Jump to content

அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் பற்றிய விவரணம் -வீடியோ

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கோமகன்.

இவரது கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும், பாடல்வரிகளை நினைவில் நிறுத்தி பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடாத்திய திறமையும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம்.

Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி கோமகன்.

இவரது கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும், பாடல்வரிகளை நினைவில் நிறுத்தி பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடாத்திய திறமையும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம்.

இவரில் விமர்சனங்கள் இருந்தாலும் , காலத்தால் அழிக்கமுடியாத அரும்பெரும் பொக்கிசமாக எம்மிடையே வாழ்கின்றார் . மிக்க நன்றிகள் ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவரில் விமர்சனங்கள் இருந்தாலும் , காலத்தால் அழிக்கமுடியாத அரும்பெரும் பொக்கிசமாக எம்மிடையே வாழ்கின்றார் . மிக்க நன்றிகள் ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு .

யாரில் தான் விமர்சனங்கள் இல்லை? நல்லவற்றை எடுத்து கூடாததை விட்டு விடுவோமே!

Link to post
Share on other sites

யாரில் தான் விமர்சனங்கள் இல்லை? நல்லவற்றை எடுத்து கூடாததை விட்டு விடுவோமே!

நானும் உங்கள் பக்கம் தான் ஈஸ் .

Link to post
Share on other sites

இவர் தமிழரை திருமணம் செய்ததால் அரசினால் நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.இக்கூற்று உண்மையா??

Link to post
Share on other sites

இவர் தமிழரை திருமணம் செய்ததால் அரசினால் நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.இக்கூற்று உண்மையா??

அப்துல் ஹமீட் ஓர் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர் . இவர் விசாலாட்சி என்ற பிராமணப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் .. விசாலாட்சி ஹமீத் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார் . ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட தமிழ்சேவைப் பணிப்பாளர் நியமனத்தில் அருந்ததி சிறீ ரங்கனாதன் , வீ என் மதியழகன் தலமையில் ஏற்பட்ட உள் அரசியல் வேலைகளால் மனமுடைந்தவர் , நாட்டை விட்டே வெளியேறினார் .

Link to post
Share on other sites

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மதுரை டிசைன் சில்க்ஸ்.. சங்கு மார்கு கைலிகள் .. பவர் சோப்பு.. எல்லாம் இவரின்ட குரலில் விற்பனை ஆனவை.. கொழும்பு வானோலி வர்த்தக சேவை 1900களில்

Link to post
Share on other sites

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

அதிகாரமட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சுயநலவாதிகள் என்றால் தமிழர்கள் எல்லோருமே சுயநலவாதிகளாகின்றனர் . அன்றைய காலகட்டத்தில் பெரும் பதவிகள் யாவுமே தமிழர்கள்தான் அலங்கரித்தார்கள் . ஒருவகையில் தமிழுக்கும் தேசியத்திற்கும் அதிகாரமட்டத்தில் இருந்த தமிழர்கள் உதவியுள்ளார்கள் . உதாரணமாக அப்போதய கொழும்பு மேயராக இருந்த கணேசலிங்கம் பலவழிகளில் தேசியத்திற்கு உதவியுள்ளார். இவ்வாறான உதவிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை . எதையும் பறைதட்டிதான் செய்யவேண்டும் என்ற அவசியமில்லையே தமிழரசு . உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

***********எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .

Link to post
Share on other sites

இவரின் தமிழ் உச்சரிப்பை இன்றும் அன்றும் கண்டு

வியந்தவன். ஆங்கில வாடை இல்லாமல்

தமிழைப் பேசும் ஒரு அறிவிப்பாளர் மட்டுமல்ல

மிகத் திறமைவாய்ந்த ஒரு கலைஞர்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவர் கே எஸ் ராஜாவின் மரணத்தின் பின்னர் தான் இந்தியாவிற்கு போனவர் என யாரோ சொல்லிச்சினம் உண்மையா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன், ரதி,

