Jump to content

மன்னிப்பு - மனதார

Recommended Posts

யாழ் உறவுகளுக்கு வணக்கம்

நேற்று உலக நடப்பில் உள்ள ஒரு திரியில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டேன் .

( ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!)

தற்போது அக்கருத்தை நீக்கி உள்ளனர் . மிக நலம் . எனினும் மனசு கேட்கவில்லை . அதனால் இந்த திரி.

குறிப்பாக விசுகு அவர்கள் மனம் சங்கடப்பட்டு இருக்கும் . அவராவது எழுதினார் . பலர் எழுதாமல் படித்துவிட்டு சங்கடப் பட்டு இருப்பார்கள் . அவர்கள் அனைவரிடமும் நான் கேட்பது மன்னிப்பு . நான் எழுதிய கருத்துகள் மனதை குத்தியிருந்தால் மன்னிக்கவும் . பொதுவாகவே தொடர்ச்சியாக நான் பதில் இடுவது கிடையாது . ஆனால் நேற்று தொடர்ச்சியாக எழுதபோய் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் . மன்னிக்கவும் . தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் . கோபத்தில் எழுதிய வாக்கியங்களே தவிர உள் நோக்கம் ஒன்றும் இல்லை . தயவு செய்து மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று. 152

Link to comment
Share on other sites

தவறுகளே செய்யாதோர் தரணியிலே யாருமில்லை

தவறென்றறிந்த பின்னும் தவிக்காதார் மனிதரில்லை.

ஆனாலும் தமது தவறை தவறென்று ஒத்துக் கொள்ள பலரது ஈகோ இடமளிப்பதில்லை. ஆனாலும் நீங்கள் உடனடியாகவே தவறை அறிந்ததுமே பகிரங்கமாக மன்னிப்பை வேண்டுகின்றீர்கள். இதற்குப் பின்னரும் மன்னிக்காமல் இருக்க முடியுமா?

தொடர்ந்து கருத்துக்களை முன்வையுங்கள். சற்றே அவதானமாக.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரா

மன்னிப்பெல்லாம் நமக்குள் எதற்கு?

அந்த திரி மூடப்பட்டவுடன் நன்றி என நிர்வாகத்துக்கு எழுதியிருந்தேன். அந்தவகையிலும் நாம் இருவரும் ஒரே மாதிரியே எமது சிக்கல்களை கையாளுகின்றோம். அந்தத்தெளிவு எமக்குள் இருப்பதற்கு காரணம் நாம் தமிழர் என்பது மட்டுமே.

அந்த நேசக்ககரம் என்றும் வேண்டும் எமக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிவசப் படாதவன் மனிதனே... இல்லை.

தவறை உணர்ந்து கொண்டதன் மூலம், நீங்கள் உயர்ந்து விட்டீர்கள் தமிழ் பைத்தியம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த்தமிழர்களை நாம் ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர்களை நாம் அவமதித்ததில்லை .

அவர்கள் ஈழத்திற்காக கொடுத்த விலைகளை அறியாமலில்லை.

அவர்கள் இன்னும் எமக்காகப் போராடும் துணிச்சலை எடுத்தெறியவில்லை.

அப்படிப்பட்ட எமது தாய்த் தமிழர்களை நாம் உயிருள்ளவரை மறக்கமாட்டோம்.

நாம் இங்கே விமர்சிப்பது

குறுகிய நலனிற்காக ஈழ உறவுகளின் கண்ணீரைக் காசாக்கப் பார்க்கும்

அரசியல்வாதிகளையும்

குடும்ப அரசியலிற்காக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளையும்

தேர்தலை மையமாக வைத்து ஈழத்தமிழர்களின் இரத்தத்தை விலைபேசும்

அரசியல்வாதிகளையும்

ஈழத்திற்கெதிரான ஹிந்திய கொள்கைவகுப்பாளர்களையும்

சிங்கள அரசின் ஹிந்திய ஆலோசகர்களையும்

இவர்கள் போன்ற இன்னும் ஒரு சில சோன்யா, மற்றும் சுவாமிகளையும் , சுயநலவாதிகளையும் மட்டுமே

உறவுகளே விமர்சனங்களை ஆராய்ந்து எதிர்விமர்சனங்களை முன்வையுங்கள்.

