Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...


Recommended Posts

 • 624.jpg லெப்.கேணல் ராதா கனகசபாபதி ஹரிச்சந்திரா வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். details.png பொறுப்பு: யாழ் மாவட்ட தளபதி நிலை: லெப்.கேணல் இயக்கப் பெயர்: ராதா இயற்பெயர்: கனகசபாபதி ஹரிச்சந்திரா பால்: ஆண் ஊர்: வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். மாவட்டம்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 22.12.1956 வீரச்சாவு: 20.05.1987 நிகழ்வு: யாழ். மாவட்டம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

120329004357-1987raatha.jpg

யாழ் இந்துவின் மைந்தனும் தலைசிறந்த தளபதிகளில் ஒருவருமான லெப்.கேணல் ராதாவின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Edited by பகலவன்
Link to comment
Share on other sites

இந்த நினைவுநாளில் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ராதா அண்ணா நேர்த்தியான நடை நல்ல பண்பு இனிமையாக பேசுபவர் ஐந்தாவது பயிற்சி பாசறையின் பொறுப்பாளர் இவரைப்பற்றி பாசறையில் பயிற்சிபெற்ற அனைவருக்கும் நன்கு தெரியும் இவர் நடத்திய பாசறையில் இவர்க்கு சில சவால்களும் இருந்தது அவர்ரைஎல்லாம் சமாளித்து சிறந்த போராளிகள் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர் எனக்கும் இவரை மிகவும் பிடிக்கும் இன்று அவர் எம்முடன் இல்லை ஆனால் அவரின் நினைவுகள் என்னும் எம்முடனே வாழ்கின்றன ......

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக ராதா அண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

லெப்.கேணல் ராதாவுக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

நான் முதன் முதலில் பார்த்த மாவீரர் இறுதிக் கிரியை ராதா அண்ணையின்ட தான். அப்ப நிதர்சனம் முதலாவது காலடியைக் எடுக்க தொடங்கிய காலப் பகுதியில் ராதா அண்ணையின் வீர மரணத்தை ஒளிபரப்பு செய்தினம் (அவர்களா அல்லது றீகல் எனும் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையா என்று சரியாக நினைவில் இல்லை). யாழ்ப்பாண கொமாண்டர் அண்ணை என்று பல முறை பார்த்தோம். அப்ப அண்ணைமார் சாரமும் சேட்டும் அணிந்து இருக்கும் போது மனசுக்கு மிக நெருக்கமாக இருந்தார்கள்.

பின்னை நாளில் ராதா அண்ணையின் பேரால் ஒரு பிரிவும் புலிகள் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 'விமான எதிர்ப்பு பிரிவு' என்று பெயரிடப்பட்டதும் நினைவு (பிழையாக நான் சொன்னால் திருத்தவும்)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

ராதா அண்ணைக்கு நினைவு நாள் வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

பின்னை நாளில் ராதா அண்ணையின் பேரால் ஒரு பிரிவும் புலிகள் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 'விமான எதிர்ப்பு பிரிவு' என்று பெயரிடப்பட்டதும் நினைவு (பிழையாக நான் சொன்னால் திருத்தவும்)

நிழலி,

நீங்கள் குறிப்பிட்டது சரி.ஆனால் அந்த பிரிவின் பெயர் ராதா வான்காப்பு பிரிவு என இருந்தது. இரட்ணம் மாஸ்டர் அதற்கு சிறப்பு தளபதியாக இருந்தார். அந்த பிரிவு, தலைவரின் ஒரு சுற்று பாதுகாப்புக்கு பொறுப்பாகவும் இருந்தது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் முனையில் உயிர் விதைத்து எங்கள் ஊர்காத்த தளபதியே உன்னையிழந்த அந்தநாள்....எங்கள் ஊரின் செம்பாட்டு மண்மீது உனது உடல் சரிந்த நாள்....இன்றும் நினைவுகளில் நிறைகிறது....

தளபதி ராதா அவர்கள் குப்பிளான் கற்கரைப்பிள்ளையார் கோவில் மேற்கு வீதியில் எதிரியின் சூடுபட்டு வீரச்சாவடைந்தார். ராதா அவர்களின் குருதி தோய்ந்த மண்ணை அருகில் நின்ற ஒரு போராளி அவர் இறந்த இடத்திற்கு அண்மையில் இருந்த புளியமரத்தின் அடியில் போட்டு மூடியதாக சொல்வார். ஒருகாலம் ஊர் நிலமைகள் சரியாகிற போது ராதா வீரச்சாவடைந்த பிள்ளையார் கோவில் மேற்கு வீதிக்கு ராதா வீதியெனப் பெயர் வைக்க வேண்டுமென்றும் சொல்வார். ராதா உயிர்விட்ட வீதி ராதாவீதியாக வழிகிடைக்குமா என்பதே கேள்வியாக அந்த வீரனின் நினைவுகள் சுமக்கும் அந்த வீதி காத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி

இவரது வீரமரணம் எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் நிதர்சனம் வந்தது-ஒளிபரப்ப தொடங்கிறது அதற்கு பிறகு என்று நினைக்கிறன்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து சாரணர் இயக்கத்தில் இருந்து ஜனாதிபதி (வில்லியம் கோபல்லாவ) விருது பெற்றவர்.

இவர் அணியும் உடைகள், அழகாகவும்... நேர்த்தியாகவும் இருக்கும்.

பல முறை, இவருடன் சாரணர் பாசறையில் கலந்து கொண்டுள்ளேன்.

பழகுவதற்கு, இனிமையான நண்பன்.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மாவீரருக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.