தார்

ஞாலத்தார் தகுந்தகும் என்ன?"

- ஆறுமுகநாவலரைப் பற்றி

சுவாமி விபுலாநந்தர் சூட்டிய கவிதா பாமாலை

ஆறுமுக நாவலர் வரலாறு

நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார்.

சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார். சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே அவர் நிலைநாட்டினார்.

கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே இதுவாக இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேராசை தம்மிடம் குடிகொண்டிருந்தமை யாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் நாவலர்.

நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்து முன்பிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப் போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன் இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயா சாரியார்களின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தவர் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள், ஆதரவில்லாத அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.

ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை, மறு புறம் அனைத்தை யும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார். நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், அபிவிருத்தியா வதற்கு கருவிகள் மற்றும் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்வித்தலு மாகும். இவற்றின் பொருட்டு சிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள் என்ற நாவலரின் ஏக்கம் தீர இனைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள், பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.

1894ம் ஆண்டிலே நல்லூர் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை, கந்தசாமி கோயிற் திருவிழா சமீபித்தபடியால் தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாவடுதுறையினின்று ஓதவார் சிலரை அழைப்பித்து திருவிழா காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றைய சைவர்களுக்கும் நெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஷ்வர பூஜை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள்.

நாவலரும் விபூதி உந்தூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பெளத்திர முந் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார். அத்திருக்கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற்கொப்பிடுவோம், சுப்பிரமணிய பெருமானின் அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூடத்தோடு தோற்றிய சிறப்புக் கொப்பிடலாம்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.

தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.

www.swisstamilsangam.blogspot.com

http://aarumuganaavalar.blogspot.ch/

ஈழத்தின் சைவ எழு ஞாயிறு

ஈழத்தின் சைவ எழு ஞாயிறு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879)

NALLUR SRILASRI ARUMUGANAVALAR

- பெ. சு. மணி -

இந்தியாவைப் போலவே, ஈழமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய-பண்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டது. போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கில காலணி ஆதிக்கங்களும், கிறித்துவ மிஷனரிகளின் இந்து சமய எதிர்ப்புப் பிரசாரங்களும் இந்தியாவில் புதிய சமய-பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவித்தன. இவற்றுள் பிரம்ம சமாஜம் (1828) பிரார்த்தனை சமாஜம் (1857), ஆர்ய சமாஜம் (1875), இராமகிருஷ்ண மிஷன் (1886), பிரம்ம ஞானசபை எனப்படும் 'தியோகெமிகல் சொசைடி' (1875), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865) ஆகியன குறிப்பிடத்தக்கன.

இதே காலகட்டத்தில் இலங்கை ஈழத்தில் போர்த்துகீசிய, டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கங்களாலும், அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்து, சைவ சமய எதிர்ப்பு பிரசாரங்களும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரை சைவ சமய எழு ஞாயிறாகத் தோன்றச் செய்தன. ஈழத்தில் சைவ சமயமே மிகப் பழமையானது, பெரும்பான்மையானது. ஆங்கிலக் கல்வியும், அதன் வழி அரசு ஊழிய பெரும் வாய்ப்பும், சைவ சமய உண்மை நெறி அறியா அறியாமையும் மேலோங்கி இருந்த சூழலில் சைவ சமயம், 'பிழைக்குமோ' என்ற பேரச்சம் பரவிய காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆறுமுக நாவலர் 18/12/1822 இல், கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.

பதின்மூன்றாம் வயதிலேயே சைவ சமயத்தின் வீழ்ச்சியைத் தடுத்து அருள்புரிய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து ஒரு வெண்பாவை இயற்றியதாக அவருடைய வரலாற்றை 1916-இல் எழுதிய யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபிள்ளை குறிப்பிட்டுள்ளார். அந்த வயதில் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் ஆங்கிலம் கற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது இளமைக்காலத்துச் சிந்தனைகளை, 1868இல் வெளியிட்ட "சைவ சமயங்களுக்கு விக்கியாபனம்" எனும் கட்டுரையில் கூறியதாவது:

"நான் ஜய வருஷம் (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலீஷ் கற்றேன். பிலவ வருஷம் (1841) பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனானேன். பார்சிவல் துரை 'நான் தங்களுக்கு உயர்வாகிய வேதனம் தருவேன்; தாங்கள் என்னை விடலாகாது' என்று பல தரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும், நான் அவ்விருத்தியில் விருப்பம் வைக்கவில்லை. நான் இல்வாழ்க்கையில், புகவில்லை. இவையெல்லாவற்றிற்குங் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையாம். நான் என் சிறுவயது முதலாகச் சிந்தித்து சிந்தித்து, சைவ சமயத்தை வளர்த்ததற்கு வேண்டும் முயற்சிகளைச் செய்வாரில்லையே! இதற்கு யாது செய்யலாம்? சைவ சமய விருத்தியின் கண்ணாகிய பேராசையை அதனை முடித்தற்குச் சிறிதும் சக்தியில்லாத எனக்குத் தந்தருளிய சிவபெருமான் சக்தியுடைய மற்றையோர்களுக்குக் கொடுத்தருளினாரில்லையே!" என்று இரவும் பகலும் பெருங் கவலை கொண்டு பெருமூச்செறிதலிலும் பலருக்கும் பிதற்றலிலுமே பெரும்பான்மையும் என் காலத்தைப் போக்குவேனாயினேன்."

இங்கு பண்டைய ஈழத்தின் அரசியல் பின்னணியையும் சுருக்கமாக அறிதல் வேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் தமிழ் மன்னர் ஆட்சி நிலவியதை சிங்கள இதிகாசமான மகாவம்சம் ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை அரசுகளும் தமிழ்நாட்டின் சோழ, பாண்டிய விஜயநகர அரசுகளும் தம்முள் கொண்டிருந்த அரசியல் கலாசார உறவுகள் வரலாற்றில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி பதினேழாம் நூற்றாண்டில் மறைவதற்கு முன்பாக ஆட்சி செலுத்திய தமிழ் மன்னர்கள் ஆரிய சக்ரவர்த்திகள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள், "தமிழையும் சைவத்தையும் பேணி வளர்த்த புரவலராகவும், புலவராகவும்" பாராட்டப்பட்டுள்ளனர்.

