Jump to content

பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்?: ஜெயமோகனின் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் உக்ரேனில் இருந்து வந்தது என்ற அரைவக்காட்டுத் தனமான பிரச்சாரத்தை இத் தலைப்பில் புகுத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இடையிடையே இப்படியான இடைச் செருகல்களைத் தலைப்பில் சம்பந்தமில்லாமல் செருகுவதினூடாகத் தலைப்பினைத் திசை திருப்புவது இங்கே நடக்கின்றது.

Link to comment
Share on other sites

  • Replies 174
  • Created
  • Last Reply

தெளிவான பதில் உங்களின் கேள்வியிலேயே அடங்கி இருக்கிறது .

குமரன் என்பது இந்து கடவுள் இல்லையோ ???

மும்பையில் அடித்து விரட்டப்பட்டது எழுபதுகளில் . ஏன் அடித்தார்கள் என இப்போது மும்பையில் நிம்மதியாக வாழும் 17% விழுக்காடு தமிழர்களிடம் கேளுங்கள் . அவர்களே சொல்வார்கள் . யாரை ஏன் அடித்தார்கள் என்பது ......

கேரளத்தில் தமிழர்களை அடித்து விரட்டவில்லை .

கர்நாடகத்தின் நீர் பிரச்சினையை எப்போதெல்லாம் தமிழக அரசியல் கயவர்கள் தூண்டி விடுகிறார்களோ அப்போது தான் அடிக்கிறார்கள் . அவனுக்கே தண்ணியில்லை . நீ சாவு எனக்கு தண்ணி கொடு என கேட்டால் எவனாயிருந்தாலும் அடிக்கத்தான் செய்வான் .

மீனவர்கள் சாவதற்கு காரணம் சிங்களனுக்கு எப்போதெல்லாம் தமிழன் மீது கோபம் வருகிறதோ அல்லது நாங்கள் எப்போதெல்லாம் ஈழத்திற்காக போராடுகிறோமோ அப்போதெல்லாம் எங்கள் மீனவர்கள் கொல்ல படுகிறார்கள் . அனால் இந்த விடயத்தை பற்றி தயவு செய்து கதைக்க வேண்டாம் . ஏனெனில் இதில் கூட முரண்பட்ட கருத்துகள் தமிழ் நாட்டில் உலவுகின்றன.

வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வு என்பது அனைத்து மொழியினரும் தான் வாழும் இடத்தில தான் மட்டுமே வாழ்ந்ததாகவும் அல்லது முதல் குடிகளாகவும் பிறர் வந்தேறிகள் என்றும் கதைக்கின்றனர் . அதை நம்பி களத்தில் இறங்குவது ????????????????????

குமரன் என்பது இந்துக் கடவுள் அல்ல , அது சைவக் கடவுள்.

அவனுக்கே தண்ணியில்லை என்றால் எவனுக்கு கேரளதுக்கு காரனுக்கா , இந்தியனுக்கா? அப்படியானால் தமிழன் இந்தியன் இல்லையா? நதிகள் இந்தியருக்குச் சொந்தமா? கேரளதுக்காரனுக்கும் , கன்னடக்காரனுக்கும் மட்டும் சொந்தமா?

மீனவர்கள் சாவதற்கான காரணம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் கேட்பது ஒரு இந்தியக் குடிமகனை இன்னொரு நாட்டின் படைகள் கொல்கின்றன ஆனால் ஒரு வல்லரசு கைக்கட்டிப் பார்துக் கொண்டிருக்கிறது, ஏன் என்பதே எனது கேள்வி.

வரலாறு அறிவியல் ரீதியாக சொல்லப்படுவது. வந்தேறிகளை எல்லாம் வரவேற்போம் என்றால் ஏன் நாடுகளும் நாட்டு எல்லைகளும் அவசியம் ஆகின்றன? நாங்கள் இந்தியா வர ஏன் விசா தேவை? அப்படியாயின் இந்தியாவில் ஆண்டாண்டுகளாக இருக்கும் அகதிகளுக்கும் குடியிரிமை வழங்கலாமே? தமிழ் நாட்டிற்க்கு எந்த வந்தேறியும் வரலாம் ஆனால் தமிழன் வரமுடியாது ,குடியேற முடியாது.

http://www.youtube.com/watch?v=Tj-Oqidvags

Link to comment
Share on other sites

குமரன் என்பது இந்துக் கடவுள் அல்ல , அது சைவக் கடவுள்.

அவனுக்கே தண்ணியில்லை என்றால் எவனுக்கு கேரளதுக்கு காரனுக்கா , இந்தியனுக்கா? அப்படியானால் தமிழன் இந்தியன் இல்லையா? நதிகள் இந்தியருக்குச் சொந்தமா? கேரளதுக்காரனுக்கும் , கன்னடக்காரனுக்கும் மட்டும் சொந்தமா?

மீனவர்கள் சாவதற்கான காரணம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் கேட்பது ஒரு இந்தியக் குடிமகனை இன்னொரு நாட்டின் படைகள் கொல்கின்றன ஆனால் ஒரு வல்லரசு கைக்கட்டிப் பார்துக் கொண்டிருக்கிறது, ஏன் என்பதே எனது கேள்வி.

வரலாறு அறிவியல் ரீதியாக சொல்லப்படுவது. வந்தேறிகளை எல்லாம் வரவேற்போம் என்றால் ஏன் நாடுகளும் நாட்டு எல்லைகளும் அவசியம் ஆகின்றன? நாங்கள் இந்தியா வர ஏன் விசா தேவை? அப்படியாயின் இந்தியாவில் ஆண்டாண்டுகளாக இருக்கும் அகதிகளுக்கும் குடியிரிமை வழங்கலாமே? தமிழ் நாட்டிற்க்கு எந்த வந்தேறியும் வரலாம் ஆனால் தமிழன் வரமுடியாது ,குடியேற முடியாது.

http://www.youtube.com/watch?v=Tj-Oqidvags

சைவம் எங்கிருந்து வந்தது ????

