Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி மீண்டும் சொல்கிறேன் அப்போராளி மகசீன் சிறையில் இருந்து இக்கவிதையை எழுதியதுதான் வியப்பாக இருக்கிறது என்று கூறுகின்றேன் புரிந்து கொள்ளுங்கள்

இதில் வியப்பிற்கு ஏதுமில்லை. இந்தோனேசியா , மலேசியா , நேபாளம் , ஆபிரிக்கா போன்ற நாடுகளில் சிறைகளில் வாடுகிற போராளிகள் முள்ளிவாய்க்கால் நினைவையும் மாவீரர் நினைவையும் மறக்காமல் நினைவு கொள்கிறார்கள். சிறையில் இருப்பதால் அவர்கள் உணர்வுகளும் அவர்கள் நேசித்த கனவும் இலட்சியமும் சிதைந்து போகவில்லை. இதையும் புரிந்து கொள்ளுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி கூல் டவுன் :rolleyes:

நீங்கள் எழுதியதற்க்குத்தான் நானும் பதில் வரைந்திருந்தேன்

நன்றி விடைபெறுகின்றேன்

எழுத்துப்பிழை திருத்தம் செய்யப்பட்டது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி கூல் டவுன் :rolleyes:

நீங்கள் எழுதியதற்க்குத்தான் நானும் பதில் வரைந்திருந்தேன்

நன்றி விடைபெறுகின்றேன்

எழுத்துப்பிழை திருத்தம் செய்யப்பட்டது

நீங்கள் எழுதியதற்குத்தான் நானும் பதில் இறுத்தேன் சகாரா. சரி கூலாகுங்கொ ஒரு கோலா உங்களுக்காக....coca_cola_0017.gif

அப்ப இவ்வளவும் இண்டைக்கு போதும். இன்னும் 5மணித்தியாலம் எலாம் மூஞ்சியை நீட்டுது. அப்ப நாங்கள் நன்றி வணக்கம் சொல்லுவம் சகாரா.

***

Link to post
Share on other sites

உள்ளத்தில் நல்ல உள்ளம்......

இன்றைய நிலைமையிலும் மட்டக்களப்பில் நின்று கொண்டு சாந்தன் இந்த பாடலில் வருவதை எதிர் கொள்ளடா கர்(ரு)ணா செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா??என்று பாடுவதுதான் போராளிக்குரிய குணம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிறைக்குள்ளிருந்து...நெருப்புப் பூக்கள்.

Scanneru.jpg

பளையூரான் வாடுகிற மகசீன் சிறையில் இருந்து இக்கவிதைத்தொகுப்பை கல்லடி றொபேட் என்ற இளைஞன் வெளிக்கொண்டு வந்தான். சிறகுகள் முறிக்கப்பட்டவன் தன் சிறகுகளை கவிதைகளாய் எழுதியனுப்பி வெளியீடாக்கியிருந்தான். இப்போது றொபேட் சிறையிலிருந்து விடுதலையாகி சில மாதங்கள் ஆகிறது.

சாகராவுக்கு பளையூரானின் எழுத்தில் வந்த ஆச்சரியமும் சந்தேகமும் எனக்கும் வந்து தொலைக்கிறது.

எப்படி றொபேட் கவிதை எழுதியிருக்கலாம் ? கருத்துரிமையும் எழுத்துரிமையும் உள்ளபடியால்தானே றொபேட் கவிதையெழுதினான் புத்தகமாகியது அவன் கவிதைகள் ?

அது வேறுகாலம் இது வேறு காலமென்றும் சிலவேளை ஆச்சரியம் வரலாம். இருகாலங்களும் ஒரே காலம் அதாவது சிறைக்காலம் என்பதனையும் குரல்கள் மறுக்கப்பட்ட குகையிலிருந்து தனது குரலை தனது உணர்வுகளை வெளிச்சொல்கிற கவிதைக்குரல் என்பதனை யாழ் கவிஞர்கள் குழாம் புரிந்து கொள்ளுமென நம்புவோம்.

_______________________

றொபேட்டின் கவிதை நூலிலிருந்து.....

சின்ன வயதில், தென்னம் பொந்திலிருக்கும் பச்சைக்கிளியை கூட்டிலடைத்து வளர்க்கும்போது அப்பா ஏசுவார். கூட்டிலடைத்து வதைக்கவில்லை வளர்க்கின்றேன் எனச் சொல்வேன். பின் அடைபட்ட பொழுதுதொன்றில், அப்பாவின் ஏச்சும், அடைபட்டகிளியின் சோகமும், சுதந்திரமும் புரிந்தது. ஏக்கமும், வலியும், மிக்கதான சிறைவாழ்வு, சிறிலங்கா போன்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் மேலும் துயர் தருவதாகும். ஏனெனில் அவை வெறுமனே சிறைச்சாலைகளாக மட்டும் அமைந்து விடுவதில்லை.

