Jump to content

ரெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுகின்றார் ஜெயசூரியா


Recommended Posts

24jaya.jpg

இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் ஆன சனத் ஜெயசூரியா ரெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். ஆயினும் தொடர்ந்து ஒருநாள் துடுப்பாட்ட போட்டிகளில் கலந்துகொள்வார் என்று தெரியவந்துள்ளது.

JAYASURIYA_SANATH_TEST_WALK.jpeg

2007 இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் கிரிக்கட்டில் இருந்து முற்றுமுழுதாக ஓய்வுபெறப்போவதாகவும் சனத் தெரிவித்துதுள்ளார்.

ஜெயசூரியா ராய்ட்டர் நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், " ரெஸ்ட் போட்டிகளில் விளையாடாது ஒதுங்கியிருப்பது உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடக் கூடியவாறு உடல் நலத்தைப் பேண உதவும்" என்றார். அவர் மேலும் கூறுகையில் "நிச்சயமாக நான் அச்சுற்றுப் போட்டியின் பின் கிரிக்கடிலிருந்து விலகுவேன். நாங்கள் உலகக்கிண்ணச் சுற்றுப்போட்டியை வெல்லக்கூடிய சாத்தியம் உள்ளதெனக் கருதுகிறேன்; அதற்கு நாங்கள் கடுமையாக உழைப்பதுடன் கிரிக்கட்டின் மூன்று தளங்களிலும் சிறப்பாக விளையாடவேண்டும்" என்றும் கூறினார்.

sanath2wp.jpg

இறுதி ரெஸ்ட் போட்டியின் ஆரம்பநாளில் கேக் வெட்டும் போது

தகவல் தந்துதவிய சுண்டலிற்கு நன்றிகள்

மேலதிகவிபரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒய்வு பெற்றால் தான் என்ன ஒய்வு பெறாவிட்டால் தான் என்ன

Link to comment
Share on other sites

இலங்கை அணி யினுடைய பெயரை சர்வதேச மட்டத்துக்கு எடுத்து சென்ற மிக சிறந்த வீரர்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் ஒய்வு பெற்றால் தான் என்ன ஒய்வு பெறாவிட்டால் தான் என்ன

யாராக இருந்தாலும் அவர்கள் திறமையை பாராட்டுவது

தமிழர் நம் பண்பாடு,

அவர் ஒரு சிறந்த சகலதுறை ஆட்டகாரர்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி யினுடைய பெயரை சர்வதேச மட்டத்துக்கு எடுத்து சென்ற மிக சிறந்த வீரர்.........

_________________

சுண்டல் எழுதியது

12 நாடுகள் விளையாடும் போட்டியை எப்படி தம்பி சர்வதேசம் என்று சொல்வது.கிரிக்கட் விளையாடும் நாடுகள் எல்லாம் பிரித்தானிய காலணித்துவ நாடுகள் இப்ப அவர்களுக்கு எஜமான விசுவாசத்தை காட்டுகிறார்கள்.

ஜசுரியா என்றால் ஒரு அமெரிகனுக்கோ,ரசியனுக்கோ அல்லது ஒரு சீனனுக்கோ தெரியுமா??

சுசந்திகா ஒலிம்பிக் போட்டியின் போது எடுத்த வெண்கல பதக்கத்தை பற்றி சர்வதேசம் அறிந்திருக்க கூடும்.

Link to comment
Share on other sites

இவர் தமிழன் தானே இவருக்கு என்னுடைய வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

தமிழனோ சிங்களவனோ.. விளையாட்ட விளையாட்டா மட்டும் பாருங்க...அவர் சிங்களவர் என்டதுக்கா..அவருடைய திறமையை கொச்சை படுத்தாதிர்கள்....அவருடைய ஒய்வை அவுஸ்த்திரேலியாவின்...மிக பிரபலமான பத்திரிகையான the daily telegraph ல யே பெரிசா போடுறாங்கள் என்டா அது அவருடைய திறமையை அவர் ஒரு மிகச்சிறந்த வீரர் என்கிறதை தான் எடுத்து காட்டிகின்றது...

Link to comment
Share on other sites

ஜெயசூரியாவின் 96ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக முதல் சுற்றில், இந்தியவீரர்களை சில ஒவர்களில் மிகவும் கழைப்புற செய்து, இந்தியாவின் கிரிகெட் திமிரை சுக்கு நூறாக்கிய பெருமை இவருக்கே உரியதாகும்.