மிக்க நன்றி தமிழ்ப்பைத்தியம்

பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன் சகோதரா

தவறுகளே செய்யாதோர் தரணியிலே யாருமில்லை

தவறென்றறிந்த பின்னும் தவிக்காதார் மனிதரில்லை.

தொடர்ந்து கருத்துக்களை முன்வையுங்கள். சற்றே அவதானமாக.....

நன்றி நண்பரே

உணர்ச்சிவசப் படாதவன் மனிதனே... இல்லை.

தவறை உணர்ந்து கொண்டதன் மூலம், நீங்கள் உயர்ந்து விட்டீர்கள் தமிழ் பைத்தியம். :)

உயர்த்த வேண்டாம் . உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன் நன்றி

உணர்ச்சிவசப் படாதவன் மனிதனே... இல்லை.

தவறை உணர்ந்து கொண்டதன் மூலம், நீங்கள் உயர்ந்து விட்டீர்கள் தமிழ் பைத்தியம். :)

உயர்த்த வேண்டாம் . உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன் நன்றி

தாய்த்தமிழர்களை நாம் ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர்களை நாம் அவமதித்ததில்லை .

அவர்கள் ஈழத்திற்காக கொடுத்த விலைகளை அறியாமலில்லை.

அவர்கள் இன்னும் எமக்காகப் போராடும் துணிச்சலை எடுத்தெறியவில்லை.

அப்படிப்பட்ட எமது தாய்த் தமிழர்களை நாம் உயிருள்ளவரை மறக்கமாட்டோம்.

நாம் இங்கே விமர்சிப்பது

குறுகிய நலனிற்காக ஈழ உறவுகளின் கண்ணீரைக் காசாக்கப் பார்க்கும்

அரசியல்வாதிகளையும்

குடும்ப அரசியலிற்காக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளையும்

தேர்தலை மையமாக வைத்து ஈழத்தமிழர்களின் இரத்தத்தை விலைபேசும்

அரசியல்வாதிகளையும்

ஈழத்திற்கெதிரான ஹிந்திய கொள்கைவகுப்பாளர்களையும்

சிங்கள அரசின் ஹிந்திய ஆலோசகர்களையும்

இவர்கள் போன்ற இன்னும் ஒரு சில சோன்யா, மற்றும் சுவாமிகளையும் , சுயநலவாதிகளையும் மட்டுமே

உறவுகளே விமர்சனங்களை ஆராய்ந்து எதிர்விமர்சனங்களை முன்வையுங்கள்.

மிக்க நன்றி தமிழ்ப்பைத்தியம்

நாங்களும் இதே மன நிலைதான் நண்பரே . களை எடுக்கும் போது நல்ல பயிர்களும் அடிபடுவது போல வெள்ளத்தில் எல்லாம் அடித்து செல்வது போல

ஈழ தோழர்களின் விமர்சனங்கள் ஒரு சில நேரங்களில் நெருடுகிறது. அப்போது எதிர் பதிவுகள் வெள்ளம் போல முன் பின் யோசனையின்றி வருகிறது .

அவ்வப்போது அடக்க முயன்றும் முடியவில்லை நண்பரே . முடிந்தபின் மனம் அழுகிறது . என்ன செய்ய

அருமையாகச் சொன்னீர்கள் வாத்தியார்.

ஒவ்வொரு வசனமும், விலை மதிக்க முடியாத வசனங்கள்.

புரிய, வேண்டியவர்கள் புரிந்தால்.... ஒரு போதும், தவறு ஏற்படாது.

ஆனால்... "ரொக்கி வன்" என்பவர் வேண்டுமென்றே... எங்களைச் சீண்டிப் பார்த்துள்ளார் என நம்புகின்றேன்.

புதுசா சேர்ந்த, சின்னப் பயலுக்கு... கெட்ட புத்தி வந்திட்டுது.