கி.பி. 1620இல் போர்த்துகீசியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். இவர்கள் காலத்தில் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன. கிறித்துவ சமய மாற்றத்தில் கொடுமைகள் நிகழ்ந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இந்துவும் போர்த்துகீசிய தலைவனுக்கு நாள்தோறும் உணவிற்காக ஒரு பசுவை அனுப்பி வைக்க வேண்டும் என விதிக்கப்பட்டது.

போர்த்துகீசிய ஆதிக்கத்துக்குப் பிறகு டச்சு, காலனியாதிக்கம் கி.பி. 1658 முதல் கி.பி. 1790 வரையில் நீடித்தது. புரட்டஸ்தாந்து சமயத்தைச் சார்ந்த டச்சு ஆதிக்கத்தில் சுதேசிய சமயங்கள் இழிந்துரைக்கப்பட்டன. மதமாற்றமும் தீவிரமுற்றது. 1796-ல் ஆங்கிலேயர் கொழும்பு நகரைக் கப்பற்றினர். கி.பி. 1815-ல் கண்டி அரசனை வீழ்த்தி ஈழம் முழுவதையும் ஆங்கிலேயர் தமது காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்தினர். இவர்கள் காலத்தில் ஆங்கிலக் கல்வி முறையை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளாமல் கிறிஸ்துவ மிஷனரிகளிடம் விட்டு விட்டதால், ஆங்கிலக் கல்வி முறையை தங்களது மதமாற்ற முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், கிறிஸ்துவ மிஷனரிகள், வெஸ்லியன் (1814), அமெரிக்கர் (1816), சேர்ச் மிஷன் (1819) முதலான கிறிஸ்துவ மிஷனரிகள் முன்னிருந்தவர்களைக் காட்டிலும் பன்மடங்கு உத்வேகத்துடன் கல்வி பரப்புதலுடன், கிறிஸ்துவ சமயப் பரப்புதலலயும் மேற்கொண்டனர்.

சைவ சமய ஆர்வலர்கள், சைவ சமய குருமார்கள் கிறிஸ்துவ மிஷனரிகளைப் போல்க் கல்வி பரப்புதலை ஆள்வதில் தகுதியும், திறமையுமற்று பின் தங்கியிருந்தனர். பொதுக் கல்வியில் மட்டுமன்று, சைவ சம்யக் கல்வியும் போதிய தேர்ச்சியில்லாமல் புறச் சமயத்தவரின் எதிர்ப்பு பிரசாரத்திற்கு பயனளிக்க இயலாமல் திணறினர். இந்தச் சூழலில் ஆறுமுக நாவலர் கிழர்ந்தெழுந்தார்.

சமயம் பிரசார நூல்களை போர்க்கலன்களாகப் படைப்பதில் நாவலர் தனி முத்திரை பதித்தார். மெதடிஸ்த ப்?டசாலையில் மாணவராகவும், ஆசிரியராகவும் அவர் பெற்ற அறிவும், அனுபவமும் பைபிளை தமிழாக்கம் செய்ததில் பேர்சிவல் பாதிரியாருடன் கொண்டிருந்த தொடர்பும், சமய பிரசாரத்தில் கிறிஸ்தவர்கள் கையாண்ட வழி முறைகள் நாவலரிடம் பெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும், இயக்க ஆற்றலையும் ஏற்படுத்தின.

கிறிஸ்தவ கண்டன நூல்கள்:

சைவ தூஷண பரிகாரம் (1854), சுப்பிரபோதம் (1853), வச்சிர தண்டம் ஆகியன கிறிஸ்தவ சமய கண்டன நூல்களாகும். இவருடைய கிறிஸ்தவ மத கண்டனங்களை கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தங்கள் "Hindu Pastor" எனும் புத்தகத்தில் மிக வியந்து எழுதியிருக்கிறார்கள். 1855இல் "சைவ தூஷண பரிகாரம்" எனும் வெளியீட்டைப் பற்றி வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையில் பின்வரும் வியப்புரைகள் கூறப்பட்டுள்ளன.

"இந்த ஆண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு சைவ தூஷண பரிகாரம் எனும் நூல் வெளியீடாகும். இந் நூல் அசாதாரணமான இலக்கியமாகவும் தொன்மமாகவும் விளங்குகிறது. சைவருடைய ஒவ்வொரு நம்பிக்கையும் நடைமுறையும் கிறிஸ்தவ புனித நூல்களில் கூறப்பட்டுள்ள நம்பிக்கை சடங்குகளோடு இசைந்தும் இணைந்தும் இருப்பதாக நிரூபணம் செய்கிறது.

இத்தகைய கருத்துகளுக்கு ஆதரவாகத் திரட்டித் தரம் பெற்றுள்ள சாத்தியக் குவியலைப் பார்க்கும்பொழுது மிக்க வியப்பாக உள்ளது. எதிர்தரப்பின் மறுப்பை முன்கூட்டியே எதிர்பார்த்து, அதை புறந்தள்ளும் மதி நுட்பம் முதல் தரமான தேர்ந்த உள்ளத்த்?ற்கே உரியதாகும் என்பதையும் இந்நூலில் கான்க்?ன்றோம். இந்நூல் நமக்கு மிகுந்த இடர்களை விளைவிப்பதாகும்".

சைவ சமய விளக்க நூல்கள்:

சைவ சமய வழிபடுகளை விளக்க பின்வரும் சிறுசிறு நூல்களை வெளியிட்டார் நாவலர்:

அனுட்டான விதி முதற்புத்தகம் (நித்ய கன்ம விதி),

அனுட்டான விதி இரண்டாம் புத்தகம்,

குரு வாக்கியம்,

சிவாலய தரிசன விதி,

சைவ சமய சாரம்,

சைவ வினாவிடை முதற்புத்தகம்,

இரண்டாம் புத்தகம் (1875),

திருக்கோயிற் குற்றங்கள் (1878).

