Jump to content

??????????? ......................

Recommended Posts

பொய்மையும் கயமையும்

கூடிக் கொக்கரிக்க ,

ஒட்டிய வயிறும்

பஞ்சடைத்த கண்களும்,

உங்களை நோக்கியே .............

நீங்கள் சொல்கின்ற

ஒரு இசங்களும் என்செவியில்

எட்டவேயில்லை .

நீங்கள் உல்லாசமாய்

உங்கிருக்க ,

குடும்பமாய் உறுமினோம் .

ஊழிக்காற்றில் உக்கியே போனோம் .

எச்சங்களாய் நாங்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக ,

இருப்பதற்கு வக்கற்றவர்களாக

இரைப்பையை நிரப்ப

கருப்பையை விற்கவே துணிந்தோம் .

முன்பு நான் உறுமிய புலி .

இன்று நான் சருகு புலி .

உங்கள் உல்லாசத்தில்

ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் ,

நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ......

எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

Link to comment
Share on other sites

பொய்மையும் கயமையும்

கூடிக் கொக்கரிக்க ,

ஒட்டிய வயிறும்

பஞ்சடைத்த கண்களும்,

உங்களை நோக்கியே .............

நீங்கள் சொல்கின்ற

ஒரு இசங்களும் என்செவியில்

எட்டவேயில்லை .

நீங்கள் உல்லாசமாய்

உங்கிருக்க ,

குடும்பமாய் உறுமினோம் .

ஊழிக்காற்றில் உக்கியே போனோம் .

எச்சங்களாய் நாங்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக ,

இருப்பதற்கு வக்கற்றவர்களாக

இரைப்பையை நிரப்ப

கருப்பையை விற்கவே துணிந்தோம் .

உங்கள் உல்லாசத்தில்

ஒருதுளி வந்தால் ,

நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ......

எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

நியங்களை சொல்லும் வரிகள்...

எங்கோ ஒரு மூலையில் ஓடி ஒளிந்துகிடக்கும் மனச்சாட்சியை..

வெளியால் இழுத்து வருகின்றது!

நன்றி கோ! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உல்லாசமாய்

உங்கிருக்க ,

குடும்பமாய் உறுமினோம் உங்கள் உல்லாசத்தில்

ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் ,

நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ......

எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

புலம்பெய்ர்ந்தவர்கள் எல்லோரும் உல்லாசவாழ்க்கைவாழ்கின்றனர் என்ற பொதுவான கருத்தை முதலில் மாற்ற வேண்டும்.மற்றும்படி உங்கள் எழுத்துக்கள் உண்மையானவை

Link to comment
Share on other sites

புலம்பெய்ர்ந்தவர்கள் எல்லோரும் உல்லாசவாழ்க்கைவாழ்கின்றனர் என்ற பொதுவான கருத்தை முதலில் மாற்ற வேண்டும்.மற்றும்படி உங்கள் எழுத்துக்கள் உண்மையானவை

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் வாத்தியார் . உல்லாச வாழ்வு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது , நான் சொன்ன மக்களுடன் ஒப்பிடும் பொழுது . புலத்துக் கோயில் திருவிழாக்களும் , கல்யாண , பிறந்தநாள் வைபவங்களும் , ஹெலியிலும் , லூனோ கார் , பல்லக்கில் பெடிச்சியை இறக்கிய சமத்தியச் சடங்குகளையும் எந்தவகையில் சேர்ப்பது ??????????? மனச்சாட்சி இருந்தால் சொல்லுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் வாத்தியார் . உல்லாச வாழ்வு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது , நான் சொன்ன மக்களுடன் ஒப்பிடும் பொழுது . புலத்துக் கோயில் திருவிழாக்களும்  ,  கல்யாண , பிறந்தநாள் வைபவங்களும் ,  ஹெலியிலும் , லூனோ கார் , பல்லக்கில் பெடிச்சியை இறக்கிய சமத்தியச் சடங்குகளையும் எந்தவகையில் சேர்ப்பது ??????????? மனச்சாட்சி இருந்தால் சொல்லுங்கள் .