இதனை, வாசித்த பின்னராவது... ராக்கி திரும்பி வரணும்.

Link to comment
Share on other sites

நன்றி தமிழ் பைத்தியம் அண்ணா,

நீங்கள் விட்ட தவறே உங்கள் மனதை குடைந்து உங்களுக்கு தண்டனை தந்து விட்டது என்று நினைக்கிறேன். அதன் பின்னும் தண்டனை தர யாரும் விரும்ப மாட்டார்கள்.

ஒருவர் விடும் தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக்கொண்டு திருத்தும் மனப்பக்குவம் இருத்தல் மன்னிப்பை விட பெரிய செயல். அந்த வகையில் உங்கள் நல்ல குணம் வெளிப்படுகிறது.

எனவே தவறை நீங்கள் உணர்ந்து கொண்ட பின் மன்னிப்பு எல்லாம் தேவையில்லை.

எம் அனைவரினதும் புரிந்துணர்வு இப்படியே இருக்குமானால் எமக்குள் ஒற்றுமை என்றும் இருக்கும். :) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

நாங்களும் இதே மன நிலைதான் நண்பரே . களை எடுக்கும் போது நல்ல பயிர்களும் அடிபடுவது போல வெள்ளத்தில் எல்லாம் அடித்து செல்வது போல

ஈழ தோழர்களின் விமர்சனங்கள் ஒரு சில நேரங்களில் நெருடுகிறது. அப்போது எதிர் பதிவுகள் வெள்ளம் போல முன் பின் யோசனையின்றி வருகிறது .

அவ்வப்போது அடக்க முயன்றும் முடியவில்லை நண்பரே . முடிந்தபின் மனம் அழுகிறது . என்ன செய்ய

தமிழ் பைத்தியம் அவர்களே....

நீங்கள்.... இந்தியர், திராவிடர் எல்லாவற்றையும் தாண்டி....

ஒரு மொழி பேசும்... தமிழர் என்னும் வட்டத்திற்க்குள் வர முயற்சி செய்யுங்கள்.

அது, தான்... தமிழை மேன் மேலும்... வளரச் செய்யும்.

"தான்... போக மாட்டாத, மூஞ்சூறு விளக்கு மாத்தை தூக்கப் படாது"

எமது மன்னன், 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜ ராஜ சோழன்.

அதே.... நெஞ்சை நிமிர்திய காலத்தில் தேசியத் தலைவர் பிரபாகரன் காலத்திலும்... வாழ்ந்தோம் என்னும் பெருமையை... எந்த ஒரு உண்மையான தமிழனும் மறவான்.

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைத்தியம்.. எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது.. :rolleyes: வெட்டுப்பட்ட பதிவுகளின் பிரதியை இங்கே ஒட்டிவிட்டீர்களானால் கருத்துச்சொல்ல வசதியா இருக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

தலையங்கத்திற்கு மட்டும் பின்னோட்டங்கள் விட்டிருந்தால் இந்த நிலைமை வராது என்று என் எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த்தமிழர்களை நாம் ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர்களை நாம் அவமதித்ததில்லை .

அவர்கள் ஈழத்திற்காக கொடுத்த விலைகளை அறியாமலில்லை.

அவர்கள் இன்னும் எமக்காகப் போராடும் துணிச்சலை எடுத்தெறியவில்லை.

அப்படிப்பட்ட எமது தாய்த் தமிழர்களை நாம் உயிருள்ளவரை மறக்கமாட்டோம்.

நாம் இங்கே விமர்சிப்பது

குறுகிய நலனிற்காக ஈழ உறவுகளின் கண்ணீரைக் காசாக்கப் பார்க்கும்

அரசியல்வாதிகளையும்

குடும்ப அரசியலிற்காக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளையும்

தேர்தலை மையமாக வைத்து ஈழத்தமிழர்களின் இரத்தத்தை விலைபேசும்

அரசியல்வாதிகளையும்

ஈழத்திற்கெதிரான ஹிந்திய கொள்கைவகுப்பாளர்களையும்

சிங்கள அரசின் ஹிந்திய ஆலோசகர்களையும்

இவர்கள் போன்ற இன்னும் ஒரு சில சோன்யா, மற்றும் சுவாமிகளையும் , சுயநலவாதிகளையும் மட்டுமே

உறவுகளே விமர்சனங்களை ஆராய்ந்து எதிர்விமர்சனங்களை முன்வையுங்கள்.