Link to comment
Share on other sites

விளையாட்டை விளையாட்டாகவும், விளையாட்டு வீரர்களை விளையாட்டு வீரர்களாகவும் மதித்தாலே போதும். இன்று இலங்கை அணியில் முரளி இவ்வளவு காலமும் நிலைத்து நிற்பதற்கு அர்ஜுன ரணதுங்காவும் ஓர் காரணம் என்றால் மிகையாகது. ஆயினும் அர்ஜுன ரணதுங்காவின் அரசியல் நிலைப்பாடு வேறு விதமாக இருக்கின்றது. அதற்காக ஓர் விளையாட்டு வீரனிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. விளையாட்டு வீரனை அவனது தளத்திலிருந்து பார்த்தாலே போதும்.

Link to comment
Share on other sites

விளையாட்டை விளையாட்டாகவும், விளையாட்டு வீரர்களை விளையாட்டு வீரர்களாகவும் மதித்தாலே போதும்

சுண்டல் மற்றும் அருவிக்கு

அரசியலை அரசியலா பாருங்கோ வைகோ அம்மாகிட்ட போனா என்ன அப்பாகிட்ட போனா என்ன?

நீங்க இதனை இவ்வளவு பெரிசா தூக்கி பிடிக்கீறிங்கள்???

நீங்க விளையாட்டில ஒற்றுமையாக இருக்கிற மாதிரி (சிங்களவர் தமிழர்) அரசியலிலும் இருந்திருக்கலாம் அல்லவா?

அப்படி இருந்திருந்தால் சிறிலங்கா சொர்கபூமியாக இருந்திருக்கும் அல்லவா,உங்களுக்கு கிறிக்கட் என்றால் உயிரு சிங்களவன் கீறோ என்றாலும் தூக்கி வைத்திருப்பீங்கள் உங்களுக்கு கிறிக்கட் மாதிரி எங்களுக்கு அரசியல் உயிர்.

Link to comment
Share on other sites

உங்களுக்கு இந்த அரசியல் ஞானம் எப்ப வந்ததுங்கோ!

1948 ஆம் ஆண்டு எல்லாத்தயும் தூக்கிக் குடுத்தனீங்க தானே இப்பவந்து அரசியல் பேசுறீங்க!!

மனிதனின் பண்பு என்ற ஒன்று முதல்ல தேவை, அந்தப் பண்பையாவது முதல்ல தெரிஞ்சுகொள்ளுங்க!!!

Link to comment
Share on other sites

எங்களுக்கு அரசியல் உயிர்.

உங்கட அரசியல இந்தியாவோட மட்டும் வைச்சிருங்க :wink: :wink: :wink:

அந்த நாத்தம் பிடிச்ச அரசியல் எங்களுக்கு வேணாம். :wink:

Link to comment
Share on other sites

உங்கட அரசியல் உயிர் என்று எங்களுக்கு தெரியும் அதை உங்களை விட அதிகம் நேசிப்பவன் நான். உங்கள் கிரிக்கட் பைத்தியத்தால் சிங்களவனை தூக்கி பிடிப்பதை பற்றி தான் கூறுகிறேன்.

அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று நீங்கள் கூறலாம் காரணம் நீங்கள் வெளிநாடுகளில் வசதியாக இருந்து கொண்டு கணணியில் அரசியல் நடத்துவீர்கள் அங்கு அப்பாவி பொதுமக்களும் போராளிகளும் சமாதானகாலத்திலும் கொல்லபடுகிறார்கள்.

ஏன் சிங்களவனுக்கு(விளையாட்டு வீரர்கள்,அரசியல் வாதிகள்,இராணூவத்தினர்)அப்பாவ

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ="அடிதடி"]ஜெயசூரியாவின் 96ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக முதல் சுற்றில், இந்தியவீரர்களை சில ஒவர்களில் மிகவும் கழைப்புற செய்து, இந்தியாவின் கிரிகெட் திமிரை சுக்கு நூறாக்கிய பெருமை இவருக்கே உரியதாகும்.[/ஃஉஒடெ]

88லில தம்பி பிரபாகரன் இந்திய இராணுவத்தை மிகவும் களைப்புற செய்து இந்தியாவின் பிராந்திய வல்லரசு திமிரை அடக்கியவர் இதை விட உங்க சாதனை எந்த மூளைக்கு.

வெள்ளை இனத்தவரின் அணியின் திமிரை அடக்கினாலும் பரவாயில்லை போயும் போய் இந்தியனின்ட திமிரை அடக்கினது பெரிய சாதனை...அது சரி இந்தியகாரனுக்கு ஒழுங்காக பந்து பொறுக்க தெரியுமா?????

Link to comment
Share on other sites

சுண்டல் எழுதியது

அப்படி போடு அருவால அருவி........

