Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழ் சிறி

"ஜீன்ஸ்" அணியப்போறீங்களா? இதைப் படிங்க!

Recommended Posts

jeans-54563.jpgropa-colombiana-jeans-levanta-cola-41949-2.jpg

ஜீன்ஸ் உடை அணியப்போறீங்களா? இதைப் படிங்க!

ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஒரு உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரியங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடிய உடை, அழகை எடுப்பாக எடுத்துக்காட்டும் என்றெல்லாம் கூறுவார்கள். ஜீன்ஸ் உடை அணிய எத்தனை காரணங்களை கூறினாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது.

பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அது உடலை இருக்கிப் பிடித்து `மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கிவிடும்.

ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்குவதால் பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக செல்லும் மெல்லிய நரம்பு பாதிக்கப்படும் என்று கூறும் மருத்துவர்கள் இதனால் கடுமையான கால் வலி ஏற்படும் என்கின்றனர்.

ஜீரணம் பாதிக்கும்

நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆண்மைக் குறைபாடு

பெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம்.. "இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்" என்று சுவீடனில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து `சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி' என்ற ஒரு கொள்கையை ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். ஆண்கள் இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது ஆண்களின் விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுக்கமான உடை அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர்களாக ஆகக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரோக்கியமான உடை

ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Share this post

Link to post
Share on other sites

அப்ப பழையபடி பெல்பொட்டம் தான் திறமான சாமான் போல கிடக்கு சிறியர் . இணைப்பிற்கும் , பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் .

Share this post

Link to post
Share on other sites

எனக்கு தெரிந்தவரையில் சாரம்தான் நல்லது இல்லை என்றால் விவேக் ஒரு சினிமா படத்தில் கூறுவதுபோல நைற்றி நல்லாய் இருக்கும். :D:lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

இப்ப எல்லாம் எங்க இறுக்கமாக ஜீன்ஸ் போடுகிறார்கள் சிறி அண்ணா... :icon_mrgreen:

baggy-jeans-300x214.jpg

baggyjeans.jpg

2673148136_1567e453ff.jpg

Share this post

Link to post
Share on other sites

11-lungies300.jpg

கோமணம், பாவாடை,சாறம்,வேட்டி சட்டையிலை உள்ள சுகம் சுகாதாரம் விண்ணான உலகத்துக்கு எங்கை தெரியப்போகுது?

Share this post

Link to post
Share on other sites

இப்ப எல்லாம் எங்க இறுக்கமாக ஜீன்ஸ் போடுகிறார்கள் சிறி அண்ணா... :icon_mrgreen:

baggy-jeans-300x214.jpg

baggyjeans.jpg

2673148136_1567e453ff.jpg

ஆண்கள்தான் இப்படி தொள தொள என்று அணிகிறார்கள் குட்டி.

சிறி இணைந்த படங்களைப் பாருங்கள். பெண்கள் எவ்வளவு இறுக்கமாக அணிகிறார்கள். அவர்களுக்கு இந்த நோய்கள் வந்து விடுமோ என்று மனவருத்தமாக உள்ளது. :(

தப்பிலி, முதல் பகுதியை மட்டும் ஆழமாக பார்த்திட்டு பீல் பண்ணுறீங்கள் போல... ^_^ மிச்ச இரண்டு பகுதிகளையும் கொஞ்சம் பாருங்க... :rolleyes: அதற்குத் தான் அந்தப் படங்களை இணைத்தேன்.. :icon_mrgreen::D

Share this post

Link to post
Share on other sites

அப்ப பழையபடி பெல்பொட்டம் தான் திறமான சாமான் போல கிடக்கு சிறியர் . இணைப்பிற்கும் , பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் .

schlaghose-m-52-hose-herren-70er-schlager-braun-schlagerparty-bell-bottom-braun.jpg

பெல் பொட்டம், போட்ட காலத்தை மறக்க முடியாது கோமகன் :) .

34, 36 இஞ்சி அகலத்திலும் பெல் பொட்டம் இருந்தது.

பலர் பெல் பொட்டம், போட்டுக் கொண்டு.... சைக்கிள் ஓடி, செயினுக்குள் கால்சட்டை மாட்டி பலமுறை அவதிப்பட்டுள்ளார்கள் :lol: .