மிக்க நன்றி தமிழ்ப்பைத்தியம்

வாத்தியாரின் கருத்தே .... எனதும், தமிழ்பைத்தியம் உங்களின் பெருந்தன்மையை மதிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்திற்கு மட்டும் பின்னோட்டங்கள் விட்டிருந்தால் இந்த நிலைமை வராது என்று என் எண்ணம்.

உங்களுக்குத் தெரியாததா? அல்லது நீங்கள் எழுதாத கருத்துக்களா? :Dஅர்ஜுன் அண்ணா

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைத்தியம்.. எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது.. :rolleyes:வெட்டுப்பட்ட பதிவுகளின் பிரதியை இங்கே ஒட்டிவிட்டீர்களானால் கருத்துச்சொல்ல வசதியா இருக்கும்.. :lol:

:lol::D இங்கும் சீரியஸா பதில் சொல்ல மாட்டீர்களா? :D:icon_idea:

Link to comment
Share on other sites

தங்கள் புரிந்துணர்தலுக்கு நன்றி தமிழ் பைத்தியம்!

தலையங்கத்திற்கு மட்டும் பின்னோட்டங்கள் விட்டிருந்தால் இந்த நிலைமை வராது என்று என் எண்ணம்.

அர்ஜுன் நீங்கள் சரியான பிஸி ஆக்கும் என்று நினைச்சன்... :rolleyes: இஞ்சயா நிக்கிறீங்கள்? :o உங்களிடம் ஒரு கேள்வி கேட்டனான்... பதில் இன்னும் தரவே இல்லை பார்த்தீங்களா?? ^_^

Link to comment
Share on other sites

உங்களுக்குத் தெரியாததா? அல்லது நீங்கள் எழுதாத கருத்துக்களா? :Dஅர்ஜுன் அண்ணா

உண்மையிலும் உண்மை ,

யாரும் வந்து திசை மாற்றி பூசாரி வேடம் போடும் போதுதான் நானும் உடுக்கடிக்க தொடங்குவேன் .விட்டால் காதில் பூவும் வைத்து நாமமும் வைத்து பூஜையை முடித்துவிடுவார்கள் .

ஆயிரம் பேர் ஆயிரமாயிரம் கேள்வி கேட்கின்றார்கள் அதில் உங்கட கேள்வி விடுபட்டு போச்சு குட்டி .

புள்ளிராஜாவிற்கு எயிட்ஸோ என்றால் நான் எங்கு போக .

Link to comment
Share on other sites

தமிழ் பைத்தியம் ,

முதலில், நீங்கள் மன்னிப்புக் கேட்பதற்கான விளக்கம் தேவை. :rolleyes:

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைத்தியம்.. எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது.. :rolleyes: வெட்டுப்பட்ட பதிவுகளின் பிரதியை இங்கே ஒட்டிவிட்டீர்களானால் கருத்துச்சொல்ல வசதியா இருக்கும்.. :lol:

தலையங்கத்திற்கு மட்டும் பின்னோட்டங்கள் விட்டிருந்தால் இந்த நிலைமை வராது என்று என் எண்ணம்.