அவனுக்கே தண்ணியில்லை என்பது நான் தெளிவாக கன்னடத்து காரனுக்கு என எழுதியிருக்கிறேன் . அது தமிழக மக்களுக்கும் புரிந்து போய் பல காலம் ஆகி விட்டது . அதனால் காவிரி பிரச்சினையை அரசியல் வாதிகள் கிளப்பும் போது யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை .

மீனவர் பிரச்சினையை விட்டு விடலாம் என முன்பே எழுதியுள்ளேன் . என்ன தான் சீண்டினாலும் இதற்கான பதில் என்னிடம் இருந்து வராது . பதில் தெரியாது என பழித்தாலும் சரி

Link to comment
Share on other sites

எனக்குத்தெரிஞ்சு உலகத்திலயே கேவலங்கெட்ட ஆமி இந்த இந்தியனாமிதான். வாயில வருது......! ஆனால் அந்த ஆமிக்குள்ளும் மனிதாபிமானமுள்ள சிலபேர் இருந்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

தம் சொந்தநாட்டு மக்களிடமே வெறித்தனத்துடன் நடந்துவிட்டு... பெண்களை கற்பழித்தபின் பெண்ணுறுப்புக்குள் குண்டுவைத்து கொன்று தீவிரவாதி என்று சொல்லிவிட்டு... பாரதமாதாவுக்கு ஜே! ஜெய்ஹிந்த்!! எண்டு சொல்லிக்கொண்டு போற தறுதலை இராணுவம் அது ஒண்டுதான்.

இந்த ஜெயமோகனுக்கு... அப்படி என்ன கடுப்பு எங்கள் மேல?!

Link to comment
Share on other sites

//தமிழன் கும்பிடுவது சிவனையும் பெருமாளையும்

இந்தியர் அனைவரும் கும்பிடுவதும் இவர்களை தான் .//

இந்து மதத்தின் அடிப்படையில் இந்தியா என்னும் காலனிய தேச உருவாக்கத்தை நியாயப்படுதிய தமிழ்ப்பைதியத்திற்க்குப் பதில் சொல்லவே இந்து மதம் என்பதே புகுத்தப்பட்ட ஒரு மதம் என்பதை எழுத வேண்டி வந்தது.

இடையில் புகுந்து கருதாடல்களை முறையாக வாசிக்காமல் , மற்றவரை வாய்மூட வைக்கும் பாசிசத் தனங்கள் கருத்தாடல்கள் அல்ல.

Link to comment
Share on other sites

//தமிழன் கும்பிடுவது சிவனையும் பெருமாளையும்

இந்தியர் அனைவரும் கும்பிடுவதும் இவர்களை தான் .//

இந்து மதத்தின் அடிப்படையில் இந்தியா என்னும் காலனிய தேச உருவாக்கத்தை நியாயப்படுதிய தமிழ்ப்பைதியத்திற்க்குப் பதில் சொல்லவே இந்து மதம் என்பதே புகுத்தப்பட்ட ஒரு மதம் என்பதை எழுத வேண்டி வந்தது.

இடையில் புகுந்து கருதாடல்களை முறையாக வாசிக்காமல் , மற்றவரை வாய்மூட வைக்கும் பாசிசத் தனங்கள் கருத்தாடல்கள் அல்ல.

உண்மையை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும் . நான் ஏன் இந்தியரை இந்தியாவை நேசிக்கிறேன் என்பதற்கு உள்ள காரணம் இந்து மதம் . ஆனால் நீங்கள் ஏதேதோ சொல்கிறீர்கள் . இந்து மதம் இல்லை என்கிறீர்கள், குமரன் தான் தமிழ் கடவுள் என்கிறீர்கள் . பின் சைவம் என்கிறீர்கள் . எங்கிருந்தோ வந்தது என்கிறீர்கள் . நீங்கள் எழுதுவது தான் எதோ எழுதணும் என்ற போக்கில் உள்ளது .

மேலும் ஈழ தமிழர்களை நான் நேசிப்பதற்கு முதல் காரணம் தமிழ், இரண்டாவது காரணம் அவர்கள் இந்துக்கள் . இதை வைத்தே முடியும் வரை ஒட்டு மொத்த இந்தியாவில் ஆதரவை தேடுவேன் . நாத்திகம் பேசி தமிழரை இந்தியனிடம் இருந்து தனிமைபடுத்தியதன் பலன் இன்று தமிழன் என்றாலே ஒரு மாதிரியாக சில இடங்களில் பார்க்கிறார்கள்

Link to comment
Share on other sites

//

Models of the Indo-Aryan migration discuss scenarios of prehistoric migrations of the proto-Indo-Aryans to their historically attested areas of settlement in the northwest of the Indian subcontinent. Claims of Indo-Aryan migration are drawn from linguistic[1], genetic[citation needed] and even archaeological[citation needed] sources, as well as from a multitude of data stemming from Vedic religion, rituals, poetics as well as some aspects of social organization and chariot technology. Archaeological evidence for a mass population movement, or an invasion of South Asia in the pre- or proto- historic periods, has not been found.[2][3][4] At best, there is evidence of small-scale migrations approaching South Asia.[5][6]

Indo-Aryan language derives from an earlier Proto-Indo-Iranian stage, usually identified with the Bronze Age Sintashta and Andronovo culture north-east of the Caspian Sea. Their migration to and within Northwestern parts of South Asia is consequently presumed to have taken place in the Middle to Late Bronze Age, contemporary to the Late Harappan phase (ca. 1700 to 1300 BCE). Linguistics has been the primary basis of Aryan Immigration theories. Although, based on examination of skeletal remains, no evidence of massive migration has been found.[7][8][9] The ancient Harappans were not markedly different from modern populations in Northwestern India and present-day Pakistan. Craniometric data showed similarity with prehistoric peoples of the Iranian plateau and Western Asia,[10] although Mohenjodaro was distinct from the other areas of the Indus Valley.[11]//

மேல் உள்ளது விகியில் இருப்பது, உங்களுக்கு இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இது பற்றி மேலும் பல விடய்ங்கள் யாழ்க் களத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கிறது. பார்த்து படித்து விட்டு வாருங்கள்.

