Jump to content

கனடாவில் புலிகளிற்குத் தடையாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டண்ணா காலம் ஒரு பொற்காலம் தான். அந்தக்காலத்தை மீண்டும் தலைவரால் கொண்டுவர முடியும்.

கிட்டண்ணாவின் கீழ் முன்னர் பொறுப்பாக இருந்த சுரேஸ் அண்ணா அவர்கள் மிகத்திறம்பட நிர்வாகத்தை நடத்தியதாக கனடாவில் உள்ளவர்கள் கூறுகின்றாார்கள். அந்தக்காலம் ஒரு பொற்காலம் என்றும் கூடக் கூறி வருகின்றனர்.

கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு எம்மவர்கள் பின்னர் ஆதரவளித்ததாக இங்கே இன்னொரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. ஆம், இது உண்மைதான். கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவளிக்கின்றோம் என்று லிபரல் கட்சியை இவர்கள் பின்னர் கைவிட்டது மிகப்பெரிய தவறு.

முன்னர் விடுதலைப் புலிகளை தடைசெய்யக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் வாதாடி வந்த லிபரல் கட்சி எம்மவர்களின் இரட்டை நிலைத்தன்மை காரணமாக இன்று கொன்சர்வேட்டிவ் கட்சி கொண்டு வருகின்ற தடையைக்கூட எதுவும் விமர்சிக்காது கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கின்றது.

அதாவது இன்று எமக்கு குரல் கொடுக்க வேண்டிய நிலையிலிருந்த லிபரல் கட்சியை எம்மவர்களின் இரட்டை நிலைப் போக்கினால் அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். இது எமக்கு பெரும் இழப்பே.

சிறிலங்கா, இந்தியா போன்று நாளை ஒரு கட்சி, இன்று ஒரு கட்சி என்ற தாவல் நிலையை எம்மவர்கள் தவிர்த்து ஏதாவது ஒரு கட்சியுடன் பலமாக நிற்க வேண்டும். அல்லது இரண்டு கட்சிகளிலும் சமமாக தொடர்புகளைப் பேணல் வேண்டும்.

எதுவாக இருந்தாலும் விட்ட தவறுகளை சரிசெய்து எமது பரபரப்புரையை மீண்டும் புதுத் தெம்புடன் செய்ய வேண்டும் வேண்டும். அப்போதுதான் சிறிலங்காவின் பரப்புரைக்கு ஈடாக வெற்றிபெற முடியும்.

இங்கே ஒரு விடயத்தை நாம் நோக்க வேண்டும். சிங்களவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் குறைந்தளவில் வாழ்ந்தாலும் அவர்கள் தம்மில் படித்தவர்களை தேர்ந்தெடுத்து தமது பரப்புரைக்குப் பயன்படுத்துகின்றார்கள். இதுதான் அவர்களின் வெற்றியின் பலம்.

இந்த கருத்து உண்மைதான்

கனடாவில் உள்ள எம்மவர் சிலருடன் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்குகிடைத்தது அவர்களும் இப்படியான கருத்தையே கூறினார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply

நிர்மலன் உங்கள் கருத்துக்கள் சரியானதுதான்,ஆனால் விடுதலைக்காக வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போதிய அறிவு இல்லை என்பது பொய்த்தனம்,இவ்வளவுகாலமும் அந்த விடுதலையை இழுத்து வந்தவர்கள் நீங்கள் சொல்கின்ற அந்த போதிய தகமை இல்லாதவர்கள் தான். நீங்கள் உங்களையே கேட்டுப்பாருங்கள் நீங்கள் இதுவரை ஏதாவது களம் இறங்கி விடுதலைக்காக செய்தீகளா என்று.நிச்சயமாக செய்திருக்கமாட்டீர்கள்...பிற

Link to comment
Share on other sites

நாங்கள் ஓர் அன்றாடம் காட்சிகள், ஒன்றுக்கும் வழியில்லாத தெரூநாய்கள்..தெருவில் போறவனே எங்களை பார்த்துவிட்டு நீ தமிழா என்றால் காறித்துப்பும் அளவிற்கு யாரும் கேட்க பலமில்லாத ஓர் அகதி இனம்.....

பிறகு எப்படி பெரிய பலம்படைத்த சிங்கள வல்லரசை தனக்கென்று நாட்டை வைத்துக்கொள்ளும் அரசுடன் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்து மோதுவது.... அவர்கள் எங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்தும் பணத்தின் தொகை நாங்கள் கனவில் கூட நினைக்கமுடியாது.