கோ,

நான் அறிந்த வகையில் அப்புதுல் கமிதினது சேவைக்காலம் மற்றையவர்களுடன் ஒப்பிடும் போது குறைவு என்றுதான் நினைக்கிறன்..அவர் வெளியே பிரபல்யமாக இருந்தாலும் நிர்வாக நிலையில் ஒரு இளையவாராக இருந்தார் ஒன்று ஒருவர் சொன்ன ஞாபகம்.- என்னுடன் கதைத்தவர் சொன்னவர்- பகிடியாகவே அல்லது கால்புனர்வாகவோ தெரியவில்ல, அப்துல் கமிதுவும் - "மழையில் மலை பெய்கிறது" என்றுதானாம் ரேடியோ சிலோனுக்கு வந்தவர். :)

ரதி,

உண்மையில் KS ராஜா இற்கும் BH கமிதுக்கும் இடையில் தொழில் ரீதியான போட்டிதான் இருந்தது என்று சொல்லுவார்கள். அப்படி பார்த்தல், ஒருவர் இல்லாமல் போனபிறகு மற்றவர் நாட்டை விட்டு வெளியேறினார் என்பது பொருத்தமில்லாமல் உள்ளது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

நீங்களும் இலங்கையில் தரயிறங்கியதும் I am A Sri Lankan என்று தான் சொல்லிகொண்டு போவீர்களே தவிர நான் தமிழ் ஈழ தமிழன் என்றா சொல்லிகொண்டு போவீங்கள்? அங்கே வாழவேண்டும் என்றால் சிலதுகளை அடக்கி தான் வாசிக்கணும் கண்டியளோ? இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

விடிவெள்ளி,

நிச்சயமாக நான் I am Sri lankan என்று பெருமையாக சொல்லிக்கொண்டு போகமாட்டேன், அதே நேரம் ஈழ தமிழன் என்று மார்தட்டி கூறாட்டிலிம் மனதுக்குள் நினைத்துக்கொண்டு போவேன் எனக்கு அதுதான் பெருமையும் கூட Sri lankan என்று நினைக்க முடியவில்லை ஏனெனில் அவர்கள் செய்த கொடுமை அப்படி ...... :(

Link to post
Share on other sites

இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

ஆமாம், இல்லாதுபோனால் ஓடிவந்து உதவி விடுவார்கள் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முஸ்லிம்கள் என்ன உதவி தமிழருக்கு செய்திருக்கின்றார்கள் ????

இவர்களுக்கு புலிகள் மேல் கோபம் என்றால் இப்போது அவர்கள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுகின்றது ஏன் என்னும் தமிழர்களின் பிரச்சனைக்கு இவர்கள் சேர்ந்து குரல் கொடுக்கவில்லை ?????

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் தமிழரும் ஒன்று தானே. எமக்கு மற்றவர் மேல் உள்ள கோபம் ஆறாதது போல அவர்களுக்கும் இருக்கலாம். அவர்கள் உதவத் தேவையில்லை. எம்மை நாமே காப்பாற்றவும், எம்மக்களுக்கு நாமே உதவவும் முன் வரவேண்டும்.

Link to post
Share on other sites

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

உங்கள் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது தமிழ்சூரியன் . மாவீரர்தினத்தில் கலந்துகொண்டுதான் அப்துல்ஹமீட் தமிழ்பற்றாளர் என்று நிரூபிக்கவேண்டுமா ? பிழை சொல்வதானால் எப்படியும் சொல்லலாம் . ஒர் இஸ்லாமியன் என்பதற்காகவும் , அரசியலை தன்அருகே வைத்திருக்காத ஒரு கலைஞனை , சுயநலவாதி என்றும் , துரோகி என்றும் சித்தரிக்க முயலுவது எமது குறுகியமனப்பான்மையைத் தான் காட்டுகின்றது . இதைத்தான் மணிவாசகனும் தனது மொழியில் சொல்லுகின்றார் .