Link to comment
Share on other sites

Relationship with Indo-Iranians

280px-Indo-Iranian_origins.png

magnify-clip.pngArchaeological cultures associated with Indo-Iranian migrations (after EIEC). The Andronovo, BMAC and Yaz cultures have often been associated with Indo-Iranian migrations. The GGC, Cemetery H, Copper Hoard and PGW cultures are candidates for cultures associated with Indo-Aryan migrations.

The Bactria-Margiana complex has attracted attention as a candidate for those looking for the material counterparts to the Indo-Iranians, a major linguistic branch that split off from the Proto-Indo-Europeans. Sarianidi himself advocates identifying the complex as Indo-Iranian, describing it as the result of a migration from southeastern Iran. Bactrian Margiana material has been found at Susa, Shahdad, and Tepe Yahya in Iran, but Lamberg-Karlovsky does not see this as evidence that the complex originated in southeastern Iran. "The limited materials of this complex are intrusive in each of the sites on the Iranian Plateau as they are in sites of the Arabian peninsula."[25]

Western archaeologists are more inclined to see the culture as begun by farmers in the Near Eastern Neolithic tradition, but infiltrated by Indo-Iranian speakers from the Andronovo culture in its late phase, creating a hybrid. In this perspective, Proto-Indo-Aryan developed within the composite culture before moving south into the Indian subcontinent.[26] As James P. Mallory phrased it

It has become increasingly clear that if one wishes to argue for Indo-Iranian migrations from the steppe lands south into the historical seats of the Iranians and Indo-Aryans that these steppe cultures were transformed as they passed through a membrane of Central Asian urbanism. The fact that typical steppe wares are found on BMAC sites and that intrusive BMAC material is subsequently found further to the south in Iran, Afghanistan, Nepal, India and Pakistan, may suggest then the subsequent movement of Indo-Iranian-speakers after they had adopted the culture of the BMAC.

http://en.wikipedia.org/wiki/Bactria%E2%80%93Margiana_Archaeological_Complex

Link to comment
Share on other sites

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியுமா ???

ஆணை இட்டே யார் தடுத்தாலும் நான் இந்தியன் என்பதை மறுக்க முடியுமா ???

இந்தியன் அனைவரும் தடுத்தாலும் தமிழன் ஈழத்திற்கு வழங்கும் ஆதரவை நிறுத்த முடியாது ( யாரும் தடுக்கவில்லை )

வறட்டு கத்தல் கத்தினாலும் ஈழ தமிழனுக்கு உள்ளூர இருக்கும் இந்திய பாசம் தவிர்க்க முடியாதது

Link to comment
Share on other sites

வேதகாலம்http://tawp.in/r/y0e

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

300px-Map_of_Vedic_India.png

magnify-clip.pngவேதகாலத்தில் இந்தியா

வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம். இக் காலப்பகுதியோடு தொடர்புடைய பண்பாடு சில சமயங்களில் வேத நாகரிகம் எனக் குறிக்கப்படுவதும் உண்டு. இந் நாகரிகம், வடக்கு இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. இதன் முதற் கட்டத்தில் பழங்கால இந்தியாவில் பல்வேறு அரசுகள் தோன்றின. கிமு 600 ஆம் ஆண்டளவில் தொடங்கி மகஜனபாத என சமசுக்கிருதத்தில் குறிப்பிடப்படும் சிறிய நாடுகள் உருவாகின. தொடர்ந்து கிமு 320 ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசு உருவானது.

[தொகு] வரலாறு

வேதகால இந்தியாவின் வரலாறு பெரும்பாலும் அக்காலத்து நூல்களை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மொழியியல் அடிப்படையில் வேதகால நூல்கள் ஆறு காலவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. ரிக் வேத காலம்: ரிக் வேதமே தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய நூலாகும். அத்துடன், இதன் உள்ளடக்கமும், மொழியும் பொது இந்திய, ஈரானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இது பிற வேத நூல்களில் காணப்படவில்லை. ரிக் வேதம் பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக உருவாகியதாகத் தெரிகிறது. இதன் பிற்காலத்துப் பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகள் கிமு 1000 ஆவது ஆண்டளவில் முற்றுப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

2. மந்திர மொழிக் காலம்:

3. சங்கிதைக் காலம்:

4. பிராமணக் காலம்:

5. சூத்திரங்களின் காலம்:

6. இதிகாசக் காலமும், பாணினிய சமசுக்கிருதக் காலமும்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர்களிடமிருந்து நீங்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவன் தமிழனாக இருக்க முடியாது. தமிழனாக இருப்பவன் இந்தியத் தேசியத்தை ஆதரிக்க முடியாது. இரண்டிற்குமிடையே நின்றுகொண்டு தங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்புபவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது ஆச்சரியமளிக்கிறது.

well said.

Link to comment
Share on other sites

சாத்தானின் படைகள் (Satarnic-Force) முதலாவது வெளியீட்டினை பின்வரும் இணைய இணைப்புகளில் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

Volume 1 Part 1: http://www.mediafire.com/?emj0zigyjyu

Volume 1 Part 2: http://www.mediafire.com/?i5tzkzyjfny

Volume 1 Part 3: http://www.mediafire.com/?tz1mvzdgggz

Link to comment
Share on other sites

7. சமயப்போர்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆருகத மதம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செல்வாக்குப் பெற்றிருந்தது என்று கூறினோம். இதனால், வேறு மதங்கள் அக்காலத்தில் இல்லை என்று கூறியதாகக் கருதவேண்டா. அக்காலத்தில் வேறு சில மதங்களும் இருந்தன. அவை, ‘வைதீக மதம்’ எனப்படும் பிராமணீய மதமும், ‘தேரவாதம்’ எனப்படும் பௌத்த மதமும், மற்கலியுண்டாக்கிய ஆசீவக மதமும் ஆகும். சமண மதத்தைப் போன்றே இவையும் வடநாட்டில் தோன்றிப் பின்னர், தென்னாட்டிற்கு வந்தவை. இம்மதங்களை யன்றித் தமிழரின் மதம் ஒன்று தனியாக இருந்தது. இந்தத் தமிழர் மதத்தைத் ‘திராவிட மதம்’ என்னும் பெயரால் குறிப்போம். இத் திராவிட மதத்தைப் பற்றிப் பின்னர், உரிய இடத்தில் விளக்கிக் கூறுவோம்.