வீடுதேடி வந்து உதவி கேட்டால்,இருந்து கொண்டு கதவு திறக்காமல் .யன்னலால் எட்டிபார்த்துவிட்டு மவுனமாக இருக்கும் அகதிதமிழன் இருக்கும் வரை இந்த இழிநிலை தொடரும்

இதுதான் உண்மைநிலை. அதை விடுத்து படித்தவன் இல்லை என்று முடிச்சுபோடுவது ... ஈகோத்தனம்

Link to comment
Share on other sites

படித்த பலர் அமைப்;பிலே கட்டாயம் உள்வாங்கபட வேண்டும் அவர்களை அப்பிடி தான் அழைக்க வேண்டும் என்றால் அழைப்பதிலே தப்பில்லை மிவும் சோகமான கட்டதில் இருக்கிறது எமது வெளிநாடுகளுடனான உறவு..............

Link to comment
Share on other sites

இப்படியான நிகழ்சிகள் நடைபெறும் போது அவசரப்பட்டி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை.இப்படி ஏன் நடக்கிறது?அதற்கான காரணங்கள் என்ன? நாம் இவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்று யோசித்தோமா?

முதலில் ஏன் இப்படி நடந்தது,இதற்கான விடை யாருக்காவது தெரியுமா?பல்வேறு வளங்களைக்கொண்ட கனேடிய அரசிற்கு ஈழத்திலென்ன நடக்கிறது என்று தெரியாமலா இப்படிச் செய்தார்கள்?அவர்கள் இப்படிச் செய்வது ஏன்?ஒரு சில ஆயிரம் கனேடிய சிங்களவருக்காக இப்படிச் செய்தனரா?

எனது அபிப்பிராயம் இதை செய்யப் பரிந்துரைத்தது கனடேய புலானிய்வுத் துறை.கனேடிய புலனாய்வுத் துறை யாரால் வழி நடத்தப்படுகிறது.அதற்கும் அமெரிக்க புல நாய்வுத் துறையினருக்கும் ஊடான தொடர்பு என்ன?இது விடுதலைப் புலிகளை ஒரு அழுத்ததிற்கு உட்படுதுவதற்காக அமெரிக்க வழி நடதலால் ஏற்படுத்தப்படதா?அல்லது இங்கே பலரும் கூறுவதைப் போல், ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இப்படி நடந்ததா?

அடுத்தது இதனை நாம் எவ்வாறு எதிர் கொள்ளலாம்.அமெரிக்க வெளிஉறவுக் கொள்கையால் வழி நடதப்படும் கனேடிய கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின்,உள்ளூர் அரசியல் வாதிகளின் செல்வாக்கில் இந்த முடிபானது தாக்கம் செலுத்தும் வகையில் நாம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.உள்ளூர் பராளுமன்ற உறுபினர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.சமாதானப் பேச்சுவார்த்தயில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புலிகள் மேல் ஏன் இவ்வாறு கனேடிய அரசு தடயை கொண்டு வருகிறது?சிங்கள அரசும் இராணுவமும் மக்களைக் கொலை செய்யும் இந்தத் தருணத்தில் ஏன் இவ்வாறு கனேடிய அரசு நடந்து கொள்கிறது.இது பிழையான அணுகுமுறை.இதனால் புலிகள் போரை நோக்கியே செல்வார்கள்.போன்ற கருதுக்களை அங்கிருக்கும் ஊடகங்கள் பரப்ப வேண்டும்.அத்தோடு கனேடிய கொள்கை வகுப்பாளர்கள் அரச பேச்சாளர்கள் போன்றவர்களிடம் கனேடிய தமிழ் ஊடகங்கள் கேள்வி கேட்டு பேட்டி எடுக்க வேண்டும்.மற்றும் கண்டன ஊர்வலங்கள்,கூட்டங்கள் என்பவை நடாத்தப் பட வேண்டும்.மற்றய கனடிய ஊடகங்கள்,மக்களிடமும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும்.

அமைப்பு ரீதியாகவே இதனைச் செய்ய முடியும்,குறிப்பாக மனித உரிமை அமைப்புக்கள் ,சுயாதீன மக்கள் அமைப்புக்கள் இதனைச் செய்ய வேண்டும்.உதாரணமாக பிரான்சில் இயங்கும் தமிழ் மக்கள் மனித உரிமை அமைப்பு செய்யும் விடயங்கள் போல் இவை அமைய வேண்டும்.இந்த அமைப்புக்களை ஏன் இந்தப் படித்தவர்கள் உருவாக்க முடியாது?ஏன் யாரோ வந்து வரவேற்க வேண்டும்.உங்களுக்கு செயற்பட வேண்டும் என்ற உணர்விருந்தால் நீங்களே நண்பர்களைச் சேர்த்து, நிதி திரட்டி இதனை மேற்கொள்ளலாமே.

இப்போது தேவை அமைப்பு ரீதியாக ஒன்று படலும்,திட்டமிட்டு செயற்படுதலுமே. விமர்சனங்கள் தேவை தான் ஆனால் நாம் எவ்வாறு செயற்படுகிறோம், என்ன செய்கிறோம் என்ற சுய விமர்சனம் முதலில் அவசியம்.எமக்கு உணர்விருந்தால் நாம் முயற்சி செய்வோம் அல்லவா? ஏன் மற்றவர் அழைக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருக்க வேணும்?

Link to comment
Share on other sites

கடந்த மாவீரர் நாள் பாலா அண்ணாவின் உரையின்படி பார்த்தால் தடையைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை... எங்களுடனான உறவை நீங்களே கெடுத்துக்கொள்வது என்பது எங்களின் நோக்கத்தை பாதிக்காது எனும் வகையில் பாலா அண்ணா சொல்லி இருந்தார்...

அண்மையில் சொல்கைம் கூட சொல்லி இருந்தார் அமெரிக்க அரசு தீவிர இலங்கை ஆதரவு நிலையில் இருக்கிறது எண்று.... ஆகவே அமெரிக்க ஆதரவு அரசுகள் புலிகள் எதிர்நிலை எடுப்பதில் ஆச்சரியம் ஒண்றும் இல்லை...

கடந்தமுறை பிரித்தானியா ஐரோப்பிய தலைமை ஏற்றபோதும் தடை வந்தது... ஆனால் ஒஸ்ரிய தலைமை வந்தபோது புலிகள் ஐரோப்பிய நாடாகிவிட்ட சுவிசிலாந்துக்கு போய் வந்தனர்...

Link to comment
Share on other sites

Tamil terrorist label will hurt talks, groups sayhttp://www.theglobeandmail.com/servlet/sto...y/National/home

இதை கனடிய மீட்புநிறுவனம் ( உதவிநிறுவனம்) புரிந்து கொண்டது மகிழ்ச்சிதான்... சிலவேளை இன்நிறுவனம் இலங்கையில் அரசால் தடை செய்யப்படலாம் எனும் பாதிப்புக்குள்ளாக கூடியதாக உள்ளது...

இல்லை இன்னிறுவனத்துக்கும் முன் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று அடக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது...

Link to comment
Share on other sites

கிட்டாண்ணா நல்ல திறமையுள்ள தலைவர். அவரிடம் பல்துறை மக்களையும் ஒருங்கிணைத்து செயற்திட்டங்களை ஏற்பாடு செய்ய கூடிய வசீகரம் இருந்தது. அவற்றிற்கு மேலாக தலைவரின் நம்பிக்கைக்குரியவர். இவை கிட்டண்ணா காலத்தில் புலிகளின் வெளிநாட்டு பரப்புரை மற்றும் உறவு உருவாக்கல் நடவடிக்கைகளை சீர் செய்ய உதவியது. இன்று வெளிநாடுகளில் உள்ள எந்தப் பொறுப்பாளரும் கிட்டண்ணா போன்று தாயகத்தில் இருந்த காலத்தில் மக்களின் மதிப்பை பெற்றுக் கொண்டவர்கள் அல்ல.

இன்று வெளிநாட்டுப் பொறுப்பாளர் பலர் பற்றி ஊழல் கிசு கிசுகள் மூலம் தான் பல சாதாரணமானவர்களிற்கு அறிமுகமே ஆகிறார்கள். கிசு கிசுக்கள் எதிரியின் துரோகிகளின் விசமப்பிரச்சாரமாக இருந்தாலும் பலருக்கு அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது ஏனென்றால் இவர்கள் அறிமுகம் அற்ற பொறுப்பாளர்கள். அறிமுகமானவர்களை நம்புவது அறிமுகமற்றவர்களை இலகுவில் சந்தேகப்படுவதும் மனித இயல்பு. உண்மையான சில ஊழல்களும் நடந்திருக்கு அவை இந்த எதிர்பிரச்சாரத்தை சாதாரண மக்கள் நம்ப வைப்பதில் மேலும் துணை போகிறது.

உறுதியான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஆதரவாளர்கள் ஊழல்களால் சோர்ந்துவிடப் போவதில்லை. ஆனால் கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும், பொரும்பான்மையானவர்கள் ஊழல்களை கேட்டு சோர்ந்துவிடாத ஆதரவாளார்கள் அல்ல. கஷ்டப்பட்டு உழைத்த காசில்தான் தமது சொந்த வாழ்கைiயும் நடத்திக் கொண்டுதான் எம்மவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். தாயகப்போராட்டத்திற்கான பங்களிப்பு அவசியமானது ஆனால் அவர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தமது அன்றாட வழ்வு அந்த சூழலுக்கு ஏற்ற எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவும் வேண்டிய தேவையும் உண்டு. பொருளாதார வசதிபடைத்தவர்கள் நல்ல நிலையில் இருப்பவர்களும் தமது துறைகளில் பல சவால்களை சந்தித்து கடின உழைப்பில்தான் அந்த வசதிபடைத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள், அதை தக்க வைக்கவும் அவர்கள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். அதிஸ்டலாபச்சீட்டில் கிடைத்த பணம் அல்ல. இதை உணராதவர்களாகத்தான் பெரும்பாலான தொண்டர்கள் உதவி கேட்டு இவர்களை அணுகிறார்கள் இதனால் அனாவசியமற்ற விரிசல்கள் உருவாகிறது. இந்தக் கலாச்சார இடைவெளி சீர் செய்யப்பட வேண்டும்.

கனடா வந்து அமெரிக்காவின் துருப்பாக பல இராஜதந்திர நகர்வுகளில் பயன்படுத்தப்படுவது வழமை. கனடாவின் இந்த நகர்விற்கும் இது தான் மூல காரணம் என நினைக்கிறேன். யுத்த நிறுத்தம் மற்றும் அதனை அமுல்படுத்துவது பற்றிய இரண்டாம் கட்ட பேச்சு மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. சர்வதேச சமூகம் தம்மால் முடிந்தவரையில் இரு தரப்பிற்கும் அழுத்தத்தை கொடுத்து யுத்த நிறுத்தத்தை தக்கவைக்க முயற்சிக்கிறது. புலிகள் இலங்கை அரசாங்கம் போன்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரச தரப்பு இல்லை என்றரீதியில் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தத்தை கொடுக்கக் கூடிய ஒரு இலகுவான தரப்பாக இருக்கிறது. "சர்வதேசம்" தமது சுய தேவைகளிற்கு சில மேல்நிலை முடிவுகளை எடுக்கும் போது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடுக்கு எதிராகவும் நீதி நியாயங்களிற்கு அப்பால் நடவடிக்கைகளை எடுக்கும் என்பதும் வரலாறு. இவற்றை எல்லாம் உணர்ந்தவர்களாகத்தான் புலிகள் கடந்த 2 வருடத்திற்கு மேலாக உச்சப் பொறுமைகாக்கிறார்கள். ஆனால் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் புலிகள் தமது பெறுமையை இழந்தவர்களாக நெகிழ்வுப் போக்கை இறுக்கி உறுதியாக தமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த வருடத்தில் சர்வதேச சமூகம் இலங்கை அரசு சார்பாக வெளிப்படையாக காட்டிவரும் நிலைப்பாடு இதற்கு உதாரணம். சர்வதேசமும் பதிலுக்கு புலிகள் மீது வெளிப்படையாக சில அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஒரு balancing act செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இன்று நாம் எதிர்கொள்ளுவது சர்வதேசதரத்திலான மிகவும் சாதுரியமான இராஜதந்திர ஊடல்.

எதிரிகளின் துரோகிகளின் எதிர்ப்பிரச்சாரங்கள், தடைகள் ஒருவகையில் எமது நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி அதிலுள்ள பலவீனங்களை சீர்செய்து வினைத்திறன் மிக்கதாக்க நல்ல சந்தர்ப்பத்தை தருகிறது என்று தான் நினைக்கிறேன். அதற்கு முதலில் கண்மூடித்தனமாக எம்மத்தியிலுள்ள குறைபாடுகளை மூடிமறைக்காது அதை ஆக்கபூர்வமான முறையில் விமர்சித்து நல்வழிப்படுத்த முயலுபவர்களை துரோகிகளாக்காது இருக்க பழகவேண்டும். புலத்தில் பிறந்து வழர்ந்தவர்கள் சிறுவயதில் இங்கு வந்தவர்கள் எமது போராட்டத்திற்கான நியாப்பாட்டை அனுபவரீதியில் உணரமுடியாதவர்கள். அவர்கள் கிட்டத்தட்ட நேரடி அனுபவம் அற்ற ஒரு பிறநாட்டவர் மனோபாவத்தோடுதான் விடையத்தை அணுகுவார்கள். இவர்களை தமிழ்த்தேசிய போராட்டத்தின் நியாயத்தன்மையை எதிர்விசமப்பிரச்சாரத்திற்க

Link to comment
Share on other sites

Vasampu wrote:

தூயவன்

இங்கே தலைகால் தெரியாமல் ஆடுவது யாரென்று பார்ப்பவர்களுக்குத் தெரியும். புலிகளுக்குப் பிரைச்சினைகள் ஏற்படுவது உம் போன்ற பச்சோந்திகளால்த் தான். தவறுகளை மறைக்க பொய் மேல் பொய் சொல்வதை விட தவறுகளைத் திருத்தப் பாருங்கள். இவையெல்லாம் உம் போன்றவர்களின் மண்டையில் ஏறுமா என்ன?? நிர்மலன் போன்றவர்கள் எழுதுவதைப் படித்தாவது திருந்தப் பாருங்கள்.

தூயவன் எழுதியது:

நான் நினைத்தேன். உங்களுக்கு சிகிச்சை கையில் மட்டும் செய்தால் குணமாகிவிடுவீர்கள் என்று. ஆனால் மண்டையிலும் செய்தாகத் தான் வேணும். :wink:

உண்மைதானப்பு தூயவன். மண்டையில் இருக்கிறக்கிறவனுக்கு எதைச் செய்தென்றாலும் சீராக்கலாம். ஒன்றுமேயில்லாத உம் போன்றவர்களுக்கு எது செய்தாலும் சரி வராது தான். :roll: :P

Link to comment
Share on other sites

Canada lists Tamil Tigers as terrorist group

http://ca.today.reuters.com/news/newsArtic...GERS-CA-COL.XML

Tamil Tigers Listed as Terrorists

http://www.dose.ca/vancouver/news/story.ht...hmCvAo06w%3d%3d

Canada adds Tamil Tigers to list of terrorist groups

http://www.mytelus.com/news/article.do?pag...ticleID=2224729

Canada puts Tigers on terror list

http://news.bbc.co.uk/2/hi/americas/4897192.stm

Link to comment
Share on other sites

என்னைப்பொறுத்த வரையில் தமிழீழத்தாயின் அகம் எல்லோருக்கும் திறந்துதான் இருக்கின்றது. சேவை செய்ய விரும்புபவன் தானாக முன்வந்து செய்வான். தங்கள் பொறுப்புக்களை மறந்து வாழும் மனிதன் படித்தவனாக இருந்தும் பயனில்லை. 8)

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புக்களுக்கு நிதி வழங்க அனுமதியுண்டு: கனடிய அரசு

ஜதிங்கட்கிழமைஇ 10 ஏப்ரல் 2006இ 23:34 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ

கனடாவில் பயங்கரவாத அமைப்புக்களுக்கான பட்டியலில்இ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர்இ ஏப்ரல் 8ம் திகதி 2006ம் ஆண்டிலிருந்து இணைத்துக் கொள்ளப்படுவதாகஇ கனடிய பொதுநல பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக்வெல் டே இன்று அறிவித்தார்.

கடந்த காலத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த செயற்பாடுஇ முன்னைய அரசால் கிடப்பில் போடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர்இ கனடிய மக்களை பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு தமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறினார்.

இந்த முடிவு சரியானது என்று நியாயப்படுத்திய கனடிய வெளிநாட்டமைச்சர் பீற்றர் மைக்கேஇ சிறீலங்காவில் நிலவும் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் கனடா தொடர்ந்தும் ஆர்வம் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள்இ சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாகக் கூறிய பீற்றர் மைக்கேஇ சமாதான முயற்சிகளில் அவர்கள் எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது செயற்பாடுகள் சந்தேகத்திற்குள்ளாக்குவதாக விளக்கினார்.

சிறீலங்கா அரசும்இ பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணும் விடயத்தில் தான் வழங்கிய உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று தெரிவித்த வெளிநாட்டமைச்சர் மைக்கேஇ அவ்வாறு சிறீலங்கா அரசு உறுதிமொழிகளை இதுவரை கடைப்பிடித்து வருகிறதா இல்லையா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில்இ 39 வது பயங்கரவாத அமைப்பாகஇ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும்இ எல்.ரி.ரி.ஈ. என்ற இயக்கத்திற்கு நேரடியாக நிதியுதவி செய்வதுஇ இயக்க செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பன தடை செய்யப்பட்டுள்ள போதிலும்இ இந்த அமைப்புடன் தொடர்புடைய முன்னணி அமைப்புக்கள் தொடர்ந்தும் தங்கள் வழமையான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு எந்தத் தடையும் வழங்கப்படவில்லை என்பதுஇ அரச அறிவிப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதன்படிஇ இந்த இயக்கத்துடன் தொடர்புடைய ஏனைய அமைப்புக்களிடம்இ விரும்பியவர்கள் நிதி வழங்குவதற்கும் ஏனைய ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்குவதற்கும்இ இணைந்து செயற்படுவதற்கும் இந்தச் சட்டம் தடை விதிக்கவில்லை என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

வெள்ளைக்காறர் அப்படித்தான். அவங்கள் தாங்கள் செய்வது எல்லாம் சரி மற்றவர்கள் செய்வது தவறு என்றுதான் சொல்வார்கள்

Link to comment
Share on other sites

வெள்ளைக்காறர் அப்படித்தான். அவங்கள் தாங்கள் செய்வது எல்லாம் சரி மற்றவர்கள் செய்வது தவறு என்றுதான் சொல்வார்கள்

அமெரிக்காவின் வால் இப்படித்தான் ஆடும், அமெரிக்கா இப்படி சொன்னால் இப்படி ஆட்டும், அப்படி சொன்னால் அப்படி ஆட்டும். கிட்டத்தட்ட சந்திரிக்காவின் சமாதானத்துக்கான போர்மாதிரி இருக்கு, அவர்களின் பேச்சு, குறை அவர்களை சொல்லி அல்ல நம்மவர் எடுத்த முடிவுதானே இதற்கு காரணம், எதிர்கட்சி தமிழர்போராட்த்துக்கு ஆதரவானது, அங்குவாழ்பவர்களுக்கு சலுகைகளை வழங்காதது, தற்போது ஆழும்கட்சி தமிழர் போராட்டத்துக்கு எதிரானது, அங்கு வாழ்பவர்களுக்கு சலுகைகளை வழங்கக்கூடியது, அப்படி என்றால் அங்கு வாழ்பவர்கள் யாருக்கு வோட் போட்டு ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்? கூட்டிக்கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும். :wink:

Link to comment
Share on other sites

இப்போ விளங்கும் 3 லட்சம் தமிழரின் அரசியல் பலம் புஸ்வானமாகிவிடடது.

இப்படியே அடிமைகளாய் இருந்து அழியவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது 100 விழுக்காடுகள் உண்மை நேசன். தேர்தலின்போது பழமைவாதக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மட்டுமல்ல ஊடகங்களும் இந்த விடயத்தை பெரிதுபடுத்தவில்லை. இதுவரைக்கும் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட செய்தி எந்த கனடா தமிழ் ஊடகத்திலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

தமிழன் எப்பவுமே தன்னைத்தானே பலப்படுத்துவான். பொதுநோக்கம் என்றால் விழுந்து கிடந்து குழிபறிப்பான். அது இப்போ கனடாவிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழ் மக்களே ஏன் கொன்சவேட்டிவுக்கு வாக்களித்தீர்கள்?.

பழைய செய்திகள்.

http://www.nitharsanam.com/?art=14692

http://www.nitharsanam.com/?art=14785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பொங்குதமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 80000 தமிழர்களே உங்கள் எதிர்ப்பினை எவ்வாறு கொன்செவேட்டிவ் அரசுக்கு காட்டப்போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி கடந்ததைப் பற்றிக் கதைத்தோ, அல்லது மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து எனி என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யாராவது கதையுங்கோவன். அது தான் எதிர்காலத்துக்கு தேவையே

Link to comment
Share on other sites

கனடிய அரசாங்கத்தின் உத்தியோபூர்வ அறிக்கை

Canada's new government lists the LTTE as a terrorist organization

OTTAWA, April 10 2006 -- The Honourable Stockwell Day, Minister of Public Safety, today announced that Canada's new government has listed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) as a terrorist group, effective April 8, 2006, pursuant to the Criminal Code.

'The decision to list the LTTE is long overdue and something the previous government did not take seriously enough to act upon,' said Minister Day. 'Our government is clearly determined to take decisive steps to ensure the safety of Canadians against terrorism.'

In listing the LTTE, the Government of Canada conducted an extensive analysis of security information and intelligence to ensure the stringent legal test outlined in the Criminal Code was met. Canada is also meeting its international commitments to prevent terrorists from using the banking system to further their terrorist activities.

The Honourable Peter MacKay, Minister of Foreign Affairs, supporting this decision, reiterated the Government of Canada's resolve to help achieve a negotiated settlement to the situation in Sri Lanka. 'The LTTE's repeated use of violence since signing a ceasefire agreement is unacceptable and seriously calls into question its commitment to the peace process,' said Minister MacKay. 'The Sri Lankan government must also fulfill its pledge to bring a negotiated resolution to the conflict. Canada will continue to work with international supporters of the peace process to help the parties reach a resolution.'

The LTTE has been in armed conflict with the Sri Lankan Government since 1983. This organization is known for its commitment to using indiscriminate terror tactics and suicide bombings. Since the commencement of conflict more than 20 years ago, over 64 000 deaths have occurred.

The objective of the Criminal Code list is to help combat terrorist activities, including impeding terrorist financing. It is illegal for any person to provide support, facilitate or participate in the activities of a terrorist group. This includes providing any financial support.

'This listing is meant to support the Tamil community in Canada who are law-abiding and hard working people who have left their country of origin to build a better life for themselves and their families in Canada -- where the rule of law and human rights are respected,' said Minister Day.

Today's listing brings the number of listed entities under the Criminal Code to 39.

-30-

See also:

Names of listed entities under the Criminal Code and background information

Frequently asked questions

Frequently asked questions

Listing of the LTTE

Q1: Why is the Government of Canada listing the LTTE (Tamil Tigers)?

A1: Canada has assessed the LTTE and determined that it is a terrorist group pursuant to the Criminal Code. Listing under the Criminal Code is a clear statement that anyone supporting the LTTE is not welcome in Canada and if they do support the terrorist activities of the LTTE, they can be subject to criminal prosecution.

The LTTE has been known to use terrorist methods and suicide bombings. Since the beginning of the conflict in Sri Lanka more than 20 years ago, over 64,000 deaths have occurred. The LTTE is known to engage in activities to further their terrorist objectives, such as fundraising and recruitment, which directly affect thousands of people in Sri Lanka, Canada and elsewhere. The Human Rights Watch report issued in mid-March, which concluded that Canadians of Tamil descent are being threatened with reprisals if they fail to contribute to the LTTE war chest, is but one such report.

The objective of the Criminal Code list is to help combat terrorist activities, including impeding terrorist financing. It is illegal for any person to provide support, facilitate or participate in the activities of a terrorist group. This includes providing any financial support.

In making this decision, Canada joins other countries that have already listed the LTTE as a terrorist entity, including the United States and United Kingdom.

Q2: What do we mean by terrorist activity?

A2: A terrorist activity is defined in section 83.01(1)(a) and 83.01(1)(B) of the Criminal Code as:

an activity that is an offence under one of the UN anti-terrorism conventions and protocols listed in the Criminal Code; or

an activity that is taken or threatened for political, religious or ideological purposes and threatens the public or national security by killing, seriously harming or endangering a person, causing substantial property damage that is likely to seriously harm people, or by interfering with or disrupting an essential service, facility or system as described in the Criminal Code.

Q3: What does this listing mean for the Tamil community in Canada?

A3: This listing is meant to support the Tamil community in Canada, who are law-abiding and hard working people who have left their country of origin to build a better life for themselves and their families in Canada - where the rule of law and human rights are respected. Only a small minority of Tamils support the extreme tactics and measures which the LTTE uses.

Q4: Can members of the Tamil community living in Canada continue to sending money to family members living in Sri Lanka?

A4: Yes, providing money directly to family members can continue. The listing of the LTTE will have no effect on the Tamil community’s ability to provide financial to support to their family members living in Sri Lanka. Only donations to the LTTE are affected by this listing.

Q5: If an individual provides money to a front organization which is believed to be associated with the LTTE will that individual be charged under the Criminal Code?

A5: No, only donations to the LTTE are effected by this listing.

Q6: Is the listing of the LTTE going to affect Sri Lankans living in Canada from traveling back to Sri Lanka?

A6: Canadians residing in or traveling to Sri Lanka are encouraged to read DFAIT’s travel report for Sri Lanka available on the Consular Affairs website (www.voyage.gc.ca) and heed the government’s consular advice as well as the country specific recommendations for registering their presence with the High Commission in Colombo.

Q7: Is the LTTE active in Canada?

A7: The LTTE is known to engage in activities to further their terrorist objectives, such as fundraising and recruitment, which directly affect thousands of people in Sri Lanka, Canada and elsewhere. The Human Rights Watch report issued in mid-March, which concluded that Canadians of Tamil descent are being threatened with reprisals if they fail to contribute to the LTTE war chest, is but one such report.

Q8: How does this decision affect the peace process in Sri Lanka?

A8: The Government of Canada views this listing as a step towards advancing the peace process. The listing emphasizes Canada’s commitment to call on both parties to renounce violence and focus their energies on political negotiations leading to a permanent settlement. Canada will continue to work with international supporters of the peace process to help the parties reach a resolution.

Q9: Does the listing prevent Canadian aid organizations from working in Sri Lanka?

A9: No, it does not. Rather, the listing of the LTTE reinforces the importance of ensuring that Canada's development assistance is not diverted to the LTTE. The Canadian International Development Agency has supported activities in LTTE territory for many years without such a diversion, and will continue to do so.

தகவல் மூலம்.

http://www.psepc-sppcc.gc.ca/media/nr/2006...20060410-en.asp

Link to comment
Share on other sites

நேசன் உங்களுடைய கருத்துக்கு நன்றி.

இங்கே ஒரு பொது விடயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். நான் கூறுகின்ற தவறுகள் நிகழவில்லை என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா?

பொதுவாக ஒருவர் ஒரு கருத்தைக் கூறினால் "நீ என்ன வெட்டிப்பிடுங்கினாய்" என்றுதான் கேட்கிறார்கள்.

மிகவும் ஆழமாக எமது விடுதலைப் போராட்டதை நான் நேசிப்பவன். இந்திய, சிறிலங்கா இராணுவத்தினால் தனிப்பட்ட ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில் தான் இங்கே கருத்துக்களை கூறிவருகின்றேன்.

எமது கடந்த கால தவறுகளை நாம் ஒருதடவை சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். அத்தவறினை சரிசெய்ய வேண்டும்.

பலர் தவறுகளை சுட்டிக்காட்டாது முகஸ்துதிக்காவே உரையாடுகின்றார்கள். அதுவும் இல்லையெனில் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற அர்த்தத்தில் உரையாடுகின்றார்கள்.

வன்னிக்குச் செல்பவர்கள் கூட தமக்கு விரும்பாதவர்களை மாட்டி விடுவதும், சிறு விடயத்தைக் கூட பெரிதாக்கி காட்டி கதைக்கின்றார்களே தவிர, இப்படி செய்தால் என்ன அப்படி செய்தால் என்ன என்று அவர்களிடம் (விடுதலைப் புலிகளிடம்) ஆலோசனை கேட்பதில்லை.

பாரிய தவறுகளை விடுபவர்களையும் சுட்டிக்காட்டி அவர்களை திருத்துமாறோ அல்லது அகற்றுமாறோ கோருவதில்லை. மாறாக தமக்கு வேண்டத்தாகதவர்களை அப்புறப்படுத்துவதிலேயே பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையிலேயே பல புத்திஜீவிகள் எமது விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருக்கின்றார்கள் அல்லது ஒதுக்கப்பட்டிருக்கின்றார்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.