தாக்குதலுக்காக மட்டுமல்லாமல் தற்காப்பிற்காகவும், சுயசமயத் தெளிவிற்காகவும் நாவலர் தன்னந்தனியாக அரும்பாடுபட்டார். தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்கள் போன்ற அமைப்புகள் ஈழத்தில் இல்லாத காலத்தில் அவரே ஓர் அமைப்பாக, இயக்கமாக புயலாகவும் தென்றலாகவும் இயங்கினார்.

கந்த புராண கலாசாரம்

யாழ்ப்பாண சைவ சமயம் கந்தபுராணக் கலாசாரத்த அடித்தளமாகக் கொண்டது. யாழ்ப்பாணம் நல்லூர், இந்து சமய மன்னர்களின் தலைநகராக விளங்கியது. நல்லூர் கந்தசாமி கோயில் சைவ சமயத்தின் உயிர் நாடியாகும். கிறிஸ்தவ சமயம் பாதிரிமார் இத்திருக்கோயிலை குறிவைத்துத் தாக்கிப் பிரசாரம் செய்தனர். 1852இம் ஆண்டில் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சமயப் பாதிரிமார் நடத்தி வந்த "நன்கொடை" எனும் இதழில் "கந்தசாமி கோயிற் திருவிழா" எனும் தலைப்பில் சுப்பிரமணிய சுவாமி வழிபாட்டை இகழ்ந்து கட்டுரை வெளிவந்தது. எழுத்தில் மட்டுமன்று பேச்சிலும் இகழ்ந்து வந்தனர். இந்த சைவ சமய வெறுப்புப் பிரசாரத்தை முறியடிக்க 1853-ல் நாவலர், "சுப்பிரமணிய போதம்" எனும் நூலை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்.

கந்தபுராணத்தில் ஆன்மீக மேன்மையை பலவாறாக சைவ சித்தாந்த நோக்கில் தமது நாவன்மையால் விளக்கி வந்தார்.

1861-ல் நாவலருடைய கந்தபுராண வசனம் மதிப்புக்கு வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் கந்தபுராணச் சொற்பொழிவுகள் பெரும் செல்வாக்கு பெற்றன.

'கந்தபுராண கலாசாரம்' என்றால் என்ன? என்பதை விளக்கி கலாநிதி பேராசிரியர் க.கைலாசபதி எழுதியதாவது:

"தத்துவத்தையும், பணபாட்டையும் இலக்கியத்துடன் இணைத்துக் காணும் நிலைக்கும் பொருத்தமான குர்ரயீடாக "கந்தபுராண கலாசாரம்" என்னும் தொடர் கச்சிதமாக அமைந்துள்ளது எனலாம்". நாவலருக்கு பெரிய புராணத்தில் மிக்க ஈடுபாடு உண்டு. 1851-இலேயே பெரியபுராண வசனத்தைப் பதிப்பித்து விட்டார்.

சைவ ஆகம நெறி காவலர்:

இந்தியாவில் ஆர்ய சமாஜ நிறுவனர் சுவாமி தயானந்தர். "வேதகாலத்திற்கு திரும்புங்கள்" என்று முழங்கியதுபோல, நாவலர் "சிவாகமங்கள் காலத்திற்கு திரும்புங்கள்" முழங்கினார். வேதத்தைக் காட்டிலும் ஆகமம் சிறந்தது என்று சாற்றினார். சிவாகமங்களையும், சிவ தீட்சைகளையும் வலியுறித்தினார். சைவ ஆகமங்கள் அங்கீகரிக்காத வழிபாட்டு முரைகளக் கண்டித்தார். தமிழக சிதம்பர நடராஜர் திருக்கோயிலில் சிவாகமம் புறக்கணிக்கப்பட்டு, வேதாகமம் பின்பற்றப்பட்டு வந்ததை நாவலர் கடுமையாகச் சாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண சைவ சமயத்தில் அத்வைத வேதாந்த எதிர்ப்பு வீறு பெற்றது.

1897-ல் வேதாந்தச் சிங்கமாக சுவாமி விவேகானந்தரின் யாழ்ப்பாண வெற்றியுலா நிகழ்த்திய போது ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தை பேராசிரியர் க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிட்டார்.

"சுவாமி விவேகாநந்தரின் போதனைகளும் இராமகிருஷ்ண இயக்கத்தின் செய்தியும் இலங்கைத் தமிழ் இந்துக்களை வேதாந்ததை ஒப்புக் கொள்ளச் செய்யாவிட்டாலும் பெரும்பாலோரின் னூர்ருக்ய நோக்கையும், கொள்கைப் பிடிவாதத்தையும் தளரச் செய்தது."

சைவ சமய சீர்திருத்தவாதி:

உயிர்ப் பலியுடன் கூடிய சிறுதெய்வ வழிபாடுகளை கைவிட வேண்டும் என்று பிரசாரம் செய்தார், நாவலர். திருக்கோயில் விழாக்களில் தேவதாரிகள் நடனம், வானவேடிக்கைகள், ஆபாசமான சித்திரங்கள் முதலானவை விலக்கப்பட்வேண்டும் என்றும் வாதிட்டார். சைவ சமயப் பிரசாரங்கள் போலன்று பொது அறிவும், சமய அறிவும் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோயில்களில் நிரிவாகத்தினரின் ஊழல்களையும் அம்பலப்படுத்தினார். இவ்வழியில் தமது கருத்துகளை அவருடைய "யாழ்ப்பாணச் சமயநிலை" (1872), நல்லூர் கந்தசாமி கோயில் (1875), மித்தியாவாத் தரிசனம் (1876) முதலான கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.

தேசிய உணர்ச்ச்சிக்கு வித்திட்டவர்:

சைவர்களிடையே தேசிய உணர்ச்சிக்கு வித்திட்டவர் நாவலர் என்பதும் அவரைப் பற்றிய பிற்கால மதிப்பீடுகளில் ஒன்றாகும். சைவ சமயத்தை தேசிய சமயமாக முதன்மைப்படுத்தியதால் இந்த மதிப்பீடு தோன்றுயது. தமிழ் மக்களின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் நிலைநாட்ட நாவலர் பணி பயன்படுகின்றது.

சைவ சமயத்தையும், தமிழையும் வேறுபடுத்திக்காணவேண்டும் எனும் கருத்தை நாவலர் தமது "யாழ்ப்பாண சமயநிலை" எனும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"சைவ சமயத்தத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோயிலைத் தமிழ்க் கோயில் என்றும் அறிவில்லாத சனங்கள் வழங்குகின்றார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று, ஒரு பாஷையின் பெயர்."

