Jump to content

நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியெற்றத்துடன் நாளை(2/4/2006) ஆரம்பமாகி 10 நாட்கள் திருவிழா நடை பெற்று 10/4/2006 தேர் திருவிழாவும்,11/4/2006 தீர்த்த திருவிழாவும் நடை பெறும்.

சுண்டல்.கந்தப்பு,தூயா,அரவிந்

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பா சீடர்கள்?. விளங்கவில்லை?.

நேற்று கோவிலுக்குப்போனனான். ஒரு மணித்தியாலம் அன்னதானத்துக்கு லைனில நிண்டனான். ஆச்சிமார்கள் இடையில புகுந்து சாப்பாட்டினை வாங்க எனக்கு கடைசியாக மரவள்ளிக்கிழங்குக்கறியும், கத்தரிக்காய்க்கறியும் கிடைக்கவில்லை. அடுத்தமுறை கெதியாய்போய் நிக்கவேணும்.

அது சரி அம்மாவும் சிட்னிக்கு வந்திட்டா. இனி எப்ப அப்பா வரப்போறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல், அன்னதானத்துக்கு கிட்டப்போகவேண்டாம் இலவசச்சுண்டல் என்று ஆராவது சாப்பிட்டுவிடுவார்கள். கவனம்

Link to comment
Share on other sites

அய்h அவுஸ்ரெலியவாழ் தமிழரே உந்த சிட்னி முருகன் ஆலயம்பற்டூpயும் அவ்வப்போது சர்சைகள் எழும்புகிறது யாரது பா சீடர் கா பக்தர் அம்மா அய்யா எண்டு விபரமா யாராவது எழுதுங்கோவன்

Link to comment
Share on other sites

நான் எழுதலாம் என்றால் "சின்ன பிள்ளை சும்மா இருக்கனும்" என்று சொல்லிவிட்டார்கள்..ஆக கந்தப்பு, அரவிந்தன் போன்றவர்கள் தொடங்கினால்..நானும் சுண்டலும் ஒரு சின்ன மகாபாரதமே எழுதிடிவமே:P

Link to comment
Share on other sites

யாரு சொன்னது தூயா?

சும்மா எழுதுங்க,உண்மைய எழுத சின்னப்பிள்ளை எண்டா என்ன,பெரிய ஆள் எண்டா என்ன?

'எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு'

Link to comment
Share on other sites

கந்தப்ஸ் ஆரம்பிக்கட்டும் என்று பார்த்து கொண்டு இருக்கிறேன்...எங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொன்னால் தானே புண்ணியம்...

Link to comment
Share on other sites

கந்தர் கண்டதையும் அடிச்சிட்டு எங்கையாவது கவிண்டு கிடப்பார் அப்பப்ப முழிச்சு பாத்து ஏதாவது எழுதுவார் அதாலை துர்யா நீங்களே தொடங்குங்கோ அப்பதானே என்ன நடக்குதெண்டு அறியலாம் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்h அவுஸ்ரெலியவாழ் தமிழரே உந்த சிட்னி முருகன் ஆலயம்பற்டூpயும் அவ்வப்போது சர்சைகள்  எழும்புகிறது யாரது பா சீடர் கா பக்தர்  அம்மா அய்யா எண்டு விபரமா யாராவது எழுதுங்கோவன்

அம்மாவைப்பற்றி அறிய இந்த இணைப்பினைப்பாருங்கள்.

http://www.amma.org/victoriasatsang/

நகைச்சுவைக்காக அப்பா எப்ப வருவார் என்று எழுதியிருந்தேன்?. அப்பா என்று ஒருவருமில்லை. அம்மா தற்பொழுது அவுஸ்திரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்துக்களினை விட வெள்ளைக்காரர்களின் கடைகளில் தான் அதிகளவில் அம்மாவின் வருகை பற்றிய விளம்பரங்கள் காணப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கோவிலில் மாவீரர் தினப்பூசைகள் கொண்ட்டடப்படுவதில்லை.கோவில் உறுப்பினர் எல்லோரிலும் குறைசொல்லக்கூடாது. ஒருசிலர்கள் மட்டும் சர்ச்சைக்குறியவர்கள். அவர்கள் கோவில் உறுப்பினர் என்பதினால் 63 நாயன்மார்களில் ஒருவர் என்று நினைத்து அடிக்கடி சட்டங்கள் இயற்றுவினம்.