மேற்சொன்ன ‘ஆருகதம்,’ ‘வைதீகம்’, ‘பௌத்தம்’, ‘ஆசீவகம்’ ஆகிய நான்கு வடநாட்டு மதங்களும் அடிநாள் தொடங்கி ஒன்றோடொன்று பகைத்துப் போரிட்டு ஒன்றையொன்று அழிக்க முயற்சி செய்துவந்தன. இந்தச் சமயப்போர் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலந்தொட்டு நடந்துவந்தது. ஆகையால், இந்த மதப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றினை ஆராயவேண்டுவது நமக்குக் கடமையாகின்றது. இதனைச் சுருக்கமாக ஆராய்வாம்.

தென்னாட்டில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆசீவகமதம் முதன்முதல் ஆற்றல் குன்றி அழிந்துவிட்டது.17 ஆகையால், வைதீகம், பௌத்தம், ஆருகதம் என்னும் மூன்று மதங்கள் மட்டும் நெடுங்காலம் வரையில் போரிட்டுப் பூசல் விளைத்துவந்தன.

‘‘ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்

பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்

பற்றா மாக்கள் தம்முட னாயினும்

செற்றமுங் கலாமும் செய்யா தகலுமின்’’

(மணிமேகலை, 1 - காதை 60-63)

என்று அரசன் ஆணையிருந்தும் சமயப்போர் நின்ற பாடில்லை. மூன்று சமயங்களும் ஒன்றற்கொன்று தீராப் பகைமை கொண்டிருந்த செய்தி தமிழ் நூல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுவோம். பௌத்த மதத்திற்கும் வைதீக மதத்திற்கும் இருந்த பகைமை மணிமேகலை என்னும் பழைய நூலில் ஆபுத்திரன் கதையில் கூறப்பட்டுள்ளது.

சோழநாட்டுப் பார்ப்பனர் ஒருவர் அனாதைச் சிறுவனாகிய ஆபுத்திரனை வளர்த்துவருகிற காலத்தில், அவ்வூர்ப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்யத் தொடங்கி அதன் பொருட்டுப் பசு ஒன்றைக் கொண்டு வந்து கட்டிவைத்தனர். பௌத்த தர்மத்தைக் கேட்டுப் பழகிய ஆபுத்திரன் ஆநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து அதைக் காட்டிற்கு ஓட்டிவிட்டான். பிறகு, உண்மையறிந்த பார்ப்பனர் இவனை ஒறுத்தனர். வளர்ப்புத் தந்தையும் இவனைத் துரத்தி விட்டான். ஆபுத்திரன் பிச்சையேற்று உண்ண நேரிட்டது. அவன் வீதியில் பிச்சைக்குச் சென்றபோது பார்ப்பனர் அனைவரும் அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் கொட்டிக் கொடுமைப்படுத்தினார்கள். பிறகு, அவன் இப்பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான்.18 இதனால் பௌத்தரிடம் வைதீகப் பார்ப்பனருக்கு இருந்த சமயப் பகையின் காழ்ப்பு வெளியாகிறது.

கௌசிகன் என்னும் வைதீகப் பார்ப்பனன் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தபோது, ஒரு பசு தன் கூரிய கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விட்டது. அப் பார்ப்பனன் அருகிலிருந்த ஆருகதப் பள்ளியிற் சென்று உதவி வேண்டினான். ஆருகதர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலை வேள்வியையும் வெறுத்தவராகலின், கொலை வேள்வி செய்பவனும் அதுசெய்ய உடன்படுபவனுமாகிய இவ் வைதீகப் பார்ப்பனனுக்கு உதவிசெய்ய உடன்படாமல் அவனைத் தங்கள் பள்ளியினின்று வெளியே அனுப்பிவிட்டனர்.19 இதனால், வைதீகப் பார்ப்பனருக்கும் ஆருகதருக்கும் இருந்த சமயப் பகைமை விளங்குகின்றது.

இனி, பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமயப் பகை எல்லோரும் அறிந்ததே. சமண சமயத்தைக் கண்டிக்கக் குண்டலகேசி என்னும் நூலைப் பௌத்தர் இயற்றியதும், பௌத்த சமயத்தைக் கண்டிக்க நீலகேசி என்னும் நூலைச் சமணர் இயற்றியதும், இந்நூல்களுள் ஒருவர் சமயத்தை யொருவர் கடுமையாகத் தாக்கிக் கூறும் செய்திகளும் இவ்விரு சமயத்தாருக்கும் இருந்த சமயப் பகையைத் தௌ¤வாக்குகின்றன.

இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வைதீகம், பௌத்தம், சமணம் என்னும் மும்மதங்களுக்குள் தமிழ்நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தில் வைதீக மதம் பின்னடைந்து அழிந்துபோகும் நிலைமை எய்திற்று. வைதீக மதம் பின்னடைவதற்குக் காரணங்கள் இவையாகும்:- வைதீகர் கொலை வேள்வியைச் செய்துவந்தது முதலாவது காரணம். பிராமணர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டியதும், தங்கள் வேதத்தைத் தாங்கள் மட்டுமன்றி மற்றவர் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்ததும் மற்றொரு காரணம். அன்றியும், ‘‘சுவர்ணதானமே, «க்ஷத்திர (நிலம்) தானமே, கோதானமே, மகிஷ தானமே, அஸ்வதானமே, கஜதானமே, பார்யாதானமே கன்னியா தானமே’’ என்றிவை முதலான தானங்களைப் பெறுவதில் வைதீகப் பார்ப்பனர் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். பௌத்தரும் சமணரும் பொதுமக்களுக்குச் சாஸ்திரதானம், கல்விதானம், மருந்து முதலியவைகளைக் கொடுத்து உதவியதுபோல வைதீகப் பார்ப்பனர் செய்யவில்லை மற்றும், இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மச்சம் மாமிசம் முதலிய ஊனுணவுகளை உண்பது போன்று அக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பார்ப்பனரும் ஊனுணவை உண்டுவந்தனர். இக்காரணங்களால், தமிழ் மக்களிடையே வைதீகப் பார்ப்பன மதம், பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப் பெறாமல் குன்றத் தொடங்கிவிட்டது. பொதுமக்களின் ஆதரவுபெறாதபடியால் இந்த மதம் பௌத்த சமண மதங்களுடன் போராட்ட வலிமை இல்லாமல் தோல்வியுற்றது. அங்கொருவர் இங்கொருவராகச் சில அரசர் மட்டும் வைதீக முறைப்படி யாகங்கள் செய்ததாகச் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆனால், வைதீக மதம் பொது மக்களால் போற்றப் பட்டதாகச் சான்றுகள் அந்நூல்களில் காணப்படவில்லை.

வைதீக மதம் செல்வாக்கில்லாமல் பின்னடைந்து போக, பௌத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்றுச் சிறந்திருந்தன. இவை செல்வாக்குப் பெற்றதற்குக் காரணங்கள் இவையாகும். இவ்விரு சமயத் தலைவர்கள். வைதீக மதத்தவர்களைப் போன்று இல்லறத்தில் இல்லாமல் துறவிகளாக இருந்தனர். பிராமணர்களைப்போன்று கோதானம் பூதானம் சுவர்ணதானம் முதலிய தானங்களைப் பெறாமல் உணவுதானத்தைமட்டும் சிறிதளவு பெற்றுவந்தார்கள். தங்கள் மதக் கொள்கைகளை மறைக்காமல் சாதிபேதமின்றி எல்லோருக்கும் போதித்து வந்தார்கள். தங்கள் பள்ளிகளில் நாட்டுச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுத்தனர். நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகொடுத்து நோய் தீர்த்தனர். இவர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டவில்லை. கொலையையும், புலாலுண்பதையும் இவர்கள் முழுவதும் நீக்கியிருந்தார்கள். இவ்வித விரிந்த தாராளமான மனப்பான்மையும் கொள்கையும் உடைய பௌத்த சமண மதங்கள் நாட்டில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்தன.

ஆனால், இந்த இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன. சிலகாலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்குக் குன்றிவிட்டது. பௌத்த மதத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை குன்றிக் கடைசியில் செல்வாக்கிழந்துவிட்டது. (கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கி.பி. 753 இல்) சமண சமய குருவான பேர்பெற்ற ஆசாரிய அகளங்கர்20 காஞ்சீபுரத்தில் பௌத்தக் கோவிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்தபிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள் இலங்கைக்குச் சென்றுவிட்டனர். இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ் நாட்டிலே வைதீகம் பௌத்தம் என்னும் மதங்கள் பின்னடைந்துவிடச் சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புற்றிருந்தது.

செல்வாக்குப் பெற்றிருந்த சமணசமயம் நெடுங்காலம் சிறப்புடனிருக்க முடியவில்லை. சிலகாலஞ் சென்ற பின்னர்ச் சமணசமயத்தின் செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று. இதற்குக் காரணம் யாதெனின், புதிதாகத் தோன்றிய ‘இந்து’ மதமும் ‘பக்தி’ இயக்கமுந்தான். இப்புதிய ‘இந்து’ மதம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆராய்வாம்.

பண்டைக் காலத்திலே, வடநாட்டினின்று சமணம், பௌத்தம், வைதீகம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழர் ‘திராவிட’ மதத்தைக் கொண்டிருந்தனர் என்று முன்னர்க் கூறினோம் அன்றோ? அந்தத் திராவிட மதம் என்பது முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை வணங்கும் வழிபாடு ஆகும். அக்காலத்து வைதீகப் பிராமணர் தம் வேள்விகளில் ஆடுமாடுகளைக் கொன்றுவந்தது போலவே, அந்தக் காலத்துத் தமிழரும் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வணங்கிவந்தனர். உயிர்ப்பலியிடுவதைப் பொறுத்தவரையில் திராவிட மதமும் வைதீக மதமும் ஒற்றுமைகொண்டிருந்தன. ஆனால், அப் பண்டைக் தமிழர் சேயோன் மாயோன் ஆகிய சிவன் திருமால் என்னும் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்ததாகத் தெரியவில்லை. அன்றியும் அக்காலத்தில் சைவம் என்றும் வைணவம் என்றும் தனித்தனியே இரண்டு மதங்கள் பிரிவுபடவும் இல்லை.

குறுகிய நோக்கமும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக மதம் தென்னாட்டில் செல்வாக்கின்றி ஒதுக்கப்பட்டிருந்த தென்று முன்னர்க் குறிப்பிட்டோமன்றோ? ஒதுக்கப்பட்டுக் கிடந்த இந்த மதம் பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப்பெற முயன்றது. செல்வாக்குப் பெறவேண்டுமானால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்கவேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழி யாது எனின்: தமிழர் வழிபட்டு வரும் திராவிட மதத்துடன் வைதீக மதமும் கலந்து கொண்டு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதுதான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. நீரில் மூழ்கி உயிர் இழக்குந் தறுவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுக்கோடு கிடைக்குமாயின் அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக்கொள்வானோ, அவ்வாறே அழியுந் தறுவாயிலிருந்த வைதீக மதம் திராவிட மதத்தைத் தழுவிப் பிடித்துக்கொண்டது. அஃதாவது வைதீக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக் கொண்டது.

ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது. தமிழ் முருகனுக்குச் சுப்பிரமணியன், கந்தன் முதலான புதுப்பெயர்களைச் சூட்டி, வள்ளி என்னும் ஒரு தமிழ் மனைவியோடிருந்த அத் தெய்வத்திற்குத் தெய்வயானை என்னும் ஆரிய வைதீகப் பெண்ணொருத்தியை இரண்டாம் மனைவியாகக் கொடுத்து ஆரியத் திராவிடத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொண்டது. சிவன் என்னும் திராவிடத் தெய்வம் உருத்திரன் என்னும் வைதீகத் தெய்வத்துடன் பொருத்தப்பெற்று இரண்டும் ஒன்றே என்று கற்பிக்கப்பட்டது. ‘சிசன தேவர்’ என்று வைதிகப் பார்ப்பனரால் ஆதிகாலத்தில் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்க உருவம், திராவிட வைதீக உறவின் பிறகு உயர்ந்த தெய்வமாக வைதீக மதத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொற்றவையைச் சிவனுடைய மனைவியாக்கிவிட்டனர். (ஆனால், மலையாள நாட்டில் கொற்றவையை (காளியை)ச் சிவனுடைய மனைவியாக்க உடன்படாமல், இன்னும் சிவனுடைய தங்கையாகவே கருதிவருகின்றனர்!) கொற்றவை, காளி, துர்க்கை இவர்களெல்லாம் பார்வதியின் வெவ்வேறு அம்சங்கள் என்று கற்பிக்கப்பட்டன. பார்வதிக்கும் சிவனுக்கும் ஆறுமுகன் மகனாகப் பிறந்தான் என்றும், மற்றும் பல கதைகளும் கற்பிக்கப்பட்டன. மாயோனாகிய திருமால் என்னும் திராவிட தெய்வத்துடன் வைதீக தெய்வங்களாகிய விஷ்ணு சூரியன் இவைகள் பொருத்தப் பெற்றுப் புதிய தொடர்புகளும் கதைகளும் கற்பிக்கப்பட்டன. இந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய சில தெய்வங்கள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டன. விநாயகர் (பிள்ளையார்) முதலிய புதிய தெய்வங்கள் புதிதாகப் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிது புதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிட மதமும் வைதீகமதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று வைதீகமும் அல்லாததாய் திராவிடமும் அல்லாததாய் இரண்டும் கலந்ததொரு புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதிதாகத் தோன்றிய மதம்தான் ‘இந்து’ மதம் என்பது. இப்புதிய ‘இந்து’ மதம் திடீரென்று உண்டாகவில்லை. இந்தத் தொடர்புகளும் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்படச் சில நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும்.

இவ்வாறு புதிய உருவம் அடைந்த ‘இந்து’ மதத்திற்கு நாட்டிலே சிறிது செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. ஏனென்றால், பெருந்தொகையினரான திராவிடக் கொள்கையுடைய தமிழரும் சிறு தொகையினரான வைதீகக் கொள்கையுடைய பிராமணரும் இந்தப் புதிய இந்து மதத்தில் சேர்ந்திருந்தனர். ஆயினும் புதிய ‘இந்து’ மதம் அதிகச் செல்வாக்குப் பெறவில்லை. பின்னர், ‘இந்து’ மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. இந்தப் பக்தி இயக்கந்தான் ‘இந்து’ மதத்திற்குப் புத்துயிரையும் புதிய ஆற்றலையும் பெருஞ் செல்வாக்கையும் தந்தது.

‘பக்தி’ இயக்கத்தை ஆதரவாகக் கொண்டு ‘இந்து’ மதத்தை நிலைநாட்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றினார்கள். இவர்கள் புதிய ‘இந்து’ மதத்தை ஆதரித்துப் பக்தி இயக்கத்தைப் பரவச்செய்தார்கள். சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் அருளிச் செய்தார் என்றும், அவரே இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்மறையையும் அருளிச் செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், அவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் நான்கு மறைகளையும் அருளிச்செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியிருப்பது, திராவிட - வைதீகக் கொள்கையை ஒன்றோடொன்று பொருத்திப் பிணைத்துப் புதிய இந்து மதத்திற்கு ஆக்கந்தேடுதற் கென்க.

அவ்வாறே, ‘முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்,’ ‘வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்,’ ‘செந்தமிழோ டாரியனைக் சீரியனை,’ ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய், ‘அண்ணாமலையுறையும் அண்ணல் கண்டாய்,’ ‘அந்தமிழின் இன்பப்பாவினை அவ் வடமொழியைப் பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளுங் கோவினை’ என்பது முதலாக இவர்கள் கூறியதும் இப்புதிய திராவிட - ஆரிய வைதீக மதக் கலப்பினை வற்புறுத்துவதற்கே.

இவர்களைப் பின்பற்றியே சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில், ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க’ என்றும், ‘தாரணிமேற் சைவமுடன் அருமறையின் துறைவிளங்க’ என்றும், ‘சைவமுதல் வைதீகமும் தழைத்தோங்க’ என்றும், ‘அருமறைச் சைவந் தழைப்ப’ என்றும், ‘சைவநெறி வைதிகத்தின் தருமநெறியொடுந் தழைப்ப’ என்றும் ஆங்காங்கே திராவிட வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்துக் கூறியுள்ளார்.

புதிதாகத் தோன்றிய இந்து மதத்திற்குப் புதிய ஆற்றலைக் கொடுத்தது பக்தி இயக்கம் என்று கூறினோம். அதுமட்டும் அன்று, இந்து மதத்திற்குத் துணையாகக் காபாலிகம், காளமுகம், பாசுபதம், மாவிரதம் முதலிய சமயங்கள் தோன்றி வடநாட்டினின்றும் வந்து சேர்ந்தன. இவை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ளப்பட்டு ‘அகச் சமயம்’ என்று பெயர் கொடுக்கப்பட்டன. இந்த மதங்களில் சில நரபலி கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த மதங்களின் உதவியினாலும், ‘பக்தி’ இயக்கத்தின் துணையினாலும் புத்துயிர் பெற்ற இந்து மதம், சமண சமயத்தை வன்மையாகத் தாக்கி அதனை வீழ்த்தத் தொடங்கிற்று.