சரி புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிலர் நீங்கள் கூறுவதுபோல் செய்தாலும்அப்படியான நிகழ்வுகள் ஈழத்தில் நடைபெறுவதில்லையா?அல்லது முள்ளிவாய்க்காலின் பின்னர் நடைபெறவில்லையா?நல்லூர்க்கந்தன் ஆலயத்திலும் தான் விமானத்தில் பூமழை பொழிந்தார்கள்.அதை என்னவென்று சொல்வது.ஈழத்திலே எத்தனை கோவில்களில் உல்லாசமாகத் திருவிழாக்கள்நடைபெறவில்லை?யாழில் நடக்கும் உல்லாசக் கூத்துக்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள்செய்வது குறைவானதாகவே எனக்குப் படுகின்றதுஎல்லாவற்றுக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் குறைகூறுவதைஒருபோதும் நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை.

வாத்தியாரின் கருத்தை நான் வழிமொழிகிறேன்..!

Link to comment
Share on other sites

வாத்தியாரின் கருத்தை நான் வழிமொழிகிறேன்..!

உங்களுக்கு என்று சொந்தக் கருத்து எதுவும் இல்லையா இசைக்கலைஞன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாருக்குமே மனச் சாட்சி இல்லை....தவறுகளுக்கு நொண்டி நியாயம் கற்பிப்பதிலையே காலம் கழிகிறது... :(

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி ,

மனச்சாட்சி இல்லாவிட்டாலும் மன்னிக்கலாம் ,அவர்களை எங்களின் பொய்மைகளால் நிர்க்கதி ஆக்கியதை மன்னிக்கமுடியாது.

இந்த நாடகம் மேடை ஏறி பலவருடங்கள் அதை விளங்காமல் இருந்தவர்களில் தான் பிழை சொல்வேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிலர் நீங்கள் கூறுவதுபோல் செய்தாலும்அப்படியான நிகழ்வுகள் ஈழத்தில் நடைபெறுவதில்லையா?அல்லது முள்ளிவாய்க்காலின் பின்னர் நடைபெறவில்லையா?நல்லூர்க்கந்தன் ஆலயத்திலும் தான் விமானத்தில் பூமழை பொழிந்தார்கள்.அதை என்னவென்று சொல்வது.ஈழத்திலே எத்தனை கோவில்களில் உல்லாசமாகத் திருவிழாக்கள்நடைபெறவில்லை?யாழில் நடக்கும் உல்லாசக் கூத்துக்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள்செய்வது குறைவானதாகவே எனக்குப் படுகின்றது

எல்லாவற்றுக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் குறைகூறுவதைஒருபோதும் நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை.

வாத்தியாரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..!

Link to comment
Share on other sites

உங்களுக்கு என்று சொந்தக் கருத்து எதுவும் இல்லையா இசைக்கலைஞன் ?

இல்லை.. இந்தத் திரியில்.. :D

Link to comment
Share on other sites

வாத்தியாரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..!

Jalra.GIF

Link to comment
Share on other sites

சரி புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிலர் நீங்கள் கூறுவதுபோல் செய்தாலும்அப்படியான நிகழ்வுகள் ஈழத்தில் நடைபெறுவதில்லையா?அல்லது முள்ளிவாய்க்காலின் பின்னர் நடைபெறவில்லையா?நல்லூர்க்கந்தன் ஆலயத்திலும் தான் விமானத்தில் பூமழை பொழிந்தார்கள்.அதை என்னவென்று சொல்வது.ஈழத்திலே எத்தனை கோவில்களில் உல்லாசமாகத் திருவிழாக்கள்நடைபெறவில்லை?யாழில் நடக்கும் உல்லாசக் கூத்துக்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள்செய்வது குறைவானதாகவே எனக்குப் படுகின்றதுஎல்லாவற்றுக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் குறைகூறுவதைஒருபோதும் நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை.

கருத்தைக் கருத்தால் மோதிய உங்கள் நேர்மைக்குத் தலைவணங்குகின்றேன் வாத்தியார் . மேலதிக கருத்துக்கள் கூற விரும்பவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைக் கருத்தால் மோதிய உங்கள் நேர்மைக்குத் தலைவணங்குகின்றேன்

வாத்தியார் . மேலதிக கருத்துக்கள் கூற விரும்பவில்லை .

இது உண்மையென்றால் எங்களது பதிலும் அதை ஆதரித்துத்தானே. அப்படியாயின் அதற்கும் இதுவே பதிலாக வந்திருக்கணும் கோ.

புலத்தில் இருந்து கொண்டு புலம் பெயர்ந்தோர் எல்லோரும் தவறானவர்கள் என்று சொல்வதும் புலம் பெயர்ந்தோர் எல்லோரும் தாயகத்தை மறந்தவர்கள் என்பதும் உண்மைக்கு மாறானது.