சிறைக்கைதிகளின் பகுப்பில் கிடைக்கக் கூடிய உரிமைகளெதுவும், தடுப்புக்காவல் சிறைக்கைதிகளுக்குக் கிடைப்பதில்லை. அப்படியான அவலம் நிறைந்த ஒரு தடுப்புக்காவல் சிறைச்சாலைதான் சிறிலங்காவின் "பூசா" சிறை.

இதன் இறுகிய இரும்புக்கம்பிகளின் பின்னால் இருந்து, தேச உணர்வில் எழுந்த ஒரு கவிக்குரலை, அழகாக அச்சிலேற்றித் தந்திருக்கிறது சுவிஸ் "நிலவரம்" பத்திரிகைக் குழுமம்.

"நான் ஒரு இளையவன். வாழ்பனுபவமற்றவன். கவிதைபற்றிய ஆழ்ந்தறிவு அற்றவன். விடுதலைக்கு ஏகி நிற்கின்ற தேசத்தை உணர்வுகளினால் நேசிக்கின்ற உறவுகளுடன் வாழ்ந்து வருகின்ற நான், அந்த உணர்வுகளின் ஓசைகளையே கவி வரியென்ற நினைவுடன் கோர்த்துள்ளேன். உணர்வுகளின் துடிப்புக்களுக்கு வரிவடிவம் கொடுத்த நான் நிறையத் தவறுகள் விட்டிருப்பேன்..."

இப்படிச் சொல்வது, 2000 மாவது ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணகளின்றி தொடர்ந்தும் தடுப்புக்காவல் கைதியாகப் பூசா சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கல்லடி றொபேட். 2005 ல் 'சிறையில் பூத்த உணர்வின் ஒளி' எனும், கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து, இப்போது வெளிவந்திருப்பது, அவரது இரண்டாவது தொகுதி "நெருப்புப் பூக்கள்".

நீண்டகாலமாகச் சிறைப்பட்டிருப்பினும், சிறைவாழ்வின் துயர்பேசிக் கழிவிரக்கம் வேண்டாது, மண்மீதான காதல், விடுதலைமீதான ஏக்கம், இழந்துபோன வாழ்வின் சோகம், போராட்டத்தின் மீதான தீரம், என்னும் உணர்வுகளே றொபேட்டின் குரலாக சிறைக்குள்ளிருந்தம் வெளிப்படுகிறது.

என் பாட்டனின்

படம்

என்வீட்டு

சாமியறைக்குள்

சிலந்திவலை

பின்னப்பட்ட

நிலையில்

பத்திரமாய்

தொங்குகிறதாம்!.... எனத்தொடங்கி

என் வளவினுள்

இப்போதுதானாம்

ஒரு சிறியதூரம்

மிதிவெடிகள்

அகற்றியுள்ளார்கள்

மிகுதியும்

அகற்றி முடியும்போது...

என் பிள்ளைகள்

என் படத்தை

புலும்பெயர்நாடுகளிலுள்ள

தங்கள் வீட்டு

சாமியறைக்குள் மாட்டி

தங்கள்

குழந்தைகளுக்கு

காண்பிப்பார்கள்

இவர்தான்

உங்கள் பாட்டனென... எனும் கவிதைக்குள் வரும்,

தமிழீழத்தின் சோகக் கதைகள் ஏராளம்.

ஈழத்தின் சோகம் மட்டுமில்லாது,

மனிதநேயம் பற்றியும் றொபேட்டின் குரல் எழுகிறது.

மனிதம் எனும் கவிதையில் அதைக் காணலாம்.

14.08.2006 சிறிலங்கா விமானப்படையின் விமானத்தாக்குதலில் அவயங்களையிழந்த பிள்ளைகளுக்கு, இத்தொகுதியின் விற்பனையில் கிடைக்கும் பணம் , உதவித்தொகையாக அமைய வேண்டும் எனும் றொபேட்டின் பெரு விருப்போடு, அவரது உணர்வின் வரிகளை, சிறையிருந்து வெளிக்கொணர்ந்து வெளியீடு செய்யும் வரையில், கி.பி அரவிந்தன், பத்மநாபஐயர் உள்ளிட்ட பலரது உழைப்பு உடனிருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டு, அடைக்கப்பட்டிருக்கும், ஒரு தடுப்புக்காவல் கைதியின் இத்தகைய செயற்பாடு, அவனுக்கு எத்தகைய பாதமான நிலையைத் தருமென்பதைத் தெரிந்திருந்தும், தன் குரலை உயர்த்தி ஒலித்திருக்கும் றொபேட்டின் 'போய்விடுங்கள்' கவிதைக்குள், அமெரிக்கச் சிப்பாய்களை எதிர்ப் பாடிய பொப்மார்லி யும் ஓரத்தில் ஒளிந்திருப்பதைக் காணமுடிகிறது.

பிரபலங்களின் எழுத்துக்களினால் பணம் பண்ணவும், பணத்தினால் பிரபலம் பண்ணவும் விழையும் சூழலில், சிங்களப்பேரினவாதத்தின் சித்திரைவதைச் சிறையுள்ளிருந்து, ஈழக்குயிலொன்றின் விடுதலைக்குரலை வெளிக்கொணர்ந்த அனைவரையும் பாராட்டலாம்.

