கருத்துக்கள உறவுகள் தமிழரசு பதியப்பட்டது May 12, 2012 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது May 12, 2012 தங்கத் தலைவனின் அடிச்சுவட்டில் உன் பாதம்பதித்து,கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரனே! இன்று உன் வீரவணக்க நாள். மூத்த புலியொன்றின் மூச்சடங்கிய நாள். அண்ணை அண்ணை என உச்சரித்த உன் நாவின் பேச்சிழந்த நாள். இன்று தமிழீழ மக்கள் நாம்,கண்ணீர் சிந்திக் காணிக்கைசெலுத்தி, வண்ணமலர் கொண்டுவந்து உன்பாதம் பணிகின்றோம். புல்லர்கள் அழிந்திடப் புனிதப்போர் புரிந்தவனே,வல்ல உன் துணிவுதனை வரலாறு சொல்லும். நாம் பெறும் வெற்றியின் வேரே,வீரத்தின் விளைநிலமே, வீழ்ந்தாலும் நீ விதையாகிப்போனாய். ஈழதேசத்தின் தூணாய் நிமிர்ந்து நின்றவனே உன் உயிரின் துடிப்பு அடங்கும்போதும்,எங்கள் உரிமைகேட்டல்லவோ அடங்கியது. சோதனை பல சந்தித்து சாதனை படைத்தவனே,துணிவு உன் காலடியில் துவண்டுகிடந்தது. அச்சத்திற்கு உன்னை அண்டுவதற்கே அச்சம்,அதனால் உன்னிடம் அச்சமில்லை. உன் செயலில் உயிர்ப்பிருந்தது,அதனால் உன் கடமையில் துடிப்பிருந்தது. விடுதலை எனும் இலட்சியப் பசி உனக்குள்ளே தீயாய் எரிந்ததால், மரணம் உன் காலடியை மண்டியிட்டது. மலையென உயர்ந்து தமிழர் மனங்களில் நிறைந்து,மலரும் நினைவாய் வாழும் மூத்த தளபதியே,எங்கள் தலைவன் புன்முறுவலுடன் உச்சரிக்கும் பெயர் உன் பெயர்தானே. அந்த சொர்ணத்தை எங்கள் நெஞ்சத்து நினைவுக்கருவறையிலிருந்து மறப்போமா?அல்லது மறைப்போமா? இல்லவே இல்லை. அது எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட சரித்திரம். என்றென்றும் தமிழீழ தேசத்தில் ஒலிக்கப்படும் வேதம். உறங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிய ஈழத்தின் வெற்றிச் சங்கொலியே, மீட்கப்படும் எம் தேசத்தில் உன் கல்லறை நிமிர்ந்து நிற்கும். அது எங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ,அன்றேல் மலர்வளைய மரியாதைக்காகவோ அல்ல,மாறாக எங்கள் மண்ணின் நிலைவாழ்விற்கு உனது மனவுறுதி மகுடம் சூட்டவேண்டும் என்பதற்காகவே. நீ சுமந்த விடியலின் கனவுகளும்,எங்கள் தேசத்திற்காக வெகுண்டெழுந்த உணர்வுகளும்,தமிழீழ வரலாற்றில் என்றென்றும் நிலைத்துநிற்கும். என்றென்றும் தமிழீழ தேசம் உன் நினைவைச் சுமந்திருக்கும். http://youtu.be/zSnbczLspq8 http://www.eeladhesa...=4798&Itemid=53 http://youtu.be/w3BoSLWR-xo தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். யேர்மன் திருமலைச்செல்வன். http://www.eeladhesa...chten&Itemid=50 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம். Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted May 12, 2012 Share Posted May 12, 2012 மூன்று வருடங்களுக்கு முன் என் கைத்தொலை பேசி அலறுகின்றது... மிகவும் விறைத்து போன நிலையிலிந்த மனம் கொஞ்ச நேரத்தின் பின் தான் தொலைபேசி அழைக்கின்றது என்பதை புரிந்து கொள்கின்றது... வன்னியில் இருந்த தொடர்புகள் மூலம் ஆரம்பத்தில் பல தகவல்களும் ஈற்றில் அவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒன்றிரண்டுமாக வந்து கொண்டு இருந்த வேளை... ஒவ்வொரு தொலைதூர இலக்கத்தை காட்டி வரும் தொலைபேசி இலக்கங்களும் சாவை தாங்கி வந்து கொண்டு இருந்தன.. 'மச்சான்...' என்று அழைத்தவனின் குரல் கரகரப்பாக கேட்டது 'சொல்லடா..'' கொஞ்ச இடைவெளியின் பின் 'சொர்ணம் அண்ணை செத்துப் போயிட்டார் என்று சொல்லினம்டா' 'எப்படி....டா...உண்மையாகவா...நீ கேள்விப்பட்டியா' 'ஆள் சயனைட் அடித்தது என்று சொல்லினம்...காயப்பட்டு இருந்தாராம்' ' மனம் ஏற்கனவே மோசமான செய்திகளை கேட்டுக் கொண்டு விறைத்து இருந்தாலும், சொர்ணம் அண்ணையின் சாவுச் செய்தி பேரதிர்ச்சி தந்ததாக அமைந்தது 'இனி தலைவரின் நிலமை என்னவாகப் போகுதடா" எவருக்குமே விடை தெரியாத கேள்வி என் நண்பனையும் மெளனமாக்கியது. சொர்ணம் அண்ணைக்கும் தலைவருக்குமிடையிலான நட்பை புரிந்தவர்களுக்கு என் கேள்வியும் புரிந்து இருக்கும் அவனுடன் கதைத்த பின் யாழைத்தான் உடனே மேய்ந்தேன். திண்ணையில் இந்த தகவலை பெரிய தளபதி ஒருவர் செத்துப் போயிட்டார் என்று போட்டு கொஞ்ச நேரத்தில் மோகன் அண்ணா தனி மடலில் 'எந்த தளபதி பெயர் என்ன" என்று கேட்டு இருந்தார். நான் பெயர் சொல்லி பதில் போட்டு 10 நிமிடங்களின் பின் அவரும் 'இப்பதான் எமக்கும் தகவல் வந்தது" என்று பதில் போட்டார் அன்று முழுதும் ஒரு நிமிடம் கூட நித்திரை கொள்ள முடியவில்லை. சாமம் 3 மணிக்கு எழும்பி மிச்சமிருந்த பிரண்டியை அடிக்கத்தொடங்கினேன்... மாவீரன்...மகா வீரன் சொர்ணம் அண்ணை... ஈழம் தந்த பெரும் தளபதி!! இவர்களின் வாழ்க்கை வரலாற்றை தகவல்கள் சேகரித்து கண்டிப்பாக ஆவணப்படுத்த வேண்டும் Link to comment Share on other sites More sharing options...