Link to post
Share on other sites

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

இதைத்தான் முதலிலேயே நான் இப்படிக்குறிப்பிட்டேன் நுணாவிலான்

அதேநேரம் அதையும் மீறி எமக்காக உழைத்த K.S. RAJAH அவர்கள் எவ்வாறு இறந்தார் என்பதையும் நினைவுகூறுகின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது தமிழ்சூரியன் . மாவீரர்தினத்தில் கலந்துகொண்டுதான் அப்துல்ஹமீட் தமிழ்பற்றாளர் என்று நிரூபிக்கவேண்டுமா ? பிழை சொல்வதானால் எப்படியும் சொல்லலாம் . ஒர் இஸ்லாமியன் என்பதற்காகவும் , அரசியலை தன்அருகே வைத்திருக்காத ஒரு கலைஞனை , சுயநலவாதி என்றும் , துரோகி என்றும் சித்தரிக்க முயலுவது எமது குறுகியமனப்பான்மையைத் தான் காட்டுகின்றது . இதைத்தான் மணிவாசகனும் தனது மொழியில் சொல்லுகின்றார்

.

வணக்கம் கோமகன் அண்ணா நான் கலைஞ்சர் திரு அப்துல் ஹமிட் அவர்களை துரோகி என்றோ சுயநலவாதி என்றோ இங்கு குறிப்பிடவில்லை .எனது ஆதங்கம் என்னவென்றால் தமிழீழ தமிழனாக பிறந்து விட்ட அல்லது தமிழனாக பிறந்துவிட்ட அனைவருக்கும் இந்தப்போராட்டத்தில் ஒரு பங்கு இருக்கவேண்டும் ,அவரவர் திறமைக்கு ,தகுதிக்கு ஏற்றவாறு அந்த பங்கு அமையவேண்டும்.அந்தவகையில் திரு அப்துல் ஹமீத் போல் நான் ஓர் சிறந்த ,பிரபல்யமான கலஞ்சனாக இல்லாவிட்டாலும் எனக்கு இறைவன் தந்த அந்த சிறிய திறமையை என் இன விடுதலைக்கு ஏதோ ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். இந்த சூழ்நிலையில் ஓர் படைப்பாளி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நான் உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்,இதே போல் ஒவ்வொரு கலைஞ்சனும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா .....இந்த எனது அவா தவறா ,சரியா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் திரு அப்துல் ஹமீத் ஒரு தமிழனா .முஸ்லிமா என்பதற்கப்பால் .தமிழ் கலை உலகிலேயே அவரது பணியும் அவரது வளர்ச்சியுமுள்ளது. அப்படிப்பட்டவர் இப்படி ஏன் நடந்து கொண்டார் என்பதை நான் கேட்டது தவறா...............

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

febbaby.gif

வணக்கம் நுணாவிலான் அண்ணா [தம்பி]

தங்கள் சுய நலன்களுக்கு.அல்லது விருப்பு வெறுப்பு இவைகளுக்காகவோ இன்னொருவரை துரோகியாக்கும் படலம் நீங்கள் கூறியது போல் இப்போ நிறைய நடந்து கொண்டிருக்கிறது.உண்மை . நான் விடுதலைப்புலிகளுடன் ,அல்லது அவர்களின் செயற்பாடுகளுடன் பின்னிப்பினைந்தவன் என்று பொய் கூறுபவன் அல்ல .ஆனால் தமீழத்தில் வாழ்ந்த காலத்திலும் சரி,புலம்பெயர் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்திலும் சரி அவர்கள் காட்டிய வழியில் வாழ முயற்சிப்பவன்.அந்த வகையில் எழுந்தமானத்திற்கு யாரையும் துரோகி என்று இதுவரை நான் கருதேழுதியதுமில்லை [ சம்பந்தர்.................உட்பட] ஆனால் இந்த திரியில் திரு அப்துல் ஹமஈட்டிற்கு ஒரு கவ்ரவம் கொடுக்கப்படும் போது அந்த கவுரவம் தமிழர்களால் கொடுக்கப்படும் போது கொஞ்சம் சிந்தித்தே நான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன்.அவரது திறமயை நான் எப்போதும் மதிப்பவன் .அப்படி நான் மதிக்காவிட்டால் நான் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதன் [கலைஞ்சன் ] என்ற வரையறைக்கு அப்பாற்பட்டவன்

Link to post
Share on other sites

.