பௌத்த சமயத்தையும், சிங்களத்தையும் இணைத்து 'இலங்கை தேசிய'த்தை உருவாக்கியவர், அநகாரிக தர்மபால எனும் பௌத்த சமயத் தலைவர். ஆனால் நாவலர் தொடக்கி வைத்த சைவத் தேசிய உணர்வு "தற்காப்பிற்கானது. அது பிறருடன் அரசியல் போராட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடியதல்ல. தமிழர் தேசியம் இதுவரை சமயச் சார்பற்றதாக இருந்து வருவதற்கு நாவலரது செல்வாக்கும் ஒரு காரணமாகலாம் என்று யாழ்ப்பாணத் தமிழ் ஆய்வாளர் க. அருமைநாயகம் விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்கால மீளாய்வில் 'தேசியத்தின் தந்தை நாவலர்' எனும் மதிப்பீடு மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கல்வித் தொண்டு:

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1845-ல் அவர் தோற்றூவித்த சைவப் பிரகாச வித்யாசாலை, சைவ சமய கல்வி இயக்கத்தின் தலையுற்றாகும். கத்தோலிக்க, புரட்டஸ்தந்த் பாடசாலைகளுக்கு அளிக்கப்படும் அரசு நிதியுதவி சைவ சமயத்த்னால் நடத்தும் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று நாவலர் வாதாடினார். கிறிஸ்துவரின் எதிர்ப்பால் சைவப் பிரகாச வித்யாசாலை இருபத்தி இரண்டு ஆண்டுகள் அரசு நிதியுதவி பெறாமல் அல்லல்ப்ட்டது. கிறிஸ்துவ வேதாகமத்தை ஆங்கிலப் பாடநூலாக ஆக்கிய பின்பே 1870-ல் சைவப் பிரகாச வித்யாசாலைக்கு நிதியுதவி கிடைத்தது. அக்காலத் தேவையாக விளங்கிய ஆங்கிலக் கல்விக்காக நாவலர் தமது கல்வி இயக்கத்தில் இடமளித்தார். 1872-ல் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பித்தார். சைவ சமயத்தினர் இந்த ஆங்கிலப் பாடசாலையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் நான்காண்டுகளில் இந்தப் பாடசாலை மூடப்பட வேண்டியதாயிற்று.

உரையாசிரியர் - பதிப்பாசிரியர்:

1849-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார் பண்ணையில் வித்தியாநு பாலன யந்த்திரசாலை" என்னும் பெயரால் ஓர் அச்சகத்தில் நிறுவினார். இதன் வழியே பல நூல்களை வெளியிட்டார்.

கோயிற் புராணம், சைவ சமய நெறி, நன்னூற் காண்டிகை, சிவ தருமோத்தரம், மருதூரந்தாதி, திருமுருகாற்றுப் படை முதலிய இலக்கண, இலக்கிய, சமய நூல்களுக்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டார். கொன்றை வேந்தன், வாக்குண்டாம் (மூதுரை), நல்வழி, நன்நெறி எனும் நீதிநூல்களுக்கும் நாவலர் உரையெழுதியுள்ளார்.

திருக்குறள் பரிமேலழகர் உரை, திருச்சிற்றம்பலம் கோவையுரை, சுருக்க சங்கரக உரை, சேதுபுராணம் முதலிய சுவடிகளை ஆய்ந்து மதிப்பித்துள்ளார், நாவலர். இவருடைய பரிமேலழகர் உரைப்பதிப்பை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாராட்டியுள்ளார். யாழ்ப்பாணம் பேரறிஞர்களுள் ஒருவரான சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குரிய சேனாவரையர் உரையப் பதிப்பித்தார்.

இவ்வாறு அவருடைய உரை நூல்கள், பதிப்பு நூல்கள் பற்றிய ஆய்வு, தனி ஆய்விற்கு உரியது. அக்காலத் தமிழ்ப் பதிப்புலகில் 'பதிப்பு' என்றால் நாவலர் பதிப்புத்தான் நிகரற்று விளங்கியது. தமிழ் உரைநடையின் ஆதிகர்த்தாக்களுள் ஒருவராகவும் புகழ் பெற்றவர் நாவலர்.

சமூக நோக்கு:

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினர் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். 'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு "யோக்கியர்களல்லாத சாதியர்கள்" என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக்கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால் "உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்" என்றும் "நான்காம் பால பாடம்" எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர்.

தமிழக உறவில் நாவலர்:

சென்னையில் சுமார் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சைவ சமய எழுச்சிக்குப் பாடுபட்டார், நாவலர். சிதம்பரத்தில் 1864-ல் சைவப் பிரகாச வித்தியாசாலையைத் தொடங்கினார். இந்த வித்தியாசாலையும், சென்னை தங்கசாலையில் இவர் நிறுவிய வித்யாநுபாலன யந்திரசாலையும் சைவ சமயப் பணியுடன் தமிழ்ப் பணியும் செய்து வந்தன.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் 'நாவலர்' எனும் சிறப்புப் பட்டமும் அளிக்கப்பட்டது.

1860-ல் நாவலர் தமது தமையனாருக்கு எழுதிய கடிதத்தில் "இச்சென்னைப் பட்டணம் என் சென்ம பூமியிற் சிறந்ததென்று" குறிப்பிட்டுள்ளார். தமிழக அறிஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

தமிழக வாழ்க்கையில் நாவலர், இராமலிங்க சுவாமிகளுடன் கடுமையாக மோதி வள்ளலார் பாடல்களை அருட்பாவாக ஏற்க மறுத்து, மருட்பாவாகப் பழித்துரத்தது, சற்று கசப்பான வரலாற்றுச் செய்தியாகும்.

1868 முதல் சென்னையிலும், சிதம்பரத்திலும் மாதந்தோறும் வியாழக் கிழமைகளில் திவருட்பா, போலியருட்பா ஆகிய விஷயங்கள் பற்றி, உரையாற்றி வந்தார். அவ்வுரைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட "போலியருட்பா மருட்பா மறுப்பு" (1869) எனும் கண்டன நூலாகும்.