சுனாமியின் போது நடந்த சம்பவம் இது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=2959

இந்தச்சம்பவத்தினை சிட்னியில் உள்ள வானொலி1ல் ஒருவர் நேயர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சொன்னார். இதனைத்தொடர்ந்து, நேயர்கள் பலர் சுனாமியின் போது நடந்த நாகரிகமற்ற செயலுக்கு அவ்வானொலியில் கண்டனம் செலுத்தினார்கள். தொடர்ந்து 2,3 கிழமைகளாக நேயர்கள் தமது கருத்தினை கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு எதிராக தெரிவித்தார்கள். வானொலி1க்கு எதிராக ஆரம்பித்த போட்டி வானொலி2, கோவில் நிர்வாகத்தினைச்சேர்ந்த ஒருவரினைப்பேட்டி கண்டது. அதில் நிர்வாகத்தினைச்சேர்ந்தவர் ' கோவில் சட்டத்திட்டத்திற்கமைய தனிப்பட்டவர்கள் கோவிலில் நிதி சேகரிக்க முடியாது' என்றும் 'சுனாமிக்காக கோவிலில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டதாகவும், அதனால்தான் கோவிலில் நிதி சேகரிக்க வந்தவர்களினை கோவில் வளாகத்தினுள் நிதி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது' என்றும் சொன்னார். (அதன்படி பிறகு உண்டியலில் சேர்த்தகாசும் 2004,2005க்கு வெளினாடு அமைப்புகளுக்கு உதவி வழங்கும் காசு(10000 டொலர் -ஒருவருடம்) கிட்டத்தட்ட 50000 டொலர்களினை தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு வழங்கினார்கள்.).

வானொலி1னால் தான் பிரச்சனை பெரிதானது என்று வானொலி2 வானொலி1க்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.

இப்பிரச்சனையினைபார்த்த ஒஸ்ரெலியா எட்டப்பன்( http://www.yarl.com/forum/viewtopic.php?t=7935 ) தனது ஆசி........ இணையத்தளத்தில், வானொலி2ல் வந்த கோவில் நிர்வாகியின் பேட்டியில் சிலவற்றினை எடுத்து, சிலபொய்களினைப்புதிதாகச்சேர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனுக்குத் தொண்டாற்றும் பக்தர்களுக்குப் போட்டி, பொறமை கூடாது. ஆனால் இக்கோவிலில் நிர்வாகத்தில் உள்ள சிலர்(கோவில் நாயன்மார்கள்) தங்களுக்குள் நான் பெரியவன்,பதவிப்போட்டிகள், தங்களுக்கு சார்பனவர்களுக்காக எடுக்கும் முடிவுகள் கவலைதரும் விடயங்களாக இருக்கிறது. ஆனால் நிர்வாகத்தில் உள்ள எல்லாரையும் குறைசொல்லக்கூடாது. சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அந்த நல்லவர்களில் ஒருவர், வன்னியில் தனது சொந்தப்பணத்தில் மிகப் பெறுமதியான வைத்திய உபகரணங்களினை வாங்கி தாயகத்துக்கு பங்களிப்புச் செய்து வருகிறார்.

வானொலி1 10வருடத்துக்கு முதல் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப்போட்டியாக வானொலி2 3,4 வருடத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு வானொலிகளும் தாயகத்துக்கு பங்களிப்பினைச் செய்கின்றன. வானொலி2 இனைவிட கிட்டத்தட்ட வானொலி1 க்கு 5,6 மடங்கு ரசிகர்கள் சிட்னியில் உள்ளனர். வானொலி2 நிர்வாகிகள் சிலரும் கோவில் நிர்வாகத்தில் உள்ளார்கள்.

சுனாமிக்கு முன்பு முருகன் கோவில் வெள்ளிக்கிழமைப்பூசைகள் வானொலி1ல் மட்டும் நேரடி ஒலிபரப்பு வந்தன. வருடாந்த மகோற்சவ பூசைகளும் ஒலிபரப்பு செய்யப்பட்டன. சிட்னியில் உள்ள வயோதிபர்கள் வீட்டில் இருந்தே பூஜைகளினை கேட்டு முருகப்பெருமானை வழிபட்டு வந்தார்கள். சுனாமிப்பிரச்சனைக்குப்பிறக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் அண்மையில் சைவமகானாடு நடைபெற்றது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=9450 முருகன் கோவிலில் சைவமன்றம்தான் இவ்விழாவினை ஒழுங்கு செய்தார்கள். வானொலி2க்கு நேரடி ஓளிபரப்பினை வழங்கினார்கள். வானொலி1க்கு நேரடிஓளிபரபினை வழங்கவில்லை. வானொலி1ல் விளம்பரமும் செய்யவில்லை. இந்த மகானாட்டின் போது மகானாட்டு மலர் ஒன்றினை வெளியிட்டார்கள். பல அறிஞர்கள் நல்ல, நல்ல சைவக்கட்டுரைகள் எழுதினார்கள். கோவில் நிர்வாகத்தினைச்சேர்ந்த ஒருவர் எழுதிய கட்டுரையில் 'சைவசமயத்தினர் இப்பொழுது சைவம் எது என்று விளக்கமில்லாமல் மனிதர்களையும் கடவுளாக நினைத்துக்கும்பிடுகிறார்கள