வணக்கம் கோமகன் அண்ணா நான் கலைஞ்சர் திரு அப்துல் ஹமிட் அவர்களை துரோகி என்றோ சுயநலவாதி என்றோ இங்கு குறிப்பிடவில்லை .எனது ஆதங்கம் என்னவென்றால் தமிழீழ தமிழனாக பிறந்து விட்ட அல்லது தமிழனாக பிறந்துவிட்ட அனைவருக்கும் இந்தப்போராட்டத்தில் ஒரு பங்கு இருக்கவேண்டும் ,அவரவர் திறமைக்கு ,தகுதிக்கு ஏற்றவாறு அந்த பங்கு அமையவேண்டும்.அந்தவகையில் திரு அப்துல் ஹமீத் போல் நான் ஓர் சிறந்த ,பிரபல்யமான கலஞ்சனாக இல்லாவிட்டாலும் எனக்கு இறைவன் தந்த அந்த சிறிய திறமையை என் இன விடுதலைக்கு ஏதோ ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். இந்த சூழ்நிலையில் ஓர் படைப்பாளி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நான் உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்,இதே போல் ஒவ்வொரு கலைஞ்சனும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா .....இந்த எனது அவா தவறா ,சரியா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் திரு அப்துல் ஹமீத் ஒரு தமிழனா .முஸ்லிமா என்பதற்கப்பால் .தமிழ் கலை உலகிலேயே அவரது பணியும் அவரது வளர்ச்சியுமுள்ளது. அப்படிப்பட்டவர் இப்படி ஏன் நடந்து கொண்டார் என்பதை நான் கேட்டது தவறா...............