கடலூர் மஞ்சகுப்ப்ப நீதிமன்றத்தில் இராமலிங்க சுவாமிகள் மீது "மானபங்க படுத்தியமை" எனும் குற்றச்சாட்டு நாவலரால் சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் சிதம்பரம் சபா நடேச தீட்சிதர் ஒருவரும் எதிரியாகக் குறிப்பிடப்பட்டார். இவ்வழக்கின் முடிவில் சபா நடேச தீட்சிதருக்கு 50 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இராமலிங்க சுவாமிகள், நீதிமன்றத்தில் தாம் நாவலரை அவதூறாகப் பேசவில்லை என்று கூறியதால் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் மூலச் சான்றுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையும் கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளே கிடைத்துள்ளன.

நாவலர் மரபு:

ஓரிரு குறைகள் மேகமூட்டமாக மறைத்தாலும் நாவலர் பெயரால் ஒரு மரபு, பரம்பரை தோன்றி சைவத்தையும், தமிழையும் பெரும் முனைப்புடன் வளர்த்தது. 29.4.1888-ல் யாழ்ப்பாணத்தில் நிறுவப் பெற்ற "சைவ பரிபாலன சபை'யும் அதன் பிரசார முடிவாக 11.09.1889-ல் வெளிவந்த "இந்து சாதனம் - Hindu Organ" எனும் இதழும் நாவலர் மரபின் வரலாற்றை விளக்கவல்லன.

தமிழ் மரபில், நாவலர் மரபிற்கு சிறந்த இடம் உள்ளது.

இடுகையிட்டது yaalavan நேரம் 5:48 pm கருத்துகள் இல்லை:

யாழ்ப்பாணத்து நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்

யாழ்ப்பாணத்து நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்

"தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்", என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.

அவர் î யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் 'நாவலர்' பட்டம் பெற்றவர் (1865).

அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்), பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.

1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.

"தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அ?தொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு". - ஆறுமுக நாவலர்

www.swisstamilsangam.blogspot.com

http://aarumuganaavalar.blogspot.ch/

Link to comment
Share on other sites

நன்றிகள் அன்பு பெரியப்பா

நான் என்றும் மதிக்கும் ஒரு சமையத்தலைவர் எமது சமையத்தை காப்பற்றியவர்களில் இவரும் வாழ்க நாவலர்

நன்றிகள் அன்பு பெரியப்பா

Link to comment
Share on other sites

அவர் சமயத்தை மட்டும் அல்ல வெள்ளைகாரனிடமிருந்து தமிழையும் சைவத்தையும் காப்பாற்றியவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ ஆகம நெறி காவலர்:

இந்தியாவில் ஆர்ய சமாஜ நிறுவனர் சுவாமி தயானந்தர். "வேதகாலத்திற்கு திரும்புங்கள்" என்று முழங்கியதுபோல, நாவலர் "சிவாகமங்கள் காலத்திற்கு திரும்புங்கள்" முழங்கினார். வேதத்தைக் காட்டிலும் ஆகமம் சிறந்தது என்று சாற்றினார். சிவாகமங்களையும், சிவ தீட்சைகளையும் வலியுறித்தினார். சைவ ஆகமங்கள் அங்கீகரிக்காத வழிபாட்டு முரைகளக் கண்டித்தார். தமிழக சிதம்பர நடராஜர் திருக்கோயிலில் சிவாகமம் புறக்கணிக்கப்பட்டு, வேதாகமம் பின்பற்றப்பட்டு வந்ததை நாவலர் கடுமையாகச் சாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண சைவ சமயத்தில் அத்வைத வேதாந்த எதிர்ப்பு வீறு பெற்றது.

1897-ல் வேதாந்தச் சிங்கமாக சுவாமி விவேகானந்தரின் யாழ்ப்பாண வெற்றியுலா நிகழ்த்திய போது ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தை பேராசிரியர் க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிட்டார்.

"சுவாமி விவேகாநந்தரின் போதனைகளும் இராமகிருஷ்ண இயக்கத்தின் செய்தியும் இலங்கைத் தமிழ் இந்துக்களை வேதாந்ததை ஒப்புக் கொள்ளச் செய்யாவிட்டாலும் பெரும்பாலோரின் னூர்ருக்ய நோக்கையும், கொள்கைப் பிடிவாதத்தையும் தளரச் செய்தது."

சைவ சமய சீர்திருத்தவாதி:

உயிர்ப் பலியுடன் கூடிய சிறுதெய்வ வழிபாடுகளை கைவிட வேண்டும் என்று பிரசாரம் செய்தார், நாவலர். திருக்கோயில் விழாக்களில் தேவதாரிகள் நடனம், வானவேடிக்கைகள், ஆபாசமான சித்திரங்கள் முதலானவை விலக்கப்பட்வேண்டும் என்றும் வாதிட்டார். சைவ சமயப் பிரசாரங்கள் போலன்று பொது அறிவும், சமய அறிவும் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோயில்களில் நிரிவாகத்தினரின் ஊழல்களையும் அம்பலப்படுத்தினார். இவ்வழியில் தமது கருத்துகளை அவருடைய "யாழ்ப்பாணச் சமயநிலை" (1872), நல்லூர் கந்தசாமி கோயில் (1875), மித்தியாவாத் தரிசனம் (1876) முதலான கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.

குப்பைகளான வேதங்களுக்கும், சிவாகமங்களுக்கும் உள்ள இடைவெளியை, ஆறுமுக நாவலர், மிகவும் தெளிவாகப் புரிந்திருந்தார் என்றே தோன்றுகின்றது!

தமிழனின் கருத்துக்கள், வேதங்களால், எவ்வாறு சிதைக்கப் பட்டன என்பதை, அந்தக் காலத்திலேயே, இவரது புரிகை, என்னை ஆச்சரியப் படுத்துகின்றது!

வேதங்கள், எம்மை எவ்வளவுக்குப் பின்னோக்கித் தள்ளி விட்டன!

இன்னும் நாங்கள், எம்மீது, மற்றவர்கள் குதிரையோடத் தானே, அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்?