தமிழ் பைத்தியம் ,

முதலில், நீங்கள் மன்னிப்புக் கேட்பதற்கான விளக்கம் தேவை. :rolleyes:

ம்ம்ம். இந்த கருத்தை நூறு சதம் அமோதிக்கிறேன். ஆனால் யாழ் களத்தின் சிறப்பே திரியின் அல்லது தலையங்கத்தின் கருத்துக்களோடு ஒத்து வராத பின்னோட்டம் இடுவதுதான் . மேலும் இந்த பிரச்னை உருவான திரியை கவனியுங்கள் . தலைப்பு ஒன்று ஆனால் கடைசியில் கள பொறுப்பாளர்கள் கருத்துகளை நீக்கும் அளவுக்கு கொலை வெறியோடு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்து விட்டது . அந்த திரியை அப்படியே விட்டு இருந்தால் வரலாற்றின் மிகப்பெரிய பிரிவினைக்கு வித்திடும் செயலாக அமைந்து இருக்கும் . பல விஷயங்களில் கள விதிகள் எனக்கு எரிச்சலையும் மூஞ்சியில ரெண்டு சாத்தானும் போல கோபமும் வருவதுண்டு . ஆனால் இது போன்ற பொறுப்பான செயல்களால் அவ்வப்போது அனைத்து கள விதிகளையும் மதிக்கும் அளவுக்கு கள பொறுப்பாளர்கள் மீது மரியாதை ஏற்பட்டு விடுகிறது . தமிழ் மொழியில் பாராட்டுவதை விட தெளிவான உணர்வு கொண்ட பிற மொழி வாத்தைகளை பயன் படுத்தி சபாஷ் மற்றும் சூப்பர் மற்றும் வெல் டன் மட்டும் களத்தினருக்கு இப்போது சொல்ல முடியும் .

இசைகலைஞன் மற்றும் தப்பிலி இருவரும் கொஞ்சம் லேட் . அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை .அதை படித்து இருந்தால் அவரும் நாலு வார்த்தை திட்டி எழுதியிருப்பார்கள். அவர்களின் மனமும் என்னை திட்டிய திருப்தி அடைந்து இருக்கும் . ஆனால் அந்த கருத்துகளை திருப்பி எழுதி தெளிவாக்க விரும்ப வில்லை . கவலை வேண்டாம். நான் யாழில் மீண்டும் எப்போதாவது எழுதும் போது உங்கள் ஆசையை தீர்த்து கொள்ளுங்கள் . ( ஆனால் இந்த திரியில் இட்ட பதில் போல மிகவும் கீழ்த்தரமான கோபத்தோடு கருத்துகளை முன் வைக்க மாட்டேன் . முன்பு போலவே ஆணித்தரமாக ஆரோக்கியமாக கருத்துகளை முன் வைப்பேன் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா... சொல்லாதிங்க,

தமிழ்ப் பைத்தியம் சார்.... சண்டை, சச்சரவு இல்லேன்னா.... அது களம் இல்ல சார்.

Link to comment
Share on other sites

தமிழ்ப் பைய்த்தியம், களத்தில் அடிக்கடி அடிபாடுகள் வந்து அப்புறம் சேர்ந்துக்குவாங்க. இதெல்லாம் இங்கு சகஜம். உங்களுக்கு மட்டும் என்று எடுக்க வேண்டாம்.

'ஆல் இஸ் வெல் ஆல்வேய்ஸ்' :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அதென்னங்க ஒங்கபேரு தமிழ் பைத்தியம்னு . பேசறதெல்லாம் பேசீட்டு சாரி ன்னு சிம்பிளா சொல்றீங்க . சிறீலங்கன்ஸ் நடத்திற இணயத்தில வந்து அவங்களை வம்புக்கு இழுத்து தகராறு செஞ்சிட்டு இருக்கீங்க . ஒங்களுக்கு புடிக்கலான்னா போயிட்டே இருக்கலாம்ல . ஏங்க எங்க ஊரு பேரை டமேஜ் ஆக்குறீங்க ? டோட்டலி கண்ணூறு கழிக்கன்னு வந்திருக்கீங்க ^_^.

Link to comment
Share on other sites

எப்போதோ நடந்து முடிந்து சமரசமும் ஆன விவகாரத்தை ஏனுங்க மீண்டும் கிளறுறீங்க! :(

அவங்க கிளறல

சிறீலங்கன்ஸ் நடத்திற இணயத்தில வந்து

பெற்றோல்

இல்ல அதற்கும் மேல ஏதும் பவுருள்ளதை ஊத்துறாங்க.... :( :( :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.