இந்தப்பதிவிலே அப்துல்ஹமீட் ஐ சுயநலவாதி , மறைமுகத் துரோகி , என்ற பாணியிலான விமர்சனங்கள் வந்திருதன . அவற்றை உங்களுக்கு குவாட் செய்து நான் பதிலிட்டமைக்கு மனம் வருந்துகின்றேன் . அதேவேளையில் அவரிடம் இருதரப்புகளும் அரசியல் சார்பாகப் போய் நின்ற பொழுது தன்னை யாருமே அரசியல் சாயம் பூசி ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் ( கலைஞன் ) இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அதில் விடாப்பிடியாக நின்றவர் . இதை நான் சொல்லக்காரணம் எனக்கு ஓரளவு அவரைத் தெரியும் . அதனாலேயே கள உறவு ஈஸ் இன் பின்னூட்டத்திற்கு விமர்சனங்கள் இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய கலைஞர் எனக் குறிப்பிட்டிருந்தேன் . எல்லோரும் எங்களைப்போல் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் எமது தவறு தானே தமிழ்சூரியன் . மீண்டும் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கூறுகின்றேன் .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனைத்து உலக பெண்கள் தினமான நாளை மார்ச் 8 திகதி தொடக்கம், Tim Hortons வருடம் தோறும் நடத்தும் role up the win போட்டியும் ஆரம்பமாகிறது.😀🤭
    • மௌனிக்க வைப்பு’ சிறீலங்காவின் இனஅழிப்பை ஊக்குவிக்கும் உத்தி    29 Views ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வுக்குச் சிறீலங்கா வெளிப்படுத்தி வந்த, இனங்காணக் கூடிய அச்சத்துக்குப் பாதுகாப்பாக அவர்களைப் பாதுகாத்து வந்த அவர்களின் ஆயுத எதிர்ப்பைத் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற வாக்குறுதியை ஈழத்தமிழர்களைக் கொண்டு விடுக்கச் செய்ததின் மூலம் உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்குக்கும், போக்குக்கும் பாதுகாப்பும், ஊக்கமும் அளிப்பித்தனர்.  இதன் பின்னரே சிறீலங்கா அனைத்துலக சட்டங்களுக்கோ, அமைப்புகளுக்கோ அல்லது நாடுகளுக்கோ எவ்வித அச்சமுமின்றி ‘முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு’ என்னும் 21ஆம் நூற்றாண்டின் கிட்லரிசத்தை நடைமுறைப்படுத்தியது. தமிழீழத் தேசியப் போராட்டம் என்பது பயங்கரவாதமல்ல – பிரிவினைவாதமுமல்ல.  22.05.1972 முதல் நாடற்ற தேச இனமாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், தங்களின் பிரிக்கப்பட முடியாத பிறப்பு உரிமைகளான தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில்18.05. 2009 வரை  37 ஆண்டுகள் இலங்கைத் தீவில் அரசுக்குள் அரசு என்ற அடிப்படையில் தங்களுக்கான நடைமுறை அரசை அமைத்து, தங்களுக்கு இருந்து வந்த சிறீலங்காவின் இனங்காணக் கூடிய அச்சத்தை எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், வாழ்வையும், உடமைகளையும் தங்களின் சொந்த மண்ணில் பாதுகாத்த உலகின் தொன்மையும், தொடர்ச்சியுமான குடிகளான ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம். இந்த மக்கள் போராட்டம் உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறும் நிலைக்கு தன்னை வடிவமைத்த நேரத்திலேயே அதனை அனுமதித்தால் உலகின் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களின் விடுதலை முயற்சிகள் வேக எழுச்சி பெறும் என ஒடுக்கப்பட்டு வரும் உலக மக்கள் அனைவரதும் விடுதலைக்கு மேலான மரண அடியாகவே சிறீலங்காவின் பாசிச வெற்றியை உலக வல்லாண்மைகளும், மேலாண்மைகளும் ஊக்குவித்தன. எந்த வல்லாண்மைகளும், மேலாண்மைகளும் சிறீலங்காவுக்கு ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்தை மௌனிக்க வைக்க உதவினவோ அவையே இன்றும், ஈழத்தமிழர்களின் நீதிக்கான அனைத்துலக மன்றத்தின் குரலை மௌனிக்கச் செய்வதன் மூலம் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக ஈழத்தமிழர்களின் மேல் நடாத்தப்பெற்ற இனஅழிப்புக்கான உண்மைகள் உலகின் முன் தெளிவாக்கப்பட்ட நிலையிலும், அவர்கள் தங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளாதவாறு நீதியைக் கருக்கலைப்புச் செய்கின்றன. மேலும் இம்முறை அனைத்துலக மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைமையே சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்த நிலையிலும், அந்த மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையில் உள்ள அனைத்துலக நீதியை நடைமுறைப்படுத்தக் கூடிய சட்டவலுவை உண்டாக்கும் சொல்லாட்சிகளை