Link to comment
Share on other sites

அடட உலகெலாம் உள்ள தமிழர் உணர்ந்து ஒதவேண்டிய கடவுளிற்கு உண்டியலாலையும் வானொலியாலையும் இத்தனை தொல்லையா?ஏற்கனவே ஒண்டும் வேண்டாமெண்டு கோமணத்துடன் சிட்னியின் ஆண்டியான முருகனுக்கு இத்னை சோதனையா? பாவம் தாங்க மாட்டாரய்யா தாங்க மாட்டார் :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானொலி1 நத்தார்தினத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தோடு சேர்ந்து தாயகத்துக்கு வருட வருடம் நிதி சேகரித்து வந்தது. நேரடி ஓளிபரப்பில் மக்கள் நன்கொடைகளினை அள்ளி அள்ளி வழங்குவார்கள். சென்ற நத்தாரின் போது வானொலி1 வழமைபோல தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் உதவியுடன் நிதி சேகரித்தது. வானொலி2, சிட்னிக் கத்தோலிக்க அமைப்போடு சேர்ந்து இதே திகதியில் வானொலி1க்குப்போட்டியாக தாயகத்துக்கு உதவ நிதி சேர்த்தது. வானொலி1, கத்தோலிக்க அமைப்பினை வேறு ஒருனால் மக்கள் குழப்பமடையமல் இருப்பதற்காக நிதி சேகரிக்குமாறு கேட்க, கத்தொலிக்க அமைப்பு ஈழத்தில் உள்ள கிழக்கு கத்தொழிக்க அமைப்பு ஒன்றுக்கு 'வானொலி1 தங்களினை நிதி சேகரிக்கத்தடையாக உள்ளது என்று கடிதம் எழுதி அனுப்பியது. அதன் பிரதியினை வானொலி1,வானொலி2, மற்றைய தமிழ் ஊடகங்களுக்கும் வழங்கியது. வானொலி2 தனது வழமையான செய்திகள் வாசிப்பதினை சிறு நிமிடங்களுக்கு பிற்போட்டுவிட்டு இப்பிரதியினை மிகமுக்கியவிடயமாகக் கருதில் கொண்டு வாசித்தது. இதனால் வானொலி1ல் மக்கள் கலந்து கொள்ளும் நேரடி ஒலிபரப்பில் பல மக்கள் வானொலி2க்கும், சிட்னி கத்தோலிக்க அமைப்பிற்கும் எதிராகக் கருத்தினைத்தெரிவித்தார்கள். மற்றைய ஊடகங்கள் இப்பிரதியினைக் கண்டுகொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

கந்தப்பு உமது தகவல்களுக்கு நன்றி,

இப்போது தான் எமக்கு செய்திகளுக்குப்பின்னால் இருக்கும் பிரச்சினை விளங்குகின்றது. நீர் கூறியவற்றை வைத்துப் பார்க்கும் போது, மதம் என்பதை வைத்து வானொலி இரண்டு, வனொலி ஒன்றை முந்தப் பார்க்கிறது என்பது.இதைச் சாட்டாக வைத்து பிரிவினயை வளர்த்து அதை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும்,புலிகளுக்

Link to comment
Share on other sites

சுனாமியின் போது நடந்த சம்பவம் ஏற்கனவே களத்தில் வந்திருந்தது..வாசித்தீர்கள் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் செய்யும் பிழைகளினால் அந்த அமைப்புகள்/ நிறுவனங்களினை முற்று முழுதாகக்குறை சொல்லக்கூடாது. குறை சொல்வதினால் இவ்வமைப்புகளில் உள்ள நல்லவர்களுக்கும் கூடாத பெயர்கள் ஏற்படும். வானொலி1,வானொலி2 போட்டிகள் இருந்தாலும் இரண்டு வானொலிகளும் தாயகப்போராட்டத்திற்கு ஆதரவான வானொலிகள். இவ் வானொலிகள் பல்வேறு விதத்தில் தாயகப்போராட்டத்திற்கு சிட்னியில் பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றது.