Link to post
Share on other sites

சிங்களவன் எழுத விட்டாலும் நாம் எழுத விடமாட்டோம், நாம் அதைப் பற்றிக் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பம் :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் எழுத விட்டாலும் நாம் எழுத விடமாட்டோம், நாம் அதைப் பற்றிக் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பம் :lol:

உங்களைப்போல புத்திதானே நமக்கும் வித்தியாசமாகவா இருக்கப்போகிறது? :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"நான் ஒரு இளையவன். வாழ்பனுபவமற்றவன். கவிதைபற்றிய ஆழ்ந்தறிவு அற்றவன். விடுதலைக்கு ஏகி நிற்கின்ற தேசத்தை உணர்வுகளினால் நேசிக்கின்ற உறவுகளுடன் வாழ்ந்து வருகின்ற நான், அந்த உணர்வுகளின் ஓசைகளையே கவி வரியென்ற நினைவுடன் கோர்த்துள்ளேன். உணர்வுகளின் துடிப்புக்களுக்கு வரிவடிவம் கொடுத்த நான் நிறையத் தவறுகள் விட்டிருப்பேன்..."

இப்படிச் சொல்வது, 2000 மாவது ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணகளின்றி தொடர்ந்தும் தடுப்புக்காவல் கைதியாகப் பூசா சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கல்லடி றொபேட். 2005 ல் 'சிறையில் பூத்த உணர்வின் ஒளி' எனும், கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து, இப்போது வெளிவந்திருப்பது, அவரது இரண்டாவது தொகுதி "நெருப்புப் பூக்கள்".

நீண்டகாலமாகச் சிறைப்பட்டிருப்பினும், சிறைவாழ்வின் துயர்பேசிக் கழிவிரக்கம் வேண்டாது, மண்மீதான காதல், விடுதலைமீதான ஏக்கம், இழந்துபோன வாழ்வின் சோகம், போராட்டத்தின் மீதான தீரம், என்னும் உணர்வுகளே றொபேட்டின் குரலாக சிறைக்குள்ளிருந்தம் வெளிப்படுகிறது.

svqtauIsfh.gif

siren.gif

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பளையூரானின் வழக்கிற்கு 50ஆயிரம் ரூபா தேவைப்படுகிறதென்பதனை இங்கு தெரிவித்திருந்தேன். பளையூரானுக்கு 25ஆயிரம் ரூபாவினை கள உறவு கோமகன் வழங்கியுள்ளார். இன்னும் 25ஆயிரம் ரூபா யாராவது கருணையாளர்கள் வழங்கினால் பளையூரான் சிலமாதங்களில் விடுதலையாகலாம். 3பிள்ளைகள் மனைவி இந்த போராளியின் விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். இவர் ஒரு மூத்த போராளி. 1984ம் ஆண்டு போராளியாகி அனுபவித்தது முழுவதும் துயரங்கள்தான். ஆயினும் தனது குடும்பத்திற்கு தன்னை யாரென அடையாளம் காட்டாமல் இறுதி 8வருடங்கள் இயங்கி தெற்கில் பணியாற்றி அதனாலேயே இன்று 5வருடங்கள் சிறையில் இருக்கிறார். குடும்பம் மிகுந்த வறுமை. மனைவிடமிருந்து விழுகிற திட்டுகளை வாங்கிக் கொண்டு இன்னும் தாயகம் என்ற கனவை சுமந்து கொண்டிருக்கிற ஒரு இதயம்.

கோமகனுக்கு மிக்க நன்றிகள்.

blume-0184.gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோமகனுக்கு மிக்க நன்றிகள்.

இறைவன் உங்களுடன் இருப்பாராக...

Link to post
Share on other sites

செயலால் இணைவோம் சொல்லால் அல்ல .

Link to post
Share on other sites

இங்கு நான் நேசக்கரத்தை குற்றம்சாட்டி எந்த கருத்தும் எழுதவில்லை.

நிச்சயம் அதன் முயற்சி பாராட்டத்தக்கது. சாந்தி அக்காவுக்கு பாராட்டுகள். :)

அத்துடன் சாந்தி அக்காவிடம் ஒரு வேண்டுகோள்.

யாருக்கும் நேசக்கரத்தின் மீது சந்தேகம் இருப்பின் அவர்கள் கேள்விக்கு சோர்வடையாமல் பதில் கூறுங்கள். நிச்சயம் உங்கள் பதில்கள் மூலம் பலர் உண்மை நிலை பற்றி அறிந்து கொள்வார்கள்.

பண உதவி செய்த கோமகன் அண்ணாவுக்கும் நன்றிகள். :)

முடிந்தவர்கள் அனைவரும் பண உதவி செய்யுங்கள். உங்களால் முடிந்த தொகையை வழங்கி ஒரு சிலர் வாழ்க்கையை தன்னும் காப்பாற்றுங்கள். :)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.