அகற்றி அல்லது மென்மைப்படுத்தி, வாக்கெடுப்புக்கு முன்வைக்கும் தீர்மானங்களை எழுதிக்கொண்டதன் மூலம், அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் மனச்சாட்சியுள்ள அலுவலர்களின் நேர்மையான உழைப்பின் மூலமான ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரலையும் மௌனிக்கச் செய்துள்ளன. இந்நிலையில் இதனால் ஊக்கமும், வேகமும் பெறும் சிறீலங்கா சட்டத்தின் ஆட்சி என்னும் மக்களாட்சியின் வேரையே பிடுங்கி எறியும் தனது செயலை வேகப்படுத்தும் என்பது வெளிப்படையான உண்மை. இதனையே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்களின் சனநாயக அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்களை ஆறு ஏழு காவல் நிலையங்களைச் சேர்ந்த நகரகாவலர்களின் கூட்டான விசாரணைக்கு உட்படுத்தி அச்சப்படுத்தும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையக அமர்வுகள் நடைபெறும் பொழுதே உலக முறைமைகளுக்கோ, சட்டங்களுக்கோ எவ்வித அச்சமுமின்றிச் செய்வதன் மூலம் சிறீலங்கா உறுதிப்படுத்தி நிற்கிறது. இவ்வாறு சிறீலங்காவின் நடைமுறை அரசியல் எதார்த்தம் உள்ள நிலையில் அவர்கள் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நிலைமாற்று நீதியையோ, வலிந்து காணாமால் ஆக்கப்பட்டோருடைய கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கான நீதியையோ, புனர்வாழ்வையோ அளிப்பதற்கான கால அவகாசம் என்பது மக்கள் போராட்டங்களை களைக்கச் செய்து மௌனிக்க வைக்கும் உத்தியாகவே உள்ளது. இவ்விடத்தில் உலக நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் ஈழத்தமிழர்களின் இனஅழிப்பை விளக்கி அவர்களுக்கான நீதியை கிடைக்க வைக்க முயற்சிக்கிறோம் என்னும் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அமைப்புக்களும் கூட தாங்கள் இந்நாடுகளின் ஊதுகுழல்களாக நின்றால் தான் தமக்கும் இந்நாடுகளுக்கும் இடையிலான உறவாடல் இருக்கும் என்ற நினைப்பில் செயற்படுகின்றனர். இணைந்து பணியாற்றி இந்த நிலையை மாற்ற முயற்சிக்கும் சகோதரத்துவ ஈழத்தமிழ் அமைப்புக்களுடனும் பகைமையும், வெறுப்பும் கொண்டு இணைந்து பணிசெய்ய மறுக்கின்றனர். இதுவே 12 ஆண்டுகளாகச் சிறீலங்காவுக்கு எதிராக உலக ஆதரவை நிலைப்படுத்துவதில் உள்ள ஈழத்தமிழினம் சார்ந்த சிக்கலாக உள்ளது. ஈழத்தமிழர் உரிமைகளைப் பெறுவது என்பது அரசியல் அல்ல. விட்டுக் கொடுப்பு இல்லாத உரிமைப்போராட்டம். மௌனிக்க வைத்தல் என்னும் உத்திக்கு எதிரான சனநாயகப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டிய போராட்டம். ஈழத்தமிழர்களின் உரிமைகள் இனஅழிப்புக்களால், இனத்துடைப்புக்களால், பண்பாட்டு இனஅழிப்புக்களால் இன்றும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு அவர்களின் இனத்துவ, மொழித்துவ, தாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தி, அதனை மீட்டெடுக்கும் போரட்டம். நாமும் இந்தப் போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்கிறோம் எனக் கருதும் ஒவ்வொரு வரும் விளைவுகளை விரைவாகப் பெற சகோதரத்துவத்துடன் இணைந்து ஒரே அணியில் செயற்பட வேண்டிய போராட்டம். இதற்கான நடைமுறைகளிலேயே மௌனிக்க வைத்தல் என்ற உத்தியை உடைத்து, ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளநிலைப்படுத்தப்படல் என்பதன் வேகம் தங்கியுள்ளது.   https://www.ilakku.org/?p=43986  
    • இன்று மாலைக்குள் தீர்வு இல்லையேல், இனி உணவுத்தவிர்ப்பு போராட்டம்தான் : சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு!    5 Views இன்று மாலைக்குள்  தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர் இன்று  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண  சுகாதார தொண்டர்கள் வடக்குமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் கடந்த ஏழு நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள  பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் ஏழாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது. எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.   https://www.ilakku.org/?p=43913      
    • கவிதை நன்று . கை கால் வைத்த வதந்திக்கு பரவும் வேகமும் அதிகம். தொலை பேசி தொல்லைபேசியாய் போச்சு 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.