சிட்னியில் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கு முருகன் கோவில் திருவிழா வழி வகுக்கிறது. திருவிழாவின் போது ஈழத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரவித்துவான்களினை அழைத்து கச்சேரிகள் வைப்பார்கள். இந்தமுறை இணுவில் சின்னராசாவின் மகனினதும்,இணுவில்,அளவெட்டி கலைஜர்களின் மேள நாதஸ்வர இசையினைக் கேட்கும்போது ஈழத்தில் இருப்பதுபோலத்தோன்றுகின்றது. இம்முறை தேர்த்திருவிழா வருகிற திங்கள் நடைபெறவுள்ளது. பலர் அன்று வேலையில் இருந்து லீவு எடுத்துக்கொண்டு முருகப்பெருமானின் ரத உற்சவத்தினைக் கண்டுகளிப்பார்கள். ஈழத்தினை விட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு இக்கோவிலுக்குச் செல்லும்போது நாதஸ்வரக்கச்சேரிகள், காவடிகள், அன்னதானம், தண்ணீர் பந்தல் போன்றவற்றினைப் பார்க்கும் போது ஈழத்தில் இருப்பது போலத் தோன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா, நீங்கள் என்னை எழுதச்சொன்னீர்கள். அதன் பிறகு நீங்களும், சுண்டலும் ஒரு மகாபாரதம் எழுதுவதாகச்சொன்னீர்கள். எப்ப எழுதப்போறிர்கள்?

Link to comment
Share on other sites

கந்தப்பு எழுதியது:

"சிட்னியில் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கு முருகன் கோவில் திருவிழா வழி வகுக்கிறது. திருவிழாவின் போது ஈழத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரவித்துவான்களினை அழைத்து கச்சேரிகள் வைப்பார்கள். இந்தமுறை இணுவில் புண்ணியமூர்த்தியின் வாரிசுகளின் நாதஸ்வர இசையினைக் கேட்கும்போது ஈழத்தில் இருப்பதுபோலத்தோன்றுகின்றது. இம்முறை தேர்த்திருவிழா வருகிற திங்கள் நடைபெறவுள்ளது. பலர் அன்று வேலையில் இருந்து லீவு எடுத்துக்கொண்டு முருகப்பெருமானின் ரத உற்சவத்தினைக் கண்டுகளிப்பார்கள். ஈழத்தினை விட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு இக்கோவிலுக்குச் செல்லும்போது நாதஸ்வரக்கச்சேரிகள்இ காவடிகள்இ அன்னதானம்இ தண்ணீர் பந்தல் போன்றவற்றினைப் பார்க்கும் போது ஈழத்தில் இருப்பது போலத் தோன்றும்."

நல்ல காரியங்கள் தான் சிட்னியில் செய்கின்றார்கள். அதுவும் ஈழத்திலிருந்து வித்துவான்களை அழைக்கின்றார்கள். ஆனால் கனடாவில் இப்படி அழைப்பது குறைவு. இங்கு கோயில்களில் இந்தியன் பாடகர்களை அழைத்து சீடி, டீவீடி வெளியிடுகின்றார்கள். எப்பதான் இவர்கள் திருந்துவார்களோ தெரியாது :?: . பொறுத்திருந்து பார்ப்போம். :roll:

Link to comment
Share on other sites

என்ன சுண்டல் இங்கை வந்து அரோகரா போடாதையும் கோயிலடியிலை போய் போட்டாலும் அன்ன தானமாவது கிடைக்ககும் :P :P இதை படிக்க ஒண்டு விழங்கிது சும்மா கிடக்கிற பிரச்சனையை ஒரு வானொலி ஊதி பெரிசாக்கிது கடைசியிலை பிரச்சனை பெரிசாகி கொயிலை அவுஸ்ரேலியா அரசு இழுத.;து சாத்தாமல் விட்டால் சரி அதுசரி இதிலை சுண்டல் எந்த வானொலி 1 அல்லது 2 :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்லுங்க..! முருகன் கோயில் சாப்பாடு அந்த மாதிரி..! நிர்வாகங்கள் பற்றியெதுவும் தெரியாது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சின்னச் சின்ன குகைகளுக்குள், குடோன்களுக்குள் கோயில் இருக்க, சிட்னியில் பிரதான வீதியொன்றின் ஓரம் கோபுரத்துடன் விசாலமாக அமைந்திருக்கும் இக்கோயில் கோயில் சென்று வணங்க விரும்புகின்றவர்களுக்கு ஏற்ற இடம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.