இணைப்புக்கு நன்றிகள், அன்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆறுமுகநாவலர் நினைவு தினம்.

Link to comment
Share on other sites

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினர் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். 'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு "யோக்கியர்களல்லாத சாதியர்கள்" என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக்கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால் "உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்" என்றும் "நான்காம் பால பாடம்" எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர்.

நல்லை நகர் நாவலன் வளர்த்த மேன்மைகொள் சாதி வெறி விளங்குக உலகமெல்லாம்

பல அரசியல் சீர்திருத்தங்களை பற்றி கொக்கரிக்கும் நீங்கள் முதலில் தாழ்வுமனப்பான்மையை உதறித்தள்ளிவிட்டு முன்னுக்கு வாருங்கள்.....அப்போதுதான் சகலதும் பலப்படும்.

Link to comment
Share on other sites

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினர் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். 'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு "யோக்கியர்களல்லாத சாதியர்கள்" என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக்கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால் "உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்" என்றும் "நான்காம் பால பாடம்" எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர்.

நல்லை நகர் நாவலன் வளர்த்த மேன்மைகொள் சாதி வெறி விளங்குக உலகமெல்லாம்

ஆமா உயர்சாதியினரின் ஏக பிரதிநிதியா இருந்தா இப்ப என்ன? What's wrong with tht?

Link to comment
Share on other sites

மகிந்தவும் இதைதான் சொல்கிறார்.தமிழர்கள் எல்லாம் தங்களுக்கு பிரச்சனை இருக்கிறது எண்ட தாழ்வு மனப்பான்பையை விட்டுவிட்டு சிறீலங்கா ஒன்று என்ற சிந்தனைக்குள் வரும்படி சொல்கிறார்.

Link to comment
Share on other sites

நாவலரின் வாழ்வில்

முகவை பொன்னுச்சாமித் தேவர் (1837-1870)

nallur.jpg

திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையாருரை, சேதுபுராணம் முதலிய இலக்கியங்களும், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்க சூறாவளி, தருக்க சங்கிரகம் முதலிய இலக்கண தருக்க நூல்களும் ஆறுமுக நாவலரின் ஆய்விலும், பார்வையிலும் அச்சிடப்படிவதற்குரிய ஏற்பாடு செய்தவர் முகவை பொன்னுச்சாமித் தேவர். இந்நூல்கள் ஆறுமுக நாவலரால் பதிக்கப் பெற்று வெளி வந்தபோது, அவற்றைப் பெற விரும்பி, தமிழக முழுவதுமிருந்து புலவர்களும், பயிலும் மாணவர்களும் பாடல்கள் மூலம் பொன்னுச்சாமித் தேவரை வேண்டி எழுதி விண்ணப்பித்தனர். அனைவருக்கும் அஞ்சல்செலவு உட்பட இலவசமாக அனைத்து நூல்களையும் அனுப்பி வைத்தார் தேவர். வேண்டி விண்ணப்பித்த பாடல்கள் யாவும் தொகுக்கப் பெற்று 'பல கவித்திரட்டு' என்ற தலப்பில் உருவாக்கம் செய்து வெளியிடப் பெற்றன.

நாவலர் பெருமானின் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாள்தோறும் பொன்னுச்சாமித் தேவர் பதிப்பிக்க உள்ள நூல்களை ஒருமுறை பார்த்து, சில திருத்தங்களைச் சொல்வதை வழக்கமாக் கொண்டிருந்தாராம் தேவர். இத்தகைய குறிக்கீட்டை விரும்பாத ஆறுமுக நாவலர் வருந்துவதறிந்த தேவர், சில நாள்கள் நாவலர் பக்கமே செல்வதில்லையாம். தேவர் வருகை தராத காரணத்தைப் புரிந்து கொண்ட நாவலர், தேவரிடம் சென்று "தமிழ் வருகை தராததால் பதிப்புப் பணி வளரவில்லை!" என்றாராம். அதன் பின்னர், நாவலரை நாள்தோறும் சந்திப்பதை நாள்வழிப் பணியாக்கிக் கொண்டாராம் முகவை பொன்னுச்சாமித் தேவர்.

அறிஞர் சொக்கலிங்க ஐயா (1856-1931)

உடுமலைப் பேட்டையில் தந்தையார் தொடங்கிய வணிக நிறுவனத்தில் சிறிது காலம் இளமையில் உதவியாயிருந்த சொக்கலிங்கம், பதினேழு வயதில் யாழ்ப்பணம் வந்தார். யாழ்ப்பாணத்திலும் அவர்களுடைய வணிக நிறுவனம் ஒன்று இருந்தது. யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஆறுமுக நாவலரைக் கண்டு தரிசித்துத் தமிழை முறையாகக் கற்கும் தமது வேட்கையைப் பணிவாக நாவலர் பெருமானிடம் தெரிவித்தார் சொக்கலிங்கம்.

நாவலர் பெருமான், "நகரத்தார்களுக்குத் தமிழும், சைவமும் மூச்சும், ரத்தமும் போன்றவை. உணர்வில் ஊறிக்கிடக்கும் அவற்றை உம்மிடம் வளர்க்கச் செய்யும் பணியை, உவந்து ஏற்றுக் கொள்கிறேன்" என்றார் மகிழ்ந்து. யாழ்ப்பாணத்தில் நாவலர் பெருமானிடம், இலக்கிய, இலக்கணத் தமிழ் கற்று, தேவ கோட்டை வன்றொண்டரிடம் திருமுறைகளின் திருநெறித் தமிழ் பயின்று, மதுரை மெய்யப்ப சுவாமிகளிடம் சாத்திரத் தமிழ் படித்து, தமிழின் தகவுணர்ந்தோரானார் சொக்கலிங்கம்.

முத்தமிழின் வித்தகச் சிறப்பை, தத்துவ அமைப்பை, உணர்த்தியும், உணரவும் வைத்த உத்தம அருளாளர் மூவரையும், தமது சித்தத்துள் தெய்வம் அருளிய தேவாசிரியர்களாகக் கொண்டு, அப்பெருமக்களை வணங்கியும், வாழ்த்தியும் திருநூல்கள் இயற்றிப் பெருமகிழ்வு கொண்டார், சொக்கலிங்கம்.