Link to comment
Share on other sites

எது எப்படியோ சூடாக போயி கொண்டு இருந்த விவாதத்தை வெற்றிகரமாக திசை திருப்பி விட்டு இருக்கிறீர் . வாழ்த்துக்கள் நாரதரே . இல்லாவிட்டால் நாளை வரை இந்த திரி நீண்டு இருந்தால் நாயே பேயே என்று அடித்துகொள்ளும் வரை போயிருப்போம் என நினைக்கிறேன் . மிக்க நுட்பமான திசை திருப்பல் . வாழ்த்துக்கள்

அது சரி . இந்த திரி உள்ளது அரசியல் அலசல் பகுதியில் . இப்போ எதை அலச . திரியின் கருத்தையா அல்லது உம் திசை திருப்பலையா

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு பழக்கம் இருக்கு உண்மைய சொல்லிடறேன் . முதலில் திண்ணைக்கு போவேன் . அங்க hi என ஒரு தட்டு தட்டுவேன் . யாரும் பதில் கொடுக்கலன்னா வீரம் வந்து ( யாருமில்லை எனும் தைரியத்தில் ) திரி எல்லாத்துக்கும் பதில் இடுவேன் . ஆனால் மறைந்து இருந்து தாக்கும் கொரில்லா போல ஈழ உறவுகள் அட்டாக் பண்ண ஆரம்பிப்பாங்க . நம்ம பொழப்பு நாறிடும் . இந்த நேரம் பார்த்து ஒப்புக்கு கூட சப்போர்ட் பண்ண யாரும் வர மாட்டாங்க . தனியாவே களமாட வேண்டி இருக்கு . எவ்வளவு நேரந்தான் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.திடீர்னு கோபம் வந்து ஏதாவது எழுதிடுவேன் . அப்புறம் மனசு வேதனை படும் .. எனக்கு இதே பொழப்பா போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு முதல் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்

தங்கள் ஊர் எது???

Link to comment
Share on other sites

இந்து மததிற்காக நான் இந்தியாவை ஆதரிப்பேன் என்று எழுதியவர் நீங்கள்.

அதனைத் தொடர்ந்து இந்து மதமே தமிழ் நாட்டிற்க்கு வெளியே இருந்து வந்த மதம் என்று எழுதினேன்.

அதற்கான இணைப்புக்களைக் கொடுத்தேன். தரவுகளை நீங்களே கேட்டிருந்தீர்கள்.

வெளியால் இருந்து வந்த ஒரு மததிற்காக நீங்கள் உங்கள் சொந்த சகோதரர்களைக் கொன்றவர்களை நியாயப்படுதுவீர்களானால் உங்களிடம் பேச ஒன்றுமில்லை. ஏனெனில் உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சொந்தச் சகோதர்களாகத் தெரியவில்லை என்று தான் அர்த்தம்.

நீங்கள் தமிழ் தெரிந்த ஒரு பிராமணராகவோ அல்லது ஒரு இந்தியராகவோ இருக்கலாம், எனக்குக் கவலை இல்லை.

ஆனால் இன்று உலகமே இனப்படுகொலை என்று சொல்லும் ஒரு விடயத்தை நடாத்த பின்னணியில் இருந்து செயற்பட்ட ஒரு கும்பலுக்கு ஆதரவு தேடுகிறீர்களே அங்கே இருக்கிறது உங்கள் இனப்பற்று.

இந்திய தேசம் தனது கேடு கெட்ட சரித்திரத்தை திருத்திக் கொள்ள வேண்டுமானால் தமீழத்தை அங்கீகரிகட்டும்.

மாற வேண்டியவர்கள் நாங்கள் அல்ல ,இந்திய தேசத்தின் ஆரிய வழித் தோன்றிய ஆட்சியாளர்கள்.

வரும் காலத்தில் சீனாவால் துன்பப்படப் போகிறவர்கள் இந்தியர்கள் தான். நாங்கள் அல்ல. அதற்காகவே நீங்கள் தமீழத்தை அங்கீகரிக்க வேண்டி வரும்.

மேலும் கண்ணகி இட்ட சாபம் போல், எம் தங்கை தாமரை இட்ட சாபமும் உங்களைச் சும்மா விடாது.

Link to comment
Share on other sites

அதற்கு முதல் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்

தங்கள் ஊர் எது???

கேட்பது உங்களின் உரிமை கேட்கிறீர்கள் . ஆனால் இப்படி பகிரங்கமாக கேட்டு என்னை இந்திய உளவுத்துறையிடம் போட்டு கொடுக்க நினைக்கிறீரே .யாழ் களம் எப்போதும் உளவு துறையால் கண்காணிக்க படுவது .நான் ஒரு முழுமையான இந்தியன் ஆனால் ஈழத்தை நேசிப்பவன் . இந்த முரண்பாடு ஒன்று போதுமே என்னை கவிழ்க்க . கோபம் இருந்தால் இரண்டு அரை கன்னத்தில் விடலாமே.

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைதியம் , எனக்குத் தெரிந்தவரை தமிழ்னாட்டுத் தமிழர்கள் எவரும் `தறுதலை ` என்னும் சொல்லைப் பாவிப்பதில்லை.

நீங்கள் ஒரு தமிழ் நாட்டுத் தமிழரைப் போல் வேடம் அணிந்து வேண்டுமென்றே இங்கு எதோ உள் நோக்கில் வந்திருகிறீர்கள் என்று சந்தேகிக்கிறேன்.

Link to comment
Share on other sites

மேலும் கண்ணகி இட்ட சாபம் போல், எம் தங்கை தாமரை இட்ட சாபமும் உங்களைச் சும்மா விடாது.

அன்பரே நீங்கள் நேரடியாக பதிக்க பட்டவர் போல தெரிகிறது .தயவு செய்து என் கருத்து உங்களை பாதித்து இருந்தால் என்னை மன்னியுங்கள் . மேலும் ஆதரவு யாருக்கும் தேட வில்லை. தயவு செய்து என இடுகைகளை தெளிவாக படித்த பின்னர் பதில் கூறவும் . தவறான புரிதல் கொண்டு என் மனதையும் காயப்படுத்த வேண்டாமே ப்ளீஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்பது உங்களின் உரிமை கேட்கிறீர்கள் . ஆனால் இப்படி பகிரங்கமாக கேட்டு என்னை இந்திய உளவுத்துறையிடம் போட்டு கொடுக்க நினைக்கிறீரே .யாழ் களம் எப்போதும் உளவு துறையால் கண்காணிக்க படுவது .நான் ஒரு முழுமையான இந்தியன் ஆனால் ஈழத்தை நேசிப்பவன் . இந்த முரண்பாடு ஒன்று போதுமே என்னை கவிழ்க்க . கோபம் இருந்தால் இரண்டு அரை கன்னத்தில் விடலாமே.

நண்பரே எல்லாமே போச்சு

உங்கள் இந்திய உளவுத்துறை இவ்வளவு வீக்கா?

கொஞ்சம் முன்புதானே சொன்னீர்கள் மிகவும் அதிக பேச்சுச்சுதந்திரமுள்ள தேசம் இந்தியா என்று??? :lol::D :D

(சிறிலங்கா அரசுக்கு எதிராக 30 வருடமாக உழைக்கும் நான் எனது சொந்த ஊரைச்சொல்லித்தான் இங்கு எழுதுகின்றேன்.)

Link to comment
Share on other sites

அன்பரே இன்று மே மாதம் 17 ஆம் திகதி. உலகில் மூலை முடுகெங்கும் இருக்கும் எல்லாத் தமிழரும் மூன்று ஆண்டுகளின் முன் பாதிக்கப்பட்டோம். எம் கண்முன்னால் , எமது உறவுகள் தொலைக்காட்சியில் மின் விம்பங்களாய், தொலை பேசியில் எங்களைக் காப்பாறுங்கள் என்று கதறிய நாள்.

அந்தக் காட்டுமிராண்டித் தனம் நடாந்த போது நாம் உலகமெங்கும் தெருவில் கிடந்தோம். உலகம் உதவி செய்ய விழைந்த போது அதனைத் தடுத்து நிறுதிய பெருமை உங்கள் கேடு கெட்ட இந்திய அரசையே சாரும்.எம் உயிர் உள்ளவரை இதனை எந்தத் தமிழனும் மறக்க மாட்டான்.

நீங்கள் மதத்தைக் கொண்டோ வேறு எதைக் கொண்டுமோ , இவ் வரலாற்றுப் பழியை இல்லாது செய்து விட முடியாது.

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைதியம் , எனக்குத் தெரிந்தவரை தமிழ்னாட்டுத் தமிழர்கள் எவரும் `தறுதலை ` என்னும் சொல்லைப் பாவிப்பதில்லை.

நீங்கள் ஒரு தமிழ் நாட்டுத் தமிழரைப் போல் வேடம் அணிந்து வேண்டுமென்றே இங்கு எதோ உள் நோக்கில் வந்திருகிறீர்கள் என்று சந்தேகிக்கிறேன்.

தறுதலை என எங்கள் ஊர் பாய்கள் ( உங்கள் சொல்படி முஸ்லிம்கள் ) சொன்ன பேச்சை கேட்காதவர்களை சொல்வார்கள் . மேலும் உங்களுக்கு மேலோட்டமாக தமிழ் நாட்டை தெரிந்து கொண்டு குருட்டு போக்கில் கதைக்கிறீர்கள் என எண்ணுகிறேன். தறுதலை என்ற சொல் தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தானது . பிற சொற்கள் அவ்வப்போது தென்னக மொழிகள் பலவற்றால் சொந்தம் கொண்டாடப்படுகிறது. மேலும் என் தமிழ் புலமையை சீர்தூக்கும் முயற்ச்சி உங்களுக்கு வேண்டாம் .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவான் முதற்றே உலகு

இந்த குறளே தவறு என கூறி சரியான விடை கூறி சான்றோர்களால் பாராட்டப்பட்டவன் நான் .

மேலும் எனது தந்தை முன்பு என்னை வைத்து நீ இவருக்கு பிறந்தவனா என கேட்பது போல உள்ளது உங்களின் தொனி. தயவு செய்து உங்களால் என் கேள்விகளுக்கு நேரடியான பதில் கூற முடிந்தால் கூறவும் . இல்லையேல் தனி மடலில் எதுவும் எழுதாதே எனக்கு பிடிக்கவில்லை என கூறுங்கள் . நிறுத்தி கொள்கிறேன்.

தமிழ் பைத்தியம் என்ற திராவிட சொல் கொண்ட புனை பெயரை வைத்து இருக்கும் என்னை நாரதர் என்ற ஆரிய புனை பெயரை வைத்திருக்கும் தாங்கள் கேலி செய்வது கொஞ்சம் நிரடுகிறது

Link to comment
Share on other sites

அதற்கு முதல் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்

தங்கள் ஊர் எது???

என் எழுத்தை கொண்டு பெரும்பாலான நண்பர்கள் வெகு சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள் . ஆனால் தொடர்ந்து என் கருத்துகளுக்கு மதிப்பளித்து இடுகை இடும் தாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை எனும் போது எனெக்கு என் மேலேயே கோபம் வருகிறது

தனி மடலில் சொல்கிறேன் நண்பா ( இப்போதாவது கண்டு பிடிக்கலாமே )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் எழுத்தை கொண்டு பெரும்பாலான நண்பர்கள் வெகு சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள் . ஆனால் தொடர்ந்து என் கருத்துகளுக்கு மதிப்பளித்து இடுகை இடும் தாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை எனும் போது எனெக்கு என் மேலேயே கோபம் வருகிறது

தனி மடலில் சொல்கிறேன் நண்பா ( இப்போதாவது கண்டு பிடிக்கலாமே )

என்னைப்பொறுத்தவரை

நீங்களும் நானும் ஒரே ஊர்தான். :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.