அதிலும்.... சைக்கிள் கொழுப்பு பிரண்டு, அந்தக் கொழுப்பை எடுக்க கால் சட்டையை... மண் எண்ணைக்குள் ஊற வைத்தவர்களும் இருக்கிறார்கள். :D

Share this post

Link to post
Share on other sites

எனக்கு தெரிந்தவரையில் சாரம்தான் நல்லது இல்லை என்றால் விவேக் ஒரு சினிமா படத்தில் கூறுவதுபோல நைற்றி நல்லாய் இருக்கும். :D:lol: :lol:

தமிழரசு, சாரம் நல்லது தான்... ஆனால் பொறுத்த நேரம், அவிண்டு போகும்.

குமாரசாமி அண்ணை மாதிரி... உள்ளுக்கு ஒண்டும் கட்டாமல் இருந்தால்... மானம் போயிடும். :D

Share this post

Link to post
Share on other sites

இப்ப எல்லாம் எங்க இறுக்கமாக ஜீன்ஸ் போடுகிறார்கள் சிறி அண்ணா... :icon_mrgreen:

baggy-jeans-300x214.jpg

baggyjeans.jpg

2673148136_1567e453ff.jpg

ஆண்கள் தங்கள் உடல் நலத்தை சிந்தித்து.... மேலே உள்ள தொள, தொள உடுப்பைப் போடுவதைப் பெண்களும் முன்வரவேண்டும் குட்டி. :rolleyes::D:lol::icon_mrgreen:

11-lungies300.jpg

கோமணம், பாவாடை,சாறம்,வேட்டி சட்டையிலை உள்ள சுகம் சுகாதாரம் விண்ணான உலகத்துக்கு எங்கை தெரியப்போகுது?

வெய்யில் காலத்து இந்த உடுப்புகள் சரி அண்ணை. :icon_idea:

குளிர் காலத்துக்கு எல்லாம், விறைச்சுப் போகுமே.... :o

ஆண்கள்தான் இப்படி தொள தொள என்று அணிகிறார்கள் குட்டி.

சிறி இணைந்த படங்களைப் பாருங்கள். பெண்கள் எவ்வளவு இறுக்கமாக அணிகிறார்கள். அவர்களுக்கு இந்த நோய்கள் வந்து விடுமோ என்று மனவருத்தமாக உள்ளது. :(

தப்பிலி உண்மையாக மனவருத்தப் படுகிறாரா.... என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது. :D:lol:

Share this post

Link to post
Share on other sites

தமிழரசு, சாரம் நல்லது தான்... ஆனால் பொறுத்த நேரம், அவிண்டு போகும்.

குமாரசாமி அண்ணை மாதிரி... உள்ளுக்கு ஒண்டும் கட்டாமல் இருந்தால்... மானம் போயிடும். :D

:lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்கள் ஆதிவாசி கள் போல்

நாங்கள் உடை அணிந்தால் காற்றோட்டமாக இருக்கும் :lol::D

Share this post

Link to post
Share on other sites

எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்கள் ஆதிவாசி கள் போல்

நாங்கள் உடை அணிந்தால் காற்றோட்டமாக இருக்கும் :lol::D

அதுக்கென்றும் கடற்கரைகள் பல இருக்கு :D

Share this post

Link to post
Share on other sites

தமிழரசு, சாரம் நல்லது தான்... ஆனால் பொறுத்த நேரம், அவிண்டு போகும்.

குமாரசாமி அண்ணை மாதிரி... உள்ளுக்கு ஒண்டும் கட்டாமல் இருந்தால்... மானம் போயிடும். :D

என்ன சிறித்தம்பி! இதிலை மானம் போக என்ன கிடக்கு? கடவுளாய் குடுத்தது..கூனோ குருடோ....குஞ்சோ...குருவியோ...குட்டையோ...நெட்டையோ...வெட்டையோ.......நானும் சாதாரண மனிசன் தான்..... :lol:

Share this post

Link to post
Share on other sites

அதுக்கென்றும் கடற்கரைகள் பல இருக்கு :D

அங்கு தான் அடிக்கடி உலாவுவீர்களா?

பேர்த்துக்கு அண்மையில் உள்ள அழகான கடற்கரைகளில் இலையான் தொல்லை தாங்காது.

Share this post

Link to post
Share on other sites