போட்டானே திருமலையில அப்பாவி தமிழன் மேல..அங்கே சிங்களவன் அப்பாவி தமிழன் வேறு புலி வேற என்று சிந்திக்கவில்லை....

Link to comment
Share on other sites

அவர்கள் அப்பிடி சிந்திக்க வில்லை என்டதுக்காக நாங்களும் அப்பிடி சிந்திக்க கூடாதா?ke ke ke சின்னபுள்ள தனமால்ல இருக்கு......

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாத்திலும் அரசியலைச் சேர்ப்பவர்கள் தானே. உங்களிற்கு எங்கே தெரியும் அதனதன் அருமை. பாகிஸ்தான் இந்தியப் போட்டிகளில் தெரியும் அங்கு விளையாடுவது அரசியலா இல்லை விளையாட்டா என்று. இப்பக்கம் ஒரு விளையாட்டு வீரனைப் பற்றிய செய்தியைக் கூறவே ஆரம்பிக்கப்பட்டது. நீங்கள் உங்கள் அரசியல் பற்றிப் பேசுவதென்றால் இன்னொரு பக்கத்தை ஆரம்பியுங்கள், அங்கு தாராளமாக விவாதிப்போம் அரசியல் பற்றி. அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக்கி நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா கிரிக்கட் விளையாடி சாதனை படைத்தா மட்டும் தான் விளையாட்டு பகுதியில் முக்கியம் கொடுக்கபடுமோ???அவ்வளத்துக்கு புலம் பெயர் தமிழன் சிறிலங்காவுக்கு விசுவாசமா???

Link to comment
Share on other sites

மீண்டும் சனத் ஜெயசூரியா

இலங்கை அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான சனத் ஜெயசூர்யா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறப் போவதாக சனத் ஜெயசூர்யா அறிவித்தார். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி யில் இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதற்கு ஜெயசூர்யா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாதது ஒரு காரணம் என்று வாரியத்தின் தரப்பில் கருதப்பட்டது. இதனால் மீண்டும் ஜெயசூர்யா டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்று தேர்வுக்குழு தலைவர் அசந்தா டிமெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லண்டனில் உள்ள அணி மேலாளர் மைக்கேல் திஸ்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், இம்மாதம் 25ம் தேதி எட்ஸ் பாஸ்டன் மைதானத்தில் தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என தெரிகிறது

http://news.bbc.co.uk/sport1/hi/cricket/ot...nka/4768739.stm

http://www.worldtamilarweb.com/detailsnew....ndia&type1=head

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைக்கு ஆள் வெளியே செல்வதற்கு கேக் வெட்டினிங்க இப்ப ஆள் மறு படி வாரதற்கும் கேக் வெட்டி வாராரா இல்லாவிட்டால் யாரை வெட்டி உள்ளே வர போறார்......

இலங்கையில இவரை தவிர ஒருத்தனும் மட்டை தூக்க இல்லையா?

Link to comment
Share on other sites

வைகோ அண்ணா அல்லது அக்காவுக்கு

விளையாட்டிலை தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையா இருக்கறதா ஆர் சொன்னது. உங்கடை முரளிதரனுக்கு தலைவர் பதவி குடுக்க சிங்களம் ஓமாமோ? கறிவேப்பிலையா வைச்சிருக்கத் தான் சம்மதம்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

quote="Manivasahan"]வைகோ அண்ணா அல்லது அக்காவுக்கு

விளையாட்டிலை தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையா இருக்கறதா ஆர் சொன்னது. உங்கடை முரளிதரனுக்கு தலைவர் பதவி குடுக்க சிங்களம் ஓமாமோ? கறிவேப்பிலையா வைச்சிருக்கத் தான் சம்மதம்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

அந்த சிங்கள விளையாட்டு நாய் விட்டுட்டு போனா எங்களுக்கு என்ன....

அவன் போய் சிங்கள உறுமையாவில் சேர்ந்திடுவான். பிறகு அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்கிற தமிழருக்கு எதிராகவும் குண்டு போட சொல்வான்

Link to comment
Share on other sites

சனத் யெயசூரியா நல்லவரோ கெட்டவரோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சிறந்த விளையாட்டு வீரர் என்ற முறையில் அவரின் திறமைக்குத் தலைவணங்குகிறேன். அவர் சிங்களவர் என்றதற்காக அவரை தரக் குறைவாய்ப் பேசுவதை நிறுத்தவேண்டும். இந்திய இராணுவம் ஈழத்திற்கு வந்து அப்பாவி மக்களை படுகொலை செய்தது. அதற்காக டெண்டுல்கார் சிறந்த துடுப்பாட்ட வீரர் இல்லை என்று சொல்ல முடியுமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.