பகலவன் Posted May 12, 2012 Share Posted May 12, 2012 வீர வணக்கங்கள். Link to comment Share on other sites More sharing options...
இசைக்கலைஞன் Posted May 12, 2012 Share Posted May 12, 2012 வீரவணக்கம்..! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விசுகு Posted May 12, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2012 மாவீரன்...மகா வீரன் சொர்ணம் அண்ணை... ஈழம் தந்த பெரும் தளபதி!! வீரவணக்கம்..! Link to comment Share on other sites More sharing options...
சுபேஸ் Posted May 12, 2012 Share Posted May 12, 2012 வீரவணக்கம்..! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் வாத்தியார் Posted May 12, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2012 வீர வணக்கங்கள்..! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் Posted May 12, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2012 ஈரம் பனிக்கின்றது, கண்களில்! வீர வணக்கங்கள்!!! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted May 12, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2012 வீர வணக்கங்கள் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் யாழ்கவி Posted May 13, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 13, 2012 வீரவணக்கங்கள்........ Link to comment Share on other sites More sharing options...
vimalk Posted May 13, 2012 Share Posted May 13, 2012 வணங்காமுடி தாய்மண்ணை வணங்கிய நாள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறுப்பினர்கள் லியோ Posted May 13, 2012 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted May 13, 2012 வைகாசி பதினைந்தாம் நாள் அவர் வீரச்சாவை தழுவிக்கொண்டார். தலைவனின் வீரத்தளபதியே! நீ நடந்த மண்ணில் உன் வீரம் நீறு பூத்த நெருப்பாய்க்கிடக்கும் உன் அர்ப்பணிப்பு தமிழர் மனங்களில் உறைந்திருக்கும் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted May 13, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 13, 2012 (edited) வீர வணக்கம். பல களச் சாதனைகள் செய்து.. தலைவரின் மதிப்பு வென்ற.. மக்களை மிகவும் நேசித்த ஒப்பற்ற தளபதிகளில் சொர்ணம் அம்மானும் அடங்குவார். பல இடர் மிகு தருணங்களில்.. எதிரியின் கை ஓங்கும் வேளையில்.. சொர்ணம் அம்மான் வாறாராம்.. என்றாலே.. போதும்.. அதைக் கேட்டு.. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளைகள்.. அதிகமாக இருந்துள்ளன. Edited May 13, 2012 by nedukkalapoovan Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 13, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 13, 2012 மாவீரனுக்கு, வீர வணக்கங்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் putthan Posted May 13, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 13, 2012 நினைவுநாள் வீரவணக்கங்கள் Link to comment Share on other sites More sharing options...
Hatheethi Posted May 13, 2012 Share Posted May 13, 2012 வீர வணக்கங்கள்.......! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted May 13, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 13, 2012 வீரவணக்கங்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted May 13, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted May 13, 2012 வீர வணக்கங்கள். Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts