சனியன்

கல்லூரிக் கீதங்கள்

Recommended Posts

நீங்கள் படித்த பாடசாலையின் கீதங்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி.

எனது கல்லூரிக் கீதம்

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

பாரிலொளி வீச வேண்டும் தங்கக் கதிரிலே

மங்கிடாதன்னொளி பொங்க என்றும் வாழவே

செங்கழல் பொன்மலர் கொண்டு போற்றினோமே.

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்!

எங்கள் கலைக்கோயில் கார்மேல் பாத்திமா

உந்தன் ஒளிபரப்பி ஈழமணிநாடு மிளிரவே

எந்த நாளும் இன்புடனே இயங்குவாய்...

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்!

தூய்மை நேர்மை என்பன உன் கொள்கையே

தாயாம் ஈழம் நிறைவுறத் தன்னிகரில் சேவையே

நேயமாக ஆற்றி நீடு வாழ்கவே...

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்!

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

collegeanthem.gif

மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை.

Share this post


Link to post
Share on other sites

கல்லூரிக் கீதம்

இராகம் - தர்பார்

தாளம் - ரூபகம்

பல்லவி

வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே - வாழ்கவே

வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே - வாழ்கவே

அனுபல்லவி

வாழ்க நம்திரு வாழ்க நம் கலை

நாளும் நன்மையும் உண்மையும் ஓங்கவே

(வாழ்கவே)

சரணம்

அறமும் அன்பும் அருளும் தழைக்க

ஆன்மநேய உணர்வு செழிக்க

உறவு கனிந்தே உயர்வு நிலைக்க

உலகில் புகழும் அறிவும் தரிக்க

(வாழ்கவே)

எஸ். எஸ். இரத்தினம்

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

யாழ் இந்துக் கல்லூரி.

jhc_prayer_hall.jpg

வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி

வையகம் புகழ்ந்திட என்றும்

இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும்

இந்து மதத்தவர் உள்ளம்

இலங்கிடும் ஒரு பெரும் கலையகம் இதுவே

இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்

கலைபயில் கழகமும் இதுவே - பல

கலைமலி கழகமும் இதுவே - தமிழர்

தலைநிமிர் கழகமும் இதுவே!

எவ்விட மேகினும் எத்துயர் நேரினும்

எம்மன்னை நின்னலம் மறவோம்

என்றுமே என்றுமே என்றும்

இன்புற வாழிய நன்றே

இறைவன தருள்கொடு நன்றே!

ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்

அவைபயில் கழகமும் இதுவே!

ஓங்கு நல்லறிஞர்கள் உவப்பொடு காத்திடும்

ஒருபெருங் கழகமும் இதுவே!

ஒளிர்மிகு கழகமும் இதுவே!

உயர்வுறு கழகமும் இதுவே!

உயிரன கழகமும் இதுவே!

தமிழரெம் வாழ்வினில் தாயென மிளிரும்

தனிப் பெருங் கலையகம் வாழ்க!

வாழ்க! வாழ்க! வாழ்க

தன்னியர் இன்றியே நீடு

தரணியில் வாழிய நீடு

normal_JaffnaHinduCollege_2009_16.jpg

Edited by தமிழ் சிறி
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நான் 3 பாடசாலைகளில் படித்திருக்கிறேன்.

அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது கொக்குவில் இந்துவின் பாடசாலைக் கீதம் தான். கிடைத்தால் இணைக்கிறேன். அல்லது கல்லூரித் தோழர்கள் யாராவது இணையுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்

அவைபயில் கழகமும் இதுவே!

ஆரியத்தையும், சிங்களத்தையும், மென்மை எழுத்துக்களால் , காட்டிய விதம் அழகு!

ஆயினும், இங்கு ஆரியம் எனக்குறிப்பிடுவது 'சமஸ்கிருத' மொழியே!

தமிழும், சமஸ்கிருதமும், தங்களுக்குள் பல வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன!

இலங்கையின்,இன்னொரு சிங்களத் தேசியப் பாடசாலை. தமிழையும் தங்கள் கீதத்தில் இணைக்கும் வரை. சிங்களம், கல்லூரிக் கீதத்தில் இருப்பதில் எனக்கு 'உடன்பாடு' இல்லை!

நான் 3 பாடசாலைகளில் படித்திருக்கிறேன்.

அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது கொக்குவில் இந்துவின் பாடசாலைக் கீதம் தான். கிடைத்தால் இணைக்கிறேன். அல்லது கல்லூரித் தோழர்கள் யாராவது இணையுங்கள்.

உடையார் வந்து இணைப்பார்!

Share this post


Link to post
Share on other sites

ஆரியத்தையும், சிங்களத்தையும், மென்மை எழுத்துக்களால் , காட்டிய விதம் அழகு!

நான் ஒருத்தன் சிவப்பு கலர் அடிச்சிருக்கிறன்.... அது உங்கட கண்ணுக்குத் தெரியேல்ல...

ம்ம்ம்...

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி தமிழ்சிறி. நானும் இணைக்க நினைத்தேன்.

Share this post


Link to post
Share on other sites

நான் ஒருத்தன் சிவப்பு கலர் அடிச்சிருக்கிறன்.... அது உங்கட கண்ணுக்குத் தெரியேல்ல...

ம்ம்ம்...

அதுவும் அழகு!

அடுத்ததாகக் கருத்தெழுதலாமென்று இருந்தேன்! :D

Share this post


Link to post
Share on other sites

நான் ஒருத்தன் சிவப்பு கலர் அடிச்சிருக்கிறன்.... அது உங்கட கண்ணுக்குத் தெரியேல்ல...

ம்ம்ம்...

அழகு தான்.

பாத்திமாக் கல்லூரி எந்த இடத்தில் இருக்கிறது? அறியாமைக்கு வருந்துகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

பாலர் பாடசாலை

சாதாரணதரம்

உயர்தரம்

என மூன்று பாடசாலைகள்

இதில் கிடைப்பதை இணைக்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites

அழகு தான்.

பாத்திமாக் கல்லூரி எந்த இடத்தில் இருக்கிறது? அறியாமைக்கு வருந்துகிறேன்.

http://en.wikipedia.org/wiki/Carmel_Fatima_College

http://www.carmelfatimacollege.org

Share this post


Link to post
Share on other sites

நன்றி சனியன்.

இணையத் தளமும் நன்றாக வடிவமைத்துள்ளார்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆரியத்தையும், சிங்களத்தையும், மென்மை எழுத்துக்களால் , காட்டிய விதம் அழகு!

ஆயினும், இங்கு ஆரியம் எனக்குறிப்பிடுவது 'சமஸ்கிருத' மொழியே!

தமிழும், சமஸ்கிருதமும், தங்களுக்குள் பல வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன!

இலங்கையின்,இன்னொரு சிங்களத் தேசியப் பாடசாலை. தமிழையும் தங்கள் கீதத்தில் இணைக்கும் வரை. சிங்களம், கல்லூரிக் கீதத்தில் இருப்பதில் எனக்கு 'உடன்பாடு' இல்லை!

சிங்களவனும், தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொள்வதால்...

எனக்கு ஆரியம் என்ற சொல்லைக் கேட்டாலே... அலர்ஜி.

நாங்கள் படிக்கும் காலத்தில்... ஆரியம், சிங்களம் என்னும் சொற்கள் இருக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு தான்... வலிந்து திணிக்கப் பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

தேசமே தேனார் அமுதே, சிவபுரனே!

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே!

.......

மூலம்: சிவபுராணம்

சிங்களவன் தன்னை ஆரியன் என்கிறான்!

எங்கேயோ உதைக்கின்றது! :o

புத்தன் கூட ஆரியன் அல்ல! அவர் ஒரு சத்திரியர்!

Share this post


Link to post
Share on other sites

புத்தன் கூட ஆரியன் அல்ல! அவர் ஒரு சத்திரியர்!

ஐயோ.... நான் தமிழன் .தேமிளு.....

Share this post


Link to post
Share on other sites

மானிப்பாய் இந்துக்கல்லூரி

_____________________________________________

வாழ்க நம் நாடு வாழ்க நம் பள்ளி

வாழிய வாழிய வே

அருந்தமிழ் மொழியும் ஆங்கில கலையும்

ஆரிய மொழியுடன் வளரும்

விருந்தென போற்றும் விஞ்ஞானமும் இங்கே

வியனுற வளர்ந்தினி தோங்கும்

மானிப்பாய் இந்துக்ககல்லூரி வாழ

மாணவர் ஆவன செய்வோம்

கனவிலும் மறந்திடக் கருதோம்

வான மளந்த தமிழ் மொழி போல‌

வாழிய வழமுடனென்றும்

கலையே பெறவே

உழைப்போம் நிலையிது பெற உழைப்போம்

Edited by putthan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி

Alma Mater

Let's sing this tuneful Anthem heartily

Sing it loud with heart sincere

True to Christ, our School and Country

Onwards we shall march secure

Give the utmost for the highest

Let that always be our aim

Strive to gain from life the fullest

For that real fame

Rally round our Alma Mater

Loyal, honest, faithful & kind

Men of truth and men of honour

Strong in body, spirit and in mind

Give the utmost for the highest

Let that always be our aim

Strive to gain from life the fullest

For that real fame

தமிழில் பாடியதில்லை.

Share this post


Link to post
Share on other sites

புனித மரியாள் பெண்கள் பாடசாலைக்கீதம்

மேரீஸ் பெண் சாலையை பாடுவோம் வாரீர்

தாய் மரி சேவையை போற்றுவோம் வாரீர்

மேரீஸ் பெண் சாலையை பாடுவோம் வாரீர்

அருள் மிகு தாய் மரி பெயர் புனை கூடம்

அதிபர் ஆசாராயர் அன்பு செய் மாடம்

அயராத இவர் சேவை எமக்கன்பு பாடம் (2)

அணைவரும் சமமாக வாழ்கின்ற கோட்டம்

காவலூர் கன்னியர் களங்கரை ஒளியே

கல்வியை கனிவாக காட்டருள் வழியே

கடமை செய் கனிகளை பொழியும் நல்மரமே (2)

கண்ணியம் நெஞ்சத்தில் நிறைந்திடும் அன்னையே

மேரீஸ் பெண் சாலையை பாடுவோம் வாரீர்

தாய் மரி சேவையை போற்றுவோம் வாரீர்

மேரீஸ் பெண் சாலையை பாடுவோம் வாரீர்

Share this post


Link to post
Share on other sites

[size=5]Good Shepherd Convent - Kotahena[/size]

[size=5]Round us the chimes of St Lucy resounding

Calling her children to join her in prayer

Fill all our hearts with pure joy abounding

And banish far from us both sorrow and care.

Whilst of our school we sing, making the echoes ring

Vaunting her glory, her status, her love

Erin and Lanka dear, joining their voices clear

Beg of their Mother kind gifts from above.[/size]

[size=5]Then God save our school where our youth grows in learning

Our youth grows in virtue, in beauty and worth

Then God bless our school where our mothers discerning

Are one with their children in sorrow and mirth.

God save us young and old, fill us with joy untold

And make His dear Mother our Mother today

Make us to Mary true, wearing her white and blue

Strong and immaculate all through life's way.[/size]

Edited by தமிழினி

Share this post


Link to post
Share on other sites

.

இது புலம்பெயர் நாடொன்றின் தமிழ்ப்பாடசாலையின் கீதம். நான் எழுதி மெட்டமைத்த வரிகள்.ஒரேஒரு சொல் மட்டும் தணிக்கை.

நாங்கள் நாளும் கல்வி கற்போம்

எங்கள் பள்ளிக்கூடத்தில்

தமிழை நாங்கள் தரமாய்க்கற்போம்

எங்கள் பள்ளிக்கூடத்தில்

தமிழே எங்கள் தாய்மொழி

தரணி போற்றும் தேன்மொழி

சிறுவர்கள் நாங்கள் சிறப்பாய் வாழ

சீருடன் கல்விகற்கும் தமிழ்ப்பள்ளிக்கூடம்

( நாங்கள் நாளும் )

பேரெழில் கொண்டது தமிழ்மொழி

பெருமைகள் மிக்கது தாய்மொழி

செம்மொழி என்று சிறப்புடன்கூறும்

செந்தமிழ் எங்கள் தமிழ்மொழி

( நாங்கள் நாளும் )

புலம்பெயர் தமிழர் மொழிகாக்க

போற்றிடும் கலைகள் தனைக்கற்க

..................நகரில் மேன்மையுடனே

மிளிர்வது எங்கள் தமிழ்ப்பள்ளிக்கூடம்

( நாங்கள் நாளும் )

Share this post


Link to post
Share on other sites

யாழ் பரியோவான் கல்லூரி (St.John's College)

The College Song

Decked with shady palms and trees,

Fringed with rich mahoganies,

There beneath a glowing sky,

St John’s up rears her crest on high

Chorus:

Praise St. John your Patron Saint,

And lest in deed or word you taint,

Your Alma Mater’s ancient name,

Johnians ! Always play the game.

Christian lore she gives her boys,

Ever prizing heavenly joys,

Her highest pride a noble mind,

Her Greatest joy a heart that’s kind.

(Chorus)

“In the darkness shines the light”,

Johnians! With your torches bright,

Chase the gloom of night away,

Shed thro’ the word eternal day.

(Chorus)

Edited by பகலவன்

Share this post


Link to post
Share on other sites

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை

வல்வை மகளிர் மகா வித்தியாலயம்

SAM_4503.jpg

logo.png

 

watermarked-IMG_3173-120.jpg

 

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

பொழிந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே

 

 

விஞ்ஞான கலைகள் பலவிதரன இல்லூரி

எந்நாளும் முன்னோக்கி இதமுடனே தரும்

தன்மானம் தாங்கிய தாழ்வையும் சீறி

தரத்தை நிலை நிறுத்தி உரத்தைக்கொடுக்கும் - எங்கள்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

 

இங்கிதம் பண்புடன் பேசவைத்து

எதிரியையும் இணைக்கும் வழிவகுத்து

சங்கீத நாட்டிய கலை வளர்த்து

சமயத்தை முதற்கொண்டு சரீரத்தையும் வளர்க்கும்  - எங்கள்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

 

மனையறம் யாவினும் தெளிய வைத்து

மாந்தரின் வாழ்வினை மகிழவைத்து

அனுதினம் பொருட்பேணி அறம் வளர்த்து

ஆக்கத்தைப் பெருக்குகின்ற ஊக்கத்தைக் கொடுக்கும் - எங்கள்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

 

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

பொழிந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே

 

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now