"ஆறுமுக நாவலர் குரு ஸ்துதி", "வன்றொண்டர் குருஸ்துதி", "மெய்யப்ப சுவாமிகள் பதிற்றுப் பத்தாந்தாதி" என்னும் குரு வழிபாட்டு நூல்கள் வெளிவந்தபோது அவற்றின் நுட்பத்திறமும், திட்பத் தரமும் அறிந்த மக்கள், 'சொக்கலிங்கம்' என அழைப்பதை விடுத்து, பணிவோடும் பக்தியோடும், 'ஐயா' என அழைக்கத் தொடங்கினார்கள்.

மூலம்: குன்றக்குடி பெரியபெருமாள்

இராமசாமிப்பிள்ளை

இராமலிங்க அடிகளாரின் திருப்பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் நான்கு திருமுறைகளை 1867இல் தொழுவூர் வேலாயுத முதலியார் வெளிக்கொணர்ந்தார். 1869இல் அருட்பா மறுப்பு, "போலி அருட்பா மறுப்பு" இயக்கம் தொடங்கியது. ஆறுமுக நாவலர் இதற்குத் தலைமை தாங்கினார். எதிர்ப்பும் மறுப்புமாக இயக்கம் வளர்ந்தது; தமிழகமெங்கும் இது பரவியது, அறிஞர்களும் பக்தர்களுமாகப் பலர் இரு கட்சிகளாகப் பிரிந்து நின்று வாதிட்டனர்.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அருட்பா மருட்பா இயக்கத்தில் முனைந்து செயல்பட்டவர்களில் ஒருவர் இராமசாமிப்பிள்ளை எனும் தமிழ்ப் பண்டிதர். இவர் இராமநாதபுரத்தில் பிறந்தவர்; மதுரையில் வாழ்ந்தவர்; பத்திரிகாசிரியராகவும் உரையாசிரியராகவும் விளங்கிய இவர் இராமநாதபுர சமஸ்தான வித்துவானாகவும் இருந்தவர்; பொன்னுசாமித்தேவரின் அன்பிற்குப் பாத்திரமானவர்; மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்து இளைய சந்நிதானத்திற்குக் கல்வியில் உசாத் துணைவராக இருந்தவர்; ஆறுமுக நாவலரிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்; நாவலர் சிதம்பரத்தில் தங்கியிருந்தபோது அவ்வப்போது அங்குச் சென்று அவருடன் இருந்துவரும் பழக்கம் உடையவர். நாவலரை "அண்ணா" என்று அழைக்கும் அளவிற்கு அவரிடம் உரிமையும் நெருக்கமும் கொண்டிருந்தவர் என்பன இங்குக் குறிப்பிடதக்கனவாகும்.

இராமசாமிப்பிள்ளைக்கும் தொழுவூர் வேலாயுத முதலியாருக்குமிடையே அருட்பா பற்றிய வாதம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடந்தது. அதுபற்றி இவர் ஆறுமுக நாவலருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பம்மல் விசயரங்கனார் (1830-1895) பற்றிய ஓர் குறிப்பும் உள்ளது. "சோமவாரத்திரவிலே ஸ்ரீ விஜயரங்க முதலியாரவர்களும் மடத்துக்கு வந்தார்கள். திருக்கோயிலின் கண்ணே வேலு முதலியிடத்தே பேசினவைகளை வெளியிட்டேன். சந்தோஷப்பட்டார்கள்."
Link to comment
Share on other sites

அத்வைதத்தை கண்டுபிடித்த சங்கரரை பற்றி ஒரு கதை சொல்வார்கள்.(உண்மையா தெரியாது). சங்கரர் பிறப்பால் நம்பூதிரிகள் போன்ற ஒரு பிராமணன்.  தான் நடந்து செல்லும் பாதையால் ப**ர் நடக்கக்கூடாது என்று வாழ்ந்தவர். ஆனால் அறிவியல் ஞானத்தால் அத்துவைத ததுவங்களை தன்னுள் உருவாக்கியிருந்த்தார். இற்றவரையில் சைவத்தின் தலைசிறந்த தத்துவ ஞானியான சங்கரர் ஆக்கியிருப்தெல்லாம் வெறும் வரட்டு தத்துவங்களே என்றும் அவருக்கும் சாதரணமனிதனுக்கும் இதுவரையில் பேதம் ஒன்றும் ஏற்படவில்லை என்பதையும் காட்ட விரும்பி சிவன் ஒரு தாழ் குலத்தான் போல வேடமிட்டு சங்கர சுவாமிகள் வந்து கொண்டிருக்கும் பாதையில் எதிராக சென்றார். கோபங்கொண்ட சங்கர சுவாமிகள் அவனைப்பார்த்து "நான் கடக்கும் வரை  நீ பாதையில் ஒதுங்கு" என்று  ஆணையிட்டார். அதற்கு அவன் "சாமி நான் என்றால் அது யார். இந்த உடம்பா. அல்லது உயிரா" என்று கேட்டுவிட்டு தன் பாதையில் போய்விட்டன். தத்துவ விசாரணைகளால் இறைவனும் மனிதனும் ஒன்று என்று நிறுவிய அறிஞனுக்கு இந்த படிப்பறிவில்லாதவன் உடம்பு ஒதுங்க வேண்டுமா உயிர் ஒதுங்க வேண்டுமா என்று  கேட்டு திக்குமுக்கட வைத்தது ஆச்சரியமாக இருந்தது. உயிரிலேயே ஆத்மன், பரமாத்மன் என்று பேதமில்லை என்ற சங்கரர் எப்படி தனது உடமபைக் கண்டு அவனின் உடம்பு ஒதுங்க வேண்டும், இல்லையேல் அவரின் உயிரில் கறை படியும் என்று கூற முடியும்? சங்கரர் வெகுவிரைவில் வந்தது சிவன் என்றதைக் கண்டு கொண்டார். அதன் பின்னர்தான் அவர் சம்பிரதாய துறவறத்திலிருந்து விடுபட்டு உணர்வு பூர்வமான துறவறத்துள் நுளைந்தார்.