மற்றும்படி

நீங்கள் எழுதிய ஆடம்பரச்செலவுககள் ஊரிலும் அதிலும் புலம்பெயர்ந்தவர் வியர்வையில் நடக்கின்றன. மற்றும்படி இப்படியான ஆடம்பரச்செலவுகளுக்கு நானும் எதிரானவன். அதேநேரம் அவர்களது பொருளாதார வளர்ச்சி கண்டு மகிழ்பவன். அத்துடன் அவர்கள் தாயகத்துக்கு செய்யாமலில்லை.

வாத்தியார் தனது கருத்தை துணிவாக நேர்மையாகக் கருத்துகளத்தில் பதிந்தார் . ஆனால் , நீங்கள்???????? ஏன் ??

Link to comment
Share on other sites

முன்பு நான் உறுமிய புலி .

இன்று நான் சருகு புலி .

உங்கள் உல்லாசத்தில்

ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் ,

நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ......

எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

அண்மையில் தனது உயிரை மாய்த்துக்க்கொண்ட முன்னால் வி.புலி உறுப்பினரின் தற்கொலை போன்ற ஒன்றை மேலும் நடக்காமல் எம்மால் செய்ய முடியும்.மனம் வைக்க வேண்டும்.கோமகன் யதார்த்த பூர்வமான கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கருத்துக்களத்தில் வழமைதானே

ஒருவருடைய கருத்துக்கு விருப்பு வாக்கு போடுவதும் எம் கருத்தும் அதுவே என ஆதரித்து நேரத்தை மீதம் செய்வதும்.

இதில் எப்படி வந்தது சொந்தக்கருத்து இல்லையா என்பது?

சொந்தச்சரக்கு இல்லையா என்பதை அடிக்கடி பாவிக்கின்றீர்கள்....???:( :( :(

pavina-bodum-espresso-8-cl.jpg

எங்கள் நட்பில் கைவைக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அது அங்க அங்க இருக்கணும்

அதுதான் அழகு.

பெருமை.

நன்றி.

Link to comment
Share on other sites

சத்தியமாச் சொல்லுறன் அண்ணைமார் அக்காமார்.... என்ர மனச்சாட்சிக்கு தெரிந்து புலம்பெயர்ந்து வந்த நான் அங்க செத்து மடிஞ்ச சனத்துக்கோ அல்லது அதுக்கிள்ள கிடந்து தப்பிப் பிளைச்ச மிச்சச் சனங்களுக்கோ 'பெருசா ஒண்டும்' செய்து கிழிக்கேல. அதுக்காக வெட்கப்படுறன். சில வேளைகளில் என்னை நினைத்தால் எனக்கே கேவலமாய் இருக்கும். :(

உங்கட உங்கட மனச்சாட்சி என்ன சொல்லுது எண்டு அதிட்டதான் கேக்கோணும். :rolleyes:

Link to comment
Share on other sites

உங்கள் ஏக்கம் நியாயமானது. இன்று ஏக்கங்கள் மட்டுமே எமது வாழ்வாகிப் போய்விட்டது.. கவிதைக்கு நன்றிகள் கோமகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்று சொந்தக் கருத்து எதுவும் இல்லையா இசைக்கலைஞன் ?

ஒருவருடைய கருத்துப் பலருடைய கருத்துக்களுடன் ஒருமித்துச் செல்வதும்

பலருடைய கருத்துக்களை ஒருவர் ஏற்றுக் கொள்வதும் கருத்துக்களத்தில்

புதிதல்லவே கோமகன்.

இப்படி எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஒவ்வொரு திரியும்

கிடப்பில் போய்விடும்

Link to comment
Share on other sites

ஒருவருடைய கருத்துப் பலருடைய கருத்துக்களுடன் ஒருமித்துச் செல்வதும்

பலருடைய கருத்துக்களை ஒருவர் ஏற்றுக் கொள்வதும் கருத்துக்களத்தில்

புதிதல்லவே கோமகன்.

இப்படி எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஒவ்வொரு திரியும்

கிடப்பில் போய்விடும்

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் கருத்துக்களுக்கு .

Link to comment
Share on other sites

உங்கள் ஏக்கம் நியாயமானது. இன்று ஏக்கங்கள் மட்டுமே எமது வாழ்வாகிப் போய்விட்டது.. கவிதைக்கு நன்றிகள் கோமகன்.

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு கல்கி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.