இந்த கதையை கேள்விப்பட்டிருக்காவிட்டாலும் சைவ சிந்தாந்த நூல்களை படித்து பத்திப்பித்த ஆறுமுகநாவர் ஆறுமுக நாவலர் நிச்சயமாக தாயுமானவரின் பாடல்களை படித்திருப்பார். அவர்தானே ஒரு சிறு பாடல்கலில் சொல்கிறார்  முழு வேத, வேதாந்த தத்துவங்களையெல்லாம் கடந்து போய் சமய அனுட்டாங்களின் பொருள் என்னவென்று." நித்தம் நித்தம் நீராடேல் நிமலன் அருளைபெறலாமேல் தத்தும் தவளையும், மீன்களும் அத்தனிபேறடைய வேண்டாவோ" என்று கேட்டிருக்கிறார். அதை படித்து பதுப்பித்த நாவலர் எப்படி குளக்கரையில் இருந்து சுத்தம் செய்யும் போது எந்த திசையைப் பார்க்கவேண்டும், எதனை விரல்களால் தண்ணீரை தொட வேண்டும். எத்த்னை முறை சுத்தம் செய்ய வேண்டும் என்றேல்லாம் எழுத முடியும்? சுத்தம் செய்வது சுகாதார முறைகளுக்கு மட்டும் தானே அமைய வேண்டும்.

இன்று கிறிஸ்தவர் மதவெறியர்களால் கூட அனுட்டிக்கப்படாத அநுட்டானங்களை, பாதிரியார்கள் அந்த நாட்களில் மதம் மாறுவோருக்கு கற்பித்து கொடுக்க அவற்றை சைவ சமையத்தில் புகுத்தி "கிறிஸ்தவ சைவத்தை" ஆக்கிவைத்தவர்தான் இந்த ஆறூமுக நாலவர். இவரின் சைவ வினாவிடையில் சொல்லியிருப்பதில் பல இவர் அன்றைய அனுஸ்டான பூதிகளான கிறிஸ்தவ பாதிரிகளுடன் போட்டிக்கு தனது சுயமாக ஆரம்பித்தவைகளேயல்லாமல் அவை சைவ சித்தாந்த நூல்களில் எங்கும் காணப்படாதவை.    

உமாபதிசிவாச்சாரியார் கடவுளைவணங்கி ஞானம் அடைவல்திலை என்பதை காட்ட "ஓராதே ஒன்றையும்உற் றுன்னாதே நீமுந்திப் பாராதே பார்த்ததனைப் பார்." என்றுதான் எழுத்திவைத்துவிட்டு போயிருக்கிறார். இவர்கள் நாவலருக்கு முன் வந்த ஞானிகள் அல்லவா? இவர்கள் கொடுத்தபாடங்களை எப்படி நாவலர் தவறவிட்டார்?

Link to comment
Share on other sites

புலிக்காச்சல் எப்படிச் சிலரை விடாது வாட்டிவருகிறதோ அப்படியே சாதிக்காச்சலும் சிலரை விடாது வாட்டிவருகிறது. சாதிப்பாகுபாடுகள் இல்லாத நாடுகள் உலகத்தில் எங்குமே இல்லை இன்றைய அறிவியல் உலகத்தில் சாதியைத் சேர்ந்துள்ள அதன் திமிர், கொடுமை, வக்கிரம் போன்ற தன்மைகள் குறைந்து அழிந்து வருவதையே அனுபவத்தில் காணலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலமையையும் இன்றைய நிலையையும் ஒப்பீடு செய்துபார்க்கும் பொழுது சாதியின் வக்கிரத் தாக்கத்தின் தன்மை தணிந்தே வருகிறது. . அது பொய்யெனில் தணிந்துபோகும் சாதித் திமிரை ஊதி எரியவிட்டு நொந்துபோயிருக்கும் தமிழ் மக்களை மேலும் குழப்பிப் பிரித்து குளிர்காய முயல்வதாகவே கொள்ளமுடியும்.எதுக்கப்பா 

 அருகி வரும் சாதி பாகு பாடுகளை காப்பாற்ற துடிக்கிறீர்கள்? வர வர ஜாதி துவேசத்தை எம்முள் விதைப்பதில் குறியா இருக்குறியல். உங்களைப் போல ஆக்கள் இருக்கு மட்டும் ஜாதி ஒழியாது. நாம் மாற நினைத்தாலும் நீங்க விட மாட்டீங்கள் வாழ்க உங்கள் ஜாதிய கொள்கை. தமிழ் நாட்டில் ஆதிக்க ஜாதியால் பிரச்சனை தமிழ் ஈழத்தில்?

 உண்மையான ,யதார்த்தமான சிந்தனை .................எம் இன்றைய சந்ததி மண்ணுக்குள் போனபின் துளிர்த்தெழும் புதியசந்ததியினர் அனைத்தையும் மாற்றுவர் ......................எதிர்காலத்தில் ஆயிரம் ஆயிரம் இலங்ககாளையர் வருவர் தமிழே உன் உயர்வை உயர்த்துவர்......

இது சம்பந்தமாக நானும் ஒரு திரியில் கருத்திட்டத்தை இங்கே இணைக்கிறேன் .......

சாதியம் என்பது மிருகங்களை விட கேலமான மனித சமூகத்தைக்கொண்ட ஒரு கூட்டத்தை குறிக்கும் .........இந்த கூட்டம் உலக அழிவு ஒன்று வருமாயின் முதலில் அழிவை சந்திக்கும் ,சந்திக்கவேண்டிய ஒரு குழுமம் ............................

எம் இனத்தில் சாதியம் அழியவேண்டுமென்றால் பொருளாதார சமநிலையுள்ள ஓர் சமூக அமைப்பு தேவை .......அந்த சமூக அமைப்பு தேவை என்றால் எம்மை நாமே ஆழக்கூடிய ஓர் கட்டமைப்பு தேவை ...........அந்தக்கட்டமைப்பு தேவை என்றால் எமக்கு தமிழீழம் என்ற ஒரு மண் தேவை...... அந்த மண் தேவை என்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் போல் செயற்படக்கூடிய ஓர் உண்மை வடிவம் தேவை ..............இந்த தேவைகள் நிறைவேரும்பட்சத்தில் சாதியம் என்ற பதம் தமிழர்கள் அத்தியாயத்தில் இருந்து விடைபெறும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.